Monday, September 7, 2020

 

 விதவா விவாகம் கற்புடையதல்ல


      கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
      யிடம் வீழ்ந்த துண்ணா திறக்கு - மிடமுடைய
     வானகங் கையுறினும் வேண்டார் விழுமியோர்
     மான மழுங்க வரின்''                                   ‘நாலடியாா'

 

இவ்விதக் கற்புவாய்ந்த மங்கையர்கள் யாது செய்யினும் அதை மறுக்க மூம்மூர்த்திகளாலும் முடியாது. திருட்டாந்தமாக அரன், அரி, பிரமன் என்று சொல்லக்கூடிய மூன்று மூர்த்திகளும் சேர்ந்து, அத்திரி மஹாரிஷியின் பத்தினியாகிய அனுசூயையின் கற்பைச் சோதிக்க எவ்வளவோ முயற்சிகள் செய்தும் வீணானதும தவிர, அவர்கள் அக்கற்பரசியின் மகிமையால் குழந்தை வடிவமுற்றுக் கஷ்டத்துடனிருக்க, இச்செய்தியைச் செவியிலேற்ற அவர்கள் பத்தினிகளாகிய உமை, இலக்ஷமி, சரஸ்வதி என்ற மூன்று ஸ்திரீகளும் வந்து தாழ்ந்து கேட்டதின பின் அவர்களுக்கிரங்கி, அவவுத்தமி அம்மூர்த்திகளினுடைய சுயவடிவம் வரும்படியாகச் செய்தனள். இவ்வதிசயத்தை அனுபவித்த மூன்று தேவர்களும் அம்மாதைப் புகழ்ந்து தம தம் பதிக் கேகினர்.

 

இவ்விதக் கற்புவாய்ந்த மங்கையர்கள் நம் நாட்டில் வாசம் செய்ததுனால் அல்லவோ மாதம் மும்மாரி பொழிந்து சகல கோடி ஜீவாத்துமாக்களும் செழிப்புற்று வாழ்ந்து வந்தன. இவ்வித மங்கையர்களின் கற்பை இழக்கும்படி முயற்சி செய்தால் பெரும் பாவத்துக்கிடமாகும். மேலும், அவாகள பிராணன் நீங்குங் காலத்தில் எதை ஸ்மரித்துக்கொண்டு செலகறதோ, அதன மேலேயே அவர்கட்கு அதிகப் பிரியம் ஏற்படும். அப்படிப் பிரியத்துடன் ஸதூல தேகத்தை விட்டு நீங்கும் ஜீவனுக்குச் சஞ்சலம் உண்டாகும்படி செய்தால் அப்படிச் செய்தவர்களின குடும்பமும் சஞ்சலத்துக்கிடமாகும். நமது பிதுக்கள் மனவருத்தம் அடைந்தால் அவ்வருத்தம் பின் சந்ததிகளை வருத்தும்.

 

மேலும் இல்லற தர்மத்தை நடத்தும் ஓர் வானுக்கு இப்பூமியில் நன்மைகளுக்கும், தமைகளுக்கும், சகபோகங்களுக்கும் உரிமை யுடையவளாய அமைந்த மனையாளிடத்தில் அதிக அன்பு ஏற்படுவது சகஜமே. மேலும் தாய், தந்தை, பிள்ளை, உறவினர், உடன் பிறந்தார்களாகிய இவர்கள இவவுலகத்தை விட்டு நீங்கி விட்டால் அவர்களால் உண்டாகும் நன்மைகள் ஒவ்வொன்றாக நீங்கும். தனது பத்தினியினுடைய பிராணன் நங்க விட்டால் யாவும் நீங்கும் என்பதே அறிவுடையோர்களின் உண்மையான கொள்கை.


       "தாயோ டறுசுவை போம் தந்தை யொடு கல்விபோம்
       சேயோடு தான் பெற்ற செல்வம்போம் - மாயவாழ்
       வுற்றா ருடன் போம் உடற்பிறப்பாற் றோள்வலி போம்

 பொற்றாலி யோடெவையும் போம்''

 

இவ்வித ஒற்றுமையுட னிருக்கும் வதூவரர்களில் அவ்வரனுக்குப் பால்யத்திலோ, அல்லது வயோதிக காலத்திலோ, எம தூதர்கள் வந்து (பிராணன ஸதூல தேகத்தை விட்டு நீங்கும் போது "சிதர குப்தம்" = சிதா படம், குப்தம் - ரஹவம்) என்னும் படத்தை, அச்சமையத்தில் கண்களைத் திறந்து கொண்டிருந்தாலும், மூடிக்கொண்டிருந்தாலும், கண்களுக்கு முன் அந்தப்படத்தில மனையாளின உருவம் தோன்றும்படி சாக்ஷியாயருக்கப்பட்ட ஜீவாத்துமா காட்டுகிறான். அதைப்பார்த்து மருள மருள ஸமரித்துக்கொண்டிருக்கும் போது அவனது பந்து ஜனங்கள அவனை நெருங்க வந்து யார் எதைச் சொல்லிய போதிலும் அவனுக்கு எந்தச் சங்கதியும் கேட்கமாட்டாது. ஏன்? மனம் ஸ்ரோத்ரேந்திரியம் இரண்டும் கலந்து வேலை செய்தால் தான் விஷயங்களைக் கிரஹிக்குமே யொழிய, மனம் வேறு இந்திரியத்துடன் கலந்திருக்கும்போது எவ்வளவு சப்தித்துச் சொல்லிய போதிலும் பிரயோஜனமில்லை. இவ்விதம் மனையாளை ஸ்மரித்துக் கொண்டே பிராணனை விடுகிறான். ஸ்தூல தேகத்தை விட்டகன்ற பிராணன் பின்னும் தன் மனையாளிடத்தில் அன்பு கொண்டே திரியும். இவ்வித அன்புடனிருக்கும் ஆத்மாவுக்குத் துரோகமாக மறு விவாகம் செய்தால் அப்பெண்ணும் அப்பெண்ணை வகித்த வானும் கொடிய துரோகம் செய்தவர்களே யாவார்கள். அத்துரோகம் ஒருகாலும் நீங்காது. பெண்கள் ருதுவானாலும் ருது வாகாவிட்டாலும் மறு விவாகம் செய்வது பாவமேயாகும். லிவாக முறையைப் பற்றிச் சென்ற வருஷத்தில் நமது ஆனந்தபோதினியில் 5 - ம் தொகுதி 10 - ம் பகுதியில் 371, 371, 372 - ம் பக்கம் பார்க்க,

 

மேலும், பெண்ணின் பெற்றோர்கள் தன் பெண்ணை ஓர் வரனுக்கு மணம் செய்து கொடுப்பதாக எப்போது நிச்சயித்தாகி விட்டதோ அப்போதே அப்பெண் அவ்வானுக் குரியவளாகினாள், திலகவதியார் (அப்பர் சுவாமிகளின் தமக்கையார்) என்கிற பெண்ணைப் பெற்றோர் ஆகிய தந்தையார் தம் மரபிற்கு ஒத்த மாபினையுடையவராகிய கலிப்பகையார் என்பவ ருக்கு மணம் பேசுவித்தார். விவாக தினம் ஒன்றும் நியமிக்கவில்லை. அதற்குப் பின் கொஞ்ச தினங்கள் கழிந்ததும் திலகவதியாருடைய பெற்றோர்களும் மணம் பேசுலித்த வரனும் தேகவியோகம் அடைந்தார்கள். இப்பரிதாப நிலையைச் செவியிலேற்ற யாவரும் வருத்த முற்றனர். கலிப்பகையார் இறந்த சமாசாரந் திலகவதியாருக்குச் செவிப் புலனாக, அவர்'' என்னுடைய பிதா மாதாக்கள் என்னை அவருக்கு மணம் செய்து கொடுக்க உடன்பட்டிருந்தமையால் இவ்வுயிர் அவருக்கே உரியது. ஆதலால் இவ்வுயிரை அவருயிரோடும் இசைவிப்பேன்'' என்று இறக்கத் துணிந்தார். அது கண்ட மருணீக்கியார் வந்து திலகவதியாருடைய இரண்டு பாதங்களிலும் விழுந்து அழுது " அடியேன் நம்முடைய பிதா மாதாக்கள் இறந்த பின்னும் உம்மையே அவர்களாகப் பாவித்துப் பூசிக்கலாம் என்றன்றோ உயிர் வைத்துக்கொண் டிருக்கிறேன். அடியேனைத் தனியே கைவிட்டிறப்பீராயின் அடியேன் உமக்கு முன்னமே இறந்து விடுவேன்'' என்றார். திலகவதியார் அதைக் கேட்டுத் தம்பியார் உயிரோடு இருக்க வேண்டும் என்னும் அன்பினால் தமது கருத்தைத் தடுத்து உயிர்தாங்கி வேறோருவரையும் விவாகஞ் செய்யாது சிவபக்தி உள்ளவராகி வீட்டிலே தவஞ் செய்து கொண் டிருந்தார். (இதன் விரிவைப் பெரிய புராணத்தில் பார்க்க.)

 

பருவம் அடைவதற்கு முன் ஒரு பெண் விதவையானால் அப்பெண் பருவம் அடைந்த பின் தன் கணவன் மரித்த செய்தி பிறரால் கேள்விப் பட்டுத் தன்னுடைய சுகத்தை எளிதில் மறந்து கடவுளைத் தியானித்து நற்கெதி அடைவதைத் தவிர்த்து, பாவமே உருவமாக அமையப் பெற்ற மறுவிவாகம் செய்து, சமீப காலத்துக்குள் அவ்வரனும் மரித்து விட்டால், அதற்குப்பின் அப்பெண் தன்வாழ்நாட்களினின்று நீங்குவதெப்படி?

ஆகையால், அவரவர்களுக்கு அயன் விதித்த பிரகாரம் நடந்தேதீரும். மேலும் ஒருவன் தான் ஜெனனமான தினத்திலிருந்து கஷ்டப் பட்டு வாழ்ந்து வந்தால், அவனுக்கு அவ்வாழ்வு கஷ்டமாகத் தோன்றாது. முதலில் சுகம் அனுபவித்துப் பின்பு கஷ்டம் அனுபவித்தால் அக்கஷ்டம் அதிக கஷ்டமாகத் தோன்றும். ஆகையால் பருவம் அடைந்து சமீபகாலத்துக்குள் விதவையானால் அப்பெண்ணே தான் அனுபவித்த சுகத்தை மறந்து தனது வாழ்நாட்களைக் கழிப்பதானால் ஒன்றும் அறியாத பால்யப் பெண் கணவனை இழந்தால், பருவ மடைந்த பால்ய விதவைகளைப் பார்க்கிலும், எளிதாகத் தனது வாழ் நாட்களினின்றும் நீங்கலாம்.

 

தற்சமையம் சில வகுப்பினர்கள் விதவா விவாகத்தை யனுசரித்து வருகிறார்கள். அவ்விதம் அனுசரிப்பதனால் வருந்தீங்கு மிக உள. விரிக்கிற் பெருகும்; சுருக்கமாய்ச் சொல்லப் புகுங்கால் முதலில் வது வரர்க ளிருவருக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் ஏற்பட்டால் போதும்; அப்போதே அவ்வரன் வேறு மனையாளையும், அப்பெண் வேறு கணவனையும் தேடிக்கொள்கிறார்கள். இவ்விதம் இரண்டு, மூன்று, நான்கு கணவன் தேடும் பெண்களும் உண்டு. அவர்களிடம் பெண்களுக்குரிய நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் குணங்களே நில்லாதொழிகின்றன.

 

ஆகையால் இவ்விதக் குற்றம் வராதபடியும், நமது பிதுர்க்களுக்குத் துரோகம் செய்யாதவர்களா யிருக்கும்படியும், நமது குலத்துக்குத் தாழ்வான சொல் வராதிருக்கும்படியும் பாலியத்தில் விதவையானாலும், புஷ்பவதியான பின்பு விதவையானாலும் விதவா விவாகம் நடத்துவதை அகற்ற வேண்டுமென்பதும், அவ்விதவா விவாகா கற்புடையதல்ல வென்பதும் அறிவில் சிறந்தோர்களாகிய முதியோர்களின் கொள்கை.

 

உண்மையை ஆராயுமிடத்து உத்தமம், மத்திமம், அதமம் என்று பகுக்கப்பட்டிருக்கும் விவாக முறையில் மத்திம விவாகத்தை அனுசரித்து நடத்தும்படியாயும், விதவா விவாகத்தை வேரறக் களைந்து விடும்படியாயும் எனது அன்பார்ந்த நண்பர்களை வேண்டிக்கொள்வதோடும் எல்லாம் வல்ல பரம்பொருளையும் பிரார்த்திக்கிறேன்.


                
E. கிருஷ்ணன்,

டிராயிங்மாஸ்டர், கலகாட்.

 

குறிப்பு: - கற்பரசிகளின் மகிமை அளவு கடந்தது. நம் நாட்டில் அத்தகைய கற்பரசிகள் இருந்தார்களென்பதில் சற்றும் ஐயமின்றாம். யாவற்றிற்கும் மனமே பிரதானகாரணமாதலின் தாய் தந்தையர் தன்னை யாருக்கு மணம் செய்து கொடுப்பதாகச் சம்மதித்தார்களோ, அது முதல் அவனையே ஒரு பெண் கவனாகக் கருதிவிடுவது உத்தம நெறியேயாகும். ஆயினும் கலிகால பேதத்தால் மிக்க மாறுதல் தோன்றியிருக்கக் காணலாம். பாலியத்தில் விதவையானாலும் மறு விவாகம் செய்யலாகா தென்பதை விட யுகதர்மத்தை யனுசரித்து பாலிய விவாகத்தை நிறுத்திவிடுவதே சிறந்ததாகும்.

பத்திரிகாசிரியர்.
ஆனந்த போதினி – 1921 ௵ - மே ௴

No comments:

Post a Comment