Tuesday, September 8, 2020

 

ஶ்ரீ நடாதூர் அம்மாள் வரததேசிகர் வைபவம்

 

(சென்ற தைம் ஆனந்தபோதினித் தொகுதி 13, பகுதி 7, பக்கம் 310, 311 - ல் வெளியான நடா தூரம்மாள் சரிதை மாறுபட்டிருந்தது குறித்து அதை நீக்கி உண்மைச் சரிதையை விளக்கும் பொருட்டு, நாச்சியார் கோவில் வித்வான் அபினவ ஸரஸ்வதி குருவர்ய ஸ்ரீ. உ. வே. நடாதூர் ஸ்வாமி கிருஷ்ணமாசார்யர் எழுதியது.)

 

ஸ்ரீய: பதியான ஸர்வேச்வரனால் மயர்வற மதி நல மருளப்பெற்ற ப்ரபன்ன குல சிகாமணியாம் ஸ்ரீ. சடகோபன் முதல் ஓராண் வழியாய் வரும், விசிஷ்டாத்வைத வித்தாந்தமானது ஸ்ரீ. உடையவரால் பெருகிப் பின்னுள்ள வாசார்யர்களால் பரவப்பெற்று விளங்கிவரும் நாளில் கலியின் ஸாம்ராஜ்யத்தால் ஸத்சாஸ்திரங்களும், ஸநாதன தர்மங்களும் குறையவே, அப்பிரதிபந்தகத்தைப் போக்கி ஸ்ரீ. ராமனுஜ ஸித்தாந்தத்தைத் தழைத்தோங்கி விளங்கச் செய்ய ஸங்கல் பித்து ஸ்ரீவைகுண்ட திவ்யலோகத்தில் ஸ்ரீமந்நாராயணன் தமது கைங்கர்யத்திலீடுபட்டுள்ள நித்யஸ்ரிசிரேஷ்டரான ஸுபத்ரரைக் குளிரக்கடாக்ஷித்துத் தம் தேஜோம்சத்தையும் பிரஸாதித்து, நம் இராமானுஜ வித்தாந்த ஸ்தாபனத்தால் லீலாவிபூதியாம் பூமியிலுள்ள சேதனர்களை உஜ்ஜீவிப்பிக்கும் பொருட்டு தேவராஜப் பெருமாளுக்குப் புத்திரராக அவதரிக்கும்படி கட்டளை இட்டனர்.


 ஸுபத்ரரும், லக்ஷ்மீசசாஸனமாலையை சிரோபூஷணமாக வஹித்தவராய்,

 


     

க: இதிப்ரஹ்மணோநாம தேந்தத்ராஞ்சிதோ ஹரி: |

தத: காஞ்சீதி விகயாதாபுரீ புண்ய விவர்த்த நீ ||


அஸ்திஹஸ்திகிரி: நாம தத்ரசைல்வரோமஹான் |

விதாத்ராப்யர்ச்சி தோவிஷ்ணு: தஸ்யசைலஸ்யமூர்த்தநி ||


''நாரண நான் முகனுக்கிடந்தான்றழகாயகச்சி"

 

"மாமணி வண்ண னிடம் மணிமாடங்கள் சூழ்ந் தழகாயகச்சி"


என்று பாடிப்பரவப் பெற்றுப் பலவளங்களும் மலிந்து பொலிவுற்று ஸ்ரீ. ப்ரஹ்மதேவனால் பூஜிக்கப்பெற்ற ஸ்ரீ. ஹரி கோயில் கொண்டெழுந்தருளிக் காக்ஷிபுரியும் காஞ்சிபுரத்திலே,

 

ஸ்ரீ. ஸர்வ ஜகத்காரணபூதனாம் ஸர்வேச்வரனும் ஸ்ரீயப்பதித்வத்தாலேயன்றோ சிறப்பெய்தியது என்று அப்படிப்பட்ட லக்ஷ்மீ கடாக்ஷ நோக்கத்திற்கு முக்ய பாத்ரமான ஸ்ரீவத்ஸ குலத்திலே,

 

 

சைத்ரேசித்ரோத்பவம் காஞ்ச்யாம் தேவராஜ குரோ: ஸுதம் |

ஸுபத்ராம்சம் குரூத்தம்ஸம் வாத்ஸ்யம்வரதம் ஆச்ரயே ||

 

என்றபடி சித்திரை மாஸம் சித்திராநக்ஷத்ரதித்தில், ஸ்ரீ. உடையவரின் பிரிய பாகி நேயரும் பிரியமுள்ள ஸஹோதரியின் பிள்ளை), எழுபத்து நான்கு ஆசார்ய புருஷ பீடாதிபதிகளில் ஸ்ரீ. உடையவராலேயே பகவன்னியமனபுரஸ்ஸரமாகக் கிடைக்கப் பெற்ற ஸ்ரீ. பாஷ்ய பகவத் விஷயரூப உபயவேதாந்த விஹ்மாஸனாதிபதியும்,


 நடம்நளின மித்யாஹு: தச்ச ஸ்ரீசபதாம்புஜம் |
 தஸாதநந்து அனுபவ: நடாதா: தேநஸாத்விகா: ||

 

என்பதற்கிணங்க ஸ்ரீபகவத் பாதாரவிந்தானுபவசாலிகளான பாகவதர்கள் வலிக்கும்படி நடாதூர் அக்ரஹாரப் பிரதிஷ்டாபகருமான ஸ்ரீ நடாதூர் வரத விஷ்ணுவாசார் என்கிற ஆழ்வாரின் திருக்குமாரராகிய கதககேஸரீ என்ற பிருது நாமமுள்ள தேவராஜாசாரியருக்கு ஸத்புத்ரரத்னமாக அவதரித்தருளினர். அங்ஙனம் அவதரித்தருளவே அந்த ஸுபத்ராம்சபூதரான ஜகதாசார்யனுக்கு ''வாதகுரு" என்று திருநாமம் சூட்டப்பட்டது.

 

இவர் காலக்கிரமத்தில் தம் பிதாவினிடம் ஸகல சாஸ்திரங்களையும் ஓதி உணர்ந்து அதிமேதாவியாய் பால்யத்திலேயே பகவத் பக்தியிலீடுபட்டு விளங்கும் பொழுது அக்காலத்தில் ஸ்ரீ விஷ்ணு சித்தாசார்யர் என்னும் எங்களாழ்வான் ஸ்ரீபாஷ்யம், பகவத் விஷயம் இவைகளை ப்ரவசனம் செய்து கொண்டிருந்தமையால் அவரைக் கொண்டும் தமது ஸத்புத்ரனுக்கு வேதாந்த சாஸ்தர விசேஷார்த்தங்களை அப்யாஸம் செய்து வைப்பது உசிதமென்ற திருவுள்ளத்துடன் தேவராஜப் பெருமாள் தமது புதல்வனைக் குளிரக்கடாக்ஷித்து, "வாரீர் என்குலமணியே, திருவெள்ளரை எங்களாழ்வான் திருக்குருகைப்பிரான் பிள்ளானருளிச் செய்த விசேஷார்த்தங்களோடு பாஷ்யாதிகளைத் தினவு கெடச் சொல்வர்; ஆகவே பக்தியுடன் அவரிடம் சென்று அதிகரியுமென்று நியமித்தார். அவ்வாறு நியமித்த பிதாவின் திருவுள்ளப்படியே வரத குருவும் அவரிடம் சென்று தம், பிதாவின் நியமனத்தை விண்ணப்பிக்க எங்களாழ்வானும் மிக்க வுகந்து நமக்கு நீர் புத்ரத்வத்தை வஹித்து உதவி செய்ய வேண்டுமெனக் கூற வரதகுரு அதைத் தம் பிதாவுக்குத் தெரிவித்து அவரது நியமனத்தையும் பெற்று வந்து அப்படியே செய்வதாக பக்தியுடன் அங்கீகரித்தனர். அங்ஙனம் அங்கீகரித்ததும், ஆழ்வான் பரமானந்த பரிதராய் இவருக்கு அருமையான ஸமஸ்த விசேஷார்த்தங்களுடன் பாஷ்யாதிகளைப் பிரஸாதித்தருளினார்.

 

இந்த வரதகுரு ஸ்ரீ பாஷ்யப் பிரவசனம் செய்து கொண்டு வருகிற வைபவத்தையும், ஆசார்ய பக்தி கரைபுரண்டிருக்கிறபடியையும் நோக்கி எங்களாழ்வான் ஆனந்தித்து மேன்மேல் கிருபையுடன் அருமையாய்க் கடைந்தெடுத்த அமுதம் போன்ற ஸ்ரீ. உடையவர் செய்தருளின நித்யத்தில் சொன்னபடி, "பரமைகாந்தித்வமுள்ளவர்கள் உத்யேச்யர்களென்றும்,


''அந்நிஷ்டை பெற, கத்யத்தில், நிரூபித்த உபாயானுஷ்டானம் வேண்டுமென்றும்"

 

''அவ்வர்த்தம் தெளிகைக்காக ஸ்ரீபாஷ்ய, கீதாபாஷ்யாதிகளை அதிகரிக்க வேண்டுமென்றும்"

 

"ஆசார்யனைத் திருவடி தொழுது அவரால் ஆத்மபரத்தை எம்பெருமான் திருவடிகளில் ஸமர்ப்பித்து நயஸ்தபரனாக வேண்டுமென்றும் "

 

இன்றியமையாத இவ்வித விஷயங்களை அருளிச் செய்ததுடன், இவ்வர்த்தங்களை நல்ல பாத்திரங்களில் விநியோகியுமென்றும் நியமித்தனர்.

 

பிறகு ஸ்ரீவிஷ்ணு சித்தராம் எங்களாழ்வானின் திருவுள்ளப்படி ஸகல கைங்கர்யங்களையும் நடத்தி புத்ரத்வத்தையும் நிறைவேற்றின பிறகு ஆசார்யாளுடைய கடாக்ஷத்தாலே மிகவும் ஞான பூரணராய் பகுவித ஸத்கிரந்தங்களைச் செய்து உபகரித்தருளி ஸ்ரீ பாஷ்யம், பகவத்விஷயம் முதலிய வேதாந்தார்த்தங்களை ஸ்ரீகாஞ்சிபுரம் ஸ்ரீவரதனாம் தேவப்பெருமாள் ஸந்நிதி கச்சிவாய்த்தான் மண்டபத்தில் அந்த பகவன்னியமனத்தை முன்னிட்டு, இந்த வரதகுருவின் திருவடிகளி லாச்ரயித்தவர்களான அப்புள்ளார், க்ருஷ்ணபாதர், ஸுதர்சன பட்டர் முதலிய ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்மி பொலிந்தோங்கி வர்த்தித்த பல சிஷ்யர்களுக்கு மஹத்தான கோஷ்டியில் காலக்ஷேபம் ஸாதித்தருளி ஸ்ரீமல்லக்ஷ்மணயோகீந்திர ஸித்தாந்த விஜயத்வஜம் போல் விளங்கித் தமது உபந்நியாஸாம்ருத தாரையால் பெருமாள் திருச்செவிக்கு பரமானந்தத்தை விளைவித்து அந்த பரிபூர்ண கிருபாகடாக்ஷம் பெற்றவராய் எழுந்தருளி யிருந்தார்.


 வந்தேஹம் வரதார்யம்தம், வத்ஸாபிஜ பூஷணம் |
 பாஷ்யாம்ருத ப்ரதானாத்ய ஸஞ்ஜீவயதிமாமபி ||

 

என்று இம்மஹானின் தநியனை பக்தர்கள் அனுஸந்திப்பார்கள். பின்னொரு சமயம் ஸ்ரீவரத்தேசிகர் தம் காலக்ஷேப கோஷ்டிக்குத் தவறாமல் தினம் வந்து கொண்டிருந்த ஸுதர்சனபட்டர் ஒருதினம் வர, கொஞ்சம் விளம்பிக்கவே அவரை எதிர்பார்த்துக் காலக்ஷேபம் ஆரம்பிக்காமலிருந்தார்.

 

பட்டர் தினந்தோறும் கோஷ்டியில் வந்து வணங்கி ஒருபுறமாயிருந்து மௌனமாய், பக்தியுடன் காலக்ஷேபம் கேட்டு வந்தபடியால் அவரது ஸ்வபாவத்தை அங்கு அறியாத சிலர் அவரைப் பரிஹவித்து விட்டுத் தாமதியாமல் காலக்ஷேபத்தைத் தொடங்குமாறு ஸ்வாமியிடம் விண்ணப்பம் செய்தனர். அவ்வாறு செய்யவே வரக்குருவும், அவரது வைபவத்தை வெளியிடத் திருவுள்ள முள்ளவராய், அவர் வந்ததும், "பட்டரே! நெடுநாளாய் நம்மிடத்தில் கேட்ட ஸ்ரீ பாஷ்ய விசேஷார்த்தங்களில் தெரிந்தவையை எடுத்துச் சொல்லு' மென்று கிருபையோடு நியமிக்க ஸுதர்சனபட்டரும் மஹதாசார்ய நியமனத்தை ப்ராணாமபுரஸ்ஸரமாக சிரஸாவஹித்து ஸ்வாமி பல தடவைகளில் ஸாதித்தருளிய விசேஷார்த்தங்களெல்லாவற்றையும் அடியேன் சிற்றறிவுக்குத் தக்கபடி கேட்டுக் கொண்டு வந்தவனாதலின், எந்த ஆவர்த்தியின் அர்த்தத்தை விண்ணப்பம் செய்வது என்று பக்தியுடன் கேட்க, ஸ்வாமியும் ஒவ்வொரு தடவையிலும் நீர் கேட்டுணர்ந்த விசேஷார்த்தங்களெல்லாவற்றையும் சொல்லுமென்று நியமித்தனர்.

 

அவர், தாம் தடவை தோறும் கேட்டு வந்தபடியே அவற்றை விஸ்தாரமாக உபந்நியளித்தார். அதைச் செவியேற்றருளிய ஸ்ரீவாதகுரு அத்யானந்தத்தை யடைந்தார். அத்துடன் அங்குள்ள அனைவரும் அதிசயித்து இவர் விஷயத்தில் மிகவும் ஆதரவோடிருந்தனர்.

 

ஸுதர்சனாசார்யர் தாம் இவ்வாறு ஸ்ரீவரதகுருவிடம் கேட்டுணர்ந்திருந்த ஸ்ரீபாஷ்ய காலக்ஷேப உபந்நியாச விசேஷார்த்தங்களை பட்டோலை கொண்டு பூர்த்தி செய்து ஆசாரியனிடம் காட்டவே அதன் பெருமையை வாதகுரு கடாக்ஷித்து, கேட்டுணர்ந்த பொருளை அப்படியே பிரகாசிக்கச் செய்திருத்தலால் அதையே காரணப் பெயராக அமையுமாறு அந்தஸ்ரீகோசத்திற்கு "சருதப்பிரகாசிகை'' என்று திருநாமமிட்டு அதைப்பிரவசனம் செய்துவரும் படிக்கும் நியமித்தருளினார்.

 

ஒரு கால் ஸ்ரீ காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமானுக்கு அதிக சூடுள்ளபாலை, தளிகை ஸமர்ப்பிக்கக் கொண்டு போகக்கண்ட ஸ்ரீ வரதகுரு நம்பெருமாளுக்குக் கொதிக்கிற பாலை அமுது செய்து வைக்கக் கூடுமோவென்று மிகவும் கசிந்த மனதுடையவராய், அதை ஆற்றி அமிர்தத்திற் கொப்பானதாக அன்புடன் கண்டருளப்பண்ணினார். அங்ஙனம் செய்யவே, பெருமாளும் இவ்வரத குருவைத் தமது பரிபூரண கிருபாகடாக்ஷாம்ருத தாரையாலபிஷேகம் செய்து வைத்துத் தன்பால் இவருக்கு இன்றியமையாத அன்புண்டா யிருத்தலை நோக்கி ஆச்சரியமுற்று, "தாயன்றோ தமது குழந்தைக்கு இவ்விதம் ஆற்றி ஸுகோஷ்ணமாக அருமை பாராட்டிப் பாலூட்டி அதனை வளர்ப்பது; ஆகவே நீர் என் அம்மாளோ," என்று புன் முறுவல் பூத்த திருமுககமலத்துடன் அதிவாத்ஸல்யத்தோடு அழைத்தனர். அதே காரணமாக இந்த வரதகுருவுக்கு, "அம்மாள்'' என்று திருநாமம் ஜகத்பிரஸித்தமாய் வழங்கலாயிற்று. இவ்விஷயத்தை முன்னோர்கள்,


 க்ஷீரம்யே நஸமர்ப்பிதம் மதுரிமஸ்பாரம் நிபீயாதராத் தீரம்மஜ்ஜநநீதி
      அகர்ஜிகருணாஸாரம் முஹு: வர்ஷதா |
 ஸ்ரீரந்த்ரா கரிசைலச்ருங்க மயதோதாரம் மஹாம்போமுசா நீரந்த்ரம்
      ஸுகமாதனோது வசஸாம் தூரம் ஸவாத்ஸ்யோ குரு: ||


 என்ற இந்த மங்கள ச்லோகத்தால் அனுஸந்தித்தார்கள்.

 

இவ்வித மஹிமை பொருந்திய ஸ்ரீவாத்ஸ்ய நடாதூர் அம்மாள் வரததேசிகர் விளங்கி வருகையில் தன் மாமாவான அப்புள்ளாருடன் ஸ்ரீநிவாஸ்னுடைய திருமணி யவதாரரும், ஐந்து வயதுள்ள வருமான வேங்கடநாதாசார் என்கிற தூப்புல் பிள்ளை, அம்மாள் வரதகுருவின் காலக்ஷேப கோஷ்டியை அடைந்து தெண்டன் ஸமர்ப்பித்து நின்று, தன் தேஜோ விசேஷத்தால் ஓரானந்தத்தை விளைவித்து ஸ்ரீ அம்மாளுடைய கிருபாகடாக்ஷ நோக்கத்திற்கு விஷயமானார். ஸ்ரீ வரதகுருவும் அப்புள்ளார் மூலமாக இவரது பிறப்பின் வ்ருத்தாந்தத்தை அறிந்து இவர் ஓர் அவதார விசேஷமுள்ளவரென்று எண்ணிப் பிறகு அப்பொழுது நடைபெற்ற வேதாந்த காலக்ஷேபம் நிறுத்திய இடத்தை நிரூபிக்கும்படி சிஷ்யர்களை வினவ, அவர்கள் ஆலோசிக்கையில் வேதாந்த தேசிகர் அடியேனிங்கு வரும் பொழுது நடைபெற்று விட்டிருந்த இடம் இதுவென்று கைகுவித்தவண்ணம் விண்ணப்பஞ் செய்தார். அவ்வாறு செய்யவே அம்மாளும் மிகவும் ஆனந்தித்துக் குழந்தையான தூப்புல் குலமணியாம் வேதாந்ததேசிகரை இரண்டு திருக்கைகளாலும் எடுத்தாலிங்கனம் செய்து,


 

ப்ரதிஷ்டாபிதவேதாந்த: ப்ரதிக்ஷிப்தபஹிர்மத: |

பூயாஸ்த்ரைவித்யமான்யஸ்த்வம் பூரிகல்யாணபாஜநம் ||

 

என்றனுக்ரஹித்தார்.
 

(இந்த ஐதிஹ்யத்தை யனுசரித்து ஸ்ரீ காஞ்சீபுரம் வரதராஜஸ்வாமி ஸந்நிதி உள்பிராகாரம் மேல் மண்டபத்தில் நடாதூர் அம்மாள், வாதகுரு காலக்ஷேப கோஷ்டியில் தூப்புல் வேதாந்த தேசிகர் உச்சிக்கொண்டைப் பின்னலோடு பாலபர்வத்தினராய் நிற்கிறவடி வழகும், அம்மாள், " ப்ரதிஷ்டாபித வேதாந்த :'' என்கிற ச்லோகரூபமாக அனுக்கிரஹிக்கிற விதமும், அப்புள்ளார் ஸுதர்சனாசார் முதலியவர்களிருப்பதும், இந்தக் காலக்ஷேபத்தை ஸ்ரீதேவப்பெருமாள் திருச்செவி சாத்திக் கொண்டு எழுந்தருளியிருக்கிற வைபவமும் விளங்கும் சித்திரகாக்ஷியை இப்பொழுதும் கண்ணார ஸேவித்துக் கருத்திற் களிகொள்ளலாம்.)

 

தூப்புல் வேதாந்த தேசிகரை அப்புள்ளாரிடம் ஒப்புவித்துத் தம்மிடம் க்ரஹித்த ஸ்ரீபாஷ்யாதி ஸமஸ்த விசேஷார்த்தங்களையும் ப்ரஸாதிக்க நியமித்தனர். ஸ்ரீநிகமாந்த தேசிகனும்,


 ஸ்ரீமத்ப்யாம்ஸ்யா தஸா வித்யனுபதிவரதாசார்ய,
 ராமானுஜாப்யாம் ஸம்யக்த்ருஷ்டே ||


என்றும்,


“வாதகுரு க்ருபா'' என்றும்,

 

இத்யாதி தநியன் ச்லோகங்களால் தனது ப்ராசார்யரான ஸ்ரீ நடாதூர் அம்மாள் வரதகுருவினுடைய மஹிமையைக் கொண்டாடியிருக்கிறார்.

 

யோபால்யே வரதார்யஸ்ய ப்ராசார்யஸ்ய பராம்தயாம்!

 

என்று நைநாராசாரியர் தன்பிதா விஷயத்தில் அம்மாள் வரதகுருவின் தயா விஷயத்தைப் பிரகாசம் செய்திருக்கிறார்.

 

இப்படி ஸித்தாந்த ப்ரவசனங்களை ஸ்ரீ அம்மாள் வரதகுரு செய்து வருகிறகாளில் சில மதாந்தரஸ்தர் வாதத்திற்கு வர, அப்பொழுது அப்புள்ளார், தமதாசார்யரான அம்மாள் வரதகுருவை தெண்டன் ஸமர்ப்பித்து அடியேனுக் கிந்தக் கைங்கர்யத்தை நியமிக்க வேண்டு மென்று பிரார்த்திக்க, வாதகுருவும் கிருபை கூர்ந்து வந்தவர்களிடம் வாதம் புரிந்து ஜயிக்கும்படி நியமித்தனர். அப்புள்ளாரும் எளிதில் தர்க்கத்தால் அவர்களை வென்று விளங்கினபடியால் அதுகண்டாநந்தித்த நடா தூரம்மாள் வரததேசிகர் திருவுள்ளமுவந்து தமது ப்ரியசிஷ்யரான ஆத்ரேய ராமானுஜாசார்யரென்னும் அப்புள்ளாருக்கு (வாதிஹம்ஸாம்புதர்) என்ற பிருதுள்ள திருநாமத்தைப் பிரஸாதித் தருளினார்.  

 

மற்றொரு ஸமயம் அநேக சிஷ்யர்கள் புடைசூழத் திருப்பல்லக் கேறி திருமலை யாத்திரையாக எழுந்தருளும் மார்க்கத்தில் லாடர்களென்கிற பரிஜனங்களுடன் அவர்களுக் கரசனான கெண்டவரன் என்பவன், இவரது சிஷ்யர்களுக்குத் தன் வித்யா விசேஷத்தால் மயக்க முண்டு பண்ண அவர்களை ஸ்ரீ பகவத்கடாக்ஷபலத்தால் தெளிவித்து அவ்வரசனையும் வாதத்தால் ஜயித்துப் பிறகு, வணங்கிய அந்த ராஜாவையும், அவனது பரிஜனங்களையும் அனுக்கிரஹித்தருளி அவர்கள் வேண்டினபடி, "லாடாக்ரஹாரம்' என்பதை அந்தப் பிரதேசத்தில் பிரதிஷ்டை செய்து வேறு பல அக்ரஹாரங்களையும் லோகோபகாரமாகப் பிரதிஷ்டை செய்து வைத்தார். பிறகு திருமலை திருச்சுகனூருக்கு ஸமீபத்தில் சிஷ்யர்களுடன் இவர் எழுந்தருளும் பொழுது திருவேங்கடமுடையானான ஸ்ரீநிவாஸன் ஸ்ரீவைஷ்ணவ வடிவெடுத்து இவர் முன் எழுந்தருள அம்மாளும் தேவரீர் யார் என்று விசாரிக்க, நான் திருவேங்கடமுடையான் நியமனப்படி பிரஸாதத்தைத் தேவரீர்களுக்காகக் கொண்டு வந்தேன்; தேவரீர்கள் அமுது செய்த பிறகு விஷயங்களைத் தெரிவிக்கிறேன் என்று கூறிப் பிரசாதத்தைக் கொடுக்க அம்மாள், பெருமாளுக்குத் தளிகை ஸமர்ப்பித்துத் தமது சிஷ்யர்களுடன் அமுது செய்த பிறகு அவர் மறைந்தருளினார்.  அங்ஙனம் மறையவே இவர் வியப்புற்று ஸ்ரீநிவாஸனே, இப்படி அனுக்கிரஹித்தார் என்று நினைந்துருகி அவ்வெம்பெருமானுடைய திருவடிகளை அதிபக்தியுடன் தியானித்து ஸ்தோத்திரம் செய்தனர்.

 

பிறகு திருவேங்கட மாமலைமீது வீற்றிருக்கும் ஸ்ரீநிவாஸன், அர்ச்சகாவேசங்கொண்டு, நம்மை ஸேவிக்க வேண்டி நமது அம்மாள் வரததேசிகன் வருவதால் அனந்தகொத்து பரிஜனங்களுடன் ஸகல மரியாதை ஸஹிதம் எதிர் சென்று அழைத்து வாருங்களென்று நியமிக்க, கைங்கர்ய பரர்களும் அந்நியமனப்படி அனைவரும் ஸமஸ்த மர்யாதைகளுடன் அவரை அழைத்து வந்து திருவேங்கட முடையானுடைய மங்களாசாஸநத்தைச் செய்து வைத்தனர்.

 

இப்படித் திருவேங்கடமுடையானை ஸேவித்து அவரது பிரஸாத விசேஷங்களையும் பெற்று பகவன் நியமனத்தால் காசிக்கெழுந்தருளி, கங்கையில் நீராடி, சரஸ்வதி பீடம் முதலிய ஸ்தானங்களுக்குச் சென்று விஜயசீலராய்க் கீர்த்தியாகிற புதிய கங்கையைப் பரவச் செய்து ஸகல திவ்ய தேசங்களையும் மங்களாசாஸனம் செய்தருளி சோழராஜ ப்ரப்ருதிகளாலும் பூஜிக்கப்பட்டு, அவர்களால், ஸ்வர்ண சிவிகையில் எழுந்தருளுவிக்கப் பெற்று ஸகல விருதுகளுடன் ஸ்ரீ காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளி வரும் பொழுது ஸ்ரீவரதராஜனாம் தேவப்பெருமாளும் ஸந்தோஷத்துடன் ஸகல மர்யாதைகளுடன் அம்மாள் வரததேசிகனை அழைத்து வரச் செய்து பெருந்தேவித்தாயார் ஸமேதராக பேரருளால் ஸேவை ஸாதித்து அனுக்கிரஹித்தனர்.

 

லக்ஷ்மீ ஸரஸ்வதீ கடாக்ஷ பூர்த்தியுள்ள திருவம்சத்திலுதித்தவரும், ஸ்ரீராமானுஜ பிரியபாகி நேய பெளத்ர ரத்னமுமான அம்மாள் வரததேசிகர்ப்ரிய புத்திராதி அப்புள்ளார் ஸுதர்சனாசார்ப்ரப்ருதிகளுடன் ஸ்ரீவரதராஜனுக்கு முகோல்லாஸகரமான ஸத்கார்யங்களைச் செய்து ஸ்ரீகச்சிவாய்த்தான் மண்டபத்தில் வேதாந்த காலக்ஷேப உபந்நியாஸத்தை பிரஸாதித்துக் கொண்டு திகந்த விச்ராந்தய சோவி சோபிதராக ஸ்ரீராமானுஜ வித்தாந்த விஜயத்வத்வஜத்தை ஸ்தாபித்தவராய் வெகுகால மெழுந்தருளி விளங்கினார்.

சுபம்! சுபம்!!

 

ஆனந்த போதினி – 1928 ௵ -

மார்ச்சு, ஏப்ரல் ௴

 

 

 

No comments:

Post a Comment