Sunday, September 6, 2020

 மேனாட்டு விழுச் செல்வம்

 

1 மலரின் பல இதழ்கள் அரும்பில் ஒருங்கிருக்கும். விரிந்தவுடன் பிரிந்துவிடும். அதுவே அதன் அழகு. அது போல் உலகிலுள்ள பல ஜாதியாரும் அன்பால் ஒன்றுறப் பிணிப்புண்டிருப்பினும் தங்கள் விசேஷ குணங்களை வேறு வேறாக விருத்தி செய்யும் பொழுது தான் மனிதவர்க்க மலர் பூரணம் பெறுகின்றது.          காட்வின் ஸ்மித்.

 

2 தரணி வாழ்வின் தங்கச் சட்டம் - முக்கிய மல்லாதவைகளில் சுதந்தரம். முக்கியமானவைகளில் ஒற்றுமை. அனைத்திலும் அன்பு.

 

3 மனித வாழ்வின் புனிதபாகம் மறந்துபோன அருள் நிறைந்த சிறு செயல்களாகும்.

வோர்ட்ஸ்வொர்த்.

4 சர்க்கார் தயவு வேண்டுவது தவறு ஒன்றே. உண்மைக்கு அது வேண்டுவதில்லை.

தாமஸ் ஜெவ்வர்ஸன்.


5 ஒன்றே உள்ளது. பல மாறி மறையும். விண்ணின் வெளிச்சம் என்றும் ஒளி தரும். மண்ணின் நிழல்கள் பறந்தோடி விடும்.                       ஷெல்லி.

 

6 இன்பவாழ்வு சுதந்தரத்தின் பயன். சுதந்தரம் பயமிலா நெஞ்சின்பயன். பெரிக்ளீஸ்.


7. இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாய்ச் செய். நாளை அதினிலும் நன்றாய்ச் செய்யும் ஆற்றல் பெறக்கூடும்.                                           நியூட்டன்.

 

8 அறமே ஆற்றல் என்று நம்புவோமாக. அந்த நம்பிக்கையுடன் நாம்அறிந்த கடமையை ஆற்றத் துணிவோமாக.                                         ஆப்ரகாம் லிங்கன்.

 

9 அவனியிலுள்ள சமயங்களில் அறத்தாறு உய்ப்பதொன்றே உண்மைச்சமயம்.

ஸவனரோலா.

 

10 வெப்பம் தட்பம் இரண்டில் எது மிகுதியாய் விளையினும் ஏற்றுக் கொள்எக் கூடியவனே பலவானிலும் பலவான். அதுபோல் உயர்வு வந்த பொழுது கர்வமின்றியும் தாழ்வு வந்தபொழுது தளர்ச்சியின்றியும் உள்ளவனே உத்தமரில் உத்தமனாவான். புளூட்டார்க்.

 

11 காரியம் பெரிதோ சிறிதோ தம்மால் செய்யக்கூடியதில் சலிப்பின்றிஉழைத்தலே சான்றோர் குணம்.                                                கதே.

 

12 தனக்கென உழையாதான் துன்புறுவான். பிறர்க்கென உழைப்பதெல் லாம் பிறரும் தன் இன்பத்தில் கலந்து கொள்வதற்காகவே.                         கதே.

 

13 பிறர்க்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக்கொள்ளுகின் றான். ஸெனிக்கா.

 

14 நீதியாய் வாழ்பவனே நீடு வாழ்பவன். தீயவழியில் செலவு செய்த காலம் தாழ்ந்த தன்று- இழந்ததே யாகும்.                                      புல்லர்.

 

15 உலக அரங்கில் இவராகத்தான் நடிப்பேம் என்று கூற இயலாது. கொடுத்த வேலையைத் திறம்படச் செய்து முடிப்பதே நமது கடன்.                      எபிக்டெட்டஸ்.

 

16 உண்மை ஞானம் கண் முன் இருப்பதைக் காண்பதன்று. பின் வருவதை  முன் அறிவதாகும்.                                                 டொன்ஸ்.

 

17 நூலறிவு அதிகம் கற்றுவிட்டதாக அகத்தில் கர்வம் கொள்ளும். மெய்ஞ்ஞானம் இன்னும் அறியவேண்டியது அதிகமென்று தாழ்ச்சி சொலும்.               கௌப்பர்.

 

18 கண்ணிய புருஷனைக் கணித்து அறியப் பல சோதனைகள் உள. அவைகளில் ஒருபொழுதும் தவறாத சோதனை ஒன்று உண்டு. அது தனக்குக் கீழ்ப்பட்டவர்களிடம் தன் சகதியை எவ்விதம் உபயோகிக்கின்றான் என்பதே.               ஸ்மைல்ஸ்.

 

19 நம் இருதயத்தில் ஒரு கடவுள் உண்டு. மனச்சான்றே அது.    மினான்டர்.

 

20 சிறுவர்க்கான பிரதமக் கல்வி அறிவு ஊட்டுவதன்று. நல்ல வழக்கம்கள் அமைப்பதே யாகும்.                                                       போனால்டு.

 

21 வீடு செல் நெறி துறவறமன்று. அனவரதமும் அறச்செயல் ஆற்றுவதேயாகும்.

ஸ்வீடன்பெர்க்.

22 அறவாழ்வில் ஆசையுள்ளவன் சத்தியத்தைச் சார்ந்து நிற்க, அவனுக்குத் துக்கம் தொலைவது அப்பொழுது தான். அதற்கு முன்னரன்று.            ப்ளேட்டோ.

 

23 கடைப்பட்ட இழிதொழில் செய்ய அஞ்சுதல் வீரம். அது நமக்குச் செய்யப்படின் அதைப் பொறுத்துக்கொள்ளுதலும் வீரமே.                              பென் ஜான்ஸன்.

 

24 துன்பத்தை நன்கு பொறுக்கக் கூடியவனே எதையும் நன்கு இயற்றக்கூடும். மில்டன்.

 

25 போராட்டத்தின் கடைசி முடிவு யாதென்று வினவினால் வெற்றி என்றுவிடையிறுப்பேன். இப்பொழுது யாது விளையும் என்று கேட்டால் மரணம் என்று மறுமொழி தருவேன்.                                      ஸவனரோலா.

26 செல்வத்திலோ களியாட்டிலோ புகழிலோ பற்றுடையவன் எவனும்ஜனங்களிடைப் பற்றுடையவன் ஆகான்.                                      எபிக்டெட்டஸ்.

 

27 உலகத்தில் மக்களிடம் அன்பு பூண்பவனே உண்மையில் வாழ்பவன்ஆவான். அந்தோனி.

 

28 தேவைகள் குறையும் அளவுக்கே தெய்வத்தன்மை அடைவோம். ஸாக்கிரட்டீஸ்.

 

29 சந்தேகம் தங்குமிடம் தவறுள்ள நெஞ்சு. திருடன் ஒவ்வொரு புதரிலும் ஒரு போலீஸ்காரன் என்று அஞ்சுவான்.                         ஷேக்ஸ்பியர்.

 

30 மனிதர் மணக்குமுன் வசந்த காலம். மணந்தபின் மழை காலம். ஷேக்ஸ்பீயர்.

 

31 ஞானிகள் இழந்ததர்கு அழுதுகொண்டிரார். சங்கடத்தைத் தவிர்க்க சந்தோஷத்தோடு வழிதேடுவர்.                                                 ஷேக்ஸ்பியர்.

 

32 ஒன்றும் செய்யாது காத்திருப்பவரும் ஊழியம் செய்பவரே.     மில்டன்.

 

33 ஒவ்வொருவனுக்கும் உன் செவியைச் சாய். ஆனால் சிலரிடமட்டுமேபேசு. ஒவ்வொருவனுடைய கண்டனத்தையும் ஏற்றுக்கொள். ஆனால்உன் முடிவை வெளியிடாதே.                                                 ஷேக்ஸ்பீயர்.

 

34 காதல் வாழ்வு என்னும் யாழைக் கையிலெடுத்து எல்லா நரம்புகளிலும்இசை எழச் செய்தது; தான் என்னும் நரம்பில் விரல் வைக்கவே அதுநடுங்கி நழுவிவிட்டது. டெனிஸன், 35 உபயோகமே ஒளி அளிக்கும். துலக்காவிடில் துருப்பிடிக்கும். முடிந்ததென்று சோம்புவது எவ்வளவு மூடத்தனம். சுவாசிப்பதே வாழ்வதுபோலும். டெனிஸன்.

 

36 என் பாவங்கள் எல்லாவற்றையும் வெளிவிட்டுச் சொன்னேன். சொன்னவுடன் ஜபிக்க முடிந்தது. என் முழுமனதோடு ஜபித்தேன். இப்பொழுது நான் வந்த மார்க்கமே பச்சாத்தாபம்.                                              சார்ல்ஸ் ரீட்.

 

37 பச்சாத்தாபப் படுவோரிடம் காதோடு காதாய் சாத்தான் எப்பொழுதும்விரும்பிக் கூறுவது காலம் கடந்துவிட்டதென்பதே.                                  சார்ல்ஸ் ரீட்.

 

38 அதர்மம் அணியும் ஆடை ஐஸ்வரியம்; தர்மம் தரிப்பது தரித்திரம். தியோக்னீஸ்.

 

39 எப்பொழுதும் சமர்க்களத்தில் அல்லது ஜெயக் கொண்டாட்டத்தில்இருப்பவன் சத்தியத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருத்தல் துர்லபம்.          கௌலி.

 

40 ஒருவன் தன் சுதந்தரத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்குரிய ஒரே வழிஎப்பொழுதும் மனம் வருந்தாமல் இறக்கத் தயாராய் இருப்பதே.                      டயோஜினிஸ்.

 

41 எவனுக்கு இன்னல் இழைத்தாயோ அவனை நீ வெறுத்தல் மனிதஇயல்பு. டாஸிட்டஸ்.

42 தவறு செய்வதைத் தடுப்பன. பல. ஆனால் தவறாது தடுப்பது கோழைத் தனமே.

மார்க்ட்வைன்.

 

43 உனக்குத் தெரிந்தன எல்லாம் நன்றாய் அனுஷ்டிக்க முயல்க. அங்ஙனம்செய்தால் நீ அறிய விரும்பும் மறை பொருள்களை எல்லாம் சரியானகாலத்தில் தெரிந்து கொள்வாய்.

ரெம்பிரான்ட்

44 நமக்கு ஆனந்தம் அளிக்கக் காரணமாய் இருப்பதெதையும் மாயைஎன்று கூற நியாயமே கிடையாது.                                                  கதே.

 

45 நமக்கு ஆண்டவன் நா அளித்திருப்பது இன்சொல் இயம்புவதற்கே. ஹீன்.


46 செய்ய இயலாததில் சினங்கொள்வது ஏன்? செய்ய இயன்றதைச் செய்வோமாக.

ரொமைன் ரோலண்ட்.

 

47 நமது ஆன்மா எதனால் ஆக்கப்பட்டுள்ளதோ அதனாலேயே பொது மக்கள் ஆன்மாவும் ஆக்கப்பட்டதாகும். அதனால் அவர்களுடைய உடலும் புனிதமானதே. பெர்னார்டுஷா.


48 நூல்களை முறையாகக் கற்றல் நன்மை தரும். ஆனால் இன்பம் அளிப்பது முறையின்றிக் கற்றலே.                                        செனிகா.

 

49 மூடர் முன் முற்றக் கற்றவனாகக் காட்டிக் கொள்ள விரும்புபவன் முற்றக் கற்றவர் முன் மூடனாய்க் காட்டிக் கொள்ளுகிறான்.                     குன்றிலியன்.

 

50 உலகில் இதுவரை ஒரு கிறிஸ்துவனே வாழ்ந்திருந்தான். அவன் சிலுவையில் மாண்டான்.                                                    நீட்சே

 

51 அறிவின் உதவியின்றி உணர்ச்சி மூலம் நம்பப்படுபவைகளுக்குத் தவ றான காரணங் கண்டுபிடிப்பதே தத்துவ சாஸ்திரம். ஆனால் அக்கார ணம் காண்பதும் ஒரு உணர்ச்சியே.

ப்ராட்லி.

 

52 நம்மைத் திருத்திக் கொள்வதினும் விரைவாக உலகைத் திருத்திவிட முடியாது.

பிஷப். க்ரெய்ட்டன்.

 

53 நம் செயலால் தேடிக்கொள்ளும் ஸ்நேகிதர்களைவிட அதிகப் பகைவர் களை நம்மொழியால் தேடிக் கொள்கின்றோம்.                     காலின்ஸ்.

 

54 சான்றோர் சந்திரனைப்போல் தம் நற்குணத்தையே உலகுக்குக் காட்டு கின்றனர்.

காவின்ஸ்.

 

55. துக்கமாயிருக்க ஒருநாளும் நியாயம் கிடையாது.             ஸ்பைனோஜா

 

56 எண்ணம் இயற்கைப்படி எழுகின்றது, பேச்சு கற்பித்தபடி பிறக்கின்றது, செயல் வழக்கப்படி நிகழ்கின்றது.                                          பேக்கன்.

 

57 ''இயற்கை'' எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளும்படி கட்டளையிடுகின்றது. ஆனால் நீ அவையின்றி வாழக் கற்றுக்கொள்ள மறந்து விடாதே.           மார்லி.

 

58 எந்தக் கட்சி அபிப்பிராயத்தையும் தழுவுவதில்லை'என்று யாரேனும்கூறினால் உடனே அவரைத் தைர்யமாய் " இவர் சீர்திருத்தம் விரும்பாதகட்சியைச் சேர்ந்தவர்'' என்று கூறிவிடலாம்.                                               மார்லி.

 

59 உலகம் உதவக்கூடியதற்கு அதிகமாக உலக வாழ்வினின்றும் எதிர்பாராதே. மில்,

 

60 உலகத்தின் அந்தரங்க ரகசியம் அறிவொன்றினால் மட்டுமே அறிந்துவிடமுடியாது. நண்பன் மனத்துள் பார்ப்பதுபோல் பார்த்தால் மட்டுமேஅறிய முடியும்.     கதே.

 

61 இடையூறு பெரியோரிடம் ஊக்கத்தை எழுப்பும், அவர்கள் அதனோடுசண்டையிட்டு ஜயம்பெற முயல்வர். இடையூறும் தம் இன்பத்தில் ஒரு அம்சமே என்று கருதாதவருடைய மனம் மிகத் தாழ்ந்ததாகவேஇருக்க வேண்டும்.                  ஷாலிபாக்ஸ்.

 

62 பெரிய விஷயத்திற்காக உயிர் துறப்பவர் ஒருநாளும் தோற்றவராகார். பைரன்.

 

63 மனித வாழ்வில் அழகுடையவை ஆசைகளே. ஆனால் அவைகளுக்குஅறிவில்லை. அற்பமாகவேனும் அறிவுடையதே தலைசிறந்தது. தான் அன்பு எனப்படும். அவற்றுள் அறிவில் சிறந்தது ஒன்றுண்டு, அதற்குப் பெயர் பொருளாசை, அது அஞ்சத்தக்கபடி அழகற்றதாகும்.                                             அனடோல் பிரான்ஸ்.

 

64 ஒருநாளும் திருப்தி செய்யமுடியாத மூன்று ஆசைகள் உள: - (1) இன்னும் வேண்டும் என்னும் செல்வர் ஆசை (2) வேறு ஏதேனும் வேண்டும் என்னும் நோயாளி ஆசை (3) வேறு எங்கேனும் போக வேண்டும்என்னும் யாத்திரிகன் ஆசை.       எமர்ஸன்.

 

65 பிறர் துன்பத்தினும் பிறர் இன்பத்தினும் அனுதாபம் காட்டக் கூடியஅளவே நாம் அறநெறியில் முன்னேறுவதாகக் கூறமுடியும்.                   ஜார்ஜ் எலியட்.

 

66 மனிதர்க்குப் பேருணர்ச்சி தந்து போருக்கு நடத்திச் செல்லும் மூன்று மொழிகள் - கடவுள், நித்யத்வம், கடமை - என்பன. முதல் விஷயம்அறிவிற்கு அப்பாற்பட்டது; இரண்டாவது நம்பமுடியாதது; மூன்றாவது ஒருகாலும் அலட்சியம் செய்ய முடியாதது.

மையர்ஸ்.

 

67. ஒருவர் தர்க்கவாதம் தவறாது அறிவிற்கு ஒத்தவண்ணம் போதனைசெய்யலாம். அவர் கூறுவதில் பிழையொன்றும் இல்லாமல் இருக்கவும் கூடும். ஆயினும் அவரால் பிறர் ஒழுக்கத்தைத் திருத்தவோ அல்லதுபிறர்க்கு உன்னத லட்சியத்தில் அவாவும் ஊக்கமும் உண்டாக்கவோஇயலாது.                                      மார்லி.

68. ஆராய்ச்சியால் விளையும் ஆனந்தம் வேண்டுமா? அப்படியானால் நெஞ்சுநுண்ணிய விஷயங்களில் முற்றிலும் லயித்துப் போவதால் உண்டாகும்ஆநந்தத்தை அது கொள்ளை கொண்டுவிடும். லா புரூயர்.

 

69 நீதிதான் உலகத்தில் மனிதனுக்குத் தேவையான விஷயங்களில் சிறப்புடையதாகும். டானியல் வெப்ஸ்டர்.

 

70 பேரெண்ணங்கள் - உயர்ந்த உணர்ச்சிகள் - சிறந்த செயல்கள் இவைஉடையவனே முழுதும் வாழ்பவன். அதாவது வாழ்வின் முழு இன்பமும் துய்ப்பவன். பெய்லி.

 

71 நாம் கண்டு அடைய முடியாததைத் தேடவே பிறந்துள்ளோம். ஆனால்அதைத் தேடுவதிலேயே அந்தமில் இன்பம் அமைந்துள்ளதாகும். 

 

72 கடவுளை அறிதல் - கடவுளிடம் அன்பு செலுத்துதல் இரண்டிற்கும்இடையிலுள்ள தூரம் எவராலும் இவ்வளவு என்று இயம்ப இயலாது.                  பாஸ்கல்.

 

73 நன்மை செய்ய முயலுதல். நன்மை இதுவென்று காண முயலுதல் -இரண்டில் கடினமானது எது?                                            மார்லி,

 

74 சட்டங்கள் சிலந்திவலையை ஒக்கும். அவ்வலை சிறு ஈக்களைப் பிடித்துக்கொள்ளும். ஆனால் வண்டுகளும் குளவிகளும் அதனூடு பாய்ந்தோடிவிடும். ஸ்விட்.

 

75 சினம் என்பது உண்மையாகவே நம்மைச் சிறிதுபொழுது பிடித்தாட்டும் பைத்தியமே யாகும்.                                                       ஸ்விட்.

 

76 மனோ தைர்யம் இன்றேல் வாய்மையும் இல்லை. வாய்மை இன்றேல் பிறஅறங்களும் இல.                                                             ஸ்காட்.

 

77 எல்லாம் செயற்கைப் பொருள்களே. இயற்கையும் இறைவனால் செய்யப்பட்டதே.

ஸர் தாமஸ் ப்ரௌன்.

 

78 உலகில் பெரியார் ஒருவர் தோன்றினால் அவரை நாம் அறிந்து கொள்வதற்குரிய அடையாளம் மூடர் அனைவரும் அவருக்கு விரோதமாகக் கூடிவேலை செய்வதே. ஸ்விட்.

 

79 ஒருபொழுதும் ஜபம் அறியாதவரே ஜயம் மிக இனியது என்பர். எமிலி டிக்கின்ஸன்.

 

80 அனைவருக்கு மன்றித் தங்களுக்கு மட்டுமே சுதந்தரம் விரும்புபவர்கடைப்பட்ட அடிமைகளே யாவர்.                                          லவல்.

 

81 தோல்வியிலும் துக்ககரமான விஷயம் ஒன்றே ஒன்றுதான் உண்டு. ஜயமே அது.

ஐரோப்பியப் பழமொழி,

 

82 உலகத்தில் மனிதனைவிட உயர்ந்த பொருள் இல்லை. மனிதனில்மனத்தைவிட உயர்ந்த பொருள் இல்லை.

 

83 தம் துன்பத்தைப் பிறரையும் அனுபவிக்கச் செய்வது பெரியோர்க்குஅடுத்ததன்று.

டிவாக்ஸ்.

 

84 கடவுள் ஒருவருக்குத்தான் போதுமான நேரமுண்டு. ஆனால் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளத் தெரியும் அறிஞனுக்கு தனக்குத் தேவையான காலத்தைத் தேடிக்கொள்ளச் சக்தி உண்டு.                                                       லவல்

 

85 தங்கள் அபிப்பிராயத்தை ஒருபொழுதும் மாற்றிக்கொள்ளாதவர் மூடரும் இறந்தவருமே.

லவல்.

 

86 ஒரு பிராணி வாழ நீ ஆனந்திக்கும் அளவே நீ அதை அறிய முடியும். வேறு வழியில் முடியாது.                                                       ரஸ்கின்.

 

87 உனக்குச் சந்தோஷம் தந்துகொள்ள நீ விரும்பினால் உன்னுடன் வாழு பவரின் குணாதிசயங்களைப்பற்றிச் சிந்திப்பாயாக.                       ஒளரேலியஸ்.

 

88 தனிமையாயிருக்கச் சக்தியில்லாததினாலேயே சகல துன்பங்களும் விளை. லா புரூயர்.

 

89 தன் விருப்பத்திற்குக் குறைவாய் அடைந்துள்ளவன் தன் தகுதிக்கு அதி கமாய் அடைந்திருப்பதாய் அறியக்கடவன்.                            ஷோபனார்.

 

90 நமக்கு ஒரு விளக்குத் தேடிக்கொள்ள பிறன் ஒருவனுடைய நெருப்புக் குச் செல்லுதல் நலமே. ஆனால் நமக்காக ஒரு விளக்கு கொளுத்திக் கொள்ளாமல் அயலான் நெருப்பருகே வெகு காலம் தாமதித்தல் நலமன்று.                            ப்ளூட்டார்க்.

 

91 அறிஞர் செய்யும் மூடக் காரியங்கள், சாமார்த்தியர் கூறும் அதிக்கிரமச் சொற்கள், சான்றோர் இழைக்கும் கொடுமைகள் இவைகளே புரட்சியுண்டு பண்ணுவன.

டி. போனால்டு.

 

92 இருதயமே (அன்பே) பெரிய எண்ணங்களின் பிறப்பிடம். வாவனார்கூஸ்.

 

93 இன்பங் காண்பது எளிய காரியமன்று. நமக்குள்ளேயே காண்பதுமிகக் கடினம். வேறெங்கேனும் காண்பதோ அசாத்தியம்.                    ஷாம்பர்ட்.

 

94 நாம் எண்ணுகிறபடி நாம் ஒருபொழுதும் அவ்வளவு சந்தோஷமாயோஅல்லது சந்தோஷ மில்லாமலோ இருப்பதில்லை.                                 லாரோஷிவக்கல்டு.

 

95 ஜனசமூகம் - ஜனசமூகமா? எத்தனை மூடர்கள் சேர்ந்து ஒரு ஜன சமூகமாகின் எறது.

ஷாம்பர்ட்.

96 மனிதர் இருதயத்தின் குணாதிசயங்களை எள்ளளவும் மதிப்பதிலர்; ஆக்கை, அறிவு - இரண்டிலொன்றின் ஏற்றத்தையே போற்றுகின்றனர்.             லா   புரூயர்

 

97 ஆதன்ஸ் நகரிலுள்ள நாங்கள் அழகானவைகளில் பிரியமுடையவர்கள். இருந்தாலும் எங்கள் சுவைகள் எளியவைகளே. ஆண்மையை இழக்காமல் ஆன்ம அபிவிருத்தி செய்கின்றோம்.                                             பெரிலீஸ்.

 

98 உலகிலுள்ள ஜனங்களில் பெரும்பாலோருடைய கல்வி யாது? ஒரு மூட்டை நூல்களை வாசித்தலா? அன்று. அடக்கம், ஒழுங்கு, அறம், நீதிஇரண்டின் முன் மாதிரிகன்- இவைகளே அவர்கள் கல்வி.                                             பர்க்.

 

99 மாணவர் அறிவதற்கு உத்தேசிக்கப்பட்டதை மட்டுமே அறியும் ஆசானைவிட பயங்கரமான பொருள் ஒன்றும் உலகில் கிடையாது.       கதே.

 

100 மனிதவர்க்கத்தை நிந்திப்பவன் தன்னிடத்திலோ அல்லது பிறரிடத்திலோ உள்ள உயர்ந்த பயனை ஒரு பொழுதும் பெறான்.                        டாக்குவில்.

 

101. உண்மையில் பெருங்கடல் நம்மால் அறியப்படாமல் பரந்து கிடக்கின்றது. நாமோ கடற்கரையில் விளையாடி, அங்குமிங்கும் ஓடி, அழகான ஒரு சிப்பியையும் மெல்லிய ஒரு கடற்பாசியையும் கண்டு மகிழ்ந்து நிற்கும் சிறு குழந்தைகளைப்போல் இருக்கின்றோம்.                                               ஆவ்பரி.

 

102 நயனம் ஒன்று சொல்ல நாவொன்று சொல்லின் விஷயம் அறிந்தவன்நயன மொழிகளையே நம்புவான்.                                 எமர்ஞ்ன்.

 

103 அரண்மனையில் வாசம் செய்தாலும் எதைப் பார்த்தும் ஆனந்திக்க முடியாதிருப்பதைவிட, ஒரு சிறு குடிசையில் வாசஞ் செய்தாலும் அரண்மனையைக் கண்டு ஆனந்திக்கக் கூடியதாயிருப்பதே பேரின்பம் தருவதாகும். ரஸ்கின்.

 

104 எந்தக் காரியமும் தவறாயிருப்பதால் நம்மை இழிவாக்கி விடுவதில்லை; இழிவாக்குவதாலேயே தவறாய் விடுகின்றது.                   ஆவ்பரி.

 

105 தீ யொழுக்கத்திற்குக் கட்டுப்பாடில்லை என்று நினைப்பது தவறு. தீயவனே எஜமானர்கள் அனைவரிலும் கொடிய எஜமானனுக்கு அடிமையாயிரு இருக்கின்றான். அக் கொடிய எஜமானன் யார்? அவனுடைய சொந்த தீய உணர்ச்சிகளே. ஆவ்பரி.

 

106 "'செல்வம் " - போதுமான அளவானால் உன்னை அது தூக்கிச் செல்லும். அதிகமான அளவாய்விட்டால் நீதான் அதைத் தூக்கிச் செல்லவேண்டும்;     ஸாதி.

 

107 எல்லோரும் நேரமில்லை என்று குறை கூறுகின்றோம். ஆனால் நாம்என்ன செய்வதென்று அறியாத அளவிற்கும் அதிகமாகவே உடையோம். நாம் நம் வாழ்வை ஒன்றும் செய்யாதிருப்பதில் அல்லது உபயோகமுள்ளதைச் செய்யாதிருப்பதில் அல்லது செய்யவேண்டியதைச் செய்யாதிருப்பதில் கழிக்கின்றோம்.    ஸெனீக்கா.

 

108 நம் வாழ்நாள் அற்பம் என்று எப்பொழுதும் வருந்துகின்றோம். ஆனால்அதற்கு முடிவில்லாதது போலவே காரியங்களைச் செய்து கொண்டுபோகிறோம். ஸெனீக்கா.

 

109 ஆரோக்கியத்திற்கு உயர்ந்த ஐஸ்வர்யம் இல்லை. மனக்களிப்பிற்கு உயர்ந்த மகிழ்ச்சி இல்லை.                                                       “பைபிள்”

 

110 ஒருபொழுதும் சோம்பலாய் இராதே. எப்பொழுதும் உபயோகமான காரியம் எதையேனும் செய்து கொண்டே இரு. எப்பொழுது வேலை யின்றி இருக்கிறோமோ அப்பொழுது காமம் எளிதில் புகுந்துவிடும். தேகசுகம் உள்ளவன் சோம்பலாயும் சுகஜீவியாயும் இருந்து விட்டால் அவன் கற்புடையவனாயிருத்தல் ஒருநாளும் இயலாது. காமம் என்னும் பேயைத் துரத்தற்கேற்ற வேலை சரீர வேலையேயாகும். அதைப் போல் உபயோகமானதும் பலனளிப்பதும் வேறொன்று மில்லை.             ஜெரிமி டெய்லர்.

 

111 ஒருவனுக்கு ஆகாரம் அளிப்பதைவிட அதைத் தானே தேடிக்கொள்ள வழி காட்டுவதே முக்கியம். உதவி செய்வதைவிட உதவி பிறர்க்குச் செய்யக் கற்றுக் கொடுப்பதே நலம்.

ஆவ்பரி.

 

112 எந்தச் சந்தர்ப்பத்திலும் எனக்கு உதவியாயும், எப்பொழுதும் வாழ் நாளில் இன்பம் தருவதாயும், துன்பங்களுக்கெல்லாம் ஒரு கேடயமா யும் இருக்கும் ஒரு சுவையை நான் வேண்டிப் பிரார்த்திப்பதானால் நூல் கற்கும் சுவை " யையே விரும்புவேன். ஒருவனுக்கு இந்தச் சுவை அதை அனுபவிக்க வேண்டிய சாதனங்களும் பெற்று விட்டால் அவன் ஆனந்தமாயிருக்க ஒரு நாளும் தவறான்.                      ஹெர்ஷல்.

 

113 மனிதன் ஒரு நாணலே யாவன். உலகில் பலவீனத்திலும் பலவீனம்உள்ளவன். ஆனால் அவன் யோசிக்கும் நாண'லாவான். அவனைஅழிக்க அண்டம் அனைத்தும் திரண்டு வரவேண்டியதில்லை. ஒரு துளி நீர் போதும். ஆனால் உலகமே அவனை அழிக்க நேர்ந்தாலும் அவனேஉலகத்தைவிட உயர்ந்தவனாவான். ஏனெனின் அவன் தான் இறப்பதாய் அறிவான். உலகமோ அவனை அழிக்கும் பொழுது கூட தன் ஆற்றலை அறியாது.                                                      பாஸ்கல்,

 

114 விலங்குகளுக்கு உணர்ச்சி மட்டுமே உண்டு; மனிதனுக்கு மட்டுமேஅறிவு உண்டு என்று நாம் பெருமை பேசிக் கொள்கின்றோம். ஆயினும் நாம் பெருமை பேசும் நம் மறிவு மக்கட்குப் பெருக்கியுள்ள இன்பம் எவ்வளவு சிறியதாகும்!            ஆவ்பரி.

 

115 ரோஜாச் செடியில் முள் இருக்கின்றது என்று முறையிடாதே. முட்செடியில் மலர் உளதென்று மகிழ்வாயாக ஆவ்பரி.

 

116 உண்மையான செல்வம் நாம் எதை உடையோம் என்பதில் அன்று; நாம்எதுவாய் இருக்கின்றோம் என்பதிலேயே அடங்கும். ஆவ்பரி.

117 கடைசிச் சோதனை யாது? நாம் எவ்வளவு உடையோம் என்பதன்று. நாம் எவ்வளவு முயன்றோம் என்பதே யாகும். வாழ்வில் ஜயம் அடையத்தகுதியுடையவரா யிருந்தோமா என்பதேயாகும்.

 

118 இன்பமாயிருக்க மட்டும் விரும்பினால் அது எளிதில் முடியக்கூடிய காரியம். ஆனால் நாம் பிறரைவிட அதிக இன்பம் பெறவே விரும்புகின்றோம். அது எப்பொழுதும் கடினம். ஏனெனில் நாம் அவர்கள் உண்மையிலேயே அனுபவிக்கும் இன்பத்தைவிட அதிகமாய் அனுபவிப்பதாக நம்பிக் கொள்கின்றோம்.                     மாண்டெஸ்க்யூ.

 

119 இறுதியில் லட்சியத்தை அடைவிக்கும் காரியங்களைச் செய்தால் மட்டும்போதாது. செய்யும் ஒவ்வொரு காரியமுமே ஒரு லட்சியமாயிருத்தல்வேண்டும். கதே.

 

120 நம்மிடமுள்ளதாக நாம் பாசாங்கு செய்யும் குணங்களைப்போல், நம்மிடமுண்மையாகவே யுள்ள குணங்கள் ஒரு பொழுதும் நம்மை நகைப்பிற்கிடமாக்குவதில்.                                  லரோஷிவக்கல்டு.

 

121 இதுவே நான் சாமர்த்தியத்திற்குக் கூறும் இலக்கணம். ஆண்டவன்அந்தரங்கத்தில் அளித்தது. அதை நாம் அறியாமல் பகிரங்கப்படுத்திவிடுகிறோம்.      மாண்டெஸ்க்யூ.

 

122 மங்கையர் நிழலில் மட்டுமே மணந்தரும் மலர் ஒப்பர்.       லாமனே.

 

123 அனாமதேயமாய்ப் பிறரைப் பழிப்பவன் ஒருவரும் அறியாத தன் சொந்தப பெயரை ஒவ்வொருவரும் சூட்டும்'' கோழை'' என்னும் பெயராய்மாற்றிக் கொள்கின்றான்.

பெடிட் - ஸென்.

 

124 வயிறு உபதேசம் ஒன்றிற்கும் செவி சாய்ப்பதில்லை. அது கெஞ்சும், கூச்சலிடும். ஆயினும் அது கல் நெஞ்சுள்ள கடன் கொடுத்தவனைஒப்பதன்று. அதற்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டால் போதும். கொடுக்கக்கூடியதை எல்லாம் கொடுக்க வேண்டுமென்பதில்லை. சிறு தொகையைப் பெற்றும் திருப்தி அடைந்துவிடும். ஸெனீக்கா.

 

125 இறந்தகாலம், எதிர்காலம் இரண்டும் முகம் மூடியிருக்கும். ஆனால்இறந்தகாலம் தரிப்பது விதவையின் முகமூடி. எதிர்காலம் பூண்பதுகன்னியின தாகும். ஜீன் சால் ரிக்டர்.

 

126 மது மயக்கம் தானாகத் தேடிக்கொள்ளும் பயித்தியமே தவிர வேறன்று. ஸெனீக்கா.

 

127 எப்பொழுதும் மிதமாகப் புகழ்தல் மத்திய மதியினரைக் காட்டும் பெரியஅடையாளம்.

வாவனார்கூஸ்.

 

128 மொழிகள் எண்ணங்களுக்கு எப்படியோ அப்படியே நற்குணத்திற்குஉபசாரம். ஜௌபர்ட்.

 

129 உத்தம செயல்களை மனமுவந்து போற்றுதல் ஓரளவு அவைகளை நம்முடைய சொந்தமாக்கிக் கொள்வதாகும்.                                   ரோஷிவக்கல்டு.

130 உன் தகுதி பிறர்க்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ அங்கீகாரம் செய்.

  

131 காது நல்லதைத் தவிர வேறெதையும் அறிவிற் சேர்க்கா வண்ணம் எல்லாவித விஷயங்களையும் கேட்கப் பழகிக்கொள்ளல் நலம்.              எராஸ்மஸ்.

 

132 சிலர் தங்கள் வாழ்நாள் முழுவதும் படிக்கின்றனர். இறப்பதற்குள் எல்லாவற்றையும் கற்றுத் தீர்த்துவிடுகின்றனர் - யோசனை செய்வதைத் தவிர.       டோமெர்கு.

 

133 எல்லா அம்சங்களிலும் உண்மையான உபதேச மொழிகள் சிலவே. வாவனார் கூஸ்.

 

134 சுவையறிவு இல்லாத கற்பனா சக்தியைப்போல பயங்கரமான தொன்றுங் கதே.

 

135 நமது குறைகளில் சில உடன் பிறந்தவை. பிற கல்வியின் பயன். இவற் றில் எவை அதிக இன்னல் அளிப்பன என்பதே கேள்வி.                     கதே.

 

136 ஆன்மாவிற்கு உடல் ஒரு சமயம் தடை, ஒரு சமயம் கருவி, எப்பொழு தும் விட்டுப் பிரியாத தோழன். ஐம்புலன்கள் ஆன்மாவின் சிறையன்றுஆன்மா உலகத்தோடு உறவாடுதற்கு அமைந்த சாளரமாகும்.                               விக்டர் கவன்.

 

137 கடவுளுண்மையைக் கணிதசாஸ்திர நிரூபணத்திலும் அதிகமாய் நிரூபித்துக் காட்ட, பரிபூரண நிலையில் ஆன்மாவிற்குரிய சிறிய அவாவேபோதும். ஹெம்ஸ்டர்ஹுஸ்.

 

138 ஆன்மாவிற்கு வெளியே கடவுளைத் தேடினால் கடவுளின் விக்கிரகங்களைமட்டுமே காண்பாய். ஆன்மாவை ஆராய்ந்தால் அங்குள்ள உணர்ச்சிகளும் எண்ணங்களும் ஆண்டவனை அறிவிக்கும்.

 

139 நரகம் என்பது வேறெங்குமில்லை. நன்றாய் ஆராய்ந்தால், அது பாவமேயாகும். கடவுளினின்று பிரிந்திருப்பதே நரகம்.                            பாஸட்.

 

140 சரியாய் மெச்சக் கற்றுக்கொள். வாழ்வின் பேரின்பம் அதுவே. பெரியோர் மெச்சுபவைகளைக் கவனி. அவர்கள் பெரிய விஷயங்களை மெச்சுவர். தாழ்ந்தோர் இழிவான விஷயங்களை மெச்சுவர், வணங்குவர்.                   தாக்கரே.

 

141 நண்பனிடம் அன்பு செலுத்துவது சுவரில் தங்காது திரும்பிவரும் பந்தைப்போலன்றி இலட்சியத்தில் தைக்கும் அம்பைப் போலிருக்கட்டும்.            குவார்லஸ்.

 

142 வீண் சொற்கள் விஷயங்களை வியர்த்தமாக்குகின்றன. பிஷப் ஆண்டுரூஸ்.

143. மனிதனைப் பூரணமாக்கவேண்டிய குணங்கள் எவை? கலங்கா அறிவு; அன்பு நிறை நெஞ்சு; நீதியான தீர்மானம்; ஆரோக்கிய உடல். கலங்காஅறிவின்றேல் அவசரமாய் முடிவு செய்துவிடுவோம். அன்புநிறை நெஞ்சின்றேல் சுயநலமுள்ளவராயிருப்போம். நல்ல எண்ணம் இருப்பினும்நீதியான தீர்மானமின்றேல் நன்மை உண்டாவதினும் தீமையே உண்டாகும். உடற்சுக மின்றேல் ஒன்றும் செய்ய முடியாது.         ஆவ்பரி.

 

144 ஜயமானது கிடைத்துக் கொண்டிருக்கு மட்டும் சந்தோஷம் தரும். பின்னர் அது பறவை பறந்தோடிவிட்ட பழைய உருவுக்கூடு.                          பீச்சர்.

 

145 இல்லாத குணங்களுக்காக இளவரசரைத் துதிப்பது தண்டனை சாராவண்ணம் பழிக்கும் முறையாகும்.                                                ரோஷிவக்கல்டு.

 

146 உயர்ந்தோர் அனைவரும் தங்கள் உயர்விற்கான குணங்களைத் தங்கள்தாயிடமிருந்தே பெறுகின்றனர். விலக்குகள் அறியா விதி ஏதேனும்உண்டேல் அது இதுவே. மிச்சலெட்.

 

147 குணமாகத் திருத்த முடியாத குற்றமும் - குற்றமாக இழிந்து விடாதகுணமும் நாம் இயற்கையிடம் பெறுவதில்லை. குற்றங்களில் இரண்டாவது வகையே குணமாக்க மிகக் கடினமானவை.                                              கதே.

 

148 மனோவிகாரங்களே வாழ்வாகிய கப்பலைச் செலுத்தும் காற்று. அறிவேஅதை நடத்தும் சுக்கான். கப்பல் காற்றின்றேல் நின்று விடும். சுக்கானின்றேல் தரைதட்டிவிடும். ஷல்ஜ்.

 

149 மனித மனத்தின் தலைசிறந்த சிருஷ்டிகள் பூரணத்தில் மிகக் குறைந்தன என்பது முற்றிலும் நிச்சயம்.                                        வாவனார்கூஸ்.

 

150 பிறர் கூறுவதற்குச் செவிசாய்க்க அறிந்துகொள. தவறாய்ப் பேசுவோர்களிடமிருந்து கூட பலன் பெறுவாய்.                                       புளூட்டார்க்,

 

151 வீன் சொற்கள் விஷயங்களைப் பழுதாக்குகின்றன.           பிஷப் ஆண்டுரூஸ்.

 

152 படிப்பு அறிவிற்கான உபகரணங்களை மட்டுமே உதவும். படிப்பதைநமதாக்குவது சிந்தனையே. நாம் அசைபோடும் இனத்தைச் சேர்ந்தவர். விஷயப் பெருஞ்சுமை யொன்றை நம்மிடம் திணித்துக்கொண் டால் மட்டும் போதாது. அதை மறுபடியும் சுவைத்தாலன்றி அது நமக்கு போஷணையும் பலமும் அளியாது.                லாக்.

 

153. வண்டுக்குக் குடிசையில் பூக்கும் ஒரு மலரில் கூடத் தேன் கிடைத்து விடும். வண்ணாத்திப் பூச்சிக்கு அரசர் தோட்டத்தில் கூட அணுவளவு தேனும் அகப்படமாட்டாது.

எட்வர்ட் புல்லர்.

 

154 மனம் ஒரு பெட்டியை ஒக்கும். ஒழுங்காக அடுக்கினால் அதற்குள் அநேகமாக ஒவ்வொரு வஸ்துவையும் வைத்துவிடலாம். ஒழுங்கின் றேல் எதை வைப்பதும் அரிதாய்விடும்.

 

155 விஷயத்தை விளக்கமாக வரையறுத்துக் கூறமுடியும்பொழுது மட்டுமே நிச்சயமாய் அதை அறிவோம் என்பதைச் சகல கலைகளும் ஒப்புக்கொள் மில்டன்.

156 சித்திரங்கள் தொங்கும் அறை சிந்தனைகள் நிறைந்த அறையாகும். ரெயினால்ட்ஸ்.

 

157 நன்றியறியாமையில் சகல இழிதகைமைகளும் அடங்கும். இதர துர்க் குணங்களோடு அன்றி அது ஒரு பொழுதும் காணப்படுவதில்லை.                புல்லர்.

 

158 படிப்பின் நோக்கம் ஆட்சேபம் செய்தல், ஆராயாது நம்பிக்கை கொள்ளுதல், வாதம் செய்தல் இம்மூன்றும் அல்ல. ஆய்ந்து சீர்தூக்கித் தீர்மானித்தலே. பேக்கன்.

 

159 உலகிலுள்ள மக்களில் ஒருவன் தவிர ஏனையோர் அனைவரும் ஒரேவிதஅபிப்பிராயம் உடையவராயிருந்தால், அவ்வொருவனுக்குப் பலமிருந்தால் அவன் உலகத்தாரை வாயடக்க எப்படி நியாயமில்லையோ அப்படியே உலகத்தார் அவ்வொருவனை வாயடக்கவும் நியாயமில்லை.                               ஜான் ஸ்டூவர்ட் மில்.

 

160 தவறான அபிப்பிராயத்தை ஒழிப்பதும், அறிவைத் தூய்மை செய்வதும், நமது அறியாமையின் ஆழத்தை உறுதி செய்வதுமே தத்துவஞானத்தின் தொழில். ஹாமில்டன்.

 

161 "அறியாமை" யால் நமக்குச் சௌகரியங்கள் கிடையாமல் போகும் என்பது மட்டுமன்று - நமது கேட்டிற்கு நம்மையே வேலைசெய்யத் தூண்டுவதும் அதுவே. அது அறிவிலா “இன்மை'' என்பது மட்டும் அன்றுசதாகாலமும் துன்பம் தந்து கொண்டிருக்கும் தவறுகளின் "நிறைவு” ம்ஆகும்.                                           ஸாமுவேல் பெய்லி.

 

162 சாதாரண ஜனங்கள் மதிக்கம் உபயோகமற்ற விஷயங்களை அறியாதிருத்தற்கு மனோதைரியம் தேவையே. ஆனால் அந்த மனோதைரியம்உண்மையை விரும்புவார்க்கு அத்யாவசியம்.                                               ஸ்டூவார்ட்.

 

163 நூல்களைப் பற்றிய "சுவையறிதல்'' என்றால் என்ன? நூல்களின்குணங்களைச் சந்தோஷத்தோடும் குற்றங்களை வருத்தத்தோடும் காணும்மனப்பான்மையே சுவையறிதல் ஆகும்.                                                       அடிஸன்.


164 தன் அபிப்பிராயங்களில் எதையும் ஒருபொழுதும் மாற்றிக்கொள்ளாதவன் தன் தவறுகளில் எதையும் ஒருபொழுதும் திருத்திக்கொண்டவனல்லன். தன்னிடம் குற்றம் எதுவும் காணப்போதிய அறிவில்லாதவனுக்குப் பிறரிடமும் குற்றம் என்று அவன் கருதும் எதையும் மன்னிக்கப்போதிய தயாள குணம் இருக்காது.             விச்கோட்.


165 “மானம்'' என்னும் வர்க்கத்தின் ஆண் “வாய்மை”- பெண் “தூய்மை”

 

166 தத்துவ ஞானம் எல்லாம் ஆச்சரியத்தில் ஆரம்பித்து ஆச்சரியத்தில் முடிவடையும். ஆதி ஆச்சர்யம் அறியாமையின் குழந்தை; அந்த ஆச்சரியம்வணக்கத்தின் தாய். முதலாவது நமது அறிவின் பிரசவக் கஷ்டம். இறுதியானது அதன் சுக மரணம். கோல்ட்ரிட்ஜ்.


167 பேரெண்ணங்கள் எல்லாம் வெகு எளியன. அதுபோலவே பெரியோர்களும் எளியர்.
168 ஆணுக்குள்ளதைவிடப் பெண்ணுக்கு இயற்கை யறிவின் ஆற்றல் நிச்சயமாய் அதிகம். சாதாரண அறிவு சக்தியில் பெண் ஆணுக்குத் தாழ்ந்தவளே. ஆனால் உணர்ச்சிகளின் தூய்மையிலும் உயர்விலும் ஆணைவிடப்பெண் பன்மடங்கு உயர்ந்தவளாவள். பெண்ணின் ஆக்கை ஆன்மஇயல்பு ஆணுக்கு இல்லாததை அளிக்கத்தக்க முறையில் அழகாய் அமைந்துளது. ஆணின சக்திகளை அவள் தூய்மை செய்து உயர்த்தாவிடில் அவை இழிந்த சுயநல இலட்சியங்களுக்கே உபயோகிக்கப்பெறும்.                 டாக்டர் கார்பெண்டர்.

 

169 இன்பம் எல்லாம் துன்பவிலை கொடுத்தே வாங்கவேண்டும். மெய் யின்பத்திற்கும் பொய்யின்பத்திற்கும் உள்ள வித்தியாசம் இதுவே - மெய்யின்பத்திற்கு விலை அதை அனுபவிக்கு முன் கொடுக்கப்படும். பொய்யின்பத்திற்கு விலை அதை அனுபவித்த பின் கொடுக்கப்படும்.                                            ஜான் பாஸ்டர்.

 

170 நகைப்பில் எவ்வளவு அடங்கியிருக்கின்றது! மக்கள் அனைவருடையமனத்தையும் திறந்து அறிவதற்கேற்ற பொதுச் சாவி அதுவே. நகைக்கமுடியாதவன் துரோகம் தந்திரம் திருட்டு செய்யத் தகுந்தவன். இப்பொழுதே அவனுடைய வாழ்வு முழுதுவதும் ஒரு துரோகம், ஒருசூழ்ச்சி.                                        கார்லைல்.

 

171 தாராளம் சேருமானால் சிக்கனம் நல்லதே. சிக்கனம் அனாவசியச் செலவுகளை ஒழித்தலாகும். தாராளம் தேவையுள்ளவருக்கு அனுகூலமாக அவைகளை உபயோகிப்பதாகும். பின்னதில்லா முன்னது பிறர் பொருளாசை பிறப்பிக்கும். முன்னதில்லாப் பின்னது வீண் பொருன் விர யம் விளைவிக்கும். பென்.

 

172 குழந்தைகள் பாடம் கற்கும் பொழுது தங்களுக்குப் படிக்கக் கஷ்டமா யுள்ள கடின மொழிகளை கவனியாது கடந் து செல்வது போல், சிலர்தங்கள் குறைகளைக் கவனிப்பதிலர்.                                                லெய்ட்டன்.


173 தன்னைக் காண்பதுவே மிகக் கடினமான காரியம். பிறர் செயல்களில்குற்றம் காண்பதுவே மிக எளியகாரியம்.                                   தேல்ஸ.


174 திருப்தியுள்ள பன்றியாயிருப்பதினும் திருப்தியில்லா மனிதனாயிருப்பதுநலம். திருப்தியுள்ள மூடனாயிருப்பதினும் திருப்தியில்லா ஞானியாயிருப்பது நலம். பன்றியும் மூடனும் இவ்வபிப்பிராயத்திற்கு மாறுபட்டால், அதற்குக் காரணம் அவர்களுக்கு விஷயத்தில் தங்கள் பட்சமே தெரியும். ஒப்பிட்டதிலுள்ள பிறரே இருப்பட்சமும் அறிவர்,                                                            ஜான் ஸ்டூவர்ட் மில்.


175 இதைக் கூறியது யார் என்று தேடற்க. கூறியதை மட்டுமே ஆராய்க.

தாமஸ் அக்கம்பிஸ்.


176 உண்மையைக் கண்டு பிடிப்பதே மனிதனுடைய மகோன்னதமான லட்சியம். உண்மையைத் தேடுவதே பாமோத்தமமான தொழில், அதுஅவனுடைய கடமையுமாகும்.

எட்வர்ட் போர்ப்ஸ்.

 

177 நம்பக்கம் உண்மையிருப்பது வேறு - நாம் உண்மை யின்பத்திலிருக்கவிரும்புவது வேறு.                                                     வாட்லி.


178 முதலில் தூசியைக் கிளப்பிவிடுகிறோம், பின்னால் பார்க்க முடியவில்லைஎன்று முறையிடுகிறோம்.                                           பிவும் பார்க்லி.


179. மனிதனுடைய முதன்மொழி “ஆம்” இரண்டாவது “அன்று” மூன்றாவதும் இறுதியானதும் "ஆம்" - பலர் முதலாவதோடு நின்றுவிடுவர். வெகு சிலரே இரு மொழி வரைச் செல்வர்.


180 தத்துவ ஞானிக்குப் பிறர் யோசனைகளைக் கேட்க விருப்பமும், ஆனால்தானே ஆராய்ந்து முடிவுகட்ட மனவுறுதியும் வேண்டும். உழைப்பும்இருந்துவிட்டால் அவன் "இயற்கை” யின் ஆலயத்திலுள்ள இரகசியமண்டபத்தினுள் நுழையவும் எதிர்பார்க்கலாம்.

பாரடே.


181 மெய்கலந்த தவறுகளே அபாயகரமானவை. மெய்க்கலப்பாலேயேஅவைகளுக்கு எங்கும் பாவச் சாத்தியமாகின்றது. சுத்தப் பொய்யால்தொந்தரவு ஒருநாளும் உண்டாவதில்லை.

விட்னி ஸ்மித்.


182 சுருதிக்காக அறிவை அகற்றுபவன் இரண்டின் ஒளியையும் அவிப்பவனாவான். அவன் செயல் கண்ணுக்கு எட்டா நட்சத்திரத்தை தூரதிருஷ்டிக் கண்ணாடி வழியாய்த் தெளிவாய்ப் பார்ப்பதற் கென்று கண்களைஅவித்துக்கொண்டது போலாம்.


183 மதப் பிடிவாதமுடையவர் தங்கள் காலத்தில் மட்டுமே மதியுடையவராய் மதிக்கப்படுவர். தாமஸ் வில்ஸன்.                         லாக்.

 

184 உண்மையைக் காண அறிவை அழிக்கச் சொல்லுதல் பகலொளியைக்காண கண்களை அவித்துக்கொள்ளச் சொல்லுதல் போலாம், அறிவைஅழிக்கச் சொல்வது சமயத்தின் சூழ்ச்சியன்று; மூட நம்பிக்கையினதே.                           தாமஸ் வில்ஸன்.


185. பண விஷயமாய் நம்பத் துணியாத இடத்தில் ஆன்ம விஷயமாய் நம்பத் துணிவது எவ்வளவு விபரீதம்! மதாச்சாரியார் காலணாக் கொடுத்தால் அது செல்லுமோ சொல்லாதோ என்று சந்தேகிப்போம். ஆனால்அவர்கள் கூறும் மதத்தை ஆராயாது சரி என்று அங்கீகரித்து விடுகின்றோம். என்னே மனிதர் மடமை!     பென்.


186 நாம் பிறரிடம் கண்டு பரிகாசம் செய்யும் குற்றங்கள் நமக்குள் நம்மையேபரிகாசம் செய்யும்.                                                       ஸர் தாமஸ் ப்ரௌண்.


187 அறத்திற்குப் போலவே மறத்திற்கும் பிராணத்தியாகிகள் உண்டு. கோல்டன்.


188 விக்கிரகங்கள் சந்தேகத்திற்கு இடமாயும், வணங்குவோர் இதயத்திற்கு (எவ்வித நல்லுணர்ச்சியும் தரச் சக்தியற்ற) சர்வ சூன்யமாயும் ஆகும்பொழுதுதான் "விக்கிரக ஆராதனை" தவறாகும்.                                       கார்லைல்.

 

189 ஆடையில் ஒரு முறை ஒரு கிழிவு ஏற்பட்டுவிட்டால் அதை ஒவ்வொரு ஆணியும் ஒவ்வொரு முட்செடியும் கிழித்துக் கொண்டே யிருக்கும். ஒருமுறை கீறிய கண்ணாடி சீக்கிரம் உடைந்துபோகும். மனிதனுடைய நற்பெயரும் அவை போன்றதே. அதிலும் நியாயமான வசையால் உண்டாக மாசு ஒரு முறை ஏற்பட்டுவிட்டால் போதும், அது சீக்கிரம் அழிந்து விடுவது நிச்சயம்.                               பிஷப் ஹால்.

 

190. நீ படிக்கத் தீர்மானிப்பதின் அளவை உன் அவகாசத்திற்கும் அவாவிற்கும் தக்கபடி வரையறுத்துக் கொள். ஆனால் நீ படிப்பதின் அளவு சிறிதாயினும் சரி, பெரிதாயினும் சரி - நீ படிப்பது மட்டும் பல திறப்பட்டதாயும் ஒன்றிற் கொன்று அதிக வேறுபாடுடையதாயு மிருக்கட்டும். ஒரே வகையான நூல்களை மட்டுமே படிப்பவன் எவ்வளவு ஆழமாய்ப் படித்தாலும் சரி, அநேகமாய் நிச்சயம் தாறுமாறாய்விடக்கூடிய அபிப்பிராயங்களையும், குறுகியதாய் மட்டுமில்லாமல் பொய்யாயுமுள்ள அபிப்பிராயங்களையுமே பெறுவான். மக்கள் அறிவுவளர்ச்சி சம்பந்தமாய் எனக்கு ஏதேனும் ஒரு அம்சத்தில் திடமான அபிப்பிராயம் இருக்குமானால் அது இதுவே.                       டாக்டர் ஆர்னால்டு.

 

191 ''நாவன்மை'' என்பது ஆன்மாவின் இடையீடில்லாத இயக்கமே யாகும். தற்காலம் அலங்காரமாய்ப் பேசுவோர்'' நாவலர்'' அல்லர். பலசொல்அடுக்கிப் பாமரரை மயக்க நன்கு பழக்கப்படுத்தப்பட்ட நாவினரேயாவர்.                          விஸரோ.

 

192. கூறுவது முரணாகத் தோன்றினும் - அறிவில் முன்னேற்றம் அடைவதைநாம் அறிவதின் அளவு சுருங்குவதே காட்டும்.                      ஹாமில்டன்.

 

193 பேருண்மைகள் அழகுடன் பிணைக்கப்படாவிடில் அநீதி செய்யப்பட்டனவாகும். அழகுடன் பிணைக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டுவிட்டால்அவை நிச்சயமாய் ஆன்மாவிற்குள் ஆழப்பதிய வழி தேடிவிடும்.                     சானிங்.

 

194 ''ஆன்மப் பயிராக் " கத்தின் உபயோகம் யாது? அதற்குப் பரிபூரணம் அளக்கும் ஆன்ம அளவுகோல் ஒன்றுண்டு. அதன் உதவிகொண்டு அது ஐஸ்வரியத்தை ஒரு கருவியாகவே நம்மை மதிக்கச் செய்யும். அது செய்வ தெல்லாம்'' பொருள் எல்லாம் உபகரணங்களே " என்று சொல்லளவிலன்றி உண்மையாகவே உள்ளத்தில் அறியவும் உணரவும் தூண்டுவதாகும்.                                              மாதியூ ஆர்னால்டு.

 

195 மூளையின் முன்புறம் (அறிவு) பின்புறத்தை (உணர்ச்சியை) உரிஞ்சி உலர்த்திவிடுமானால் கேடே. அறிவினால் மட்டுமே நன்மை பெற்றுவிட முடியாது. விசாலமான நெற்றிக்கே எப்பொழுதும் இறுதியில் வெற்றி. ஆனால் வெற்றி கிடைப்பது தலையின் பின்புறம் மிகப் பருமனாயுள்ள பொழுதே -            ஜே. ஆர். லவல்.

 

196 அறிவை விலைக்கு வாங்கமுடியும். ஆனால் உணர்ச்சி (அன்பு) ஒருநாளும் சந்தைக்கு வருவதில்லை.                                               ஜே. ஆர். லவல்.

197 ஒவ்வொரு மனிதனும் தனக்கு இயற்கையில் அமைந்துள்ள குணங்களை எல்லாம் உபயோகிக்கும் வரையே ண்மையில் வாழ்பவனாகக் கருதப் படுவான். ஸர். டி. ப்ரௌண்.

 

198 விக்கிரகங்கள் சந்தேகத்திற்கு இடமாயும், வணங்குவோரின் இதயத் திற்கு (எவ்வித நல்லுணர்ச்சியுந் தரச் சக்தியற்ற) சர்வ சூன்யமாயும் ஆகும்பொழுதுதான் விக்கிரக ஆராதனை தவறாகும்.                                       கார்லைல்.

 

199 புனிதமான விஷயங்களை உணர்ச்சியின்றிக் கையாளும் வேஷதாரிகளே பெரிய நாஸ்திகர். அவர்களுக்கு இறுதியில் சூடு போடுதல் அவசியம். பேக்கன்.

 

200 நாம் உண்மை என்று நம்புவதை ஒப்புக்கொள்ள மறுப்பவரை நாஸ்தி கர் என்று கருதுவது பெருந் தவறு. இழிவான நோக்கங் கொண்டு உண்மைக்குச் செவி சாய்க்க மறுப்பவரே நாஸ்திகர். சமயக்'கோட் பாடுகளை'' எல்லாம் நம்புவதாய்க் கூறிக் கொண்டு சமய'' ஒழுக்கம் " இல்லாதவன் நாஸ்திகரில் நாஸ்திகன்.        ஹெச். ஏ.

 

201 இழிஞன் ஏராளமாய்ப் பணம் படைத்திருப்பது இறைவன் ஒழுங்குமுறைக்கு இழுக்கன்றோ? இம்மியும் இழுக்கன்று. இழிஞன் அந்த லட்சியத்திற்காகவே தன்னை இழிஞனாக்கிக் கொண்டான். அவன் அதற்காகத் தன் ஆரோக்கியம், மனச்சான்று, சுதந்தரம் எல்லாம் இழந்துளான். அவற்றைக் கொடுத்து அவன் வாங்கிக் கொண்டதற்காக நாம் பொறாமைப்படலாமோ?                                          மிஸஸ். பார்பால்டு

 

202 இடுக்கண் அடையாதவனைப்போல இரக்கப்படத்தக்கவன் கிடையான். அவன் நல்லவனா தீயவனா என்று சோதிக்கப்படவில்லை. இயற்கையாகவே அமைந்த குணங்களுக்காக இறைவன் ஒருநாளும் முடிசூட்டுவதில்லை.      ஜெரிமி டெய்லர்.

 

203 நாம் அறநெறியில் நிற்கும் ஒவ்வொரு சமயத்திலும் ஏதேனும் இன்பம்அதிகரியாவிடில், ஏதேனும் துன்பம் குறைந்திருக்கும் என்பது உறுதி.               பென்தம்.

 

204 புகழ் உயர்ந்தோர்க்கு ஊக்கம் அளிக்கும்; தாழ்ந்தோரின் இலட்சியம்.  கோல்டன்.

 

205 பிரபுவர்க்கம் எது? - உண்டாக்காமல் உண்பவர், உழையாது வாழ்பவர், வகிக்கத் திறமையின்றி உத்தியோகங்களை வகிப்பவர், தகுதியின்றிகௌரவங்களை அபகரித்துக் கொள்பவர் – இவரே ''பிரபுக்கள்.''                                ஜெனரல் பாய்.

 

206 செயற்கை தவறலாம்; இயற்கை தவற இயலாது.            ட்ரைடன்.

 

207. அழகுக்கு அணிகளாகிய அன்னிய உதவி தேவையில்லை. அணிகள் வேயாத பொழுதே அதிக அணிகள் வேய்ந்ததாகும்.                   தாம்ஸன்.

 

208. அறத்தாறு நில், அஞ்சற்க, உன் லட்சியமெல்லாம் உன் தேசத்தை - உன் கடவுளை - உண்மையைப் பற்றியதாகவே இருக்கட்டும். அங்ஙனமாயின் நீ வீழ்ந்தாலும் நீ பாக்கியம் பெற்றுத் தியாகியாகவே வீழ்வாய்.                         ஷேக்ஸ்பியர்.

209 நன்றாய் எழுதப்பட்ட ஜீவிய சரிதம் நன்றாய் வாழப்பட்ட ஜீவியத்தைப் போலவே அரியதாகும்.                                                 கார்லைல்.

 

210. நாம் பிறந்தவுடன் அழுகிறோம் - முட்டாள்களின் இந்தப் பெரிய நாடகமேடைக்கு வந்துவிட்டோம் என்று.                                       ஷேக்ஸ்பியர்.

 

211 துன்பமே மனிதனுடைய உண்மையான கட்டளைக்கல்.       போமண்ட்

 

212 "அபாயம்" - பெரியோரை உயர்ந்த லட்சியங்களுக்கு ஊக்கும் தூண்டுகோல் சாப்மன்.

 

213. அவன் உலக முழுவதையும் எதிர்த்து நிற்க முடியும் - ஏனெனில் அவன்யாருக்கும் கடன்பட்டிருக்கவில்லை.                                      லாங்பெலோ.

 

214 ஐயோ! பேயை அடக்குவதினும் எழுப்புவது எளிது.           காரிக்

 

215 கஷ்டங்களே மனிதனின் உண்மையான குணங்களை விளக்குவதாகும். எபிக்டெட்டஸ்.

 

216 நமது சந்தேகங்களே நமது துரோகிகள். ஆள்வினை செய்ய அஞ்சுவதால் அநேக சமயங்களில் நாம் அடையக்கூடிய நன்மையை இழந்துவிடும்படி செய்கின்றன.

ஷேக்ஸ்பியர்.

 

217 மனத்தைத் தேற்றிக்கொள். கண்களைத் துடைத்துக் கொள். சில சமயம் நாம் விழுவது அதிகச் சந்தோஷத்தோடு எழுவதற்கே.                          ஷேக்ஸ்பியர்.

 

218. கடவுளே! மெய்ப்புகழ் அருளும். இன்றேல் ஒன்றும் வேண்டாம். போப்.

 

219. தீயவர் தம் குற்றங்களுக்குச் சமாதானம் கூறுவர். நல்லவர் தம் குற்றங்களை விட்டு விடுவர். முதற் குற்றத்தைச் சரியென்று சாதிப்பவன் மூன்றாவது குற்றம் செய்பவனாவான்.

பென் ஜான்ஸன்.

 

220. முட்டாள்கள் தவறு செய்தால் அதனால் அவர்க்கு விளையும் தீமையினின்று அவர்களைக் காப்பாற்றிவிட்டால், உலகத்தை முட்டாள்களால்நிரப்பியவர்களாவோம்.

ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்.

 

221 எப்பொழுது நாம் "அதிர்ஷ்டத்” தை அதிகமாக விரும்புகின்றோமோ, அப்பொழுது அவள் நம்மை அதிகமாக அதட்டிப் பார்க்கின்றாள்.                       ஷேக்ஸ்பியர்.   

 

222 பெரியோர் அடைந்து அனுபவிக்கும் உயர் ஸ்தானங்கள் திடீரென்றுபெறப்பட்டவை அல்ல. பிறர் தூங்கும்பொழுது அவர் இரவில் இடைவிடாது வேலை செய்தவராவர்.

லாங்பெலோ.

 

223 நாணயத்தை இழந்தவன் இழப்பதற்கு வேறொன்றும் இல்லாதவனாவான். லைலி.

224 ஒவ்வொருவனும் உயிரை உயர்ந்ததாகவே கருதுகிறான். ஆனால் வீரர்உயிரினும் மானத்தையே உயர்ந்ததாகக் கருதுவர்.                         ஷேக்ஸ்பியர்.

 

225. நூலறிவு ''பேசும்" - மெய்யறிவு "கேட்கும்.''                  ஹேம்ஸ்.

 

226. "வக்கீல்'' யார்? - உன் சொத்தை எதிரியினிடமிருந்து பிடுங்கித்தனக்கு வைத்துக்கொள்ளும் கனவான்.                                  புரூஹாம் பிரபு.

 

227. ஜனசமூகம்! - எத்தனை மூடர் சேர்ந்து ஒரு ஜன சமூகம்!    ஷாம்பர்ட்.

 

228. மனிதனுடைய உயர்ந்த விஷயங்கள் அவன் அருகிலேயே உள. அவன்பாதங்களின் அடியிலேயே அமையும்.                                      ஹாட்டன் பிரபு.

 

229 என் மானம் போய்விட்டால் நானே போய்விட்டேன்!          ஷேக்ஸ்பியர்.

 

230. ஏதேனும் பழுதிலாத தொன்றை இயற்ற முயல்வதைப் போல் ஆன்மாவைப் புனிதமாக்குவதும் சமய வாழ்வு வாழச் செய்வதுமானது வேறெதுவு மில்லை. ஏனெனில் பரிபூரணமே கடவுள், அதனால் பூரணத்தை நாடி முயல்பவன் கடவுள் தன்மையை நாடுபவனாவான்.                                           மைக்கேல் எஞ்ஞலோ.

 

231 இரக்கம் காட்டும் சந்தர்ப்ப தினுசுகளின் தொகையின் அளவே, ஆன்மாவின் பெருந்தன்மை யாகும்.                                          பேக்கன்.

 

232 "வினைப்பயன்” என்பதைப் பிறர் விஷயத்தில் நம்பியும் தம் விஷயத்தில் நம்பாமலும் இருக்கக் கூடுமானால் அது பெரும் பாக்கியமாகும்.                 மில்.

 

233 ஞானிகள் முயல வேண்டுவது உலகத்தை வெறுக்கவன்று, அறியவேயாகும்.

கதே.

 

234 ஜனங்களிடை இரக்கமும் சகோதர அனுதாபமுமே மனிதவாழ்வில்பெறுவதற்காக முயல வேண்டிய பேருணர்ச்சிகளாகும்.                   மார்லி.

 

235 உண்மையே தெய்விகம் பொருந்தியது. சுதந்தரம் இரண்டாவது ஸ்தானம் பெறும். உண்மை உணர்வதற்குச் சுதந்தரம் அவசியமானாலும்சுதந்தரத்தோடு உண்மை சேராவிடில், சுதந்தரத்தால் ஒரு பயனும்உண்டாகாது.                         மார்லி.

 

236 கவிஞன் சாதாரண விஷயங்களும் சந்தோஷம் தரத்தக்க வண்ணம்வாழ்வை நடத்துதல் வேண்டும்.                                                   எமர்ஸன்.

 

237. யாரையேனும் மதித்துத்தான் தீரவேண்டுமானால், அவர் பிழையின்சுமையைத் தாங்கும் விதத்தை வைத்து மதிக்க வேண்டுமேயன்றி, அவர்அச்சுமையை ஏற்படுத்திக்கொண்ட காரியத்தை வைத்து மதிக்கலாகாது.         மார்லி.

238 நான் "ஒருவன் என்ன நினைத்தான்'' என்று அறிய விரும்புகிறேனேயன்றி'அவன் என்ன நினைத்திருக்க வேண்டும் " என்று பிறனொருவன்கூறுவதைக் கேட்க விரும்பவில்லை.

கதே.

 

239. "இரக்கம்," "நீதி'' இரண்டும் சிறுமொழிகள். ஆனால் அவைகளை அனுஷ்டானத்திற்கு மட்டும் கொண்டு வந்து விட்டால், அறநெறி விஷயங்கள்அனைத்தும் அவற்றுள் அடங்கி விடும்.                                                    ஜார்ஜ் எலியட்.

 

240 வாழ்வு பொதுவாக மனிதர்க்கு நன்மையே யாயினும் பலர்க்கு நன்மையாவது சந்தேகம், சிலர்க்கு நன்மையே யன்று.                             ஜார்ஜ் எலியட்.

 

241 ஜனங்களின் நன்மை நாடுவதற்குரிய நல்லுணர்ச்சிகளை எழுப்புவதே என் வேலை. அந்த நன்மையை அமைத்துக் கொள்வதற்குரிய வழிகளை வகுப்பதன்று, கவி யுள்ளத்தில் ஜனங்கள் பால் அன்பு எவ்வளவு அதி கமாயிருப்பினும், வழிகளைத் தீர்மானிக்கும் சக்தி உயர்ந்ததாய்க் காண் பது அநேகமாய் அரிது.                      ஜார்ஜ் எலியட்.

 

242 மனிதன் பிறந்துள்ளது உண்மையைத் தேடவே. ஆனால் அதை அடை யும் பாக்கியம் வேறோர் பெரியசக்திக்கே உண்டு.                           மாண்டெயின்.

 

243 கடவுள் வலது கையில் முழு உண்மையையும், இடது கையில் உண்மை யைத் தேடுவதில் அழியா ஆசையும் வைத்துக் கொண்டு எது வேண்டும் என்று என்னைக் கேட்டால் - இடது கையில் உள்ளதை விரும்பினால் என்றும் இருட்டிலேயே இருக்க வேண்டி யிருப்பினும் - நான் இடது கை முன் தலையைத்தாழ்த்தி " தந்தையே, தாரும்; உண்மை உமக்கே உரியது'' என்று கூறுவேன். ஏனெனில் மனிதன் உண்மையை அடை வதாலன்றி உண்மையைத் தேடுவதாலேயே பரிபூரணத்துவத்தைத் தன்னிடம் இடைவிடாது வளர்த்துக் கொள்வதற்குரிய தன் சக்திகளைவிருத்தி செய்து கொள்கிறான்.

                                                            லெஸ்ஸிங்.

 

244 தீயநெறியில் செல்லாதிருக்க எப்பொழுதும் எச்சரிக்கையா யிருப்பதைவிட நல்ல விஷயங்களில் மனதை ஈடுபடுத்தி அதன் மூலம் தீயநெறிநினைவே எழாதிருக்கச் செய்வதே நலம்.                                                 பித்தாகோரஸ்.

 

245 நம்மிடம் பகைப்பதற்குப் போதுமான சமய உணர்ச்சி உளது. ஆனால் அன்பு செய்வதற்குப் போதுமான அளவு இல்லை.                       ஸ்விட்.

 

246 மனிதர் அவசியம் கவனிக்க வேண்டிய உண்மையான, நியாயமான, கௌரவமான விஷயம் தங்களைச் சுற்றியுள்ளவர், தங்களுக்குப் பின்வாழப் போவர் இருவருடைய நன்மையை நாடுவதே.                                    ஹாரியட் மார்ட்டினோ.

 

247 சோம்பலில் இன்பம் இல்லை; அனுபவத்திலும் அதிக நேரம் இன்பம்காண முடியாது. ஆசைப்பட்டு அடைய முயல்வதிலேயே இன்பம்உண்டு.

 

248 மனிதனுடைய உடைமையா யிருக்கக்கூடியது அறிவு ஒன்றே. ஆகையால் அறிவை விருத்தி செய்வதே ஆசைப்பட்டு அடைய முயலத்தக்கஒரே வெற்றியாகும்.

 

249. உலகத்தில் வெகு சிலரே தனியாக வாழத் தகுதி யுடையவர். அவர் களுக்கு உலகத்தின் மாயத்தை அறியபோதுமான லௌகிக ஞானமும்சகல மாயத்தையும் வெறுத்துத் தள்ளப் போதுமான அறவொழுக்கமும்இருக்கவேண்டும். கௌலி.

 

250. தன்னலமின்மையும் நாணமுமே மெய்ஞானத்தின் இலக்கணம். ரஸ்கின்.

 

251 மெய்ஞ்ஞானம் "கடவுளிடம் அடக்கம் - ஜீவர்களிடம் அன்பு - தன்னிடம்அறிவு - உண்டாக்கும்.”                                                 ரஸ்கின்.

 

252 எத்தனை உயர்ந்தோரை அறிய முடியுமோ அத்தனை உயர்ந்தோரைத்தான் சார்ந்து நிற்பதும், எத்தனை தாழ்ந்தோரை அணுகக் கூடுமோ அத்தனை தாழ்ந்தோர் தன்னைச் சார்ந்து நிற்பதுமே ஆன்மாவின் உண்மையான ஆற்றலாகும்.    ரஸ்கின்.

 

253 ஞானத்தின் முதல் வேலை தன்னை யறிதல்; அன்பின் முதல் வேலை தனக்குத்தான் போதுமானதா யிருத்தல்.                                      ரஸ்கின்.

 

254 சந்தோஷம் அடையச் செய்யாத - நியாயமான வழியில் சந்தோஷம் அடையச் செய்யாத கல்வி எல்லாம் வீணேயாகும்.                     ரஸ்கின்.

 

255 மனிதர் அனைவருக்கும் மதமாகிய கடிவாளம் தேவை. மரணத்திற்குப் பின் யாதோ என்னும் பயமே மதம்.                                          ஜார்ஜ் எலியட்.

 

256 ஜீவராசிகள் அனைத்திடமும் அன்பு செலுத்தச் செய்வதே உண்மைக் கல்வி; அதுவே ஆனந்த அதுபவம் அளிப்பது.                                    ரஸ்கின்.

 

257 மனச்சாந்தி பெற இரண்டு காரியங்கள் செய்யவேண்டும் - (1) இன்பமான எண்ணங்களுக்கு உன்னை உறைவிடமாகச் செய்து கொள் (2) குடும்பத்தால் சௌகர்யமும் சந்தோஷமும் உண்டாவதற்காக உழைப்பாயாக.                  ரஸ்கின்.

 

258 பிறரைச்சார்ந்து வாழும் செல்வப் பூனையினும் தன்னுணவைத் தானே தேடிக் கொள்ளும் சிறு எலியே சாலச் சிறந்ததாகும்.                      ஜார்ஜ் எலியட்.

 

259 மனிதனுடைய இரண்டு பெரிய இன்பங்கள் (1) பிறரை நேசித்தல் (2) பிறரைப்புகழ்தல். மனிதனுடைய இரண்டு பெரிய விருப்பங்கள் - (1) பிறரால் நேசிக்கப்படல் (2) பிறரால் புகழப்படல்,                                                       ரஸ்கின்.

 

260 பிறருக்குத் தீங்கிழைக்கத் தூண்டாமல் நமக்கு நேர்ந்த தீங்கை மறைப்பதற்கு மட்டுமே நம்மைத் தூண்டுமானால் கர்வம் தீயதன்று.                        ஜார்ஜ் எலியட்.

 

261 ஒரு விஷயத்தைப் பல வாயிலாகப் பார்க்க முடியாத புத்தி குறுகியதாகும்.

ஜார்ஜ் எலியட்,

 

262 ஈதலாகிய ஆடம்பரத்தை அறிய ஏழையா யிருத்தல் வேண்டும். ஜார்ஜ் எலியட்

 

263 சோம்பேறிக்கு உயிர்வாழ உரிமைகிடையாது; உயிர் வாழக்கிடைத்தாலும் மணம் செய்யக் கிடையவே கிடையாது.                           ஜார்ஜ் எலியட்,

 

264 விரும்புவதைப் பெற முடியாததால் பெற முடிவதை விரும்புவோமாக. ஸ்பானிஷ் பழமொழி.

265 காதல் தனக்காக இன்பம் தேடுவதில்லை, தனக்காகக் கவலைப்படுவது மில்லை; மற்றொருவருக்காக தன் சௌகரியத்தை உபயோகப் படுத்து கிறது. நரகவேதனையிலும் சொர்க்க இன்பத்தை அமைத்து விடுகின்றது.                      ப்ளேக்,

 

266 முரணில்லாதிருக்க முயலற்க. உண்மையா யிருக்க மட்டுமே உழைத்திடுக.

ஹோம்ஸ்.

 

267 இவனுக்கு அடிமைக் கையில்லை, உயர்வோம் என்ற ஆசையுமில்லை, தாழ்வோம் என்ற பயமும் கிடையாது. தனத்திற்கு அன்றேனும் தனக்குச் சத்தியமாய்த் தலைவனே. ஒன்று மிலன் - ஆயினும் எல்லாம் உடையான்.            ஸர் ஹென்றி வோட்டன்.

 

268 நாம் ஒருவரை ஒருவரை அதிகமாக நேசிக்க வேண்டுமானால் அவரிடம் ஒன்றிரண்டு தவறுகள் இருக்கவே வேண்டும்.                            ஹோம்ஸ்.

 

269 அறம் இதுவென்று இதுவென்று அறியாதும், விரும்பியது செய்ய முடியாதும் இருந்தாலும், அறத்தில் ஆசை கொள்வதால், தீமையை எதிர்க்கும் தெய்வீக சக்தியில் நாமும் ஒரு அம்ஸமாவோம்.                                 ஜார்ஜ் எலியட்.

 

270 பல துன்பங்களுக்குப் பிறப்பிடமென்று நான் நகரத்தின் களியாட்டிடங்களை விட்டுவிட்டாலும், இன்னும் என்னைவிட்டு விடமட்டும் கற்றுக் கொள்ள வில்லை.

செயின்ட் பேஸில்.

 

271 தேசத்தைச் சுத்தமாயும் ஜனங்களை அழகாயும் செய்து கொள்வதே கலையின் பிரதமவேலை.                                                 ரஸ்கின்

 

272 ஒருவனுடைய லக்ஷியம் இதுவென்று அறிந்து விட்டால் பின் அவனைப் பற்றி அறிந்து கொள்ளுதல் சஷ்டமான காரியமன்று.                          ஹோம்ஸ்.

 

273 நான் எனக்காக மட்டுமே உள்ள ஆசைகளை வைத்துக்கொள்ளா திருக்க முயலுகின்றேன். ஏனெனில் அவை பிறருக்கு நன்மை பயவா திருக்கலாம். தவிர இப்பொழுதே அவை என்னிடம் கதிகமாக இருக்கின்றன.        ஜார்ஜ் எலியட்.

274 கடன்-பசும்புல்லாலும் நறுமலராலும் மூடப்பட்டு மனிதரைத் தன்னை நாடச் செய்யும் படுகுழி.                                                      ஜார்ஜ் எலியட்,

 

275 மணவாழ்க்கையில் இனிமேல் எனக்கு அவளிடம் அன்பிராது என்னும் பயத்தை விட என்னிடம் அவளுக்கு ஒருபொழுதும் அதிக அன்பிராது என்னும் நிச்சயம் பொறுக்கத் தக்கதாகும்.                                                      ஜார்ஜ் எலியட்

 

276 உருவத்தை உடைத்தெறிதல் -அதுவே உண்மையை அடைவதற்குரிய ஒரே வழி.

ஹோம்ஸ்.

277 வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களைக்குறைக்க ஒருவர்க்கொருவர் உதவி செய்து கொள்வதற்கன்றி வேறெதற்காக நாம் உயிர் வாழ்கின்றோம். ஜார்ஜ் எலியட்.

278 வாதங்கள் மூளையின் சிருஷ்டி; ஆனால் அபிப்பிராயங்கள் ஆன்மாவின் அமைப்பு.

279 அன்பையும் அறத்தையும் அஸ்திவாரமாகக் கொண்ட நட்பே மெய் நட்பு. அதுவே அறியாதது ஆகும்.                                                ஸவனரோலா.

 

280 அழகு ஆன்மாவில் அரும்பி ஆக்கைக்கு அமராளி அளிக்கின் றது. ஸவனரோலா.

281 அறத்தில் ஆசையே உண்மைச் சுதந்தரம். பிற ஆசைகளால் பிணிப் புண்டவனுக்குச் சுதந்தரம் எது?                                            ஸவனரோலா.

 

282 அன்பே அனைத்தறன். மனச்சான்றே மாண்புறு வழிகாட்டி.    ஸவனரோலா.

 

283 குற்றவாளியைக் கண்டிக்கவேண்டாம். குற்றத்தை மட்டுமே கண்டிக்க வேண்டும். கண்டிப்பதோடு அமையாது கருணையும் காட்டவேண்டும். ஒரு நாள் எவ்வளவு குற்றவாளி யானாலும் என்றேனும் நீதிநெறி புகுதல் நிச்சயமாதலின்.         ஸவனரோலா.

284 குற்றமான காரியம் செய்யக் கூசவேண்டியது அவசியமே; ஆனால் பிறர்குறை கூறுவரோ என்று அளவு கடந்த ஜாக்ரதை அமைத்துக் கொள்பவன் அன்புடையவனாக இருக்கலாம். உயர்ந்தோனாக மட்டும் இருக்க முடியாது.          பளூட்டார்க்.

285 அயலார்க்கு நன்மை செய்யும் பொழுதுதான் ஆண்டவனை ஸ்துதிப்தாகக் கூறமுடியும்

ஸவனபோலா.


286 அற உணர்ச்சி அளிக்காச் சடங்குகளனைத்தும் அழிக்கத் தக்கவைகளே. ஸவனரோலா.

287 உன் கடமையைச் செய்ய முயல்க; அப்பொழுது உன் தகுதியை உடனே அறிந்து கொள்வாய்.

 

288 அயலார்க்கு அன்பு செய்வதில் ஆநந்தம் காண்பவனே உண்மையில் இன்பம் துய்ப்பவன் ஆவான்.

289 ஆசைகளை அடக்க முடியாத ஆன்மசுதந்தரம் அழிவு அளிக்கும். கதே.

 

290 எதை நாம் அறியவில்லையோ அது நம்முடைய தன்று.      கதே.

 

291 ஒருவன் ஒன்றை உண்மை என்று ஆராய்ந்து உறுதி செய்து விட்டால் அதைச் செய்து முடிக்கும் ஆற்றல் அவனுக்கு உண்டு.

 

292 நுண்ணறிவு அன்புடன் சேர்ந்து விட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் அவனியில் கிடையாது.                                      கதே.

 

293 பெரியார் பேச்சு அறிவு தரும். பெரியோர் மௌனம் அன்பு பெருக்கும். கதே.

 

294 நட்பு பழக்கத்தாலேயே வளரும். பழக்கத்தாலேயே நிலைபெறும்.    கதே.

 

295 நட்புண்டாக அன்பு மட்டும் போதாது. இலட்சிய ஒற்றுமையும் அவசியம். கதே.

 

296 பிறர் கர்வத்தை மாற்ற நாம் உபயோகிக்கக்கூடிய மருந்து அன்புஒன்றே. கதே.

 

297 எதைக் குறித்து நாம் நகைக்கின்றோமோ அதைத்தவிர வேறெதுவும் நம்மெய் இயல்பைக் காட்டாது.                                             கதே.

 

298 நம்மை நாம் வெல்லாத வரை அறம் எதுவும் இல்லை. உழைப்பு வேண்டாத செயலெதுவும் மதித்தற் குரியதன்று.                             கதே.

 

299 எந்தக்காலமும் எனக்குத் துணையாய் நிற்க இறைவனிடம் ஏற்பதாயிருந்தால் முதலில் வேண்டுவது சமயசாந்தி. இரண்டாவது கல்வியிற்               ஹெர்ஷல்

 

300 உண்மை நெறிநின்று சுதந்தரம் பெறுபவனே சுதந்தான். ஏனையோர் எல்லோரும் அடிமைகளே.                                                      கௌப்பர்.

 

301 ஒருவன் அடிமையான உடன் அவனுடைய நற்குணங்களில் செம்பாதி சிதைக்கப்பட்டு விடுகிறது.                                                   ஹோமர்.

302 தாய் நாட்டிற்காகச் சமர் செய்வதே தலைசிறந்த தனிப்பெறும் நற்சகுனமாகும்.

ஹோமர்.

 

303 கடமையைச் செய்துவிட்டேன் - அதற்காகக் கடவுளைத் துதிக்கின்றேன். நெல்ஸன் - இறுதிமொழிகள்.

 

304 செல்வத்திலோ களியாட்டிலோ புகழிலோ பற்றுடையவன் எவனும் ஜனங்களிடம் பற்றுடையவ னாகான்.                                        எபிக்டெட்டஸ்.

 

305 விரும்ப வேண்டியவற்றை விரும்பவும் வெறுக்கத் தகுந்தவற்றை வெறுக்கவும் செய்யுமாறு நன்னெறியில் செலுத்தப்படும் அன்பே அறமாகும். ஸெயின்ட் அகஸ்டைன்.

 

306 உயிர் போகுமுன் பலமுறை இறப்பர் கோழைகள். வீரர்கள் இறப்பது ஒரு முறையே.

ஷேக்ஸ்பியர்.

307 மாசற்ற மனம் எளிதில் இறுவதில்லை.                     ஷேக்ஸ்பியர்.

 

308 துக்கத்தை அடக்காதே, மொழிந்துவிடு. இல்லை எனில் இருதயத்தை உடைந்து விடச் செய்யும்.                                                      ஷேக்ஸ்பியர்.

 

309 ''அறிவு" -ஆம், அது நாம் வானுலகு ஏறுதற்குரிய வன் சிறகு. ஷேக்ஸ்பியர்.

 

310 தலைசுழல்பவன் தரணியும் சுழல்வதாய் எண்ணுகிறான்.      ஷேக்ஸ்பியர்.

 

311 நண்பர் குறைகளை மறந்துவிடு. பகைவர் குணங்களை நாடு, அப்படிச் செய்வதில் உனக்கு நன்மை உண்டு.                                        கதே.

 

312 அறிஞர்க்கு அநேகமாக அனைத்தும் நகையாடற்கு உரியதே; ஆனால் சான்றோர் நகையாடுதல் அரிது.

 

313 பரிபூரணமே தேவரை அளக்கும் கோல். பரிபூரணத்தில் பற்றே மனிதரை அளக்கும் கோல்.                                                          கதே.

 

314 செய்ய வேண்டியதை அறிவது போல் செய்வதும் எளியதானால், வறிஞர் குடிசைகளும் மன்னர் மாளிகைகளாய் விடாவோ.                              ஷேக்ஸ்பியர்.

 

315 வாழ்வாகிய வஸ்திரத்தில் எப்பொழுதும் இருவகை நூல் இருக்கும். நன்மை தீமையே அது.                                                            ஷேக்ஸ்பியர்.


316 மாறுதல் கண்டவுடன் மாறும் அன்பு அன்பாகாது.            ஷேக்ஸ்பியர்.

 

317 இசை யுணர்ச்சி இல்லாதவனும், இன்னிசையால் இருதயம் இளகாதவனும் துரோகம் தந்திரம் திருட்டு முதலியன செய்யத் தகுந்தவர்.            ஷேக்ஸ்பியர்.

 

318 பெயரில் உள்ளது யாது? மல்லிகை மலர்க்கு மாறு பெயரிட்டாறும் மணம் குன்றாது.

ஷேக்ஸ்பியர்.

 

319 வாயில் இனிப்பவை வயிற்றில் புளிக்கும்.             ஷேக்ஸ்பியர்.

320 மனம் கொண்டது மாளிகை. நாகத்தைச் சொர்க்கமாக்கும். சொர்க்கத்தை நரகமாக்கியும் விடும்.                                                      மில்டன்.

 

321 பழிவாங்குதல் முதலில் இனியதே. ஆனால் வெகு சீக்கிரத்தில் தன்னையே கொல்லும் விஷமாய் மாறிவிடும்.                                        மில்டன்.

 

322 அழகிலும் சிறந்தவை ஆண்மையும் அறிவுமே. அவைதாம் உண்மை அழகு உடையன.

மில்டன்.

 

323 புது முறைக்கு இடம் கொடுத்துப் பழயமுறை மறைகின்றது. ஒருகல்ல வழக்கம் உலகைக் கெடுக்காதிருக்க கடவுள் பல வழிகளில் தம்கருத்தை நிறைவேற்றிக் கொள்கின்றார்.                                            டெனிஸன்.

 

324 மனத்தைத் தவிர குறையுள்ளது வேறு இயற்கையில் கிடையாது. அன்பிலா தவரே அங்கவீனர். அறமே அழகு. அழகான மறம் முலாம் பூசிய சூன்யப்பேழை யாகும்.

ஷேக்ஸ்பியர்.

325 பொய்மை, கோழமை, கீழ்குலம் மூன்றுமே பெண்கள் பெரிதும் வெறுப்பதாகும்.

ஷேக்ஸ்பியர்.

326 கருணையால் கண்ணீர் வடிக்கும் முகத்தினும் உண்மை வாய்ந்த முகம் கண்ணீர் விடுதல் கண்டு ஆநந்திப்பினும் கண்ணீர் விடுதல் எவ்வளவு நலம். ஷேக்ஸ்பியர்.

 

327 அதிர்ஷ்டம் அடையும் வரை என்னை அறிவிலி என்று அழையற்க. ஷேக்ஸ்பியர்.

 

328 கடமையைச் செய்வதே கீர்த்திக்கு வழி.                     டெனிலன்.

 

329 முழுவதும் பொய்யான பொய்யோடு முழுபலத்தோடு போர் புரிய முடியும்; ஆனால் மெய்கலந்த பொய்யோடு போர் புரிதல் கஷ்டமான காரியம்.      டெனிஸன்.

 

330 ஒருநாளும் காதல் செய்யா திருப்பதினும் ஒரு பொழுதாவது காதல் செய்யாது இழந்து விடல் சிறப்புடைத்து.                                         டெனிஸன்.

 

331 விழுகின்ற வீட்டை எதிற்கும் மடமையே யாகும்.            ஷேக்ஸ்பியர்.

 

332 மனிதர் கவனமாய் வடித்து எடுப்பின் தீமையிலும் நன்மை தெளியலாம். ஷேக்ஸ்பியர்.

 

333 மனிதனால் இயல்வதெல்லாம் இயற்றத் துணிவேன். அதற்கு அதிகம் செய்யத் துணிபவன் மனிதன் அல்லன்.                                ஷேக்ஸ்பியர்.

 

334 வறுமையும் மனத்திருப்தியும் போதிய பொருள் உடைமையே. ஷேக்ஸ்பியர்.

 

335 ஒன்றும் செய்யாது காத்திருப்பவரும் ஊழியம் செய்பவரே.    மில்டன்.

 

336 சமரில் உள்ள வெற்றிக்குக் குறையாத வெற்றி சமாதானத்திலும் உண்டு.   மில்டன்.

 

337 ஒருமகன் பெற்று அவன் தவறிழைக்கக்காணும் ஒருத்தியைவிட உலகில் அதிக துக்கம் படைத்தவர் யாருமிலர்.                                       டெனிஸன்.

 

338 பழுத்த இலை பச்சை இலையை வெறுக்கின்றது. ஏன்? பச்சை இலை இன்னும் ஒரு நிமிஷநேரம் அதிகமாக மரத்தில் தொங்கு மன்றோ?             டெனிஸன்.

 

339 நூலறிவு வந்து விடுகின்றது. மெய்ஞானம் வரத்தயங்குகின்றது. டெனிஸன்.

 

340 வாய்மை வாய்ந்த வாலிபர் தம்புகழிலும் பெரியோர் பக்தியையே பெரிதும் போற்றுவர்.

டெனிஸன்.

 

341 உண்மையாளர்க்கு உதவியின் மதிப்பு உதவுவார் மதிப்பு அளவேயாகும்.

டெனிஸன்.

 

342 நான் இயற்கையையும் சபிப்பதில்லை மரணத்தையும் சபிப்பதில்லை. ஏனெனில் நெறிபிறழ்ந்த தெதுவும் நிலையாது.                             டெனிஸன்.

 

343 அழகு அரம் அறிவு மூன்றும் சகோதரிகள். ஒருவர்க்கொருவர் உழுவலன் புடையார், மனிதர்க்கு உற்ற தோழர். ஒருங்கு கூடியே வாழ்வர். விழிநீர் பெருக்காது வேறு பிரித்தல் இயலாது.                                                    டெனிஸன்.

 

344 பெண்ணே! சுகமான காலத்தில் நிச்சய புத்தியில்லாய். நாணமுடையாய், களிப்படையச் செய்வதும் கஷ்டம். துன்பமும் கவலையும் மார்படைக்கும் காலத்தில் அவை துடைக்கும் தெய்வமாவாய்.                                              ஸ்காட்

 

345 ஆண்டவன் சித்தப்படி நடப்பதிலேயே நாம் ஆன்மசாந்தியைக் காணமுடியும். தாந்தே.


346 பொதுப்பணம் புண்ணிய தீர்த்தத்தை ஒக்கும். ஒவ்வொருவாருவரும் தம்மால் இயன் றமட்டும் அதில் கொஞ்சம் எடுத்துக்கொள்வர்.


347 கோழையா யில்லாதவன் வீரனாபிருக்க முடியாது.           பெர்நார்டு ஷா


348 வோர்ட்ஸ் வொர்த் என்னும் கவிஞர் பெருமான் இறந்தவுடன் ஒரு குடியானவன் "அவர் செய்து வந்த காரியத்தை அவர் மகன் நடத்தட்டுமே''என்று கூறினான். இவன கவி விலக்கணம் அறியா மூடன் என்று நாம் நகைக்கின்றோம் - ஆனால் தந்தையின் சமயத்தைத் தனயனும் தழுவட்டுமே" என்று கூறும் நாம் மூடர் அல்லமோ?

பெர்நார்டு ஷா

349 எவனும் இன்னொருவனுடைய எஜமானனாயிருக்கப் போதுமான குணம் பொருந்தியவனாகான்.                                     சர் வில்லியம் மாரிஸ்,


350 உண்மை உரைப்பதே என் ஹாஸ்யமுறை. அதனிலும் அதிக ஹாஸ்ய ரசம் அமைந்தது அவனியில் கிடையாது.                     பெர்நார்டு ஷா.


351 வறுமையே தீமையில் தலைசிறந்ததும் குற்றத்தில் கொடியது மாகும். பெர்நார்டு ஷா.


352 மனிதரைச் சுதந்தரத்திற்குத் தகுதி யாக்குவது சுதந்தரம் ஒன்றே. க்ளாட்ஸ்டன்,


353 சிறு சீர்திருத்தங்கள் பெரியவைகளின் ஜன்ம விரோதிகளாகும். மார்லி.


354 என் தலைசிறந்த நண்பனிடம் எனக்கு அன்பு அதிகம். அவன் எவன்?
வீரம் நிறைந்த பகைவனே. என் சக்திகளை எல்லாம் உபயோகிக்கும்படி என்னை எப்பொழுதும் தயாராய் வைத்திருப்பவன் அவனே.                பெர்நார்டு ஷா.


355 தினந்தோறும் சிறு நன்மைகளுக்காக ஆன்மாவை விற்பதைத் தவிர வேறு என் செய்கின்றனர் மனிதர்?                                         பெர்நார்டு ஷா.


356 நற்செயலை நாடிக்கொள். வழக்கம் அதை மனத்திற்கு ஒத்ததாக்கி விடும்.


357 சிறு தொகையால் ஏற்படுபவன் கடனாளி. பெருந்தொகையால் ஏற்படுபவன் பகைவன்.

ஸெனீக்கா புளூட்டார்ச்.


358 கடவுள் பார்த்தாலொப்ப மனிதரோடு வாழ்க. மனிதர் கேட்டாலொப்ப கடவுளோடு பேசுக.                                                     ஸெனீக்கா.


359 பிறர் நம்மை அறிந்துகொள்ள முடியாதபடி நடந்து கொள்வது நம் வழக்கம். அதன் முடிவு யாதெனில் - நாமே நம்மை அறிந்து கொள்ள முடியாதபடி நடக்கப்பயின்று விடுகிறோம் என்றதே.                                           பிரஞ்சு பழமொழி.


360 உலகத்தாரைக் கவனியாது தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்று கருதுவது பெரும் பிழை. ஆனால் தன்னைக் கவனியாது உலகத்தார் எதையும் சாதித்துக்கொள்ள முடியாது என்று கருதுவது அதனிலும் பெரும்பிழை.          பிரஞ்சு பழமொழி.


361 கண் குருடு என்று இரங்குவது போலவே அறிவு சூன்யம் என்றும் இரக்க வேண்டும்.

செஸ்டர் பீல்டு.


362 மனிதர் இம்மைக்காக மறுமையையும், மறுமைக்காக இம்மையையும் ஒரு பொழுதும் முழுவதும் வேண்டாம் என்று விட்டுவிட மாட்டார்கள்.           ஸாமுவேல் பட்லர்.

 

363 பிறர் அறியாததை வைத்து அவர்களை மதித்தல் ஆகாது. அறிந்துள்ளதை எவ்வாறு அறிந்திருக்கின்றனர் என்பதை வைத்தே அவர்களை மதிக்கவேண்டும். பிரஞ்சு பழமொழி.


364 சாலச் செலவும், வேலை செய்தலுமே உண்மையான துக்கத்திற்குமருந்து.

செஸ்டர் பீல்டு.


365 ஒரு சின்னஞ் சிறு தூசி கண்ணுக்கு வெகு சமீபத்தில் இருக்குமானால் அது உலக முழுவதையும் மறைத்து தன்னை மட்டுமே கொடுக்கு மன்றோ? 'நான்' என்பதைப்போல எனக்குத் தொந்தரவு கொடுக்கும் தூசி வேறு அறியேன்.             ஜார்ஜ் எலியட்.


366 நமது உணர்ச்சியின் தன்மை விசாலம் இரண்டின் அளவே நமது ஒழுக்க மாகும்.

ஜார்ஜ் எலியட்.


367 உன் வேலையிலும், உன் வேலையை நன்றாய்ச் செய்யக் கற்றுக்கொள்வதிதிலும் பெருமை அடைதல் வேண்டும்.                                   ஜார்ஜ் எலியட்,


368 நமது நன்மையை அடையத் தவறி விட்டாலும் பிறர் நன்மை இருக்கவே செய்கின்றது. அதற்காக முயலுதல் தக்கதே.                                 ஜார்ஜ் எலியட்.


369 ஒருவன் அபிப்பிராயத்தைக் குறித்துப் பெரிதும் ரோஷம் கொள்வது பல வீனத்தின் அடையாளம்.                                                ஹோம்ஸ்.


370 பிறர் உவக்கும் வண்ணம் நடந்து கொள்வதற்கான ஆசையும் அறிவும் ஏற்படுத்துவதே குழந்தைகளை கௌரவமானவராக வளர்ப்பதின்மாகும்.           ஹோம்ஸ்.


371 சாத்தியத்தைக் கூறச் சக்தி பெற்றிருப்பதே சமத்துவத்தின் சாரம். ஹோம்ஸ்.


372 ஆன்மாவின் கதவை ஒரு விருந்தாளிக்கு ஒரு முறை திறந்து விட்டால் பின்யாரெல்லாம் உள்ளே வந்து புகுவர் என்று கூறிவிட முடியாது. ஹோம்ஸ்

373 ஆண்களை விடப் பெண்கள் இருமடங்கு சமய உணர்ச்சி உடையவர். நாம் அவர்களிட மிருந்தே நமது மனித வுணர்ச்சியில் அதிகமான பாகத்தை அடைகின்றோம். அவர்கள் தருவது முக்கியமாக அவர்களுடைய அன்பின் மூலமாகவே.       ஹோம்ஸ்.


374 அவளிடம் அளிப்பதற்கு அதிகமில்லை. ஆனால் அவள் கொடுக்கும் பொழுது அவள் கண்களில் ஒளி உலவுகின்றது. அதுவே ஆண்டவன் ஆசைப்படுவது. ஹோம்ஸ்.


375 அறிவிற் சிறந்தவர் அறத்திற் சிறந்தவரை மணத்தல் வேண்டும். ஹோம்ஸ்.

 

376 ஜலக்குமிழி தங்கக்கட்டிக்குச் சமான மாகுமானால் உயர்ந்த மூளையும் உண்மையான உள்ளத்திற்குச் சமானமாகும்.                                  ஹோம்ஸ்.

377 மேன்மை வேலையின் வெகுமதி. வேறெவ்விதத்திலும் அதை மனிதன் அடைய முடியாது.                                              ஸர் ஜோஷுவா ரெய்னால்ட்ஸ்.


378 உண்மையே ஞானத்தின் உறைவிடம்.


379 தன்னை அடக்கிக் கொள்ளச் சக்தியற்றவன் சுதந்தரன் ஆகான். பித்தாகோரஸ்.


380 உண்மையாக இருக்கத் துணிக, ஒன்றிற்கும் பொய் வேண்டியதில்லை. பொய்யை விரும்பும் குற்றம் அதனாலேயே இரண்டு குற்றமாய் விடும்.   ஹெர்பர்ட்.


381 காலத்தை வீணாய்க் கழித்தது உயிருடன் இருப்பு மட்டுமே. காலத்தை உபயோகித்ததே

உண்மையில் வாழ்வாகும்.


382 நமது செயலின் விளைவுகளை நாம் ஏற்றுக்கொள்ளும் முறையே நமது ஆன்மாவின் உயர்வை அளக்குங் கோல்.                                 மார்லி.


383 தர்மநெறி தவறியவரே தனியா யிருப்பவர்.                  டைடெரெட்.


384 தீச்செயல் நம்மைத் துன்புறுத்துவது செய்த காலத்தி லன்று. வெகுகாலம் சென்று அது ஞாபகத்திற்கு வரும் பொழுது தான். அதற்குக் காரணம் அதன் ஞாபகத்தை ஒருபொழுதும் அகற்ற முடியாததே.                                           ரூஸோ.


385 தரித்திரன் சுதந்தரனா யிருப்பது எப்பொழுதும் ஜனங்கள் நினைப்பது போல் அவ்வளவு எளிய தன்று.                                                ரூஸோ.


386 வித்தையில் விருப்பமுடையவன் தன்னை முழுவதும் அதற்குத் தத்தம் செய்யவும் அதிலேயே தன் வெகுமதியைக் காணவும் திருப்தியுடையவனா யிருக்கவேண்டும்.

டிக்கன்ஸ்.


387 கல்வியின் லட்சியம் விஷயங்களை அடைவதன்று. ஒழுங்கு முறை அமைத்துக் கொள்வதே யாகும். தொழில் முறைக்கு அடிகோலுவது மன்று; உத்யோகத்தில் முன்னேறும்படி செய்வது மன்று. சான்றோனாகவும் அறிஞனாகவும் செய்வதேயாகும் – அவ்விருவரில் ஒருவனாகச் செய்ய அவனிடம் ஏதேனும் இருக்குமானால். ரஸ்கின்,


388 நடை எழுத - இசைபாட-உருவந் தீட்ட முழுவல்லமை பெற்ற பொழுதே கல்வி முற்றுப்பெறும்.                                                 ரஸ்கின்


389 அறிவின் முதற்பாடம் ஐஸ்வரியத்தை வெறுப்பது. அன்பின் முதற்பாடம் ஐஸ்வரியத்தை அனைவருக்கு மாகச் செய்வது.              ரஸ்கின்


390 ஆன்ம அபிவிருத்தி அடைந்தவரே இயற்கை எழிலை அனுபவிக்கலும், இசை, ஓவியம், இலக்கியம் மூலமாகத்தான் அந்த அபிவிருத்தியை அளிக்க முடியும். ரஸ்கின்,

391 ஜனங்கள் தம்மைப்போல் பிறரையும் 'பாலிக்க" மட்டும் முடியுமானால், தம் விஷயத்தைப் போலவே பிறர் விஷபத்தையும் கவனிக்க பித்து விடுவர்.  ரஸ்கின்.


392 தொழில் இல்லாத வாழ்வு குற்றம்; கல யில்லாத தொழில் மிருகத்தனம்.  ரஸ்கின்.


393 மனிதனுடைய மனோசிருஷ்டியில் தலை சிறந்தது வாக்குக் குன்றாத வாழ்வுடைய மனிதனுடைய உருவமே.                                     ரஸ்கின்.


394 சரியான ஊழியமே பரிபூரண சுதந்தரம்.                     ரஸ்கின்.

 

ஆனந்த போதினி – 1931, 1932, ௵ -

ஜுலை, ஆகஸ்ட்டு, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, ௴

 



  

 

 

 

No comments:

Post a Comment