Monday, September 7, 2020

 

விஞ்ஞானம் கிளைத்தல்

(டி. பி. நவநீதகிருஷ்ணன், M. A.,)

சரித்திர காலந் தொட்டு, மக்கள், தம் உணவுக்கெனவர்ன பொருள்களை, இரு விதங்களாய்ப் பெற்று வந்தனர். அவை, உணவுப் பொருள்களை சேகரித்துப் பெறுதல், அவற்றை, வேட்டையினின்று பெறுதல், என்பனவாம். பண்டைக்காலத்து மக்கள், காய்-கனி-கிழங்குகள் முட்டைகள்-மீன்கள் இறைச்சி என்பவற்றைப் புசித்து வந்தனர். காய், கனி
முதலானவை யலைந்து சேகரிக்கும் வழியே பெறப்படுகின்றன. இறைச்சி, வேட்டையாடு வதினின்று கிடைப்பது.  காய், கனி, இன்னோரன்னவை பல வகைப்பட்ட வர்றானவை. அவற்றில், சில வகையினவே உண்பதற் குகந்தவை. நச்சுப்பட்ளோன பலவும் உள்ளன. ஆதலின், அக் காலத்து மக்கள், இரையாகக் கொள்ளக்கூடியவை எவை என்பதையும், இரையெனப் பயன்படாதவை எவை யென்பதையும், நன்மையானவை எவை என்பதையும், தீமையானவை எவை யென்பதையும் அறிதல் இன்றியமையாத தாயிற்று, எனவே, இத்தகையதான பகுத்தறிவில், அவர்கள் தேர்ச்சி யடைந்தவ ராயினர். அவ்வாறான வழிகளில், அவர்கள் பயிர்களின் தராதரம் அறியும் முகத்தான் திரட்டியதான அறிவு, இன்றைய தான தாவர நூல் எனும் விஞ்ஞானப் பகுதியின் பாற் பட்டதாம், இறைச்சியைப் பெறுதற்கென, விலங்குகளை வேட்டையாடினமையின், அவ் விலங்குகளைப் பற்றினதான விஷயங்கள் பலவற்றை, அவர்கள் - அறியலாயினர். அவ்வாறு அவர்களுக்கு வாய்த்ததான அறிவு, இன்றையதான ஐந்து நூல் எனும் விஞ்ஞானப் பகுதியில் அடங்கி யுள்ளது. முட்டைகள் வசந்த காலத்தில் அதிகமாய் அகப்படும்; இலையுதிர் காலத்தில், கனிகள் மிகு தியாய்க் கிடைக்கும்,' என்றவற்றைக் கண்ட்தினின்றும், இன்னும் பல்வேறான தோற்ற மாறுபாடுகளைக் கவனித்ததினின்றும், அவர்கள், பருவ காலங்களைப் பற்றி அறியலாயினர். நிலவு பரந்திருந்த இரவுகளில், மீன் பிடிப்பதற்கென, அவர்கள் சென்றனர். ஆதலின், வளர்பிறை, தேய்பிறை இன்னோரன்னவையான அறிவையும் அவர்கள் பெற லாயினர்.

இங்ஙனம், ஆரம்ப காலத்து மக்களின் அன்றாட் வாழ்க்கை நடத்தப் படுதற்கென்வே, பல துறைகள் பாற்பட்ட அறிவு, இன்றியமையாத தாயிற்று. நில நூல், கனி நூல், ஐந்து நூல், தாவர நூல், வான நூல் என்பனவற்றின் பாற்பட்டதான அடிப்படை யறிவு, பண்டைக்காலத்து மக்களது வாழ்க்கையுடன் தொடர்புற்றிருந்தது. மேலும், அவர்கள், பெரும் விலங்குகளை வேட்டை யாடினர் எனவும், அவ்வாறான வேட்டைக்குப் பலரின்
ஒத்துழைப்பு அவசியமானது எனவும், மக்கள் உற்பத்தி நூலறிஞர் விளக்கி யுள்ளனர். அவ்வாறான வேட்டைகள் மீது சென்ற போது, பல குடும்பங்களி லிருந்தவர் ஒன்று கூடியே, அவ்வேட்டைக்ளி லீடுபட்டனர் எனவும் மக்கள் நூலறிஞர் கூறுகின்றனர். அதனால், பல குடும்பங்க ளாலான குழுக்கள், அக்காலத்து சமுகத்தில் இருந்திருக்க வேண்டும் என, அவ்வறிஞர் எடுத்துரைக்கின்றனர்.

பண்டைக்காலத்து மக்களிடை, மருத்துவ வியலான அறிவும் கொஞ்சம் பரவியிருந்தது என்று எண்ண இட்முண்டு. அவ்வாறான அறிவை அவர்கள் பெற்றிருந்தனர் என்பதைக் காட்டு கின்றவையான சான்றுகள் உள. மக்கள் உற்பத்தி நூலறிஞர்
தம் ஆராய்ச்சி முகத்தான் கண்டு பிடித்தவற்றினின்று, இறந்தவர்களை, அக்காலத்து மக்கள், தாம் வாசித்து வந்தவையான குகைகளிலிருந்த கணப்புத் தீயான தின் அருகிலான இடங்களில் புதைத்து வந்தனர் என்பதைக் காட்டுகின்ற அறிகுறிகள் கிடைத் துள்ளன எனக் கூறுகின்றனர். அவ்வறிஞர் கின்றவற்றினின்றும், பின்வருவனவற்றையும் அறிகின்றோம்.
புதை யுண்டனவான சவங்களின் மீது, மண்ணாங்கட்டிகள் விழுந்து, அவற்றை அழுத்தி விடாதவாறு தடுப்பதற்கென, அம் மக்கள், கற்கட்டிடங்களை யமைத்தனர். இறந்தோர்க்கு, கற்களைத் தலையணையாய்த் தந்தனர். அவர் பக்கத்தில், உணவையும். கருவிகளையும் வைத்தனர். இதைப்பற்றிக் கருதுங்கால், அப் பண்டைக்காலத்தினர், உயிரும் வெம்மையும் இணையானவை என்றெண்ணினமையின், சூடு வுறைத்து, இறந்தவர் பிழைத்தெழுவர் என நம்பி வந்தனர் என ஏற்படுகின்றது. இறந்தோரைப்பற்றி இத்துணைக் கவலையைக் காட்டியவர், நோய் வாய்ப்பட்டவரையும், நன்கு கவனித்து வந்தனர் என, நாம் எண்ணலாமன்றோ? ஆதலின், நோயால் நலிவுற்றவர்க்கு, ஆறுதல் அளிப்பதான மருத்துவ முறையும், அக்காலத்தும், இருந்திருக்க வேண்டும் எனக் கருதலாம்.

இறந்தவரைப் புதைத்து வந்தவரான அக்காலத்து மக்கள், எவ்வகை யேனுமானதொரு மரணச் சட்ங்கைச் செய்து வந்தனர் என எண்ணலாம். மரண மென்றானதொன்று ஏற்பட்ட பின்னரும், நிலைத்துள்ள தான தொன்றுண்டு என்பதான எண்ணமே, அவ்வாறான மரணச் சடங்கைச் செய்யுமாறு, அம் மக்களைத் தூண்டி யிருக்கவேண்டும். அவர்கள், அவ்வெண்ண மானவர் என, நாம் கருதுவோமாயின்,
கற்பனையின் பாற்பட்ட சிந்தனை யென்பதும், அவர்களால் இயன்ற தொன்றே யென்ற முடிவை அடைகிறோம். முரட்டு மக்களுங்கூட சிந்தனை செய்த என்பதற்கான காரணம், மரணம் விளைவித்த அச்சமே எனலாம்.

'இறந்தோரைப் பேணுதல்' எனும் உருக்க மிக்கதும், பயனற்றதும், ஆன. கருமம் மக்கள் அறிவு பெறத் தொடங்கிய காலத்தினின்றே, ஏற்பட்டதான வழக்க மொன்றாம். இறந்த பின்னும், மறுமுறையான வாழ்வுண்டு எனும் நம்பிக்கையே, சமயத்திற்கு அடிப்படையான கருத்து எனலாம். மக்களில் அறிவு அரும்பிய நாள் தொட்டு, அவர் உள்ளத்தில் ஊன்றி வந்துள்ள கருத்து இது. 'சமயத்திற் கடிப்படையான இக் கருத்து, இன்றோ, நேற்றோ ஏற்பட்டதான தொன் றன்று; தொன்று தொட்டிருந்து வரும் ஒன்று' என்பதானது, சமயத்தின் பாற்பட்ட ஆராய்ச்சி களி லீடுபட்டவர்க்கு, முக்கியமான தொன்றாய்ப் படலாம். அதைப்பற்றி, அவர்கள் மேலும் மேலும் ஆராயலாம். இப்பொழுது,
நம்மைப் பொருத்தவரை, வைத்தியச் சிகிச்சை யென்பதானது, பண்டைக் காலத்தும் செய்யப்பட்டு வந்தது என்பதை எடுத்துக் காட்டுவதான சான்று எனும் வகையில், மரணச் சடங்கின் பாற்பட்ட கருத்து, முக்கியமானதர் யுள்ளது.

குறித்ததோர் ஆசாரத்தை யொட்டியே, இறந்தவர் புதைக் கப்பட்டனரென வானமையின், அக் காலத்திலேயே சம்பிரதாயமான மரணச் சடங்குகள் இருந்திருக்க வேண்டும் எனக் கருதலாம். ஆனால், அவ்வாறான சடங்குகளின் நோக்கத்தை யொட்டியவாறான தெதுவும் நேரிடவில்லை; சூடேறியமையின், இறந்தவர் பிழைத் தெழவிலலை; ஊணருந்தவில்லை; வேலை செய்யவில்லை. ஆதலின், அவ் வகையான சடங்குகள் முதலானவை, வைத்தியச்சிகிச்சை போன்றவையான நிதர்சன விஞ்ஞானத்தினின்று, வேற்றியலானவையாய்ப் பிரித்தன. அவை, கற்பனையை யூட்டும் வண்ணமாய் வளர்ந்தன. காவியம், இலக்கியம், நாடகம் இன்னோரன்னவற்றினுக்கு ஊற்றுக் கண்ணாகவுள்ளது கற்பனையே யாம்.

எனவே, தொன்மையான காலத்திலேயே, மக்கள் அறிவின் பாற்பட்டவை, இரு வேறுபட்ட வழிகளில் செல்லலாயின. வாழ்க்கை யெனும் மரத்தில், அறிவென்பது அடி மரமா யுள்ளது எனலாம். அதனின்று, விஞ்ஞானம், சமயம் என்பனவான இரு பெருங் கிளைகள் பிரிகின்றன. விஞ்ஞான மெனும் கிளையினின்று, அதன் பகுதிகளான வைத்திய நூல் வான நூல், இன்னோ ரன்னவை, சிறு சிறு கிளைகளாய்ப் பிரிகின்றன. சமயமெனும் பெருங்கிளையினின்று, காவியம், இலக்கியம், நாடகம் இன்னோ ரன்னவை சிறு சிறு கிளைகள் பிரிகின்றன. மக்கள் வாழ்க்கைக்கெனவான துறைகளும், அவ் வாழ்க்கை சிறப்புற நடைபெறுதற் கெனவே யானவை. எனவே, அவை யெல்லர்மும், மக்களின்
வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டுள்ளவாறு சிறப்புறலாமே யன்றி, தனிச் சிறப்பை நாடிச் செழித்தல் அரிதாம். அவை, மக்கள் வாழ்க்கையுடன் கொண்டுள்ளதான தொடர்பை யறுத்து
விடின், மரத்தினின்று துண்டிக்கப்பட்ட கிளை யெர்ன்வாடி யுலர்ந்து அழிதல் போன்று சிதைவுறல், திண்ணம். மக்கள் வாழ்க்கையுடன் இயைந்தவாறு வளர்வதால், அவை செழிப்புறும்; வாழ்க்கையும் சிறப்புற்ற தாகும்.

ஆனந்த போதினி – 1943 ௵ - ஜுலை ௴

 



No comments:

Post a Comment