Tuesday, September 8, 2020

 

ஶ்ரீ விபின் சந்திர பாலர்

                              

வங்காள பிரிவினைக் காலத்திலும், அதற்குப் பின்னும் பெருந் தேசபக்தராக விளங்கிய ஸ்ரீ. விபின சந்திரபாலர் (23-5-32) மாலை கல்கத்தாவில் மரண மடைந்தார்.

 

தமது 74-வது வயதில் மரண மடைந்த 'ஸ்ரீ. விபின சர்திர பாலர், பழப்பெரும் தேச பக்தர்களான வீரர்களில் ஒருவர். அவர் 1858-1 வருஷம் வங்காளத்திலுள்ள சில்ஹெட் ஜில்லாலில் ஜனன மானார். அவா ஜில்லா முனிசீப்பாக இருந்த ஸ்ரீ ராட்சசர்திர பாலரின ஏக புததிரர். காலஞ் செறை ஸ்ரீ விபின சந்திரர் மிகவும் இளம்பிராயத்திலேயே மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தேறி விட்டதால், கலாசாலையில் சேருவதற்காக அவரைப் பெற்றோர்கள் கல்கத்தாவிற்கு அனுப்பினர். அவர் கல்கத்தா சென்றதும் அவரது வாழ்ககையிலேயே ஓர் பதிய மாறுதல் ஏற்பட்டு விட்டது. அதாவது அச்சமயம் காலஞ்சென்ற கேசவசந்திரசேனர் அவரது அபாரமான வாசால சக்தியால், வாகாள யுவர்சளிடை உணர்ச்சி யாகிற அச்னியைக் கொழுந்து விட்டெரியும்படி செய்து வந்தார். விபின சந்திரரும் பாட சேனான் சிஷ்ய ராகி விட்டார். அதன் பயனாக அவர் பிரம்ம சமாஜத்திலும் சேர்ந்தார். அவரை பிரம்ம சமாஜத்தில் சேராமலிருசகும் படி தடுக்க அவரது தர்தையும் உறவினர்களும் எவ்வளவோ பகீரதப் பிரயத்தனம் செய்தும் அவர்கள் முயற்சி வீணாகியது.

 

தமது முயற்சி வீணானதைக்கண்டு ஸ்ரீ விபின் சந்திரரின் தந்தை அடங்காத கோபங்கொண்டு, தமது சொத்திரகுத் தம் குமாரன் உரியவனல்ல வெனசாஸனம் எழுதி வைத்ததுடன், பிதுரு வாக்கியத்தை மீறிய அவரது முகத்திலும் விழிப்பதில்லை யென்றும் பிரதிகஞை செய்து கொண்டார். ஆயினும் பெற்ற பாசம் யாரை விட்டது! அந்திய காலத்தில் ஸ்ரீ. விபின் சந்திரபாலரின் தந்தை மரணமடையும் தருவாயில் தாம் பிரதிக்ஞை செய்து கொண்டதைக் குறித்து பச்சாத்தாபமடைந்து தமது புதல்வரை அழைத்து வரும்படி செய்து, தமது ஏச புதல்வனுக்கே தமது சொத்தை யெல்லாம் கொடுத்தார்.

 

அஞ்சா நெஞ்சம்

 

தமது தந்தை தம்மைத் திரஸ்காம செய்து விட்டதால் இளைஞரான ஸ்ரீ. விபின் சந்திரர் தமது படிப்பை நிறுத்தித் தமது ஜீவனத்திற்குத் தாமே வழி தேடும் படியாகி விட்டது. அச்சமயம் அவர் பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல. ஆயினும் விதியைத் தடுப்பது வீணென்ற எண்ணத்துடன் அவர் தமது கஷ்டத்தைப் பொருட் படுத்தாது உற்சாகத்துடனேயே இருந்து வந்தார். கலாசாலையில் சேர்ந்து அவருக்குக் கல்வி கற்க முடியாமற் போய்விட்ட தெனினும், தாம் கல்வியறிஞனாகப் பிரகாசிக்க வேண்டுமென்ற பேரவா அவரை உற்சாகப்படுத்தியது. எனவே அவர் தமது அறிவை அபாரமாக விருத்தி செய்து கொள்ளுவதில் தமது முழு கவனத்தையும் செலுத்தி அதி தீவிரமாக உழைக்க ஆரம்பித்தார். அதன் பயனாக அவர் கலாசாலைகளில் தேர்ந்த மேதாவிகளைக் காட்டிலும் மகா மேதாவியாகி விட்டா ரென்பதை ஒருவரும் மறுக்கமுடியாது.

 

உபாத்தியாயர் பதவி

 

தமது ஜீவனத்திற்குக் கஷ்டப்படும்படியான நிலைமை ஏற்பட்டபோது, அவர் சிரமப்பட்டு முயற்சி செய்து கட்டாக் ஹைஸ்கூலில் தலைமை உபாத்தியாயர் பதவியை ஏற்றுக் கொண்டு, அந்த உத்தியோகத்தில் மூன்று வருஷகால மிருந்தார். அவரது தந்தை தமது சொத்தை ஸ்ரீபாலருக்கே கொடுத்து விட்டு மரண மடைந்ததால், அவர் ஷை உத்யோகத்தை விட்டுவிட்டுத் தமது இருப்பிடம் சென்று தமது சொத்தின் உதவியால் அங்கு ஹைஸ்கூலை ஆரம்பித்தார். சிலகாலம் வரையில் அந்த கல்விச்சாலை செவ்வனே நடைபெற்றதெனினும் திடீரென அது முறிந்துவிட்டது. ஷை கல்விச்சாலை ஏற்படுத்தியதின் பயனாக அதிக செலவு ஏற்பட்டு அவர் தமது பிதுரார்ஜித சொத்தை இழந்தார். எனவே பின்னர் மீண்டும் தமது உழைப்பினாலேயே ஜீவனம் செய்யும் படியான நிலைமை அவருக்கு ஏற்பட்டது. பின்னர் அவர் பெங்களூர் சென்று அங்கு ராவ்பகதூர் ஆற்காடு நாராயணசாமி முதலியாரால் ஸ்தாபிக்கப் பெற்ற ஐஸ்கூலில் தலைமை உபாத்தியாயராக அமர்ந்து இரண்டு வருஷங்களுக்குப் பின்னால் அந்த உத்தியோகத்தை விட்டு விட்டார். அச்சமயம் அவர் பிரம்மசமாஜத்தைச் சேர்ந்த ஓர் பெண்ணையும் விவாகம் செய்து கொண்டார். பெங்களூரை விட்டு அவர் சென்றதும் கஃகத்தாவிலுள்ள புத்தகசாலையில் மாதம் 100-ரூபா சம்பளத்திற்கு லைப்ரேரியனாக அமர்ந்து அங்குள்ள, அரிய புத்தகங்களை வாசித்து அறிவை அபாரமாக விருத்தி செய்து கொண்டார். இச்சமயம் அவரது மனைவி மாண்டதால் அவர் மனமுடைந்து சாதுக்களுட சேர்ந்து கொண்டு சில நாட்கள் வரை சத்சங்கத்தில் தமது காலத்தைக் கழித்துவந்தார். மனைவி மாண்ட துக்கம் ஒருவாறு தீர்ந்தது, அவருக்கு மீண்டும் உலகப் பற்றுதல் உதயமாயிற்று. எனவே அவர் தமது 'சந்நியாசி வாழ்க்கையை விடுத்து வங்க வீரரான காலஞ்சென்ற சுரேந்திரநாத பானர்ஜியின் மருமகளும் விதவையுமான ஓர் பெண்ணை விவாகம் செய்து கொண்டார். பின்னர் அவருக்கு 3 பிள்ளைகளும் 4-புத்திரிகளும் பிறந்தார்கள்.


பொது ஜன ஊழியம்.

 

இதன் பின் அவர் பொது ஜன சேவையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அச்சமயம் காலஞ் சென்ற காளிசரண பானர்ஜி கிறிஸ்துவ மதத்தை பிரமாதமாகப் புகழ்ந்தும் பிரம்ம சமாஜத்தைக் கண்டித்தும் பிரசங்கங்கள் செய்து வந்ததால், ஸ்ரீ விபின் சந்திரர் கோபமடைந்து பிரம்ம சமாஜத்தைப் புகழ்ந்து பிரசங்கங்கள் செய்ய ஆரம்பித்தார். அப்போது தான் அவரது அறிவையும் ஆண்மையையும் வாச்சாலக சக்தியையும் யாவரும் அறிந்து கொண்டனர். சென்னையில் இந்திய தேசிய மகாசபை காங்கிரசின் 3-வது மகாநாட்டில் ஆயுத சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென அவர் செய்த பிரசங்கமானது மிகவும் குறிப்பிடத் தகுந்தது.


ஆக்ஸ்போர்டில் கல்வி

 

1900-ம் வருஷம் அவர் மத சித்தாந்த கல்விக்காக ஆச்ஸ்போர்டுக்குச் சென்றார். ஒரே வருஷத்தில் அவர் அங்கு தேர்ச்சி பெற்று இங்கிலாந்து பிரான்ஸ், அமெரிக்கா முதலிய தேசங்களுக்கு யாத்திரை செய்து 1901-ம் வருஷம் இந்தியா திரும்பி வந்து சேர்ந்தார். பின்னர் அவர் 'நியூ இந்தியா' என ஓர் வாராந்த பத்திரிகை ஆரமபித்து வெகு சாமர்த்தியத்துடன் நடத்தி வந்தார். 1901-02-ம் வருஷங்களில் அவர் தென்னிந்தியா விஜயம் செய்து பிரம்ம சமாஜ கொள்கைகளைப் பிரசாரம் செய்து வந்தார்.

 

வங்காளப் பிரிவினை

 

வங்காள பிரிவினைக்குப் பின்னர் அவர் செய்த காரியங்கள் தான் அவரது வாழ்க்கையில் முக்கியமான படலமாகும், வங்காள பிரிவீனயைக் கண்டித்து அவர் செய்த பிரசங்கங்கள் மிகவும் புகழத்தக்கதாகும். பின்னர் 'வந்தே மாதரம்' என்ற ஓர் பத்திரிகையையும் அவர் ஆரம்பித்தார்.

 

சென்னை விஜயம்

 

பின்னர் தென்னிந்தியர்களின் வேண்டுகோளுக் கிணங்க அவர் 1907ம் வருடம் மே மாதம் சென்னை வந்து சென்னை கடற்கரையில் ஆறு நாட்கள் அரிய பிரசங்கங்கள் செய்தார். அவரது கர்ஜனையைக் கேட்கப் பிரதிதினமும் ஆயிரக் கணக்கான ஜனங்கள் கூடினர். அவர் சென்னையில் செய்த பிரசங்கங்களை லண்டன் டைம்ஸ்,' 'ஸ்பெக்டேடர்,' போன்ற பத்திரிகைகள் கூடப் புகழ்ந்தன. இச்சமயம் லாலா லஜபதிராய், ஸ்ரீ அஜிகசிக் இருவரையும் சர்க்கார் நாடு கடத்திவிட்டதால் அவர் கல்கத்தாவுக்கு திரும்பிச் சென்றார்.


தேசபக்தர் ஆண்மை.

 

1902-ம் வருஷம் ஆகஸ்டு மாதம் பாபு அரவிந்த கோஷ் மீது நடந்த ராஜத்துவேஷ வழக்கில் சாட்சி கூறும்படியாக அவரை அதிகாரிகள் அழைத்தார்கள். அவர் சாட்சிக் கூண்டில் ஏறி தேசத்துக்கு விரோதமாக சாரி கொடுக்க முடியாதென மறுத்து விட்டார். அதனால் அவருக்கு கோர்ட்டார் 6 மாதம் வெறுங்காவல் தண்டனை விதித்தனர். சிறையில் அவர் ஹிந்து மதத்தைப் பற்றி இரு புத்தகங்கள் எழுதினார். 1908-ம் வருஷம் மீண்டும் அவர் இங்கிலாந்து சென்று அங்கு “சுயராஜ்யா' என்ற பத்திரிகை ஆரம்பித்து சாமர்த்தியமாக நடத்தி வந்தார். அவர் பிறகு இந்தியா திரும்பி வந்துவிட்டாரெனினும் அதன் பின் அவரது வாழ்கையில் நடைபெற்ற சம்பவங்களில் விசேஷம் ஒன்று பில்லை. அந்திய காலத்தில் அவர் காங்கிரஸ் கொள்கைகளுக்கு மாறுபாடாக ஆங்கிலோ இந்திய பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதிவந்தாரெனினும் இந்தியா முன்னேற்றத்திற்கு விரோதமாக அவர் எதுவும் கூறியதில்லை. அதாவது அந்திய காலத்தில் அவர் தீவிரமாக தேசீய விஷயங்களில் கலந்து கொள்ளாமல் மிதவாதியாகவே காலங் கழித்தார். அவர் தமது வாழ்க்கை சரிதம் ஒன்றை தாமே சமீபத்தில்தான் எழுதி முடித்தார்.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - ஜுன் ௴

 

 

No comments:

Post a Comment