Tuesday, September 8, 2020

 

ஶ்ரீயுத – லாலா லஜபதி ராய்

 

எந்தநாட்டில் அடிமைக்குணத்தின் ஆதிக்கம் வேரூன்றி யிருக்கிறதோஅங்கு விடுதலைக்கு வேலையில்லையாம். விடுதலையின்மையால் வறுமையும் துயரமும் வளர்தல் இயல்பேயாகும். ஆதலின் வேண்டுவதென்னை? பௌருஷம் - வீரம், வீரத்தால் அடையத்தக்கது விடுதலை; அதாவது சுதந்திரம். நம் தாய்நாட்டின் விடுதலைக்கு வழிகாட்டிகளாய் அவதரித்த அற்புதபுருடர்களுட் சிறந்தவர் லாலா லஜபதிராய். இப்பெரியாரின்

பிறப்பும் இளமையும்


பெருமை யுடையன. இவர் 1865 - ம் ஆண்டின் இறுதியில் லுடியானாவைச் சேர்ந்த ஜெகரன்பூரில் பழம்புகழ் படைத்த அகர்வார பன்னிய குலத்தில், முன்ஷி ராதா கிருஷ்ண லாலா அவர்களின் திருக்குமாரராய் உதித்தவர். வீரத்தாய்மார்களே நிறைந்த பன்னியகுல ஸ்திரீ ரத்னங்களில் இவரது அன்னை நல்லிலக்கணங்களனைத்தும் அமையப் பெற்றவர்; குடும்ப நிர்வாகத்தில் நிகரற்ற நிபுணத்துவம் வாய்ந்தவர். இவருடைய தந்தை ஓர் ராஜாங்கபாட சாலையில் பாரசீக, உருது பாஷா பண்டிதராயிருந்து, பல நூல்களியற்றி, ஞானியென்று பெயரெடுத்தவர். இவருடைய நான்கு புத்திரருள் பாஞ்சால சர்வகலாசாலையில் பி. ஏ. பரீக்ஷையில் தேர்ந்த இரண்டாவது குமாரர் அப்போதே காலஞ் சென்றார்.
 

லஜபதியின் கல்விப் பயிற்சிக் காலமெல்லாம் வெகு சிறப்பாய்க் கழிந்தது. கீழ்த்தரப்படிப்பு முடிவானதும் அவர் லாகூர் அரசாங்கக் கல்லூரியில் பரிசு பெற்று போஷணை மாணவராகக் கல்வி பயின்றார். பஞ்சாப் சர்வகலாசாலை சட்டப் பரீக்ஷையில் தேர்ந்து அவர் 1883 - ல் அதாவது பதினெட்டாம் வயதிலேயே பொருளீட்டத் தொடங்கினார்; அக்காலத்தில் அவருக்கு குருதத்த வித்தியார்த்தி, லாலா ஹான்ஸ் ராஜ் என்ற இரு மஹான்களின் சம்பந்தம் ஏற்பட்டது. அந்நாளில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆரியசமாஜ இயக்கம் பரவி சமரச உணர்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருந்தது. மேற்கூறிய மூவரும் அவ்வியக்கத்திற் சேர்ந்து, திரிகரண சுத்தியுடனும் ஆற்றலோடும் உழைக்கலாயினர். வயதால் அவர்கள் சிறியோராயினும் செய்கையாற் பெரியோரெனப் பெயர் படைத்தனர். அதில் லஜபதி, பாஞ்சால நாடெங்கும் சுற்றிக் கூட்டங் கூட்டி, சபைகளை ஸ்தாபித்து, பிரசுரங்களை வழங்கி அரும்பாடு பட்டு வந்தார். அதிகம் கூறுவானேன்! - ஆரிய சமாஜம் பாரத பூமியில் ஏதேனும் நற்காரியங்களைச் சாதித்திருக்குமானால் அதன் பெருமைக்குப் பாத்திய முடையவர் லஜபதியே யாவர். அந்நாள் முதல் அவருடைய



 

வீரமும் சீலமும்

விளக்க முற்றன. வக்கீலாய் சன்னது பெற்றபின் லஜபதி பாஞ்சால நாட்டின் கண்ணுள்ள ஹிசார் எனும் நகர் வாசியானார். நல்ல கல்விமான்களின் கூட்டுறவும் அவருக் கேற்பட்டது. அவர் 1892 - ம் ஆண்டுவரையில் ஹிசாரில் பிரபல நியாயவாதியாயிருந்து பொருளும் புகழும் சம்பாதித்ததன்றி, அந்நகர பரிபாலனத் தலைவராகவும் மூன்றாண்டுகள் சேவை செய்து பொதுஜனங்களின் வாழ்த்திற்கு உரியாராயினர். அந்நாட்களில் அவருக்கு நியாயவாதத் தொழிலில் நல்ல வருமானமும், சட்ட நிபுணரென்ற பெருமையும் ஏற்பட்டன. பேராசையும், பொருளுக்காகத் தம்மை அடிமைப்படுத்திக் கொள்ளும் தாழ்ந்த குணமும் அவரிடம் இல்லாமையால், அவர் எப்பொழுதும் ஞான நூல்களையும், இலக்கண இலக்கியங்களையும் கற்பதில் தமது காலத்தைப் பெரும்பாலும் செலவு செய்தார். அப்பால், 1892 - ல் லாகூர் பெரிய நீதிமன்றத்தின் நியாயவாதிகளில் முக்கியஸ்தராய், லாகூரிலேயே தொழில் நடத்தி வசிக்கலானார். அதன்பின், அவர் இடையிடையே நோயால் பீடிக்கப்பட்டாராதலின் வருமானம் குறைய வாரம்பித்தது. அவர் மிகுதியும் ஈடுபட்ட தேசஊழியமும் அவரது வருவாய் குன்றியதற்கொரு காரணமாகும். வித்யாபிவிருத்தி, சமய வளர்ச்சி ஆகிய துறைகளில் அவர் முன்னணியில் நின்றுழைக்கலாயினர். 1896 - ம் வருடம் ஜூன் மாதம் 1 - ம் தேதி லாகூரில் ஸ்தாபிக்கப் பெற்ற தயானந்த வைதீக வித்யாசாலைத் (காலேஜ்) திறப்பு விழாவில் அவர் எடுத்துக் கொண்ட சிரமம் அளவற்றது. அக்கலாசாலையின் ஸ்தாபிதத்திற்கு மூலதனமாகக் கிடைத்த பொது ஜன நன்கொடைத்தொகை ஐந்து லக்ஷரூபாயும் லஜபதியின் உழைப்பாலேயே சேர்ந்தது. அவர் அதன் உதவி அக்கிராசனர் பதவியைப் பன்னிரண்டாண்டுகள் வகித்திருந்தார்; அக்கல்விச்சாலையின் காரியதரிசியாகவும் சரித்திர போதகாசிரியராகவும் தொண்டியற்றினார். ஜலந்தர் சமஸ்கிருத கலாசாலைக்கு அவர் காரியதரிசியாக விருந்து அதற்குத் தக்க மூலதனத்தைத் தேடிவைத்தார். 1905 - ல் அமெரிக்கர்களின் கல்வி முன்னேற்ற வழிகளை அறிந்து வரும் பொருட்டுச் சென்று வந்தார். ராஜீய விஷயமாக ஸ்ரீகோபாலகிருஷ்ண கோகலேயுடன் அவர் அகில பாரத ஜனங்களின் பிரதிநிதியாய் இங்கிலாந்துக் கேகினார்; இங்கு வந்த பின்னர் மேனாடுகள் சென்று, சமூக, ராஜீய வித்தியாபி விருத்தி விஷயங்களில் பயின்று வரக்கூடிய வாலிபர்களைத் தயாரிப்பதற்காக கழகமொன்றையும் ஏற்படுத்தினார். நிற்க,

லாலாஜியின்


 அநாதரக்ஷணார்த்த வேலை


அவனியிலும் பெரியதாகும். தேசத்தில் பஞ்சத்தாலும் காலரா பிளேக் முதலான கொள்ளை நோய்களாலும் ஜனங்கள் உழல்வது கண்டு மனமிரங்கித் தமது பூமிகளை விற்றும் பிச்சை எத்தும் அவர்களைக் காப்பாற்ற முற்பட்டார். அநாதைகளான குழந்தைகளையும் பிணியாளர்களையும் அங்கஹீனர்களையும் சாஸ்வதமாக ரக்ஷிக்க ஓர் ரக்ஷண சாலையையும் அக்கணமே நிறுவினார்; ஆரிய சமாஜத்தின் பரோஜ்பூர் அநாதரக்ஷகக் கிளைச்சங்கத்தின் காரியதரிசியாக விருந்து ஆயிரக்கணக்கான அகதிகளைக் காப்பாற்றத் தேவையான மூலதனத்தைச் சேகரித்தார். 1897, 1899, 1900 ஆண்டுகளில் ஹிந்து அகதிரக்ஷணைக்காக மிகவும் வருந்தி இரண்டாயிரம் மக்களைக் காப்பாற்றினார். 1901 - ம் வருடம் ராஜாங்கத்தாரால் நியமிக்கப் பெற்ற பஞ்சநிவாரண ஆலோசனைச் சபையில் அவர் தக்க சாக்ஷியங் கொடுத்தார். 1905 – ம் ஆண்டில் காங்கரா ஜில்லாவில் பூமி அதிர்ச்சியால் பெருத்த சேதமும் நஷ்டமும் ஏற்பட்டன. அச்சமாம் லாலாஜி லாகூர் ஆரிய சமாஜத்தின் ஆதரவில் செய்த உதவியும் ஊழியமும் கொஞ்சமல்ல. தாமே நேரில் பிணியாளர்களுக்குச் சிகிச்சை செய்வதும். உடையற்றவர்களுக்கு ஆடை வழங்குவதும், துயரப்படுவோரைத் தேற்றுவதுமாக அவர் இரவும் பகலும் பாப்பட்டார். அவருக்கு ஏழைகளிடம் ஏற்பட்ட காருண்யத்தையும், தர்ம சிந்தனையையும் அரசாங்கம் முதல் அனைவரும் மெச்சிப் புகழ்ந்தார்கள். இனி, அவருடைய


பொதுநல ஊழிரம்


எத்தன்மைத் தென்பதைச் சுருக்கிக் கூறுவோம். லஜபதிக்குப் பல தொழில், வியாபார நிலையங்களின் சம்பந்தமுண்டு. 'பஞ்சாப் நாஷனல் பாங்கின்” அதிபரும் அவரே. அநேக பஞ்சாலைகளில் அவர் கூட்டு முதலாளியாயமிருப்பர். இவை பற்றி அவருக்கு வருமானமும் அதிகமுண்டு. இவ் வருமானத்தின் பெரும்பகுதியை ஏழைகட்கே உதவுவார். அவரது எழுதும் வன்மையினை என்னென்று புகழ்வோம்! பத்திரிகாசிரியராக அவர் பல்லாண்டுகள் உருதுமொழியில் ஓர் மாதாந்த சஞ்சுகையையும் வாரப் பத்திரிகையையும் நடத்தி வந்தார் அம்மொழியில் பாஜினி, சிவாஜி, சுவாமி தயானந்த சாஸ்வதி, ஸ்ரீ கிருஷ்ணா முதலிய புண்ய சரித்திரங்களைப் பத்திச் சுவைநனி சொட்டச்சொட்ட எழுதினார். ராஜீய தேசீய விஷயமாக அவர் பிரபல ஆங்கிலப் பத்திரிகைளுக்கு அவ்வப்போது சேர்ந்த கட்டுரைகளை வரைந்து வந்தார். பண்
டித குருதத்த வித்தியார்த்தி, எம். ஏ. அவர்களின் சரித்தராம்ருதத்தை அவர் ஆங்கலத்தில் எழுதிப் பரசுரித்தார்; ஆரிய சமாஜத்தின் சரித்திரத்தைக் காலவரையறைப்படி எழுதினார்.

 

வரவர ராஜீயத்துறையில் நாடு விழிப்படைய ஜபதியம் அதன் கண்தீவிரமாய்ப் பிரவேசத்து உழைக்கலானார். அவர் முதல் முதலாக 1838 – ல் அலகபாத்தில் கூடிய காங்கிரஸ் மஹா சபையில் கலந்து கொண்டார். அக்காலந்தொட்டு அவர் தேசத்திற்கு எழுத்தாலுச் சொல்வன்மையாலும் பொருளாலும் புரிந்து வருமுதவி எண்ணில. 1905 - ம் வருஷத்திய அகில இந்திய காங்காஸ் மகாசபையில், பிரதேசபக்தர்கள் இவரது உழைப்பைப் பகிரங்கமாகப் பாராட்டி, அதன் அரிகுரியாக இந்திய மக்களின் குறைகளை எடுத்தோதற்கு தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுள் ருராக அரையும் தேர்ந்தெடுத்து இங்கிலாந்திற் கனுப்பினர். பஞ்சாப் ஹிந்து சபை அவரது பிரயாணச் சென்றகாக ரூ 300 அளித்தது. அப்பொருளை அவர் ஏற்காமல் ஏழைகட்கு வழங்கி, தமது சொந்தச் செல்விலேயே இங்கிலாந்துக்குச் சென்றார்; பிகு அவணினயும் அமெரிக்காவுக்கு ஏகினார்; பின்னர் மீண்டும் இங்கிலாந்தையடைந்து ஸ்ரீ கோபால கிருமண கோகலேயுடன் சிலகாலம் சேர்ந்துழைத்து வந்தார். இங்கிலாந்தின் ஒவ்வொரு முக்கிய நகரத்திற்குஞ் சென்று இந்திய ஜன சமூகத்தின் குறைகளை ஐரோப்பிய ருள்ளத்திற் பதியும்படி பிரசங்கித்தார். அப்பால், அவர் இந்தியாவுக்கு வந்து தாம் மேல்நாடுகளில் கண் கூடாகக் கண்ட தொழில் விருத்தி விஷயங்களை விரித்துரைத்து, தொழிற் சாலைகளை ஸ்தாபித்து சுதேசப் பொருள் விருத்தியில் ஊக்கம் ஏற்படச் செய்தார். 1905 - ம் ஆண்டு காசியிற்கூடிய காங்கிரஸ் மகாசபையில் லஜபதிராய் தமது மேற்றேய அனுபவங்களையும் சீர்திருத்த அபிவிருத்தித் துறைகளையும் தெளிவுற உணர்த்தினார். அவருடைய பிரசங்கங்களனைத்தும் என்றும் ராஜவிஸ்வாஸம் ததும்பியவையாகவே யிருந்தன.


நாடு கடத்தல்

 

பஞ்சாப் ராஜாங்கத்தார் அவருடைய பிரசாரத்தையும், நோக்கங்களையும் குற்றமுடையனவாகக் கருதினார்கள். லாலாஜியும் பிறராஜீய ஒத்துழைப்பார்களும் ஏதோ ராஜாங்கத்திற்கு எதிராக அந்தரங்க சூழ்ச்சி செய்து வந்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டார்கள். லாலாஜி எடுத்தோதிய சமாதானங்கள் சரியானவையென்று அரசாங்கத்தார் நினைக்கவில்லை. உடனே சட்டங்கள் புறப்பட்டன. தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ராவில் பிண்டியில் அளவுக்கு மீறின வரி உயர்த்தப்பட்டது. குடியேற்ற மசோதா, நிலபராதீனசட்ட சீர்திருத் மசோதா, வாய்க்கால வரியுயர்த்தும் மசோதா முதலிய மசோதாக்கள் போதாத காலத்திற்குத் தோதா யெழுந்தன. தீவாந்தாசிக்ஷை விதிக்கப்பட்டு லாலாஜி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். பரம காருண்ய சீலரான லார்ட் மின்டோ பிரபுவுக்கு உண்மை விளங்கிற்று. அரசப் பிரதிநிதியான அவர் ஆய்ந்தோர்ந்து குடியேற்ற மசோதாவை ரத்து செய்தார். கிளாச்சி யடங்கிற்று. விரைவில் லாலாஜியும் இந்தியாவுக்கு வர அனுமதியளிக்கப் பெற்றார். அவரை


என்றும் வாழ்க


வென்று பாரதவாசிகள் ஆசி கூறினார்கள். அவருடைய குணாதிசயங்களைக் கூறு மிடத்து அவர் என்றும் உற்சாக முடையவர்; இரக்க முடையவர். சிறந்த அரசியல்வாதி; நியாயவாத நிபுணர்; பொருள்தனைப் புண்ணிய தேசசேவைக்கென விநியோகிக்கும் விமலர்; ஆராய்ந்து பேசும் அன்பர்; சீர்திருத்த சீலர்; ஆர்ய சமாஜ சூர்யர்; அவருக்கிணை அவர்தான். யுக்தா யுக்தங்களால் படிப்படியாக தேசநலம் பெருகும் வழிகளை ஓர்ந்துணர்த்தும் அவ்வுத்தமர் விடுதலையாகி மீண்டதும், உற்சாகத்துடன் உழைக்கவாரம்பித்தார். அவர் தலைவர் பதவி வகிக்க வேண்டு மென்றோ, மகாஜனங்கள் தம்மைத் துதிக்க வேண்டுமென்றோ கனவிலும் கருதாதவர்; தமது அகில இந்திய காங்கிரஸ் அக்கிராஸசனர் பதவியை அவர் பாஷ் பிகாரி கோஷ் அவர்களுக்கு அளித்ததன்மையே இதற்குப் போதிய சான்றாகும். அதன்பின், அவர் பன்முறை இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும், ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்குஞ் சென்று. இந்தியாவின் குறைகளை எடுத்தோது வந்தார். ராஜீய அரங்கத்தில் இப்பெரியார் அன்று முதல் இன்றளவும் ஒரசீராக பழம்புலி'
மாய் விளங்குகிறார். சமீபத்தில் அவர் சென்னை மாகாண மெங்கும் சுற்றுப் பிரயாணஞ் செய்து சிறப்பாக மலையாளத் தீண்டாதார் நிலைமையையும் பொதுவாகத் தென்னாட்டு நிலைமையையும் அறிந்து சென்றார். வயதால் அவர் முதியவராயினும் உழைப்பால் என்றும் யௌவனரேயாவர். இப்பெருந்தகையைப் புகழ எத்தனை நாபடைத்தாலும் இயலுமோ? அவர் ஆயுள் பெருக ஆரோக்ய
திடகாத்திரராய் வாழ பாரதேவி பரிபூர்ண கிருபை பாலிப்பாளாக.

 

(S. V. வரதராஜையங்கார்.)

 

ஆனந்த போதினி – 1928 ௵ - நவம்பர் ௴

 

 

 

 

 

No comments:

Post a Comment