Monday, September 7, 2020

வீணைக் கொடியோன் வீரத் தம்பியர்

 

இலங்கை வேந்தனது தம்பியராய்த் திகழ்ந்தவர் இருவர் என்பதும், அவர்களுள், முன்னவன் கும்பகர்ணன், பின்னவன் விபீடணன் என்பதும், இராம காதை உணர்ந்தோர் அறிவர். வீணைக் கொடியோன் வீரத் தம்பியர்களாய் இருவரது வரலாறும் அவர்தம் உள்ளத்தின் உயர்வும் கற்றோர் உளத்திற்குக் கழிபேருவகை தருவதாகும்.

 

இராவணன் உடன்பிறந்த கும்பகர்ணனது பெயர், இன்னும் இவ்வுலகில் பரிகாசப் பெயராக வழங்கிவருகின்றது. நித்யத்வம் கேட்கப் போய் நித்ரத்வம் கேட்டு அதன் பயனாக நெடிய உரக்கமொன்றையே தன் வாழ்க்கையின் வளனாகக் கொண்டு, இலங்கைமாநகரிலே வழ்ந்துவந்த தன்மையே இவனுக்கு இவ்வுலகில் இன்னும் நித்யத்யம் நல்கி யிருக்கின்றது. ஆனால் கம்பர்தங் கவின் தையுணர்ந்த பெரும் புலவர் பலரும் இவனடைந்திருக்கும் இந்த நித்யத்வத்தைவிட உயர்ந்த பெருமையையே நம் வீரனுக்கு நல்குவர் என்பது நாமறியாத தொன்றன்று. "புனலையும், கனலையும், பிழிந்து சாறெடுக்கும்" பெற்றி வாய்ந்தவன் நம் கும்பகர்ணன் என்பதைக் கவிஞர் அழகாந் எடுத்துரைத்து மகிழ்கின்றார். இன்னும் இவனது வலியை,


"ஊனுயர்ந்த உறத்தினான்
மேனிமிர்ந்த மிடுக்கினான்
தானுயர்ந்த தவத்தினான்
வானுயர்ந்த வரத்தினான்


என்று கவியரசர் போற்றி யுரைக்கின்றார். இவ்வீரனது வீர உருவைச் சித்திரிக்க விரும்பிய கவியரசர்,


"விண்ணினை இடறுமோலி விசும்பினை நிறைக்கும் மேனி
கண்ணெனு மவையிரண்டும் கடல்களிற் பெரியவாகும்,
எண்ணினும் பெரியனான் இலங்கையர் வேந்தன் பின்னோன்
மண்ணினை அளக்க நீண்டமாலென வளர்ந்து ந்து நின்றான் ''


என்று நயம்பட உரைக்கின்றார். "மேருமால் வரை என்ன விளங்கிய இராவ
ணன் நின்ற நிலை கும்பகர்ணன் இருந்த நிலையை யொக்கும்" என்று கூறுவர் கம்பர்.

"கல்லன்றோ நீராடுங் காலத்து கால்தேய்க்க
மல்லொன்று தோளாய் வடமேரு”


என்று அழகொழுக எழுதி யமைக்கின்றார். அக்கவிதையில் பல விடங்களிலும் இராவணனை வடமேருவுக்கு உவமையாக வைக்கும் கம்பரே அவ்வடமேருவை கும்பகர்ணன் நீராடுங் காலத்து கால் தேய்க்க வைக்கப்பெற்ற கல்லுக்கு உவமை கூறுகின்றார். இம்மாற்றத்தால் இவன் பெரிய உரு அமைந்த பெருமகன் என்பது அறிஞர் ஆராய்ந் தறியத் தக்கதாய் அமைந்துள்ளது.

 

கவியரசர் கம்பர் இத்தகைய வீரனை நமக்கு நித்திரை நிலையில் தான் முதல் முதல் காட்டுகின்றார். செவிக்குத் தேனென இராகவன் புகழினைத்திருத்தும் கவிக்கு நாயகனான அனுமான் சீதையைத் தேடி இலங்கை வந்தவன், கும்பகர்ணனைக் “கயக்கமில் துயிற்சி நிலையில்” தான் காண்கின்றான். வானவர் மகளிர், கால் வருட , உறக்கமெய்திய நிலையில் அவன்றன் நாசியில் எழுந்த சுவாசம், உலகெலாம் துடைக்கும் மாருதம் "ஊழியின் வாவுபார்த்துழல்வதொத்தது.'' இவன் விடுகின்ற மூச்சு வீதியோடு செல்லும் வலியுடை வாயு புத்திரனையும் திடீரென தடுத்து நிறுத்தி அவன்றன் மூக்கு வரையிலும் இழுத்துச் செல்லும் வலியுடையதாயிருந்தும் அடல்மிகுந்த அனுமன் கூசிக்
குதித்து விதிர்த்துத் தப்பிக்கொள்கின்ற திறமும் கம்பர் தங் கவி நலத்தால் அமைந்த பொருள்களாகும்.

 

இனி, இவ்வீரன் இராவணனது மந்திரக்கிழவர் அமைந்த அவையை அழகு செய்கின்றான். ஆழ்ந்த உறக்கத்திற்குப் பின் அறிவுதெழிந்தெழுந்த இக்குன்றாத வலியுடைய கும்பகர்ணன் அரக்கர்கோனுக்கு அறிவூட்ட விரைகின் ஏறான். அறத்தின் வழிநின்ற ஆரியர்கே கானது மனைவியை வஞ்சனையால் கவர்ந்து அசோக வனிதையில் சிறைவைத்த அரக்கர்கோனது அடாத செயல்,


"ஒலியமைந்த நகர் தீயுண வளைந்தாய்
கோவியல் அழிந்ததென வேறொரு குலத்தோன்
தேவியை நயந்து சிறைவைத்த செயல் நன்றோ
பாவியர் உறும்பழி இதிற்பழியுமுண்டோ"


என்று கடிந்து கூறும் கும்பகர்ணனது குறைவிலா அறநெறி போற்றுதற்குரியதேயாகும். இராவணன் இயற்றிய இவ்வொரு செயலால் அரக்கர்தம் புகழே அழிந்து தேய்வதாயிற்று என்று வீரன் வலியுறுத்துகின்றான்.


"என்றொருவன் இல்லுறை தவத்தியை இரங்காய்
வன்றொழிலினாய் மறை துறந்து சிறை வைத்தாய்
அன்றொழிவதாயினும் அரக்கர் புகழைய
புன்றொழிலினாலிசை பொறுத்தல் புலமைத்தே"


என்று குரைகழல் அணிந்த கும்பகர்ணன் கொதித்துக் கூறும் மொழிகள் நலஞ்சான்றதாகும். அறநெறி தவறா அருந்தகையான கும்பகர்ணன் இராவணன் இயற்றிய இழிவுடைச் செயலை அறவே கடிந்துரைத்த காலத்தும் சிறை செய்த சீதையை விடு, து அதனால் ஆற்றலற்றவர் அரக்கர் என்னும் பெரும்பழி தன்னையும் தன்னினத்தையும் சுற்றும் என்றும் மானத்தை நினைந்து சீதையை விட்டு தன் பகைவனிடம் அடி பணிவதைவிட போரேற்று போரில் மாண்டு மடிவதே புகழெனக் கருதுகின்றான்.


"சிட்டர் செயல் செய்திலை குலச்சிறுமை செய்தாய்
மட்டவிர்மலர் குழலினாளையினி மன்னா
 விட்டிது மேலினியமாதுமவர் வெல்லப்
பட்டிதுமேல் அதுவும் நன்று பழியன்றால்''


என்று அரக்கர் வீரன் பெருமிதத்தோடு கூறும் செஞ்சொற்கள் அவனுடைய புகழ் குன்றாத பெரிய உள்ளத்தை விளக்குவதாகும்.

 

இத்தகைய வீரனது இளைய தம்பியாய் விபீடணன் இலங்குகின் முன். வேந்தர் வேதியர் மேலுளோர் கீழுளோர் விரும்பப்போந்த புண்ணியனான விபீடணனை முதன் முதல் கண்ட அனுமனும் "குற்றமில்லதோர் குணமுளனிவனெனக் கொண்டு" போற்றும் பான்மையொன்றே அவன்றன் புகழை இனிது விளக்கும்.


பொய்யும் களவும் பாதகமும் பொல்லாவொழுக்கும் அவை கடிந்து
மெய்யுந் தயாவும் தருமமுடன் விளங்கும் பொறையு மிவைபூண்டு
செய்யுஞ் செயல்களவையெல்லாம் சிட்டர் செய்யுஞ் செயலாகி
ஐயன் புகழ் வீடணன் மலைறைகளறைந்த அறத்தின் வழிநின்றான்

 

என்னும் பெற்றியொன்றே அவன் அறநெறிதவறா அருந்தகை என்பதை வலியுறுத்தல் போதிய சான்றாகும்.

 

இராவணன் அவைக்களத்தே அங்கம் பெற்ற வீரன் அரக்கர்கோனுக்கு ஏற்ற இடந்தோறும் உற்ற நீதிகளை எடுத்தெடுத்துரைத்து அவனையிடித்து வந்தான். நீதியின் நெறி வழாது நின்ற வீடணன் தன் அண்ணல், தூதுவந்த அனுமனைக் கொல்ல எண்ணிய காலத்து, தூ துவனைக் கொல்லுதல் அரச தருமம் அன்று என்பதை அழகாக எடுத்துரைக்கின்றார்.


"அந்தணன் உலகமூன்றும் ஆதியின் அறத்தினாற்றல்
தந்தவன் அன்புக்கான்ற தவநெறியுணர்ந்து தக்கோய்
இந்திரன் கருமமாற்றும் இறைவனீயியம்பு தூது
வந்தெனென் என்ற பின்பும் கொல்தியோமறைகள் வல்லோய்"
         என்றும்,


"பூதலப்பரப்பின் அடைப் பொருட்டின் உட்புறத்துப் பொய்நீர்
வேதமுற்றியங்குவைப் பின் வேறு வேறிடத்து வேந்தர்
மாதரைக் கொலை செய்தார்கள் உளரென வரினும் வந்த
தூ தரைக் கொன்றுளார்கள் யாவரே தொல்லை நல்லோர்"       
      என்னும்

 

அறநெறியை அண்ணலுக்கெடுத்தோதி அவனை நெறி தவறா நீர்மையுடையவனாக்கி மகிழ்கின்றான். இதையுணர்ந்த அனுமனும்,


"மாதரைக் கோறலும் மறத்து நீங்கிய
ஆதரைக் தோறலும் அழிவு செய்யினும்
தூதரைக் கோறலும் தூயதன்றாமென
ஏ துவிற் சிறந்தென எடுத்துக் காட்டினான்''


என்று இராம வீரனிடத்து இவன்றன் புகழை எடுத்தியம்புவானாயினான். இன்னும் இலங்கைமாநகர் எரியினுக்கிரையாய் அழிந்ததற்காக ஏங்கி வருந்தும் இராவணனை நோக்கி,

"கோனகர் முழுவதும் நினது கொற்றமும்
சானகியெனும் பெயருலகின்றம்மனை
ஆனவன் கற்பினால் வெந்ததல்லதோர்
வானரஞ் சுட்ட தென்றுணர்தல் மாட்சியோ''


என்று சீதையின் நிறையின் திட்பத்தை எடுத்து விளக்கி,


“இசையுஞ் செய்கையும் உயர்குலத்தியற்கையும் எஞ்ச
வசையும் கீழ்மையும் மீக்கொளகிளையொடும் மடியாது
அசைவில் கற்பின் அவ்வணங் ங்கை விட்டருளிதி''


என்று அறிஞரில் மிக்கோனான வீடணன் கூறும் அறநெறி அழகுடையதாகவே அமைந்துள்ளது.

 

இவ்விடத்து வீணைக்கொடியோன் வீரத் தம்பியான கும்பகர்ணனையும், வீடணனையும் ஒப்பிட்டு நோக்கினால் ஒருவரில் ஒருவர் எத்துணை ஏற்றமும் தாழ்வும் உடையவர் என்பது காண்போம். இரு தம்பியரும் அண்ணலுக்கு அறநெறியெடுத்தோதுகின்றார்கள். வீரமே பெரிதென நினைந்த வீரன் அறநெறி உணர்ந்த பெருமகனாயினும் சீதையை விடுத்து அதனால் அரக்கர் குலத்திற்கே அழியாப் பழி பூணுவதை விட தன் ஆவியை விடுத்தேனும் அரக்கர்தம் புகழை நிலை நிறுத்த நினைக்கின்றான். அறநெறி நின்று அதன் வழியொழுகலை பெரும் புகழென நினைத்து வாழும் அறிஞர் பெருமகன் பகைவன்கால் பணிந்தேற்கும் பழியைவிட அறநெறி நிறுவ, தன் கடனாற்றுதலே தன்கருமமென நினைக்கின்றான். இருவர்தம் மன நிலையும் ஏற்றமுடையதேயாகும், எனினும் இவ்விருவரிலும் நன்றி ம மறவா நல்லரக்கனாய் விளங்கிய பெருமை கும்பகர்ணனுக்கே உரியதாகும். தருமமல் நெறியில் தலைப்படும் தமையனைத் திருத்த முயன்ற திலவன் தன் முயற்சி பயன்படாமை கண்டு மனமாழ்கி மயங்குகின்றான். ஆனால் வீரன் தன் தமையனைத் தனியே விடுத்து பகைவனின் பாதம் பணிதலை விட அவன் பொருட்டு அமர்புரிந்து ஆவி துறத்தலே மாண்புடையதென நினைக்கின்றான்.

"கருத்திலா இறைவன் தீமை கருதினால் அதனைக்காத்து
திருத்தலமாகில் நன்றே திருத்துதல் தீராதாயின்
பொருத்துறு பொருளுண்டாமோ பொருதொழிற் குரியாராகி
ஒருத்தரின் முன்னஞ்சாதல் உண்டவர் குரியதம்மா''


என்று கூறும் அறநெறி தலை நின்ற அண்ணல் தன் மொழிகள் நலஞ் சான்றதாகும்.

 

ஆனால் இவன்றன் தம்பியாய் எழுந்த வீடணன் மன நிலை வேறு விதமாக அமைந்துள்ளது. அஞ்சாத வலியுடைய அரக்கர்கோன் தம்பி சொன்ன நீதியின் நெறி நிற்க நினையாது, அந்நீதி ன்னவனையே,


"அஞ்சினையாதலின், அமர்க்கு மாள்லை,
தஞ்சென மனிதர் பால் வைத்த சார்பினை,
வஞ்சனை மனத்தினை, பிறப்பு மாற்றினை,
நஞ்சினையுடன் கொடு வாழ்தல் நன்றரோ''


என இகழ்ந்துரைத்து தன் முன்னின்று உடனே நீங்கும்படி ஏவவும், அதையே காரணமாகக் கொண்டு உடனே நாயகன் மலர்க்கழல் நணுக விரைகின்றான். தமையன் தீநெறி செய்கின்றான் என்பதையுணர்ந்தும் அவனைத் துறந்து பகைவரைச் சேர்ந்து வாழ இறையளவும் இரையாத நன்றி மறவா நல்லரக்கனது உள்ளத்தையும் தன் தமையன் தான் கூறிய அறநெறியோராது தன்னைக் கடிந்ததற்காக பகைவன் பக்கம் சென்று அவன்றன் அடிபணியும் அறிஞன் உள்ளத்தையும் ஒப்பிட்டு நோக்கினால் புகழ் பெருதற்குரியார் யாவர் என்பது காண்போம்.


"தருமமும் ஞானமும் தவமும் வேலியாய்
மருவரும் பெருமையும் பொறையும் வாயிலாய்க்
கருணையங் கோயிலுள் இருந்த கண்ணனது


கழலடி இறைஞ்சி வாழும் இலங்கை வேந்தன் தனது அண்ணனான கும்பகர்ணனையும் தன் பக்கத்தே சேர்த்துக்கொள்ள எண்ணுகின்றான். அறநெறி துறந்த அரக்கர்கோனைக் கைவிட்டு இருமையும் தரும் பெருமானாய இராமனைச் சேர்ந்து வாழ்வதே சிறப்புடையதாகும் என்றுரைத்த தம்பியை நோக்கி,


நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிது நான் வளர்த்துப் பின்னை
போர்க்கோலஞ் செய்துவிட்டார்க்கு உயிர் கொடாது அங்குப் போகேன்

 

என்று கூறும் உறுதிமொழியும்,


"செம்பிட்டுச் செய்த இஞ்சித்திருநகர்ச் செல்வந்தேறி
வம்பிட்ட தெரியல் எம்முன் உயிர்கொண்ட பகையை வாழ்த்தி
அம்பிட்டுத் துள்ளங்கொண்ட புண்ணுடை நெஞ்சோடைய
கும்பிட்டு வாழ்கிலேன் கூற்றையுமாடல் கொண்டேன் ''

என்று மானமே பெரிதென நினைந்து கூறும் குணங்களால் உயர்ந்த அரக்கவீரனது செம்மை சான்ற சொற்கள் அழகுடையதேயாகும். கூற்றையுமாடல் கொள்ளும் தனது வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்த்த குலத்து மானம் தீர்ந்திலாத கொற்றவனது உள்ளத்தில் தனது வாழ்க்கையே உயரியதெனத் தோன்றுகின்றது. அவன்றன் உள்ளத்தின் உயர்வே பெருமையுடையதும் ஆகும் என்பதும் கம்பர் தங் கருத்தாய் இலங்கக் காண்கின்றோம். மாற்றாரைத் தொழுது வாழ்வதிலும் தன் மானம் காப்பதே தன் கடனெனக்கொண்ட திருமகன் அமர்க்களத்தே ஆவியை விடுத்து அழியாப் புகழெய்துகின்றான். மானமே பெரிதெனக்கொண்டு அதனால் புகழ்பட வாழ்ந் தவன் கும்பகர்ணன் என்பதும் வாழ்க்கையின் நலனையே பெரிதும் கருதி அதனால் குலமணம் போற்றாத தலைவனாய் இலங்கியவன் வீடணன் என்பதும் இதுவரை எடுத்துக் காட்டிய ஒன்றிரண்டு குறிப்புகளால் விளங்கும்.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - ஜுலை ௴

 

No comments:

Post a Comment