Sunday, September 6, 2020

 

“வமுதி ஆய்ந்த உண்மை”

(நெல்லை - விநாயக்.)

“நந்தி னிளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்

பந்த ரிளங்கமுன் பாளையும் – சிந்தித்

திகழ் முத்தம் போற்சோன்றுஞ் செம்மற்றே தென்னன்

நகைமுத்த வெண்குடையான் நாடு,”

 

எனத் தண்டமிழ்ப் புலவரால் வருணிக்கப் பெற்றிருக்கும் பெருமைசேர் பாண்டி நாட்டிலே, பாண்டியர் குலத்தில் ‘இளம் பெரு வழுதி' எனும் பெரியார் ஒருவர் தோன்றி பிருந்தார். இவர் இளமையிலேயே பேரறிவினாகத் திகழ்ந்தார். இஃது 'இளம்பெரு' எனும் அடை மொழியினால் நன்கு விளக்கும். இவர் யாது காரணத்தாலோ, கடலுள் வீழ்ந்து உயிர் துறந்தார். இதுவும் ‘கடனுண் மாய்ந்த,' எனும் அடைமொழியினால்
அறியப் பெறும். ஆகவே, இவர், 'கடலுண் மாய்ந்த இளம்பெரு வழுதி. யென் புற நானூற்றுப் பாடலில் குறிக்கப் பெற்றிருக்கிறார்.

அநீதி, அதர்மம், பொய், பொறாமை, சண்டை சச்சரவுகள், மற்றும் பஞ்சமா பாதகங்கள் முதலியவைகளே நிறைந்திருக்கும் இவ் வுலகம் இன்றளவும் நிலை பெற்றிருப்பதன் காரணம் என்னை? ஆழ்த்து யோசிக்கின், பலர் பலவிதமான முடிவுகட்கு வரக்கூடும். ஆனால் அவை யாவும் சரியான காரணமாய் இருக்க முடியாது. உண்மையான காரணத்தை, இளம் பெரு வழுதி ஒருவரே ஆராய்ந்து கண்டு பிடித்தார். விலை மதிப்பற்ற தமது அரிய கருத்துக்களை, ரத்தினங்கள் பதிப்பித்தாற் போன்று, ஒரு அழகிய செய்யுளில் எடுத்துக்காட்டி யிருக்கிறார். அச் செய்யுள், சொல்லாலும் பொருளாலும் இனிமை வாய்ந்தது.

'மிகவும் அரிய குணங்களையும், செந்தண்மையும் பூண்ட விழுமியோர்கள் இருப்பதனாற்றான், இவ் வுலகம் இன்றளவும் நிலை பெற்றிருக்கிறது'- என்பதே அவர் கண்டு பிடித்த ஒப்பற்ற உண்மை. அத்தகைய விழுமியோர்கள் பண்புகளை, வழுதி,' நமக்குப் படம் பிடித்துக் காண்பிப்பது போன்று மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார்.

அமரர்கட்குரிய அமிழ்தம் அவ் விழுமியோர் கட்கு, தெய்வ சகாயத்னாலாவது, தாம் செய்த தவத்தின் பயனாலாவது கிடைக்கப்பெற்ற போதினும் அவ்வமிழ்தம் நாவிற்கினியது, அதனாற் கிடைக்கப் பெறும் பயனுமினிதென தாம் மாத்திரம் தனித்துப் புசிக்க மாட்டார்கள். இங்ஙனம், “காகம்போல் பகிர்ந்துண்ணும் பண்பை" நாம் அவர்களிடம் காண்கிறோம்.

அவர்கள் யாவரிடத்தும் அன்பு பூண்டு ஒழுகினர். எக்காரணத்தைக் கொண்டும் யாவர் மீதும் வெறப்பற்ற தன்மையுடையவரா யிருந்து வந்தனர். நிற்க, ஒரு தொழிலை மேற்கொள்ளுவதினா லேற்படுச் துன்பங்கட்கு, சாதாரண மக்கள் பெரிது மஞ்சுவார்கள். அஞ்சுவது மட்டுமல்ல, தாம் மேற்கொண்ட தொழிலையே அயர்வுற்றுக் கைவிட்டு விடுவார்கள். ஆனால், சான்றோர்கள் பிற மக்களைப் போலல்லாமல், தாங்கள் மேற்கொண்ட தொழிலை வெற்றியுடன் செய்து முடிக்குர் தன்மையை உடையவர்கள்.

இனி, இவர்கள், 'புகழை வருந்தியுங் கொள்ள வேண்டு மென்பதற்கிணங்க, தம் உயிரைக் கொடுத்தாயினும் புகழ் ஈட்டும் இயைபினர். ஆனால் 'பழி' யென்றாலோ, இவ் வுலக முழுவதும் பெறுவதா யிருப்பினும் அப் ‘பழி'யைக் கொள்ளமாட்டார்கள். 'வாணன் வைத்த விழுதி பெறினும் பழி நமக்கெழுக வென்னாய் விழுநிதி, ஈதலுள்ள மொடு இசை வேட்குவையே', எனும் சீரிய கருத்தை ஈண்டு சோக்கற் பாலது.

மனக் கவர்ச்சியற்ற சான்றோர்களாகிய இவர்கள், மேலே கூறப்பட்ட மாண்பு உடையவர்களாகி, தம் நலத்திற்காகப் பாடுபடாமல், எஞ்ஞான்றும் பிறர் நலத்திற்காகவே, தம்முடைய வலிய முயற்சியினால் பாடு படுகின்ற பெருந் தன்மை யுடையவர்கள். இவர்கள் உலகின்புறக் கண்டு தாம் உளமகிழ்வர்.

இவ்விதம் தம் வாழ்வினைப் பெரிதென மதியாமல், பிறருடைய வாழ்க்கையின் நலத்திற்காகவே பாடு படுகின்றவர்களும், மேற் கூறப்பட்ட ஒப்பற்ற சிறந்த பண்புகள் யாவுமொருங்கே நிறையப்பெற்ற சான்றோர்கள் இருப்பதனாலேயே இவ் வுலகம் இன்றளவும் நிலைத்திருக்கிறது என்பதே ‘வழுதி ஆய்ந்த உண்மை.'

'ஹிட்லர், முஸோலினி, டோஜோ போன்ற அதர்மச் சொரூபிகள் நிறைந்த இக் கலியுகத்தில், மகாத்மா காந்தியடிகள் போன்ற சான்றோர்களிருப்பதினாற்றான். உலகம் அழியாது நிலைத்திருக்கிறது,' என்று உரை செய்யவும் வேண்டுமோ?

இனி, கவிஞர் செய்யுளில் தம் விலை மதிப்பற்ற விழுமிய கருத்துக்களை, அழகிய சொற்களால் மலர்களை மாலையிற் றொடுப்பது போன்று செய்யுளில் அமைந்திருப்பது கண்டு ஆனந்திக்கத்தக்கது.

நேரிசை யாசிரியப்பா.

“உண்டா லம்மவிவ் வுலா மிந்திர

ரமிழ்த மியைவ தாயினு மினிதெனத்

தமிய ருண்டலு மிலரே முனிவிலர்

துஞ்சலு மிலர் பிறரஞ்சுவ தஞ்சிப்

புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனி

னுலகுடன் பெறினும் கொள்ளல ரயர்வில

ரன்ன மாட்சி யனைய ராகித்

தமக்கென முயலா கோன்றாட்

பிறர்க்கென முயலா ருண்மை யானே.” (புறம். 182.).

 

இச் செய்யுளை யொட்டி,

'பண்புடையார்ப் பட்டுண்டுலகம் அஃதின்றேல்

மண்புக்கு மாய்வது மன்.'

என்ற குறட் கருத்து மறியத்தக்கது.

ஆனந்த போதினி – 1942 ௵ - ஆகஸ்டு ௴

 

No comments:

Post a Comment