வராஹ மிசிரரின் கால நிலை
நமது பரத கண்டத்தில்
வேதாதி காலம் முதல் தொன்று தொட்டு வழங்கும் ஸாஸ்திரங்களில் (Sciences) சோதிடமும்
ஒன்று. ஏதொரு விஷயத்திற்கும் காலம் (Time) மதிப்புரை யாசிரியராக விளங்குகின்றது.
ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் (W.
Shakespeare) என்பார் எழுதிய நாடகங்களும், மில்டன் (J. Milton) என்பார்
எழுதிய பாடல்களும் காலத்தினான் மதிக்கப் பெற்றதாலேயே அவைகட்கு அத்தகைய சிறப்பு. இதற்கு
ஆங்கிலத்தில் டைம் - ப்ரூப் (Time - proof) என்று கூறப்படும். அத்தகைய மதிப்பு சோதிடத்திற்கு
மிருக்கின்றதென்பதற்கு ஒருநாளும் ஐயம் என்பதில்லை. –
பண்டைக்காலம் சோதிடம்
கற்ற வித்யார்த்திகள் பல்வேறு புதியமுறைகள் ஸ்தாபித்தனர். அவைகள் பின்வருமாறு (1) பராசரீயம்
(2) ஜைமினீயம் (3) காலசக்ரம் (4) மானஸாகரம் (5) தாசகம்
(6) நாடி (7) கௌரீஜாதகம் (8) வேதாங்க ஜ்யோதிஷம் (9) கௌதமம் (10) காளிதாஸம் (11) வ்ருத்தயவனம்
(12) ப்ரஹஜ்ஜாதகம் என்பனவாம். இவைகளை 'பத்ததி' அல்லது வகுப்பு என்று கூறுவர். இவைகளில்
கடையதாகிய ப்ரஹஜ்ஜாதக பத்ததியின் ஆசிரியர் வராஹமிசிரனார் கால நிர்ணயமே நமது முக்கிய
எண்ணம். ஆயினும் மூலகாரணமாய் விளங்கும் இவ்வாசிரியர் வரலாற்றையும் சுருக்கிக் கூறல்
மிகையாகாது.
வராஹமிசிரரது தாய்
தந்தையரின் பூர்வீகம் ஸாகத்வீபம் என்று புராணப் பிரசித்தமான காஸ்மீர பஞ்சாப் தேசங்களுக்கு
இடைவெளியிலுள்ள பிரதேசம். இவர் தகப்பனார் பெயர் ஆதித்ய தாஸர், தாயார் பெயர் வெளி வந்திலது.
ஆதித்யதாஸர், பலரும் புகழும் பைங்குதலைபுடன், தேயம் ஒவ்வாமையால் மந்த தேசத்தின் தலைநகரான
பாடலிபுத்திரத்திற் சிலகாலம் தங்கி பின்னர் அவந்தி மாநகர் சென்று, தங் குமரரை, அக்காலத்தில்
கற்பிக்கப்பட்டு வந்த கல்வித் துறைகளில் பயிற்றி ஆரியத்தில் வல்லுநராக்கினர்.
ஆதித்யதாஸர் காலஞ்செல்ல,
வராஹமிசிரர் அவந்தியில் ''கபித்தகாஸ்ரமம் " என்ற பெயருடன் பள்ளி ஏற்படுத்தி, அரனின்
அட்டமூர்த்தங்களுள் ஒன்றாகிய ஆதித்தன்பால் அன்பு பூண்டு ஒழுகுவாராயினர். அக்காலத்தில்
''யவனதேசம்'' (Greece) சென்று கணித நூலின் அந்தரங்கம்களை உள்ளவாற்றிந்து தமது பெயரால்
"கணித வானஸாஸ்த்ரம்" என்ற நூலியற்றிய ஆரியபட்டர், என்ற தம் காலத்தவரால் யவனர்களின்
கணித சாமர்த்தியங்களைக் கேட்டுணர்ந்து அன்னவரின் தூண்டுதலால் மேனாடு சேர்ந்து, தமக்கு
மிகவும் விருப்புள்ள சோதிட தத்வங்களைக் கற்று வல்லவராகி, பரதகண்டத்தில் முதன் முதலாக
'ஓரை' (ஹோரா) கணித நூலை இயற்றியவர் இவரே. ஆதலினாலேயே இவர் இயற்றிய'' பிரஹஜ்ஜாதகம்"
என்னும் சோதிட நூலானது தனிப்பகுப்பாகச் சேர்க்கப்பட்டுப் பன்னிரண்டாயது.
இவர் இயற்றிய நூல்கள்
(1) சோதிடப்பகுதிகளில் பன்னிரண்டாவதாகிய 'பிரஹஜ்ஜாதகம்'' (2) பண்டிதர் போற்றும் 'பிருஹத்ஸம்ஹிதை
(3) கிரகங்களின் கதிகளும் அவைகளைக் கணனம் செய்யும் மார்க்கதையும், விவரிக்கும்
"பஞ்ச சித்தாந்தம்" என்னும் வானஸாஸ்த்ர கணித களஞ்சியம் (4) ஹோரா ஸாஸ்திரம்
கற்க விரும்புவோருக்கு இன்றியமையாததான ''நவாம்ச கணிதம் " என்பனவாம்.
இவர் காலம்
இதுவே நாம் எழுதப்புகுந்த
வியாஸத்தின் முக்கிய நோக்கம். இந்து தேச சரித்திர ஆராய்ச்சியாளர்களான மிக்கச் சிறந்த
ஸர். வில்லியம் ஜோன்ஸ் (Sir
William Jones) டாக்டர் பீடர்ஸன் (Dr. Peterson) ப்ரொபஸர்களான பஹ்லர், ஸ்மித் (Profs. Buhler and
Smith) என்ற பலரும், வராஹமிசிராசாரியர் கி. பி. 505 - ம் ஆண்டில் ஜன்மித்து
82 வருஷகாலம் உலகின்கண் இருந்து கி. பி. 587 - ல் காலகதி அடைந்தார் என்று தந்தம் புத்தகங்களில்
வெளியிட்டிருப்பது, அவைகளைப் படித்துணர்ந்தவர்கள் அறிந்த உண்மை.
சிறிது ஊக்கத்தைச்
செலுத்தி, நடுநிலையுடன் உண்மையை ஆராயின் மேற்கூறிய காலநிலையானது பொருந்தாது என்பது
விளங்குகின்றது. அதன் காரணங்கள் பின்வருமாறு:
1. இப்பொழுது வர்த்தமான
விக்ரமார்க்க சகம் 1987 - ம் வருடம். இதில் கி. பி. 1930 - ம் வருஷமும் செல்ல விக்ரமார்க்கன்
சகம் ஏற்பட்ட வருஷம் கி. மு. 57 என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாம். ஆகையால் வராஹமிசிரர்
கி. பி. ஐந்தாம் நூற்றாண்டினர் அன்று என்பது வெளிப் படை. வராஹமிசிரர் விக்ரமார்க்கன்
காலத்தவர் என்பது,
“தன்வந்தரி, க்ஷபண, காமரஸிம்ஹ, ஸங்கு
வேதாலபட்ட, கடகர்ப்பர, காளிதாஸா:
க்யாதோ வராஹமிசிரோ, ந்ருபதே ஸபாயாம்,
ரத்னானிவை, வரருசிர், நவவிக்ரமஸ்ய. -
(ஜ்யோதிர் விதாபரணம்)
என்பதனால் காளிதாஸ், வராஹமிசிரர், முதலான ஒன்பதின்மர்
விக்ரமார்க்கனின் அவைக்களத்து நவமண்களாய் விளங்கினர் என்பதைத் தெளிவாய் விளக்குகின்றது.
2. குப்த
வம்ஸத்தினரில் ஒரு மன்னனான சந்திரகுப்த விக்ரமாதித்யன், வட இந்தியாவை கி. பி. 380 முதல்
415 வரை ஆண்டவனென்றும், அவ்வரசனின் சபையிலேயே இந்த நவமணிகள் துலங்கினரென்றும், அவ்வரசன்,
சுமார் கி. பி. 395 - ல் மாளவம், ஸுராஷ்ட்ர ம் முதலிய தேசங்களின்ஸாக வம்சத்திய சிற்றரசர்களைத்
தோற்கடித்தவன் என்றும் டாக்டர் ஸ்மித் கூறுவர்.
ஆனால், காளிதாஸர்,
வராஹமிசிரர் முதலிய ஒன்பது மணிகளின் போஷகராகிய விக்கிரமார்க்கன், ஸாகவம்ஸத்தினராகிய
சிற்றரசர்களுக்கு அரசனாகிய உரோமபுரி சக்கரவர்த்தியை யுத்தத்தில் வென்று, சிறையாக உஜ்ஜனி
பட்டணத்திற்குக் கொண்டு வந்து திரும்பவும் தனது தேயம் செல்லுமாறு அனுப்பியவன் என்பதை
காளிதாசரது ஸ்லோகம் விளக்குகின்றது.
"யோரோம தேசாதிபதிம் ஸகேஸ்வரம்,
ஜித்வா க்ரஹித்வோஜ்ஜயனீம் மஹாஹவே,
ஆனீய ஸம்ப்ராம்ய முமோசதம் த்வஹோ,
ஸவிக்ரமார்க்கஸ் ஸமஸஹ்ய விக்ரம''
இவ்வெற்றியின் ஞாபகார்த்தமாகவும், தனது பெயர் என்றும் நிலவும்படியாகவும் விக்கிரம சகம்
(அதாவது கி. மு. 57 முதல்) ஏற்படுத்தினான் என்றுதெரிய வருகின்றது. ஆகையால் ஸ்மித் கூறப்போந்த
விக்ரமார்க்கன்வேறாக இருக்கலாம். ஏனெனின் காளிதாஸ விக்ரமார்க்கன் ஜெயித்தசக்கரவர்த்திக்கும்
ஸ்மித் கூற முன்வந்த விக்ரமார்க்கன் ஜெயித்த சாகவம்சத்திய சிற்றாசர்க்கும் எத்துணையோ
வேற்றுமை யுள்ளது.
(3) மூன்றாவதாகிய
காரணம் யாதெனின், விக்ரமார்க்கனின் ஆஸ்தான வித்வானாகியவனும், வராஹமிசிரர்க்கு சம காலத்தவராகிய
கவிகாளிதாஸர் தாம் இயற்றிய ''ஜ்யோதிர் விதாபரணத்தில்,
"வர்ஷைஸ்விந்துர தர்ஸனாம்பரகுணை: யாதேக்காஸம்மிதே
(3068)
மானே மாதவ ஸங்ஞ்சே விஹிதேக்ரந்தக்ரியோபக்ரமம்
நானாகாலவிதான ஸாஸ்த்ர கதிதஞானம் விலோக்யாதராத்
தூர்ஜ்ஜே க்ரந்த ஸமாதிரத்ர விஹிதோஜ்யோதிர்
விதாம்ப்ரீதயே.''
என்பதனால் கலியுக சகாப்தம் 3068 - ம் ஆண்டில் மேற்கண்ட க்ரந்தத்தை ஆரம்பித்ததாக தானே
எழுதியுள்ளான். ஆக அவன் எழுதியது இற்றைக்கு சற்றேறக்குறைய 1963 ஆண்டுகள் என்று ஏற்படுகின்றது.
ஆகவே அவர் அதை கி. மு. 33ம் வருஷம் துவக்கியிருத்தல் வேண்டுமென்பது நமது துணிபு. இங்ஙன
மிருக்கக் காளிதாஸரின் ஸமக காலத்தவரான வராஹ மிசிரரை கி. பி. ஐந்தாம் நூற்றாண்டினர்
என்று கூறுவது முற்றிலும் முரணாம்.
பின்னும் மேற்கூறிய
காளிதாஸர் வேறென்றும், இரகுவம்ஸாதி காவியங்களும், சாகுந்தளாதி நாடகங்களும் இயற்றிய
காளிதாஸர் வேறு என்றும் சிலர் கூறுவர். அதற்கு மறுப்பாக யாம் கூறுவது யாதெனின் அதே
'' ஜ்யோதிர் விதாபரணத்தில் காளிதாஸர்: -
"காவ்யத்ரயம் ஸுமதிக்ருத் ரகுவம்ச பூர்வம்,
பூர்வம் ததஸ்ம்ருதி ஹிதம், ஸ்ருதி கர்மவாதம், நாத |
ஜ்யோதிர் விதாபரண காலவிதான லாஸ்த்ரம்,
ஸ்ரீ காளிதாஸ் கவிதோ விததோ பபூவ."
என்பதால் "இரகுவம்ஸ'' முதலான மூன்று காவியங்களையும், ''ஸ்ருதிகர்மவாத'மும் எழுதிய
காளிதாஸனாகிய நான் 'ஜ்யோதிர்விதாபரண" த்தை எழுதுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
ஆயினும் இங்கு ஓர் ஐயம் நிகழ்தற்கு ஏதுவுண்டு. காளிதாஸர் "காவ்யத்ரயம்" மாத்திரம்
எழுதினதாகக் கூறியிருக்கிறார். "சாகுந்தளா" தி நாடகங்கள் எழுதினதாகத் தென்படவில்லையே
எனச் சிலர் வினவலாம். அதற்கு சமாதானம் யாதெனின் காளிதாஸர் வராஹ மிசிரரை விட, இளையவரானதாலும்,
ஜ்யோதிர் விதாபரணம் வரைந்த போழ்து மிக்கச் சிறு பருவத்தினரானதாலும். அவர் பிற்காலத்தில்
சாகுந்தளாதி நாடகங்கள் எழுதியிருக்கக்கூடும். எத்தனை காளிதாஸர்கள் -இருப்பினும் என்?
ஜ்யோதிர் விதாபரணம் எழுதிய காளிதாஸர், வராஹமிசிரரின் காலத்தவர் என்றும், அவர் காலம்
கி. மு. முதல் நூற்றாண்டு என்பதற்கும் ஜ்யோதிர் விதாபரணத்தின் கண்ணேயே தக்க சான்றுகள்
உள.
(4) இந்துதேச
சரித்திர ஆராய்ச்சியானருள் மிக்கக் கீர்த்திவாய்ந்த டாக்டர் வின்ஸென் ஏ ஸ்மித் என்பார்
பின் வருமாறு தம்புத்தகத்தில் காளிதாஸாதி நவமணிகளின் போஷகரான விக்ரமார்க்கன் கி. மு.
முதல் நூற்றாண்டினனாய் இருப்பினும் இருக்கலாம் என்றும் சந்தேகத்துடன், நமதுகொள்கையைக்
கூறி அதற்கு அத்தாக்ஷி இல்லை யென்றும் (அவர்க்குத் தோன்றியவாறு) அதனால் விடப்பட்ட தென்றும்
எழுதியுள்ளார்.
"Chandragupta II later in
life, took the additional title of Vikra maditya (Sun of Power) which was
associuted by tradition with the Raja of Ujjain, who is believed to have
defeated the Sakas, and established the Vikrama era in 58 or 57 B. C. It is possible
that such a Raja may really have existed, although ihe tradition has not yet
been verified by the discovery of inscriptions, coins, or monuments.'' (Dr V. A. Smith: The
Oxford History of India.)
இது இவ்வாறானால்
இந்து சரித்திரத்தில் உண்டான பலவிதமான நடவடிக்கை கட்கும் ஸாஸன உறுதிப்பாடுண்டா வென்று
கேட்கின்றோம். பின்னும் அன்னார் வேதங்களை எவ்வாறு ஆர்ய புராதன நாகரீகத்திற் காதாரமாய்
நம்பினார்? மற்றும் இராமாயண, மஹாபாரத காலத்தை எவ்விதம் ஸ்மித் நிரூபணம் செய்தாரோ தெரியவில்லை.
ஆகையால் இவர் எழுதியதே இவர்க்கு முரணாகின்றது.
நிற்க, காளிதாஸர்
தாம் ஜ்யோதிர் விதாபரணம் இயற்றுவதற்கு முன் வராஹ மிசிரர் ஒன்பது ஆண்டுகளில் சித்தியடைந்தார்
என்பதாகத் தெரியவருகின்றமையால் வராஹ மிசிரர் காலம் கி. மு. 124 முதல் கி. மு. 42 என்பது
நிச்சயமாய் காணக் கிடைக்கின்றது.
சுபமஸ்து.
ஆனந்த போதினி – 1930 ௵ - மார்ச்சு ௴
No comments:
Post a Comment