Monday, September 7, 2020

 

விநாயக சதுர்த்தி

(பி. ஆர். ராஜரத்தினம்.)

விநாயக சதுர்த்தி, அல்லது பிள்ளையார் சதுர்த்தி என்ற விரதம், பிரதி வருடம் ஆவணி மாதம் பூர்வபட்சம், சதுர்த்தி கூடிய சுப தினத்தில் வரும், இந்துக்கள், முக்கியமாய் சிவ மதத்தை அநுஷ்ட்டிக்கும் யாவரும் மிகவும் விசேஷமாகவும், சிரத்தையாகவும் இச் சதுர்த்தியைக் கொண்டாடுவார்கள். ஸ்ரீராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, முதலியவைகளைப் போல் இது மிகவும் முக்கியமானதைத் தவிர, மற்றதைவிட இதற்கு ஒரு விசேஷம் உண்டு. மற்ற பண்டிகைகளை, வருடம் ஒரு நாள் கொண்டாடி அதோடு அவைகளை மறந்து விடுகிறோம். மறுபடி அடுத்த வருடம் அப் பண்டிகை வரும் வரை அதைப்பற்றி நினைப்பதேயில்லை. அனால் பிள்ளையாரைப் பற்றி அடிக்கடி நினைக்காமல் இருக்க முடியாது. ஒவ்வொரு நாளும் நன்மை - தீமை போன்ற எந்தக் காரியம் செய்தாலும், அவரை வணங்கிவிட்டுத் தான் மேலே ஆரம்பிக்க முடியும். அப்படி செய்தால் தான் ஆரம்பிக்கும் காரியம், விக்ன மில்லாமல் செவ்வனே பூர்த்தியாகுமென்று, நமக்குள் ஒருவித நம்பிக்கை. அதனாலேயே அவருக்கு விக்னேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. நம் வீட்டில் நடக்கும் சுப காரியங்களில், புரோகிதர் எனப்படும் வைதிகர்கள், மஞ்சளைப் பிடித்து வைத்து, புஷ்பங்களால் அர்ச்சித்து ஸ்தோத்திரம் செய்து பிறகு மேலே செய்ய வேண்டியவற்றை ஆரம்பிப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். தவிர, இயற்கையாக நம்மை அறியாமலே, சில காரியங்களில் பில்ளையாரை ஸ்மரிக்கிறோம், எவருக்காவது கடிதம் எழுதுவதா யிருந்தாலும், கதைகள், கட்டுரைகள் முதலிய எது எழுத ஆரம்பித்தாலும், நமது கை, நம்முடைய உத்தரவின்றியே தலைப்பின்மேல் பிள்ளையார் சுழியிடுவது பிரத்தியக்ஷம். பண லேவாதேவி, மனை, நிலம், முதலிய சாஸனங்களுக்கு பத்திரம் எழுக உட்கார்த்தவுடன், 'உம் - பிள்ளையார் சுழி போட்டுண்டாச்சா? சரி எழுது' என்று வைஷ்ணவர்கள் உட்பட யாவரும் சொல்வது கண்கூடு. திருச்சினாப்பள்ளியில் மலையின் மேல் போய் கொண்டதால், உச்சுப் பிள்ளையார் என்று சொல்வதை விட எல்லா இடங்களிலும் உச்சஸ்தானம் வகிப்பதால் உச்சிப்பிள்ளையார் என்று சொல்வது மிகப் பொருத்தமாய் இருக்கும். ஸ்ரீரங்கமாகிய வைஷ்ணவ க்ஷேத்திரத்தில், மூலஸ்தானத்தை அடுத்துள்ள முதல் பிரகாரத்திலேயே, விமானச் சுவற்றில், ஒரு பெரிய பிள்ளையார் இருப்பதும், அதற்கு அன்று தினம் பூஜையும், கொழுக்கட்டை நிவேதனமும் கோவில் செலவிலே நடப்பதென்றால் சிலருக்கு ஆச்சரியமாய் இருக்கும். அப்பேர்ப்பட்ட விநாயகரை
அனைவரும் அதன் உட்கருத்தை அறிந்து, தூயமனதுடன் பயபக்தி யுடனும் கொண்டாடினால், காரியங்களில் சித்தியும், இகபர சாதனங்களும் பெற்று ஒரு குறைவு மில்லாமல் வாழ்வோம் என்பது திண்ணம்.

கணபதி பிறப்பு

தேவர்களுக்கு நாளுக்குகாள், அசுரர்களால் கஷ்டங்கள் அதிகரித்து வந்தன. ஹிம்சை பொறுக்க முடியாமல் அவர்கள் சிவபெருமானைக் குறித்து தவம் செய்தனர். அவர் பிரத்தியக்ஷமாகி, “உங்கள் தவத்திற்கு மெச்சினோம். உங்கள் விரோதிகளாகிய, அசுரர்களுக்கு அரசனான “சிந்து" என்பவன் தவம் செய்து, தேவர்களாலும், மனிதர்களாலும், மிருகங்களாலும், சாவில்லாதிருக்கும் வாத்தைப் பெற்றுவிட்டான். ஆனாலும் கூடிய சீக்கிரரத்தில், இம் முப்பிறப்பு மல்லாத கணேசமூர்த்தி தோன்றுவார். அவராலேயே உங்கள் தயர் தீர வழி பிறக்கும்" என்று சொல்லியருளினார்.

கைலயங்கிரியில் சிவபெருமானும் உமாதேவியும் ஒருநாள் ஏகாந்தமாய் இருக்குங்கால், ஓம் என்ற பிரணவ மந்திரம், சக்கரஸ்வரூபமாய் கோடி சூர்யர்களைப்போல் பிரகாசிக்க அதனின்றும் ஒரு ஜோதி தோன்றி விநாயக உருவம் கொண்டு மத்தியிலிருந்து உற்பவித்து பாலவடிவமாக வந்து இருவரையும் வணங்கி நின்றது. அதை அணைத்தெடுத்து உச்சி முகந்து உமாதேவியார் தன் மடிமீ திருத்திக்கொண்டனன். சில படங்களில் சிவபெருமானும், உமாதேவியும், மடிமீது குழந்தை வினாயகருடன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்திருக்கலாம். துதிக்கையுடன் கூடிய யானை முகத்தோடும் நான்கு கைகள், மூன்று கண்களோடும் அவதாரமான அத்தினமே பிள்ளையார் சதுர்த்தி,

இப்படியாக ஒரு குழந்தை ஆவிர்ப்பவித்திருப்பதைக் கேள்வியுற்றான்
அசுரர் குலத்தரசனான சிந்து. சற்று சிந்தித்துப் பார்த்தான். சிவபெருமானால் அளிக்கப்பட்ட வரம் ஞாபகம் வந்தது. 'மோசம் போனோம். மனிதர்கள், தேவர்கள், மிருகங்கள், அல்லாத புது ஸ்வரூபமாய் இருக்கிறது. இதனால் நமது அழிவு கூடிய சீக்கிரம் ஏற்படப் போகிறதென்பது திண்ணம். சீச்சீ! என்ன பேதமை; இச் சிறுகுழந்தையைக் கண்டு அஞ்சுவது நமக்கழகா? நமது வீரியமென்ன, பலமென், புகழென்ன! இதென்ன ஏதோ அபசகுனம் நேருகிறது! புத்தி தடுமாறுகிறது! துர் சொப்பனம் கண்டமாதிரி மனது ஏன் தடுமாறுகிறது! இருக்கட்டும். எதற்கும் நாம் முன் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும். இக் கணேசமூர்த்தியை இப்பொழுதே ஒழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன்' என்று சபத மிட்டான்.

இவ்வாறு உறுதி கொண்ட அவன் அசுரர்களில் சூரர்களாகிய வியோமாசரன்; கடமாசரன்; சதமைடன்; கிருத்திராசரன், முதலியவர்களை பல தடவைகளில் ஒவ்வொருவராக அனுப்பி எவ்விதத்தினாலாவது கணநாதரை, கொன்று வரவேண்டியதென கட்டளை பிறப்பித்தான். அவர்களும் தங்களுக்குள்ள சக்தியால், சமயத்துக் கேற்றவாறு பலவேறு ரூபங்களை எடுத்து பலவித உபாயங்களால் முயன்றும் முடியாமல், கடைசியில் தாங்களே கொல்லப்பட்டு திரும்பிவராது போயினர். சிவகுமாரனது லீலைகளைக் கேட்ட தேவர்கள் தங்கள் கஷ்டம் நீங்கியதாக எண்ணி மிகவும் சந்தோஷ முற்றனர்.

தம்மால் அனுப்பப்பட்டவர்களெல்லாம் இறந்து பட்டனர் என்பதைக் கேட்க அதிக ஆக்குரோஷத்தை அடைந்தான் சிந்து. இந்தத் தடவை அதிபராக்கிரமவியாகிய கனலாசரனை, எப்படியும் ஜெயத்துடனேயே திரும்பி வருவாயா எனக் கட்டளை யிட்டனுப்பினான். கனவாசுரனும் தன் நால் வகை சேனையுடனும் கோபக்கனல் வீசப் போருக்குக் கிளம்பி விட்டான்.

இதைக் கேள்வியுற்ற தேவர்கள் அஞ்சி நடுநடுங்கி மறுபடி மஹாதேவனின் காலில் போய் விழுந்து ரக்ஷித்தருளும்படி வேண்டினர். அவர்களைக் காக்கும் பொருட்டு வாக்களித்திருப்பதால் யாரை அனுப்புவதென்று கண நேரம் யோஜித்து, கணகாதரே அதற்கேற்றவரென்று முடிவு செய்து, தன்னுடைய சூலாயுதத்தைக் கொடுத்து, அசுரரை
அழித்து வெற்றியுடன் திரும்புவாயாக என ஆசீர்வதித் தனுப்பினார். அப்படி செய்வதாய்ச்
சொல்லி, அநுக்கிரஹம் பெற்ற அவரும், சிவபெருமானையும், பார்வதி தேவியையும் நமஸ்கரித்து யுத்தத்துக்கு கிளம்பினார்.

இரு சாராருக்கும் கடுமையான போர் நிகழ்ந்தது. பல கரங்கள் வெட்டுண்டு வீழ்ந்தன. பல தலைகள் உருண்டன. பலர் வெருண்டு ஓடினர். கடைசியில் சூலாயுரத்தைப் பிரயோகித்து, கனலாசுரனையும் காலனிடம் அனுப்பினார் கணநாதர். இதையும் ஒற்றர்கள் மூலம் அறிந்த சிந்து யாது செய்வதென்றறியாது திகைத்தான். பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்ததேயென் பிரலாபித்தான். வெந்து வெதுப்பினான். சரி. தன் கையே
தனக்குதவி. நம்மிடம் கனலாசுரனே எல்லோரையும் விட அதிபராக்ரமம் வாய்ந்தவன். அவனும் போனபிறகு, நாமே நேரில் போவதைத் தவிற வேறு மார்க்கமில்லை யென்றுணர்ந்து, சேனைத்தலைவர்களில் எஞ்சி யுள்ளோரை, போருக்கு ஆயத்தமாகக் கட்டளை யிட்டான்.

சிந்துவே. நேரில் போர் செய்ய ஏற்பாடு செய்யும் சமாச்சாரம் தெரிந்த பரமசிவனும், நந்தி தேவரை, தூதனாக சிந்துவிடம் அனுப்பி, ஹிதமாகவும், நயத்திலும், பயத்திலும் அவனுக்கு புத்தி சொல்லி, 'தேவர்களுக்கும் அசுரர்களுக்கும், சண்டை வேண்டாம், சமாதானமாக வாழுங்கள். அப்படி அடிக்கடி சண்டை போடுவதால் அந்தியில் அசுரர்களே அவதிப்பட்டு அழிய நேரும்' என்பதை அறிவிக்கும்படி சொல்லி யனுப்பினார். நந்திதேவரும் சிந்துவிடம் சென்று, ஹிதமான வார்த்தைகளால், எவ்வளவோ சொல்லியும் கேளாமல், கோபத்துடன் குதித்தெழுந்து, நந்தி தேவரை இழிவாகப் பழித்து, பேசலானான்.

நந்ததேவர் மிகுந்த பொறுமையுடன் சொல்லிப் பார்த்து கேளாததாலும், பரமசிவனையும், விநாயகரையும் இழிவு படுத்தியதாலும், கோபம் கொண்டவராய், கடைசியில் சிந்துவைப் பார்த்து, 'ஏ! நீசா! நான் ஒருவன் மட்டுமே உன்னையும், இங்குள்ளோர் அனைவரையும் ஒரே ஊதில் ஊதி யெறிந்து விடுவேன் என்று நினை. நான் சாமான்ய தூதனாகவே வந்திருப்பதால் அப்படிச் செய்ய இஷ்டமில்லை, கட்டளையும் கிடையாது, யுத்தம் செய்வதே உன் விருப்பமானால், அத்துடன் அழிந்து போகவும் தயாராய்
இரு. போர்க்களத்திலே கணநாதரை சந்திப்பாயாக' என்று சொல்லி விட்டு, திரும்பிவந்து அங்கு நடந்தவைகளை சொன்னார். அவ்விசமாகத் தான் நடக்கும் என்பதை எதிர்பார்த்திருந்த கணாதரும், நந்திதேவர் சொன்னதை புன் முறுவலுடன் வரவேற்று, பூதகணங்களை போருக்குக் கிளம்ப ஏவினார். ஒரு பக்கம் சிந்து தன் அசுர சைன்யங்களுடன் ரத, கஜ, துரக, பதாதிகளுடனும், கையில் வாளேந்தி வந்து இறங்க, மறுபக்கம் விகாரயகர், தம்முடைய பூத கண பரிவாரங்களுடன் சூலாயுத சகிதம் குதிக்க
இருவர்களுக்குள்ளும், கடுமையான புத்தம் ஆரம்பமாயிற்று. விநாயகர் அசுரருடைய பல்வகை சேனைஅளையும் பறக்கடித்து, கடைசியாக சூலாயுதந்தைப் பிரயோகித்து, அது போய் அவன் மார்பில் பாய அவனும் பூமியில் வீழ்ந்து இறந்தான். அப்பொழுது அங்குள்ள யாவருக்கும் விநாயகர், விஸ்வரூப மளித்தார். தேவர்கள் பூமாரி பொழிந்தனர், துந்துபி வாத்யங்கள் முழங்கின, முனிவர்கள் வேதகோஷம செய்தனர். அந்த விநாயகரை தினமௌம் வணங்குவோம்.

ஒரு அசுரேந்திரனுக்கும், தேவ இந்திரன் எனும் தேவேந்திரனுக்கும் யுத்தம் நடந்து, அதில் அசுரேந்திரன் தோற்றுப் போனான். தனது குலகுடருவாகிய சுக்கராச்சாரியரை அதற்கு என்ன செய்யலா மென்று கேட்டான். அவர் சொன்னார்: - மரகதமுனி என்ற ரிஷி தவம் செய்து கொண்டிருக்கிறார். உன்னிடமுள்ள் அழகில் சிறந்த விபுதை என்னும் அசுர கன்னிகையை அனுப்பி மாகத முனியை மயக்கச் செய்து மணம் புரிந்து கொள்ளச் சொல். அவர்களுக்கு ஓர் பிள்ளை பிறக்கும். அவனாலன உன் அவமானத்திற்கு விமோசனம் உண்டு’ என்றார். அப்படியே விபுதை, அசுரேந்திரனால் அனுப்பட்ட முனிவரின் ஆசிரமம் அடைந்து, தன்னுடைய சாகசங்களால் அவரைக் காமுறச் செய்து, மணமும் செய்து கொண்டான். அவ் விருவருக்கும் யானை முகத்தோடு கூடிய கயமுகாசுரன் பிறந்தான். அவனும் தவம் செய்து பரமசிவனிடத்தில் கயமுகாசுரன் பிறந்தான். அவனும் தவம் செய்து பரமசிவனடத்தில் சாகாவரம் பெற்றவன். அதனால் கர்வமடைந்த அவன், தேவர்ளையும் தனக்கு குற்றேவல் செய்யும்படி ஆக்ஞாபித்து மதங்கபுரிவை ஆண்ட வந்தான். தேவர்கள். தேவர்கள், தன் சபைக்கு வரும்பே தெல்லாம், இரண்டு கைகளையும் இரு காதுகளையும் மாற்றிப் பிடித்துக் கொண்டு, மூன்று தரம் தோப்புக்கரணம் போடும்படியும், தலையில் இருகைகளால் குட்டிகொள்ள வேண்டும் மென்று உத்தரவிட்டான். தேவர்கள், மஹாசிவனை வேண்ட, அவர், கணபதியை அனுப்ப, அவரும் சென்று கயமுகாசுரனை வென்றார். அவன் இறக்குமின், தன் சத்தியால் மூஞ்சுறு என்னும் எலியிருவம் கொண்டு, மறுபடி கணநாதரை எதிர்த்தான். அவரும் அவனை கொல்லாது பிடித்து அமுக்கி, பிள்ளையாரை, ஒரு வரம் கேட்டான். அதாவது, தன்னை எப்போதும் அவருடைய வாகனமாக இருக்கச் செய்ய வேண்டும் என்று; அவர் அப்படியே செய்வதாய் வாக்களித்து அது முதல் மூஞ்சுறுவை வாகனமாய்க் கொண்டார். தேவர்கள் தங்கள் கஷ்டம் நீங்கியதற்காக, அன்றையிலிருந்து, கயமுகாசுரனுக்ச் செய்த மரியாதையாகிய குட்டிக் கொள்ளுதல், தோப்புக் கரணம் போடுதல், இவைகளை, கணபதிக்கு செய்ய உத்ஸாகத்துடன், இசைந்தனர். அதனாலேயே, கோவில்களில், பிள்ளையார் இருக்கு மிடங்களில், பக்தர்கள் தோப்புக்கரணம் போட்டு தலையில் குட்டிக்கொள்ளுகிறார்கள்.

பூஜை, அர்ச்சனை செய்வதற்கும், படங்கள் விக்ரஹங்களுக்கு சாத்தவும் எத்தனையோ விதமான, மல்லிகை, முல்லை, இருவாட்க்ஷி, சண்பகம், ரோஜா முதலிய புஷ்பங்கள் இருக்கின்றன. ஆனால் கணநாதருக்கு எல்லாவற்றையும் விட அருகம் புல்லே பூஜைக்கு மிகவும் எடுத்தது. சதுர்த்தி யன்று சகலரும் அருகம் புல் கொண்டு அர்ச்சிப்பதைப் பார்க்கலாம். அது ஏன்? அதற்கும் ஒரு கதையும் காரணமும் உண்டு.

எமதர்மராஜனுக்கு அக்னி ஸ்வரூபமான அனலாசான் பிள்ளையாகப் பிறந்தான். அவன் சோர ரூபமுடைய அரக்கனாய் மூவுலகையும் எரிக்கக் கிளம்பினான். தேவேந்திரன் விநாயகரை வேண்டினான். அவரும். அவனை உருக்குலைத்து, அக்னி கோளமாக்சி விழுங்கி, வயிற்றின் அடியில் அடக்கிக் கொண்டார். அதுவும், வயிற்றில் எரிச்சலை உண்டாக்கி, கஷ்டப்படுத்த ஆரம்பித்தது. பலவித உபசாரங்களே செய்தும், குளிர்ந்த அமிர்தங்களைக் கொடுத்துட கேட்கவில்லை. கடைசியில் தேச முழுதும் அருகம்புல்லை
வைத்து போர்த்தினார்கள். உடனே சமனப்பட்டது. ஆதலால் அவரை அருகம் புல்லால் அர்ச்சிச்சிதறாம்.

பிள்ளையார் கோவிலின் முன் தேங்காய்களை சூறையடிப்பது எதற்கு என்பதையும் சற்று கேளுங்கள். காசிபர் என்ற முனிக்கும் அதிதிக்கும், பிறந்தவர் மகோர்கடர்.
விநாயகரின் மறு அவதாரமென்று சொல்லுவார்கள். காசி மகாராஜன் தன் இனவரசன்; மூத்த பிள்ளையுடைய விவாகத்தை நடத்திக் கொடுக்கும்படி காசிபரை வேண்ட, அவர்,
தான் ஒரு விரதம் அனுஷ்டிப்பதாகவும், தனக்குப் பதிலாக பிள்ளை மகோர்கடரை அனுப்புவதாகவும் சொன்னார். இதைக் கேட்ட காசி ராஜனும் மிகவும் சந்தோஷத்துடன் அவரைக் கட்டிக்கொண்டு அரண்மனை அடைந்தார். அரண்மனை வாசிகளில் கூடன் என்றும் அசுரன் வாசலை அடைத்துக் கொண்டு பாறை உருவாக நின்றான். அவன் அப்போது அசுரத் தலைவனாயிருந்த நராந்தகனால், மகோர்கடரை, விக்னப்படுத்துவதற்
காக அனுப்பப்பட்டவன். அவன் அவ்வாறு வந்திருப்பதை, ஊதித்து அறிந்து கொண்ட கணாதர் (மகோர்சுடர்) ஆபிரம் தேங்காய்களைச் கொண்டுவரச் செய்து, அஸ்திர ஆவாகனம் செய்து, சிவபெருமானை பிரார்த்தித்துக் கொண்டு அப் பாறையின் மேல் குறையிட்டு உடைக்கக் கட்டளையி விட்டான். வலி தாங்காது கடன் உயிரிழந்தான். மகோர்கடர் பூமியை ஸ்தோத்தரிக்க பூமி பிளவுபட்டு அசுரனை தன்னுள் அடக்கிக் கொண்டது.
வந்த காரியம் சித்தியானவுடன் மகோர்கடர் இருப்பிடம் சேர்ந்தார். அது முதல் தங்கள் காரிய சித்திக்கு, தேங்காய் சூறையடிப்பதாய் எல்லோரும் வேண்டிக் கொள்ளுகிறார்கள்.

பிரும்மதேவர். சிருஷ்டிகர்த்தா. அவரே விநாயகரை பூஜித்த கதை பின் வருமாறு. தான் சிருஷ்டிக்கும் உருவங்கள், சரியாய் அமையாமல், மாறு ரூபங்களை அடைவதைக் கண்டு பயந்து, அவ் வுருவங்களாலேயே மிகவும் இகழ்ச்சிக்கப்பட்டு, தன் தவறை உணர்ந்து, கணநாதரை தியானித்தார். அவரும் சமுத்திரத்தில் ஆலிலையில் குழந்தை உருவாய்த் தோன்றினார். பிரும்மதேவர் தம் பிழையை பொறுத்தருளும்படி வேண்ட, கணேசரும் அவ்வாறே செய்து, எப்போதும் எக் காரியத்துக்கும் என்னை வணங்கி விட்டு ஆரம்பிப்பாயாக என்று சொல்லி அந்தர் தியானமானார். அதனாலேயே, நாமும் எக் காரியமும் விக்னமில்லாமல் முடிய வேண்டி, முதலில், அவரை ஸ்மரிக்கின்றோம். அப்பேர்ப்பட்ட கணபதியை - விநாயகரை, பிள்ளையாரை - ஆனை முகத்தானை எல்லோரும் பூஜித்து, பலகாலம் பாரினில் மேன்மையுடன் வாழ்வோமாக!!!

“அனுதினமும் நினை செஞ்சே - நீ

ஆனை முகத்தானை – நீ - அனுதினமும் நினை நெஞ்சே."

 

ஆனந்த போதினி – 1942 ௵ - செப்டம்பர் ௴

 

No comments:

Post a Comment