Tuesday, September 8, 2020

 

ஶ்ரீ இராமரும் காந்தியும்

 

1930 ௵ மார்ச்சு 12s புதவாரம் காலை 6-45 - க்கு மகாத்மாகாந்தி யடிகள் ததீசியாசிரமமாகிய சபர்மதி ஆசிரமத்தினின்றும், சாத்வீக எதிர்ப் பினைச் செயலில் ஆற்ற 79 - தொண்டர் படையுடன் புறப்பட்டு பண்டை முறைப்படி பாதசாசியாக கிராமங்கள் பலவற்றிலும் தங்கித் தங்கி ஆண்மை யறவுரைச் சொன்மாரி பொழிந்து செல்லும் காட்சியைக் காணவும் கேட்கவும் பேறு பெற்ற பத்திரிகா நிருபர்களுக்கு இராமன் பிராட்டியோடும் வன வாசத்திற்குப் புறப்பட்ட தோற்றமே நினைவிற்கு வருகிற தென்பது அவர்கள் வரைந்து விடுக்கும் நிருபங்களால் இனிது விளங்குகின்றது. ஊசி செல்லும் வழி யேகும் நூலிழை போன் றொழுகும் உத்தம வுயர்கணப் பத்தினியாராகிய ஸ்ரீமதி கஸ்தூரிபாய் அம்மையோடும் இடையில் நர்மதா நதியில் படகி வர்த்த காட்சியும் இராமரும் சீதையும் கங்கையிவர்ந்த காட்சியையே மிக்கச் செய்துது. இவ்விருவர் மாட்டும் உலகம் காணும் ஒருமைப்பாட்டினை ஒரு சிறிது ஆராய்வோம்.

 

தசரத புத்திரர் - கரம் சந்திரரின் காதல் மைந்தர்

 

தசரத புத்திரர் தந்தை சொற் காத்தலின் பொருட்டே தசரத புத்திரர். அரச போகத்தைத் துறந்தார்; தாய்சொற்காத்தலின் பொருட்டு வாலிப உள்ளத்தைக் கட்டி அடக்கியாண்டு தியாக மூர்த்தியானார்; தாய் என்னும் மொழி பெண்மையை யுணர்த்துவதால் பெண்ணின் பேரறிவு, உரிமை, கடமை இவைகளைப் புறக்கணித்த இடைக்கால வழக்கினுக் கேற்ப அரசினை யாவினை வணங்குதல் போல் வணங்குவதற்கே தாய் உரியவளன்றி புத்தி கேட்பதற்கன்றென வரைந்து வைத்த ஒரு தலைத் தீர்மானத்தில் உள்ள அநீதியைக் கடிந்து நல்லறிவுடைய தாய் மொழியினையே தலையாலேற்று நடந்து அதன் பயனாக அகில உலகமும் தன்றாள் வணங்கத் திகழ்கின்றார் காந்தியடிகள் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. கௌஸல்யா மைந்தன் தபோநிதியாகிய வஸிஷ்ட மகரிஷியின் பால் கலை பயின்று வேதாந்த மர்மமாகும் நிவர்த்தி மார்க்க உபதேசங் கேட்டு சாதுக்கள் இணக்கம் பெற்று எவ்வுயிர்க்கும் அன்புபூண்டு கருணைக்கடலாக விளங்கினார்.

 

புத்தீரீபாயின் புத்திரரத்தினமோ பிரவர்த்தி மார்க்கத்திற்கே பிறப்பிடமாகிய ஆங்கில நாடு சென்று ஒழுக்க மறியா நடையும், தூய்மை கலவாவுணவும் முறை கருதா வின்பமும், பயன் தராததும், கட்டில் அடங்காததுமாகிய களியாடல்களும் ததும்பிப் பொங்கிய கூட்டங்களிலேயே வதிந்து பயின்றும் அவைகளில் உள்ளந்தோயாது கசந்து, வெறுத்துத் தள்ளித் தனது இயற்கை யறிவால் தூய்மை காத்துச் சத்திய தரிசனராய் ஞானபாநுவாய் வெளியேறினார்.

 

கற்பென்பது பெண்பாலார்க்கே யுரியதெனச் சில சுயகல கூறும் கொள்கையை பிடித்துத் தள்ளி, கற்பு ஆண்பாலார்க்கும் இன்றி யமையாத தென்னும் உண்மையை இருவரும் ஒரு முகமாய் நிலை நிறுத்தினர். இராமர் மணம் காதலை யடிப்படையாகக் கொண்டது – காந்தி மணம் கற்பை யடிப்படையாகக் கொண்டது இராமசரி: நிகழ்ச்சியோ வெளித் தோற்றத்தில் மாயமானை வேண்டிய பிராட்டியாரின் மனதைத் திருப்திப்படுத்து முகத்தால் எழுந்தது - காந்தி சரிதமோ பகிரங்கமான சுயநிர்ணயத் தியாகத்தனால் விரிந்தது. இராமரோ தந்தையால் ஏவப்பட்டு தவவேடம் புனைந்தனர் - காந்தியோ எவராலும் ஏவப்படாமல் அநீதியை யழிக்கவும் நீதியை நிலை நிறுத்தவும் பரந்த இரக்கத்தினால் எல்லா நலமும் துறந்து நிற்பவர். இராமரோ கோதண்டம் தாங்கி சாபாதுக்கிரக சக்தியுடைய முனிவரர்களால் அளிக்கப்பட்ட பற்பல தேவதாஸ்திரங்களையும் பெற்றுப் பகை பகையிருள் கடிந்தார்- காரதியோ, நிராயுதபாணி பாய் உண்மைக் கவசம் பூண்டு உறுதிவாகை புனைந்து அஹிம்ஸையாகிய ஆத்மசக்தியினால் உலகினையே ஸ்தம்பிக்கச் செய்கின்றார். இராமரோ வனவாசத்தில் மனைவியோடிருந்து தவநிலை யொழுகினார் - காந்தியோ நகரவாசத்திலிருந்தே இன்பவுணர்ச்சிக் காளாகாமல் திடசித்தத்துடன் செந்நெறி பயின்றார். கொன்றவன் தோற்றவன் கொல்லப்பட்டவன் வென்றவன் என்பது இருவரின் ஒருமைத் தீர்மானமாகும். தன்னை நம்பிய நண்பன் பொருட்டு மறைந்து நின்று அம்பேவினார் இராமர்
 - தன்னைத் தந்த கடவுளே கூறினும் மறைந்தோ, அஞ்சியோ அறங்கடந்தோ எவ்வினையம் ஆற்றதமர் காந்தி யடிகள். குற்றம் புரிந்தோரைத் தண்ணளிபெய்து திருத்தி ஏற்றுக் கொள்ளல் வேண்டுமென்பதே விருவர் துணிபும். கௌஸலை தனயன் யௌகனத்தில் ஏற்ற தவக்கடனை யௌவனத்திலேயே முடித்தார் - கூர்ஜர வேர்சரோ யௌவனத்திற் கொண்ட தவநிலை மூப்பெய்திய இஞ்ஞான்றும் விடுத்தாரில்லை. தாசரதியோ, கட்டுக்காவலின்றி பட்சிபோல் வனவாசததில இயற்கையின் பங்களில் தோய்ந்து மகிழ்ந்து இன்புற்றார் - நமது அஹிம்ஸா மூர்த்தியோ, இன்ப மென்பதை யௌவனத்திலிருந்தே துறந்து துணையிகறி கட்டுக்காவலுள்ள சிறைவாசத்தையும் கள்ளர் கொலைஞர் கட்களிக்கும் இழிவான குற்றேவல்களையும் ஏற்றுச் சலியாமனத்தினராய் தேசப்பணி விடையில் ஈடுபட்டு துன்பவாழ்வினை மேற்கொண்டும் ஆறுதலோடு பொலிகின்றார். அயோத்தியிலிருந்து இலங்கைபிறுதியே இராமசரித நிகழ்ச்சிக்களன்- எட்டுத் திசைகளையே எல்லையாகவுடைய எல்லா அகிலவுலகங்களையும் காந்திசரிதம் நிகழ்ச்சக் சளனாகக் கொண்டுளது. கடவுணெறியை ஒரே துறையில் கண்ட காலம் இராமபிரான் தோற்றம் கடவுணெறியையும் புறக்கணிக்கும் உணர்ச்சியாளரையும் தோற்றுவிக்கும் கலிகாலம் காந்தியடிகளின் தோற்றம் -- ஆக்கம் அழிவு இரண்டிலும் உவத்தல் காய்தல் சிறிது மின்றி மனம் அமைதி பெடாது முகமலர்ச்சி காட்டும் ஆண்மை இருவர்க்கும் பொதுவுடமையே யாகும். கண்டோரை வசப்படுத்தும் தோற்றம் இராமரின் வனப்பு - கேட்டோரையும் முற்றத் துறந்த முனிவர் நிலை யெய்தச் செய்யும் காந்திமகானின் அறவுரைகள். இந்திய நாட்டின் பாக்கியமே பாக்கியம்!

 

(ஸ்ரீமதி. அசலாம்பிகை அம்மையார்.)

 

ஆனந்த போதினி – 1930 ௵ - ஏப்ரல் ௴

 

 

No comments:

Post a Comment