Monday, September 7, 2020

 வாலிபப் பருவம்

 

உலகப் பிரசித்தி வாய்ந்த ஹாவ்லாக் எல்லிஸ் (Havelock Ellis) தாம் எழுதிய ஒப்புயர்வற்ற ''ஆண், பெண் மக்களின் சத்துவம்" (Psychology of Scx) என்ற நூலில் ''மத சம்பந்தமாக நாம் செய்ய வேண்டிய ஆராய்ச்சிகளை யெல்லாம் செய்துவிட்டோம். இனி ஆண் பெண் மக்களின் தத்துவ சம்பந்தமாகத்தான் நாம் ஆராய்ச்சிகள் செய்யவேண்டும்'' என்று கூறியுள்ளார். இக்கூற்றின் உண்மையை நாமுணர்ந்து கொள்வது அருமையல்ல. ஆறு பாகங்களாகப் பிரிக்கப்பட்ட அவர் எழுதிய அருமை மிக்க ஏலைப் படித்தபோது ஆண் பெண் சம்பந்தமான எவ்வளவோ புதிய உண்மைகளை நாம் உணர்ந்து கொண்டோம். மகாத்மா காந்தியால் மிகப்பெரியவரென்று பாராட்டப்படும் எட்வர்ட் கார்பெண்டர் (Edward Carpenter) எல்லிஸ் எழுதிய சிறந்த நூலை மிகவும் புகழ்ந் தெழுதுகிறார். நம் வாழ்க்கையின் நடுச் சக்கரமா பிருக்கிறது. ஆண் பெண் விஷயமே என்பதை அறியாதாரில்லை. உலகத்தின் இன்ப துன்பத்திற்கும் அதுவே காரணமாம். இம் முக்கியமான விஷயத்தைப்பற்றிய உண்மைகள் பெரும் பான்மையோருக்குத் தெரியாது. அவ் வுண்மைகளை யெல்லாம் இச்சிறு கட்டுரையில் கூறுவதும் சாத்தியமாகாது. அல்லாமலும், அவ்வுண்மைக ளெல்லாம், பத்திரிகையில் வெளிப்படுத்த கூடியனவுமல்ல. எல்லிஸ் அவர்கள் தம் புத்தகத்தை அமெரிக்காவில் முதன் முதல் வெளிப்படுத்தியபோது அது இங்கிலாந்துக்கு வரக்கூடாதென்று தடுக்கப்பட்டது. ஆயினும், உலக நன்மையைக் குறித்து நாற்பது ஐம்பது வருடங்களாக அரும்பாடுபட்டு எழுதிய அப்புத்தகத்தைத் தம் நாட்டில் வரக்கூடாதென்று தடுத்த குற்றத்தை ஆங்கிலேயர் பின்னர் உணர்ந்து கொண்டு அந்நிபந்தனையை நீக்கிவிட்டனர்.

 

இந்தப் புத்தகத்தில் அவர் மிகவும் பயங்கரமான உண்மைகளைக் கூறுகிறார். அவ் வுண்மைகளை யெல்லாம் திரட்டிக்கூற இங்கு இடமில்லாமை பற்றி வருந்துகின்றோம்.

 

ஓர் ஆண் மகன் பதினான்கு வயதடையும் வரையில் அவன் ஆணுமல்ல, பெண்ணுமல்ல. இங்ஙனமாதலாலேதான் பதினான்கு வயதுக்குக் குறைந்த ஆண் பிள்ளைகளை பெண்ணை நேசிப்பது போலவே நாம் நேசிக்கின்றோம். ஓர் ஆண் மகனுக்குப் பதினான்கென்ற பருவம் மிக்க பயங்கரமானது. இந்த பருவத்திலிருந்துதான் அவன் பிற்கால வாழ்வு ஆரம்பமாகிறது. இந்தப் பருவத்தில் தானே அநேக பையன்கன் கெட்டு விடுகிறார்களென்று எல்லிஸ் கூறுகிறார். இக் கேட்டிற்கு அநேக காரணங்க ளுள்ளனவென்றாலும் அவற்றுள் ஓர் பணிப் பெண்ணைக்கொண்டு பையனை வளர்ப்பதும் ஒன்றாகுமென்று உடற்கூற்று நூல் வல்லார் சொல்லுகிறார். இந்தப் பணிப்பெண் பையன் கோபமாயிருக்கும்போது அவன் கோபம் தணியவேண்டி அவனுக்கு ஒருவிதமான இன்பத்தை ஊட்டுகிறாளாம். பணிப்பெண் வைத்துக் குழந்தைகளை வளர்ப்பது அநேகமாய் நம் இந்தியர்களிடத்திலி லில்லை. இது தப்பினும், பள்ளிக்கூடத்தில், இன்னொரு கண்டமிருக்கிறதென்று அவர் மொழிகிறார். இந்தக் கண்டத்தைத் தப்புவது தான் மிகவு மரிது. இவர் உலகத்திலுள்ள பல பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலுமுள்ள பையன்களின் உண்மைகளை எல்லாம் அறிந்து வெளியிடுகிறார். ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும், ஒழுக்கங் கெடாமலிருக்கும் பில்ளைகள் நூற்றுக்கு எட்டு, ஒன்பது தேர்வதும அருமையாம். பன்னிரண்டு வயதிலிருந்தே இப் பையன்கள் கெட்டு விடுகிறார்கள்.

 

சிறுவர்கள் அழிவதற்குக் காரணம் தற்கால நாகரிக மென்று சொல்லுவது குற்றமாகாது. பிரமசர்யத்தின் பெருமையும் குணமும் இக்காலத்தில், பெரும்பாலோருக்குத் தெரியாமற் போயின. நம் ஆன்றோர் பிரமசர்ய ஒழுக்கத்தை மிகவும் வற்புறுத்தினர். ஒவ்வோர் இளை ஞரும் இவ் வொழுக்கத்தை அனுசரிக்கக் கடமைப்பட்டிருந்தனர். சிற்றின்பத்திற்கு ஏதுவான விஷயானுபவங்களிலிருந்து அவர்கள் காக்கப்பட்டனர். பிரமசர்யத்தை அநுட்டிப்பதால், உண்டாகும் பிற்கால நன்மைகளையும் அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். கல்வி கற்பதைக் காட்டிலும், பிரமசர்யத்தின் உண்மைகளை உணர்ந்துகொள்ளலே சிறந்ததென அவர்கள் கொண்டுவந்தனர். அவர்கள் பெற்றோர்களும், அவர்கள் பிற்கால வாழ்வில் கண்ணுங் கருத்துமாயிருந்து வந்தனர். இவர்களுக்குக் கல்வி போசிக்கும் குருவும், இவர்களிடத்துத் தந்தையை யொத்த பரிவுடையவரா யிருந்தனர். இக்காரணத்தால் தான் அக்காலத்தில், ஆசிரியர் ஐங்குரவருள் ஒருவராக மதிக்கப்பட்டனர். பிரமசர்யத்தை அநுட்டிக்கும் பிள்ளைகள் பெரும்பாலும் மனித சஞ்சாரமில்லாத காட்டிலே தம் ஆசிரியரோடு சென்று தங்கள் பிரமசர்ய பருவம் முடிந்து கல்வித்துறையில் சிறக்குங்காறும் அங்கிருந்து "என்ன நோன்பு நோற்றாள் இவனைப்பெற்ற வயிறுடையாள்'' என்று கண்டவரெல்லாம் பாராட்டும்படியான இளஞ்சிங்கங்களாய் வளர்ந்து கிருகஸ்தாசிரமத்தை மேற்கொள்வர். தற்கால நாகரிகம் அவ்வொழுக்கத்தை அடியோடு கவிழ்த்து விட்டது.

 

நாகரிக மடைந்த தேசங்களில், அமெரிக்கா மிகவும் உயர்ந்ததாமென மதிக்கப்படுகிறது. அங்குள்ள இளை ஞரைப்பற்றி வால்ட் விட்மன் (Walt Witman) என்பவர் இங்குள்ள பிள்ளைகள் வீரமில்லாமல், இளவயதிலேயே முகம் வெளுத்து, தலைநரைத்து, முதுகு வளைந்து, நரம்புந் தோலுமாய் தொண்ணூறு வயதடைந்த கிழவர்களைப்போல், நடைப்பிணங்களாய்ச் சுடுகாட்டை நோக்கி நிற்பவர்களா பிருக்கிறார்கள். இவர்கள் நிலை மிகவும் பரிதபிக்கக்கூடியது'' என்று கூறியிருக்கிறார். இங்கிலாந்து முதலிய நாடுகளிலுள்ள பிள்ளைகளைப்பற்றியும், இங்ஙனே தான் ஹாவ்லாக் எல்லிஸ் முதலிய அறிஞர்கள் கூறுகின்றார்கள். இவ்வுண்மைகளை யெல்லாம் ஆலோசிக்குங் காலத்தில் தற்கால நாகரிகமானது உலகத்தின் புரை நோயாயிருக்கின்ற தென்பது செவ்விதின் விளங்கும். நாகரிகமும் அது வந்தவாறும், அதனை நீக்கும் வழியும்' (Civilization; Its cause and cure) என்ற அருமை மிக்க நூலில், எட்வர்ட் கார்ப்பண்டர் இப் போலி நாகரிகத்தின் தன்மைகளை யெல்லாம் எடுத்துக் கூறியிருக்கிறார்.

வாலிபர்கள் அழிவதற்கு இன்னும் எத்தனையோ வழிகளுண்டு. பெண், ஆண் இன்பம் இன்னதென்று தெரியாமலே இளமைப் பருவமானது கழிய வேண்டுமென்று எல்லா அறிஞர்களும், வைத்திய நிபுணர்களும் தேக தத்துவநூலாரும் கூறியிருக்கின்றார்கள். இந்த விதமாகத் தம் பிள்ளைகளைக் காக்கவேண் டிய கடமைகளைப் பெற்றோர்களும் அப்பிள்ளைகளைக் காத்து வருவோர்களும் இன்றியமையாததாகக் சொள்ளவேண்டும். எத்தனையோ வாலிபர்கள் இன்பம் ஒன்றையே கருதிக் கெட்டழிந் திருக்கிறார்கள். வயதில் இளைய பெண்கள் தம்மின் மூத்தவர்களையும், வயதில் மூத்த ஸ்திரீகள் தம்மைக் காட்டிலும் வயதில் குறைந்தவர்களையுமே விரும்புகிறார்க ளென்று எல்லிஸ் அவர்கள் கூறுகிறார். ஆதலால், வாலிபர்கள் தங்களைக் காட்டிலும் வயதின் மூத்த கைம்பெண்களையும், மற்ற ஸ்திரீகாையும் கண்டு விலக்கிவிடவேண்டும். இளைஞர்க்குத் தம்மின் மூத்த ஸ்திரீகளோடு எந்த வழியினும் தொடர்பிருக்கக் கூடாது. மூத்தவர்களான ஆண்கள் பெண்கள் கூட்டுறவை விரும்பி அதில் இன்பம் காண்பது போல், இளைஞரும் பிறர் கூட்டுறவை விருமபி அதில் இன்பம் காண்கிறார்களென்று எட்வர்ட கார்ப்பெண்டர் சொல்லுகிறார். ஆயினும், இவர்களுக்குள் ஒரு வித்தியாச மிருக்கிறது. மூத்தவர்கள் சூஷ்ம இன்டத்தை வெறுத்து ஸ்தூல இன்பத்தை நாடுகிறார்கள். இளை ஞர்க்கு ஸ்தூல இன்பமும், சூக்கும இன்பமும் ஒன்றேயாகும். ஆதலால், ஒழுக்கமுள்ள வாலிபர்களின் கூட்டுறவும், தங்கள் பெற்றோர்களின் நட்பும், அன்பும் இவர்களுக்கு வேண்டுவது அவசிய மாகுமென்றும், அவர் பின்னும் கழறுகின்றார். எந்தவகையிலும் இளைஞர்க்குச் சிற்றின்பத்தில், அவா வுண்டாகாதபடி பார்த்து கொள்ள வேண்டும். தற்கால நாகரிகமே சிற்றின்பத்தில் அவாவுண்டாவதற்கு ஏதுவாகின்ற தென்றும் அவர் கூறுகிறார்.

 

இந்த நாகரிகத்திற்கும், பணத்திற்கும் மிகவும் சம்பந்த மிருத்தலால், பணக்காரர்கள் கெட்டுப்போவது சாதாரணமா யிருக்கின்றது. இதன் பயனாகவே பணக்காரர்கள் க்ஷணமடைந்து விடுகிறார்கள். அவர்களுக்குச் சக்ததி அபிவிருத்தியுமில்லை. இவ்வண்மையை மிகச் சிலரே உணர்ந்திருக்கின்றனர். ''தேச சுகாதாரம்” என்ற ஓர் ஆங்கில பத்திரிகையில், ஒருவர் எல்லாவசதிகளுமுடைய பணக்காரர்கள் சந்ததி அபிவிருத்தி செய்யமுடியாமலும், ஒரு வசதியுமில்லாத குடியானவர்கள் சந்ததி அபிவிருத்தி செய்யக்கூடியவராகவு மிருக்கின்றனரே, தகுதியுள்ளவர்கள் நிலைத்திருத்தல் (Survival of the fittest) என்பது போய் தகுதி யல்லாதவர்கள் நிலைத்திருத்தலென்று (Survival of the unfittest) தலைகீழாய் மாறிவிட்டதே என்று இரங்குகின்சார். இவர் எல்லிஸ் தலியவர்களைப்போல் விஷயங்களை நுணுக்கமாய் அறிபவரல்ல ரெனத் தெரிகிறது. உண்மை தலைகீழாய்ப் புரண்டு விட்டதற்கு நாகரிகமே காரணமென்பதை அவர் தேறவில்லை.

 

தற்கால நாகரிக வாசனை சிறிது மில்லாமலே நாம் நம் பிள்ளைகளை வளர்க்க வேண்டும். பிள்ளைகளைப் பள்ளிக்கூடங்களுக் கனுப்பிக் கல்வி கற்பிப்பதைப் பார்க்கிலும், உத்தம குணங்களுடைய ஒரு நல்லாசிரிய ரிடத்து விட்டுக் கல்வி கற்பிப்பதே சிறந்ததாகும். இந்நாட்களில் அப்படிச் செய்ய முடியாவிட்டால், நல்லொழுக்கத்தையும், பெண் ஆண் தத்துவ விஷயங்களையும், அவர்களுக்குப் போதித்து வரவேண்டும். ஒரு தேசத்தின் நம்பிக்கை அதன் இளைஞர்களிடத்தி லிருக்கிறது. ஆதலால், பெற்றோர்களேயன்றித் தேசமும், இளைஞர்களின் நலத்தில் கருத்து வைக்க வேண்டும். இல்லையேல் அத்தேசம் குன்றியழியும். நம் அரசியல் அறிஞர் கருத்துக்கள் எங்ஙனமாயினும், தற்கால நாகரிகம் ஒரு தேசத்தின் உயிரை அரித்துத் தின்னுவதென்ற வகையில் எல்லாரும் கருத் தொருமைப்பட்டவராயிருக்க வேண்டும்.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - ஜுன் ௴

 

 

 

No comments:

Post a Comment