Tuesday, September 8, 2020

 

ஶ்ரீமத் அபேதானந்த சுவாமிகளின் உபந்நியாசம்.

 

ஸநாதந தர்மம் புராதன மதம்.

 

தற்கால சாஸ்திர ஆராய்ச்சிகள் புதுமதம் தேடுகின்றன.

 

தற்காலத்திலோ ஐரோப்பா அமெரிக்காவில் ஆராய்ச்சி தீரர்களும், சாஸ்திரிகளும், வேதாந்திகளும் ஒரு விதமான உணர்ச்சியை அடைந்திருக்கிறார்கள். பசி உண்டாயிருக்கிறது, தாகம் அதிகரித்திருக்கிறது. அப்பசி தாகம் தணிய கிருஸ்துமதம் போதியதாய் அவர்களுக்குக் காணவில்லை. ஜீவனின் சூக்ஷ்மம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க வழி என்ன என்பதற்கு கிருஸ்துமதம் காட்டிய வழியும் இருத்த விடையும் அவர்களைத் திருப்தி செய்ய முடியவில்லை. ஆதலால் அவர்கள் அம்மதத்தை விலக்குகிறார்கள். அது அமெரிக்காவில் மிகவும் குறைந்து அநாதரிக்கப் பட்டு வருகிறது. இப்பொழுதுள்ள கிருஸ்துவ சாஸ்திர ஆராய்ச்சிகள் கிருஸ்துவ கொள்கைகளின் மேல் செய்வதன்று; ஆனால் ஸநாதன தர்மத்தின் உண்மைகளின் பேரில் செய்யப்படுவன. தற்போது கிருஸ்து என்பது ஒரு நிர்குணமான பொருளாய் அறியப்படுவதேயன்றி ஒரு ஸகுணரூபியாய் அறியப்படுவதன்று. பகவத்கீதை முதலான சாஸ்திரங்களை அமெரிக்கா ஐரோப்பா முதலான தேசங்களிலுள்ளவர்கள் கற்றறிந்து அவைகளுடைய உண்மைகளை ஒப்புக்கொண்டிருக்கின்றார்கள். ஆதலால் நித்யமான தத்துவங்களை அறிவதற்கு இன்று ஜனங்கள் பேராவல் கொண்டு பெரும்பசியுடன் இருக்கின்றார்கள்.


உற்பத்தி, ஸ்திதி, லயம்.

 

உயிரற்ற ஜடம் என்பது கிடையாது என்று வைத்தியர் போஸ் நிரூபணம் செய்திருக்கிறார். தாவர, ஜங்கம, சமஸ்தலோக பதார்த்தங்களிலும் ஜீவ தத்வம் விளங்குவதாகவும் எல்லா வஸ்துக்களும் சுகதுக்காதி ஸ்மரணைகளை அனுபவிப்பதாகவும் அத்தத்துவசாஸ்திரி ரூபிக்கின்றார். ஆதலால் ஸநாதந தர்மம் பண்டைக் காலமுதல் கூறுவதை அவர் ஈண்டு ரூபிப்பதன்றோ? பிராணன் அந்தர் யாமியாய் ஸமஸ்த வஸ்துவிலும் உறைகின்றது. அதுதான் மூலாதாரப் பொருளென்று வேதம் அறைகின் நது தோன்றியதெல்லாம் ஒன்றுமில்லாத சூன்யத்தினின்றும் வந்ததல்ல. இல்லது வாராது, உள்ளது போகாது என்பது ஸத்யம். இந்த உற்பத்தி ஸ்திதி லய சக்கிரத்தின் ஆரோகண அவரோகண கதியானது ரிக்வேதத்தில் பன்னெடு நாளைக்கு முன்பே பரக்கக் கூறியிருப்பதே. சூர்யனைப் படைக்கு முன்பு பூமியிருந்தது என்று சொன்னால் ஈண்டு நம்பு வாரின்று. இந்த உலகம் 6000 வருஷத்திற்குள் படைக்கப்பட்டதென்றால் இன்று ஏளனம் செய்து சிறிப்பார் பலர். கலிபோர்னியாவில் 6000 வருஷத்திற்கு அதிக வயதுடைய மரங்கள் இன்னும் காணப்படுகின்றன. 360 அடி உயரமும் 60 அடி சுற்றளவுமுள்ள மரங்கள் இருக்கின்றன. பூமண்டலத்தில் மனிதனின் தோற்றமும் யுகாந்த விஷயம் என்பதும் கிருஸ்து பிறந்ததற்கு முன்பு 10, 000 வருஷத்திற்குக் குறைவில்லை என்பதும் ஒப்புக்கொண்ட விஷயம். ரிக் வேத மந்திரங்களில் விளங்கும் ஸநாதனதர்ம மூலதத்வங்கள் ஈஸ்வர வாக்கு என்பதானது ஸர்வேஸ்வர னின் ஸககாரிகளாகிய மஹரிஷிகள் வாக்குமூலத்தால் வெளிப்படுத்தப்பட்டது. ரிக்வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் வாக்கியங்கள் சிருஷ்டி ஸ்திதி லய சக்கிரத்தையே குறிக்கின்றன. படைப்புக்கு முன்னால் அந்தகாரம் மூடி ஒரே நிச்சப்தமாய் இருந்தது. இருந்தது ஒன்றுமில்லை இல்லாதிருந்தது ஒன்றுமில்லை, அழிவுமில்லை, அழிவற்றதுமில்லை என்ற பல விருத்த வாக்யங்கள். பிறகு அது அந்த சுத்த சைதன்ய வஸ்துவிலிருந்து காற்று, திரவம், கடின பதார்த்தங்களாய் நாளாவிருத்தியில் மாறி ஈண்டு காணப்பெறும் தன்மையை அடைந்தது. உயிர் இலங்கும் வஸ்துக்களும் ஓரறிவு முதல் பேரறிவு மனிதன் வரையில் படிப்படியாய் விருத்தியாயிற்று. ஆகச்சே டார்வின் வெளியிட்ட கொள்கை நமக்குப் புதிதல்ல. மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ, ஜர்மனி முதலான தேசங்களிலுள்ள தத்துவ சாஸ்திரிகளும் இன்று எல்லாவற்றிற்கும் மேலானதாய் ஒப்புக்கொள்ளப்பட்டது வேதாந்தமே.


அப்படியிருக்க: -


கிருஸ்தவப் பாதிரிகள் ஏளனம் செய்வது யாரை?

 

இந்துக்களில் ஒழுக்கமும் நீதியும் கிடையாதென்றும், அநாகரீகரென்றும், விக்கிரஹ ஆராதனைக்காரரென்றும், மிகவும் தாழ்ந்தவரென்றும் கூறுவது யாரை? அவர்களோ ஒரு கிருஸ்துவைக் கண்டிருந்தால், நாங்களோ எங்கள் நாடு நிறையக் கிருஸ்துக்களைக் கண்டிருக்கிறோம். எங்களுடைய மஹரிஷிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிறிஸ்து. பிறகு ஸ்ரீ கிருஷ்ணன், புத்ததேவர், சங்கரர், ராமா நுஜர், மத்வர்கள், கபீர், நாநக், சைதன்யர், ஸ்ரீ ராமகிருஷ்ணா என்ற பல பல கிருஸ்துக்கள் எங்களிடம் கண்டோம்.

 

ஸநாதந தர்மம் எப்படிப் பரவிற்று.

 

பழையகாலத்தில் புத்த மதஸ்தர்கள் இந்தியாவிலிருந்து பலஸ் தீனம் முதலிய பல நாடுகளுக்குச் சென்று தங்கள் மதத்தையும், நாகரீகத்தையும் பரப்பினார்கள். ஸைபீரியாவிலிருந்து சிலோன் வரையிலும் சீனாவிலிருந்து எகிப்து வரையிலும் ஒரு நாடு பாக்கிவிடவில்லை. ஸநாதந் தர்மத்தின் போதனைகள் மற்ற மதங்களின் அடிப்படையாய்க் கிடக்கின்றன வென்பதற்கு வேண்டிய ஆதாரங்கள் உண்டு. கிருஸ்துவின் கற்பனை இதோபதேசங்கள் இந்தியர்களுக்குப் புதிதல்ல. அவருடைய கெட்ட பிள்ளையின் கதையானது ஏற்கனவே புத்த தேவர் சொன்னது தான். புத்தப் பாதிரிகள் ஒரு தேசத்தையும் பாக்கிவிடவில்லை. சீனா, ஜப்பான், யைாம், அனாம், கிரீஸ், எகிப்து முதலிய பல நாடுகளையும் நாகரீகமாக்கிக் கீழ்நாட்டு உண்மைகளையும் காட்டினார்கள். ஆனால் சிலர் பௌத்தர்களை வேறு பிரிக்கக்கூடும். அது தேவை யில்லையே. புத்த ஸதாதேவர் இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் அவர் மஹாவிஷ்ணுவின் அவதாரமாகவு மன்றோ நாங்கள் எண்ணுவது கிருஸ்து பால்ய வயதில் இந்தியாவுக்கு ஒட்டகத்தின் மேல் சரக்கேற்றிச் செல்லும் வர்த்தகர்களுடன் வந்து 6 வருஷகாலம் இருந்து சென்றதாகத் தெரிகிறது. அப்பொழுது அறிந்ததைப் பிறகு அவர் மேல் நாட்டில் சொல்ல புதிதாயிருந்தது. அவர் ஏற்கனவே புத்த தேவர் கூறிய நேசத்தையும், அன்புடைமையையும் அதை அறியாது வேறு வழியில் பழகி இருந்த யூதர்களுக்குப் போதிக்க'' உங்கள் அயலார்களை நேசியுங்கள். அன்பால் அன்பைப் பெருக்குங்கள். விரோதத்தை அன்பு கொண்டு வென்று விடுங்கள். விரோதத்தைப் போக்குவது விரோதத்தால் அன்று, ஆனால் அன்பினால் உங்கள் விரோதிகளையும் நேசியுங்கள். ஒரு கன்னத்தில் அடித்தால் மற்றொரு கன்னத்தைத் திருப்பிக் காட்டுங்கள்'' என்ற பல உபதேசங்களையும் அவர்கள் ஜீரணிக்க மாட்டாமல் அவரை சிலுவையில் அறைந்துவிட்டார்கள். அவர்கள் ஒருவிதமான மனப்போக்குடையவர்கள். கிருஸ்து தேவர் உபதேசித்த பழைய ஹிந்துமத உபதேசங்களை அவர்கள் போற்ற முடிய வில்லை. மற்றும் அதுபோலும் எந்தக் கிருஸ்துதேவர் இந்த இந்தியாவிலிருந்து கற்றதை உபதேசித்ததற்காக சிலுவை மர சிக்ஷை பெற்றாரோ அதுபோல இந்தியர்களும் இன்று தாழ்மைக்கும் ஏளனத்திற்கும் கிருஸ்தவப் பாதிரிகளிடத்தில் ஆளாகியிருக்கின்றார்கள்.

 

இன்று காலின் கீழ் வாழ்க்கையில் மிதிக்கப்பட்டுக் கிடந்தாலும், வேதாந்த விசாரணையிலும் புத்தி தீக்ஷண்யத்திலும் மஹோன்னத பதவியிலே யிருக்கின்றார்கள். மற்றவர்களிலும் ஹிந்துக்கள் மேலோர் என்பதற்கு ஒரு ஐயமுமின்று. நடந்த மகா யுத்தமானது கிருஸ்தவ தேசங்களில் பொறாமையும், ஈரிஷையும், பொல்லாங்கும், கள்ளமும், கபடமும், நிறைந்த ஒருவரோடொருவர் சண்டையிட்டு மாண்டுபோகவே பித்தேறியதை ரூபித்துவிட்டது. கிருஸ்துவின் மதம் விழுந்த தென்பதற்கு வேறென்ன வேண்டும். கிருஸ்தவ தேசங்கள் செட்டுக்கும் காசுக்குமன்றோ மாண்டு மடிவது. விரோதத்தை அன்பால் வென்றுவிடும் அரிய பாடம் எங்கே? ஒரு அமெரிக்காப் பாதிரி நண்பர் கிருஸ்தவர்களுடைய பக்தியைப்பற்றி அதிக வியப்பாகப் பேசுவார். நான் அவரை இந்தியா ஒரு முறை சென்று பிறகு வந்து சொல்லும் என்றேன். அவர் ஒரு முறை இந்தியா வந்து பார்த்து திரும்பி வந்ததும் இந்தியர்களுடைய பக்தியையும் உன்னதமான மனோ நிலையையும் பார்த்து மாலை மாலையாய்க் கண்ணீர் சொறிந்தார். பூமியில் ஹிந்துக்களுடைய பக்திக்கு இணையே யில்லை என்றார்.

 

மீளா நரகம்.

 

ஆதலால், ஹே ஹிந்துக்களே நீங்கள் இன்று மிதிக்கப்பட்டுக் கிடந்தாலும் மஹோன்னதமான தேசத்தையும், மதத்தையும், நாகரீகத்தையும் உடையவர்களென்றும், மஹா புருஷர்கள் மரபில் வரும் ஈஸ்வரனுடைய குழந்தைகள் என்றும் நம்பி கர்வத்துடன் இருங்கள். அதைரியப்படாதீர்கள். ஒருவரும் மீளா நரகத்திற்கு அனுப்பப்படமாட்டார்கள். கிருஸ்தவர்கள் பறை சாற்றித் திரியும் மீளா நரகம் அவர்களிடத்திலேயே இருக்கட்டும். ஸநாதந தர்மம் நீங்களெல்லாம் அழிவற்ற ஆனந்த சாகரத்தில் முளைத்த அரும்புதல்வர்கள் என்கின்றது. நீங்கள் கோரமான நரகத்தையும், பாவத்தையும், கொடு நெருப்பையும் எண்ணி பயப்பட வேண்டாம். கிருஸ்தவப் பாதிரிகள் பாவிகளையும் பாவத்தையுமே பெரு முழக்கம் செய்யட்டும். நீங்கள் ஆநந்தாத்மஜம் (ஆநந்தக் குழந்தை) என்று எண்ணுங்கள். நீங்கள் ஆநந்த ரூபியாய் ஆசீர்வதிக்கப் பெறுவீர்கள். நிற்க,

 

 

ஸநாதந தர்மம் தத்துவ விசாரம் செய்வது.

 

தத்வ விசாரம் செய்து உண்மையை அறிவதைத் தவிற பிறவிப் பெருங் கடலை நீந்துவதற்கு வேறு வழியில்லை. அதனால் யாவரும் தத்வவிசாரம் செய்து உண்மையைக் கண்டுபிடிக்கவேண்டும். பந்தத்தினின்றும் விடுபட்டு பூரணனும் தீர்த்தனுமாவதற்குத் தத்வ விசாரம் அவசியம். அதற்குப் பூர்வாங்கங்கள் திரிகரணசுத்தி, மனோ வாக்குக் காயங்களினால் தூய்மையாய் இருப்பதே. தீய ஒழுக்கத்தை விட்டு தூய ஒழுக்கம் புகுவான் வேண்டும். நல்லோன் தீ எறிவையும் பாழ் நரகையும் பலபல பாவங்களைக் காட்டிக் காட்டி பயமுறுத்த வேண்டியதில்லை. எண்ணி எண்ணித் தேய வேண்டியதில்லை. அதன் கோரத்தையும் பயங்கரத்தையும் எண்ணி நடுங்க வேண்டியதில்லை. அந்தக் கொடுமையைக் கண்டு அமெரிக்கர்கள் பெரு நாணமுறுகின்றனர். நமது கரும சித்தாந்தம் மிகவும் விசேஷமானது. அது காரண காரியத் தொடர்ச்சியாய் ஒழுங்குள்ளது.

 

கிருஸ்தவக் கொள்கையோ "முன்னே ஒருவன் முடித்தான் தன்துப்பெல்லாம்'' என்பதுபோல முன் தீர்மானமும் ஒழுங்கீனமும் உள்ளது. அதில் ஞாயமும் இரக்கமும் இல்லை. அம்மாதிரியான சிருஷ்டி கர்த்தா இருக்க முடியாது. நமது சாங்கிய மார்க்கம் அங்ஙனம் கூறுவதின்று. புருஷப் பிரகிருதி ஸம்யோகத்தினால் தோற்றப்படும் உலகம் காரண காரியமாய் விளங்கும்.

 

சிருஷ்டி சக்கிர யோஜனைக்கும் அது ஒத்தது. மதகர்த்தா ஒருவரல்ல. ஸநாதந தர்மம் ஒரு ரூபத்தின்பேரில் நிலைத்திருப்பதன்று. மற்ற மதங்களோ என்றால் ஒவ்வொரு ஆதி புருஷன் பேரில் நிலைத்திருப்பது, புத்தரை எடுத்துவிட்டால் பௌத்தமதம் இல்லை. கிருஸ்துவை எடுத்துவிட்டால் கிருஸ்துமதம் கிடையாது. ஸௌராஷ்டிரரை எடுத்துவிட்டால் அவர் மதம் கிடையாது. ஆனால் ஸநாதந தர்மத்திலோ அதற்கு ஆதிகர்த்தா என்பவரும் மூலபுருஷன் என்பவரும் ஒருவரன்று. அதன் புராதன புருஷர்கள் பலர். யாரை வேண்டுமானாலும் உள்படுத்தலாம். இயேசு, மோஸஸ், புத்தர், மகம்மது, கான்பூஷியஸ், ஸோராஸ்டர் முதலிய யாரும் விலக்கில்லை. ஸமஸ்த மதங்களும் ஒரே முடிவில் கொண்டுபோய் விடுகின்றன என்பது ஸநாதந தர்மத்தின் உண்மை. ஒரே மத்தியை பல முகங்களாலும் பல படியும் பார்ப்பது என்பது. நான் சிறு வயதில் பாடிக்கொண்டு திரிந்த ஒரு கீதம் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. அதன் அர்த்தம் பல ஆறுகளும் போய் ஒரே சமுத்திரத்தில் விழுவதுபோலப் பல மதங்களும் இறுதியில் பகவானிடத்திலேயே கொண்டுபோய் விடுகின்றன. இதைக்காட்டிலும் சிறந்த ஒரு சித்தாந்தம் உண்டா? ஸ்ரீ கிருஷ்ணபகவான் மற்றொன்றும் கூறியிருக்கிறார். " யுகந்தோறும், யுகந்தோறும் பூண்ணியம் தேய்ந்து பாவம் வளரும் பொழுதெல்லாம், பாவிகளை அழிக்கவும் சிஷ்டர்களைக் காக்கவும் நான் அவதாரம் செய்கிறேன்,'' உலகத்தில் மதவாராய்ச்சி சரித்திரத்தில் இதுவே முதல் முதல் இம்மாதிரி வார்த்தைகளில் சொன்னதாகும். பிறகு அந்தப் பாடத்தை வெகுபேர் ஓதினார்கள்.

தமிழகம்.

 

ஆனந்த போதினி – 1923 ௵ - ஜுலை, ஆகஸ்ட்டு ௴

 

No comments:

Post a Comment