Tuesday, September 8, 2020

 ஹரிதாசர்

 

      ஹரிதாசர் ஓர் சிறந்த பக்தர். இவரைக் குறித்து பூர்வ சரித்திரம் ஒன்றும் புலப்படவில்லை. ஆயினுமிவர் 16வது நூற்றாண்டில் அஸ்தினாபரத்தின் சமீபத்தேயுள்ள இருள் காண்ட ஆரண்யத்தே வசித்து வந்தார். இவரது பெம்றோர்களும், ஜாதி மதங்களும் ஒன்றும் பெரியவில்லை. ஆயினும் இவரைஹரிதாசரென்பர். அவ்வாரண்யதே ஓர் ஆசிரமம் ஏற்படுத்திக்கொண்டு அதனுள் வசித்துலந்தார். சதா காலமும் கடவுளைத் துதிப்பதைவிட வேறொன்றும் செய்வதில்லை. சங்கீத சாஸ்திர மறிந்தவர். இவர் தம்பூர் மீட்டிப் பாடும் போது கேட்போர் பிரமை கொள் வரென்பது திண்ணம்.

 

இவருக்கு தான்ஸே னென்று ஓர் சீடரிருந்தார். இவர் தாசரைநாடி அவருக்குப் பணிவிடை செய்து சங்கீதத்தைக் கசடறக் கற்றார். தான்ஸேன் அக்பர் சக்கிரவர்த்தியின் ஆஸ்தானத்தே சங்கீத வித்வானாக இருந்து வந்தார்.

 

சக்கிரவர்த்தி தனக்கு வேண்டும் போழ்தெல்லாம் தான் ஸேனிடம் சங்கீதம் கேட்டு ஆனந்திப்பர். அவரது கானத்தைக் குறித்து பாதுஷா பன்முறை துதித்து வந்தார். அவர் துதிக்குந் தருணமெல்லாம் தான்ஸேன் ''வேந்தனே! இதில் என்னுடைய மகிமை யொன்றுமில்லை. எல்லாம் குருவின் கடாக்ஷம். நானவரது பாததூளிக்கும் ஒப்பற்றவன். புகழ்யாவும் அவரைச் சேருமல்லாது என்னை அணுகா'' என்று கூறுவர். இவைகள் தான்ளேனின் நற்சீலத்திற்கு நிதர்சனமென்று கருதினாரே யன்றி அவ்வார்த்தைகளை கவனிக்க வில்லை பாதுஷா.

 

தான்ஸேன் இவ்வாறு கூறிவருகையில் ஓர்ராள் பாதுஷா அவ்வார்த்தைகள் மீது கவனம் செலுத்தலானார். கடவுள் ஒஹரி சாசரைச் சோதிக்கும் பொருட்டு பாதுஷாவிற்குப் பத்தி கொடுத்தார் போலும். பாதுஷா தான்ஸேன்! நினது கீதங்களைக் கேட்டு ஆனந்தித்து துதிக்குங்கால் நீ நினது குருவைப் புகழ்கிறாயே. அவர் யார்? எங்கிருப்பவர்? அவரது இனிய கீதங்களைக் கேட்க நானருகால்லனோ? " என்றார். அதற் கொன்றும் விடையளிக்கவில்லை தான்ஸேன். பாதுஷா எத்தனை முறை கேட்பினும் பதில் இல்லை. உடனே கோபம் வந்தவிட்டது. அப்பொழுது தான்ஸேன் 'வேந்தே அவர் இவ்விடம் வந்து யாசிப்பவரல்ல. சமமுணர்ந்து தங்களை அவரிடம் அழைத்துச் செல்லுகிறேன்.' என்றார். பாதுஷாவின் கோபமும் தணிந்தது.

 

ஒரு நாள் தான்ஸேன் பாதுஷாவுடன் தாசரின் ஆசிரமத்திற்குச் சென்று பாதுஷாவை வெளிப்புறமே நிற்கச் செய்து "நான் உட்சென்று பாடும்படி செய்கிறேன். நாங்கள் இவ்விடத்திலிருந்தே கேளுங்கள்'' என்று கூறிதான் சேன் உட்சென்று ஹரிதாசருக்கு வணக 'சுவாமி! சமுசாரத்தின் கஷ்டங்களால் மனது நிலைய றிருக்கிறது. பத்தி நிறைந்த தங்களது கீதங்களைச் செவிக்கினிமையாய்க் கேட்டு மனத்திகுச் சாந்தமளிக்க வந்துளேன். கிருபை கூர்ந்து ஆட்கொள்ள வேண்டும்'' என்றார்.

 

தனது சீடனின் வேண்டுகோளுக் கிணங்க தாசர் சுருதி கூட்டி பாடத் தொடங்கினார். சிறிது நேரத்திற்குள் பக்தி பரவசம் மேலிட இருவரும் ஆனந்தத்தி லாழ்ந்தனர். வெளியே யுட்கார்ந்திருந்த பாதுஷா கானமா துரியத்தால் தன்னையும் மறந்து வாய் விட்டு '' பேஷ் பேஷ் " என்றார். அக்குரல் கேட்டு ஹரிதாசர் தான்ஸேன்! வெளியிலுள்ளவர் யார்?'' என்றார்.
 

தான்ஸேன், "சுவாமீ அக்பர் சக்ரவர்த்தி தங்களது கானத்தைக் கேட்க விரும்பி என்னிடம் கூறினார். நானழைத்து வந்து வெளியிலுட்காரச் செய்தேன்" என்று சொல்ல சாசர் தான்ஸேன்! நீ விவேகமற்றவனல்லவா? மாய்கையில் மூழ்கிக் கிடக்கிறவர்களை இவ்விடம் அழைத்து வரலாமா? அங்ஙனமாயின் நமக்கு சாந்தி இரா. ஆயினும் இவ்வளவு தூரம் வந்தவரை உள்ளே அழைத் துவா " என்றார்.

 

தான்ஸேன் குரு கட்டளையை நிறை வேற்றினார். பாதுஷா உள்ளே வந்ததும், சக்ரவர்த்தி என்று கருவம் கொள்ளாமல் தாசரை வணங்கினார். தாசரவரை உட்காரச் செய்து புன் நகையுடன் " என்பாட்டைக் கேட்கவா வந்தீர்? இதோ பாடுகிறேன் கேளுங்கள்'' என்று பாடத் தொடங்கினார். சிறிது நேரத்திற்குள் அக்கானத்தின் இனிமையைக் கேட்டு இரண்டு மான்கள் அவ்விடம் வந்து செவிகளைத் தூக்கி நின்றன. தாசர் சிறிது நேரம் பாடிநிறுத்தினார். பாதுஷா அப்போது தானணிந்திருந்த முத்து மாலையைக் கழற்றி ஹரிதாசர் பாதத்தில் வைத்தார் யாவற்றையும் துறந்த அவரது கண்களுக்கு மண்ணும் மணியும் ஒன்றே யன்றோ. தாசர் பாதுஷா வைத்த மாலையை எடுத்து தனது பக்கத்தில் நின்றிருந்த மான் கழுத்தில் போட்டார். உடனே மான்கள் குதித்து ஓடி விட்டன.

 

பாதுஷா அதனைக் கண்டு வெட்கமடைந்து 'மதிக்க வொண்ணா இம்மாலையை நான் எவ்வளவு கஷ்டப்பட்டுச் சம்பாதித்தேன். இக்காட்டுமனிதர் இதன் சிறப்பை எப்படி அறிவார்? குரங்கிற்கு பூ மாலை என்பதுபோலாயிற்று' என்றெண்ணினார். தாசர் பெருமை என்ன அறிவார்? அவரது கருத்தும் இயற்கையே யன்றோ? அவர் பெருமை கடவுளறிவரல்லாது மாய்கைக் குட்பட்ட மனிதாறிகரா? அப்பொழுது தாசர் பாதுஷாவின் எண்ண மறிந்தவராய் மறுபடியும் பாடத் தொடங்கினார். அவ்வோசைக்குக் காட்டிலுள்ள மான்கள் யாவும் அவ்விடம் கூடி கீதம் கேட்டுநின்றன். ஒவ்வொன்றின் கண்டத்திலும் முத்து மாலை தொங்கிக் கொண்டிருந்தன. அந்த விசித்ரதோற்றத்தை பாதுஷா கண்டு, வெட்கத்தால் தலை குனிந்தார். அவருக்கு யாவும் கனவு போல் காணப்பட்டன. தாசர் பெருமையை அறிந்தார். அவர் மகானென்றுணர்ந்தார். தன் எண்ண மறிந்தே இந்நிகழ்ச்சிகளை யுண்டாக்கினா ரென்றுணர்ந்தார். விழித்துப் பார்த்து மாய்கைக் குட்பட்டு மாய்கையினின்றும் விடுபடும் மார்க்கமறியாதிருப்பது மூடத்தன்மை என்றறிந்தார்.

 

தாசர் "வேந்தே! இதில் உமது மாலையைத் தேடிக் கொள்ளுங்கள்'' என்றார். பாதுஷாவிற்கு ஒன்றும் தோன்றவில்லை. தாசரின் பாதங்களைப் பணிந்து " என்னை மன்னிக்க வேண்டு மென, தாசர் ''வேந்தனே! பயமில்லை. மாய்கையே சாசுவத மென்று நினையாதே. நன்மார்கத்தி லீடுபட்குழலு. நியாய புத்தியுடன் பிரஜைகளை ஆகரிப்பாயாக! மதப்பற்றுதலற்ற உன்னைப் போன்ற அரசரைப் பெரும் பாக்கியம் பிரஜைகளுக்குண்டாயது கடவுளின் கிருபையேயாம். சுப முண்டாகுக.'' என்று ஆசீர்வதித் தனுப்பினார். இக்கதை அக்காலத்திய இந்து முஸ்லீம் ஒற்றுமையை நன்கு விளக்குதிறதன்றோ?

 

ஆனந்த போதினி – 1929 ௵ - ஜுலை ௴

 

 

No comments:

Post a Comment