Monday, September 7, 2020

 

வாதவூரடிகள் ஞானோபதேசம் பெற்ற வரலாறு

 

விநாயகர் காப்பு.


 சத்தி யாய்ச்சிவ மாகித் தனிப்பா
 முத்தி யான முதலைத் துதி செயச்
 சுத்தியாகிய சொற்பொரு ணல்குவ
 சித்தி யானை தன் செய்யபொற் பாதமே.


சோமசுந்தரக் கடவுள்.


 1.    சடைமறைத்துக் கதிர்மகுடந் தரித்துநறுங் கொன்றையந்தார் தணந்து வேப்பந்,

தொடை முடித்து விடநாகக் கலனகற்றி மாணிக்கச் சுடர்ப்பூ ணேந்தி,

விடைநிறுத்திக் கயலெடுத்து வழுதிமரு மகனாகி மீன நோக்கின்,

மடவரலை மணந்துலக முழுதாண்ட சுந்தரனை வணக்கஞ் செய்வாம்.                                                   (பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல். 10)


தடாதகைப் பிராட்டியார்.


 2.    செழியர்பிரான் றிருமகளாய்க் கலைபயின்று முடிபுனைந்து செங்கோ லோச்சி,

முழுதுலகுஞ் சயங்கொண்டு திறைகொண்டு நந்திகண முனைப் போர் சாய்த்துத்,

தொழுகணவற் கணிமணமா லிகைசூட்டித் தன்மகுடஞ சூட்டிச் செல்வந்,

தழைவுறுதன் னரசளித்த பெண்ணரசி யடிக்கமலந் தலைமேல் வைப்பாம்.                                                                  (பரஞ். திருவிளை. 11)



 

தட்சிணாமூர்த்தி.

 

3.     கல்லாலின் புடையமர்ந்து நான் மறையா றங்கமுதற் கற்ற கேள்வி,

வல்லார்கணால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப் பாலா,

யெல்லாமா யல்லதுமா யிருந்ததனை யிருந்தபடி யிருந்து காட்டிச்,

சொல்லாமற் சொன்ன வரை நினையாம னினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.                                                          (பரஞ். திருவி. 13.)


சித்தி விநாயகக் கடவுள்.


 4.    உள்ள மெனுங் கூடத்தி லூக்கமெனுந் தறிநிறுவி யுறுதி யாகத்
      தள்ளரிய வன்பென்னுந் தொடர்பூட்டி யிடைப்படுத்தித் தறுகட் பாசக்,

கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணை யென்னும்,

வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை நினைந்து வரு வினைக டீர்ப்பாம்.

(பரஞ். திருவிளை. 14.)


சுப்பிரமணியக் கடவுள்.


 5.    கறங்குதிரைக் கருங்கடலுங் காரவுணப் பெருங்கடலுங் கலங்கக் கார்வந்,

      துறங்குசிகைப் பொருப்புஞ்சூ ருரப்பொருப்பும் பிளப்பமறை யுணர்ந்தோ ராற்று,

      மறங்குலவு மகத்தழலு மவுணமட வார்வயிற்றி னழலு மூள,

      மறங்குலவு வேலெடுத்த குமரவேள் சேடிகள் வணக்கஞ் செய்வாம்.

(பரஞ். திருவிளை. 15)

 

சரசுவதி.


 6.    பழுதகன்ற நால்வகைச்சொன் மலரெடுத்துப் பத்திபடப் பரப்பித் திக்கு,

      முழுதகன்று மணந்து சுவை யொழுகியணி பெறமுக்கண் மூர்த்தி தாளிற்,

      றொழுதகன்ற வன்பெனுநார் தொடுத்தலங்கள் சூட்ட வரிச் சுரும்புந் தேனுங்,

      கொழுதகன்ற வெண்டோட்டு முண்டகத்தா ளடிமுடிமேற் கொண்டு வாழ்வாம்.                                                             (பரஞ். திருவிளை. 16.)

 

திருநந்திதேவர்.

 

7.     வந்திறை யடியிற் றாழும் வானவர் மகுட கோடி
      பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையாற் றாக்கி
      யந்தியும் பகலுந் தொண்ட ரலகிடுங் குப்பை யாக்கு
      நந்தியெம் பெருமான் பாத நகைமலர் முடிமேல் வைப்பாம்.

(பரஞ். திருவிளை. 17.)


 

திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்.


 8.    கடியவிழ் கடுக்கை வேணித் தாதை போற் கனற்கண் மீனக்
      கொடியனை வேவு நோக்கிக் குறையிரந் தனையான் கற்பிற்
      பிடியன நடையாள் வேண்டப் பின்னுயி ரளித்துக் காத்த
      முடியணி மாடக் காழி முனிவனை வணக்கஞ் செய்வாம்.

(பரஞ். திருவிளை. 18.)

திருநாவுக்கரசு நாயனார்.


 9.    அறப்பெருஞ் செல்வி பாகத் தண்ணலஞ் செழுத்தா லஞ்சா

மறப்பெருஞ் செய்கை மாறா வஞ்சக ரிட்ட நீல

நிறப்பெருங் கடலும் யார்க்கு நீந்துதற் கரிய வேழு

பிறப்பெனுங் கடலு நீத்த பிரானடி வணக்கஞ் செய்வாம்.

(பரஞ். திருவிளை. 19.)

சுந்தரமூர்த்தி சுவாமிகள்.


10.    அரவக லல்கு லார்பா லாசை நீத் தவர்க்கே வீடு
      தருவமென் றளவில் வேதஞ் சாற்றிய தலைவன் றன்னைப்

பரவைதன் புலவி தீர்ப்பான் கழுதுகண் படுக்கும் பானா

ளிரவினிற் றூது கொண்டோ னிணையடி முடிமேல் வைப்பாம்.

(பரஞ். திருவிளை. 20)

திருவாதவூரடிகள்.

 

11.    எழுதரு மறைக டேறா விறைவனை யெல்லிற் கங்குற்

பொழுதறு காலத் தென்றும் பூசனை விடாது செய்து

தொழுதகை தலைமே லேறத் துளும்புகண் ணீருண் மூழ்கி

யழுதடி யடைந்த வன்ப னடியவர்க் கடிமை செய்வாம்.

(பரஞ். திருவிளை. 21.)

 

சண்டேசுரநாயனார் முதலிய திருத்தொண்டர்.


12.    தந்தைதா ளொடும் பிறவித் தாளெறிந்து நிருத்தரிரு தாளைச் சேர்ந்த,

மைந்தர் தாள் வேதநெறி சைவநெறி பத்திநெறி வழாது வாய்மெய்,
சிந்தைதா னரனடிக்கே செலுத்தினராய்ச் சிவானுபவச் செல்வ ராகிப்,
பந்தமாந் தொடக்கறுத்த திருத்தொண்டர் தாள்பரவிப் பணிதல் செய்வாம்.

(பரஞ். திருவிளை. 22.)



 

 

சந்தான குரவர்.


 13.   ஈராண்டிற் சிவஞானம் பெற்றுயர்ந்த மெய்கண்டா ரிணைத்தாள் போற்றி,

நாராண்ட பல்லடியார்க் கருள்புரிந்த வருணந்தி நற்றாள் போற்றி,
நீராண்ட கடந்தைநகர் மறைஞான சம்பந்தர் நிழற்றாள் போற்றி,

சீராண்ட தில்லைநக ருமாபதியார் செம்பதுமத் திருத்தாள் போற்றி.


தருமை, அருணந்திதேசிகர்.


 14.   அருணந் தாதென்று மாணவத் தடையினா லயர்வுற்றுக் கிடந் தேனைப்,

பொருணந் தாவகைப் பலமொழி யின்றியோர் புனிதவாய் மொழி யாலே,

தருணந் தானிது தத்துவங் கடந்து நீ தனையடை வாயெனவே,
      அருணந் தாதரு ளருணந்தி தேசிக னரவிந்தத் தாட்டுணையே.

 

நாடு.


15.    புண்ணிய வெண்ணீறாய பொருவரு கவசம் பூண்டு

கண்ணிய பத்தி வைராக் கியமெனும் படைகை யேந்தி

      யெண்ணிய சரியை யாதிச் சேனைநான் கெழப்ப ரப்பித்

திண்ணிய சனனத் தெவ்வைச் செறுவது பாண்டி நாடு.

(திருப்பெருந்துறை - நாட்டு. 9.)

 

16.    முருகன் சங்கத் திருப்பவனம் முக்கட் கடவு ணிற்பவன்வா

ளரசன் புயலை விலங்கிட்டோ னனலும் புனலு மியலறியும்

புரமு மதுர மானபுரம் புல்வாய் புலியின் முலையுண்ணு
நரியும் பரியா நதியிதழி மணக்குங் கன்னி நன்னாடு.
                                          (திருவாலவாயுடையார் - நாட்டு. 3)


 
நகர்.

 

17.    இருந்தவர் துதிமு ழக்கு மிகற்கரி பரிமுழக்கும்
பொருந்தவிண் ணவர்கள் வந்து போதலிற் படுமு ழக்குந்
திருந்தமற் றெழுமு ழக்குஞ் செயிரறத் துஞ்சும் போது
மருந்தமிழ் முழக்குந் துஞ்சா தாலவா யென்னு மூதூர்.
                                    (திருப்பெருந்துறை - அமைச்சுரிமை. 3.)


18.    விழவொலி கண்ப டாது வீதியின் மிமிறும் வண்டு

முழவொலி கண்ப டாது தொங்கலி னுவக்குஞ் செவ்வாய்
மழவொலி கண்ப டாது மாடத்தி னரங்கந் தோறு
முழவொலி கண்ப டாது முத்திகண் படுக்குங் கூடல்.      (௸ - ௸ 4.)

 

19.    எதிரினம் மிறைகு லத்து முதலிலங் கிரதந் தோற்றுங்

கதிர்பொரா திளைத்துக் கூனுங் கைக்கொடு நரைத்து வானத்
ததிர்வுற வியங்குந் தாங்க லறமென மாட முன்னாற்
பிதிர்வறத் தாங்கி யுய்க்கும் பெரும்புகழ் மதுரை மூதூர்.         (௸ - ௸ 2)


20.    திருவால வாயென்று கேட்டவரே யறம் பெறுவர் செல்வ மோங்குந்

திருவால வாயென்று நினைத்தவரே பொருளடைவர் தேவ தேவைத்
திருவால வாயிடத்துக் கண்டவரே யின்பநலஞ் சேர்வ ரென்றுந்
திருவால வாயிடத்து வதிந்தவரே வீட்டு நெறி சேர்வ ரன்றே.
                                             (பர - திருவிளை - தலவிசே. 6)


21.    சுரந்திசூழ் காசிமுதற் பதிமறுமைக் கதியளிக்குந் தூநீர் வையை

வரந்திசூழ் திருவால வாய்சீவன் முத்திதரும் வதிவோர்க் கீது
திரன திகம் பரகதியும் பின் கொடுக்கு மாதலினிச் சீவன் முத்தி
புரான திக மென்பதெவனதற்கதுவே யொப்பாமெப்புவனத் துள்ளும்.
                                                (பர - திருவி - தலவிசே. 7.)


22.    பூழி யகழ்ந்த குழிநிரப்பும் புலவ ரமல னொடு மலைவோ

ராழி யேழு மொருதடத்தி லமரு மதுவோ வுலகேழுஞ்
சூழு மூன்று முலையிருமை யொரு பெண் பிறந்து சோதியுடன்
வாழு மதுரை வளங்கூற யாமார் மறந்து மாநிலத்தே.
                                            (திருவாலவாயுடை - நகரச். 16)

அரசன்.

 

23.    திகழ்பெரும் பாண்டி நாட்டின் றிருமுக மாகி யென்றும்

புகழ்மிகு மனைய கூடல் புரப்பவ னூறுற் றாலு
நிகழ்தரு தண்மை நீங்கா நிலாமதிக் குலத்து வந்தா
னகழ்மறத் தினன்கு லேச னருந்தவத துதித்த நீரான்.
                                    (திருப்பெருந்துறை - அமைச்சுரிமை. 5.)


24.    அருளுரு வாய செல்வி யங்கயற் கண்ணி யோடுந்

தெருளுற வமருஞ் சுந்த ரேசர்தந் திருத்தாட் கன்பும்
பொருள் பெறு தமிழு மோவாப் புகழுநன் னீதி யாவு
மருளறத் தவஞ்செய் தீன்ற மகவுபோல் வளர்க்க வல்லான.
                                    (திருப்பெருந்துறை - அமைச்சுரிமை. 6.)


25.    எங்கணும் வியாபித் துள்ளா னிவனென வரியா ராகித்

தங்களுள் வேறுவேறு பிதற்றுவார் தவாநாண் கொள்ள
வங்கையிற் பிரம்பு கொண்டே யறிவிக்கு மறிவான் மிக்கான்
கங்கையிற் பொலியுந் தூய்மை கருத்துறத் திருத்தி னானால்.
                                    (திருப்பெருந்துறை அமைச்சுரிமை. 7.)

26.    திரிபற வனைத்து நூலுந் தெரிந்தவன் பகைவர் தம்மைப்

புரிசினக் களிற்றிற் சிங்கம் புகுந்தெனப் புடைக்கு மாற்றா
லரி மருத் தனனெ னும் பேர் பெற்றவ னவனி யெல்லாம்
பரிவறச் செங்கோ லுய்த்துப் பண்பொடு வாழு நாளில்.
                                    (திருப்பெருந்துறை - அமைச்சுரிமை. 8.)

 

வாதவூர்.


27.    வரைவளைய நடுப்பொலியு மாநிலமா மடக்கொடிக்குப்

புரையிறிரு முகமாகும் பூழியர்கோ மான்றிருநா
டுரை செயுமம முகக்கண்ணா யொளிர்தருங்கா விரியினுநீர்
கரையறமே லெழும்வையைக் கரையுளதாம் வாதவூர்.
                                          (திருப்பெருந் - திருவவதார. 2)


28.    ஆதியா தித்தன் சோம னக்கினி தமது பேரால்

வேதியர் தமைவந் தேத்தி விளம்புமுன் னுகங்கண் மூன்றுங்
காதலின் வணங்கக் கண்டு கடையுகம் வாத ராச
னீதியின் வணங்க வாத புரமென நிகழு மூதூர்.
                                                (திருவால் ஞானோப. 4.)


29.    சிறவாத நெறியகற்றிச் சிறந்த நெறியினை நிறுத்தி

மறவாத வன்புகொடு மண்ணொடுவான் றுதித்துய்யப்
பிறவாத நெறியடைந்த பெருந்தகைமு னவதரித்த
வறவாத வூர்ப்புகழை யாமேயோ வறைகிற்போம்.
                                          (திருப்பெருந் - திருவவதா. 15.)

 

தந்தைதாயர்.


30.    இந்தநக ரகம்வாழு மிருபிறப்போர் தங்குழுவு

ளந்தமிலாப் புகழபெறமா மாத்தியர்தங் குலத்துதித்தார்
சந்தமிகு மறையொழுக்கந் தலைநின்ற பெருங்குணத்தார்
பந்தமகற் றிடுஞ்சைவப் பற்றுவழி வழியமைந்தார்.

                                      (திருப்பெருந்துறை - திருவவதா - 16)


31.    தன்னமுமா சில்லாதார் சம்புபா தாசிருத

ரென்ன நவி னாமத்தா ரெல்லாருந் தொழப்பொலிவா
ரன்னவரில் லறக்கிழமை யமைந்தொழுகு கடன் பூண்டார்
மின்னவிருஞ் சிவஞான வதியெனும் பேர் மேவினார்.

                                                      (௸ - ௸ 17.)

 

 

32.    இத்தகைய மனையாரோ டியைந்து வாழ் தருமறையோ

ருத்தமர் வெம் பரசமயக் குறும் பொழிக்கு மொருமதலை
யத்தரரு ளாற்பெறுவா னாதரித்த கருத்தினராய்ச்
சித்தமொரு வார் தினமுஞ் சிவாலயத்தில் வழிபடுவார்.

                                                      (௸ - ௸ 18.)


33.    கதிருதய மெழுமுனமைங் கடிகையெனத் துயிலொருவி

யதிர்புனலின் முழுகுபுநீ றணிந்து விழி மணிபூண்டு
சதிருறுமைந் தெழுத்தெண்ணித் தழைதருநந் தனம் புகுந்து
பிதிர்தலிலா மலர்குற்றுப் பிறங்குதொடை தொடுத்தணிந்தும்.

(௸ - ௸ 19)


34.    ஆனநறு நெய்வாக்கித் திருவிளக்கு நனியமைத்து

மோனவடி யவர்க்காணின் முந்துபு சென் றுபசரித்து
மானவமு தூட்டியுமவ் வாதவூரிறைவர் விழா
வீனமறச் சிறப்பித்து மினும் பல செய்தியலுநாள்.

(௸ - ௸ 20)


35.    அதுதெரிமா முனிவரரு மமருமற் றவர்க்கிறையுஞ்

சதுமுகனு நெடுமாலுந் தாங்கரிய கவலையராய்
முது புகழ்சா றிருக்கயிலை முன்னுபுநந் தியை வணங்கிக்
கதுமெனயா மிறையவன் பொற் கழறொழவந் தனமென்றார்.

                                      (திருப்பெருந் - திருவவதா - 22.)


36.    நந்தி புகுத்திடப்புகுந்து நம்பெருமான் கழல் வணங்கிப்

பந்தியினின் றனர்வந்த கருமமெவன் பகர்மினென
வந்திமதி முடித்த பிரா னருளுதலு மாறொழுது
முந்தி மொழி குவன் பிடகர் முயன்று செய்தீ வினையனைத்தும்.

(௸ - ௸ 23.)


37.    திரைக்கடல்சூ ழுலகமெலாஞ் சீவரப்போர் வையரடர்ந்து

வரைக்கரும்வை திகசைவ மார்க்கமொழித் தனரதனா
லுரைக்கருந்திக் கருமமிலை யும்பர் பசித் தனர்மெலிந்தார்
அரைக்கலைதிக் காகவுளா யடியேங்கள் செய்வதெவன்.   

(௸ - ௸ 24.)


38.    என்று குழைந் திஃதடியேம் விண்ணப்ப மென்றிசைப்பக்

குன்றுகவித் தவன் முதலீர் கொடியசாக் கியர் வலியை
வென்றுகளை குவநீவிர் போதிரென விடை கொடுத்து
மன்று நடிப் பவனவர் கோண் மாற்றான் மனங் கொண்டிருந்தான்.

                                                      (௸ - ௸ 25.)

 

39.    அதுக்கருதி யமர்தருநா ளாயிரவர் கணநாதர்

சதுமறையும் புகழ்நாலாஞ் சத்திபதிந் தவர் குழுமிப்
புது மதிய முடித்தபிரான் பொன்னடிதாழ்ந் தனரெழுந்தார்
முது புகழா கமத்துண்மை மொழிந்தருள வேண்டுமென.   

                                                      (௸ - ௸ 26)


40.    எழுகணநா யகர்தமையோ ரிடத்திருத்தித் தானுமிருந்

துழுபமரம் பசியவிய வொழுக்கு தேங் கொன்றையினான்
முழுவலுடை மற்றவர் தம் முகநோக்கி யாகமத்தின்
செழுமயமா முண்மை சொல் வுபக்கிரமஞ் செயல் குறித்தான்.

                                                      (௸ - ௸ 31.)


41.    வெள்ளியமா மலைமேலோர் மின்னலொடோர் கருமேகம்

வள்ளிய செந் தாமரையா யிரம்பூத்து வைகுதல்போற்
றெள்ளியவெள்ளானையின்மேற் றிசுழ்புலோ மசையினொடு
முள்ளியவா யிரங்கண்மலர்ந் துறுவரராக் கம்புகல.       

                                                      (௸ - ௸ 36.)


42.    வெளியாய நடவையிடை விளங்கவரு மிந்திரனைக்

களியாய கருத்தினொடுங் கண்டு வந்தொல்லையின் மறந்தார்
தெளியாய கணநாத ராயிரருட் சேரொருவர்
வளியாய வுணவுணும்பூண் மாதேவனஃதுணர்ந்து.   

                                                      (௸ - ௸ 37.)

 

நந்திதேவர் - கணநாதர்.

 

43.    உண்மையுரைத் திடநாமே யுபக்கிரமஞ் செயுங்காலை

வண்மையிது வெனவேறோர் விடயத்து மனமுய்த்தாய்
தண்மையின்மற் றிதனாலித் தரணியிலோர் பிறப்புற்றே
யண்மையினச் செல்வமனு பவித்து நமை யடைகென்றான்.

(திருப்பெரு - திருவவ. 39.)

 

44.    என்று சொல் நடுநடுங்கி யென்செய்கே னெனக்கதறு

நன்று தெரி கணநாதர் முகநோக்கி நம்பெருமா
னொன்றும் வெரு வலைநாமே யுன்றலைமே லடிசூட்டிக்
கொன்றுமல மின்பநிலை கொளச்செய்வோ மெனப்புகன்றான். (௸ - ௸ 40)

 

* குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொண்டார்

குடமுழநந் தீசனைவா சகனாக் கொண்டார்

 சிராமலைதஞ் சேர்விடமாத் திருந்தக் கொண்டார்

தென்றனெடுந் தேரோனைப் பொன்றக் கொண்டார்

பராபரனென் பது தமது பேராக் கொண்டார்

பருப்பதங்கைக் கொண்டார் பயங்கள் பண்ணி

இராவணனென் றவனைப்பே ரியம்பக் கொண்டார்

இடருறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.

(தனித்திருத் தாண்டகம். 11.)

 

* ஸ்ரீ ஆதிகைலாச மகாத்மியம், ஸ்ரீ மணிவாக்கிய சரித்திரத்தில் இவ்வாறு கூறப்படுகின்றது.

 

திருவாதவூரர்.

 

45.    விடைகொண்டு பரமனருண் மேற்கொண்ட கணநாத

ருடை கொண்ட கடன்மடந்தை யுவப்பெய்த வாதவூர்
நடை கொண்ட சம்புபா தாசிருதர் நன்மையா
லடை கொண்ட திருவயிற்றி னங்குரிக்குங் கருவானார்.

(திருப்பெரு - திருவவ. 41.)

 

46.    மதியமொரு பதுஞ்செல்ல மாமறைநூ றலையெடுப்ப

விதியமையு மாகமங்கண் மேன்மேலுங் களிசிப்பத்
துதியமைபு ராணமெலாந் தொக்கொருங்கு கூத்தாடத்
திதியமைபல் பாடையுளுந் திராவிடமிக் குவப்பெய்த,

(௸ - ௸ 43.)

 

47.    வெய்யலன் முற் கோளனைத்தும் விரோதமிலா நிலைநிற்க

வையகமெல் லாம்பரந்து மந்தமா ருதமுலவக்
கையமையாக் குறும்பனைத்துங் களைந்துலகம் புரப்பவர்தஞ்
செய்யநெடுங் கோல்பொலியத் திருவவதாரஞ்செய்தார்.

                                                      (௸ - ௸ 47.)

 

48.    பிறையெனநா டொறும் வளர்ந்து பிறங்கியா வோருமெடுத்

தறைபதினா றகவையுளா லாரணமே யாகமமே
நிறைதருபு ராணமே நிகழ்த்திடுமற் றுளவனைத்துங்
குறையறக்கற் றுணர்ந்தாரெங் குடிமுழுது மடிமை கொள்வார்.

                                            (திருப்பெரு - திருவவ. 62.)

 

49.    மிக்கலையுஞ் செழுநீரு மதிக்கலையு மிலைக்குமவ

ரக்கலையந் தோளர்புலி யதட்கலையர் நல்லருளா
லொக்கலையும் பிறக்கலையு மொழிந்திடுமா கமகலையு
மெக்கலையுங் கற்றுணர்ந்தா ரீரெட்டாண் டெல்லையினில்.

                                       (திருவாதவூரர்புரா - மந்திரிச். 12)


 

50.    திருவமிகு குடிப்பிறந்த செயலானு மதர்வண நூ

      லொருவவுணர்ந் தவரல்ல ருதனாலுங் கரிபரிதேர்

மருவவுகைத் தலுந் தெரிந்தார் தெரியாத வகையாதே

பருவமுறா வெமக்கு மருள் பாலிக்கும் பெருந்தகையார்.

(திருப்பெருந் - திருவவ. 63)

 

51.    வேதமுத லெக்கலையு மேதினியி னுணர்வார்தம்

போதமொரு சங்கையுறிற் றிருவாத வூர்புகுந்து
நாதவெனத் தொழுதேத்தி நவின்று தெளிந் தேகுவரேற்
சாதமிவர் கல்வி நிலை யெவரளக்கத் தக்காரே.

                                                      (௸ - ௸ 64.)

அமைச்சு

 

52.    அறிவுடை மாந்தர் சில்லோ ரடுத்தன ரொருகா ளன்னார்

      நெறிவர வுவப்பி னேற்று நிலவிய நந்நாட் டேனுங்

குறிகெழு பிறநாட் டேனுங் குலவதி சயமென் னென்றான்

செறிமலர்த் தொடையி னாயீ தென்றவர் செப்ப வற்றார்.

(திருப்பெருர் - அமைச்சுரி, 9)

 

53.    இந்தமா நகர்க்கடுத்த விரும்பொழில் வாத வூரி

லந்தமா தியினம் பெம்மா னருட்பெருந் திறத்தி னாலே
வந்தவா றாகுமாமாக் தியமறை யஉர்கு லத்தின்
முந்தவா தரித்து தித்தா ரொருவரியா மொழிவ தென்னே. (௸ - ௸ 10)

 

54.    அவர்பெயர் வாத வூர ரகவையீ ரெட்டுற் றார்மற்

றவரதி மதிநுட்பத்தைக் கல்வியை யளப்பா ரியாவ.
ரவர் திற முலக மூன்றும் வேட்பதா யமைந்த தைய
வவர் திற மொரு நீ காணத் தக்கதென் றறைந்து போனார். (௸ - ௸ 11.)

 

55.    சான்றவர் வார்த்தை கேட்ட தார்த்தடம் புயக்கோ மாற

னான்றவ ரவரைக் காணு மதிவிருப் புடையனாகி
யேன்றவர் சிலரை விட்டா னெய்தியாங் கவர ழைப்ப
மான்றவர் கருதா வையர் எழுதிமு னடைந்தா ரன்றே.     (௸ - ௸ 12.)

 

56.    இளங்கதி ருதய மேயென் றிசை திரு மேனிப் பண்பும்

களங்கமின் மதியர் தோன்றிற் றெனுங்கவின் முகமுங் காம
ருளங்கெழு செய்ய வாயு மொள்ளிய கருணைக் கண்ணும்
வளங்கெழு மார்புந் தோளு மனங்களி பயப்பக் கண்டான்.   (௸ - ௸ 13.)

 

 

 

57.    மறைமுதற் கலைகளெல்லா மாண்புற வினாவுந் தோறுங்

குறைதவிர் விடைகொடுக்கக் கொற்றவ னுவகை பூத்து
நிறையெது வினாவி னாலு நிகழ்த்திடு மிவர்க்கின் றாதி
யறைகு திர் பிரம ராய ரென்றமைச் சரைப்பார்த் தோதி   

(௸ - ௸ 14.)

 

58.    பழுதற நமக்குக் கண்ணாய்க் கவசமாய்ப் பாதுகாக்கு

முழுதுண ரமைச்சி ருங்க டமக்கெலா முதன்மை யாகச்
செழுமறைப் பிரமராயர் தமைச்செய்தோஞ் செய்தோ மென்றான் -
வழுதியவ் வமைச்ச ரெல்லா மகிழ்ந்தன மகிழ்ந்தோ மென்றார்.  

(௸ - ௸ 17.)

 

ஆனந்த போதினி – 1928 ௵ -

ஏப்ரல், மே, ஜுன், ஆகஸ்ட் ௴

 

   

 

No comments:

Post a Comment