Tuesday, September 8, 2020

ஸ்ரீமத் சிவாநந்தசாகர யோகீசுவரரின்  ஜீவிய சங்கிரகம்

 

இம் மகானைத் தமிழுலகு நன்குணருமாயினும் ஆனந்த போதினியின் ஆயிரக் கணக்கான சந்தர் நேயர்களில் இவரை அறியாதார் எவருமே யிரார் என்பது திண்ணம். யோகீசுவரர் கடந்த பத்து வருட காலமாக நமது ஆனந்தபோதினிக்குச் செய்து சந்த விஷயதானம், பண்டிதர், பாமரர், வேதாந்தி, சித்தாந்தி, சைவ வைணவர், மகம்மதியர், கிறிஸ்தவர் யாவரும் போற்றிக் கொண்டாடத் தக்க விதமாய் அமைந்திருந்ததாதலின் அவர்கள் நமமை விட்டுப் பிரிய நேர்ந்தது நமது துர்ப்பாக்கியமே யாம்.

 

இவர்களுடைய ஜீவிய சரிதம் - படிப்பவர்க்கு நல்ல படிப்பினையைப் போதிக்கக்கூடியதா யிருக்கின்றமையினால் இப்பெரியாரை நம்முடைய பத்திரிகையின் வாயிலாக நாம் பாராட்ட வேண்டியது நமது கடமையே.

 

இப்பெரியார் புகழுடன் தோன்றினாரு ளொருவராவர். இவர்களது பிள்ளைத் திருநாமம் கிருஷ்ணமூர்த்தி. இப்பெரியாரை ஈன்று உலகுக்குத்விய உத்தமர் அண்ணாவையர் என்னும் பெயர் பெற்ற அஷ்ட ஸஹஸ்ர பிராமணர். அண்ணாவையர் நாகபட்டினத்தில் கப்பல் வியாபாரி யொருவரிடம் மானேஜராயிருந்து ஏராளமான பொருள் தேடினாரானாலும், யோகீசுவரருக்காவது அவருடன் பிறந்த சகோதரர் இருவருக்காவது ஒரு சிறிது சொத்தும் வைத்திலர். தாம் தேடிய பொருளைத் தாமே செலவிட்டு, யோகீசுவரர் மூன்று வயதுள்ள சிறு குழந்தையாயிருந்த போதே அவர் காலமாய்விட்டார். அப்பால் யோகீசுவரர் தமது தமையனாரிருவரில் சுப்பராயர் என்பவருடைய ஆதரவில் வளர்ந்து வந்தார்.

 

சுப்பராயர் தமிழில் நல்ல அறிவு வாய்ந்த ஒரு வரகலியாக விளங்கி நின்றார். அவர்க்கு ஆங்கில அறிவு மிகச் சொற்பம். அந்தச் சொற்ப அறிவைக்கொண்டே தொடக்கத்தில் தென்னிந்திய இருப்புப்பாதை உத்தியோகசாலையில் ஒரு தந்தி குமாஸ்தாவாக அமர்ந்து பின் ஸ்டேஷன் மாஸ்டராய்அப்பால் தாசில்தாருமானார். அவருடைய கவி புலவர் கொண்டாடத்தக்க பெருமையுடையதாயிருக்கும். அவர் சிறந்த சுப்ரமணிய பக்தர். அவர்யோகீசுவரருக்குத் தாமே தமிழ்க் கல்வி கற்பித்தார். ஆங்கிலம் படிக்க ஆக்சில கலாசாலைக்கும் அவர் யோகீசுவரரை அனுப்பினார்.

 

யோகீசுவரர் ஒன்பதாவது பிராய மடையுமுன்னரே நிகண்டு, குறள், நன்னூல் முதலிய நூல்களிலும் பாரத பாகவத இராமாயண, கந்தபுராணவசன நூல்களிலும் ஐயந்திரிபறப் பயின்று தேர்ந்து சிறு சிறு கவிகளுஞ் செய்யுந் திறமை யெய்தினார்; பதினாறாவது வயதிற்குள் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தேர்ந்து, தமிழில் இலக்கண இலக்கிய நூல்கள் பலவற்றிலும் தேர்ச்சியுற்று அஷ்டாவதானம் செய்ய வல்லவரு மானார். அதன் பின் கவர்மெண்ட் ட்ரெயினிங் ஸ்கூலில் சேர்ந்து உபாத்தியாயர் பரீட்சையிலும் தேரினார். இக்காலத்திற்குள் யோகீசுவரர் அலங்கார சாஸ்திரம், வேதாந்த சித்தாந்த சாஸ்திரம் ஓதியுணர்ந்து பெருஞ் சபையில் பிரசங்கம் பண்ணும் ஆற்ற வடைந்தார்.

 

அப்பால் யோகீசுவரருக்கு விவாகமாயிற்று. இவரை நாயகராக அடைந்த மாதரசியாரும், இவர்பால் தமிழோதி யுணர்ந்து கவிபாடுந் திறமையுடையவரா விருந்து பாலசரஸ்வதி தேவ குஞ்சரியம்மை, கஜாம்பிகை என்னும் இரண்டு புதல்வியரை யளித்து, இப்புதல்வியர் சிசுப்பிராயத்தி லிருந்த போதே காலமாயினர். இக்காலத்தி வெல்லாம் சோகீசுவரர், சிதம்பரத்தில் ஸ்ரீனிவாச சாஸ்திரிகளால் நடத்தப்பட்டு வந்த "பிரஹ்ம வித்யா'' என்னும் பத்திரிகைக்கும், சென்னையில் கச. இரத்தின கெட்டியாரால் நடத்தப்பட்ட "ஆரிய ஜனப் பிரியன்'' என்னும் வாரப் பத்திரிகைக்கும் உபபத்திராசிரியராயிருந்து, ஒரிய பெரிய வியாசங்களை எழுதிப் பிரபல பேர்பெற்றனர்.

 

மனைவியார் இறந்ததும் யோகீஸ்வரர் தம் இரு பெண் குழந்தைகளையும் தமையனார் வீட்டில் விட்டு விட்டுத் தாம் யாத்திரை புறப்பட்டுப் பல இடங்களுக்குப் போய்க் கடைசியில் பொதியை மலையை அடைந்து அங்கே சிலவருஷ கால மிருந்து யோகம், வைத்தியம், மாந்திரீகம் முதலியன தேர்ந்துணர்ந்து மீண்டும் இல்லமடைந்து தம் புதல்வியுடன் திருச்சியில் நாராயணபிள்ளை என்கிற பிரபு ஒருவரின் ஆதரவிலிருந்து வந்தனர்.

 

நமது யோகீசுவர ரவர்களிடம் கல்வி பயின்றவர் பலர். அவர்களில் தஞ்சை செயின்ட் பீட்டர்ஸ் காலேஜில் தமிழ்ப்பண்தரா யிருந்த சேதுராமராரதியா ரென்பா ரொருவர். காரைக்காலில் இப்போது சீமான் சாமிமடாதிபதியாருக்கும் குமாரானந்தசாமி என்பார் மற்ருெருவர்.

 

திருச்சியிலிருந்த யோகீசுவார் சென்னைக்கு 1898 - வருஷம் வந்து ஆரியன் ஹைஸ்கூலில் 15 - வருஷகாரம் தமிழ்ப் பண்டிதரா யமர்ந்திருந்து பின்னர் யாத்திரிகராய்ப் பல க்ஷேத்திரஞ் சென்று முடிவில் சென்னையம்பதிக்கே வந்து சேர்ந்து தம் மாணவர்க்குப் பாடம் சொல்லிக்கொண் டிருக்கும் போதே முருகா' என்று கூறிய நிலையில் தமது புகழுடம்பை இப்புவியில்நிலை நிறுத்திப் புண்ணி உவகம் புகுந்தருளினர்.


யோகீசுவரர் தம்முடைய கடைசிக்காலம் வரையில் பாஹிய பூஜைசெய்து வந்தார்.


'கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
 மற்றீண்டு வாரா நெறி "


என்னும் நிறைமொழியை விளக்கிப் போந்த இம்மகான் உபாத்திமைத் தொழிலிலிருந்து பல சிறார்களை நல்வழியில் நிறுத்தியதோடு, உபபத்திராசிரியராக, சென்னையில் ஆரிய ஜனப் பிரியன்' என்னும் வாரப்பத்திரிகையையும், அரிய விஷயத்தாளராக ஆநந்தபோதினி மாதப் பத்திரிகையையும் பொதுநலப் பிரியத்துடன் சிறப்பித்து வந்த நலம் போற்றத்தக்கதொன்றாம். இவர் ஆன்மா என்றும் சாந்தியடைவதாக.

ஓரன்பன்.

குறிப்பு: - ஸ்ரீ சிவாநந்தசாகர யோகீசுவரர் எழுதி வைத்திருக்கும் கட்டுரைகளின் கையெழுத்துப் பிரதிகள் பல எம்மிடம் இருக்கின்றன. நமது "ஆனந்தபோதினி'" மாத சஞ்சிகையில் எப்பொழுதும் போல் அவை தொடர்ச்சியாக வெளியிடப் பெற்றுவரும்.

 

(ப-ர்)

 

ஆனந்த போதினி – 1930 ௵ - மார்ச்சு ௴

 

 

No comments:

Post a Comment