Monday, September 7, 2020

 

வால்மீகி

(S. M. ஸந்தானம்)

 

வட இந்தியாவில் ஓர் காடு, வேனிற்காலம்; வெயிலின் கொடுமை சகிக்க முடியாத நிலமையில் இருந்தது. ஆதித்தன் தன் கிரணங்களை செங்சங்குத்தாக் ட்சி செலுத்தி வந்'தான். மான் கூட்டங்கள் கானலை தண்ணீரென்று ஏங்கி, எண்ணி, ஏமாறுகின்றன. கொடிய காட்டிற்குகந்த லட்சணங்களெல்லாம் அங்கு இருக்கின்றன. இக்காட்டில் வேடன் ஒருவன் வசித்து வந்தான். அவன் திடகாத்திரன். கன்னெஞ்சன். வெயிலின் கொடுமை தாளாது ர் மரத்தின் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தான்.

 

அவ் வழியே, பட்டாடை தரித்தும், காலில் பாதாக்ஷையுடனும், கையில் திருவோட்டுடனும் ஒரு வேதியர் பொய்கொண்டிருந்தார். இதைப் பார்த்த வேடன் அவரை வழி பறிக்க எண்ணி அருகில் ஓடி பயமுறுத்தினான். அந்த பிராமணன் மிகவும் பயந்து எல்லாவற்றையும் (பாதரட்சை உள்பட) கொடுத்து கொஞ்ச தூரம் சென்றான். வெயிலின் தகிக்க வொண்ணாத உஷ்ணத்தில் தன்னுடைய கால்கள் தரையில் நடக்க முடியாதபடி ஓர் புற்புதரின் மேல் நின்றான். இதைக் கண்ணுற்ற வேடனின் மனமும் இளகிற்றென்றால் அக்கொடிய வெயில் எத்தன்மையதாயிருக்க வேண்டும். பின்னர் வேடன், அப்பிராமணன் அருகிற் சென்று பாதரக்ஷைகளை மாத்திரம் திருப்பிக் கொடுத்து விட்டான். பிராமணன் புன்னகை செய்து, வேடனை நோக்கி, “ஏ வேடனே, நீ பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருப்பதின் பலனே, இக்தருணத்தில் எனக்கு இப்பாதரக்ஷைகளை தானம் செய்தது," என்றார்.

 

வேடன் நகைத்தும், வியப்புற்றும், "என் பூர்வஜென்மம் யாது? எனக்கு கூறவேண்டும்" என்றனன். அதற்கு அவ்வழிப்போக்கர் கூறுகின்றார்.

 

"சாகல மெனும் தேசத்தில் அந்தணர் குலத்திலுதித்த ஒரு மறையவன் வசித்து வந்தான். நித்யானுஷ்டானம் தவறாமலிருந்தான். அவனுக்கு ஒரு மனைவி. அம்மாது மகா உத்தமி. கொழுநனே தெய்வம் என்ற கொள்கை யுடையவள்.

 

இவ்வாறிருக்க,

 

ஓர் நாள் கோவிலில் தாசி காந்தாமணியின் நாட்டியக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. உண்மையிலேயே காந்தாமணியின் அழகில் மயங்காதவர்கள் யாருமே இல்லை. அக்கச்சேரிக்குச் சென்றிருந்த பிராமணன் றுத் தாசி மீது காதல் பூண்டு, கோயில் குருக்களின் உதவியைக் கொண்டு சினேகமும் பெற்று அவளே கதியென, பெண்டாட்டியை விட்டு, இருந்தார்.

 

கொஞ்ச காலத்தில் அத்தாசி, இவனுடைய சொத்துகளெல்லாம் அழியவே, வெறுக்கத் தொடங்கி, வீட்டை விட்டும் துரத்தி விட்டாள். வீடுசென்று, மனைவியிடம் மன்னிப்புக் கேட்காத முறையில் அழுதான். புரண்டான். மகா மேதையான அவன் மனைவி சிறிதும் கோபிக்காதவளாய் அவனை வரவேற்றாள். விதியின் வசத்தால் இவனை நோயும் வருத்தி படுக்கையில் கிடக்கச் செய்து விட்டது.

 

நிற்க, இவர்கள் இல்லத்திற்கு ஒரு ரிஷி வந்திருந்தான். நோயுற்றதைக் கண்டு மந்திரம் செபித்து நீர் ஒரு செம்பில் கொடுத்து அருந்தி வரச் சொன்னார். காலச்சக்கரம் சுழல அப் பிராமணன் உயிர் நீத்தான். உத்தமமான அம்மாதும் உடன்கட்டை ஏறி உயிர் நீத்தாள். அப்பிராமணன் தான் நீ; புண்ணிய நீரை உட்கொண்டதால் எனக்கு பாதரக்ஷை தானம் செய்ய எண்ணம் உண்டாயிற்று'' என்றார். வேடன் மெய்சிலிர்க்க இவ்வழிப்
போக்கன் கூறியதைக் கேட்டு கண்ணீர் பெருக நின்று கொண்டிருந்தான். மேலும் அவ்வழிப் போக்கன் கூறியதாவது "வேடா! க்ருணி மாமுனிவர் இக் காட்டில் தவம் செய்து கொண்டிருக்கிறார் அவர் தவ மகிமையால் அவர் கண்களினின்றும் வீர்யம் பெருகும். அதை ஒரு ஸர்ப்பம் விழுங்கும். அது ஒரு குழந்தையை பெறும். அவன் உலகம் போற்றும் உத்தம னாவான்.' என மொழிந்து மறைந்தார். வேடன் திடுக்கிட்டு, பின் ஒன்றும் தோன்றாதவனாய் சென்று, சில காலம் கழித்து வேடஜன்மத்தை விட்டொழிந்தான்.

 

பெரும்புயலுக்குப் பின் அமைதி. காட்டில் க்ருணி மாமுனிவர் கண்களின்றும், பெருகிய வீர்யத்தை ஸர்ப்பம் விழுங்கி ஒரு குழந்தையை பெற்று விட்டுப் போய் விட்டது.

 

தற்செயலாக வந்த வேடர் தலைவன் இக்குழந்தையை எடுத்து வளர்த்து சகல பயிற்சிகளிலும் வல்லவனாக்கி வளர்த்து வந்தான். வேடர் தலைவன் இறக்கவும், இவ்வாலிப வயதுடைய வேடன் காட்டின் ராஜா போல சகல சௌகரியங்களுடன் வசித்து வந்தான். தன் குலத்தொழிலான வழி பறித்தலிலும் தேர்ச்சி வடைந்திருந்தான்.

 

ஓர் நாள் அவ்வழியே, ஏழு பெரியோர்கள் சென்று கொண்டிருந்தனர். இவ்வேடன் அவர்களை மறித்தான். அதற்கு அப்பெரியோர்கள் இவனை நோக்கி, "ஏன், எங்களை கொள்ளையடிக்கிறாய்?" என்றார்கள்.

 

வேடன் “நானோ ஏழை, என் மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்ற பொருள் வேண்டாமா? எனக்கு மாத்திரமா? எல்லாருக்கும் (மனைவி, பிள்ளைகளை) தான் இதில் பங்குண்டு" என்றான்.

 

பெரியவர்: இப்பாபத் தொழிலில் உண்டா பங்கு? உன் மனைவிக்கு என்று கேட்டுவா. நாங்கள் இங்கேயே இருக்கிறோம் என்ர். பின்னர் வேடன் மனைவியிடம் சென்று கேட்க, மனைவி, சொத்தில் பங்குண்டே தவிர பாபத்தில் பங்கில்லை என்றதைக் கேட்டு இவர்களிடம் திரும்பி, நடந்ததைக் கூறி ஞான மார்க்கத்தை உபதேசிக்க வேண்டினன்.

 

அவர்கள் "மரா" என்ற பதத்தை உபதேசித்து சென்றனர். வ்வேடன் மன உறுதி கொண்டு இப்பதத்தையே உச்சரித்துக் காண்டு தவம் செய்யலானான். வெகு காலம் அப்படியே இருந்த படியால் அவன் மீது புற்று மூடி விட்டது.

 

பிரம்மா மூலமாக நாரதர் ராம காதையைத் தெரிந்து, புற்றினருகே வந்து, "ஏ வால்மீகி! நீ வான்மீகத்திலிருந்து (கறையான் புற்றிலிருந்து) வந்ததால் உமக்கு இப்பெயர் உலகம். உள்ளளவும் நிலைத்து நிற்கும். நீர் நான் சுருங்கச் சுருங்கச் சொல்லுகிற காதையை உலகுக்கு அளியும்'' என மொழிந்ததை, புற்றிலிருந்து கிளம்பிய (வேடன்) ரிஷி கேட்டு, பிரம்மாவின் அருளால் சுலோகம் பாட அருள் கிடைத்து, நாரதர் கூறியதை, விரிவாக்கி, ஒப்புயர்வற்ற இராமாயணத்தை உலக மக்கள் உய்விக்கும் பொருட்டு உவந்தளித்து உத்தமன் திருவடியாகிய இணையிலா பேரின்பத்தை எய்தினார்.

 

ஆனந்த போதினி – 1944 ௵ - மார்ச்சு ௴

 

 

No comments:

Post a Comment