Tuesday, September 8, 2020



ஶ்ரீ நடாதூரம்மாள்

 

இப்பெண்கள் நாயகம் காஞ்சியம்பதியில் தேவராஜப் பெருமாள் என்பவருக்கு 'வாதகுரு' என்னும் நாமதேயத்துடன் பிறந்தவர். பூர்வ புண்ணியப் பேற்றால் இளம் வயதிலிருந்தே கல்வி கேள்விகளிற் சிறந்து ஞானடக்திவைராக்கியங்களிலோங்கி, பகவானையும் அவனடியாரையும் இவர் வழிட்டும்பாக்கியத்தைத் தழுவி வரலானார் தந்தையாரது அனுமதி பெற்று, எங்களாழ்வான் என்னும் ஞானாசாரியரிடம் ஸ்ரீபாஷ்யம் சேவிக்க அவ்வாசாரியருடைய திருமாளிகைக்கு எழுந்தருளினார்; ஆசாரியர் வீட்டு வாசற்கதவு தாரிட்டிருந்தது கண்டு அதைத் திறக்கும்படி தட்டினார். உடனே எங்களாழ்வான் என்பார் "யார்?'' என்றனர். அம்மையார் "நான் தான்'' என்றார். அதுகேட்டு ஆசாரியர் 'அப்படியானால், நான் செத்தபின் வருக'' என்று பதிலளித்தார்.

 

அம்மையார் தமது இல்லத்திற்குத் திரும்பி வந்து நடந்த விஷயத்தைத்தம் தகப்பனாரிடம் தெரிவித்தார். அவர் தம்முடைய செல்வப் புத்திரியை நோக்கி "அம்மா! உலகத்தில் சாதாரணமாக ''பேதைமை என்பது மாதர்க்கணிகலம்' என்னும் ஒரு பழமொழி வழக்குவதுண்டு. அப்பேதைமை நல்லுணர்வு பெற்ற உன்னையும் மயக்கிற்று போலும். 'நான்' என்னும் அகங்காரமும், 'எனது' என்னும் மமகாரமும் பக்தி மார்க்கத்திற் புகுந்தவர்பால் இருத்தல் சிறப்புடைத்தன்று. ஆழ்வார்,


''நீர் நும் தென்றிவை, வேர் முதன் மாய்த்திறை
சேர்மின் உயிர்க்கதன், நேர் நிறை யில்லே"


என்றருளிச் செய்துள்ளார். ஆகவே நீ ஆசாரியரிடம் 'நான் தான்' என்றது அகங்காரத்தை விளக்குதலின் அது ஒழிந்தபின் வா என்று அவர் உன்னை அனுப்பி விட்டார். நீமீண்டும் அவரிடஞ் சென்று பணிவுரையாடி ஸ்ரீபாஷ்யத்தைச் சேவிக்கக் கடவாய்'' என்றோதினார்.

 

அம்மையார் அவ்விதமே ஆசாரியரிடம் போய் மிக்க தாழ்மையோடு அடியேன் இராமாநுஜதாசன்' என்று சாஷ்டாங்கமாகத் தெண்டன் சமர்ப்பித்தார். ஆசாரியரும் அவரை யன்புடன் ஏற்று ''அம்மையாரே! நீரெனக்குப் புத்திரன் போலிருந்து எனது அந்திய காலத்தில் ஆகவேண்டிய சரமகிரியைகளைச் செய்து முடிப்பதாய் பிரதிக்ஞை செய்து தருவீராயின் உமது விருப்பத்தைப் பூர்த்தி செய்வேன்'' என்றார்.

 

அம்மையார் இதைத் தம் தந்தையாரிடம் தெரிவித்து, அவருடைய உத்தரவு பெற்றுக் கொண்டு அங்ஙனமே செய்வதாக ஆசாரியருக்கு வாக்குத்தத்தம்பரிந்து, தமது விருப்பத்தைச் சந்தேக விபரீ தமற முடித்துக்கொண்டார்.

 

ஆசாரியர் திருநாட்டுக் கெழுந்தருளும் பரியந்தம் அவருக்கு வேண்டிய சிஸ்ரூஷை நடத்திவந்து, அவர் திருநகடலங்கரித்ததும் தாம் கொடுத்தவாக்கு நாணயத்தை நிறைவேற்றினார்.
 

பிறது; இவ்வம்மையார் கச்சிவாய்த்தான் மண்டபத்தில் சிஷ்ய வர்க்கத்தினர் பலர்மன் பகவத் காலக்ஷேபம் சாதித்து வந்தனர். இக்கோஷ்டியில் ஸ்ரீ பராசாபட்ட ரென்பவருஞ் சேர்ந்திருந்தார். பட்டர் ஒருநாள் அந்தக்காலக்ஷேடத்திற்கு வராதிருந்தார். அப்போது அம்மையார் காலக்ஷேபாதைநிறுத்தி வைத்தார். இதன்காரணத்தை யறிய, சிலர் அம்மையாரைக் கேட்டபோது அவர், 'காலக்ஷேபத்திற் கேட்ட அர்த்த விசேஷங்க ளவ்வளவையும் சொல்ல வல்லவர் அவராதலின் அவர் வராமையால் இன்று அதனை நிறுத்தினோம்' என்று சொல்லி, பராசரபட்டர் மறுநாள் வந்ததும் அவரைத் தம்பால் கேட்ட விஷயங்களை வெளியிடச் செய்து அதற்கு ‘சுருதப் பிரகாசிகை'எனப் பெயரிட்டனர்.

 

சிலர் இவ்வம்மையாரிடம் வாதத்திற்கு வந்தனர்; அம்மையார் அவர்களை வாதில் வெற்றி பெற்று, வாதிஹம்ஸாம்புதர் என்னும் பெயரை ஏற்று, பெருமாளுக்குப் பாலமுது செய்வித்து வந்தனர். ஒரு சமயம் பாலமுது சூடாயிருந்தமையால் இவர் தமது கைவிரலை அந்தப் பாலில் இட்டுப் பார்த்தனர். இதனைப் பெருமாள் கண்டு, அம்மையாரை நோக்கி ''தாயானவள் இவ்வண்ணம் பாலூட்டுவது குழந்தைக்கல்லவா? நீர் என்னைக் குழந்தையாகப் பாவித்த படியால் என் அம்மாளோ! என்று இவரை யழைத்தனர். அது முதல் இவருக்கு 'அம்மாள்' என்னுந் திருநாமம் வழங்கலாயிற்று.

 

பின்னொரு சமயம் இவர் காட்டு மார்க்கமாகத் திருவேங்கட ஸ்தலத்திற்கு யாத்திரை செய்யும் போது வழியில் பெருமாளுக்குப் பிரசாதம் தயாரித்து அமுது செய்விக்க அனுகூலமான வசதி நேராமையால் திருவாராதனமட்டும் செய்துவிட்டுத் தாம் உபவாசமா யிருந்தார். இதையறிந்த திருவேங்கடமுடையான் ஒரு அந்தணரைப் போல் இவர் முன் தோன்றினார். இவர், அவரை அன்புடன் பணிந்து 'தேவரீர் யார்' என்று வினவ, வந்தவர் 'திருவேங்கடமுடையான் அமுது செய்த பிரசாதத்தைத் தேவர் நிமித்தம் கொண்டு வந்தனன்' என்றார். அம்மாள் அமுது செய்ததும் வந்தவர் மறைந்தருளினார். அம்மாள் இது பெருமாள் செயல் என்று நினைத்து ஆனந்த பாவசராய் திருவேங்கடஞ் சென்று பகவானைப் பலவாறு மனதாரத் துதித்து அங்கு சிலகாலந் தங்கிப் பின்னர் காஞ்சியம்பதிக்குத் திரும்பி, காலக்ஷேபம் செய்திருந்து திருநாட்டுக் கெழுந்தருளினார்.

 

இவரைப் போல் எத்தனையோ பெண்மணிகள் பகவத் பக்தியிலீடுபட்டு மேன்மை யடைந்திருக்கின்றனர். கணவரோடு கடவுளை வழிபடும் பாக்கியத்தை எல்லா ஸ்திரீகளும் கைப்பற்றிவரின் நாடு நன்னிலையடையும் என்பது திண்ணம்.

 

ஓரன்பன்.

 

சென்ற தை மாதத்து ஆனந்தபோதினிச் சஞ்சிகையில் (1928 January), நடாதூரம்மாள் என்று பிரசித்திபெற்ற ஒரு ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியரின் சரிதையைப் பற்றிச் சுருக்கமாக ஓரன்பர் எழுதியிருந்ததைக் கண்ணுற்றோம். அதில் உள்ள மூன்று தவறுதல்களை இங்கே தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

 

நடாதூரம்மாள் என்பவர் ஆண்பாலரேயன்றிப் பெண்பாலரல்லர். அம்மாள் என்றது சிறப்புப் பெயர். வாத்ஸ்ய வரதாசார்யர் என்பது நிஜநாம தேயம். இவ்வுண்மை உணராது, "இப்பெண்கள் நாயகம்'' என்றும், " அம்மையார் " என்றும், " இவரைப்போல் எத்தனையோ பெண்மணிகள் பகவத்பக்தியி லீடுபட்டு மேன்மை யடைந்திருக்கின்றனர்'' என்றும் எழுதியிருப்பன வியக்கத் தக்கனவே.

 

அன்றியும், இவ்வாசிரியருடைய திருவடிகளில் ஸ்ரீபராசரபட்ட ரென்பவரும் சேர்ந்திருந்தார் என்றும் அவர் சுருதப்ரகாசிகை இயற்றினார் என்றும் எழுதப்பட்டுள்ள விஷயமும் மயக்கத்தாலாயது. நடாதூரம்மாள் திருவடிகளில் ஸுதர்சனபட்டர் என்பவர் ஆச்ரயித்திருந்ததுண்டு; அவரே சுருதப்ரகாசிகை இயற்றியருளினவர். ஸ்ரீபராசரபட்டர் அல்லர்.

 

அன்றியும், நடாதூரம்மாள் சில வாதிகளை வென்று வாதிஹம்ஸாம்புதர் என்னும் பெயரை ஏற்றதாக எழுதியுள்ளதும் மருள். அம்மாள் திருவடிகளில் ஆசிரயித் தவரும் ஸ்ரீமத் வேதாந்த தேசிகருக்கு ஆசிரியருமான கிடாம்பி அப்புள்ளார் (ஆத்ரேய. ராமாநுஜாசார்யர்) என்பவர்க்கே வாதிஹம்ஸாம்புதர் என்ற திருநாமம் உள்ளது. அதனை அம்மாளுக்கு உள்ளதாகக் கூறுதல் மாறுபாடு.

 

இப்படிப் பல மருள்கள் தோன்றுமாறு ஒரு விஷயத்தை எழுதுவது அழகியதன்று. ஆசிரியர்களின் சரித்திர மெழுதுவதென்றால் நல்ல ஆராய்ச்சியுடன் எழுதுதல் நன்று. ஒன்று கிடக்கவொன்று ஓதிவைப்பது பின்னோர்க்குப் பெரும்பான்மை மயக்கங்களை விளைத் திட்டுத் தத்துவ வுணர்ச்சியைத் தடை செய்திடும். ஆகவே, அறிஞர்கள் ஆராய்ந்து எழுதத் துணிய வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம்.

 

திவ்யப்ரபந்த திவ்யார்த்ததீபிகை யாசிரியரின்,

ஓர் சீஷன்.

 

ஆனந்த போதினி – 1928 ௵ -

ஜனவரி, பிப்ரவரி ௴

 

 

 

 

No comments:

Post a Comment