Monday, September 7, 2020

 

வைஷ்ணவ ஆசார்யர் பிரபாவம்

(T.R. பெரிய நம்பியார்.)

இராமாநுசர் என்பவர் ஓர் சிறந்த ஸ்ரீவைஷ்ணவ குரு. கோவிந்தன் இவரது சிஷ்யன்.
இவர்கள் ஸ்ரீரெங்கத்தில் வாசம் செய்தனர். ஓர் நாள் கோவிந்தன் ஓர் கூட்டத்திலிருக்கும் போது கூட்டத்தார் கோவிந்தனது ஞான, பக்தி, வைராக்கியங்களை சிலாகித்துப் பேசி தலைகுலுக்கினார்கள். அப்போது கோவிந்தனும் அவர்களை நோக்கி ''நீங்கள் கூறுவது சரிதான், நீங்கள் கூறும் புகழ்வார்த்தைகள் என் பக்கல் ஒக்கும் ஒக்கும்” எனக் கூறி தானும் தலை குலுக்கினான். இதைக் கூட்டத்தார் கண்டு ஆச்சர்யமுற்று இராமாநுசரிடம் சென்று கோவிந்தனது செயலைத் தெரிவித்தனர்: இராமா நுசர் கோவிந்தனை யழைத்து;

"கோவிந்தா! கூட்டத்தார் உன்னைப் புகழ்ந்து பேசினால் நீ செய்ய வேண்டிய தென்ன? அப் புகழ்ச்சிக்கு யான் அருகதையில்லை யென்று நைச்சியானு சந்தானம் செய்ய வேண்டாமா? அப்படிச் செய்யா மல் அவர்கள் கூறுவதை நீயும் அங்கீகரித்துத் தலை குலுக்கினால் அது தற்புழ்ச்சி யாகு மல்லவா?

கோவிந்தன்: - (இராமாநுசரை வணங்கி) "ஸ்வாமி! முழு மூடனான அடியேனை இவ்வளவு பிரக்கியா தியாகும்படி செய்வித்தது தாங்களல்லவா? ஆதலால் அடியேனுக் கேற்படுகிற பிரக்கியாதிக ளெல்லாம் தங்களைச் சார்ந்ததேயன்றி அடியேனுக் கொன்று மில்லை. ஆனது பற்றியே அவர்கள் கூறும் புகழ் வார்த்தைகளை அடியேன் அங்கீகரிக்க நேரிட்டது.''

பின்னொரு நாள் மாலை நேரத்தில் ஓர் வீட்டில் ஓர் தாசி பாடிக் கொண்டிருந்தாள். அப்போது வீதியின் வழியே சென்று கொண்டிருந்த கோவிந்தன் அப் பாடலைக் கேட்டுப் பரவசப்பட்டு வீதியிலேயே நின்று தலையையசைத்தவண்ணமா யிருந்தான். இனத சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் கண்டு இராமாநுசரிடம் சென்று "ஸ்வாமீ! நம் கோவிந்தன் மாலை நேரத்தில் செய்ய சந்தியாவந்தனத்தையும் மறந்து வீதியில் நின்று ஓர் தாசியின் பாடலைக் கேட்டு ஆனாந்தித்துக் கொண்டிருக்கிறா" னெனக் கூறினார்கள். இராமாநுசர் கோவிந்தனைத் தருவித்து;

“கோவிந்தா! நீ இதுவரை ஓர் தாசியின் பாடலைக் கேட்டு ஆனந்தித்துக் கொண்டிருந்தா யெனக் கேள்வியுற்றோம். காமுகர்க ளல்லவா தாசியின் மயக்கில் ஈடுபடுவார்கள். உனக்கே னிந்தத் துர்ப்புத்தி உண்டாயிற்று?'

கோவிந்தன்: - ''ஸ்வாமி! அத்தாசி தங்களுடைய கீர்த்திப் பிரதாபங்கவடங்கிய தாலாட்டை இனிய குரலில் பாடினாள். அது அடியேனது செவியிற்படவே செவிக்கினிய செஞ் சொல்லாய் அடியேனை மயக்கி விட்டது. ஆசார்யனது குணானுபவத்தைக் காட்டிலும் சந்தியாவந்தனம் அடியேனுக்குப் பெரிதாய்த் தோற்ற வில்லை.''

ஒரு காலத்தில் கோவிந்தன் பெரிய திருமலை நம்பிகளுக்கு சிஷ்யனாயமைந்து சகல கைங்கர்யங்களும் செய்து கொண்டிருந்தான். ஓர் நாளிரவில் கோவிந்தன் நம்பிகளுக்குப் படுக்கை திருத்தியமைக்கும் போது படுக்கையில் தான் முந்துறப் படுத்து உருண்டு புரண்டு எழுந்தான். இதைக் கண்ணுற்ற இராமாநுசர் கோவிந்தன் செயலை நம்பிகட்குத் தெரிவித்தார். நம்பிகள் கோவிந்தனை யழைத்து;

"கோவிந்தா! எமக்காகத் திருத்திய படுக்கையில் நீ முந்துறப்படுத்து எழுந்ததாகக் கேள்வியுற்றோம். ஆசார்யன் விஷயத்தில் நீ இப்படி அபசாரப் படலாமா? இவ் வபசாரத்திற்குப் பலன் என்ன வென்பது உனக்குத் தெரியுமா?'

கோவிந்தன்: - ''தெரியும் ஸ்வாமி! நரகமே இதற்குப் பலன்.''

நம்பிகள்: - " இது தெரிந்திருந்தும் இப்படிச் செய்வானேன்?''

கோவிந்தன்: - “அடியேன் திருத்தியமைத்த படுக்கையில் ஏதாவது தூசு துரும்புக ளிருந்து தங்கள் திருமேனிக்கு ஊறுதல், உறுத்தல் செய்யாமைக்காக அடிடேன் முந்துறப் படுத்துப் பரிசோதனை செய்தேன். எவ்விதமும் தங்கள் திருமேனியின் சுகத்திற்குப் பங்கம் நேரிடாமல் பாதுகாப்பதே அடியேனது கடமை. இதனால் அடியேனுக்கு நகரகானுபவம் வந்தாலும் வரட்டும். அனுபவிக்கச் சித்தமா யிருக்கிறேன்.”

பட்டர் என்பவர் ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய பரம்பரையைச் சேர்ந்தவர்.
கல்வி கேள்விகளில் தேர்ந்தவர். ஓர்நாள் இவர் சீடர்களுக்கு உபதேசம் செய்யும் போது ''மாந்தர்கள் பகவானை அலங்கரித்துக் கண்டு களிக்க வேணுமே யொழியத் தங்களைத் தாங்களே அலங்கரித்து ஆனந்திப்பது கூடா தென உபதேசம் செய்தார். பின் சில தினங்கள் கழித்து ஸ்ரீ ரெங்கநாதப் பெருமாள் சந்நிதியில் அத்யயன உற்சவம் நடை பெற்றது. ஏராளமான ஜனங்கள் கூடினார்கள். ஆசார்யரான பட்டரும் சர்வாபரண பூஷிதராய் உயர்ந்த பட்டுப் பீதாம்பரங்களை யணிந்து ரெங்கநாதன் சந்நிதிக்கு வந்திருந்தார். அப்போது பட்டருடைய சிஷ்யர்கள் பட்டருடைய படாடோபத்தைக் கண்டு “நமது ஆசார்ய ஸ்வாமி நமக்குச் சொல்வதொன்று, தான் செய்வ தொன்றுமா யிருக்கிறது'' எனத் தங்களுக்குள் பேசி முணுமுணுத்துக் கொண்டார்கள்.

இதையறிந்த பட்டர் அச்சீடர்களை நோக்கி ''சீடர்காள்! உங்கள் நினைவில் ஓடுவதை அறிந்தோம். யாம் எம்மை அலங்கரித்துக் கொண்டது எமது மகிழ்ச்சிக்காகவல்ல. இதோ பாருங்கள்! ஸ்ரீ ரெங்கநாதன் எழுந்தருளும் பந்தலை எவ்வளவு சிங்காரமாய் அலங்கரித்திருக்கிறது. பந்தல் கால்களில் எவ்வளவு அலங்காரமான பொம்மைகள் வைக்கப் பட்டிருக்கிறது. அதுபோல் யாமும் இப் பந்தலின் காலுக்கு ஒரு பொம்மையாக அமைந்து நிற்கவே இத்தகைய கோலம் கொண்டோம். இவ்வலங்காரங்க ளெல்லாம் ரெங்கநர தனது ஐசுவரியத்தை விளக்குதற்காகவும் இங்கு கூடும் பக்த கோஷ்டிகளின் முகோல்லாசத்திற்காகவும் ஏற்பட்டிருக்கிற தென்பதை நினைவில் வையுங்கள்'' எனக்
கூறினார்.

பட்டர் ஐந்து பிராயமா யிருக்கும் போது ஓர்நாள் வீதியில் புழுதியளைந்து வினையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஓர் அத்வைத வித்வான் பல்லக்கில் ஆரோகணித்து சின்னம் முதலிய விருதுகள் ஊதிவர வீதியின் வழியாய் வந்து கொண்டிருந்தார். பட்டர் இம் முழக்கத்தைக் கேட்டு ஏறிட் இப்பார்த்து ''யாரடா இவன்! இராமாநுசர், ஆழ்வான், எம்பார் முதலிய ஆசார்யஸ்வாமிகள் எழுந்தருளி யிருக்கும்படியான இந்த ஷேத்திரத்தில் விருதூதிக்கொண்டு பல்லக்கில் வருகிறான். இவன் கெர்வத்தை அடக்கவேணு" மென்றெண்ணி அப் பல்லக்கின் முன்னே போய் நின்றார். வித்வான் குழந்தையை நோக்கி;

“குழந்தாய்! என் பல்லக்கை மறித்துக்கொண்டு நிற்கிறாய்?"

பட்டர்: - "நீர் வித்வானா யிருந்தால் யான் கேட்கும் சிறு கேள்விக்கு விடையிறுத்து அப்பால் செல்லவேண்டும்.''

வித்வான்: - (சிரித்து) “சரி, அப்படியே யாகட்டும். உன் கேள்வியைச் சொல்லு?"

உடனே பட்டர் ஒரு கை நிறையப் புழுதி மண்ணை அள்ளி வித்வானிடம் காட்டி “இதில் எவ்வளவு புழுதி அடங்கி யிருக்கிறது? சொல்லும்!" எனக்கேட்க வித்வான் விடை சொல்ல வகையறியாமல் மிரள மிரள விழித்தான். பட்டர் சிரித்து இது ஒரு கைப்பிடி மண்ணென்று சொல்ல வகையறியாத உமக்கு பல்லக்கும் விருதும் எதற்கு எனக்கூற, வித்வான் வெட்கித்தலை குனிந்தான்.

பட்டர் ஆசார்யரா யிருந்து தர்ஸனத்தை நிர்வகித்து வரும்போது வீரசுந்தரன் என்ற ஓர் அரசன் பட்டருக்கு விரோதியாயிருந்து பல கஷ்டங்களை உண்டு பண்ணிக்கொண் டிருந்தான். சிலகாலம் சென்ற பிறகு தற்செயலாய் அவ்வரசன் மாண்டு போக, இதையறிந்த சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் மகா சந்தோஷத்துடன் பட்டரின் திரத்தாயாரான ஆண்டா எம்மையிடம் ஓடிவந்து ''அம்மணீ? பட்டரின் விரோதியான வீரசுந்தரன் மாண்டு போனான்'' எனக் கூறிப் பல ஆர்ப்பாட்டங்களைச் செய்தனர்.

ஆண்டாளம்மை இதை யறிந்ததும் மகா துக்கத்துடன் திருமாளிகைக் கதவைச்சாத்தி ஓர் மூலையி லிருந்து உரத்த குரலில் அழத் தொடங்கினாள்.

இதைக் கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆச்சர்யமுற்று ஆண்டாளம்மையை நோக்கி;

"அம்மணி! விரோதியான அரசன் மாண்டு போனால் நாமெல்லோரும் சந்தோஷம் கொண்டாட வேண்டியிருக்க, அப்படிச் செய்யாமல் நீர் இப்படித் துகிப்பதின் காரணம் என்ன?'

ஆண்டாள்: - "பிள்ள காள்! நீங்கள் நுணுக்கமாய் ஒன்றையும் கவனிக்கிறதில்லை. மாண்டுபோன வீரசுந்தரன் நம் ஆழ்வானது சிஷ்யனல்லவா? தற்காலம் அவன் புத்தி கெட்டு பலருக்குப் பல கெடுதிகளைச் செய்து வந்தாலும் இன்னும் கொஞ்ச காலம் உயிருடனிருந்தால் ஒரு வேளை அவனுக்கு நற்புத்தி பிறந்து பலரிடம் அனுதாபங்காட்டி மன்னிப்புக் கேட்டு உய்வதற்குடமுண்டு. இப்போது அவன் மாண்டு போனபடியால் இனி அப்படிப்பட்ட உஜ்ஜீவனத்திற்கு வழியில்லை. ஆழ்வானுக்கு சிஷ்யனாயமைந்த ஓர் ஆத்ம
வஸ்து அநியாயமாக யமபடர்கள் கையிலகப்பட்டு வருந்த நேரிட்டதே யென்ற துக்கம் அடியேனை வாட்டுகிறது."

7. உய் பக்கொண்டார் என்பவர் ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களில் ஒரு வர். அவருக்கு மணக்கால் நம்பி என்ற ஓர் சிஷ்யன் உண்டு. ஓர் நாள் உய்யக் கொண்டாரது புத்திரிகள் இருவர் திருக்காவேரிக்கு ஸ்நானம் செய்யச் சென்றார்கள். அப்போது மணக்கால் நம்பியும் துணையாகச் சென்றார். அப்பால் அப்பெண்கள் ஸ்நான முடித்துத் திரும்புகையில் வழியில் சேறுந் தண்ணீருமாக ஒரு சிறுகால் எதிர்ப்பட, அவாகள் அதிலிறங்க அசங்கியப்பட்டு திகைத்து நின்றார்கள். அப்போது மணக்கால் நம்பி திடீரென அச்சேற்றில் குப்புற விழுந்து படுத்துக்கொண்டு தன் முதுகில் அடிவைத்து அச்சேற்றைக் கடக்கும்படி அப்பெண்களை வேண்டிக்கொண்டார். அவ்விதமே பெண்களும் மணக்கால் நம்பியின் முதுகில் அடிவைத்து மிதித்து சேற்றைக் கடந்து திருமாளிகை சென்றார்கள்.

இதுவிபரம் உய்யக்கொண்டாருக்கு அறிவிக்கப்படவே அவர் புத்திரிகளைக் கோபித்து மணக்கால் நம்பியிடம் மன்னிப்புக் கேட்கும்படி அவர்கட்குக் கட்டளையிட்டனர். அப்போது மணக்கால் நம்பி உய்யக்கொண்டார் பாதங்களில் விழுந்து சேவித்து “சுவாமீ! பிறர்க்கு உதவி செய்வதே மனித ஜென்மம் எடுத்ததின் பலனாயிருக்கிறது. அதிலும் ஆசார்ய புத்திரிகளுக்கு உதவி செய்வது மிகச் சிறந்ததாகிறது. ஏதோ அதிர்ஷ்டவசமாய் இன்று அடியேனுக்கு அந்த பாக்கியம் கிடைத்தது. இனி பிரதி தினமும் அந்த பாக்கியம் அடியேனுக்குக் கிடைக்கும்படி அருள்புரிய வேண்டும்'' எனக் கூறினார்.

ஆனந்த போதினி – 1937 ௵ - மார்ச்சு ௴

 



No comments:

Post a Comment