Sunday, September 6, 2020

 

வதுவை

 

'பழயன கழிதலும் புதியன புகுதலும்'என்று ஒரு சூத்திர முண்டு. சிலர் இதையே ஆதாரமாகக் கொண்டு நம் மூதாதைகள் ஆதி தொட்டு 'அனுசரித்து வரும் வழக்கங்களை அறவே யொழித்து, சீர்திருத்தமும், நாகரீகமுமுள்ளவர்களென்று கருதப் படுபவர்களிடமிருந்து நற்குணங்களை ஏற்றுக்கொள்ளாமல் நற்குணங்களல்லா தவைகளைச் சீக்கிரத்தில் பழக்கத் திற்குக் கொண்டு வர முயல்கிறார்கள்.

 

இப்படி நன்மையை நாடாமல் அவர்களிடமுள்ள கெடுதிகளைப் பின்பற்ற முயல்கிறார்கள். இவர்கள் அவர்களின் விவாவகத்திலுள்ள கெடுதிகளையும் பின்பற்ற முயல்கிறார்கள். நமது தாய்தந்தையர் தங்கள் பிள்ளைக்குக் கலியாணம் நடத்த வேண்டுமென்றால், பிள்ளைக்கு நிச்சயித்த பெண்ணை விவாகத்திற்கு முன் அவனுக்குக் காண்பித்து அவனுடைய விருப்பத்தையறியாமல் மாட்டை விலைக்கு வாங்கி வருகிறது போல் பெண்ணைஅழைத்துக்கொண்டு வந்து கலியாணப் பந்தலில் தான் அவனுக்குக் காண்பிக்கிறார்கள் என்று மேற்குத் தேசத்தாரைப் பின்பற்றுகிறவர்கள் சொல்லுகிறார்கள். இப்படி முன்பார்த்திராத பெண்ணை விவாகம் செய்தானபின்பு நாளடைவில் ஒருவர் ஒருவரைப் பார்த்து வார்த்தையாடுவதினால் இச்சை ஏற்படுகிறது. சில சமயங்களில் இச்சை ஏற்படாமல் பிள்ளை தான் கொண்ட பெண்ணை வெறுத்து வேறொரு கலியாணம் செய்து கொள்ளக் கோருகிறான். ஆகையால், மேற்குத் தேசத்தார் தாங்கள் இச்சித்த பெண்ணையே வதுவை செய்து கொள்ளுகிறார்கள் என்று சிலர் சொல்லுகிறார்கள்.

 

மேற்குத் தேசத்தொருவன் நம்மவர்களைப் போலல்லாமல், தான் இச்சித்த ஒருத்தியையே வதுவை செய்து கொள்ளுகிறான். அத்தேசத்தவர்களில் ஒரு புருடன் தானே சென்று ஒருத்தியை இச்சித்த பின் அவளையே விவாகம் செய்து கொள்ளுகிறான். இப்படிச் செல்லும் ஒருவன் தான் இச்சிக்கப்போகிறவள் சௌந்தரிய முள்ளவளாயிருக்கிறாளா என்பதைத் தான் முதல் கவனிப்பான். குணத்தை அறிய வேண்டுமானால் அவளோடு நெருங்கிச் சகவாசம் செய்யவேண்டும். இச்சித்த ஒருத்த சுந்தர மில்லா தவளாக விருக்தால் அவளை நெருங்கப் போகிறதில்லை. இதனால் நாம் ஊகிப்பது யாதெனில் நாயகன் சுந்தரமுள்ள பெண்ணை விரும்புவான் என்பது. மேல்சொன்ன பிரகாரம் குணத்தைத் தெரிந்து கொள்ளுவதற் காகப் பெண்ணை நெருங்கி அவளுடன் வார்த்தை யாடவேண்டும். ஒருதுன் மார்க்கன் தனக்குவேண்டிய பொருளை அடைவதற்காகத் தனவந்தனுடைய பெண்ணை யடைந்து தன்னுடைய சுயகுணத்தைக் காட்டாமல் நற்குண முடையவன் போல் நடிப்பான். இவனுடைய துர்க்குணம் கோரியகாரியம் முடியும் வரையில் வெளிவராமல் பிறகு வெளிவரும். பிறகு துர்க்குணமே உருவெடுத்தாற்போல் வந்துள்ள தன் நாயகன் மோசத்தால் தன்னை வென்றானென்று தெரிந்து மனைவி விசனப்படுவாள். இப்படியே பெண் களிலும் துன்மார்க்கிகள் உண்டு.

 

இப்படி ஒருபுருடன் தான் இச்சித்தவளையே கலியாணம் செய்து கொள்ளுகிறானென்பது என்ன நிச்சயம்? இவர்களுடைய எண்ணம் தாய் தந்தையர்கள், இவர்களிடத்திலுள்ள துர்க்குணங்களைக் கண்டு தடுத்து விடுகிறதினாலும், மரணம் முதலியவற்றினாலும் தடைப்படலாகும். பிள்ளையும், பெண்ணும் ஒருமைப்பட்டு புருடனும் மனைவியுமாக இரகசியத்திலிருக்கும் பொழுது, அவர்களுடைய தாய் தந்தையர்கள் இவர்களுடைய எண்ணத்திற்கு மாறாக விடையளிப்பார்களானால் அவர்களுடைய எண்ணம் பூர்த்தி யாகாமல் பயனற்றதாய் விடுகிறது. இவர்களுக்குள்ளும் தாய் தந்தையர்களு டைய சம்மதமில்லாமல் விவாக மில்லாததால் ஒருபுருடன் தானே பெண் பார்த்து விவாகம் செய்து கொள்ளுவது பொருத்தமில்லாததாய் விட்டது.

 

நம்மவர் வழக்கத்தை இனிக் கவனிப்போம். நாம், அவர்களைப் போல் நாமே பெண் பார்த்துக் கலியாணம் செய்து கொள்ளுகிறதில்லை. நமக்காக, நம்முடைய நன்மையைக் கோரும் தாய்தந்தையர்கள் பெண் பார்த்துக் கலியாணம் செய்து வைக்கிறார்கள். நம்முடைய க்ஷேமமும், நன்மையும் அவர்களைப் பொருந்தினவை. அவர்களாலான நம்முடைய பிறப்பையும் வளர்ச்சியையும், எப்படி நாம் ஒத்துக் கொள்ளுகிறோமோ அதே மாதிரியாக அவர்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பெண்ணையும் நாம் ஒத்துக் கொள்ள வேண்டியது ஒரு தகப்பன் தன்னுடைய மகனுக்கு மருந்தைக் கொடுப்பதற்குப் பதிலாக விஷத்தைக் கொடுப்பானா? கொடுக்சமாட்டான். அதே மாதிரியாகவே இது விஷயத்திலும் நாம் அவனை நம்பவேண்டும். தந்தை நம்முடைய நன்மையையே கருதுவானேயல்லாமல் கேடு ஒரு காலும் நினைக்கமாட்டான்.

 

நம்மவர்களில் நெருங்கிய பந்துக்களில் தான் விவாகம் நடப்பது வழக்கம். தாய் தந்தையர்கள் சிறு பிராயத்திலிருந்தே பெண்ணையும் பிள்ளையையும் குறிப்பிட்டு அவர்களுடைய குணங்களைக் கவனித்து வருகிறார்கள். நாம் மேல்நாட்டார்களைப் போலல்லாமல் விவாகம் செய்து கொண்டவர்களை இச்சிக்கிறோம். இதற்காக ஒரிடத்தில் ஆங்கிலேயத்தில் கீழ் வருமாறு சொல்லியிருக்கிறது. “It is nobler to love whom you marry than to marry whom you love." நமக்காக நம்முடைய தாய் தந்தையர்களால் குறிப்பிட்டவர்களைச் சிறுவயதில் சந்தித்து, அவர்களுடைய குணங்களையும் விருப்பத்தையும் அறியச்சமயம் ஏற்படுகிறது. அன்னியசம்பந்தத்தால் அநேக கெடுதிகள் நேரிடுவதால் அது நீக்கப்பட்டது. என்றாலும் முற்றும் நீக்கப்படவில்லை. அப்படிச் சம்பந்தம் நேரிட்டாலும், பெண்ணின் குணத்தைக் கேட்டும் பார்த்தும் அறிய நம்முடைய தாய் தந்தையர்கள் அவர்களிடம் செல்லுகிறார்கள். இவர்களுக்கு இப்புது சம்பந்தம் திருப்தியானால் சம்பந்தம் ஏற்படுகிறது. இப்படிப் புதுசம்பந்தம் உண்டான பின்பு புருடனுக் கும் மனைவிக்கும் இச்சை நாளடைவில் பெருகுகிறது. நம்மவர்கள் விவாகத்திற்கு முன் ஒருவரை நேரில் பார்த்து இச்சிக்காததினால், அவர்களுக்கு விவாகம் முடிந்தபின்பு ஒருவரை ஒருவர் நேரில் பார்த்து இச்சிக்கச்சாதனம் ஏற்படுகிறது.

 

நமது கலியாணம் மதத்தால் கட்டுப்பட்டுள்ளது; என்றும் நீடித்துள்ளது. மேற்குத் தேசத்தாரது அப்படியல்ல. நாயகனுக்கும் நாயகிக்கும் வெறுப்பு உண்டானாலும் அல்லது விருப்பமில்லாமல் போனாலும் அவர்கள் ஒருவர் ஒருவரை நீக்கி (Divorce) வேறொரு கலியாணம் செய்து கொள்ளுவார்கள். விவாகம் ஆகாததற்கு முன் பெண்ணைக் கண்டு அவளுடன் பேசுவதும், தனித்து இருவரும் உலர்வம், போவதும் அவர்களிடமுண்டு. அது நம்மவர்களிடத்திலில்லை. அதனால் நேரிடும் பயங்கரமான கெடுதி களும் நம்மில் இல்லை. கலியாணம் ஆகாததற்கு முன், ஒருவன் தான் நேசித்த ஒருத்திக்கு வாக்களித்துப் பின் வாக்குறுதியை மீறி நடக்கிறான். இவனுடைய வாக்குறுதியை நம்பிக கைவிடப்பட்டபோது அப்பெண்ணின் நிலைமை பரிதபிக்கத் தக்கதாகிறது. இத்தகைய குற்றங்கள் நம் மூதாதைகள் ஏற்படுத்தியுள்ள ஏற்பாட்டில் கிடையாது. பார்க்குமிடத்து அவர்கள் வழக்கங்களிலுள்ள கெடுதிகள் நம்மது ஆகார ஒழுக்கங்களிலில்லை. பிழை பொறுக்க.

              

V. G. Gajaraj.

 

ஆனந்த போதினி – 1920 ௵ - ஜுலை ௴  

 

 

No comments:

Post a Comment