Friday, September 4, 2020

 

பாரதியாரின் குணாதிசயங்கள்

(ப. சுப்ரமண்யம்.)

தமிழ்நாடு சீர்குலைந்து, சிறுமைக்குள்ளாகி, தமிழ்மக்கள் சுயஅறிவையும் வீரஉணர்ச்சியைய மிழந்து, தமிழ்மொழி தன் இனிய சுவையும் வளர்ச்சியும் குன்றி, தமிழ்த்தாய் மானமிழந்து, அவஸ்தைப்பட்ட காலத்தில், இருள் போய் கதிரவன் தோன்றி பிரகாசிப்பதுபோல, கவிச்சக்காவத்தி ஸ்ரீ சுப்ரமண்யபாரதியார் இத்தமிழுலகில் தோன்றி தேச விடுதலைக்கும், மக்களின் க்ஷேமத்திற்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் அரிய பெரிய தொண்டுகள் செய்த ஓர் ஒப்பற்ற தேசபக்தர்; அரும் பெரும் தியாகி. அவருடைய நாடிகளிலும், நரம்புகளிலும், இருதயத்திலும் எப்போதும் தேசவிடுதலை ஆர்வம் குடிகொண்டிருந்தது. அவர் பெற்றதாயும், பிறந்த பொன்னாடும். நற்றவவானிலும் நனிசிறந்தவை' என்ற உணர்ச்சி பூண்டவர். பாரதியார் மக்களின் நலத்தை நாடி தன் உடல், பொருள் ஆவி முதலியவற்றையும் தியாகம் செய்தவர். அவர் சோம்பேரிகளாய் ஆண்மை
யிழந்து, வலிமை குன்றி, அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த தமிழ் மக்களை வீரபுருஷர்களாகச் செய்து, தேச விடுதலையில் ஈடுபடும்படியான ஊக்கத்தை யளித்தவர். தேசிய காங்கிரஸ் மஹா சபையில் அளவு கடந்த பற்றுடையவர். பாரதியார் ஓர் தீவிர பொது உடமை கக்ஷியைச்சேர்ந்தவர். அவர் ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் இஜ்ஜகத்தினையழித்திடுவோம்' என்ற தீவிர உணர்ச்சி பூண்டவர். அவருக்குத் தமிழ் நாட்டிலுள்ள அன்பு அளவிடமுடியாதது. 'செந்தமிழ் நாடெனும் போதினிலே, பாரதமாதா, தேசவிடுதலை, நம் நாடு' என்ற பாக்களே அவருடைய தேசஅன்பை சன்கு விளக்கிக்
காட்டும்.

பாரதியாருக்கு சங்கீதத்தில் ரொம்ப ஞானம் உண்டு. அவர் நன்கு பாடக்கூடியவர்; மேலும் நினைத்த நிமிடத்தில் பாட்டுகள் இயற்றும் சக்தி யுடையவர். எந்த விஷயங்களையும் மிகவும் எளிய தாகவும் இனிமையாகவு முள்ள பாக்களில் புகுத்தி, பாமார் முதல் படித்தவர்வரை வாசித்து இன்புறச்செய்யக்கூடிய ஓர் தெய்வீக சக்தி அவரிடம் இருந்தது. அவருடைய பாட்டுகளை ஒரு காவியப்பூஞ்சோலைக்கு ஒப்பிடலாம். பாரதியார் இலக்கியம் எழுதுவதிலும் சமர்த்தர். அவருடைய பாட்டுகளும், கவிதைகளும்,
கதைகளும் தேனோடுகலந்த பால் போல மிகவும் இனிய சுவை பொருந்தியன. ஒவ்வொரு பாக்களும் ஒவ்வொரு முந்திரிப்பருப்புருண்டை; நாம் அப்படியே அவைகளை விழுங்கவேண்டும். கம்பருக்குப் பின், தமிழ் வளர்ச்சி குன்றி, பெருமை குறைந்து வந்த நாட்களில் அதற்குப்புத்துயிர் அளித்து, 'படிப்போர் கன்னங்கள் அமுதூற சிறந்த நடையில் எழுதி, எல்லோருக்கும் தமிழைப் படிக்கும்படியான ஆவலை பூட்டிய பாரதியார் 'கவிச்சக்கரவத்தி' என்றும் 'அமரகவி' என்னும் புகழ் பெற்றவர்.

பாரதியாருக்குக் குழந்தைகளிடத்தில் அதிகப்பற்று உண்டு; அவர்கள் தான் இந்நாட்டின் வரும் காலத்து மன்னர்கள் என் றமனப்பான்மை கொண்டவர். குழந்தைகள் சோம்பேரிகளாயில்லாமல் ஓடிவிளையாடி, சுறுசுறுப்பாய் எல்லாவிஷயங்களையும் கற்கவேண்டும் என்ற ஆசை அவருக்கு உண்டு. அவர், புதிய ஆத்தி சூடி' யில் காணும்படியான, புதிய புதிய கருத்துக்களை குழந்தைகளுக்கு ஊட்ட பாடுபட்டவர்.

ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்ற மகான்களைப் போல பாரதியாரும் 'கடவுள் ஒருவரே உண்டு, பல்வேறு ஜாதிகள் பலவழிகளில் அவரைக் கூப்பிட்டும் தொழுதும் பணிசெய்து வருகிறார்கள். எல்லா வழியும் சமம்' என்ற கொள்கை கொண்டவர். பட்டினத்தடிகள், தாயுமானவர் போன்றவர்களைப் போலப் பாரதியாரும் ஒரு வேதாந்தி. அவருடைய வேதாந்தப் பாடல்களை மூடர்கள் கூட எளிதில் அறியக் கூடும்.

பாரதியார் ஓர் ஒப்பற்ற சமூகசீர்திருத்தவாதி; மேலும் ஓர் தீர்க்கதரிசி. சம்முன் காணப்படும் சில பழைய மூடக் கொள்கைகளை களையுடன் அறுத் தெறியவேண்டும் என்ற ஆவல் கொண்டவர். 'சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது' என்ற மனப்பான்மை அவர் உள்ளம் பூராவும் பரவி விருந்தது. நம்மக்களிடையே காணப்படும் ஹிந்து முஸ்லீம் சண்டையையும், ஜாதிமதப் பேதச் சண்டைகளையும் அவர் வெறுத்து, 'எல்லோரும் இந்தியமக்கள், ஒன்றுபட்டு வாழவேண்டும்' என்ற கொள்கை பூண்டவர். தற்சமயம் நமது சமூகத்தில் “பறையர்கள்' என்று சில ஹிந்துக்களை ஒதுக்கிவைத்து, ஹிம்சிக்கும் வழக்கத்தை அவர் கண்டிக்கும் சுபாவமுடையவர். தெருத்திண்ணைகளில் உட்கார்ந்துகொண்டு, வெட்டி வேதாந்தம் பேசி, 'உலகம் பொய்' என்றும், 'மாயை' என்றும் சொல்லிக்கொண்டு, சோம்பேரிகளாய் காரியம் ஒன்றும் செய்யாமலிருப்பவர்களை அவர் வையும் சுபாவமுடையவர்.

பாரதியாருக்கு பெண்களிடத்திலுள்ள அன்பை ஓர் தெய்வீக அன்பு என்றே கூறவேண்டும். பெண்களும் ஆண்கள் போலவே ஆறறிவு படைத்தவர்கள் என்றும், வீரம், சுதந்திரம், தயை போன்ற உணர்ச்சி உடையவர்கள் என்றும் மனப்பான்மை அவருக்கு உண்டு. தற்காலம் சமது சமூகம் அவர்களை வைத்திருக்கும் மோசமான நிலையைக் குறித்து வருந்தி அவர்களும் ஆண்களுக்குச் சரிநிகர்சமானமாக வாழ வேண்டும் என்ற பூரண ஆசை பூண்டவர். அவர் 'பாரத பெண்மணிகளுக்கு 'கற்பு' ஓர் அணிகலன். அதை அவர்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்" என்ற ஆவல் கொண்டவர். பாரதியார் 'புவிபேணி வளர்த்திடும் ஈசன் பெண்க்கு ஞானத்தை வைத்தும், மண்ணுக்குள்ளே நல்ல மாதரறிவைக் கெடுத்து, மாதர்களை இழிவு செய்யம் மடமையைக் கொளுத்தவேண்டும்' என்ற தீவிர சோக்கம் கொண்டவர். அவர் வரும் காலத்து சுயராஜ்ய இந்தியாவில் மாதர்கள் மூடக்கட்டுகளைத்தகர்த்து, சாத்திரம் கற்கவும், சாதம் படைக்கவும், வேதம் படிக்கவும் வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்

“மருவிய காதன் மனையாளுந் தானும்

இருவரும் பூண்டுய்ப் பினல்லால் – ஒருவரால்

இல் வாழ்க்கை யெனுமியல்புடைய வான்சகடஞ்

செல்லாது தெற்றித்து நின்று"

 

என்ற உண்மையைக் கடைப்பிடித்து, ஆண்கள் பெண்களைப் படிக்கச் செய்து, அடுக்குள் பூனையாக வைத்திராமல் சுதந்திர உரிமை கொடுத்து, இந்நாட்டுக் காரியங்களில் இருவருமாக ஈடுபடவேண்டும் என்ற ஆசை கொண்டவர்.

பாரதியார் ஏழைகளிடத்தும் பிச்சைக் காரர்களிடத்தும் அளவுகடந்த அன்பு கொண்டவர்; தன் கையில் எது இருந்தாலும் தானம் செய்து விடும் சுபாவம் கொண்டவர்; இரக்கச் சிந்தனை யுடையவர். எல்லோரிடத்திலும் அவர் அன்பாகவும், பிரியமாகவும், தணிவாகவும் பேசும் குணமுடையவர். பாரதியாரிடத்தில் ஒரு தீய பழக்கம் சில காலம் குடி கொண்டிருந்தது. எப்போதும் கஞ்சா' குடிப்பதில் அவருக்கு அதிகப்ரீதி. அவர் உயிருடன்
தான் அந்தக் கொடிய பழக்கம் துலைந்தது. அவர் சற்று முன் கோபி; ஆயின் உடனே சாந்தமடைந்து, அதை யுணர்ந்து, தன் கெட்ட குணத்தைக் குறித்து, வருத்தப்படும் சுபாவம் அவரிடத்தில் உண்டு. அவர் படிப்பில் அதிக பற்று உடையவர். அவர் அஞ்சா நெஞ்சு படைத்த வீரர்; எவ்வளவு கஷ்டங்கள் வந்திடினும் பொறுமையுடன் பொறுத்துக் கொள்ளும்
சக்தியுடையவர். அவருக்குக் கடவுளிடத்தில் அபார பக்தி யண்டு. அல்லும் பகலும் கடவுளையே தொழுது கொண்டிருக்க ஆசை கொண்டவர். இயற்கை அன்னையின் திருவிளையாடல்களைக் கண்குளிரக் கண்டு, புறும் சுபாவம் உடையவர். யாருக்கும் அடங்கி நடக்கும் சுபாவ மில்லதவர்; யதேச்சையாய் தன்னிட்டம் போல் காரியங்களைச் செய்யும் குணமுடையவர்.

இப்படிப்பட்ட சிறந்த குணங்களுடைய தமிழ் அன்னை பின் அருந்
தவப்புதல்வனான பாரதியாரை எக்காலத்திலும் மறவாமலிருக்க வேண்
டியது, தமிழனாகப் பிறர் த ஒவ்வொருவனுடைய கடமையு மாகும். பாரதி
யாரின் புகழ் நீடூழி வாழ்க!!

ஆனந்த போதினி – 1938 ௵ - அக்டோபர் ௴

 

 

No comments:

Post a Comment