Monday, September 7, 2020

 

விதவா விவாகம் கற்புடைத்தா

 

 "'விதவா விவாகம் கற்புடைத்தா? " என்று. நமது சந்தாநேயர்களில் இரண்டொருவர் நம்மை வினாவியிருக்கிறார்கள். இதைப்பற்றி ஆராய்ச்சி செய்யப் புகின் முன்னே 'கற்பு' என்பது என்ன என்பதை யறியவேண்டும். சுருக்கமாகக் கூறும் பட்சத்தில் தன்பர்த்தாவின் சொல்லுக்கு எவ்வகையினும் மாறுகூறாது, அவனையே தெய்வமாகக் கருதி அவனிடம் பூரண பக்தி விசுவாசத்தோடு நடந்து கொள்வது தான்,'கற்பு' எனலாம். அத்தகைய கற்பு ஒரு பெண்ணுக்குத் தான் உயிருள்ள மட்டும் இருத்தல் வேண்டும் என்பது சொல்லாமலே யமையும்.

 

மேலும் அந்தப்பக்தி பரிசுத்தமான தாகவும், மாசில்லாத தாகவும் இருத்தல் வேண்டும். கற்பின் மகிமை அளவிடப்படாது. அது தெய்வீகத்தன்மையுடையது. ஆகையால் அது களங்கமற்ற பரிசுத்த உள்ளத்தில் பதியப்பட்டதாக விருந்தாலன்றிச் சரியான கற்பாகாது. கணவனிடத்தில் மட்டுமே அத்தகைய அன்பும் பக்தியும் இருக்கத்தக்கன.


      "கற்புறு சிந்தை மாதர் கணவரை யன்றி வேறோ
     ரிற்புறத் தவரை நாடார் யாங்களு மின்ப வாழ்வுந்
     தற்பொறி யாக நல்குந் தலைவநின் னலதோர் தெய்வம்
     பொற்புறக் கருதோங் கண்டாய் பூரணானந்த வாழ்வே'

 

என்றனர் தாயுமான சுவாமிகள்.

 

ஒரு மாது தன் கணவனையன்றி வேறொருவனை இச்சையோடு கருதினும், நோக்கினும் அக்கற்பின் மகிமை குன்றியதாகும். இதற்கொரு திட்டாந்த முண்டு.

 

ஜமதச்னி முனிவருடைய பத்தினியும் இருபத்தொரு தலை முறை க்ஷத்திரியர்களை பழிக்க முயன்ற பரசுராமரின் பாதாவுமாசிய இரேணுகாம்பாள் மிக்க கற்புடைய உத்தமி, அம்மாது தன் கணவருடைய பூஜைக்காகக் கமண்டல நதிக்குச் சென்று தன் கற்பின் மகிமையால் குடமின்றியே நீரைக் கரங்களால் திரட்டி எடுத்து வருவது வழக்கமாக விருந்தது. இவ்வாறு பிரதி தினமும் நடந்து வருகையில், ஒரு நாள் ஜலத்திற்குச் சென்ற அம்மாது, ஆற்றில் நின்று ஜலத்தைத் திரட்டக் குனிந்தபோது வானத்தில் கமனம் செய்யும் ஒரு கந்தருவ புருடனுடைய பிரதி பிம்பம் அச்சலத்தில் தோன்றக்கண்டதும் அதைக்கண்ட அவ்வம்மை'' ஆ! பிரதி பிம்பமே இவ்வளவு அழகாயிருக்கிறதே! அம்மனிதன் எவ்வளவு அழகுடையவனோ!" என்று எண்ணிக்கொண்டே நிமிர்ந்து ககனத்தை நோக்கினாள். அதற்குள் கந்தருவன் தூரம் சென்ற படியால் புலப்படவில்லை. இரேணுகாம்பாள் பிறகு குனிந்து வழக்கம் போல் கரங்களால் ஜலத்தைத் திரட்ட முயன்ற போது எப்போதும் போல் ஜலம் குடத்தைப் போல் திரண்டு கைக்கு வரவில்லை. உடனே தன் கற்பிற்குப் பங்கம் நேர்ந்த தென்று உணர்ந்து நடு நடுங்கி நின்றனள் என்று சரித்திரம் கூறப்பட்டிருக்கிறது. இதனால் கற்பு எத்தகைய பரிசுத்தமான மனதைப் பொருந்திய தென்பது விளங்கும்.

ஒரு மாது தன் கணவன் எதிரில் இருந்தாலும், இல்லாவிடினும், அவன் தேசாந்தரம் சென்றிருந்தாலும், எப்போதும் அவள் அவனிடத்தில் பதிந்த மனமுடையவளாகவே யிருக்கவேண்டும் அதுவே கற்பாகும். நமது சாத்திரங்களின் சித்தாந்தப்படி, இறந்தவர்களுடைய தூல தேகம் மட்டும் அழிகிறதே யன்றி அவர்கள் ஆன்மா வேறு தேகத்தோடு அன்னிய உலகத்தில் இருந்து கொண்டேயிருக்கிற தென்றும், நாம் அவர்களைப் பற்றிச் சிந்திப்பதை யவர்கள் உணர்வார்களென்றும், இங்கு நாம் செய்யும் கர்மாதிக் கிரியைகளால் அவர்கள் ஒருவிதப்பலனை யடைகிறார்களென்றும் நம்பியே நாம் அவர்களுக்குப் பிதுர்க்கடன் செலுத்தி அவர்களைப் பிரார்த்திக்கிறோம்.

 

இவ்வாறிருக்கையில் கணவன் உயிரோடு இருக்கும் போது அவனைக் கடவுளாகவே பாவித்து வந்த ஒரு ஸ்திரீ, அவன் இறந்து போனபின் அவனையின்னும் உறுதியோடு கடவுளாகப் பாவித்து பக்தி செலுத்த வேண்டியவளாகிறாள் என்பது நன்கு விளங்குகிறதன்றோ? ஒருவருக்குத் துரோகம் செய்வதெனின், அவர்கள் அறியும் வண்ணம் செய்யினும், அறியாவண்ணம் செய்யினும், அவர்கள் எதிரில் செய்யினும், மறைவில் செய்யினும், மனதால் சிந்திக்கினும் துரோகமே யாகும்.

 

கணவன் இறந்தபின் அவனை யின்னும் அதிகமாகவே தெய்வமெனப் பாவிக்க வேண்டிய மனைவி வேறு புருடனிடம் காதல் கொண்டால், அவள் எப்படி இறந்த தன் கணவனுக்குத் துரோகம் செய்யாதவளாவாள்? முதலாவது, அவள் மனச்சாட்சி அப்படி நினைக்குமா? இல்லை. இரண்டாவது கணவனை மணம் புரியும் போது முதல் கணவன் போலிருந்த அன்பும் அவனும் மறக்கப்படுகிறார்களோ? கணவன் மேல் உண்மையான அன்புவைத் திருந்தவர்கள் அனேகர் அவன் இறந்தபின் இன்னொருவனை மணம்புரிய மனதால் நனைக்கவும் மறுத்து விகிருர்ள்.

 

இரண்டாவது கணவனை பணம் புரியும்போது, முதல் கணவன்பால் கொண்டிருந்த அன்பின் நினைப்பிருக்கிறவரையில், அவள் பரிசுத்த உள்ளத்தாடு வனை மணம்புகிறவ ளாவாளோ? அவள் இரண்டாவது கணவன் பால் கொள்ளுங் காதல் சத்தியமும் பரிசுத்த முமானதோ? ஏாகாலத்தில் இரண்டு ஆடவர் மேல் பதிந்த மனமுடைய ஒருமாதிடம் கற்பு லைத்திருக்கிறது என்பது மனதிற்கு ஒவ்வாத விஷபமாகவே இருக்கிறது. துரோபதை ஐந்து பேரை மணந்துகொண்டும், பத்தினியென்று மதிக்கப்படுகிறாளே யெனின், விலக்கு எதிலுமுண்டு. அந்த யுகத்திற்கு அது ஒத்ததாக விருந்தது. யுகத்திற்கு யுகம் மனிதரின் மனோநிலைமை மாறுபடுகிறது. ஒரு யுகத்தில் நீதியாகக் கருதப்பட்டது மற்றொரு யுகத்தில் அநீதியாகக் கருதப்படுகிறது. கடந்த யுகங்களில் மறு விவாகம் செய்து கொள்ளும் வழக்கம் இருந்தபோதிலும், அப்போதிருந்த மனிதர் கபடமற்றவர்களாதலின், ஒரு பருடனை மணந்தால் அவன் இருக்கிறவரையிலாவது அவனைத் தெய்வமாகவே கருதி நடப்பார்கள். அன்னிய புருடனைக் கருகவு மாட்டார்கள். இக்காலத்திலோ மறுவிவாகம் செய்து கொள்ளலாமென்று விதியிருந்தால், வேறு அதிக செல்வமுடைவனையாவது, அழகுடையவனை யாவது இச்சித்து அவனை இரண்டாவது கணவனாக வரிக்க வெண்ணங் கொண்டு, இருக்கும் கணவன் சீக்கிரம் மரிக்கவேண்டு மென்று பிரார்த்திப்பார்கள்.

 

மறு விவாக வழக்க மிருக்கும் நாடுகளில் இத்தகைய அக்கிரமங்கள் அனேகம் நடக்கின்றன வென்பது அனுபவம். அத்தகைய நாடுகளில் கூட ஒவ்வொரு ஸ்திரீ " இறந்த கணவனுடைய ஆன்மா பரலோகத்திலிருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவன் நினைப்பும், அவன் மேல் வைத்த அன்பும் என் மனதை விட்டு நீங்கவில்லை. ஆதலின் நான் இன்னொரு புருடன் மேல் காதல் கொண்டால் அக்காதல் பரிசுத்தமான காதலாகாது. ஆகையால் நான் மறு விவாகம் செய்து கொள்ள மாட்டேன்" என்று கூறுகிறாள்.

 

இதனால் மறு விவாகம் செய்து கொண்ட பின் கற்பிருக்கிறதெனக் கூறுவது மனதிற் கொவ்வாததாகவேயிருக்கிறது.


                                 ஓம் தத்ஸத்.

 

ஆனந்த போதினி – 1921 ௵ - பிப்ரவரி ௴

 

 

 

 

 

No comments:

Post a Comment