Monday, September 7, 2020

 

வறுமைச் சித்திரம்

(K. V. சிவசுப்பிரமணியன். B. A.,)

பாரத நாடு பெற்றெடுத்த பழந்தமிழ் வள்ளல்களில் தலையாய தண்ணளியும் கொடைத்திறமும் உடையோன் குமணன். பொன்னும், புவியும், அணியும், ஆடையும், தேரும், களிறும் உணவும் பிறவும் நல்கி மாநிலஞ் சுருங்க நீடிசை நிறீஇய கடைவள்ளல்கள் இவனுடனேயே எழுவராவர். அவர்கள் பாற்சென்று பாடி பரிசில்கள் பெற்ற புலவர் பலர். அங்ஙனம் பரிசில் வேண்டி குமணனிடம் சென்றவர்களுள் பெருஞ் சித்திரனார் என்பாரும் ஒருவர். நாமகளுறையும் புலவர்களிடம் பூமகள் பொருந்துவது பெரும்பாலும் அருமையன்றோ? எனவே, நமது பெருஞ் சித்திரனாரூம் வறுமைப்பிணிக்கோர் நிலைக்களனாய் விளங்கினர் என்பது கூறாமலே அமையும்.

புலவர் வீட்டில் போதிய உணவின்றி தானும், மனைவியும் குழந்தைகளும் பட்டினியுடன் படுத்துறங்கிய நாட்கள் பல. அவற்றுள் ஒருநாள்
தனது பச்சிளங் குழவியின் பசிக்கு பாலூட்டுவதற்குக்கூட பயனற்ற மார்பினை யுடையனாய் தனது மனைவி மருகுநின்று மனம் மாழ்குவதைக் கண்டார் பெரும்புலவர். உடனே அவாது மனம் பெருஞ் சிந்தனையிலாழ்ந்தது. சிறிது நேரத்திற் கெல்லாம் அவரது மனம் குன்றாது கொடுக்கும் குமண வள்ளலை நாடியது. குருடன் கண் பார்வை பெற்றாங்கு புலவரது உவகை அளவிறந்தது. உடனே குமணனது நாட்டை சோக்கிப் புறப்பட்டார் பெருஞ் சித்திரனார். காடும் மலையும் ஆறும் வரும் கடந்து முதிர மலைச் சாரலையடைந்து அங்கு மிளிரும் இயற்கையன்னையின் எழில் மிகு திருவிளையடால்களைக் கண்டு மகிழ்ந்து குமண வள்ளலின் கோயில் வாயிலைக் குறுகினார். அவ் வள்ளலின் அரண்மனையின் கண் அடிவைத்த மாத்திரத்தே உடன் வந்த வறுமைப் பேய் ஓடி விட்டதாக எண்ணினார். வாயிற்காவலர் வழி காட்ட வான்புகழ் வன்யல் குமண மன்னனது அவைக்களத்தை யடைந்தார் புலவர் பெருந்தகை. கவி மன்னனைக் கண்ட புவி மன்னனும் வருகவென்
றழைத்து இருக்கை நல்கினன். புலவர் அரசர் பெருமானை வணங்கி, "குமண! வானுற வோங்கி வளம்பெற வளர்ந்த மூங்கிலின் உச்சிக்கண்ணே இருந்த ஆண் குரங்கானது, அருகிலிருக்கும் பலாமரத்தில் தேனினுமினி சுவையினையுடைய பலாப்பழத்தைக் கண்டு அதை யுண்ணும் விருப்பினால் பேடையாகிய மந்தியைச் சையாற் குறி செய்தழைக்கும் வளனமைந்த முதிரமலைத் தலைவா! நினது வேல் பகைவர் போர்க்களத்தின் கண்வென்று புகழ் பெறுவதாக. கற்களை யுருட்டி போடும் கானாறுகளையும் முன்னூறு
ஊர்களையும் உடைய பரம்புசாட்டு வேந்தனாகிய பாரியும் சொல்லி மலையையாண்ட வலிய வில்லை யுடைய ஒரியும் மாரிபோல் வரையாது வழங்கும் வள்ளன்மையுடைய காரியும், குதிரைமலைத் தலைவனாகிய எழிளிபதியமானும், விண்ணளாவி மேகங்களாற் சூழப்பட்ட பெரிய மலை நாடனாகிய பேசனும், புலவர் பலரின் புகழுரை கொண்ட வள்ளல் ஆயும் தன்னை நினைந்து வருவாரது வறுமையை வேரோடு நீக்கத் தளராது கொடுக்கும் நள்ளியும் ஆகிய வள்ளல்கள் இறந்து பட்டனர். அது கண்டு புலவர்கள் ஏங்கிய காலை, இரந்தோரது செல்லல் களைய இம் மல்லன்மா ஞாலத்து நீ நிலை பெற்றனை. அதனால் யான் நின்பால் பரிசில் பெற நினைத்து வந்தேன். எனது மனைவியோ வயது முதிர்ந்தவள். உண வின்மையால் தனது கால்கள் பலக்குன்றி கையில் கன்று சோலொன்று கொண்டு தள்ளாடித் தள்ளாடி நடக்கின்றனள். வெள்ளிக் கம்பி போலும் வெளிறிய மயிரினள். தனது சாங்காலத்தை எதிர்நோக்கி நிற்கும் பெற்றியள். மாசடைந்த கண் பார்வையினள். அவளும் நானும் ஒத்த அன்போடு இல்லறம் நடத்தி வந்த காலை எமக்குப் பிறந்த மக்கள் பல. பச்சிளங் குழவியானது பசியின் மிகுதியால் பாலுண்ணும் வேட்கையோடு பிசைந்து மெல்லும் உலர்ந்த மார்பினள். பசியின் கொடுமையால் குப்பையின் கண் முளைத்துள்ள கீரைகளின் இளந்தளிரைச் கொய்து அவற்றை அடுப்பி லிட்டு உப்பின்றி வேக வைத்துத்தின்று குழந்தைகளுக்கும் கொடுக்கும் அழுக்கோடு கூடிய கிழிந்த உடையினை யுடையவள். என்னிடத்து என்ளளவும் குறையாத அன்பினை யுடையவள். அவளும் எனது சுற்றமும் பசியினாலும் வறுமைப் பிணியாலும் வாடி வதங்குகின்றனர். அவர்களது செல்லல் களைவான் கருதி கின்பால் வந்தனன். கோடை வெயிலின் கொடுமையால் செடி கொடிகள் வாடி வதங்கிக் கரிந்து போம் நிலையில் இடி மின்னறுடன் இடையீடின்றிப் பெய்யும் மாரியின் மாண்பினை யுடையாய்! நின்பால் பரிசில் வேண்டி வந்த எனக்கு நீ முகங்கோணி உள்ளன்பிலாது கொடுப்பையாயின், அப் பரிசில் விலை மதித்தற்கரிய மதயானை யாயிருப்பினும் யான் கொள்ளேன். எமதிருவர் நெஞ்சமும், ஒக்கலு முவப்ப நீ மனமுவந்து கொடுப்பதாயின் அது குன்றிமணியினளவுள்ள பரிசிலாபிருப்பினும் பெருமகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளுவேன். மாசிலா வண்மையால் ஆசில் சீர்த்தி கொண்ட அண்ணலே! யாம் உவக்குமாறு அருளுவாயாக,' என்று கூறி முடித்தார்.

இங்ஙனம் வறுமையின் தன்மையை விளக்கிக் கூறிய புலவரது சொற்சித்திரம் புறானூற்றின் 158, 159-வது பாடல்களில் பொதிந்து கிடக்கின்றன. இப் பாடல்களில் கூறப்பட்டிருக்கும் இயற்கை வருணனையும், கடையெழு வள்ளல்களின் கொடைத்திறமும், வறுமைச்சித்திரமும், பழந்தமிழ்ப் புலவரது பெருமிதமும் மிக அழகாகப் பொருந்தி படிப்போருள்ளத்தில் நன்கு பதியும் தன்மை வாய்ந்தவை. வள்ளல்கள் எழுவரின் பெருமையைக் கூறும் முதற் பாடலை நாம் படிக்கும் போது,

“வானம் வாய்த்த வளமலைக் காவஅர்

கான மஞ்ஞைக்குச் கலிங் நக்கிய

வருந்திற லணங்கி னாவியர் பெருமகன்

பெருங்கடனாடன் பேகனும்..............

எழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோ

னெழுவர் பூண்ட லீகைச் செந்றகம்

விரிகடல் வேலி வியலாம் விளக்க

வொருதான் முக்கிய வுரனுடை கோன்றான்"

 

என்ற சிற பாணாற்றுப்படை யடிகள் (அடி $4 முதல் 122 வரை) நமது நினைவிற்கு
வருகின்றன. அவ் வடிகளிலும் இஃதே போன்று வள்ளல்களின் வள்ளன்மை வனப்புற விளக்கப்பட்டிருக்கின்றது. தானும் தன் மனைவியும் குழந்தைகளும் உணவின்மையால் வாடி யலர்ந்து உயிரை யிழக்கும் நிலையாகிய அவ்வளவு வறுமைபிலும் பெருஞ்சித்திரனார் அரசன் மனங்கோணி உள்ளன்பின்றித் தரும் பரிசிலை ஏற்க விரும்பினாரல்லர். என்னே புலவர்களின் பெருமிதம்!

"மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து

போக்கக் குழையும் விருந்து'

என்ற பொய்யா மொழிக்கு இலக்காக, உள்ளன்போடு உள்ளதைக் கொடுப்பின் அதுவே ஈகைத் திகமென்பதையும், மனங்கோணிக் கொடுப்பது மத யானையாயினும் அது வேண்டற் பாற்றன் றென்பதையும் சுருங்கக் கூறி விளங்க வைத்திருக்கின்றார் பெருஞ்சித்திரனார். வறுமைப் பிணி வாட்டிய காலத்தும் புலவரது இல்லாள் தன் கணவர் மாட்டு கொண்டிருந்த அன்பு தினைத்துணையும் குறைந்தாளல்லல். அவ்வம்மையார்,

''தற்காத்து தற்கொண்டாற் டேணித்தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்”

 

என்ற குறளின் இலக்கணத்திர்கு உதாரணமாய் விளங்கினாள் என்பதை புலவர் தமது பாடலில் குறிப்பாகக் கூறியுள்ளார். பெருஞ்சித்திரனாரின் சொற்சித்திரத்தின் அழகு தான் என்னே?

ஆனந்த போதினி – 1942 ௵ - ஜனவரி ௴

 



No comments:

Post a Comment