Tuesday, September 8, 2020

 

ஶ்ரீ வைஷ்ணவ சமயப் பெரியார்

 

ஸ்ரீ வைஷ்ணவ சமயத்தார் தமது சமயத்துப் பெரியாரை ஆழ்வார்கள் என்றழைப்பர். ஆழ்வார்களென்றால் ஆழ்ந்தறியும் ஞானத்தைத் துணைக் கருவியாகப் பெற்றுள்ளவர்களென்பதாம்; அதாவது "நீரளவே யாகுமாம் நீராம்பல் தாங்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு'' என்கிற படி, பிறர் தங்கள் முயற்சியால் கற்குங் கலையளவுக்குரிய ஞானத்தையே பெறுவர்; அன்னவர்க்குத் தாங்கற்றது தவிரக் கல்லாதது புலனாகாது; ஆழ்வார்களோ பகவானுடைய ஜாயமான கடாக்ஷத்தைப் பெற்று, அவனால் இவ் வுலகத்தைத் திருத்த அவதரித்த நித்திய சூரிகளாதலால், அவர்களடைந் துள்ள ஞானம், மற்றவர்களுக்குப் புலப்படாமல் ஆழந்து மறைந்திருக்கும் பொருள்களனைத்தும் விளக்கமாகத் தெரியக்கூடியதா யிருக்கும். இந்த அறிவின் ஆழ்ச்சி அதனை யுடையவர்கள் மீதேற்றப்பட்டதால் அவர்கள் ஆழ்வார்கள் என்னப் பெற்றனர். அவ்வாழ்ச்சிதான், அறிதற்கரிய பரமாத்மாவைப் பிரத்தியட்சமாகக் காணுதலாம்.

 

உதாரணம்: - பாண்டியனொருவன், முன்னம், பரதத்வநிர்ணயத்தின் பொருட்டு நாட்டிய கிழியை, ஸ்ரீ பட்டர்பிரான் என்னும் ஆழ்வாரொருவர் அறுத்து, அப்பாண்டியனது சங்கையை யொழித்த போது, சந்தோஷசாகரத்தில் மூழ்கிய அவன், அவ் வாழ்வாரை அலங்கரித்து நகர்வலம் வரச் செய்தான். அக்காலத்தில், கண்ணுக்குத் தோன்றாத பரமாத்மா யாவர் கண்ணுக்குந் தோன்றும்படி சேவை சாதிக்க, ஆழ்வார் பேரன்பு கொண்டு, ''பல்லாண்டு" பாடி அப்பரவஸ்துவை மங்களாசாசனம் புரிந்தார். இதனை,


''மங்கவா சாசனத்தில் மற்றுமுள்ள வாழ்வார்கள்
 தங்களார் வத்தளவு தானன்றிப் - பொங்கும்
 பரிவாலே வில்லிபுத்தூர்ப் பட்டர்பிரான் பெற்றான்
 பெரியாழ்வா ரென்னும் பெயர்''


 எனவரும் பாசுரத்தா லறிக.

 

இப்படி பகவானுடைய கிருபா விசேஷத்தால், ஆழ்ந்துணரும் அறிவையடைந்து, வேதமாகிற கடலில் ஆழ்ந்து மறைந்து கிடக்கும் முக்கிய சாராம்சமான மந்த்ர ரத்னார்த்தங்களைத் திரட்டிச் சுருக்கமாகவும், விசிதமாகவும் சேதனர்களுக் குதவிய காரணத்தால் இவர்கள் ஆழ்வார்கள் என்னும் பெயரை எய்தினரென்பதும் பொருத்தமானதே. ஆழ்வார் எனினும் பெரியார் எனினும் ஒன்றே என்பதனை, பரிமேலழகர், திருக்குறள், ''இறைமாட்சி" யதிகாரத்தில் அப்பொருளை விளக்குமிடத்தில் திருவுடை மன்னரைக்காணில் திருமாலைக் கண்டேனே யென்னும்'' என்று ஆழ்வாரும் பணித்தார் என்று கூறாமல் அவருடைய பரியாய நாமத்தால் பெரியாரும் பணித்தார் என்றனர். அறிவுடையவர்களைப் பெரியாரென்றழைப்பது உலகமுறைமை. அதைநோக்கிப் பரிமேலழகர் ஆழ்வாரைப் பெரியார் என்றனரேயல்லாமல் பெரியாரென்பது ஆழ்வாரின் பரியாய நாமமென்றுத்தேசித்தன்று எனக் கூறுவாருமுளர். அது சரியன்று. பரிமேலழகர் மேற்கோள்காட்டும் மற்ற இடங்களிலெல்லாம் பிறர் கூறுவர் என்று கூறிக்கொண்டே வந்து இங்குமாத்திரம், பெரியாரும் பணித்தார்' என்று கௌரவித்துக் கூறுவதால் இது ஆழ்வார் என்னும் பெயரின் பரியாய நாமமேயாம்.

 

ஆழ்வார்கள் ஆழ்ந்த அறிவைக் கொண்டவர்களென்பதை அவர்களருளிய பிரபந்தங்களைக் கூர்ந்து நோக்குவார்க்கு இனிது வெளியாம். இதனை,


 “தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மையறி வாரார்
 அருளிச் செயலையறி வாரார் - அருள்பெற்ற
 நாத முனிமுதலா நற்றே சிகரையல்லால்
 பேதைமன மேயுண்டோ பேசு''
                        (உபதேசரத்தினமாலை)


"உயிர்த்தா ரையிற்புக் குறுகுறும் பாமொரு மூன்றினையும்
செயிர்த்தார் குருகைவந் தார் திரு வாய்மொழி செப்பலுற்றால்
மயிர்த்தா ரைகள் பொடிக் குங்கண்கள் நீர்மல்கும் மாமறையுள்
அயிர்த்தா ரயிர்த்த பொருள்வெளி யாமெங்க ளந்தணர்க்கே"
     (சடகோபரந்தாதி)


என்பவை போன்ற பாடல்கள் அறிவுறுத்தும். நிற்க,

 

இவ்வாழ்வார்கள் பதின்மராவர். அவர்கள் பொய்கையார், பூதத்தார், பேயார், (இம்மூவரும் ஆதியோகிய ரெனப்படுவர்) திருமழிசையார், குலசேகரர், பட்டர்பிரான், தொண்டரடிப்பொடியார், பாண்பெருமாள், திருமங்கையார், சடகோபர் என்பவராவர். இவர்களுடன் ஆண்டாள், மதுரகவியார் என்னும் இருவரும் சேர்ந்து பன்னிருவராவர்.

 

இவர்களுடையவும், இவர்கள் சம்பந்தம் பெற்ற ஆசாரிய புருஷர்களுடையவும் திவ்விய சரித்திரங்களைக் கிரமப்படி, சுருக்கமாகவும் விளக்கமாகவும் நமது ஆனந்த போதினி சஞ்சிகையில் சிறிது சிறிதாக எழுதி, சந்தாநேயர்களெல்லோரும் நன்கறியுமாறு வெளியிட்டுவர அப் பெரியார்களது திருவருளைப் பிரார்த்திக்கின்றனம். மக்கள் பிழைக்குரியராதலின் இக்கட்டுரையிற் பிழைகாணின் அதை யறிஞர் பொறுத்தருள்வாராக.

 

 

 

 

 

முதலாழ்வார்கள் ஆகிற பொய்கையார், பூதத்தார், பேயா ரென்னும்

மூவர் வைபவம்.

 

பிரமதேவன் அசுவமேத யாகஞ் செய்து பகவானான ஸ்ரீயப்பதியை ஆராதித்த ஸ்தலமாகிய காஞ்சீபுரத்தில், திருவெஃகாவில், பொற்றாமரைப் பொய்கையில், துவாபரயுகத்தில் எட்டுலக்ஷத் தறுபத்தீராயிரத்துத் தொளாயிரத் தோராவதாண்டில் நிகழ்ந்த சித்தார்த்தி ஐப்பசிமீ சுக்லாஷ்டமி, உடன்தக் கண்ணனுபவானந்த, "பேயஞாழ்வார் அவிணற்றில் செவ்வாய்க்கிழமை கூடிய திருவோண நக்ஷத்திரத்தில் ஸ்ரீபாஞ்சஜன்யாம்சராய் பொய்கை யாழ்வார் திருவவதாரம் செய்தருளினர். –

 

இவர் அவதரித்த சுபதினத்திற்கு மறுநாளான அவிட்ட நக்ஷத்திரத்தில், திருக்கடன் மல்லையில், மனோகரமானதொரு குருக்கத்திப் புஷ்பத்தினிடம் ஸ்ரீகதாம்சராக பூதத்தாழ்வார் திருவவதரித்தார்.

 

இவர் அவதரித்த சுதினத்திற்கு மறுநாளான சதய நக்ஷத்திரத்தில், திருமயிலையில், மாதவப் பெருமாள் சந்நிதித் திருக்கிணற்றில் செவ்வல்லிப் புஷ்பத்தினிடம் ஸ்ரீநாந்தகாம்சராக பேயாழ்வார் அவதரித்தருளினார். இவர், பகவத் பக்தி மிக்குடையவராய், " பேயனா யொழிந்தே னெம்பிரானுக்கே' என்கிறபடி பகவதனுபவானந்தத்தால் திருமேனியில் மயிர்க்கூச் செறிந்து, ஆனந்தக் கண்ணீர் சோர நெகிழ்ந்த திருவுள்ளத்தையும் பரவசத் தொனியுடன் அமிர்தப் பிரவாகத்தை யொத்து வெளிப்படுஞ் சொற்களடங்கிய திருவாக்கையும் உடையவராய், ஸர்வசங்க பரித்யாகியாய்த் தோன்றியபடியாலே, “பேயாழ்வார்'' என்னும் பெயராலழைக்கப்பட்டனர்.

 

உலகத்தை நல்வழிப் படுத்தவந்த அயோனிஜராகிய இம்மூவரும் ஒருநாள் இருந்த இடத்தில் மறுநாள் இராமல், தங்களைப் போன்ற பரம சாத்வீகர்களைத் தேடித்தரிசிக்க இஷ்டங்கொண்டு புண்ணிய க்ஷேத்திரங்கள் தோறும் சஞ்சரித்து வரலானார்கள். இவ்வாறு இவர்கள் ஒருவரை யொருவரறியாது தனித்தனியே, 'உண்டியே யுடையே யுகந்தோடுமிம், மண்டலத் தோடும் கூடுவதில்லை'', ''மாரனார் வரிவெஞ்சிலைக் காட்படும், பாரினாரொடுங்கூடுவதில்லை'', ''நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்தேங்க, எண்ணாராத் துயர் விளைக்கும் இவை யென்ன வுலகியற்கை" என்றெண்ணித் திரிவதைக் கண்ட பகவான், இவர்களை ஒருங்கே சேர்க்கக்கருதி, பெண்ணையாற்றின் தென்கரையில் வாமன க்ஷேத்திரமாகிய திருக்கோவலூரில் வந்து தன்னைச் சேவிக்கும்படி இவர்களுக்குப் புத்திப்ரதானம் பண்ணினான். இவர்களும் அத்திருப்பதியை யடைந்தார்கள்; அவ்வாறடைந்த சமயத்தில் சூரியனும் அஸ்தமிக்கலானான்.

 

முதலாக வந்த பொய்கையாழ்வார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவருடைய திருமாளிகையிற் சென்று அம்மாளிகையின் இடைகழியின் மீது சயனித்திருந்தார். பின்னர் பூதத்தாழ்வார் கண்வளர்தற்கு இடந்தேடிக் கொண்டு சென்று, பொய்கையார் சயனித்திருக்கும் இடத்தை யடைந்து, "அடியேன் சயனித்தற்கு இங்கு இடங்கிடைக்குமோ?'' என்று வினவினார். அதற்குப் பொய்கையார், ''சுவாமி! இவ்விடை கழியில் ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம்; தேவரீர் எழுந்தருளினால் இருவரும் இருக்கலாம்'' என்றார். அங்ஙனமே அவ்விருவரும் அங்கு உட்கார்ந்து, ஒருவரை யொருவர் உசாவிக் கொண்டிருந்தனர். அப்போது பேயாழ்வாரும் அவ்விடம் வந்து இடங் கேட்க, அங்கிருந்த இருவரும் அவரை நோக்கி, ''சுவாமி! இங்கு ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், தேவரீரும் எழுந்தருளினால் மூவரும் நிற்கலாம்'' என்றனர். அவ்விதமே மூவரும் நின்று கொண்டு ஒருவரோடொருவர் வார்த்தையாடிக் கொண்டிருக்கும்போது அந்தத் திருக்கோவலூர் எம்பெருமான் தன் சங்கற்பத்தால் பேரிருளும் பெருமழையும் உண்டாக்கி அவ்வாழ்வார்களோடு தானும் ஒருவனாகச் சென்று நின்றனன். அதனால் நெருக்க முண்டாயிற்று.

 

ஆழ்வார்கள் மூவரும், "முன்னில்லாத நெருக்கம் இப்பொழுதுண்டான காரணம் என்னை? நம்மை யொழியவும் இவ்விடை கழியைப் பற்றி நிற்பாரும் உண்டோ?'' என்று, "ஞானச்சுடர் விளக்கேற்றியும்", "உணர்வெனும் ஒளி பத்தால் பேரிருவகபாது அந்தத் திருக் குருவரோடொருவர் கொள் விளக்கேற்றியும்", "வெய்ய கதிரோன் விளக்கேற்றியும் " பார்த்தனர்; பகவானுடைய திவ்யமங்கள சொரூபத்தை ஞானக்கண்ணாற் கண்டு பரமானந்தங் கொண்டு பிறப்பெனும் பெரும் பிணிக்குப் பரமௌஷதமும், சமுசார சாகரத்தைக் கடப்பதற்குரித்தான தெப்பமும், அப்பகவானது திவ்யகுணானுபவ ரூபமுமான பாடல்களால் அவனைத் துதித்தார்கள்.

 

திருக்கோவலூரில், ஆதியோகிகளாகிய இம்மூவரும் பகவானைக் கண்டு களித்து, பின் திருவயோத்திக் கெழுந்தருளி சீதா லக்ஷ்மண பரத சத்ருக்க ஆஞ்சநேய சமேதரான சக்ரவர்த்தித் திருமகனாரைச் சேவித்து, அங்குவறுமைப் பிணியால் வாட்ட முற்றிருந்த வேதியரொருவருக்கு இகபரப்பேற்றை யளித்தனர்; அதன் பின்னர் வதரியா சிரமத்தையடைந்து நரநாராயண முனிவர்களைப் பணிந்து, ஒரு மலைக்குகையில் யோகத்திலிருந்தனர். பிரமதேவன் அங்கு வந்து நரநாராயணர்களால் இவர்களுடைய வைபவத்தையறிந்து, இவர்களைச் சோதிக்கத் தொடங்கி, ஒரு சோலையையும், அதில் சில ரூபவதிகளான மங்கையரையும் உண்டு பண்ணி அம்மங்கையரால் மூவரையும் மயக்க முயன்றான். மூவரும் தமது யோக நிலையினின்றும் பிசகவில்லை; பிறகு துஷ்டமிருகங்களாலும், கொடிய சர்ப்பங்களாலும், இடி மழை மின்னலாலும் இவர்கள் தவத்தை யழிக்கப்பார்த்தும் பயன்படாமை கண்டு அந்தக் கமலாசனன் இவர்களை வணங்கிவிட்டுப் போனான்.

 

அப்பால் ஆழ்வார்கள் மூவரும் திருவேங்கட மென்னும் திருமலைக்குப் போய் அஃது சேஷாமிசமாதலால் அதன்மீதேறாமல் அடிவாரத்திலிருந்தபடியே ஸ்ரீநிவாசப் பெருமானைத் தொழுது நிற்க, அப்பெருமான் இவர்களிருந்த இடத்தே வந்து காட்சியளித்தனன். அங்கு அரிதாசரென்னு மொருவர் இவர்கள் திருவடியை ஆஸ்ரயிக்க அவர்க்கு இவர்கள் அக்ஷயபாத்திரமொன்றும், அதனைப் பாதுகாக்கத் திருவாழியொன்றும் கொடுத்து, அப்பாத்திரமளிக்கும் பொன்னைக் கொண்டு சந்நிதி ஜீர்ணோத்தாரண கைங்கரியமும், பாகவதாராதனமும் செய்துவர நியமித்தார்கள். அம்மலையில் இவர்கள் எழுந்தருளியிருந்த இடத்திலிருந்த தீர்த்தம் இப்போதும் ஆழ்வார்தீர்த்த மென வழங்கப் பெற்று வருகின்றது.

 

பிறகு இவ்வாழ்வார்கள் கச்சி மாநகரை யடைந்து பேரருளாளப் பெருமானைச் சேவித்து, அங்குத் தம்மைச் சரண்புகுந்த விஷ்ணுவர்த்தனனென்னுமரசனை யாட்கொண்டு, அவன் தன் பகைவரையும் வெல்லச் செய்தார்கள்; அனந்தரம் திருவரங்கஞ்சென்று ஸ்ரீரங்கநாதனை வணங்கித் தொழுது சிலநாள் யோகத்திருந்தனர்; இந்த இடத்தில் குஷ்டநோய் கொண்ட வேந்தனொருவன் இவர்களிடம் வந்து இவர்களுடைய திருவடிப் பொடியைப் பூசிக்கொள்ள உடனே அவன் வியாதி நீங்கிச் சுந்தர வடிவம் பெற்று, யோகிதாசன் என்னும் பெயரெய்தினான். அக்காலை சோழபூபதியொருவன் நூறு குமாரத்திகளோடும் மனைவியோடும் வந்து இவர்களைப் பணிந்து நியாசவித்தை யுபதேசம் பெற்றனன். இவன் பெண்மக்கள் நூறுபேரும் யோகிதாசன் என்னும் அரசனை மணக்க விரும்பினார்கள். அவர்களை ஆழ்வார்கள் அவனுக்குத் திருமண முடிப்பித்து, சோழநாட்டையும் அச்சோழனது செல்வமுழுதையும் கொடுப்பித்தனர்.

 

கடைசியாக ஆழ்வார்கள் மூவரும் சுவேதத்தீபம், திருப்பாற்கடல், சூரியமண்டலம், பிரமலோகம் சென்று ஆங்காங்குள்ள எம்பெருமான்களைச் சேவித்து, ஆமோத பிரமோத சம்மோத லோகங்களுக்கும் போய் சங்கர்ஷண பிரத்யும்ந அநிருத்தர்களான வியுகமூர்த்திகளையும் பணிந்து நெடுநாள் யோகத்திருந்து அர்ச்சீராதிமார்க்கமாகப் பரமபத மெய்தினார்கள்.  

 

இவர்கள் செய்தருளிய பிரபந்தங்கள்:

 
 பொய்கை யாழ்வார்,


''வையந் தகளியா வார்கடலே நெய்யாக
 வெய்ய கதிரோன் விளக்காகச் செய்ய
 சுடராழி யானடிக்கே சூட்டினென் சொன் மாலை
 இடராழி நீங்குகவே யென்று''

என்று தொடங்கி ருக்வேத சாரமான முதற்றிருவந்தாதியையும்,


பூதத்தாழ்வார்,


 "அன்பே தகளியா வார்வமே நெய்யாக
 இன்புருகு சிந்தை வீடுதிரியா - நன்குருகி
 ஞானச் சுடர்விளக் கேற்றினே னாரணர்க்கு
 ஞானத் தமிழ்புரிந்த நான்''
 

என்று தொடங்கி எஜுர்வேதசாரமான இரண்டாம் திருவந்தாதியையும்,


 பேயாழ்வார்,


 “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
 அருக்க னணிநிறமுங் கண்டேன் - செருக்கிளரும்
 பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன்
 என்னாழி வண்ணன்பா லின்று''

என்று தொடங்கி சாமவேத சாரமான மூன்றாந் திருவந்தாதியையும் திருவாய் மலர்ந்தருளி உலகை வாழ்வித்தார்கள்.


முதலாழ்வார்கள் வைபவம் முற்றுப்பெற்றது.

 

4. திருமழிசை யாழ்வார்.

 

இப்பெரியார் அவதரித்த ஸ்தலம் திருமழிசை. ஒருசமயம், அத்திரி, பிருகு, வசிஷ்டர், ஆங்கீரசர் முதலிய மகரிஷிகள், பிரமதேவரிடஞ்சென்று, தாங்கள் தவம் புரிவதற்குத் தங்களுக்கோர் தகுதியான க்ஷேத்திரத்தைத் தெரிவிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவர், பூமியின் சத்தெல்லாம் ஒருங்கே திரண்டுள்ள க்ஷேத்திரம் எதுவென்று தமக்குள் யோசித்துப் பார்க்கையில், மகிசார க்ஷேத்திரத்தின் ஞாபகம் அவருக்கு உதயமாயிற்று. (மகி - பூமி; சாரம் - சத்து.) (மகிசாரம் என்னும் வடமொழி தமிழில் மழிசை என வழங்கப் பெற்று வருகிறது.) இந்த மழிசையம்பதியையும், பூமியின் மற்றபாகத்தையும் அந்தப் பிரமமூர்த்தி தமது ஞானமாகிற தராசினிடம் வைத்து நிறுத்துப் பார்க்க, மழிசையே கனத்திருக்கக்கண்டு, அதை யவர் மகரிஷிகளுக்குத் தெரிவித்தார். ஆகையால் இந்த க்ஷேத்திரம் மிகவும் உத்தமமானதொன்றாயிற்று.

 

இந்த க்ஷேத்திரத்தின் மேற்பாகத்தில், கொஞ்ச தூரத்திலிருக்கிற விதேகவனத்தில், பார்க்கவ மகரிஷி ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து, தீர்க்கசத்ரயாகஞ் செய்து கொண்டிருந்தார். இந்திரன் இந்த யாகத்தைப் பங்கஞ் செய்து வரும்படி தேவதாசிகளில் அதிசுந்தரவதியான கனகாங்கி யென்பாளொருத்தியை மகரிஷியிடம் அனுப்ப, அந்த மகரிஷி கனகாங்கியை நேசித்து ஒரு புத்திரனைப் பெற்றார். இப்புத்திரன் எவ்வித உறுப்பும் விளக்கமாகத் தோன்றாதபடி, வெறும் பிண்டாகாரமாய், துவாபரயுகம் 8,62,901 - ல் நிகழ்ந்த சித்தார்த்தி, தைமீ, கிருஷ்ணபட்சம், பிரதமை, பானுவாரங்கூடிய மகநட்சத்திரத்தில் உதித்தது கண்டு, பார்க்கவரும் கனகாங்கியும், இப்பிண்டத்தை யாதரியாமல், ஒரு பிரப்பம் புதரின் கீழ் எறிந்து விட்டுப் போய் விட்டார்கள்.

 

ஜெகன்மாதாவான மகாலக்ஷமி இந்தப் பிண்டத்தைக் கடாக்ஷித்தருள், இது நாளடைவில் எல்லா அவயவங்களும் விளங்கப் பெற்று ஓர் பச்சிளங்குழந்தையாய் அழத்தொடங்கிற்று. மழிசைப்பதியில் கோயில் கொண்டுள்ள பகவான் இக்குழந்தை முன் தோன்றிக் கடாக்ஷிக்க, இதன் அழுகை நின்றுவிட்டது. பகவான் மறைந்ததும் குழந்தை மீண்டும் ரோதனஞ் செய்தது. இச்சந்தர்ப்பத்தில், திருவாளனென்பானொருவன், பிரம்பறுக்கும் பொருட்டு அப்புதரினிடம் வந்தான். வந்தவன் குழந்தையைக் கண்டு, ஆனந்தங்கொண்டு, அதை எடுத்துக் கொண்டு போய்த் தன் மனையாளான பங்கயச் செல்வியிடங் கொடுத்தான். புத்திரப்பேறின்றி வருத்த முற்றிருந்த அவள், தனத்தைக்கண்ட தரித்திரனைப்போல் சந்தோஷசாகரத்தில் மூழ்கி, அக்குழந்தையை அன்புடனேற்றுக் கொண்டு, பார்ப்பவர், 'இவள் இக் குழந்தையைத் தத்துக்கொண்டாள் கொலோ, தானே பெற்றாள் கொலோ' என்று அதிசயிக்கும்படி, சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தாள். பங்கயச் செல்விக்குப் பகவத்கிருபையால் அவளுடைய ஸ்தானங்களில் பால் சுரக்கத் தொடங்கிற்று. குழந்தை இப்பாலை அருந்தாமலே அதுமுதல் அழாமலும், மல ஜலாதிகளில்லாமலும், சுகவளர்ச்சியில் தளராமலு மிருந்து வந்தது.

 

இவ்விசித்திரத்தைக் கேள்வியுற்ற அவ்வூராரில் ஒருவனும், நான்காம் வருணத்திற் பிறந்தவனும், பிள்ளையில்லாதவனும் ஆகிய ஒரு கிழவன் அக்குழந்தையின் மீது பேரன்பு கொண்டு நாள்தோறும் பயபக்தி விசுவாசத்துடன், பசும்பால் வாங்கி, அதைப் பக்குவமாகக் காய்ச்சி எடுத்துக் கொண்டு தன் மனைவி சகிதமாய் வந்து அப்பாலை யருந்தும்படி பிரிய வசனங்களால் குழந்தையை வேண்டிக் கொள்வான்; குழந்தை அதனை மகிழ்ச்சியோ டருந்தி வந்தது.

 

இப்படிப் பலநாள் நடந்துவர, ஒருநாள், இத்தம்பதிகளின் கருத்தறிந்து அத்தெய்வக் குழந்தை, தானருந்தும் பாலில் கொஞ்சம் மிச்சப்படுத்தி, அவர்களை நோக்கி, " நீங்கள் இதனை யுட்கொண்டால் உங்களுக்கோ ரறிவறிந்த புத்திரன் பிறப்பான்; அவனால் சுகமடைவீர்கள்'' என்று குறிப்பிக்க, அவர்களும் அவ்வாறே செய்து விதுரரைப் போன்ற ஞானவானாகிய ஒரு குமாரனைப் பெற்று, கணிகண்ணன் என்று அக்குமாரலுக்குப் பெயரிட்டு, சகல வித்தைகளிலும் தேர்ச்சி பெற வைத்தார்கள். நிற்க,

 

எம்பெருமானுடைய ஜாயமான கிருபாகடாக்ஷத்தைப் பெற்ற தெய்வீகக் குழந்தையும் ரிஷிபுத்ரருமான ஆழ்வார், ஏழுவயதிலேயே சகலமும் ஓதாதுணரும் வல்லமையைப் பெற்று, '' இளைப்பினை யியக்க நீக்கி, யிருந்து முன்னிமையைக் கூட்டி யளபிலைம் புலனடக்கி இயம நியாமாதி அஷ்டாங்க யோகம் புரிய இச்சைகொண்டார். இதற்கு ஸர்வஜகத்காரணத்வமும், ஸர்வரக்ஷகத்வமும், மோக்ஷப்ரதத்வமும் கொண்டுள்ள பரப்பிரம வஸ்துவையுள்ளபடி யறிந்து தியானத்திற்கு விஷயமாக்க வேண்டுமென்று சாத்வீகசாஸ்திரங்கள் முறையிடுகின்றன.

 

பரம்பிரம்மத்திற்கு ஸர்வஜகத் காரணத்வமாவது, எல்லாம் இறுதியுற்றுத் தன்னிலடங்கிய காலத்துத் தானொன்றிலும் அடங்காது எஞ்சி நின்று சிருஷ்டி காலம் வந்ததும், சேதனாசேதனங்களான யாவும் உண்டாவதற்குத்தானே முதற்காரணமாயிருப்பதாம். ஸர்வரக்ஷகத்வ மென்பது சிருஷ்டிக்கப்பட்ட ஜீவான்மாக்கள் முத்தியின்பம் பெறுவதற்கு அவரவர்கட்குள்ள தடையை யொழித்து விருப்பத்தை யளித்து, நன்னெறியில் நிறுத்திக் காத்தலாம். மோக்ஷப்ரதத்வமாவது, நன்னெறியில் நின்ற அவ்வானமாக்களுக்கு நிரதிசயப் பேரின்பப் பேற்றை யளிப்பதாம்.

 

இவ்வாற்றலைக் கொண்ட அவ்வஸ்துவை நாடிய திருமழிசை யாழ்வார், பகவானுடைய சங்கல்பத்தின்படி பல சமயங்களிலும் ஒன்றன் பின் ஒன்றாக நுழைந்து, பிரம்மலக்ஷணத்தைப் பேசும் விஷயத்தில் அந்தந்தச் சமயத்தார் கொண்டுள்ள கொள்கைகளை அவரவர் கூறும் வண்ணமே அனுசரித்துப் பார்த்தார். அவையாவும் தமதறிவுக்குப் பொருத்தமானவையாகப் புலப்படாமையால் அவற்றை விட்டுச் சைவமதப் பற்றில் தலையிட்டு, சிவவாக்கியர் என்னும் பெயருடன் வாழ்ந்து வரலானார்.

 

இப்படி இவர் சைவாபிமானராய்ப் பூசஞ்சாரம் செய்து வரும் போது திருமயிலையில் ஸ்ரீ வைஷ்ணவாக்ரேசரான பேயாழ்வாரைச் சந்தித்து, அவருடன் மதவிஷயமாகத் தர்க்கித்து, அவர் சொன்ன பரப்பிரம்ம லக்ஷணங்கள் சுருதி யுக்தி யனுபவங்களுக்கு ஒத்திருந்தமையாலும், தமது யோகதிருஷ்டியால் விஷ்ணுவாக்ருதியே பரதத்வமா யிருக்கக்கண்டமையாலும் அவரால் திருத்தப் பெற்று, பஞ்சசமஸ்கார பூர்வகமாக ஸ்ரீ வைஷ்ணவராய், அவ்ரையே தமது ஞானாசாரியராகவடைந்து, அவர் நியமனப்படி யொழுகி வந்தார்.

 

பிறகு திருமழிசையார், பேயாழ்வாருடைய அனுமதி பெற்றுத் திருமழிசைக் கெழுந்தருளி அங்கே கஜேந்திர சரஸின் தீரத்தில் யோகத்திலிருந்தார். அப்போது ஆகாயவீதியில், ரிஷபவாகனத்தில் பார்வதி சகிதமாகப் போய்க் கொண்டிருந்த சிவபிரான் யோகத்திலிருக்கும் ஆழ்வாரைக் கண்டு அவரது திடமான பக்திக்கு வியந்து அவருக்குப் பக்திசாரர் என்னும் சிறப்புப் பெயரைக் கொடுத்துப் போயினர். அதன்பின் சுக்திஹாரன் என்கிற கேசரன் ஆழ்வாரிடம் வந்து அவருடைய மகிமையைப் பார்த்து அடைக்கலம்புக அவனை அவர் கிருதார்த்தனாக்கி யருளினார். அப்பால் ஆழ்வார் மீண்டும் பூசஞ்சாரம் செய்து வந்து கச்சியம்பதியில், திருவெஃகாலில் எழுந்தருளி, சொன்னவண்ணஞ் செய்த பெருமாளைச் சேவித்து அங்கே யோகத்திலமர்ந்திருந்தார். இவ்விடத்தில் ஆழ்வாருடைய அனுக்கிரகத்தால் பிறந்து சிறப்புற்றிருந்த கணிகண்ணர் ஆழ்வாரை யடைந்து அவருக்குப் பணி விடை செய்து கொண்டிருக்கும் பாக்கியத்தைப் பெற்றார். இந்த சந்தர்ப்பத்தில் கச்சிப்பதியிலுள்ள தாசிக்கிழவி யொருத்தி ஆழ்வார் இருந்த இடத்திற்குத் தினந்தோறும் வந்து, 'கடைத்தலை சீக்கப் பெற்றால் கடுவினை களையலாமே' என்கிறபடி, அந்த இடத்தைச் சீத்தல், மெழுகல், கோலமிடல் முதலியவற்றால் அலங்காரஞ் செய்யுங் கைங்கரியத்தை மேற்கொண்டிருந்தாள். ஒருநாள் ஆழ்வார் அவளைக் கடாக்ஷித்து, "நீ இக்கைங்கரியஞ் செய்வதால் அடைய விரும்பும் பலன் என்ன?'' என்று கேட்டார். அதற்கந்தக் கிழவி. "சுவாமி! நான் விருத்தாப்பியத்தால் மிகவும் கஷ்டப்படுகிறேன். ஆதலால் யௌவனத்தை அபேக்ஷிக்கிறேன் " என்றாள். ஆழ்வார் அவளிஷ்டப்படி அவளுக்கு யௌவன பருவங் கைகூட அருள் புரிந்தார்.

 

இந்த அதிசயத்தைத் தாசியால் கேள்வியுற்ற பல்லவராயன் என்னும் அவ்வூர்க்கரசன், தானும் யௌவன திசையையடைய எண்ணங் கொண்டு, பிரதிதினமும் உபாதானார்த்தமாகத் தனது இல்லத்திற்கு வரும் ஆழ்வாருடைசிஷ்யரான கணிகண்ணரை யழைத்து, " உமது ஆசாரியரை நான் சேவிக்கக்காதலுற்றிருக்கிறேன். அவரை இங்கு அழைத்து வரவேண்டும்'' என்றான். ''நமதாசாரியர் ஒருவரகத்துக்கும் எழுந்தருளாரே! அரசராயிருப்பினும் கணிசித்துப் பாராரே! 'துறவிக்கு வேந்தன் துரும்பு' என்பதை நீர் கேட்டதில்லையா?'' என்றார் கணிகண்ணர். அதன்மேல் வேந்தன், கணிகண்ணரை நோக்கி, "நீரேனும் நம்மீது ஒரு கவிபாட வேண்டும் " என்றான். அதற்கவர்,'' நாக்கொண்டு மானிடம் பாடேன்; வாய்க் கொண்டு மானிடம் பாட வந்த கவியேனல்லேன் " என்றார். அதன்மேலும் அரசன் அவரை நிர்ப்பந்திக்க, அவர், ''ஆடவர்க ளெங்ங னகல்வா ரருள் சுரந்து, பாடகமு மூரகமும் பாம்பணையும் - நீடியமால், நின்றா னிருந்தான் கிடந்தா னிதுவன்றோ, மன்றார் பொழிற்கச்சி மாண்பு " என்றார். அரசன் கோபங்கொண்டு, " நம்மைப் பாடும்படி கேட்டால் நீர் நமது ஊரையும் தெய்வத்தையும் பாடினீர். ஆகையால் இந்த க்ஷணமே நீர் நமது ராஜ்யத்தினின்றும் போய்விட வேண்டும்'' என்று கட்டளை யிட்டான்.

 

கணிகண்ணர் இதனைத் தமது ஆசாரியருக் கறிவித்து, அடியேனுக்கு விடைதந்தருள வேண்டும்'' என்று பிரார்த்தித்தார். ஆழ்வார், " நீர் போம் போது நாமும் இங்கிரோம், எம்பெருமானும் இங்குக் கண் வளர்ந்தருளான் "என்று சொல்லி, பகவானுடைய சந்நிதானஞ் சென்று,


 "கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி
 மணிவண்ணா நீ கிடக்க வேண்டா - துணிவுடைய
 செந்நாப் புலவனியான் செல்கின்றேன் நீயுமுன்றன்
 பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்''


 என்று விண்ணப்பித்தார்.

 

ஆழ்வார் சொன்ன வண்ணமே பகவான் பாம்பணையைச் சுருட்டிக் கொண்டு பின்தொடர ஆழ்வாரும் கணிகண்ணரும் ஊரை விட்டுப் புறப்பட்டனர்; இவர்களுடன் அவ்வூரிலுள்ள சகல தேவதைகளும் புறப்பட்டு விட்டன. அந்த நகரம் பொலிவிழந்து இருளடைந்தது; அரசனும் மந்திரியுமிவ்வற்புதத்தைக் கண்டு, பயங்கொண்டு ஓடோடி வந்து, 'ஓரிரவிருக்கை' என்னும் கிராமத்தில் கணிகண்ணரின் திருவடியில் வீழ்ந்து தங்கள் குற்றத்தை க்ஷமிக்கும்படி அவரை வேண்டிக் கொண்டனர்; கணிகண்ணர் அவர்கள் பால் மனமிரங்கி முன்போலெழுந்தருள ஆழ்வாரை வேண்ட, ஆழ்வாரும் பகவானை வேண்ட, யாவரும் முன்போலவே திருவெஃகாவிற்குடி புகுந்தருளினர். இவர்கள் ஒரு இராத்திரி தங்கிய கிராமம், 'ஓரிரவிருக்கை' என்னும் பேர்பெற்று இன்றும் அப்பேருடன் விளங்கிவருகின்றது.

 

அனந்தரம், ஆழ்வார் திருக்குடந்தைக்குப் புறப்பட, வழியில் பெரும்புலியூர் என்னும் கிராமத்தில், ஒரு வீதியில், ஓர் திண்ணை மீது சிறிது நேரம்ஆயாசந் தீர உட்கார்ந்தார். அத்திண்ணையில் சில பிராமணர் வேதாத்யயனம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இவரைக் கண்டதும், சூத்திர ரென்றெண்ணி, அத்யயனஞ் செய்வதை நிறுத்தினர். இவர் உடனே அதை விட்டுப் புறப்பட்டார். ஆழ்வார் புறப்பட்டதும் பிராமணர் அத்யயனத்தை ஆரம்பிக்க முயன்றனர்; ஆனால் அவர்களுக்கு விட்ட இடம் ஞாபகத்திற்கு வராமல் சஞ்சலப்படலானார்கள். ஆழ்வாரிதைக் கண்டு தரையிற் கிடந்த ஓர் கருப்பு நெல்லை எடுத்து நகத்தாற் கீறிக் காட்டினார். அவர்கள் அதனால், "கிருஷ்ணாநாம் வ்ரீஹீணாம் நகநிர்பிந்தம்' என்ற விட்ட இடங் கண்டு அத்யயனஞ் செய்து ஆழ்வாரை மகானென்றறிந்து, தங்கள் குற்றத்தைப் பொறுத்தருளக் கேட்டுக் கொண்டார்கள். அந்தக் கிராமத்தில் ஆழ்வார் சிலநாள்கள் வீதிதோறுஞ் சென்று உபாதானம் எடுத்துக் கொண்டிருந்தார். அக்காலத்தில் அவ்வூரில் கோயில் கொண்டுள்ள பகவான் ஆழ்வார் நடையாடும் பக்கமெல்லாம் முகங்காட்டிக் கொண்டிருந்தார்.

 

இதனைக் கண்ணுற்ற பெரும்புலியூரடிகள் அச்சமயம் தாம் செய்யும் யாகத்திற்கு ஆழ்வாரை யழைத்து வந்து தலைவராக்கினார். அது பொறாத சில பிராமணர் ஆழ்வாரைக் குறை கூற, ஆழ்வார் தமது இருதயத்துள்ள பகவானை நோக்கி,

 

"அக்கரங்க ளக்கரங்க ளென்றுமாவ தென்கொலோ
 இக்குறும்பை நீக்கியென்னை யீசனாக்க வல்லையேல்
 சக்கரங்கொள் கையனே சடங்கர்வா யடங்கிட
 உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே''


என்று பாடி, அப்பகவானை யாவருக்கும் பிரத்தியட்சமாக்கி அசடர்களின் வாயை அடக்கியருளினார்.

 

பின்னர் ஆழ்வார் திருக்குடந்தைக் கெழுந்தருளி ஆராவமுதப் பெருமானைச் சேவித்து, அதன்பின் தாம் செய்தருளிய கிரந்தங்களை யெல்லாம் காவிரி நதியின் பிரவாகத்திலே விட்டு நிற்க, அவற்றில் திருச்சந்த விருத்தமும், நான் முகன் திருவந்தாதியும் எதிர்த்துவர, அவற்றை எடுத்துக் கொண்டு, மறுபடியும் ஆராவமுதனை வணங்கி, " காவிரிக்கரைக் குடந்தையிற், கிடந்தவாறெழுந்திருந்து பேசு....'' என்று விண்ணப்பிக்க, ஆராவமுதன் தன் திருமுடியை நிமிர்த்தி யெழுந்திருக்கப் போகையில், அந்த சௌலப்பியத்தைக் கண்டு, " வாழி கேசனே " என்று மங்களாசாசனஞ் செய்தார். ஆயினும் ஆராவமுதப் பெருமான் ஆழ்வாருக்கு உத்தான சயனங் கொண்டு சேவை சாதிக்க, அந்த திவ்யமங்கள விக்கிரகத்தையே தியானம் பண்ணிக் கொண்டு யோகத்தில் இரண்டாயிரத்து முந்நூறு வருஷம் அங்கெழுந்தருளியிருந்து, இவ்வாறு திருமேனியுடனே அன்னாகார மின்றிப் பல மூலங்களில் சிறிது அமுது செய்தருளிக் கொண்டு விஷ்ணுதரிசன ஸ்தாபனாசார்யராய் 3,700௵ இந்த உலகிலிருந்து யாவரையும் வாழ்வித்தருளினார். சுபம்; சுபம்.

 

5. ஸ்ரீ குலசேகராழ்வார்.

 

இவர் அரசராயிருந்து, தெய்வபக்தியில் மேம்பட்டு, அரச போகத்தை வெறுத்து, பகவானை யடைந்தவராதலின், இவருடைய சரித்திரத்தை நாம் வாயாரப் படிப்பதும், மனதாரச் சிந்திப்பதும், செவியாரக் கேட்பதும் நமக்கு நன்மையேயாம் என்பதிற் சந்தேகமில்லை.

 

கொல்லி என்னும் பெயரைக் கொண்ட ஊர் ஒன்றுண்டு. அது நமது புண்ணிய பூமியாகிய பரதகண்டத்தில், எல்லா வளங்களிலும் சிறந்திருந்த தென்று சங்க நூல் முதலான நூல்களில் புகழப் பெற்றிருக்கின்றது. இதை முன்னொரு காலத்தில் திடவிரத பூராஜதேவன் என்னும் வேந்தர் பிரானொருவன் அரசு புரிந்து வந்தான இம்மன்னன் சகதியவந்தன்; குடிகளைத் தன்னுயிர் போற்கருதி பரிபாலித்து வரும் சீல குணமுடையவன்; தெய்வபக்தியிற் சிறப்பும் நவ; கல்வி கேள்விகளில் நிபுணத்துவம் படைத்தவன். இப்படி நற்குணங்களிலும், நற்செயல்களிலும் ஒப்புயாவற்று விளங்கி வந்த இம்மன்னா மன்னனைத் தங்களுயிர் போலெண்ணக் குடிமக்கள் இவனிட்ட விதிவிலக்குகளுக்கு அன்புடன் உட்பட்டு நடந்து வந்தார்கள்.

 

இவ்வரசனுக்கு எல்லா பாக்கியங்களும் கைகூடி யிருந்தும் புத்திரபாக்கியம் ஒன்று மட்டும் கைகூடாதிருந்தது. இது அவனுக்குப் பெருத்தமனவேதனையாக விருந்தது. அவன் இது விஷயமாகத் தன் சமஸ்தானபண்டிதர்களிடம் முறையிட்டுக் கொண்டான். அவர்கள் புத்திர காமேஷ்டியாகத்தைச் செய்யும்படி அவனை எச்சரித்தார்கள். அவ்வாறே அப்பூபதிசந்தோஷ சித்தத்துடன் சற்குண சம்பனனராய் விளக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை முன்னிட்டுக் கொண்டு, பகவானுடைய சந்நிதானத்தில் அந்த யாகத்தைக் குறைவின்றிச் செய்து முடித்தான். பகவானுடைய திருவருளால் இவ்வரசனுடைய தரும் பத்தினியாகிய நாத நாயகியம்மாள் கருப்பவதியாய் பத்துமாதமும பூர்த்தியானதும், சோகுலத்துக்கோர் தீபம் போன்று, எம்பெருமானது ஸ்ரீ கொளஸ்துப மாணிக்கத்தின் அசெமாய், கலியாப்தம் இருபத்தெட்டின், பராபவ, மாசி மீ, சுக்கில பக்ஷம், புனர்பூசம், துவாதசி கூடிய குருவார சுபதினத்தில் இராஜ லக்ஷணங்கள் பொருந்திய ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

 

திவ்வியமான தேஜசுடன் தனக்கோர் குழந்தை பிறந்தமைக்காக அரசன் பெரிதும் மகிழ்வடைந்து, நகரமுற்றும் அலங்கரித்து கோதானம், பூதானம், அன்னதானம், சொர்ணகானம் முதலிய தானங்களை வழங்கி, தெய்வஸ்தானங்களில் பற்பல திருவிழாக்களைக் கொண்டாடினான்; குழந்தைக்கு ஜாதகங்கணித்து, பன்னிரண்டாவது நாளில் சுற்றத்தார் தொடக்கமான மற்றவருஞ் சூழக் குழந்தையை "மாணிக்கங்கட்டி வைரமிடை கட்டி ஆணிப் பொன்னாற் செய்த வண்ணச்சிறு தொட்டிலில் கிடத்தி, மட்டற்ற   வைபவத்துடன் மங்களம் பாடி தக்கவர்களைக் கொண்டு குலசேகரன் என்று அதற்குத் திருநாமஞ் சாற்றி, நாளடைவில் சௌளம் அன்னப் பிராசனம் (சோறூட்டல்) முதலிய திரியைகளை நடத்தி, உபநயனஞ் செய்து குருமுக மாக வித்யாரம்பமும் செய்வித்தான்.

 

குலசேகரர், எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப் பெற்றவராகலின், சில தினங்களுக்குள்ளாகவே வேத வேதாந்தாதிகளை யெல்லாம், சமுத்திர ஜலத்தை ஆவிரூபமாகக் கிரகிக்கின்ற சூரியனைப்போல, ஞான ரூபத்தாற் கிரகித்துப் பக்திநெறியைக் கடைப்பிடித்த மேதாவியானார். இதனை வேந்தன் கண்டு அகமகிழ்ந்து, யுக்த வயதில் இவருக்குத் திருக்கலியாணமும், இராஜ்யாபிஷேகமும் செய்வித்தான். பின்னர் இவர் பிரஜாபரிபாலனஞ் செய்யு முறையையுஞ் சிலநாள் இவருடனிருந்து பார்த்து மனம் பூரித்து, அரசன் பத்தினி சகிதமாய், சத்கதியடையத் தவக்கோலம் பூண்டு நாட்டை விட்டுக் காட்டையடைந்தான்.

 

தந்தையுந் தாயும் கானகஞ் சென்றதும், கல்விக்கு இருப்பிடமும், செல்வத்திற்கு உதிப்பிடமும், சற்குணத்திற்குச் சுரப்பிடமும் ஆன இவர், தமது தந்தையினும் குடிகளிடத்தில் போன்புடையவராய், நீதி வழுவாது நின்று செங்கோ லோச்சி வந்தார். ஒருநாள் உபய விபூதி நாயகனான திருவேங்கடத்தெம்பெருமான், இவருடைய ஸ்வப்பனத்தில் எழுந்தருளித் தனது நிர்ஹேதுக பாமகிருபையாலே சேவைசாதித்து, இவரைப் பரம சாத்வீகராம்படிக்கடாக்ஷித்து, தனது சொரூப ரூபகுண விபூதிகளை யெல்லாம் காட்டியருளி மறைந்தனன். உடனே இவர் திடுக்கிட்டு நித்திரை குலைந் தெழுந்து, படுக்கையில் வீற்றிருந்தபடியே அநுபவரீதியிலுண்டாகிய அதிசயத்தால் அடங்காத அன்புகொண்டு, பகவானுடைய சௌலப்பியத்தையும், சேதனன் அவனை அடையப்பெறாத இருதயக் கடினத்தையும், தமக்குத் தற்காலம் கிடைத்த அவனுடைய சேவையிலுண்டான ஆனந்தத்தையும், இதற்கு முன் இராஜ்யாதி பாரத்தால நுபவிக்க நேர்ந்த துக்கத்தையும் ஒன்றோடொன்றொப்பிட்டுப் பார்த்து, தம்மால் பகவானுக்குச் செய்யப்பட்ட தொன்றும் இல்லையாக விருந்தும், அவனே இப்படி நிர்ஹேதுக்கமாக அருள் செய்திருப்பதற்குக் கைம்மாறு யாது செய்யக் கடவோ மென்றெண்ணித் தளர்வடைந்து எழுந்து உலாவும் போது ஒன்றுந் தோன்றாதவராய், சிலாவிக்கிரகம் போல் அசையாதிருந்து விட்டார்.

 

அதிகாலையில், இவரைப் படுக்கையினின்றும் எழுப்புகிறவர்கள் வந்து வீணை முதலிய இசைக் கருவிகளை நெடு நேரம் மிழற்றியும், இவர் அசையாதிருப்பது கண்டு, பயந்து, அமைச்சர்களிடம் ஓடி இதனையறிவிக்க, அவர்களும் வந்து சில சைகைகள் செய்து பார்த்து இவரிடமிருந்து பதிலொன்றும் பெறாதவராய், இவருக்கு அந்தரங்கத் தொண்டர்களைப் படுக்கையறைக்குள்ளே யனுப்பிப்பார்த்து வரச்சொல்ல, அவர்கள் சென்று இவர் அசையாது நிற்கும் திருக்கோலத்தைக் கண்ணுற்றுச் சேவித்து வெளியே வந்து
'அரசர் ஏதோ யோசனையில் மூழ்கி யிருக்கிறார்' என்றுரைத்தனர்.

 

அமைச்சர் முதலியோர் இவர் விஷயமாகத் தத்தமக்குத் தோன்றியவற்றைச் சொல்லிக் கொண்டிருக்கும் சந்தடியால் குலசேகரர் தெளிந் தெழுந்து வெளியே வந்து ஒருவரோடும் பேசாமல், பகவத் பக்தியிற் சிறந்துள்ள முதல் மந்திரியை அழைத்து 'அன்ப அநித்தியத்தை நித்தியமென்றெண்ணி வாழ்நாளை வீழ்நாளாகக் கழித்து வந்த என்னையும் ஒரு பொருளாகமதித்து, பகவான் சேவை தந்தருளினன்; மெய்யறிவை யூட்டினன்; ஆதலால் இனி' கம்பமதயானைக் கழுத்தகத்தின் மேலிருந்து, இன்பமருஞ் செல்வ
மும் இவ்வரசும் யான் வேண்டேன்'; பாகவ தோத்தமர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களைத் தேடிக்கொடு வந்து, அவர்களிடம் சாத்காலக்ஷேபம் கேட்க வேண்டும்'' என்றுரைத்து அவ்வாறே செய்தும், மழிசைப் பிரானும், குருகைப்பிரானும் அருளிய பிரபந்தங்களைச் சேவித்தும், ஒட்டிலொட்டாத புளியம் பழம்போலும், சேற்றிலொட்டாத பிள்ளைப் பூச்சி போலும், தாமரையிலையிலொட்டாத நீர்த்திவலைபோலும், இராஜ்ய காரியங்களில் பற்றியும் பற்றாதவராயிருந்து வந்தார். பிறகு திருமலைக்குச் சென்று ஆங்குள்ள திருவேங்கடத்தெந்தையை அடிதொழுது, ''ஊனேறு செல்வத்துடற் பிறவியான் வேண்டேன்............ கோனேரி வாழுங் குருகாய்ப் பிறப்பேனே ", " திரு வேங்கடச்சுனையில்... மீனாய்ப் பிறக்கும் விதியுடையேனாவேனே ", "... எம் பெருமான்
 பொன்மலைமேல் ஏதேனு மாவேனே ", "'.... படியாய்க் கிடந்துன் பவள வாய் காண்பேனே'' என்று விண்ணப்பித்து அப்பெருமானுடைய அனுக்கிரகம் பெற்று அங்கிருந்து வட நாட்டுத் திவ்யதேசங்களுக்குப் போய் அங்கங்குள்ள பகவத் மூர்த்தங்களைச் சேவித்து, நேரே தமது இராஜ்யத்தை யடைந்தார்.

 

இராஜ்ய காரியங்களில் நிராசை கொண்டு, பகவத் காலக்ஷேபத்திலீடுபட்டு ஸ்ரீரங்கமகாத்மியத்தைக் கேட்டருளி அத்யந்தப் பிரீதி பரவசராய், ''அணியாங்கன் திரு முற்றத்தடியார்' களான ஸ்ரீவைஷ்ணவசாது கோஷ்டியின் இன்பமிகு பெருங்குழுவு கண்டியானும் இசைந்துடனே யென்றுகொலோ இருக்கும் நாளே " என்று பாசுரமிட்டுக் கொண்டிருக்கையில் ஸ்ரீ ரங்கநாதன் இவர் கருத்தை முற்றுவிக்க அனந்தகருட விஷ்வக் சேனாதிநித்திய சூரிகளைக் கடாக்ஷித்து " நீங்கள் மனித வுருவுடன் சென்று ஆழ்வாருக்குச் சேவைதந்து வாருங்களென்றனன்; அவர்களும் அந்தணராய் ஸ்ரீவைஷ்ணவ ரூபங்கொண்வரிருக்கும் இடத்தே வந்து சேவை தந்தனர்; ஆழ்வாரும் அவர்களைக் கண்டதும் எதிர் சென்று பசரித்து அழைத்து வந்து, அவர்களுடைய திருவடிகளில் தமது முடிசோ வீழ்ந்து, தண்டன் சமர்ப்பித்து அவர்களால் மங்களாசாஸனம் செய்யப்பெற்று அவர்களைக் கூடத்திற் கெழுந்தருளப்பண்ணி, ஆசனத்திருத்தி ஸ்வரூபானு ரூபமாக ஆராதித்து, சத்கால க்ஷேபங்களைக் கேட்டு ஆனந்தங் கொண்டார். அப்போது "ஸ்ரீரங்கயாத்திரை செய்வதும், அதில் இச்சை கொள்வதுமே தீரா நரகைத் தீர்த்து வைகுந்த வாழ்வைத் தரு மென்னில் அந்த ஸ்தலத்தில் வாசஞ் செய்வோர்களுடைய பிராப்தியை என்னென்று விவரிக்கலாகும்" எனவரும் வாசகத்தைக்கேட்டு உடனே ஆழ்வார் ஸ்ரீரங்கயாத்திரையில் மனதைச் செலுத்தி கோஷ்டிகளுக்குத் தெண்டனிட்டு "அடியேன் ஸ்ரீரங்கத்திற்கு இப்போதே செல்ல வேண்டும்; விடை கொடுத்தருள்வீர்'' என்று பிரார்த்தித்தார். அதற்கு அவர்கள் ''அறுபதினாயிர வருஷம் பெருமாளை யாராதித்து வந்த வொருவனடைகிற பலனைப் பார்க்கிலும் அவனடியார்களி லொருவரை யொரு வேளையிலாராதித் தவனடையும் பலன் பெருத்த " தென்றனர். அங்ஙனமேயாகுக! பிரயாணத்தை மறுநாள் வைத்துக் கொள்வோம் என்றனர் ஆழ்வார். மறுநாளும் இவர் பயணம் தடைபடும்படி பகவத்சங்கல்பத்தால் இவர் எதிர்பாராத அடியவர் பெருங் கூட்டமொன்று இவரிடம் வர, அவர்களை யுபசரிப்பதில் இவர் கவனஞ் செலுத்தலானார். இவ்வாறே இவருடைய பயணம் பல நாள் நிறைவேறாம லிருந்தது. ஆயினும் அரசன் ஸ்ரீரங்கயாத்திரை செய்யப் போகிறா ரென்கிற கோஷம் மாத்திரம் ஊரெங்கும் பரவியிருந்தது.
 

இப்படி யிவர் யாத்திராபேட்சையுடன் பாகவத ததியாராதனையிலீடுபட்டுக் கொண்டும், இதிகாசசிரேஷ்டமான ஸ்ரீ ராமாயண காலக்ஷேபத்தை நடத்திக் கொண்டும் வாலானார். ஒருநாள், காலக்ஷேபத்தில், " பெருமாள், வைகுந்த வாசித்தியை என் ரங்கயாந்தில் ஸ்ரீரங்கத்த இளைய பெருமாளைப் பிராட்டிக்குக் காவலாக வைத்து விட்டுத் தாமொருவராகவே கரதூஷண திரிசிராதி பதினாலாயிரந் துஷ்டராக்ஷஸாக ளெதிரில்யுத்தத்திற்குப் புறப்பட்டாரே; தனியே சென்ற பெருமாளுக்கு அத்தீயோரால் என்ன கெடுதி சேரிடுமோ என்று ஸ்ரீ வால்மீகி பகவான் கலங்குகிறார் என்னும் விஷயத்தைப் புராணிகர் உபந்யாசிக்கக் கேட்டதும் வேறெதிலும் சிந்தை செலுத்தாமல் காலக்ஷேபத்தையே சிரத்தையாய்க் கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீ குலசேகரர் " அப்படியா? பெருமாளுக்குத் துணையாவார் ஒருவருமிலரா? நல்லது நாமே துணையாவோம்'' என்று சொல்லி உடனே யுத்த கோலத்துடன் புறப்பட்டுச் செல்லுவாராயினர். இதைக் கண்ட அமைச்சர் முதலானார் நமது அரசருக்கு சித்தப் பிரமை ஏற்பட்டு விட்டது போலும்! எப்போதோ நடந்த யுத்தத்திற்கு இவர் இப்போது துணை செய்யப் போகின்றாராம்! இதென்ன பைத்தியம்?'' என்று பேசிக்கொண்டு,'' நாமிதைத் தடுக்கும் உபாயம் யாது? " என்று சிந்தித்து, சிலரை யேவி, இவரெதிரில் வரவிட்டு'' பெருமான் ஒருவராகவே நின்று அந்த ராக்ஷஸப் படையை நிர்மூலமாக்கித் திரும்பிவிட்டார்'' என்று இவருக்குத் தெரிவிக்கச் செய்தனர். அவர்களும் அவ்வண்ணமே செய்ய, ஆழ்வார் சந்துஷ்டராய் ராஜஸ் தானத்துக் கெழுந்தருளினார்.

 

மற்றொரு நாள், இவருக்குக் காலக்ஷேபம் சாதித்து வரும் புராணிகர் ஏதோ அசந்தர்ப்பத்தினால் தமது புத்திரரை காலக்ஷேபஞ் சாதிக்க இவரிடம் அனுப்பினர் அப்புத்திரர் இவருடைய திருவுள்ள நெகிழ்ச்சி யிருக்கும் படியை யறியாதவராய், கொஞ்சம் படபடப்புடன் "ஆ! ஆ!! அந்தக் கொடிய இராவணன், மாரீசனால் பெருமாளையும் இளைய பெருமாளையும் அப்புறப்படுத்தி, பிராட்டியை அபகரித்துக் கொண்டு போயினானே! இதென்ன அநியாயம் " என்று வால்மீகி பகவான் மனவேதனை யடைந்தார் " என்று உபந்யசித்தார். இவ்வசனங்களைச் செவியேற்ற ஆழ்வார் " அந்த வஞ்சகனான இராவணன் பிராட்டியைக் கவர்ந்து சென்றானா? நான் இந்தக்ஷணமே இலங்கைக் கேகி, இராவணனுடைய தலைகளைத் துணித்துப் பிராட்டியை மீட்டுக் கொண்டு வந்து, முன்னிருந்த இடத்தில் சேர்ப்பிக்கிறேன் " என்றுசொல்லி அந்த நிமிஷமே தமது ஆசனத்தினின்றும் எழுந்து, உருவிய வாளுங்கையுமாய் ஓர் புரவியின் மீது ஆரோகணித்துக் கொண்டு, சேனைகளைவிரைவாகத் தம்மைப் பின்தொடர ஆக்யாபித்து, இலங்காபுரியை நோக்கி அதிவேகமாய்ச் சென்று சமுத்திரத்திலுந் துணிந்து இறங்கி விட்டார்.

 

இவரது அபரிமிதமான பக்தியின் மேன்மையைக் கண்டு பகவான் இவருக்கும் இவர் சேனைகளுக்கும் சமுத்திர ஜலத்தை முழந்தாள்ளவு படுத்திதான் சீதா லக்ஷ்மண சமேதராய், ஸ்ரீ விபீஷ்ணாழ்வான் மகாராஜா தொடக்கமான சைனியங்களுடன் புஷ்பக விமானத்தில் ஏறியருளி யெதிரே வந்துசேவை சாதித்து "ஆழ்வீர்! நாமந்த இராவணனை அவன் குலத்தோடு மழித்து வெற்றி கொண்டு வந்திருக்கிறோம். நீர் கொண்ட கவலையை ஒழித்துவிடும்'' என்றனன். ஆழ்வாரும் அவர்களனைவரையும் தமது திருமாளிகைக்கு அழைத்துக் கொண்டுபோய் மூன்று நாள் பரியந்தம் வைத்திருந்து ஆராதித்து வந்தனர். பெருமாள்'' ஆழ்வாரே! நாம் இன்னமும் இங்கு தாமதித்துக் கொண்டிருந்தால், பரதாழ்வான் கதியாதாமோ? விடைதர வேண்டும்'' என்று விடைபெற்றுக் கொண்டு, அயோத்தியை நோக்கிச் செல்பவர் போலபிநயித்து அந்தர்த்தான மாயினர்.

 

இப்பிரிவாற்றாமை ஸ்ரீ குலசேகரரை மூர்ச்சையு எழுத்திவிட்டது. முதன் மந்திரி தக்க உபசாரத்தால் அம்மூர்ச்சிப்பி னின்றும் இவரைத் தெளிவிக்க, இவருந் தெளிந் தெழுந்து வேதோபப்ராம்ஹண சாரமாய் மணி மந்திர அவிழ்தங்களை விவரிக்கும் ஸ்ரீ முகுந்தமாலை என்னும் ஸ்ரீ சூக்தியைப்பாடியருளி அன்று தொட்டு பிரபஞ்ச வாழ்வை வெறுத்து, பகவத் விஷயத்தில் ஈடுபட்டு, சந்ரவர்த்தி திருமகனாரையே திருவாராதனமாக எழுந்தருஎப் பண்ணிக் கொண்டு ஸ்ரீமத்ராமாயண காலக்ஷேபத்தைப் பூர்த்தி செய்து, ஸ்ரீராம நவமியில் பெருமாளை யுத்ஸவங் கண்டருளப் பண்ணினார்.

 

அமைச்சர்கள் "எது ஸ்ரீ வைஷ்ண சகவாசத்தால் நமது அரசருக்கு இந்தப் பைத்தியம் பெரிதாய்விட்டது. இந்த மாற்றவேண்டும்'' என்றானோசித்துப் பெருமாளுடைய பெட்டிய லிருந்த தோர் நவரத்ன சோபிதமானஹாரத்தை யெடுத்து மறைத்து வைத்து, இவருக் கந்தரங்கவுத் தேசியரான ஸ்ரீ வைஷ்ணவர்களே அவ்வாபரணத்தை பதரித்தனர் என்று இவருக்கறிவித்தனர். இவரதை யங்க்கரியாது, உழையர் மூலமாக விஷமுடைய சில சர்ப்பங்களைப் பிடித்து, ஒரு பெருங்குடத்திலடைத்துக் கொண்டு வரச்செய்து, ஸ்ரீ வைஷ்ணவ நிந்தை கூறுவோரைக் கூப்பிட்டு நீங்கள் பேசுவது உண்மையானால் இக்குடத்திற்சையிட்டுப் பிரமாண பூர்வமாகச் சொல்லுங்கள். அப்போதுங்கள் பேச்சை நம்புவேன்' என்றார். ஒருவரும் அதற்கு உடன்படவில்லை. பிறகு ஆழ்வார் தாமே அக்குடத்தில் தமது கையை விட்டு அதன்கணுள்ள சர்ப்பங்களின் தலை மீதறைந்து, " களவு போன ஹாரத்தை ஸ்ரீ வைஷ்ணவர்க ளெடுக்கவில்லை'' என்று சபதஞ் செய்தார். அச்சமயம் அந்த சர்ப்பங்களி லொன்று ஆழ்வாருடைய புஜவழியாக மேலேறிப்படம் விரித்து, அபாது திருமுடிமேற் குடையாகக் கவிந்து நின்றது. மற்றொன்று பழி கூறினவர்களைச் சீறித் துறத்திற்று. அவர்கள் பாந்து ஆபரணத்தைக் கொண்டு வந்து ஆழ்வார் முன் சமர்ப்பித்தனர்.

பின்னொருநாள் ஆழ்வார் பவத் ஸ்வரூப ரூபகுணாதிசயங்களில் ஈடுபட்டுத் தம்மை மறந்திருக்க, ஓடி வந்து அவரை நோக்கித் 'தேவரீருடைய திருக்குமாரன் குளிக்கப்போய், குளத்தில் மூழ்கிவிட்டனனே" என்று கூக்குரலிட, இவர் புத்திரன் என்னைக்கைவிட்டாலென்ன? ஒன்றும் கஷ்டமாகவில்லை, பகவான் கைவிடலன்றோ நமக்சென்று கொழியாத தொல்லை "எனக்கூறிப் பிறகு கண்விழித்துப் பார்க்க, தமது அரும்பெறற் தமரன்தம் எதிரே உலாவக்கண்டு, உலாபோகந்தை வெறுத்து, இந்த இருள்தருமா தாகத்தில் தன்மை கொடிது! கொடிது!! மகாதொடிது!!!
 "பொய்ந்தின்ற ஞானமும் பொல்லா வொழுக்கால் அழுக்குடம்பும், இந்கின்ற நீரமை யினியா மராதை யே கல்ல தென்று தம்முன் நிச்சயித்து, உடனே தமது புத்திரனுக்கு முடிசூட்டிவிட்டு, திருவரங்கம், திருக்கண்ணபுரம், தில்லைத் திருச்சித்ரகூடம் இந்த திவ்ய க்ஷேத்திரங்களுக்குச் சென்று ஆங்காங்குள்ள எம்பெருமான்களைச் சேவித்து திருவருள் பெற்ற முடிவில் வீரநாராயணபுரம் அடைந்து மன்னாரைத் திருவடி தொழுது, தமது அறுபத்தேழாவது திருநட்சத்திரத்தில் திருநாட்டுக் செழுந்தருளி "அந்தமில்பேரின் பத்தடியாரோடு" வாழ்ந்திருந்து நிலவுக்கத்தை யுய்வித் தருளினார்.

 

இவ்வாழ்வாருடைய திருநாமத்தை நாம் உச்சரித்திருப்பதினாலேயே நன்மை யடையலாம் என்பதைப் பின்வரும் பாடலால் நன்குணரலாம்.


 "இன்னமுதம் ஊட்டு கேன் இங்கேவா பைங்கிளியே
 தென்னாங்கம் பாடவல்ல தீர்ப்பெருமான் - பொன்னஞ்
 சிலைசேர் நுதலியர் வேள் சேரலர்கோன் எங்கள்
 குலசே கரனென்றே கூறு''


சுபம்! சுபம்!!

 

ம. இராஜகோபாலன்,

தமிழபிமானி

 

ஆனந்த போதினி – 1928 ௵ -

ஜுலை, ஆகஸ்ட், அக்டோபர் ௴

 



 

 

No comments:

Post a Comment