Sunday, September 6, 2020

 

வணிக நீதிகள்

 

1. பரதகண்டம் பாங்குறுமாறு பகவனைப் பன்முறை போற்று.

2. உள்ளதைக் கொண்டு நல்லதென மனமகிழ்ந்திரு.
3. சினமென்பதே சிறிதுமின்றிச் சாந்த மனத்தினனாயிரு.
4. வியாபாரத்திற்குக் கல்வியே மிகவும் இன்றியமையாதது என அறி.
5. அதிக சீக்கிரத்தில் உன்னத பதவி யடைய வேண்டுமென்றுபேராசை கொள்ளாதே.
6. அண்டை அயலார்களை விரோதித்துக் கொள்ளாதே.
7. கணக்கு முதலிய எழுத்து வேலைகளில் உன்னுடைய முழுமனதையும் செலுத்து.
8. எழுதியதை நன்றாக இரண்டு மூன்று முறை பார்த்துப் பிழையின்றித் திருத்து.
9. உன்னை நாடி வருபவர்களை மிகவும் மரியாதையாக நடத்து.

10. சிறு குழந்தைகளை யேமாற்றுந் தொழிலை விட்டு விடு.
11. வாவுக்குத் தகுந்த செலவு செய்'என்னும் முதுமொழியைநன்றாய் எண்ணு.
12. பிச்சைக்காரர்களிடம் சண்டை செய்து அவர்களுடைய சாபத்தைஏற்றுக்கொள்ளாதே.
13. போட்டி வியாபாரத்தைக் கனவிலுங் கருதாதே.
14. வயிற்றிற்கும் சரியாய் உண்ணாமல் பொருளைச் சேர்த்துவைக்காதே.
15. முதியோர்கள் எவற்றைக் கெட்டவை என்று கருதுகின்றார்களோஅவற்றை விட்டுவிடு.
16. உன் காரியங்களில் மிகவும் பொறுமையாயிரு.
17. பொருளை வீண் விரய மாக்காதே.
18. உன் குமாஸ்தா (Clerk) அல்லது சம்பள ஆட்களிடம் அதிக ஜாக்கிரதையாயிரு.
19. நீ பிரவேசிக்குங் காரியங்களில் வெற்றிபெறும்படி நட.
20. வியாபார சம்பந்தமான விஷயங்களை வெளியாக்கும் (ஆனந்தபோதினி போன்ற)

   பத்திரிகைகளை வரவழைத்துப்படி.


 K. S. வீராசாமி செட்டியார்,

செவிந்திபாளையம்.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - மார்ச்சு ௴

 

 

 

No comments:

Post a Comment