Tuesday, September 8, 2020

 

ஜேம்ஸ் ஆலனின் அருள் மொழிகள்

 

1. எதனை எதனை எந்தெந்த நேரத்திற் செய்ய வேண்டுமோ அதனை அதனை அந்தந்தந்த நேரத்தில் உன் முழு மனதோடும் செய்து முடி.


2. எதிலும் உன் மனதை அரைகுறையாகச் செலுத்தாதே.


3. எதனையும் அரை குறையாகச் செய்யாதே.


4. எதனைச் செய்யினும் திருத்தமாகவும் பூர்த்தியாகவும் செய்.


5. மனிதனது ஏகாக்ரசித்தமே அவனடையும் உன்னத பதவிகளுக்கெல்லாம் அடிப்படையாகும்.


6. உண்ணல், உறங்கல், படித்தல், விளையாடல் முதலிய சகல செயல்களையும் கிரமமாகவும் ஒழுங்காகவும் செய்து முடி.


7. அதிகம் கஷ்டப்பட்டு வேலை செய்தல் அநேகம் பாஷைகளைக் கற்பதோ டொக்கும்.


8. இவ்வுலகில் மனிதர் அநுபவிக்கும் இன்பங்களே சுவர்க்க மென்பதும், துன்பங்கனே நரக மென்பதுமே எனது துணிவு,


9. எக்காலத்தும் ஒழுக்கத்தை ஓர் ஆபரணமாகக் கொண்டிரு.


10. புலாலுண்ணல், மது வுண்ண ல், அந்நிய ஸ் கிரீகளுடன் உலாவச் செல்லல் முதலிய கெட்ட பழக்கங்களை ஒருபோதும் கைக்கொள்ளாதே.


11. உன் வாக்கினின்று வரும் ஒவ்வொரு வார்த்தையும் பொருள் நிறைந்ததாயும் இன்பம் பயப்பதாயும் இருக்கட்டும்,


12. கீழ் நாட்டாரே மெய்ஞானக் கருவூலம்.

 

13. ஒழுக்கம் ஒன்றே மெய்யுணர்வுக்கும் இதர உயர் பதவிகட்கும்மார்க்கம்.


14. எஞ்ஞான்றும் ஒழுக்கத்தை உன் உயிரினும் அதிகமாய் ஓம்பி வருவாயாக.


15. காலை மூன்று மணிக்கு எழுந்திருந்து கடவுளைத் தியானம் செய்,


16. குன்றுகளின் மீது தனித்துச்சென்று ஆன்ம தத்துவங்களைப் பற்றிச்சிந்தனை செய்,


17. மனிதனது புற நிலைமைகளெல்லாம் அவனது அக நிலைமைகளிலிருந்தே வருகின்றன. புற நிலைமைகளைத் திருத்த வேண்டுமேல் முதலில் அக நிலைமைகளைத் திருத்த வேண்டும்,


18. உன் சரீர ஆரோக்கியம் குன்றிய காலத்தும் கடவுள் தியானத்தையும், பரோபகார வேலையையும் நிறுத்தாதே. குறைக்காதே.


19. வேலை செய்வதற்காகவே யான் உடலோடு கூடிப் பிறந்தேன். வேலை செய்வதற்காகவே யான் உடலோடு கூடி வாழ்கின்றேன். என் வேலை முடிந்தவுடனே இவ்வுடலை யான் விட்டு விடுவேன். நீங்கள் என் வேலையைத் தடுக்கவேண்டாம்.

 

A. சுருளியாண்டி கௌட.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - செப்டம்பர் ௴

 



 

 

No comments:

Post a Comment