Tuesday, September 8, 2020

 

ஶ்ரீராம கிருஷ்ண பரமஹம்சரின் மொழிகள்

(தென்னாப்பிரிகா டர்பன் - திரு. ச. முனிஸ்வாமி பிள்ளை.)

மாணவா! கடவுளை லேசாகப் பார்த்துவிடலாம். யார் வேண்டு மானாலும் கண்டு களிப்படைர்து விடலாமென்று நினைத் திருக்கின்றாயோ? அந்த நினைப்பு தவறு. கடவுளை அன்புடையவர்களாலும், மாசற்ற மனமுடையவர்களாலும்தான் பார்க்க முடியும். இந்திரியங்களை அடக்காதவர்களாலும், பணப் பேயுடையவர்களாலும் பார்க்கமுடியாது.

*             *             *             *             *             *             *

குறை குடம் தளும்புமே யொழிய நிறை குடம் தளும்பாது. அது போல் நாஸ்திகர்கள் வீண் டம்பம் செய்து ஊரைக் கலக்கி அமளி செய்வார்கள். ஆனால் கடவுள் பக்தியுடையவர்களோ டம்பம் வீண் பேச்சு முதலியவைகளை வெறுப்பார்கள்.

*             *             *             *             *             *             *

தாய் பாஷையைப் புறக்கணித்து விடுவோர்கள் தாயைப் புறக்கணித்தவர்க ளாவார்கள். அந்நிய பாஷைகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், சொந்த பாஷையை மறப்பதானது அறிவீனமாகும். அதை அலட்சியம் செய்வது இன்னும் பாபமாகும். [ஒரு பணக்கார மார்வாடி பரமஹம்ஸரைப் பார்த்து ''சுவாமி! நான் பணக் காசுகளைத் துறந்துவிட்டேன். நான் இன்னும் கடவுளை பார்க்க முடியாமல் இருக்கிறேன்'' என்று சொன்னான். அதற்கு அவர் நீ சொல்லியது உண்மை. எண்ணெய்ப் பாத்திரத்திலிருந்து எண்ணெயை மற்றொரு பாத்திரத்தில் ஊற்றிவிட்டாலும், அப்பாத்திரத்தில் எண்ணெய் வாசனை நிவிர்த்திக்கப்படும் வரையில் அது அப்பாத்திரத்திலேயே யிருப்பது போல் நீ பணம் காசுகளைத் துறந்தாலும், உன்னிடம் உலகாசையிருக்கும். அது போகும் வரையில் நீ கடவுளைப் பார்ப்பது முடியாத காரியம் என்று சொன்னார்'' இதைக் கேட்ட மார்வாடி அன்று முதல் உலதாசையை ஒழிக்கப் புறப்பட்டான்.) குழந்தையின் மனம் மாசற்றது. ஒரு வெளுப்பு வஸ்திரத்துக் கொப்பானது. மாசற்ற மனமுள்ளவருக்கே கடவுள் அருள்புரிகிறார். கடவுள் அருள் வேண்டுவோர்கள் மாசற்ற மனமுடையவர்களாயிருக்க வேண்டுவ தவசியம்.

*             *             *             *             *             *             *

எழுதும் காகிதத்தில் எண்ணெய் பட்டால், எப்படி எழுத முடியாதோ அப்படியே மனம் துஷ்ட குணங்களினால் கலக்கப்பட்டால், தெய்வ பக்திக் கிடமில்லாமற் போய்விடும். துஷ்ட குணங்களை யொழித்த பிறகே தெய்வ பக்தியுண்டாகும். காந்தம் எப்படி இரும்புக்குச் சொந்தமோ அப்படியே கடவுள் மனிதனுக்குச் சொந்தம். மண் கட்டியினாலும், துருப்பிடியினாலும், மூடப்பட்டிருக்கும் போது எப்படி இரும்பை காந்தம் ஸ்வீகரிக்காதோ அப்படியே மனிதன் மாயையில் மூழ்கி இருக்கும் போது கடவுள் அனுக்கிரகத்தை அவன் அடையப் பாக்கியமில்லாமல் போய்விடுகிறான். பொறாமையும், பேராசையும், பயமும், இன்னும் பல துர்க்குணங்களுமிருக்கும் வரையில், கடவுளைக் காண்பதரிது.

*             *             *             *             *             *             *

பசும்பால் பசுவின் தேக முழுதும் வியாபித்திருக்கிறது. எங்கும் வியாபித்திருக்கிறதென்று ஒருவன் அதன் காதைப் பிடித்து இழுத்தால் பால் வருமா? வராததுபோல் கடவுள் எங்கு மிருக்கிறாரென்று சொல்லப்பட்டாலும், அவர் புண்ணிய ஆலயங்களில் தா னிருக்கிறாரென்று அறிந்து கொள்ள வேண்டும்.

*             *             *             *             *             *             *

எப்போதும் பக்தி அவசியம். பக்தி இருந்தால் மனிதர்கள் எதிர்பாராத காரியங்களைச் செய்யலாம். உதாரணமாக அநுமார் இராம பக்தர், சமுத்திரத்தைத் தாண்டி லங்கைக்குப் போக தீர்மானித்தார். ஒரே தாண்டில் தாண்டிவிட்டார். ஆனால் இராமரோ பாலங் கட்டினார். பிறகுதான் அது வழியாக தாண்டிப்போய் லங்கை சேர்ந்து இராவணனைக் கொன்று சீதையை மீட்டு வந்தார். ஆகவே பக்திதான் அவசியம்.

*             *             *             *             *             *             *

ஆனந்த போதினி – 1937 ௵ - பிப்ரவரி ௴

 

 

No comments:

Post a Comment