Saturday, September 5, 2020

 புராணப் புதையல்கள்

புராணங்கள் 18. அவைகளாவன: -


1. பிரம்ம புராணம்                          கிரந்தங்கள்                    10,000

2. பத்ம புராணம்                                                      55,000
3. விஷ்ணு புராணம்                                                   23,000
4. சிவபுராணம்                                                        24,000
5. பாகவதம்                                                          18,000
6. நாரத புராணம்                                                      25,000
7. மார்க்கண்டேய புராணம்                                            9,000

8. ஆக்கினேய புராணம்                                                15,400

9. பவிஷ்ய புராணம்                                                   14,500

10. பிரம்ம வைவர்த்த புராணம்                                         18.000
11. லிங்க புராணம்                                                     11,000
12. வராஹ புராணம்                                                   24,000
13. ஸ்காந்த புராணம்                                                  81,100
14. வாமன புராணம்                                                   10,000

15. கௌர்ம புராணம்                                                   17,000

16. மத்ஸ்ய புராணம்                                                  14,000

17. காருட (ஸௌபர்ண) புராணம்                                       19,000

18. பிரம்மாண்ட புராணம்                                               12,000

                              மொத்தம் ௸                          40,0000

 

புராணத்தில் ஸர்க்கம், பிரதி ஸர்க்கம், வம்சம், மந்வந்தரங்கள், வம்சானு சரிதம் என்ற எட்டு லக்ஷணங்களும் அடங்கியிருக்க வேண்டும். பிரஜைகளுக்கு தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகிய இந்நான்கு புருஷார்த்தங்களை உபதேசம் செய்து அவர்களை நல்ல நடத்தை யுள்ளவர்களாகச் செய்வதற்காகவே புராணங்கள் மஹரிஷிகளால் கதைகளாக எழுதப்பட்டிருக்கின்றன. ஸத்குணங்களை யுடைய கதாநாயகர்களுக்கு நன்மையும், துர்க்குணமுடைய கதாநாயகர்களுக்குத் தீமையும் பலனாகக் கிடைத்திருப்பதையும் நமக்கு புராணங்கள் ரூபிக்கின்றன. ஆகையால் நாம் துர்க்குண ரஹிதராகவும், ஸத்குண ஸஹிதராகவும் இருக்கவேண்டுமென்று அவைகள் நமக்கு உபதேசிக்கின்றன.

 

உதாரணமாக மார்க்கண்டேய புராணத்தை எடுத்துக் கொள்வோம். இதில் சிராத்த கல்பம், ஸதாசார வர்ணனம், ஆத்மவிவேகம், யோக நிரூபணம், யோகஸித்தி, தர்மா தர்ம நிரூபணம், ஓங்கார வர்ணனம், முதலான சாஸ்திர தத்துவங்கள் அடங்கியிருக்கின்றன.

 

ஹரிச்சந்திரன், சந்திரமதி இவர்களுடைய சரித்திரம் இதிலிருந்து தான் எடுத்து பல கவிவாணர்கள் தங்கள் கைச்சரக்குகளைச் சேர்த்து எழுதியிருக்கின்றனர்.

 

இப் புராணத்தில் மஹா விஷ்ணு எதற்காக பூமியில் அவதரித்தார். த்ருபத புத்திரியை ஏன் பஞ்சபாண்டவர்கள் விவாஹம் செய்துகொண்டார்கள். பலராமர் பிரம்மஹத்தி சாந்திக்காக தீர்த்த யாத்திரை என் செய்தார்? பாஞ்சாலியின் புத்திரர்கள் பஞ்சபாண்டவர்களுடைய சகாயமும் பலமும் இருந்தும் ஏன் கொல்லப்பட்டார்கள் முதலிய சம்சயங்களை நீக்கக்கூடிய விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. இதிலிருக்கும் மதாலஸோபாக்கியானத்திலிருந்து பிரபஞ்சம் நிஸ்ஸாரமென்றுள்ள அறிவு நமக்கு உண்டாகும். இப் புராணத்தில் ஆசிரம தர்மம், கிருகஸ்த தர்மம், ராஜ தர்மம் இவைகளும் அடங்கியிருக்கின்றன. அநேகர் தினமும் பாராயணம் செய்துவரும், "தேவீ மஹாத்மியம்" என்ற சப்த சதி'யும் இப்புராணத்தில் அடங்கியிருக்கின்றன.

 

தேவீ மகாத்மியத்தில் மஹாவிஷ்ணுவானவர் யோக நித்திரையிலிருக்கும் பொழுது, மது, கைடபர் என்னும் இரு அசுரர்களைக் கொல்லும்படிக்கு, பிரம்மா தேவியைப் பிரார்த்திக்க, தேவி விஷ்ணுவின் சரீரத்திலிருந்து தோன்றி அவர்களைக் கொன்ற கதையை சொல்லப்படுகிறது; பிறகு மஹிஷாஸுரவதமும், சும்ப, நிசும்பவி தமும், சொல்லப்பட்டிருக்கிறது. தேவியின் சரித்திரத்தை ஸ்மரிப்பவனுக்கு நிச்சயமாக ஸகல அரிஷ்டங்களும் தூரத்திலிருந்தே கதிரவனைக் கண்ட பனிபோல் ஓடிவிடுகின்றது என்று தேவியாலேயே கூறப்பட்டிருக்கிறது. இதை மந்திர சாஸ்திரமென்றும் இதை நவராத்திரி காலங்களில் பாராயணம் செய்தால் சகல அரிஷ்டங்களும் விலகுமென்பதும் அனுபவத்தால் அறியலாம்.

 

1. தேவீ மஹாத்மியம்.

 

தேவியின் சரித்திரத்தைக் கூறும் இந்த தேன் மாஹாத்மியம் சப்த சதி என்றும் கூறப்படுகின்றது. இதில் மூன்று சரித்திரங்கள் அடங்கி யிருக்கின்றன. அவையாவன: -

 

பிரதம சரித்திரம்: - 1-வது அத்தியாயத்திலும் மத்திம சரித்திரம்: -
2, 3, 4, அத்தியாயங்களிலும், உத்தம சரித்திரம்: - 5 முதல் 13 வரையிலுமுள்ள அத்தியாயங்களிலும் விவரிக்கப் பட்டிருக்கின்றன. இதில் உவாச 57-ம், அர்த்த சுலோகம் 108-ம் சுலோகம் 535-ம் ஆக 700 இருப்பதால் இதற்கு சப்தசதி என்ற பெயர் வந்தது.

 

முதல் அத்தியாயமான உத்தம சரித்திரத்தில் மஹாவிஷ்ணு யோக நித்திரையி லிருக்கும் பொழுது அவருடைய கரணமலத்திலிருந்து உற்பத்தியான மது கைடபர் என்ற இரு அசுரர்கள், பிரம்மாவைக் கொல்ல முயற்சித்த பொழுது, பிரம்மா மஹாமாயையை ஸ்துதி செய்ய, அந்த தேவி, விஷ்ணுவின தேகத்தை விட்டு அகலவும், விஷ்ணு எழுந்து, அம் மது கைடபர்களைக் கொல்லுகிறார் என்ற தேவியின் சரித்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் பிரம்மா, அம்பிகையைக் குறித்து செய்யும் ஸ்துதியான 53 முதல் 67 வரையிலுமுள்ள சுலோகங்கள் இராத்திரி ஸூக்தம் என்று சொல்லப்படுகிறது இது தினமும் பாராயணம் செய்யத் தக்கதேயாகும்.

 

2-வது அத்தியாயத்தில் மஹிஷாஸுரனுடைய சேனைகளின் வதமும், 3-வது அத்தியாயத்தில் மஹிஷாஸுர வதமும், 4-வது அத்தியாயத்தில் தேவர்கள் தேவிக்குச் செய்யும் ஸ்தோத்திரமும் அடங்கி யிருக்கின்றன. இந்த நான்காவது அத்தியாயத்தை எல்லாச் செவ்வாய், வெள்ளிக்கிழமை களிலும் பாராயணம் செய்தால் மிக நன்மையுண்டு.

 

5-வது அத்தியாயத்தில் ஸும்ப, நிஸும்ப அஸுரர்களின் தூதனோடு தேவியின் ஸம்வாதமும், 6-வது அத்தியாயத்தில் அவர்களின் சேனாதிபதியான தூமிரலோசன வசமும், 7வதில் சண்ட முண்ட வதமும், 8வதில் ரக்தபீஜாஸுரவதமும், 9-வது அத்தியாயத்தில் நிஸும்பாஸுரவதமும், 10-வது அத்தியாயத்தில் ஸம்பாஸுரவதமும, 11-வது அத்தியாயத்தில் நாராயணி ஸ்துதியும், 12-வது அத்தியாயத்தில் தேவீசரித மஹாத்மியமும், 13- வது அத்தியாயத்தில் ஸுரதன் என்ற அரசனுக்கும், ஸமாதி என்ற வைச்யனுக்கும் வரலாபமும் மார்க்கண்டேயரால் கூறப்படுகின்றன. இதிலுள்ள 11-து அத்தியாயமும் முன் கூறப்பட்ட 4-வது அத்தியாயத்தைப் போலப் பிரதி வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பாராயண யோக்கியமானதேயாம். தேவீ மஹாத்மிய பாராயணம் செய்பவனுக்கு நிச்சயமாக ஸகல அரிஷ்டங்களும் நீங்குவது நிச்சயம் என்பது அனுபவத்தால் நன்கு உணரலாம். மலைப் பிரமாணத்தில் நம்மையணுகும் கஷ்டங்களெல்லாம், கதிரவனைக் கண்ட பனிபோல் வெகு சீக்கிரத்தில் நம்மை விட்டு அகலும்படி தேவி நிச்சயமாகச் செய்து விடுகிறாள். இது ஒரு முக்கியமான மந்திரசாஸ்திரம் என்று சொல்லப்படுகிறது.

 

கீர்வாண பாஷை தெரியாதவர்களின் உபயோகத்தின் பொருட்டு நான் இதைத் தமிழில் மொழி பெயர்க்க உத்தேசித் திருக்கிறேன். கீர்வாணபாஷையில் பாராயணம் செய்வோரும் அந்த சுலோகங்களின் அர்த்தம் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்- பிரதி சுலோகமும் அப்படியே மொழிபெயர்த்திருக்கின்றேன். மந்திர சாஸ்திரமாகையால் மூலத்திலிருக்கும் ஸம்ஸ்கிருத வார்த்தைகளை அப்படியே அனேக இடங்களில் பிரயோகித் திருக்கின்றேன்.

 

அன்பர்கள் இதைப் பாராயணம் செய்து தேவீப் பிரசாதத்தை அடைந்து இஹலோகத்திலும், பரலோகத்திலும், க்ஷேமங்களைப் பிராபிக்கும் படியாக சண்டிகா தேவி அனுக்கிரகிப்பாளாக. இதை சண்டிகா தேவியின் பாதார விந்தங்களிலேயே அர்ப்பணம் செய்கின்றேன். இதில் ஏற்பட்டிருக்கும் சகலத்துக்கும் அந்த தேவியே பொறுப்பாகையால் அந்த தேவி இதில் ஏற்படும் தவறுதல்களையும் மன்னித்து எம்மைக் காப்பாளாக,


நம: சண்டிகாயை


கதை ஆரம்பம்.

 

முதல் அத்தியாயம்.


மார்க்கண்டேயர் சொல்லுவது: - (1-21)

 

''எட்டாவது மனு சூரிய புத்திரனான ஸாவர்ணி என்று இதற்கு முன் என்னால் சொல்லப்பட்டது. அவருடைய உற்பத்தியைக் குறித்து நான் விஸ்தாரமாகச் சொல்லுகின்றேன். மஹா பாக்யசாலியான அந்த ஸாவர்ணி மன்வந்தராதிபதியானது மஹாமாயையின் அனுக்கிரகத்தால் தான். முன்காலத்தில் ஸ்வாரோசிஷ மன்வந்தரத்தில் சைத்திர வம்சத்தில் பிறந்த ஸுரதன் என்ற அரசன் பூமண்டலத்தை எல்லாம் பரிபாலனம் செய்து வந்தான். பிரஜைகளைத் தன்னுடைய சொந்த மக்களைப் போல நன்றாகப் போற்றிப்பரிபாலித்து வந்த அவருக்கு, கொலாவித்வம்ஸிகளான ராஜாக்கள் விரோதிகளானார்கள். பெரும் படையோடு கூடின அந்த அரசனுக்கும் அவர்களுக்கும் யுத்தம் உண்டாயிற்று. சிறிய சேனையோடு கூடின அவர்கள் ஸுரத மஹாராஜாவை ஜபித்து விட்டார்கள். அந்தப் பிரபல சத்துருக்களால் ஜயிக்கப்பட்ட அரசன் தன்னுடைய தலைநகரை அடைந்து அதற்கு மாத்திரம் அதிபதியாக இருந்து வந்தான்.

 

தன்னுடைய தலை நகரத்தி லிருக்கும் பொழுதும், அதிக பலசாலியல்லாத அவருடைய பொக்கிஷத்தையும், சைன்யத்தையும் எல்லாம் பலமுள்ளவர்களும் கெட்டவர்களும் துராக்ரஹீகளுமான மந்திரிகள் கைப்பற்றிக் கொண்டார்கள். இந்த மாதிரியாக ராஜ்ய அதிகாரங்கள் அபஹரிக்கப்பட்ட அந்த ஸுரத மஹாராஜா வேட்டைக்குப் போவது என்ற வ்யாஜத்தால் ஒரு குதிரையின் மீது ஏறிக் கொண்டு ஒரு துணையுமில்லாமல் தனியாக காட்டிற்குச் சென்றார். அந்த வனத்தின் மத்தியில் மஹானான அவருக்குப் பிரசாந்தங்களான துஷ்ட மிருகங்கள் அதிகம் இருக்கின்றதும், முனிசீடர்களால் அதிகம் பிரகாசிக்கின்றதுமான ஸுமேதஸ் என்ற மஹரிஷியின் ஆசிரமம் காணப்பட்டது. அந்த முனியினால் அதிதி பூஜைகள் செய்து நன்கு மதிக்கப்பட்ட அவர் அம் முனிவாருடைய ஆசிரமத்தில் கொஞ்ச நாட்கள் சுகமாக வசித்து வர்தார். ஒரு சான் மமதையால் ஆகர்ஷிக்கப்பட்ட மனஸோடு அவர் தானாகவே நினைத்துக் கொண்டதாவது, "முன் என்னுடைய பூர்வீகர்களால் பரிபாலிக்கப்பட்டு வந்த அந்த இராஜதானியை நான் விட்டு விட்டேனே. அதைக் கெட்ட சரித்திரமுள்ள என்னுடைய வேலையாட்களான மந்திரி முதலியோர் நன்கு பரிபாலிக்கிறார்களோ? என்னமோ? எப்பொழுதும் மத ஜலத்தை விட்டுக்
கொண்டிருக்கும் என்னுடைய மஹா பிரசித்திபெற்ற அந்தப் பட்டத்துயானை என்னுடைய சத்துருக்களுடைய வசப்பட்டு என்ன செய்கிறதோ? தெரியவில்லையே! என்னிடம் பரிசும், சம்பளமும், போஜனமும், பெற்றுக்கொண்டு என்னுடன் கூட இருந்தவர்க ளெல்லாம் இப்பொழுது வேறு அரசர்களின் கட்டளைப் படியே நடக்க நேரிட்டிருக்கும். துர்விநியோகம் செய்யும் அவர்கள் அனாவசியச் செலவுகள் பல செய்து வருவதனால் வெகு பாடு
பட்டு சம்பாதித்த அந்த கஜானா அதிகச் சீர்கேடு அடையுமே:" என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்த அந்த அரசன் அந்த மஹரிஷியின் ஆசிரமத்திற்கு அருகில் ஒரு வைச்யனைப் பார்க்க நேரிட்டது. அப்பொழுது அந்த வைச்யனோடு கேட்டதாவது, “தாங்கள் யார்? இங்கே வரக் காரணமென்ன? என் தாங்கள் அதி துக்கமுள்ளவராகவும் மனதுக்கு ஸ்வாஸ்திய மில்லாதவராகவும் காணப்படுகிறீர்கள்?" இம் மாதிரி ஸ்நேஹத்தோடு கூடின அரசனுடைய கேள்விகளைக் கேட்ட வைச்யன் வெகு வணக்கத்தோடு பதில் கூறுகிறான்.
''நான் அதிக சம்பத்துள்ள ஒரு பெரிய குலத்தில் பிறந்த ஸமாதி என்ற வைச்யன். பணத்தின் மேலுள்ள ஆசையால் துஷ்டரான என் பாரியையும் புத்திரர்களும் ஒன்று சேர்ந்து என்னை விரட்டி விட்டார்கள். நான் பந்துக்களை விட்டுப் பிரிய நேரிட்டது. என் சொத்துக்களை என் பாரியையும் மக்களும் கைவசப்படுத்தி விட்டார்கள். நெருங்கிய பந்துக்களால் தியஜிக்கப்பட்ட நான் துக்கிதனாக இந்தக் காட்டை யடைந்தேன். இந்த நிலையில் இங்கே இருக்கின்ற எனக்கு என் மக்கள், பாரியை, பந்துக்கள், இவர்களுடைய க்ஷேம சமாசாரங்கள் ஒன்றுமே தெரியாது. அவர்கள் சௌக்கியமாயிருக்கிறார்களோ? அல்லது கஷ்டப்படுகிறார்களோ? என்னமோ? என்னுடைய புத்திரர்கள் நல்லவர்களா யிருக்கிறார்களா அல்லது, கெட்டவர்களாக விருக்கிறார்களோ? அறியேன்


ராஜா சொல்லுவது: - (22)

 

“பணத்தின் மீது ஆசை வைத்து உம்மை விரட்டின அந்த மனைவி டிக்கள் மீது உமக்கு இப்பொழுதும் அபிமானம் தோன்றக் காரண மென்ன?


வைச்யன் சொல்லுவது: - (23-26)

 

'சரிதான், தாங்கள் கூறுவது போலவே தான் எனக்கும் தோன்றுகி என்ன செய்வது? என் மனதுக்கு இன்னும் அவ்வளவு காடின்யம் வரவில்லை. பணத்தின் ஆசையினால் பிதிரு சினேகமும், பர்த்ரு சிநேகமும் இல்லாமல் என்னை வெளியில் விரட்டினவரான அந்த மனைவி மக்களிடமே என் மனம் செல்லுகிறது. மகாமதெ! நற்குண மில்லாத அந்தப் பந்து ஜனங்களைத் தான் என் மனம் நாடுகிறது என்று நான் நன்குணர்ந்திருந்தும் இதென்னவோ தெரியவில்லையே! அவர்களை நினைத்தால் அதிக துக்கமும் நிச்வாஸமும் எனக்கு உண்டாகிறது. என்ன செய்வேன்? அந்த விசுவாசம் கெட்டவர்களிடம் ஏன் எனக்கு நீர் தயை தோன்றுவதில்லை?"


மார்க்கண்டேயர் சொல்லுவது: - (27-28)

 

பிராமணா! பிறகு அந்த சமாதி என்ற வைசியனும், அந்த அரசனும் ஒன்று சேர்ந்து அந்த மஹரிஷியினிடம் சென்றார்கள். அம் முனி சிரேஷ்டரை நியாயப்படியும், கிரமப்படியும் வந்தனம் செய்து, பக்கத்தில் அமர்ந்து ஒவ்வொரு விஷயங்களைக் குறித்தும் பேச ஆரம்பித்தார்கள்.


அரசன் சொல்லுவது: - (29-33)

 

"பகவானே! நான் தங்களிடத்தில் தங்களிடத்தில் ஒரு சந்தேஹத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. மனோ தைரியம் என்பது து இல்லாததினால் நான் அதிக மனக்கிலேசம் அனுபவிப்பது ஏன் என்று எனக்குக் கூற வேண்டும். மஹரிஷி சிரேஷ்ட! ராஜ்யத்தை விட்டு வந்தவனான எனக்கு அறிவு என்பது இருந்தாலும், அறிவில்லாதவன் போல ராஜ்பாங்கங்களில் எல்லாம் மமதை தோன்றக் காரண மென்ன? இந்த வைசியனும், களத்திரபுத்திர மித்திர பந்துக்களால் விரட்டப்பட்டவனும் வேலையாட்களால் தன்ளப்பட்டவனும், ஆக யிருந்தும் அவர்களை வெகுவாக நேசிக்கிறான். இவ்விதம் கெட்டவை, பரிஹரிக்கத் தக்கவை என்று நன்றாகத் தெரிந்த வில்யங்களிலும், மமதை என்பது எம்மிருவர் ஹிருதயங்களையும் ஆகர்ஷித்து எங்களைத் துக்கத்தில் வீழ்த்துகிறது. மஹாபாக! அறிவுள்ளவர்களானாலும் எங்களுக்கு இவ்வாறு வியாமோஹம் தோன்றக் காரண மென்னவோ தெரிய வில்லையே! இது அவிவேகிகளானவர்களுக்கு உண்டாகின்ற அவிவேகமன்றோ!"


ரிஷி சொல்லுவது: - (34-44)

 

எல்லா ஜந்துக்களுக்கும் விஷய அறிவு உண்டு. மஹாபாக! சங்ககள் இப்படித் தனித்தனியாகவும் தெரிந்து கொள்ளவும் கூடும். சிலபிராணிகளுக்குப் பகலில் பார்க்க முடியாது. மற்றும் சிலவைகளுக்கு இரவில் பார்க்க முடியாது. சில பிராணிகளுக்கு இரவும் பகலும் ஒன்று போலவேயிருக்கும். மனிதர்களுக்கு ஞானம் உண்டு என்பது உண்மையே. ஆனால் அதனால் என்ன பிரயோஜனம்? பக்ஷி மிருகங்களுக்கும் ஞானம் உண்டு.
ஆனால் மனிதர்களுக்கு இருக்கின்றன சாஸ்திர ஞானம் பக்ஷி மிருகங்களுக்குக் கிடையாது. மற்ற ஞானம் மனிதர்களுக்கும் அவைகளுக்கும் சமம்தான். ஞானம் இருந்தாலும் மமதையினால் இந்தப் பறவைகள் தங்கள் பசியைக் கூடப் பாராட்டாமல் தங்கள் குழந்தைகளின் அலகில் ஆதாரத்தைக் கொண்டு கொடுப்பதைப் பார். ராஜாவே! மனிதர்கள் பிரதி பலத்தை எதிர் பார்த்து மக்களைப் பேணுகின்றனர். ஆனால் இந்த விஷயத்தைத் தாங்கள் பார்க்க வில்லையா? ஸமசாரத்தை நிலையாக யிருக்கும்படிச் செய்ய மஹாமாயையின் பிரபாவத்தால் மமதையாகின்ற சுழியோடு கூடிய அந்த அஞ்ஞானக்குழியில் இவர் கிடக்கிறார்கள். அதனால் இதில் ஆச்சரிய மொன்று மேயில்லை. அந்த மஹாமாயையானவள் - ஹாவிஷ்ணு வினுடைய யோக நித்திரை தேவியாம். அவள் தான் லோகத்தை மோகிக்கச் செய்கிறாள். அந்த பகவதியான மஹாமாயை சில வேளைகளில் ஞானிகளுடைய மனதைக் கூட இழுத்து அஞ்ஞானத்தின் வசமாக்குகிறாள். அந்த மஹாமாயை தான் இந்த சராசரங்கள் அடங்கிய எல்லா உலகங்களையும் சிருஷ்டிக்கிறாள். அம் மஹாமாயையின் அனுக்கிரகத்தால் மனிதர்கள் முக்தியை அடைகிறார்கள். ஸ சாதனியான அவள் தான் முக்திக்குக் காரணமான பரமவித்யை. அந்த ஸர்வேசுவரிதான் ஸம்ஸார பந்தத்துக்கும் காரணமாக இருக்கிறாள்.


ராஜா சொல்லுவது: - (45-46)

 

பகவானே! மஹாமாயை என்று தாங்கள் சொன்ன அந்தத் தேவி யார்?
எப்படி யுண்டானாள்? பிராம்மண! அவளுடைய பிரவர்த்தி (தொழில்) என்ன? பிராம்மண சிரேஷ்டா! அந்த தேவியினுடைய பிரபாவமும், ஸ்வரூபமும் உற்பத்தியும் எல்லாம் தயவு செய்து எடுத்துக் கூறும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.


மஹரிஷி சொல்லுகிறர்: -(47-52)

 

இந்த ஜகத்துக்கு மாதா, நித்யையானவள். அவளே இவ்வுலகத்தை உண்டு பண்ணினவள், ஆனாலும் அவளுடைய உற்பத்தியைக் கூறுகிறேன். தேவர்களுடைய காரியத்திற்காக அவள் எப்பொழு தெல்லாம் உற்பவிப்பாளோ அப்பொழுது அந்த நித்யை பிறந்தாள் என்று உலகத்தில் சொல்லப்படுபிரளய காலத்தில் உலகம் பூராவும் ஒரே கடலாக இருந்த பொழுது பிரபுவான விஷ்ணு சேஷசாயியாக யோகநித்திரை செய்தார். அப்பொழுது மஹா விஷ்ணுவின் காதுகளிலிருந்த அழுக்கிலிருந்து மது, கைடபர் என்ற இரண்டு மஹா அஸுரர்கள் உண்டாகி பிரம்மாவை கொல்லப் புறப்பட்டார்கள். விஷ்ணுவினுடைய நாபியிலிருந்து உண்டான தாமரை மீது வீற்றிருக்கும் பிரஜாபதியான பிரம்மா, அந்த அசுரர்களுடைய கெட்ட குணத்தையும், - ஹா வீட்னு வினுடைய சித்திரையையும் பார்த்து, விஷ்ணு எத்ரையை விட்டு எழுந்திருப்பதற்காக, அவருடைய கண்களில் இருக்கின்றஅந்த யோகநித்திரா தேவியை ஒரே நிலையான சித்தத்துடன் தோத்திரம் செய்தார்.


பிரம்மா சொல்லுகிறர்: - (53-67)

 

இந்த உலகத்தின் ஜனனியாகவும், ஸ்திதி, ஸம்ஹாரம் இவைகளை நடத்துகின்ற விசுவேசுவரியாகவும், நிஸ்துல்ய தேஜஸோடு கூடின விஷ்ணுவின் யோக நித்திரையாகவும் இருக்கின்ற பகவதியை நான் ஸ்துதிக்கின்றேன். ஸ்வாஹா, ஸ்வதா, வஷட்கார, லவஜாத்மிகா, ஸுதா, அக்ஷரம், நித்யை, திருமாத்ராத் மிகை, நன்றாகச் சொல்ல முடியாத அர்த்த மாத்திரை, ஸந்தியை, ஸாவித்ரீ, சிரேஷ்டயான பூமி, இந்த பூமியை பரிபாலிப்பவள், அதை விருஷ்டிப்பவள் எல்லாம் நீயே. இந்தப் பூமியை ரக்ஷிப்பவளும், முடிவில் இதை ஸம்ஹரித்திடுபவளும் நீதான். விருஷ்டியில் விருஷ்டிமயி, ரக்ஷிப்பதில் ஸ்திதி மயி, பூமி அழியும் காலத்தில் ஸம்ஹாராத் மிகையும், ஹே ஜகந்மூர்த்தே! நீ தான். மஹாவித்யை, மஹாமாயை, மஹாமேதை, மஹாஸ்மிருதி, மஹாமோஹை, மஹாதேவி, மஹேஸ்வரீ, ஸத்வ ரஜஸ் தமோ குணங்களைப் பிரகாரத்தில் பகுத்து வைக்கும் ஸமஸ்த பிரகிருதியும், ஹே பகவதீ! நீ தான். காளராத்திரி, மஹாராத்திரி, அதிக பயத்தைக் கொடுக்கும் மோஹராத்திரி, ஸ்ரீ, ஈசுவரி, ஹ்ரீ, போத லக்ஷணையான புத்தி, லஜ்லை புஷ்டி, துஷ்டி, சாந்தி, ஷாந்தி, இவைகளும் நீயே. கட்கம், சூலம், கதை, சக்கரம், சங்கு, வில்லு, பாணம், பரிசம் இவைகளை யெல்லாம் அணிந்து கொண்டிருக்கும் சண்டிகையும் நீயே! அதிஸௌமிய வஸ்துக்களில் நீ ஸௌமயை, அதிஸௌந்தரிய மானவைகளில் நீ ஸந்தரி, பராபரங்களில் நீ பரை, பரமேசுவரீயும் நீயே. எங்கெங்கே ஸத்தாகவும் அஸத்தாகவும் உள்ள வஸ்துக்கள் உண்டோ அவைகளின் சக்தி யெல்லாம் நீயே, அப்பேர்ப்பட்ட பிரபாவமுள்ள உன்னை நான் எப்படி தோத்திரம் செய்வது! உலகத்தை விருஷ்டிப்பதும், காப்பதும், அழிப்பதும் ஆகிய முத்தொழில்களை எந்த விஷ்ணு செய்கிறானோ அவனை நீ நித்திரைக்கு அடிமையாக்கி விட்டாயே! உன்னை ஸ்தோத்திரம் செய்ய வல்லவன் யார்? என்னையும் விஷ்ணு சிவன் இவர்களையும் உன் சரீரத்திலேயே வைத்துக் கொண்டிருக்கும் உன்னை ஸ்தோத்திரம் செய்வதற்கு யாரால் தான் ஸாத்தியம்? இப்படி உன்னுடைய விசேஷமான பிரபாவங்களைக் கொண்டு ஸ்தோத்திரிக்கப் பட்ட நீ, துர்த்தர்ஷர்களான இந்த மது கைடபாஸுரர்களை மோஹிக்கும்படிச் செய்வாயாக. விஷ்ன எழுப்பி, இந்த பெரிய அஸரர்களைக் கொல்லும்படிக்கு போதனை செய் வாயாக!


மஹரிஷி சொல்லுவதாவது: - (68-73)

 

அப்பொழுது, அங்கே பிரம்மாவினால் இந்தப் பிரகாரம் துதி செய்யப் பட்ட மாயாதேவி மது கைடபர்களைக் கொல்லும் பொருட்டு, விஷ்ணுவை, பிரபோதனம் செய்ய உத்தேசித்துக் கண்கள், முகம், கைகள், ஹிருதயம், மார்பு, மூக்கு இவைகளிலிருந்து அவ்யக்த ஜன்மாவான பிரம்மாவுக்கு முன் பிரத்தியமானாள். மஹாமாயை விஷ்மஹாமாயை விஷ்ணுவை விட்டு நீங்கினதும், ஜகதீச ஜன ஜாார்த்தனன் ஒரே கடலின் மீச இருக்கும் அருந்தசயனத்திலிருந்து ழுந்திருந்து, பிரம்மாவைக் கொல்வதற்குத் தயாராகக் கோபத்தால் சிவந்த கண்களோடு கூட நிற்கின்ற அதிக வீரிய பராக்கிரமமுள்ள அந்த மதுகைடப அசுரர்களைக் கண்டார். உடனே எழுந்திருந்து, பகவானான ஹரி அவரோடு கூட ஐயாயிரம் வருஷம் பாஹ ு யுத்தம் செய்தார். பலத்தால் மமதையுள்ள அவர்கள் மஹாமாயையால் மோஹிக்கப் பட்டவர்களாகி பகவானான விஷ்ணுவைப் பார்த்து, "வரம் கேட்டு வாங்கிக் கொள்” என்று கூறினார்கள்.


பகவான் சொன்னதாவது: - (74)

 

இப்பொழுது நீங்கள் வரம் கொடுப்பதாக யிருந்தால் இந்த வாமே எனக்கு வேண்டும். ''நீங்கள் இருவரும் என்னால் கொல்லப்பட வேண்டும்" வேறு வரம் எனக்கு எதற்கு? இப்பொழுது இதே வேண்டும்.


மஹரிஷி சொல்லுவது: - (75-78)

 

இப்படி அப்பொழுது வஞ்சிக்கப்பட்ட அவர்கள் லோக மெல்லாம் ஜலமயமாக இருக்கப் பார்த்து, கமலேக்ஷணனான பகவானோடு சொன்னதாது, "உம்முடன் கூடச் செய்த யுத்தத்தால் நாங்கள் வெகு சந்தோஷமடைந்திருக்கிறோம். நீர் எங்களுக்கு உத்தமமான யமனே யாகும். ஜல மில்லாத ஒரு இடத்தில் வைத்து எங்களைக் கொல்லவும்" அப்படியே யாகட்டும் என்று சங்கும் சக்கரமும் தரித்த பகவான் அவர்களுடைய சிரஸ்ஸை தன்னுடைய ஜகனத்தில் வைத்து சக்கரத்தால் முறித்தார். இப்படி பிரம்மா ஸ்துதித்ததினால் தான், அந்த தேவி தானாக ஆவிர்ப் பவித்தாள். அவளுடைய பிரபாவத்தை இன்னும் சொல்லுகிறேன் கேட்கவும். இது.

 

ஸ்ரீ மார்க்கண்டேய புராணத்தில் ஸாவர்ணி மந்வந்தரத்தில் தேவீ மாஹாத்மியத்தில் (1) மது கைடப வதம் என்ற எழுபத்தெட்டாவது அத்தியாயம்.


இரண்டாவது அத்தியாயம்.


மஹரிஷி சொல்லுகிறர்: - (1-7)

 

முன் காலத்தில் தேவர்களுக்கு தேவேந்திரனும், அஸுரர்களுக்கு மஹிஷாஸுரனும் அதிபதிகளாக இருந்த போது ஒரு நூறு வருஷம் பூராவும் தேவாஸுர யுத்தம் நடந்தது. அதில், அதி வீரியவான்களான அஸுரர்கள் தேவஸைன்யத்தைத் தோற்கடித்து விட்டார்கள். தோற்றுப் போன தேவர்கள் பத்மயோனியான பிரம்மமாவுடன் கூட, சிவனும் விஷ்ணுவும் இருக்கின்ற இடத்துக்குச் சென்றார்கள். தேவர்கள் அவ் விருவர்களிடம், மஹிஷாஸுரனுடைய படை யெடுப்பையும் அவன் தேவர்களை ஜயித்ததையும் விவரமாகச் சொன்னார்கள் - 'சூரியன், சந்திரன், அக்னி, வாயு, இந்திரன், யமன், வருணன் இவர்களுடையவும், மற்ற எல்லாத் தேவர்களுடையவும் அதிகாரங்களை அவனே தான் செய்ய ஆரம்பித்து விட்டான். அந்தத் துராத்மாவான மஹிஷன் ஸ்வர்க்கத்திலிருந்து விரட்டி விட்டதனால் தேவர்களெல்லாம் மனிதர்களைப் போல பூமியில் சஞ்சரிக்கிறார்கள். அந்த அஸுரனுடைய சேஷ்டைகளை யெல்லாம் தங்களுக்குத் தெரிவித்தோம். நாங்கள் தங்களையே சாணம் அடைந்திருக்கின்றோம். அவனைக் கொல்லும் மார்க்கத்தைக் குறித்து யோஜிக்கவும்!      (8-12)

 

இப்படித் தேவர்கள் சொன்னதைக் கேட்ட மதுஸூதனனும் சம்புவும், புருவத்தைச் சுளித்து அதிக கோபத்தோடு கூடினவர்க ளானார்கள். உடனே கோபம் நிறைந்த சக்கிராயுதனுடையவும், சிவனுடையவும், பிரம்மாவினுடையவும் முசங்களி லிருந்து ஒரு பெரிய தேஜஸ்ஸு புறப்பட்டது. இந்திரன் முதலான மற்ற தேவர்களுடைய சரீரங்களிலிருந்தும் ஒரு பெரிய தேஜஸ்ஸு புறப்பட்டது. அவைக ளெல்லாம் ஒன்றாகச் சேரவும் செய்தது. திக்குகளெல்லாம் வியாபித்திருந்த அந்த ஜ்வாலாமாலைகளோடு கூடின தேஜஸ்ஸுகளின் கூட்டம் ஜ்வலிக்கின்ற ஒரு பர்வதம் போல தேவர்கள் முன் காணப்பட்டது. மூவுலகங்களையும் பிரகாசிக்கச் செய்கின்ற அந்த ஸர்வதேவ சரீர
ஜமான நிஸ்துல்ய தேஜஸ் அவ் விடத்தில் ஒன்று சேர்ந்து ஒரு ஸ்திரீயாக ஆயிற்று. (13-17)

 

சிவ தேஜஸ்வளி லிருந்து முகமும், யமனுடைய தேஜஸ்வினால் தலைமுடியும், விஷ்ணுவி னுடையதனால் கைகளும் ஸோமனுடையதனால் இருதனங்களும், இந்திரனுடைய தேஜஸ்வியினால் இடையும், வருணனுடையத்னால் கணுக்கா கால்களும், பூமியின் தேஜஸ்வினால் நிதம்பமும், பிரம்மாவின்தேஜஸ்வினால் கால்களும், சூரியனின் தேஜஸ்வினால் கால்விரல்களும், வஸக்களின் தேஜஸ்வினால் கை விரல்களும், குபேரன் தேஜஸ்ஸினால் மூக்கும்,பிரஜாபத்ய தேஜஸ்ஸினால் பற்களும், அக்னியின் தேஜஸ்வினால் மூன்று கண்களும், ஸந்தியையின் தேஜஸ்வினால் புருவங்களும், வாயுஜின் தேஜஸ்வினால் காதுகளும் உண்டாயின. இப்படியே மற்ற எல்லாத் தேவர்களுடையவும் தேஜஸ்ஸுகளால் ஸர்வ மங்களையான தேவி உண்டானாள். (18-33)

 

எல்லாத் தேவர்களுடையவும் தேஜஸ்விலிருந்து ஆவிர்பவித்த அந்தத்தேவியைப் பார்த்து மஹிஷபீடிதர்களான தேவர்கள் மிகச் சந்தோஷமடைந்தார்கள். பினாகபாணி தன் சூலத்திலிருந்து ஆகர்ஷித்து சூலத்தைக் கொடுத்தார். கிருஷ்ணன் தன் சக்கரத்திலிருந்து எடுத்து ஒரு சக்கரத்தைக் கொடுத்தார். வருணன் சங்கையும், அக்னி வேலையும் அவளுக்குக் கொடுத்தார்கள். வாயு வில்லும், அம்புகள் நிறைந்த அம்புறாத்தூணியும் கொடுத்தான். இந்திரன் தன் குலிசத்தி லிருந்து வஜ்ரத்தையும், ஐராவத மென்ற யானையிலிருந்து மணியையும் எடுத்து அவளுக்குக் கொடுத்தான். யமன் கால தண்டத்திலிருந்து தண்டமும், வருணன் பாசமும் கொடுத்தார்கள். பிரஜாபதியான பிரம்மா அக்ஷமாலையையும், கமண்டலத்தையும், கொடுத்தார். சூரியன் தன்ரச்மிகளை எல்லா ரோம கூபங்களுக்குக் கொடுத்தான். காலன் நிர்மலமான கட்கத்தையும், சர்மத்தையும் கொடுத்தான். பாற்கடல் நிர்மலமான ஒரு முத்துமாலையையும், புது வஸ்திரங்களையும் கொடுத்தது. திவ்யமான சூடாமணி, குண்டலம், வளைகள், சுப்ரமான அர்த்த சந்திரன், எல்லாக் கைகளுக்கும் தோள்வளை, விமலமான நூபுரங்கள், அதி விசேஷமான கண்டாபரணம், எல்லா விரல்களுக்கும் விசேஷமான மோதிரங்களும், அதி நிர்மலமான மழுவும், பல மாதிரி ஆயுதங்களும், அபேத்யமான கவசமும் தேவிக்கு விச்வகர்மாவானவர் கொடுத்தார். சமுத்திரம் சிரஸ்ஸுக்கும் உரஸ்ஸுக்கும் ஒவ்வொரு மனோஹரமான வாடாத் தாமரை மாலையைக் கொடுத்தது. ஹிமவான் வாஹனமான சிங்கத்தையும் பலவிதமான ரத்னங்களையும், குபேரன் மத்யம் நிறைந்த ஒரு பான பாத்திரமும் கொடுத்தார்கள். இந்தப் பூமியை தாங்கிக் கொண்டிருக்கின்ற ஸர்வ நாகேசுவானாகிய சேஷன் மஹா மணி விபூஷிதமான நாகஹாரத்தைக் கொடுத்தான். மற்றத் தேவர்களும் ஆயதங்களாலும் ஆபரணங்களாலும் தேவியை ஸம்மானித்து திரும்பத் திரும்ப உச்சமாக அட்டஹாஸம் செய்தார்கள். அந்தப் பெரும் நாதத்தால் ஆகாசம் பூராவும் நிறையப்பட்டது. பெரிய வேறொரு பிரதித் தொனியு முண்டாயிற்று. லோகங்க ளெல்லாம் குலுங்கின. சமுத்திரங்கள் கலங்கின. பூமி நடுங்கினது. எல்லா மலைகளும் இளகிற்று. விம்ஹ வாஹனையான தேவியைப் பார்த்து எல்லா தேவர்களும் 'ஜய' என்று சொன்னார்கள். (34-48)

 

முனிவர்கள் பக்தியோடு வணங்கி தேவியை ஸ்தோத்தரித்தார்கள்.
மூன்று லோகங்களும் ஷோபித்ததாகக் கண்ட அந்த அஸுரர்கள் களைத் திரட்டி ஆயுதங்களோடு கூட புறப்பட்டார்கள். 'ஆ! இதென்ன!' என்று கோபத்தோடு கூடச் சொல்லிக் கொண்டு மஹிஷாஸுரன் எல்லா அஸுரர்களோடு சூழப்பட்டவனாய் அந்தச் சப்தத்திற்கு நேராகச் சென்றான். அப்பொழுது தன் தேஜஸ்வினால் மூன்று லோகத்தையும் பிரகாசிப்பித்துக் கொண்டும், பூமி கீழே போகும்படி காலைப் பூமியின் மீது ஊன்றியும், கிரீடம் ஆகாசத்தை ஒட்டிக் கொண்டிருக்கும் படியும், நாண் ஒலியால் பாதாளத்தைக் கலக்கியும், திக்குகளி லெல்லாம் வியாபித்திருக்கின்ற ஒரு ஆயிரம் கைகளோடு கூட இருந்த ஆந்தத் தேவியை அவன பார்ததான். உடனே தேவியும் அஸுசர்களும் ஒருவரை யொருவர் பிரயோகித்த அஸ்திரக் கூட்டங்களால் பல திக்குகள் பிரகாசிக்கும்படியான ஒரு பெரிய யுத்தம் உண்டாயிற்று, மஹிஷாஸுரனுடைய சேனாதிபதிகளான சிக்ஷரன் என்ற மஹா ஸுரனும், சாமரன் என்ற மஹாஸுரனும் சதுரங்க சேனையோடு கூட யுத்தம் செய்தார்கள். அறுபதினாயிரம் தேர்களோடு கூடிய உதகரன் என்ற மஹாரனும், ஒரு கோடி தேர்களோடு கூடிய மஹாஹனுவும் யுத்தம் செய்தார்கள். ஐந்து கோடி தேர்களோடு அஸிலோமா என்ற அஸுரமுக்கியனும் அறுபது லக்ஷம் தேர்களோடு பாஷ்கலனும் யுத்தம் செய்தார்கள். உக்ரதாசனன் அனேகாயிரம் யானைப் படை, குதிரைப் படை இவைகளோடு கூடின ஒரு கோடி தேர்களால் சூழப்பட்டு யுத்தம் செய்தான். பிடாலன் என்ற மஹாஸுரன் ஐந்து லக்ஷம் தேர்களோடு கூடிய அவ்வளவு மற்றப் படைகளோடு சூழப்பட்டு யுத்தம செய்தான். மற்ற மஹாஸுராகளும் பதினாயிரம் பதினா யிரம் தேர் யானை, குதிரைகளால் சூழப்பட்டு தேவியோடு யத்தம் செய்தார்கள். மஹிஷாஸுரன் அந்த யத்தத்தில் கோடி கோடி ஸஹஸ்ரஸங்கியைக் வான ரத, அசுவ, கஜங்களால் சூழப்பட்டு நின்றான். அவாகள் எல்லோரும் தோமரம், பண்டி பாலம், சக்தி, முஸலம், கட்கம், பரசு, பட்டசம் இவைகளைக் கொண்டு தேவியோடு யுத்தம் செய்தார்கள். சிலர் சக்தி (வேல்) யைப் பிரயோகித்தார்கள். சிலர் பாசக் (கயிறு) வீசினார்கள். சிலர் தேவியை வாள் கொண்டு வெட்டிக் கொல்வதற்கு முயற்சித்தார்கள். அந்தத் தேவியோ, விளையாட்டாகத் தன்னுடைய சாஸ்திர மாரியால் அந்த எல்லா சஸ்தி சாஸ்திரங்களையும் முறித்து விட்டாள். (49-68)

 

அந்த ஈசுவரியான தேவி முகத்தில் வாட்டமில்லாமல் தேவரிஷிகளால் ஸ்துதி செய்யப்பட்டு அஸுரர்களுடைய சரீரங்களில் சஸ் திரஸ் திரங்களைப் பொதிந்தாள். தேவியினுடைய வாஹனமான அந்த சிங்கமும் தன் பிடரிரோமத்தை அசைத்துக் கோபித்து காட்டுத் தீப்போல அஸுரஸைந்யத்தினிடையில் சென்றது. யுத்தத்தில் தேவியினால் விடப்பட்ட நிச்வாசம் (பெருமூச்சு) உடனே நூறாயிரம் நூறாயிரம் கணங்களாயின. தேவியின் சக்தியி லிருந்து உண்டான அவர்கள், பரசுபிண்டிபாலம், வாள், பட்டாக்கத்தி இவைகளால் அஸுரக் கூட்டத்தைக் கொன்றுகொண்டே சென்றார்கள். சில கணங்கள் அந்த யுத்த மஹோற்சவத்தில் பேரிகைகளை அடித்தார்கள். சிலர் சங்கம் ஊதினார்கள். மற்ற சிலர் மிருதங்கம் அடித்தார்கள். தேவியும் திரிசூலம், கதை, சரவர்ஷங்கள், வாள் முதலானவைகளைக்கொண்டு மஹா தைத்யர்களை நூறு நூறாகக் கொன்றான். சில அஸுரர்களை மணிருநாதத்தால் மோஹிக்கச் செய்து கொன்றாள், வேறு சிலரைக் கயிற்றினால் கட்டி பூமியில் தள்ளிக்கொன்றாள். சிலரைக் கூரான வாளினால் வெட்டி இரண்டாக்கினாள். வேறு சிலரைக் கதையினால் அடித்துப் பூமியில் போட்டாள். வேறு சிலர் உலக்கையடிபட்டு ரத்தத்தைக். கக்கினார்கள். சிலர் சூலத்தால் மார்பு பிளக்கப்பட்டு பூமியில் விழுந்தார்கள். யுத்த களத்தில் நிரந்தரமான சரவர்ஷத்தால் அனேக அசுரர்கள் பிராணன்களை விட்டார்கள். சிலருடைய கைகள் முறிந்தன. சிலருக்குக் கழுத்துகள் முறிந்தன. சிலர் தலை பூமியில் விழுந் சில பேருடைய நடுவு பிளக்கப்பட்டது சிலர் கணுக்கால் முறிபட்டு விழுந்தார்கள். வேறு சிலர், ஒற்றைக்கண்ணும் ஒற்றைக்காலு முள்ளவர்களாக தேவியால் இரண்டாகப் பிளக்கப்பட்டனர். சிலர் சிரஸ்ஸுகள் முறிக்
கப்பட்ட கபந்தங்களாக மறுபடி எழுந்திருந்து பல ஆயுதங்களோடு கூடத் தேவியோடு யுத்தம் செய்தனர். முறிந்து போன சில கபந்தங்கள் கையில் வாள், சக்தி, சூலம் இவைகளை எடுத்துக்கொண்டு யுத்தத்தில் வாத்ய தாளங்களுக்குத் தகுந்தாற்போல் ஆடின. மற்ற அஸுரர்கள் தேவியை நில்லு, நில்லு என்று சொன்னார்கள். அந்த மகாயுத்தம் நடந்த இடம் பூராவும் தேர், யானை, குதிரை, அஸுரர்கள் இறந்து கிடந்ததால் நடமாடக்கூடாததாக பிருந்தது. அந்த அஸுரப்படையின் நடுவில் கூட அஸுரர்களுடையவும் யானை, குதிரைகளுடையவும் அதிகமான இரத்தம் ஒரு நதி அந்தப் பெரிய மஹா ஸைன்யத்தை தேவீ, மரங்களும் புல்களும் அடர்ந்த காட்டைக் காட்டுத்தீ நசிப்பிப்பதுபோல நசிப்பித்தாள். அந்த விம்மமும் தன் கேஸாங்களை சிலிர்ப்பித்துக் கொண்டு பெருத்த குரலில் கர்ஜித்துக்கொண்டு அஸுரர்களுடைய சரீரத்திலிருந்து பிராணன்களைப் பிரிக்கிறதோ என்று தோன்றும்படி ஸஞ்சரித்தது. தேவியின் கணங்களும் தேவர்கள் புஷ்ப வர்ஷம் செய்து தேவியை ஸ்துதிக்கும்படி அந்த அஸுரர்க ளோடு யுத்தம் செய்தன. இது ஸ்ரீ மார்க்கண்டேய புராணத்தல் வாவர்ணி மன்வந்தரத்தில் தேவீ மாஹாத்மியத்தில் (2) எழுபத்தொன்பதாவது அத்தியாயம்.

 

மூன்றாவது அத்தியாயம்


மஹரிஷி சொல்லுவது: - (1-10)

 

அந்த சேனைகளைக் கொல்லுவதைப் பார்த்து, சேனாதிபதியான சிக்ஷரமஹாஸரன் அம்பிகையோடு யுத்தம் செய்ய வந்தான். மேகம், மஹாமேருமலையின் சிகரத்தின் மீது மழை பெய்வது போல, யுத்தத்தில் அந்த அளுரன் தேவியின் மேல் சரவர்ஷம் பொழிந்தான். தேவியோ, அவனுடைய சரக்கூட்டத்தைச் சாதாரண விளையாட்டாக அம்புகளைக் கொண்டு முறித்துடாள்; குதிரைகளையும் குதிரைக்காரர்களையும் கொன்று விட்டாள். வில்லையும், அதிக உயரமுள்ள கொடி மரத்தையும் முறித்தாள். வில் முறிந்து போன அவனை அம்புகளால் ஸர்வாங்கமும் எய்தாள். வில் முறிந்து தேர் முறிந்து
குதிரையும் ஸுதனுமில்லாத அந்த அஸுரன், வாளும் சர்மமும் எடுத்துக் கொண்டு தேவிக்கு நேராகச் சென்றான். அதிக பலமுள்ள அவன் கூரான வாளினால் சிங்கத்தின் தலையையும் தேவியின் இடது கையையும் லக்ஷியமாக ஒவ்வொரு வெட்டு வெட்டினான். ராஜாவே! வாள் தேவியின் கையில் பட்டதும் பொடியாயிற்று. அதனால் அதிக கோபமடைந்து கண்கள் சிவந்தன. அவன் ஒரு சூல மெடுத்தான். பிறகு ஆகாசத்தில் சூரிய பிம்பம் போல பிரகாசிக்கின்ற அதை மஹாஸுரன் பத்திரகாளிக்கு நேராக விட்டான். அந்த சூலம் வருவதைப் பார்த்த தேவி, தன் சூலத்தை விட்டாள், அது அந்தசூலத்தையும் அந்த அஸுரனையும் ஏறு ஏறு துண்டாக்கிற்று. மஹா வீரியவானான அந்த மஹிஷ சேனை நாயகன் சொல்லப் பட்டவுடன், சாமரன்ற அஸுரன் யானை மீது ஏறிக்கொண்டு வந்தான்.


(11-20)

 

அவன் தேவியின் மீது வேலாயுதத்தை விட்டான். அதை அம்பிகை க்ஷணத்தில் ஒரு ஹும் என்ற சப்தத்தால் கீழே தள்ளிவிட்டாள். வேல் ஒடிந்து கீழே விழுந்ததைப் பார்த்து அதிக கோபம் கொண்ட சாமரன் சூலத்தை விட்டான். அதையும் தேவி அம்புகளினால் முறித்து விட்டான். உடனே சிங்கம் யானையின் மஸ்தகத்தின் மீது குதித்து பாய்ந்து அங்கே வீற்நிருந்த அந்த அஸ்ரனோடு பாஹூ யுத்தம் செய்தது. யுத்தத்தில் யானை
பின் மீதிருந்து கீழே குதித்து, பலமாக யுத்தம் செய்தார்கள். முடிவில் சிங்சம், மேலே ஒரு குதி குதித்து சாமானுடைய தலைக்கு நேராக வந்து கையிாைல் ஒரு அடி அடித்து அவனுடைய தலையை உடலிலிருந்து பிரித்து உதக்ரனை தேவி, கல், மரம் முதலானவைகளால் கொன்
றாள். கராளனைக் கடித்தும் இடித்தும் கொன்று தள்ளினாள் – கதையைக் கொண்டு உத்ததனையும், கவண் கொண்டு பாஷ்களனையும், அம்புகளால் தாமிராந்தகர்களையும் பொடியாக்கி விட்டாள். உக்ராஸ்யன் உக்ரவீரியன், மஹாஹனு இவர்களை திரு நேத்திரையான தேவி திரிசூலம் கொண்டு கொன்றாள்.  பிடாலனுடைய தலையை வாளினால் வெட்டி உடலிலிருந்து வீழ்த்தினாள். துர்த்தான்
துர்த்தரன் துர்முகன் இவர்களை அம்புகளினால் யமக்ஷயத்துக்கு அனுப்பினாள். இவ்வாறு தன் சேனை நாசமாவதைப் பார்த்த மஹிஷாஸன் மஹிஷரூபமெடுத்துக் கொண்டு தேவியின் கணங்களைப் பயப்படுத்தி
னான்.

 

(20-30)

 

சில கணங்களை முகத்தால் அடித்தும், வேறு சிலரை குளம்புகளால் இதித்தும், இன்னும் சிலரை வாலினால் அடித்தும், மற்ற சிலரை கொம்புகளினால் பிளந்தும், சிலரை கர்ஜனையாலும் சிலரை பெருமூச்சின் சக்தியாலும் சிலரை தூக்கி ஆகாசத்தில் எறிந்தும் பூமியில் தள்ளினான். தேவியின் பிரமத கணங்களை இவ்வாறு கீழே தன்ளிக் கொன்று கொண்டே அவன் தேவியின் சிங்கத்தைக் கொல்வதற்காக ஒடினான் - அப்பொழுது அம்பிகைக்கு அதிக கோப முண்டாயிற்று. மஹாவீரியமுள்ள அஸுரன் தரையை தன் குளம்புகளால் கிழித்துக் கொண்டு, கொம்புகளால் பெரிய மலைகளின் உச்சிகளைப் பேர்த்து எடுத்து எறிந்து விட்டு கர்ஜித்தான். வேகமாக அவன் சுழற்றும் போது பூமி பொடிப் பொடியாயிற்று. வாலினால் அடிபட்டு கடல் பொங்கிற்று. கொம்புகளால் மேகங்கள் துண்டு துண்டுகளாயின. அவன் வெளிவிடும் காற்றினால் மலைகள் மேலே கிளம்பப் பொடியாகி கீழே வீழ்ந்தன. இப்படி கோபத்தோடு எதிர்த்து வருகின்ற அஸுரனைப் பார்த்து தேவி கயிற்றை றிந்து மஹா தைத்யனைப் பிடித்து கட்டினாள். மஹாயுத்தத்தில் கட்டுப்
பட்ட அவன், மஹிஷ ரூபத்தை விட்டு விட்டு ஒரு
சிம்ஹ ரூபத்தை எடுத்துக்கொண்டான். உடனே அம்பிகை வாள் எடுத்து கழுத்தை வெட்ட ஆரம்பித்தாள். அப்பொழுது அவன் வாளும் கையுமாகவுள்ள ஒரு புருஷனாகக் காணப்பட்டான். உடனே தேவி பாணங்களால் அவனை வாள், சர்மம் இவைகளோடு கூடவே துண்டாக்கி விட்டாள். அப்பொழுது அவன் ஒரு பெரிய யானையாக மாறினான்.


(30-35.)

 

பிறகு, தேவியின் மஹாசிம்ஹத்தை தன் துதிக்கையால் பிடித்து இழுக்கவும்; கர்ஜிக்கவும் செய்தான். தேவி தன் வாளினால் அந்த தும்பிக்கையை முறித்து விட்டாள். உடனே மஹாதைத்யன் மறுபடியும் மஹிஷரூபமெடுத்தான். முன்போல மூன்று லோகங்களிலுள்ள ஸகல சராசரங்சளையும் இளகும்படிச் செய்தான். அப்பொழுது கோபத்தோடு, மூன்று கண்களையும் சிவப்பாக்கிக்கொண்ட தேவியான சண்டிகை விசேஷமான மத்யத்தை பானம் செய்துவிட்டு மறுபடியும் மறுபடியும் சிரித்தாள். பலம் வீரியம் ஆகிய கர்வத்தால் பைத்தியம் பிடித்த அந்த அஸுரன் கர்ஜித்துக் கொண்டு தன் கொம்புகளால் மலைகளை எடுத்து சண்டிகாதேவியின் நேராக எறிந்தான். அவனால் எறியப்பட்ட குன்றுகளை அம்பு எய்து தூளாக்கி சிதறின வார்த்தைகளோடும் மத்ய பானத்தால் துடித்த முகத்தோடும் தேவி அவனைப் பார்த்து சொல்லுகிறாள்.


தேவி சொல்லுவது: - (36)

 

ஹே மூடா! கொஞ்சநேரம் கத்து கர்ஜி. நான் மதுபானம் செய்கின்றேன். பிறகு வெகு சீக்கிரத்தில் நீ என்னால் கொல்லப்பட்டு, இங்கேயே தேவர்கள் கர்ஜிப்பார்கள்.


மஹரிஷி சொல்லுவது: - (36-41)

 

இப்படி கூறிவிட்டு, தேவி அந்த மஹாதைத்யன் மேல் குதித்து தன்கால்களால் அமர்த்திக்கொண்டு, கழுத்தைச் சூலத்தால் குத்தினாள் கால்களால் அமர்த்தப்பட்டு, தேவியின் வீரியத்தால் அசைய முடியாத அவனுடைய முகத்தின் ஒருபாதி வெளியே வந்தது. பாதி வெளியே வந்த அவன் தலையை, தேவி தன் பெரிய வாளினால் வெட்டிக் கீழே தள்ளினாள். பாக்கியுள்ள அஸுரர்கள் ஹா! ஹா! என்று சத்தம் போட்டுக் கொண்டு ஓடி ஒளிந்தார்கள். தேவகணங்கள் மிகவும் சந்தோஷ மடைந்தன. தேவர்கள் மஹரிஷிகளோடு கூட தேவியை ஸ்தோத்திரம் செய்தார்கள். கந்தர்வர்கள் பாட்டு பாடினார்கள். அப்ஸர ஸ்திரீகள் நர்த்தன மாடினார்கள்.

 

இது ஸ்ரீ மார்க்கண்டேய புராணத்தில், தேவி மாஹாத்மியத்தில் (3) மஹிஷாஸுர வதம் என்ற எண்பதாம் அத்தியாயம்.



நான்காவது அத்தியாயம்


(1-25.)

(1) அதிவீரிய வானான அந்த துஷ்டனையும் அஸுரப்படையையும் தேவி கொன்ற பிறகு மிகக் களிப்புடன் புளகாங்கிதரான இந்திராதிகளான தேவர்கள் தலைவணங்கி தேவியை துதித்தார்கள்.

 

(2) தன்னுடைய சக்தியினால் இந்த உலகத்தைச் சிருஷ்டி செய்து, ஜகதாம்பிகையாய், எல்லா தேவமஹரிஷி பூஜ்யையாய், எல்லா தேவர்களுடைய சக்தியோடு கூடின தேவியாகிய உன்னை எங்களுக்கு நன்மையை அளிப்பதற்காக பக்தியோடு கூட நமஸ்கரிக்கின்றோம்.

 

(3) தேவியுடைய மஹா மஹிமையையும், பலத்தையும் குறித்து யாருக்குத்தான் சொல்ல முடியும்! பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களாலும் கூட முடியாது. அந்த சண்டிகாதேவி, இந்த ஜகத்தைக் காப்பாற்றுவதற்கும், அசுபம் உண்டாகும் என்ற பயத்தை இல்லாமல் செய்வதற்கும் கருணை புரியட்டும்.

 

(4) புண்யாத்மாக்களுடைய வீட்டில் நீயே லஷ்மியாகவும், பாபாத்மாக்களுடைய வீட்டில் நீயே அலக்ஷ்மியாகவும், புத்திமான்களுடைய ஹிருதயத்தில் நீயே புத்தியாகவும், சிஷ்டர்களுக்கு நீயே சிரத்தை, நல்லகுலத்தில் பிறந்தவர்களுக்கு நீயே லஜ்ஜை ஆகவும் இருக்கின்றாய். இந்த ஜகத்தைக் காப்பாற்றுக. நாங்கள் உன்னை நமஸ்கரிக்கின்றோம்.

 

(5) சிந்திக்க முடியாததான உன் ரூபத்தையும், அஸுரர்களை நாசம் செய்யக்கூடிய உன் சக்தியையும், யுத்தத்தில் உன்னுடைய சாமர்த்தியங்களையும், எல்லா தேவ, அஸர கணங்களில் எவனால் வர்ணிக்க முடியும்.

 

(6) ஜகத்துக்கு திருகுண ஸ்வரூபமாகவும் பிரம்ம ருத்திர விஷ்ணுக்களாலும் அறிய முடியாதவளாகவும், ஸர்வாசிரயையாயும், இந்த பூமியிலுள்ள எல்லா வஸ்துக்களிலும் இருப்பவளாயும், ஆத்யையாயு முள்ளவள் நீயே.

 

(7) பிதிரு கணங்களெல்லாம் திருப்தி யடைவதற்காக ஜனங்களால் சொல்லப்படுகின்ற ஸ்வதை நீ. தேவர்களெல்லாம் எந்த மகங்களால் திருப்தி யடைவார்களோ அந்த ஸ்வாஹையும் நீயே.

 

(8) பரிசுத்தர்களாகவும் தபோதனர்களாகவும் உள்ள முனிவர்கள், ஜிதேந்திரத்தோடும், அதிதீவ்ர, விரதத்தோடும், அப்யாசித்து வருகின்ற ஐ வரிய பூரண பரமோத்தமயான வித்தையும் நீயே.

 

(9) நீசப்த ஸ்வரூபிணி, விமலமான ரிக், யஜுஸ், ஸங்கீதரம்ய பத பாடத்தோடு கூடின ஸாமம், இவைகளின் இருப்பிடமும் நீயே, உலகத்தோருக்கெல்லாம் கஷ்டத்தைப்போக்கி மங்களத்தைக் கொடுக்கும் வார்த்தையும் நீயே. எஹபகவதி நீ திரிகுணாத்மகமாயு மிருக்கிறாய்.

 

(10) எல்லா நிகமங்களையும் அறிந்த மேதை, ஹே! துர்க்கே! ஸம்சாரக்கடலைத் தாண்டுவதற்கான ஒடம், சேர்க்கையற்றவள், மஹாவிஷ்ணுவின் வக்ஷல தலத்தி லிருக்கும், மஹாலக்ஷ்மி, ஈசுவரனின் அருகில் வீற்றிருக்கும் கௌரி எல்லாம் நீயே,

 

(11) தங்கத்துக்கு சமானமாக ஜ்மலமாக ஜீவலிக்கின்ற பரிபூரண சந்திர பிம்பத்துக்கு துல்யமான உன்னுடைய மந்தஸ்மிதத்தோடு கூடின முகத்தை, மஹிஷாஸுரன் பார்த்து வெகு கஷ்டப்பட்டு பரகதியடைந்தது எவ்வளவு ஆச்சரியம் |

 

(12) ஹே தேவி நீ கோபித்து, புருவத்தை சுளித்துக்கொண்டு பயங்கரமாய் காட்டுகின்ற சந்திரனுக்கு சமானமான ஒளியுள்ள உன்னுடைய முகத்தை பார்த்தவுடனேயே மஹிஷாஸுரன் தன்னுடைய பிராணனை விட்டானே! என்ன ஆச்சரியம்! நீ கோபித்து யமனைப்போலுள்ள பார்வையோடு கூட யிருந்தால் எவன் தான் பிழைத்திருக்கக்கூடும்!

 

(13) ஹே தேவி! நீ பிரஸாதித்தால் பல நன்மைகளைக் கொடுப்பாய்; கோபித்தால் குலநாசத்தை உண்டு பண்ணுவாய்; இப்பொழுது தான் இந்த விஷயம் தெரியவந்தது. தயாராகவந்த மகிஷ ஸைந்யத்தை பூராகவும் உட னேயே ஸம்ஹரித்து விட்டாயே!

 

(14) நீ யாரிடத்தில் கருணை வைக்கின்றனையோ, அவர்கள் தேசத்தின் அதிட திகளாகளாகவும், தனிகராகவும், யசஸ்விகளாகவும், ஆகின்றார்கள்! அவர் களுடைய பந்து வர்க்கங்களுக்கு ஒருநாளும் ஒரு குறைவும் கிடையாது; அவர்கள் தன்யர்களே; அவர்களுடைய வேலையாட்கள், மனைவி, மக்கள் எவ்லாரும் விநீதர்களே. அவர்களுக்கு க்ஷேமமும் உண்டாகும்.

 

(15) ஹே தேவி!    பிரஸாதையானால், ஜனங்கள் நல்லொழுக்க முள்ளவர்களாகி, தர்மமான வழியே சென்று ஸ்வதர்ம நிரதராகி முடிவில் ஸ்வர்க்கத்தையே அடைகிறார்கள். மூன்று லோகங்களிலும் நீயே நற்கதியை கொடுப்பவள்.

 

(16) ஹே துர்க்கே! அவர்களுக்கு ஸ்மிருதி பயம் என்பது எது? ஸ்வஸ்தர்கள் ஸ்மரித்தால், நன்மதியைக் கொடுக்கின்றாய். நீயே தாரித்திரியதுக்க பயஹாரிணி; வேறு யாருக்கு, ஸர்வோபகாரம் என்ற விஷயத்தில் இவ்வளவு கருணை யுண்டாகும்.

 

(17) லோக க்ஷேமார்த்தமாக, ஹே தேவி இவர்களைக் கொன்றாய்! அப்படி நீ செய்யாத பக்ஷம் இவர்கள் வெகுகாலம் நரகத்தில் கிடக்க வேண்டியதான பாபங்களை இன்னும் செய்து கொண்டே யிருப்பார்கள். இவர்கள் வெகுகாலம் நரகத்தில் நடக்க வேண்டியதான பாபங்களை இன்னும் செய்து கொண்டே யிருப்பார்கள். இவர்கள் யுத்தத்தில் மரணத்தை யடைந்து ஸ்வர்க்கத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்தால் தான் இந்த சத்துருக்களை நீ கொன்றிருக்க வேண்டும். நிச்சயம்.

(18) உன்னுடைய பார்வையாலேயே உனக்கு அஸுரர்களை பஸ்மமாக்க முடியும். என்றாலும், சத்துருக்களின்மீது நீ அஸ்திரப் பிரயோகம் செய்கின்றாய். சத்துருக்களும் அஸ்திர விசுத்தராக நல்ல லோகங்களை அடைய வேண்டியது என்ற நல்ல எண்ணத்தை சத்துருக்களிடத்திலும் நீ வைத்திருக்கிறாய்.

 

(19) அஸுரர்களுக்கு உன்னுடைய வாளின் ஒளியாகின்ற மின்னலாலும், அதி உக்ரமான சூலத்தின் முனையினுடைய பிரகாசக் கூட்டத்தாலும், கண் போகாதது ஏனென்றால் பிரகாசிக்கின்ற சந்திரகலையை யொத்த உன் திரு முகத்தை அவர்கள் கண்டதேயாகும்.

 

(20) ஹே தேவி! கெட்டவர்களை அழிப்பதே உன்னுடைய ஸ்வபாவம். ஸமானமில்லாத உன் உருவம் சிந்திக்க முடியாதது. அஸுரர்களைக் கொல்வதற்குள்ள சக்தி வாய்ந்தது. அப்படியானாலும், இப்படிப்பட்ட தயவு சத்துருக்களிடத்திலும் நீ காண்பித்திருக்கிறாய்.

 

(21) ஹே தேவி! திரைலோக்யவாதே! இப்பேர்ப்பட்ட உன் பராக்கிரம குணத்திற்கு ஸமானம் எங்கே யிருக்கிறது? இப்பேர்ப்பட்ட சத்துருக்களுக்கு பயத்தைக் கொடுக்கக்கூடிய ரூபம் எங்கே யிருக்கிறது? உன்னிடத்தில்தான் யுத்த விஷயத்தில் காடின்யம், அந்தரங்கத்தின் காருண்யம் என்ற இரு குணங்களும் காணப்படுகின்றன.

 

(22) சத்துரு சம்ஹாரத்தால் இந்த திரி புவனங்களையும் ரக்ஷித்தாய். சாத்துருக்களையும் யுத்தத்தில் வதம் செய்து ஸ்வர்க்கத்துக்கு அனுப்பினாய். மஹா மதம்பிடித்த அஸுரர்களிடத்தி லிருந்து எங்களுக்கு உண்டான பயத்தையும் நீக்கினாய். ஹே தேவி உனக்கு நமஸ்காரம்.

 

(23) ஹே தேவி! எங்களை உன் சூலத்தாலும், வாளினாலும், உன் மணிநாதத்தாலும், வில் நாதத்தாலும் காப்பாற்றுக.

 

(24) ஹே சண்டிகே! ஹே ஈசுவரி! நீ உன் சூலத்தை சுற்றிக்கொண்டு என்னுடைய கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய நான்கு பக்கங்களிலும் இருந்து கொண்டு என்னைக் காப்பாற்றுக.

 

(25) அதிகப் பிரஸன்னங்களாகவும், அதிக கோரங்களாவும், இந்த மூவுலகிலும் இருக்கின்ற உன் மூர்த்திகளைக்கொண்டு எங்களைக் காப்பாற்றுக.

 

(26) பல்லவத்தைக் காட்டிலும் மிருதுவான உன் கைகளிலிருக்கின்ற வாள், சூலம், கதை முதலிய அழகான சஸ்திரங்களைக் கொண்டு, ஹே அம்பிகே! நீ எங்களைக் காப்பாயாக.



 

 

மஹரிஷி சொல்வது: - (27-28)

 

இவ்வாறு துதி செய்து, தேவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து, நந்தனவனத்திலிருந்து கொண்டுவரப்பட்ட திவ்ய புஷ்பங்களாலும், சந்தனங்களாலும் தேவியைப் பூஜித்தார்கள். எல்லா தேவர்களாலும் பக்தியுடனும், திவ்ய தூபங்கள் முதலியவைகளாலும் பூஜிக்கப்பட்ட ஜகன்மாதா, பிரஸாதமுள்ள முகத்தோடுகூட, வணங்கிக் கொண்டு நிற்கின்ற தேவர்களுடன் சொன்னாள்.


தேவி சொல்வது: - (29)

 

ஹே தேவர்களே! உங்களுக்கு வேண்டிய வரங்களை என்னிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள்.


தேவர்கள் சொல்லுவது: - (30-32)

 

எல்லாம் தாங்களே செய்து முடித்து விட்டீர்கள். இனி ஒன்றுமே பாக்கியில்லை. எங்கள் சத்துருவான மஹிஷாஸுரனை யும் கொன்று விட்டீர்கள். ஹே மஹேசுவரி! எங்களுக்கு வரம் கொடுப்பதாக இருந்தால், நாங்கள் ஸ்மரித்த மாத்திரத்திலேயே எங்களுடைய பெரிய ஆபத்துக்களை யெல்லாம் நசிப்பிப்பாயாக. ஹே பிரஸன்னையான அம்பிகே! நீ எங்களை அனுக்கிரகிக்கும்பக்ஷம், இந்த ஸ்தலங்களைக் கொண்டு உன்னை எவன் ஸ்துதி செய்கிறானோ அவனுக்கு எப்பொழுதும் ஸர்வ ஸம்பத்தும், தனம், புத்திரமித்திர களத்திராதிவைபவங்களும் உண்டாகும்படி அனுக்கிரகிக்க வேண்டும்.


மஹரிஷி சொல்லுவது: - (33 - 36)

 

ஹே ராஜாவே! இப்படி லோகலோக க்ஷேமத்திற்காகவும், தங்களுக்காக வம் தேவர்களால் பிரஸாதிக்கப்பட்ட பத்ரகாளி, 'அப்படியே யாகட்டும்' கூறிவிட்டு அந்தரத்தானமானாள். இப்படி அந்த தேவி மூன்று லோகங்களுக்கும் நன்மைக்காக தேவர்களின் சரீரத்திலிருந்து அவதரித்த விதத்தை நான் சொன்னேன். திரும்பவும் தேவோபகாரிணியான அந்த தேவி, துஷ்ட அசுரர்களான ஸும்; நிஸும்பர்களைக் கொன்று லோகத்தை ரக்ஷிப்பதற்காக கௌரியின் தேஹத்திலிருந்து அவதரித்தாள். அதையும் நான் உங்களுக்குச் சொல்லுகின்றேன். அதை சரியாகக் கேட்பீராக.

 

இது ஸ்ரீ மார்க்கண்டேய புராணத்தில் தேவி மஹாத்மியத்தில் (4) சக்ரா (இந்திரா)தி ஸ்துதி என்ற எண்பத்தொன்றாம் அத்தியாயம்.

 

 

 

 

 

 

ஐந்தாவது அத்தியாயம்.


(1-40)

 

முன்னொரு காலத்தில் ஸம்பன், நிஸம்பன் என்ற இரண்டு அசுரர்கள் தங்கள் பலத்தால் மதம் பிடித்தவராக தேவேந்திர னிடமிருந்து யக்ஞ பாகங்களையும் மூவுலக ஆட்சியையும் கவர்ந்து கொண்டார்கள். அவர்கள், சூரிய சந்திரர்க ளுடையவும், குபேரனுடையவும், யமனுடையவும், வருணனுடையவும் வேலைகளையும் தாங்களே செய்ய ஆரம்பித்து விட்டார்கள். வாயுவினுடையவும் அக்னியினுடையவும் வியாபாரங்களையும் அவரே செய்து வந்தார்கள். மற்ற எல்லா தேவர்களுடைய அதிகாரங்களையும் அவர்களே நடத்தினார்கள். இந்தப் பிரகாரம் அசுரர்களால் அதிகரங்கள் கைப்பற்றப்பட்டு தோற்கடிக்கப்பட்டு, இராஜ்யத்தை விட்டு வெளியேறின தேவர்கள் எல்லோரும் அபராஜிதயான அந்த தேவியை ஸ்மரணம் செய்தார்கள். "ஆபத்துக் காலத்தில் என்னை ஸ்மரித்தால் உடனே நான் உங்களுடைய ஆபத்துக்களை யெல்லாம் தீர்த்து விடுகிறேன் என்று எங்களுக்கு முன் வரம் கொடுத்தாயே'' என்று நினைத்து தேவர்கள் ஹிமாலய மலையை அடைந்து அங்கே யிருக்கும் விஷ்ணு மாயையான தேவியை துதிக்க ஆரம்பித்தார்கள்.

 

(இவர்கள் செய்த ஸ்தோத்திரம் முப்பத்து மூன்று சுலோகங்களைக் கொண்டதாய் “ தேவி ஸூக்தம் " என்ற பெயரோடு விளங்குகின்றது. இவைகளைத் தினமும் பாராயணம் செய்தால் 33 கோடி தேவர்களையும் அவர்களுக்கு அதீதரான மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, ருத்திரர்களையும் அவர்களுடைய சக்திகளான ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி இவர்களையும், இவர்களுக்கு அதீதமாக இருக்கும் விஷ்ணு மாயையான விராட் புருஷனையும் ஸ்தோத்திரம் செய்த பலன் கிடைக்கும். இந்த ஸ்தோத்திரம் தேவிக்கும்,
மிகப் பிரியமானவையே. ஆகையால் பக்தர்கள் இவைகளைப் பாராயணம் செய்து தங்கள் கஷ்டங்களையும் அரிஷ்டங்களையும் தீர்த்துக் கொண்டு பகவதியின் அருள் பெறுவார்களாக)


மஹரிஷி சொல்வது: - (41-57)

 

ஹே ராஜ புத்திரா! இந்தப் பிரகாரம் தேவர்கள் ஸ்தோத்திரம் செய்து கொண்டிருந்த பொழுது பார்வதி கங்கா ஸ்நானம் செய்வதற்காகப் புறப்பட்டாள். அவள் தேவர்களோடு சொன்னதாவது, ''நீங்கள் இவ்விடத்தில் யாரைக் குறித்து துதிக்கிறீர்கள்?'' அதே சமயத்தில் பார்வதியினுடைய தேஹகோசத்திலிருந்து ஒரு தேவி வெளியே வர்து நின்று பதில் சொன்னதாவது, ''ஸும்பன், நிஸும்பன் என்ற இரண்டு அஸுரர்களால் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டு வந்திருக்கும் இந்த தேவர்கள் எல்லாரும் என்னைக் குறித்து ஸ்துதி செய்கின்றனர்.'' பார்வதியின் தேஹ கோசத்திலிருந்து வெளி வந்தவளான அம்பிகையை எல்லாரும் கௌசிகீ என்று அழைத்து வருகின்றனர். கௌசிக வெளியேறினதும் பார்வதியின் தேகம் கருப்பு நிறமாக மாறி விட்டது. ஆகையால் காளி (கருப்பு நிறமுடையவள்) என்ற பெயருடன் ஹிமவான் பர்வதத்துக்குப் போய் வசித்து வந்தாள். பிறகு அதி மனோஹரமான ஒரு ரூபத்தோடு கூட இருக்கின்ற கௌசிகீ என் அம்பிகையை ஸும்ப நிஸும்பர்களுடைய தூதர்களான சண்டன், முன்டன் என்ற இருவர்கள் பார்த்தார்கள். அவர்கள் உடனே ஸம்பனிடம் சென்று "மஹாராஜாவே! அதி மனோஹா தேக காந்தியோடு கூடி ஒரு ஸ்திரீ ஹிமாலய பர்வதத்தை ஜ்வலிக்கும்படிச் செய்து கொண்டிருக்கிறாள். அவ்வளவு அதி ஸௌந்தரியமுல்ள ஒரு உருவம் ஒருவரும் ஓரிடத்திலும் பார்த்திருக்க மாட்டார்கள். அஸுரேச்வரா! அந்த அம்பிகையை யார் என்று விசாரித்து தாங்கள் சம்பாதிக்க வேண்டும். அந்த ஸ்திரீ ரத்னம் தன் தேஜஸ் வனால் அஷ்டதிக்குகளையும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறாள். ஹே தைத்யேந்திரா; தாங்கள் அந்த ஸுந்தரியைப் பார்க்க வேண்டும். ஹே ஸ்வாமி! இந்த மூன்று உலகங்களிலுமுள்ள கஜ, அச்வம் முதலான சகல ரத்னங்களும், மணிகளும், எல்லாம் இப்பொழுது தங்களுடைய அரண்மனையிலிருக்கன்றன. ஐராவதம் என்ற கஜரத்னத்தையும், உச்சைச்சிரவஸ் என்ற அச்வரத்னத்தையும் தாங்கள் தேவேந்திரனிடமிருந்து கொண்டு வந்தீர்கள். பிரம்மாவினிட மிருந்து கொண்டு வரப்பட்ட அதி அற்புதமான ஹம் விமானம் இதோ இருக்கிறது; முற்றத்தி லிருக்கின்றது. குபேரனிடமிருந்து கொண்டு வரப்பட்ட மஹா பத்மம் என்ற நிதி இதோ இருக்கின்றது. சமுத்திரம் தண்டோடு கூடின வாடரத் தாமரை மாலையை தங்களுக்குக் கொடுத்தது. வருணனுடைய பொன் பிடியோடு கூடின வெண்குடை தங்கள் அரண்மனையிலிருக்கின்றது. பிரஜாபதியுடைய ரதம் தங்களிடமிருக்கின்றது பிரபோ! யமனுடைய மரணத்தை உண்டாக்குகின்ற உத்கிராந்தித என்ற சக்தி (வேல்) தங்களிடமிருக்கின்றது. வருணனுடைய பாசக்கயிறும், சமுத்திரத்திலிருந்த பூராரத்தினங்களும் தங்கள் சகோதரனான நிஸும்பனிடமிருக்கிறது. அக்னி சௌசங்கள் என்ற வஸ்திரங்களை அக்னி பகவான் தங்களுக்குக் கொடுத்திருக்கிறார். ஹே தைதயேந்திர! இப்படி எல்லாவித ரத்னங்களும் தங்கள் ஆதீனத்திலருக்கின்றன. ஆகையால் ஸ்திரீரத்னமான இந்த ஸுந்தரியையும் தாங்கள் வசப்படுத்தாம லிருப்பது ஏன்?" வணக்கத்தோடு கூட கூறினார்கள்.


மஹரிஷி சொல்வது: - (58)

 

இப்படி சண்ட முண்டர்கள் சொன்னதைக் கேட்ட அந்த ஸும்ப மஹாசுரன், ஸுக்ரீவன் என்ற தூதனை, தேவியிடம் அனுப்பினான்.


ஸும்பன் சொல்வது: - (59-60)

 

'நீ போய், நான் சொன்னதாக இந்தப் பிரகாரம் அவளிடம் சொல்ல வேண்டியது.
சந்தோஷித்து இவ்விடத்துக்கு வரும் விதமாக கூடிய சீக்கிரம் நீ செய்ய வேண்டும்'. அவன் அதி சோபனமான அந்தப் பர்வ தப் பிரதேசத்திற்குப் போய், அந்த தேவியோடு இனிமையான வாக்குகளால் சொன்னான்.


தூதன் சொல்வது: - (61-69)

 

'தேவி! மூன்று லோகங்களுக்கும் ஏகநாதனான ஸம்பாஸுரேந்திரன் என்னைத் தங்களிடம் தூதனாக அனுப்பி யிருக்கிறான் எந்த தேவர்களிடத்திலும் எவனுடைய ஆக்ஞைக்கு தடை கிடைய, தோ, எல்லா அஸுரர்களையும் எவன் தன் வசத்தி லிருக்கும்படி ஆக்ஞாபித்திருக்கிறானோ, அந்த ஸம்பாஸுரன் சொல்வதைக் கேள். ''மூவுலகமும் என்னுடையதே. தேவர்களும் என் வசத்திலுள்ளவர்களே எல்லா யக்ஞபாகங்களையும் நானே தனித்தனியாக அனுபவித்து வருகின்றேன். முவ்வுலகங்களி லிருக்கும் முக்கியமான எல்லா ரத்தினங்களையம் நானே வைத்திருக்கின்றேன். தேவேந்திரனுடைய வாஹனமாயிருந்த கஜரத்னத்தை நான் கொண்டு வந்து விட்டேன். பரல் கடலிலிருந்து வெளிவந்த உச்சைச்சிரவஸ் என்ற அசுவரத்தினத்தை தேவர்கள் எனக்காக பிரமாணம் செய்து கொடுத்தார்கள். தேவ ஸுந்தரீ! தேவர்கள், கர்தர்வர்கள், நாகர்கள் என்ற சாதியாருடைய வசத்திலிருந்த ரத்னங்களான மற்ற எல்லா வஸ்துக்களும் என் வசதிதில்தான் இருக்கின்றன. ஹே தேவி! நீ இவ் வுலகத்திலுள்ள ஸ்திரீரத்னம் என்று நான் நினைக் நேன். ஆகையால் நீ என் பக்கத்திற்கு வர்து விடு, நான் தானே எல்லா ரத்னங்களையும் அனுபவித்து வருகின்றேன். ஹே ஸுர்தரரங்கீ நீ ஒரு ரத்னமாகவே யிருக்கின்றாய். ஆகையால் நீ என்னையாவது என் தம்பி மஹாபராக்ரம முள்ள நிளம்பனையாவது வந்து சேர்வாயாக! என்னைச் சேர்ந்தால் நிஸ்துல்யமான பரம ஐசுவரியத்தை அடைய முடியும். நீ உன் புத்தியால் நன்றாக ஆலோசித்து என்னையே வரித்துக்கொள்ளவும்.


மஹரிஷி சொல்வது: - (70-74)

 

இதைக் கேட்ட அந்த கம்பீரையான தேவி, இவ்வுலகத்தைக் காக்கின்ற பத்திரையான துர்க்கா பகவதி தன்னுள்ளிலேயே மந்தஹாசம் செய்து கொண்டு சொன்னதாவது, தாங்கள் சொன்னவைகளெல்லாம் சரியே! ஒன்று கூட பொய் கிடையாது. மூன்று லோகங்களுக்கும் நாயகன் ஸும்பாஸுரனே. அவ்வாறே தான் நிஸும்பனும். ஆனால் இது விஷயமாக ஒரு பிரதிக்ஞை செய்து விட்டேனே. அதை எப்படிக் கைவிடுவது? நான் புத்திஹீனத்தால் முன்னாடியே செய்து விட்ட பிரதிக்ஞை இதுவே. கேட்பாயாக. எவன் என்னை யுத்தத்தில் ஜபிப்பானோ, எவன் என்னுடைய கர்வத்தை அடக்குவானோ, எவன் இவ்வுலகில் என் சத்துருவாக இருந்து யுத்தம் செய்வானோ அவனே என் பர்த்தா. அதனால் அஸுரேந்திரனான ஸும்பனோ, நிஸம்பனோ இவ்விடத்துக்கு வரவேண்டும். ஏன் தாமதம்? வேகத்தில் என்னை ஜயித்து என் பாணியை கிரகித்துக் கொள்ள ஆக்ஷேபணையில்லை''


தூதன் சொல்வது: - (75-78)

 

“அம்மா, நீ ஒரு கர்வம் உள்ளவளே. எனிடம் இப்படிக் கூறாதே. இந்த மூவுலகிலும் எந்த புமான் ஸுப நிஸும்பர்களை எதிர்க்க வல்லவன்? ஹே தேவீ! மற்ற தைத்தியர்களோ தேவர்களோ யுத்தத்தில் அவர்களை எதிர்த்து நிற்க முடியாதே. அப்படி யிருக்க ஒரு ஸ்திரீயான நீ தனிமையில் எப்படி அவர்களை எதிர்க்க முடியும்? ஆகையால் அம்மா! நான் சொல்லிய பிரகாரம் ஸும்ப, நிஸும்பர்களுடைய சமீபம் செல்லவும். சிரோருஹத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு போகிறதால் உண்டாகக் கூடிய அவமானத்திற்கு ஆளாகாதே,''


ஸ்ரீ தேவி சொல்வது: - (79-80)

 

‘சரிதான், ஸம்பனும் நிம்பனும் மஹா வீரிய பலவான்கள் தான். ஆனால் நான் என்ன செய்வது? முன் ஆலோசனையின்றி ஒரு பிரதிக்ஜை செய்து விட்டேனே. ஆகையால் நீ போய் நான் சொன்ன இந்த விஷயங்களை யெல்லாம் விவரமாக அஸுர அரசனிடம் சொல்லவும். அவர் உசிதம் போல செய்து கொள்ளட்டும்’ – இது ஸ்ரீ மார்க்கண்டேய புராணத்தில் தேவீ மஹாத்மியத்தில் (5) தேவீ தூத சம்வாதம் என்ற எண்பத்திரண்டாம் அத்தியாயம்,

 

ஆறாவது அத்தியாயம்.


மஹரிஷி சொல்வது: - (1-4)

 

இவ்வாறு தேவி சொன்னதைக் கேட்ட தூதன் அதிகக் கோபத்தோடு கூட தைத்ய ராஜனிடம் சென்று விவரமாக நடந்தவைகளை யெல்லாம் தெரிவித்தான். தூதனுடைய வார்த்தைகளைக் கேட்டு குபிதனான அஸுரராஜன் தூமிரலோசனன் என்ற தைத்ய நாயகனோடு சொன்னதாவது, "ஹே தூம்ரலோசனா! சீ வேகமாக உன் சைன்யத்தோடு கூடச் சென்று அந்த துஷ்டையை சிரோருஹத்தைப் பிடித்து இழுத்து இங்கே கொண்டுவா- அவளைக் காப்பாற்றுவதற்கு தேவரோ, யக்ஷர்களோ, கந்தர்வர்களோ, இன்னும் யார் வந்தாலும் சரி, அவர்களை யெல்லாம் கொன்று விடு''


மஹரிஷி சொல்லியது: - (5-7)

 

ஸம்பாஸுரனால் அனுப்பப்பட்டு அந்த தூம்ரலோசனன் அறுபதினாயிரம் அஸுரர்களோடு கூட அதிக வேகமாகப் புறப்பட்டான். அவன் ஹிமாலய பர்வதத்திலிருக்கின்ற தேவியைப் பார்த்து பெருங் குரலில் சொன்னதாவது- 'நீ ஸும்ப நிஸும்பருடைய சமீபத்துக்குச் செல்வாயாக. நீ தானாகவே என் யஜமானனுடைய சமீபத்துக்குப் போகாத பக்ஷம் நான் உன் கேசத்தைப் பிடித்து இழுத்து அவமானப் படுத்திக் கொண்டு போய் விடுவேன்"


ஸ்ரீ தேவி சொல்லியது: - (8)

 

அஸுரராஜா வினால் ஆக்ஞாபிக்கப்பட்டவனும், சேனையோடுனும், பலவானும் ஆகிய நீ என்னை இவ்விடம் இழுத்துக் கொண்டு போகும்பக்ஷத்தில், அதற்கு நான் என்ன செய்வது?


மஹரிஷி சொல்வது: - (9-20)

 

இதைக் கேட்டதும், அந்த தூமிரலோசனன் தேவியின் நேராக வேகமாக ஓடினான். அம்பிகையோ, அவனை ஹும் என்ற சப்தத்தால் சாம்பலாக்கி விட்டாள். இதைக் கண்டு கொண்டிருந்த அஸுரப் படையின் மீது தேவி கூரான அம்புகளையும், வேல்களையும், வெண் மழுக்களையும் கொண்டு வர்ஷித்தாள். தேவியுடைய வாபாஹனமான ஹிம்ஹமும், கேஸரங்களை (பிடரி ரோமத்தை) உயர்த்திக் கொண்டு அதி கோரமாக கர்ஜித்துக் கொண்டு அஸரப் படையின் மீது விழுந்து, பல அஸுர சிரேஷ்டர்களை கையினால் அடித்தும், மற்ற சிலரைக் கடித்தும், வேறு சிலரை, கால் கொண்டு மிதித்தும் கொன்று விட்டது. சிலருடைய உதரத்தை வயிற்றை) தன் நகநகங்களால் கீறிற்று; உள்ளங் கைகளால் அடித்து சிலருடைய! சிரஸ்ஸை வேறாக்கிற்று. வேறு சிலருடைய கைகளையும் தலைகளையம் முறித்தது. கேஸாத்தை தூக்கிக் கொண்டு வேறு சிலருடைய வயிற்றிலிருந்து இரத்தத்தைக் குடித்தது. வெகு சீக்கிரத்தில் தேவியின் வாஹனமான அந்த மஹாகேஸரி அதி கோபத்தோடு கூட அந்த ஸைன்யத்தைப் பூராவும் கொன்று விட்டது - அந்த தூமிரலோசனனை தேவி கொன்றதும், ஸைன்யத்தைப் பூராவும் தேவியின் வாஹனமான ஸிம்ஹம் கொன்று விட்டதும் கேள்விப்பட்ட அஸுரராஜனான ஸும் உதடு துடிக்க கோபத்துடன் பரிமித்துக் கொண்டு அண்டன், முண்டன் என்ற அஸுர முக்யர்களை அழைத்துச் சொன்னதாவது, "ஹே சண்ட! ஹே முண்ட! நீங்கள் பெரிய சேனையோடு கூட அங்கே போய் அவளை வெகு வேகத்தில் கேசத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டோ, கட்டிக் கொண்டோ கொண்டு வாருங்கள். யுத்தத்தில் சந்தேஹம் ஏற்படும் பக்ஷம், அஸுரர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து எல்லா ஆயுதங்களையும் பிரயோகித்து அவளைக் கொல்லவும் செய்யுங்கள். அந்த துஷ்டையை கொன்று விட்டு சிம்பத்தைக் கொன்று கீழே எறிந்து விட்டு வெகு வேகத்தில் திரும்பி வந்து விடுங்கள். அல்லது அந்த அம்பிகையைப் பிடித்துக் கட்டிக் கொண்டு வாருங்கள்” என்று ஸ்ரீ மார்க்கண்டேய புராணத்தில் தேவீ மஹாத்மியத்தில் (6) தூமிரலோசன வதம் என்ற எண்பத்தி மூன்றாம் அத்தியாயம்.


ஏழாவது அத்தியாயம்.


மஹரிஷி சொல்லியது: - (1-24)

 

அவன் உத்தரவு பிரகாரம் அனுப்பப்பட்ட சண்ட முண்டா ஸுரர்கள் சதுரங்கப் படையோடு கூட ஆயுத ஸ்ஹிதராகப் புறப்பட்டார்கள். ஸ்வர்ணமயமான அந்த பெரிய மலைச் சிகரத்தின் மேல் சிங்கத்தின் மீதிருந்து மந்தஹாஸம் செய்து கொண்டிருக்கின்ற தேவியை அவர்கள் கண்டார்கள் - தேவியைப் பார்த்ததும் உடனே அவளை ஓடிப் போய் பிடிக்க அவர்கள் தயாரானார்கள். சிலர் நாணேற்றின வில்லோடும், வாளோடும் தேவியின் சமீபத்துக்குச் சென்றனர். அப்பொழுது அம்பிகை அந்த சத்ருக்களிடம் தேவிக்கு அதிக கோபம் உண் கோபத்தினால் தேவியினுடைய முகம் கருப்பு நிறமாயிற்று. உடனே வளைந்த புருவத்தோடு கூடின தேவியின் நெற்றியிலிருந்து கராளவதனையான காளி வாளும் கயிறும் கையில் தரித்துக் கொண்டு வெளியேறினாள். விசித்திரமான கட்வாங்கத்தைத் தரித்து, முண்டமாலையை அணிந்து, புலித் தோல் உடுத்து, தேஹத்தில் மாமிசமே யில்லாமல் அதிகோரமாக யிருக்கின்ற அந்த காளி, பெரியதாக வாயைப் பிளந்து கொண்டும், நாக்கை வெளியில் விட்டு நீட்டிக் கொண்டும், கண்கள் குழிக்குள் ளிருக்கும் படிக்கும், அஷ்டதிக்குகளை தன் தொனியால் அட்டஹாஸஞ் செய்துக்கொண்டும், அந்த தைத்யப் படையின் மீது குதித்துச் சென்றாள். அஸரர்களை அடித்துக் கீழே தள்ளிக் கொண்டே அந்த சைன்யத்திற்கு தீங்கைச் செய்தாள். யானைகளைப் பாகன்களோடும், அங்குசதாரிகளோடும், சைன்யத்தோடும், மணிகளோடும், தன் ஒரு கை கொண்டு அடித்துத் தன் வாய்க்குள் தள்ளி விட்டாள். அப்படியே குதிரையோடு கூட குதிரைப் படையையும், ஸுதனோடு கூட தேர் படையையும் தன் வாய்க்குள் தள்ளி பற்களால் அதி
பயங்கரமாக கடித்துத் தின்றாள். ஒருவனுடைய தலையையும், மற்றொருவனுடைய கழுத்தையும் பிடித்தாள். வேறொருவனைக் கால் கொண்டு மிதித்தும், வேறொருவனை நெஞ்சினால் அடித்தும் தொலைத்தாள். அந்த அஸரர்கள் விட்ட ஆயுதங்களையும் மஹா அஸ்திரங்களையும் எல்லாம் வாயினால் பிடித்து கோபத்தோடு கூட கடித்துத் தொலைத்து விட்டாள். பலிஷ்டர்களான துஷ்டதைத்யருடைய அந்த சைன்யத்தை எல்லாம் மர்த்தித்தாள். மற்ற சிலரை பிரஹரித்தாள். சில அஸுரர்கள் யுத்தத்தில் வாளால் வெட்டுண்டும் சிலர் கட்வாங்கத்தால் அடிபட்டும் சிலர் பற்களால் கடிபட்டும் இறந்தார்கள்.

 

வெகு சீக்கிரமாக தன்னுடைய பெரிய சைன்யத்தைப் பூராவும் தேவிகொன்று விட்டதைப் பார்த்த சண்டாஸுரன் அதிகோரமான காளி பிருக்கும் இடத்தை நோக்கி வேகமாக ஓடினான். பீமாக்ஷியான அந்த காளியை சண்ட மஹாஸுரன் அதிகோரமான சரவர்ஷங்களாலும் அனேக சக்ரங்களைக் கொண்டும் மூடி விட்டான். அந்த பல சக்ரங்கள் தேவியின் வதனத்திற்குள் சென்று விட்டன. உடனே காளிகா தேவி அதிக கோபத்தோடு கூட தன் பெரிய வாய்க் குள்ளிருக்கும் பற்கள் பிரகாசிக்கும்படி ஒரு பயங்கரமான சப்தத்தோடு சிரித்தாள். பிறகு மஹா சிம்மத்தின் மீது ஏறி சண்டனைப் பார்த்துச் சென்றாள். அவனுடைய கேசங்களைப் பிடித்துக் கொண்டு தன் வாளினால் அவனுடைய கழுத்தை வெட்டினாள். தலை வெட்டுண்ட உடன் தைத்யன் அதிகோரமான ஒரு பெரிய சப்தத்தை உண்டாக்கினான். அந்த சப்தம் மூன்று உலகங்களையும் நடுங்கச் செய்தது. சண்டனை தேவி கொன்றதைப் பார்த்த முண்டன் காளி கைக்கு நேராக ஓடினான். அவனை காளி வெகு கோபத்தோடு கூட தன் கட்வாங்கத்தைக் கொண்டு அடித்துத் தரையில் தள்ளினாள். அதி வீரிய சாலிகளான சண்டமுண்டர்களை தேவி கொன்று விட்டதைப் பார்த்த அவர்களுடைய மீதி சைன்யம் பயந்து நாலா பக்கங்களிலும் வேகமாக ஓடின. சண்ட முண்டாசுரர்களுடைய தலைகளை கையில் பக் கொண்டு தேவி அட்டஹாஸம் செய்து கொண்டு சண்டிகையிடம் சென்று சொன்னதாவது. "இதோ யுத்த யக்ஞத்தில் மஹா பசுக்களான சண்டமுண்டர்களைத் தங்களுக்கு முன் கொண்டு வந்து வைத்திருக்கின்றேன். ஸும்ப நிஸும்பர்களைக் கொல்ல வேண்டிய பாரம் தாங்களே எடுத் துக் கொள்ள வேண்டும்.''


மஹரிஷி சொன்னதாவது (25)

 

சண்டமுண்டர்களான மஹா தைத்யர்களைக் கொன்று தேவி வந்ததைப் பார்த்த சண்டிகை, மிகக் கனிவாக காளியோடு சொன்னதாவது.


தேவீ சொல்வது (26)

 

சண்டனையும், முண்டனையும் கொண்டு வந்ததனால் நீ லோகத்தில் சாமுண்டா தேவி என்ற பிரசித்த நாமமுள்ளவளாக நீ யிருப்பாய்." என்று ஸ்ரீ மார்க்கண்டேய புராணத்தில் தேவி மஹாத்மியத்தில் (7) சண்டமுண்ட வதம் என்ற எண்பத்து நான்காவது அத்தியாயம்.



 

 

 

எட்டாவது அத்தியாயம்.


மஹரிஷி சொல்வது: - (1-54)

 

சண்டன், முண்டன் இவர்கள் கொல்லப் பட்டதையும், சைன்யத்தின் பெரும் பாகம் நாச மடைந்ததையும் அறிந்த அஸுர ராஜாவான ஸும்பன் கோபத்தால் மதி மயங்கி, தைத்ய ஸைன்யங்களைப் பூராவும் ஒன்று சேர்த்துத் தயாரிக்க உத்தரவு கொடுத்தான். “இப்பொழுது எண்பத்தாறு தைத்யர்கள் எல்லா ஸைன்யத்தோடும், எல்லா ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு புறப்படட்டும். எண்பத்தி நான்கு கம்புக்களும், தங்களுடைய ஸைன்யத்தோடு கூட புறப்படட்டும். கோடி வீர்யர்கள் என்ற பிரிவினருடைய ஐம்பது வர்க்கமும், தூமிரரருடைப் நூறு வர்க்கமும் என் உத்தரவுப் பிரகாரம் புறப்படட்டும். காலகர், தெளர்ஹிருதர், மௌரியர், காலகேயர் என்ற அஸுரர்களும் என் உத்தரவுப்படி யுத்தத்திற்கு தயாராக சீக்கிரம் புறப்படட்டும்.' இப்படி உத்தரவு கொடுத்து விட்டு உக்கிர சாஸனனான ஸும்பாஸரேந்திரன் அனேகாயிரம் பெரும் படைகள் சூழப்புறப்பட்டான். இந்த அதிபயங்கரமான ஸைன்யம் வருவதைப் பார்த்து சண்டிகா தேவி, நாண் சப்தத்தினால் பூமி. ஆகாயம், பாதாளம் ஆகிய இவைகளை நிறைத்தாள். ஹே ராஜாவே! அந்த சிங்கமும் அதிக கம்பீரமாக கர்ஜித்தது. அந்த சப்தத்தை தேவி, மணியினுடைய நாதத்தினால் அதிகப்படுத்தினாள். வில் நாணினுடையவும், மணி யோசையினுடையவும் திக்கு நிறைந்த சப்தத்தை வாய் பிளந்து கொண்டிருக்கின்ற காளிகாதேவி பயங்கர நாதங்களால் ஜயித்தாள். இந்த சப்தத்தைக் கேட்ட அஸுரப்படை தேவியையும், ஸிம்ஹத்தையும் அம்புகளைப் பிரயோகித்தும் கொண்டே நாற்புறமும் வளைத்தது. ஹே ராஜாவே! அப்பொழுது, அஸுர நாசத்திற்காகவும், தேவர்களின் க்ஷேமத்திற்காகவும், அதிக வீரிய பலமுள்ள சக்திகளை, பிரம்மா, விஷ்ணு,
மஹேசுவரன், இந்திரன் இவர்களின் சரீரங்களிலிருந்து தங்கள் தங்கள் வடிவங்களோடு கூட சண்டிகாதேவியை அடைந்தன. ஒவ்வொரு தேவனுடைய சக்தியும் அந்தந்த தேவனுடைய ஸ்வரூபத்தோடும், ஆபரணங்களோடும், வாஹனங்களோடும் கூடவே அஸுரர்களை எதிர்த்து யுத்தம் செய்ய வந்தன.

 

பிரம்மாவினுடைய சக்தி ஜபமாலையும், கமண்டுவும் தரித்தவளாக ஹம்ஸ வாஹனத்தின் மீது ஏறிக் கொண்டு வந்தாள். இவளே பிரம்மாணி யாவள். மஹேசுவரனுடைய சக்தியான மஹேசுவரி சிரேஷ்டமான திரிசூலமும், பெரிய நாகங்களாகிற வளைகளும் அணிந்தவளாக விருஷப வாஹனத்தின் மீது ஏறிக் கொண்டு வந்தாள். இவள் சிரசில் சந்திர கலையை அணிந்திருந்தாள். குமாரனுடைய சக்தியான கௌமாரி கையில் வேலாயுதத்தை தரித்துக் கொண்டு சிரேஷ்டமான ஆண்மயில் மீது ஏறிக் கொண்டு அஸுரர்களோடு போர் புரிய வந்து சேர்ந்தாள். வைஷ்ணவ சக்தி சக்ரம், கதை, சாரங்கம், கட்கம் ஆகிய பஞ்சாயுதங்களோடு கூட கருடவாஹனத்தின் மீது ஏறிக் கொண்டு வந்து சேர்ந்தாள். விஷ்ணுவினுடைய நிஸ்துல்யமான வராஹ ரூபம் தரித்த சக்தி வராஹ ஆகிருதியோடு அவ் விடத்துக்கு வந்தாள். நாரஸிம்ஹியான சக்தி நரஸிம்ஹஸமான ரூபத்தோடு பிடரி ரோமத்தை ஆட்டிக் கொண்டு நக்ஷத்திர மண்டலத்தைப் பிளப்பது போல வந்தாள். இந்திரனுடைய சக்தி இந்திரனைப் போல ஒரு ஆயிரம் கண்களோடும், கையில் வஜ்ராயுதத்தோடும், ஐராவதத்தின் மீது வந்து சேர்ந்தாள். அந்த நவசக்திகளால் பரிவிருதனான மஹேசுவரன் "எனனுடைய பிரீதியினால் அஸுரர்களை சீக்கிரத்தில் கொன்று விடு'' என்று சண்டிகையோடு சொன்னான். உடனே தேவியின் சரீரத்திலிருந்து அதி கோரையாய் அதி உக்ரையாய், அனேக நரிகளுடைய சப்தத்தோடு கூட சண்டிகா சக்தியும் வந்தாள்.

 

அபராஜிதையான அந்த சக்தி சிவந்த ஜடையையுடைய மஹேசுவானைப் பார்த்து சொன்ன தாவது, “பகவானே! இங்கே யிருந்து ஸும்ப நிஸும்பா ஸுரர்களிடம் தூதனாகச் செல்லவும். பிறகு அதி கர்விதரான ஸும்ப நிஸும்பர்களோடும் யுத்தத்திற்கு தயாராக யிருக்கும் அஸுரர்களோடும் இப்படிச் சொல்ல வேண்டும்: "திரைலோக்யமும் இந்திரன் வசமாகட்டும்; ஹவிஸ்ஸ தேவர்களைச் சேரட்டும்; நீங்களெல்லாம் உயிரோடு இருக்க வேண்டு மென்றால் பாதாளத்துக்கு சென்று விடுங்கள்; அல்லது பல கர்வமுடையவர்களாக யுத்தம் செய்வதானால் வாருங்கள்; உங்களுடைய மாமிசத்தைத் தின்று என்னுடைய நரிகள் திருப்தியடையட்டும்” சிவனை தானாகவே தூதுக்கு அனுப்பினாள். ஆகையால் இந்த லோகத்தில் தேவியை சிவதூதி என்று சொல்லுகிறார்கள். தேவியினுடைய வாக்கியம் சிவனால் சொல்லப்பட்டதைக் கேட்ட அஸுர முக்கியர்கள் அதிக கோபத்தோடு காத்யாயனியின் சமீபத்திற்கு வந்தார்கள். பின்பு கோபிஷ்டர்களான அஸுரர்கள் தேவியின் மீது அம்புகளையும், வேல்களையும், சுரிகைகளையும் வர்ஷித்தார்கள். அவர்கள் அனுப்பின அம்புகள், வேல்கள், சூலங்கள், வெண் மழுக்கள், இவைகளை தேவி, நாண் கட்டித் தயாரா யிருக்கும் வில்லி லிருந்து புறப்பட்ட மஹாசரங்களைக் கொண்டு ஒரு வேடிக்கை போல் முறித்தாள். அப்படியே காளியும் தேவியின் முன்பில் சத்துருக்களை சூலம் கொண்டு குத்தியும், கட்வாங்கத்தால் பிளந்தும், சஞ்சாரம் செய்து கொண்டிருந்தாள். பிரம்மாணி தன் கையிலுள்ள கிண்டி ஜலத்தை அவர்கள் மீது தெளித்து அவர்களை வீரியமில்லாதவர்களாகவும் தேஜஸ் இல்லாதவர்களாகவும் செய்தாள். மஹேசுவரி திரிசூலம் என்ற ஆயுதத்தாலும், வைஷ்ணவீ சக்கரத்தாலும், கௌரி வேலாயுதத்தாலும் அதிக கோபத்தோடு அசுரர்களைக் கொன்றார்கள். வஜ்ராயுதத்தால் அனேக தானவர்களை மடித்தாள், வாராஹியினுடைய முகதாடனத்தால் அடிபட்டும், கோரப்பல்லினால் நெஞ்சு பிளக்கப்பட்டும், சக்கரம்பட்டு பிளக்கப்பட்டும் பலர் தரையில் விழுந்து மடிந்தனர். நாரசிம்ஹி சிம்மநாதம் செய்துகொண்டு, திக்கெல்லாம் முழக்கினாள். சில அஸுர முக்கியரை நகங்களால் கீறியும் மற்ற சிலரை ஆகாரமாகச் செய்து கொண்டும் யுத்தரங்கத்தில் சஞ்சரித்தாள், சிவ துதியின் அட்டஹாஸம் கேட்டு பலர் பூமியில் விழுந்தனர்; அவர்களை அவள் உடனே கடித்துத் தின்றாள். இப்படி மாதாக்கள் கோபித்து பலவித உபாயங்களால் அஸுர முக்கியர்களை நசுக்கிக் கொல்லுவதைக் கண்ட அஸுரசேனை ஓட ஆரம்பித்தது. மாதாக்களால் நன்றாக மர்த்தனம் செய்யப்பட்ட அஸுரர்கள் பயந்து ஓடுவதைப் பார்த்த ரக்த பீஜாஸுரன் கோபத்தோடு கூட யுத்தத்திற்குத் தயாரானான். இவனுடைய சரீரத்திலிருந்து ஒரு துளி ரத்தம் பூமியில் விழுந்தால் அதிலிருந்து அந்த ராக்ஷஸனைப்போல ஒரு அஸ்ரன் உண்டாய் விடுவான்.
அவன் கதாயுதத்தை கையிலேந்தி இந்திரசக்தியுடன் யுத்தத்திற்கு வந்தான். இந்திராணி தன் வஜ்ரத்தால் அவனை அடித்தாள். வஜ்ராயுதத்தால் அடிக்கப்பட்ட அவனுடைய சரீரத்திலிருந்து அதிகமான ரத்தம் பிரவஹித் அதிலிருந்து அவனுடைய ஆகிருதியோடு கூடவும், அவனைப்போல பராக்கிரமசாலியாகவும் உள்ள அனேக சேனையாட்கள் உண்டாயினர். அவனுடைய சரீரத்திலிருந்து எவ்வளவு ரத்தத் துளிகள் பூமியில் விழுந் அவ்வளவு படைவீரர்கள் அவனைப்போ லொத்த பராக்கிரமமுள்ளவர்களாகவும், பல முள்ளவர்களாகவும் வெளியே காணப்பட்டார்கள். ரத்தத்திலிருந்து உண்டான அந்த படையாளர்களும் அவ்விடத்தில் மாதாக்களோடு சஸ்திரவர்ஷத்தால் அதிகோரமாகவும் அதி உக்கிரமாகவும் யுத்தம் செய்தார்கள். பிறகு அவன் தலை வஜ்ராயுதத்தா லடிபட்டு உடைந்து ரத்தம் வந்தது. அதிலிருந்தும் அனேக ஆயிரம் படை வீரர்கள்
உண்டானார்கள். வைஷ்ணவி அவனை சக்ராயுதத்தாலடித்தாள். ஐந்திரிகதாயுதத்தால் அடித்தாள். வைஷ்ணவியின் சக்கரத்தால் அடிபட்டு வெளியே வந்த ரத்தத்திலிருந்தும் அனேக ஆயிரம் அஸுரர்கள் உண்டாகி லோகத்தை நிறைத்தார்கள். கௌமாரி வேலாயுதத்தாலும், வாராஹி கட்கத்தாலும் மாஹேசுவரி சூலத்தினாலும், ரக்தபீஜாஸுரனை அடித்தார்கள். அந்த ரக்த பீஜ தைத்யனும், கதாயுதத்தினால் மாதாக்களை யெல்லாம் பலலிதமாக அடித்தான். வேல், சூலம் முதலான ஆயுதங்களால் அடிபட்டதனால் அவன் சரீரத்திலிருந்து ரத்தம் வந்தது. அதிலிருந்து அனேக அஸுரர்கள் உண்டானார்கள். அஸுரனுடைய ரத்தத்திலிருந்து உண்டான அஸுரர்களால் லோகம் பூராவும் நிறையப்பட்டது. அப்பொழுது தேவர்கள் அதிகமான பயமடைந்தார்கள். தேவர்களுடைய துக்கத்தைப் பார்த்த சண்டிகை காளிகா தேவியோடு சொன்னாள். 'ஹே சாமுண்டே! நீ உன் வாயை திறந்து கொண்டு நில்லு. ரக்தபீஜாஸுரன் மீது நான் பிரயோகிக்கும் அஸ்திரங்களால் வெளியேறும் ரத்தத்துளிகளை உன் வாயிலாக்கிக்கொள். அப்படி அவனிடமிருந்து உண்டாகும் அஸரக் கூட்டத்தை நீ தின்று கொண்டு யுத்த பூமியிலிரு. அப்பொழுது இந்த அஸுரன் ரத்தமேயில்லாமல் இறந்து போய்விடுவான். நீ இவ்வா றுழன்று கொண்டிருந்தால் மற்ற அஸுரர்களும் மறுபடியும் உண்டாக மாட்டார்கள்.''

 

(55-61)

 

இப்படி காளிகாதேவியோடு சொல்லிவிட்டு தேவி அவனைச் சூலத்தால் குத்தினாள். காளியும் ரக்தபீஜாஸுரனுடைய ரத்தத்தை தன் வாயில் விழும்படிச் செய்தாள். உடனே அவனும் சண்டிகையை கதாயுதத்தால் அடித்தான். ஆனால் அவனால் தேவிக்கு கொஞ்சமும் வேதனை யுண்டாகவில்லை. தேவியினால் அடிக்கப்பட்ட அவனுடைய சரீரத்திலிருந்து தாராளமாக பிரவஹித்த ரத்தம் பூராவும் சாமுண்டி தன்னுடைய வாயினால் கிரஹித்துக்கொண்டாள். ரத்த பதனத்தாலுண்டான அஸுரர்களை சாமுண்டி தன் வாயிலுள்ள பற்களால் கடித்து தின்று அவர்களின் ரத்தத்தையும் குடித்
தாள், சாமுண்டியால் ரத்தம் குடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற ரக்த பீஜன்மீது, தேவி சூலமும், சக்கரமும், பாணங்களும் அனுப்பிக் கொண்டிருந்தாள். ராஜாவே! அப்படி ஆயுத ஜாலங்களேற்று, ரத்தமில்லாமல் ஆகி, ரக்தபீஜன் கீழே பூமியில் விழுந்தான். அப்பொழுது தேவர்கள் அதிக சந்தோஷ மடைந்தனர். அஸுரர்களுடைய ரத்தம் குடித்து மதம் பிடித்த மாதாக்கள் லஹரியோடுகூட நர்த்தனம் செய்தனர் என்று மார்க்கண்டேய புராணத்தில் தேவி மஹாத்மியத்தில் (8) ரக்த பீஜவதம் என்ற எண்பத்தைந் தாவது அத்தியாயம்.

 

 

 

 

 

ஒன்பதாவது அத்தியாயம்.


ராஜா சொல்வது: - (1-2)

 

பகவானே! ரத்த பீஜபிதத்தோடு கூடின இந்த விசித்திரமான தேவீ சரித்திர மார்க்கம் தாங்கள் எனக்கு சொன்னீர்கள். திரும்பவும் கேட்க எனக்கு ஆசையிருக்கிறது. ரக்த பீஜனைக் கொன்ற பிறகு அதிகோபிஷ்டர்களான சாம்பனும், நிசும்பனும் என்ன செய்தார்கள்?


மஹரிஷி சொல்வது: - (3-39)

 

ரக்தபீஜனும் மற்ற அஸுரர்களும் கொல்லப்பட்ட பின்பு, சும்பாசரனும் நிசும்பாசுரனும் அதிக கோபமடைந்தார்கள். தன்னுடைய பெரிய சேனையை தேவி கொன்று கொண்டிருப்பதைப் பார்த்த நிசும்பன் அதிக கோபத்தோடுகூட வேறொரு பெரிய சேனையுடன் வர் தான். அவனும் முன், பின் பக்கங்களிலிருந்த அசுரப் படையும் அதி கோபத்தோடு உதடு கடித்துக் கொண்டு தேவியைக் கொல்வதற்கு அவளருகில் சென்றனர். மஹா வீரிய வானான ஸும்பாஸுரனும் தன் சைன்யத்தால் சூழப்பட்ட மாதிரு கணங்களோடு யுத்தம் செய்துவிட்டு பிறகு கோபத்தோடு கூட சண்டிகையிடம் கொல்லுவதற்காக வந்தான். உடனே தேவிக்கும், மேகங்களைப்போல அதி உக்கிரமாக சரவர்ஷம் பொழிகின்ற சும்ப நிசும்பர்களுக்கும் பெரிய ஒரு யுத்தம் ஆரம்பித்தது. அவர்கள் பிரயோகித்த சரங்களை சண்டிகை தன் சரவரிசையால் முறித்துவிட்டாள். அஸுரர்களுடைய தேஹம் பூராவும் ஆயுதப் பிரயோகம் செய்தாள். நிஸும்பன் கூர்மையான தன் வாளையும், அதிகமான ஒளி வீசுகின்ற தன் பரிசையையும் எடுத்துக்கொண்டு தேவியின் உத்தம வாஹனமான சிங்கத்தின் தலையை இலக்காக்கி வெட்டினான். வாஹனத்தை வெட்டினவுடன், நிஸும்பனுடைய சிரேஷ்டமான வாளையும், எட்டு குமிழுள்ள பரிசையையும் தேவி தன் கத்தியம்புகளால் முறித்துவிட்டாள். வாளும் பரிசையும் முறிந்து போன பிறகு அஸுரன் வேலாயுதத்தைப் பிரயோ கித்தான். தன்னிடம் வருகின்ற அந்த வேலாயுதத்தை தேவி, சக்கரத்தால் இரண்டு துண்டாக்கினாள். உடனே கோபிஷ்டனான நிசும்பாஸுரன் சூலத்தைப் பிரயோகித்தான். தன்னை நோக்கிவருகின்ற அதையும் தேவி முஷ்டியால் துண்டாக்கினாள். பிறகு அவன் கெதாயுதத்தை சண்டிகையை நோக்கி எறிந்தான். அதையும் தேவி திரிசூலத்தால் முறித்துச் சாம்பலாக்கினாள். பிறகு வெண்மழு வெடுத்து போர் செய்கின்ற அஸுரனை தேவி பாணங்களால் பூமியில் வீழ்த்தினாள். அந்த பீமவிக்கிரமனான நிஸும்பன் தரைமீது வீழ்ந்ததும் ஸும்பன் அதிக கோபத்தோடு தேவியை நிக்கிரகிக்கச் சென்றான். தேரிலிருக்கின்ற அவன் சிரேஷ்ட ஆயுதங்களைத் தரித்து அதியுன்னதமாய், நிஸ்துல்யங்களாய், இருக்கின்ற எட்டு கைகளோடு ஆகாசத்தை அளாவிப் பிரகாசித்தான். அவன் வருவதைப் பார்த்த தேவி சங்கநாதம் செய்து அதிதுஸ்ஸஹமான சிறஞாணெலியம் செய்தாள். எல்லா அரைப்படையினுடைய வீரியத்தை இல்லால் செய்யவல்ல தன் மணியோசையால் திக்குகளை நிறைத்தாள்; உடனே ஸிம்ஹம், யானைகளுடைய அதிகர்வத்தை அகற்ற வல்ல மஹாகர்ஜனை செய்து கொண்டு ஆகாசம் பூமி ஆகிய பத்து திக்குகளையும் நிறைத்தது. காளி மேலே குதித்து ஆகாசத்தையும் பூமியையும் கைகள்
கொண்டடித்தாள். அந்த சப்தத்தால் முன்னாடியிருந்த சப்தங்கள் கேட்கப் படவில்லை,
சிவதூதி அதிகமாக
துட்ட ஹாசம் செய்தாள். அந்த சப்தங்களால் ஆஸுரப்படை அதிக பயததை அடைந்தது. உடனே ஸுபன் அதிக கோபம் கொண்டான்,
துஷ்டா, நில்லு, நில்லு'' என்று தேவி சொன்ன பொழுது ஆகாசத்தில் தேவர்கள், ''ஜெயமுண்டாகட்டும்" என்று கோஷம் செய்தார்கள்; ஸும்பன் அக்னி ஜ்வாலையோடு கூடின ஒரு பயங்கரமான வேலாயுதத்தை பலமாக எறிந்தான். தேவி அதை மஹோதகை என்பதனால் இல்லாமல் செய்துவிட்டாள். ஸும்பனுடைய ஸிம்மநாதத்தால் திரைலோக்யமும் கோஷித்தது. ராஜாவே! அது இடியோசைபோலுள்ள கோரமான சப்தத்தை ஜயித்தது. ஸும்பன் விட்ட சரங்களைத் தேவியும் தேவி விட்ட சரங்களை ஸும்பனும் தங்கள் தங்கள் சரங்களைக் கொண்டு அனேக ஆயிரங்களாக முறித்தனர். பிறகு சண்டிகை கோபத்தோடு அவனை சூலத்தால் குத்தினாள். அந்த குத்துப்பட்டதும் ஸும்பன் மூர்ச்சையாகி பூமியில் விழுந்தான். அப்பொழுது நிஸும்பன் மூர்ச்சை தெளிந்து எழுந்திருந்தான். வில்லும் கையுமாக வந்து தேவியையும், காளியையும் ஸிம்ஹத்தையும் அம்புகளால் எய்தான். பிறகு தானவாதிபன் பதினாயிரம் கைகளுடன் தோன்றி பதினாயிரம் சக்கரங்களால் சண்டிகையை மூடிவிட்டான். உடனே துர்க்கார்த்திநாசினியான துர்க்கா பகவதி கோபத்துடன் அந்தச் சக்கரங்களையும், பாணங்களையும், தன் கரங்களால் முறித்தாள். அப்பொழுது நிஸும்பன் கெதை பெடுத்து அஸுரப்படை சூழ சண்டிகையைக் கொல்ல ஓடி வந்தான். வரும்பொழுதே அவனுடைய கெதையைச் சண்டிகை தன் கூர்மையான வாளினால் முறித்தாள். உடனே அவன் சூலத்தை யெடுத்துக்கொண்டான். சூலமும் கையுமாக வருகின்ற அந்த நிஸும்பாசூரனை சண்டிகை பலமாக சுழற்றின சூலத்தால் நெஞ்சில் குத்தினாள். சூலத்தால் குத்தப்பட்ட அவனுடைய நெஞ்சிலிருந்து ஒரு மஹா வீரயசாலியான ஒருவன் வந்து “நில்” என்றான். தேவி உடனேயே பலமாக சிரித்துச் கொண்டு அவனுடைய சிரத்தை வாளால் வெட்டினாள். உடனே அவன் பூமியில் விழுந்தான். அப்பொழுது சிங்கம் தன்னுடைய தீக்ஷணமான சிங்கப்பற்களால் கழுத்துகளைக் கடித்துப் பிடித்து பல அஸுரர்களைக் கொன்று தின்றது. மற்ற சிலரை காளியும், சிவதுதியும் தின்றார்கள். சில அஸுர முக்கியர்கள் கௌமாரியின் வேல் கொண்டு பிளக்கப்பட்டு நசித்தரர்கள். மற்ற சிலர் பிரம்மாணியின் மந்திரசுத்தமான ஜலத்தால் இறந்தார்கள். வேறு சிலர் மஹேசுவரியின் திரிசூல மேற்று இறந்தார்கள். சிலர் வாராஹியின் வத்திரதாடனத்தால் தூளாகிவிட்டார்கள். வேறு சிலர் வைஷ்ணவியின் சக்கரத்தாலும், ஐக்கரியின் மஜ்த்தாலும் துண்டிக்கப்பட்டார்கள். சில அஸுரர்கள் இறந்தனர். சிலர் யுத்த பூமியிலிருந்து பயந்து ஓடினார்கள். பலர் கேசரிக்கும், காளிக்கும், சிவதுதிக்கும் இரையானார்கள் என்று மார்க்கண்டேய புராணததில் தேவீ மஹாத்மியத்தில் (8) நிஸும்ப வதம் என்ற எண்பத்தாறாவது அத்தியாயம்.


பத்தாவது அத்தியாயம்.


மஹரிஷி சொல்வது: - (1-2)

 

பிராண துல்ய ஸஹோதரனான நிஸும்பனைக் கொன்றதையும், சைனியத்தைக் கொன்றதையும் பார்த்து அதி கோபத்துடன் ஸும்பன் சொன்ன 'ஏ துஷ்டையான துர்கே! நீ தைரியமிருக்கிறது என்று கர்வ மடையாதே! மற்றப் பெணசளுடைய பலத்தால்தானே யுத்தம் செய்கின்றனை.

 

ஸ்ரீதேவீ சொல்வது: - (3)

 

“துஷ்டா; இந்த லோகத்தில் நான் ஒருத்திதான் உண்டு. என்னைத் தவிர இரண்டாவது யாரிருக்கிறார்கள்? இந்த என் அம்சங்கள் இப்பொழுதே என்னிடத்தில் சேருவதைப் பார்.''


மஹரிஷி சொல்வது: - (4)

 

உடனே பிரம்மாணி முதலான தேவிகளெல்லாம் அந்த தேவியின் தேகத்தில் லயித்து விட்டார்கள். அப்பொழுது அம்பிகை மாத்திரம் தனித்து நின்றாள்.


ஸ்ரீ தேவி சொல்வது: - (5)

 

நான் என்னுடைய விபூதியினால் இங்கே பல ரூபங்களை எடுத்துக் கொண்டு நின்றேன். அவைகளை உபஸம்ஹரித்துவிட்டேன். இப்பொழுது நான் தனியாகவேதானிருக்கின்றேன். நீ யுத்தத்தில் ஸ்திரமாக நிற்கவும்.


மஹரிஷி சொல்வது: - (6-35)

 

பிறகு தேவியும் ஸும்பனும் தேவாஸுரர்கள் பார்த்துக்கொண்டிருக்க அதி பயங்கரமாக யுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள். அதி கூர்மையானதும், பயங்கரமானதுமான பல பாண, அஸ்திர, சஸ்திர வர்ஷங்களால் அவருடைய யுத்தம் உலகத்தை மறுபடியும் பயப்படுத்தினது. அம்பிகை நூறு நூறாக விட்ட சவ்ய அஸ்திரங்களை தைத்யேந்திரன் பிரதி அஸ்திரங்களை விட்டு நாசம் செய்தான். அவன் விட்ட அஸ்திரங்களைப் பரமேஸ்வரியும் உக்கிரமான ஹூங்காரத்தால் நசிப்பித்தாள். பிறகு அந்த அஸுரன் சரக்கூட்டத்தைக் கொண்டு தேவியை மூடினான். அதனால் கோபமடைந்த தேவி அம்புகளைக் கொண்டு வில்லை முறித்தாள். வில் முறிந்ததும் தைத்யேந்திரன் வேலாயுதத்தை எடுத்தான். அவன் கையில் அது இருக்கின்ற பொழுதே தேவி அதை சக்கரத்தால் முறித்து விட்டாள். உடனே அஸுரராஜன் நன்றாக மின்னுகின்ற வாளும் நூறு குமிழ்களுள்ள பரிசையும் எடுத்துக் கொண்டு தேவியைக் கொல்ல ஓடிவரும் பொழுது தேவி தன் கூர்மையான அம்பினால் சூரிய ரச்மியால் பளபளப்பாக மின்னுகின்ற வாளையும், பரிசையையும் முறித்தாள். குதிரைகளையும், ஸுதனையும், தேரையும் கீழே தள்ளினாள். குதிரைகளும் ஸுதனும் இறந்தார்கள்; வில்முறிந்த அந்த தைத்யன் உடனே தேவியைக் கொல்வதற்கு கடோரமான முத்கரத்தை எடுத்தான். அந்த முத்கரத்தையும் தேவி தன் அம்பினால் முறித்தாள். ஆனாலும் தைரியத்தோடு கூட தன் முஷ்டியால் தேவியைக் கொல்ல ஓடிச் சென்றான். ஓடி தேவியினுடைய மார்பில் அஸுர சிரேஷ்டன் அடித்தான். தேவியும் அப்படியே அவனுடைய மார்பிலும் அடித்தாள். அடிபட்ட தைத்யராஜன் கீழே தரையில் விழுந்தான். உடனே முன் பலத்தால் எழுந்திருந்தான். உடனே தேவியின் மேலே ஏறி ஆகாசத்தை அடைந்தான். அங்கும் நிராதாரையாக அம்பிகை அவனோடு யுத்தம் செய்தாள். அப்பொழுது ஆகாசத்தில் சித்த முனிகள் அதிசயப்படும்படி அஸுரனுக்கும் சண்டிகைக்கும் பாஹு யுத்தம் நடந்தது. வெகு காலம் அவனோடு யுத்தம் செய்துவிட்டு தேவி அவள் அவனை யெடுத்துத் தூக்கி எடுத்து சுழற்றி பூமியில் எறிந்தாள். அந்த துஷ்டன் பூமியில் வீழ்ந்து; பிறகு எழுந்து சண்டிகையைக் கொல்ல முஷ்டியை ஓங்கிக்கொண்டு வேகமாக ஓடும் பொழுது, தேவி அவனை சூலாயுதத்தால் மார்பில் குத்கி பூமியில் தள்ளினாள். தேவியின் சூலாக்கிரமேற்று முறிக்கப்பட்ட அவன், கடல்களும், மலைகளும், தீவுகளும் உள்ள பூமி முழுவதும் நடுங்கும்படி இறந்து பூமியில் விழுந்தான். அந்த துஷ்டனைக் கொன்ற உடன் உலகங்களெல்லாம் சந்தோஷமாக முன்னிலைமையை அடைந்தன. ஆகாசம் நிர்மலமாயிற்று; உத்பாத மேகங்களெல்லாம் நீங்கிவிட்டன. தேவி ஸும்பனைக் கொன்றதும், நதிகள் சரியாக ஓடின. அவனைக் கொன்ற பொழுது தேவர்கள் எல்லாம் அதிக சந்தோஷமுடையவர்களானார்கள். கந்தர்வர்கள் நன்றாகப் பாடினார்கள்; சிலர் வாத்தியங்களை வாசித்தார்கள்; அப்ஸரஸ்திரீகள் ஆடினார்கள்; நல்ல காற்று வீசினது; சூரியன் தெளிந்து பிரகாசித்தான்; அக்னிகள் சாந்தமாக ஜ்வலித்தன; திக்குகளில் சப்தங்கள் அடங்கின.

 

என்று மார்க்கண்டேய புராணத்தில் தேவீ மஹாத்மீயத்தில் (10)
ஸும்பாஸுரவதம் என்ற எண்பத்தேழாம் அத்தியாயம்


பதினொன்றாவது அத்தியாயம்.


மஹரிஷி சொல்வது: - (1)

 

அந்த மஹா அஸுரனை தேவி கொன்ற பிறகு இந்திரன், அக்னி முதலான தேவர்கள் இஷ்டலாபத்தால் விகஸிதமான முகபத்மங்களைக் கொண்டு திக்குகளை விளங்கச் செய்துகொண்டு கார்த்தியாயினியை ஸ்துதி செய்தார்கள்.


தேவர்கள் சொல்வது: - (2-34)

 

ஹே தேவி! பக்த ஆர்த்திநாசினி காப்பாற்றுக! ஸகல ஜகத்துக்கும் தாயாரே, காப்பாற்றுவாயாக; ஹே விசுவேசி பிரஹீத! இந்த உலகத்தைப் பாலிக்கவும் | ஹே சராசரேசுவரி நீ காப்பாற்றக்கூடியவளன்றோ? (3)

 

நீ பூமியாக இருப்பதனால் இந்த உலகத்திற்கு ஆதரவு நீ யன்றோ! ஹே அதிக பராக்கிரமசாலியே! ஜல ரூபமாகியிருந்து நீ இந்த உலகத்தை வளர்க்கின்றனை (3) அளவிட முடியாத வீரியமுள்ள முகுந்தனுடைய சக்தியான வைஷ்ணவி நீ! உலகத்தோரையெல்லாம் நீ மாயைக்குள்ளாக்குகின்ற மாயை நீயே. அந்த மயக்கத்தில் இருந்து தெளிந்து உன்னை அறிந்தவர்களுக்கு நீ முக்தியைக் கொடுக்கின்றனை. (4)

 

ஸகல வித்தைகளும் சகல ஸ்திரீகளும் உன்னுடைய ரூபபதங்களேயாம். ஹே தேவீ! இந்த புவனம் பூராவும் நிறைந்திருக்கும் தாயும் நீயே! அப்படியிருக்க உன் குண விசேஷங்களைக் குறித்து எப்படி எங்களால் ஸ்துதி செய்ய முடியும்? (5)

 

ஸ்வர்க்கம், மோக்ஷம், இவைகளைத் தருகின்ற தேவி நீயே! ஸமஸ்த பூத ரூபமாயிருக்கிறாய்! உன்னை சிரேஷ்டமான ஸ்துதி செய்வதற்கு நல்ல வசஸ்ஸு என்ன இருக்கின்றது? நீயே சிரேஷ்டமான வாக்குகளாக இருக் கின்றனை. (6)

 

ஜனங்களுடைய ஹிருதயத்திலெல்லாம் ஹே தேவி! நீ புத்தி ரூபிணியாக இருக்கின்றன. ஸ்வர்க்கம், அபிவர்க்கம் இவைகளைக் கொடுக்கும் ஹே நாராயணி உனக்கு நமஸ்காரம். (7)

 

கலை, காஷ்டம் முதலான ரூபத்தோடு பல பரிணாமங்களைக் கொடுக்கும் ஹே தேவி! உலகத்தை யெல்லாம் இல்லாமலும் செய்ய சக்தியுள்ள ஹே தேவி! உனக்கு நமஸ்காரம். (8)

 

ஸமஸ்த மங்களங்களுக்கெல்லாம் மங்களமானவளே! ஹே சிவே! ஸர்வார்த்தங்களையும் கொடுப்பவளே! ஹே கௌரீ! ஹே திரயம்பிகே! உனக்கு நமஸ்காரம். (9)

 

ஸ்ருஷ்டி, ஸ்திதி, நாசம் இதுகளுக்கு சக்தியானவளே! ஹே ஸனாதனி குணாச்ரயே! குணமயே! உனக்கு நமஸ்காரம். (10)

 

சரணமடைந்த தீனர்கள், ஆர்த்தர்கள் இவர்களை ரக்ஷிக்கும் குணமுடையவளே! ஸகல ஸங்கடங்களையும் இல்லாமல் செய்யும் ஹே தேவியான நாராயணியே உனக்கு நமஸ்காரம். (11)

 

ஹம்ஸத்தோடு கூடின விமானத்திலிருந்து, பிரம்மாணி ரூபத்தோடு பரிசுத்தமான தர்ப்பை நீரைத் தெளிக்கின்ற ஹே நாராயணி! உனக்கு நமஸ்காரம். (12)

 

திரிசூலம், சந்திரன், ஸர்ப்பம் இவைகளைத் தரித்து பெரிய விருஷபவாஹனத்தின் மீது மாஹேசுவரீ ரூபத்தோடு கூட இருக்கும் ஹே நாராயணி! உனக்கு நமஸ்காரம். (13)

 

மயில், கோழி, இவைகளோடு கூடின பெரிய சக்தி என்ற வேலாயுதத்தைத் தரித்துக்கொண்டு கௌமாரி ரூபத்தோடு இருக்கின்ற ஹே நாராயணி உனக்கு நமஸ்காரம். (14)

சங்கு, சக்கரம், கதை, சாரங்கம் முதலான பெரிய சஸ்திரங்களை தரித்து வைஷ்ணவி ரூபத்தோடு கூடின ஹே நாராயணி! உனக்கு நமஸ்காரம். (15)

 

மஹா உக்கிரமான சக்ரத்தை கையில் தரித்து தன் வீரப் பற்களால் பூமியைத் தூக்கி நிறுத்தின வாராஹி ரூபத்தோடு கூடின ஹே காராயணி! நமஸ்காரம். (16)

உக்கிரமான நரஸிம்ம ரூபத்தோடு ஸுரர்களைக் கொல்லத் சயாராகி முவ்வுல கத்தையும் காத்த ஹே நாராயணி! உனக்கு நமஸ்காரம். (17)

 

கிரீடமும், மஹா வஜ்ராயுதத்தையும் தரித்து ஒரு ஆயிரம் கண்களோடு கூடி விருத்ராஸுரனைக் கொன்ற ஹே ஐந்திரியான நாராயணி! உனக்கு நமஸ்காரம். (18)

 

சிவதூதி ஸ்வ ரூபத்தோடு தைத்யர்களைக் கொன்ற அகி பலசாலியான ஹே கோரரூபே, மஹாராவே! நாராயணி! உனக்கு நமஸ்காரம். (19)

 

வீரப் பற்களால் பயங்கரமான முகச்கோடு கூடினவளே! தலைகளை மாலைகளாக அணிந்திருப்பவளே! சாமுண்டே, முண்டாசுரனைக் கொன்ற வளே, நாராயணி! உனக்கு நமஸ்காரம். (20)

 

லக்ஷ்மி, லஜ்ஜை, மஹாவித்டை, சிரசசை, புஷ்டி, ஸுதை, திருவை, மஹாராத்ரி, மஹாமாயை ஆகிய ஹே நாராயணி! உனக்கு நமஸ்காரம். (21)

 

மேதை, ஸரஸ்வதி, தமோகுணான விகே, பூதிகாயினி, பரய தெய்வம், மஹேசுவரி ஆகிய ரூபத்தோடும அனுக்கிரகிக்கிற ஹே நாராயணி! உனக்கு நமஸ்காரம். (22)

 

ஸர்வ ஸ்வரூபே, ஸர்வேசே, ஸர்வசக்கி ஸமன்விதே, பாயசண்டாகாமல் எங்களைக் காப்பாயாக. நாராயணி உனக் நமஸ்காரம். (23)

 

அதிக அழகான உன் முக்கண்களோடு கூடிப் பிரகாசிக்கின்ற உன் முகம் சகலவிதமான பூதங்களிலிருந்து உண்டாகக்கூடிய ஆபாதுகளி லிருந்து தே கார்த்தியாயினி காப்பாற்ற வேண்டும்; உனக்கு நமஸ்காரம். (24)

 

அதிக ஜ்வாலையோடு கூட உக்கிரமாக, எல்லா உஸுரர்களையும் மூலத்தோடு நாசம் செய்த உன் சூலம், இனிமேல் எங்களுக்கு பயம் உண்டாகாமல் காப்பாற்றவேண்டும். ஹே பத்ரகாளி உனக்கு நமஸ்காரம். (25)

 

உலகம் நிறைந்த சப்தத்தால் தைத்யர்களுடைய வீரியத்தை இல்லாமல் எது செய்ததோ அந்த மணி தன் மக்களைக் காபபதுபோல் எங்களைச் சகல கஷ்டங்களி லிருந்தும் காப்பாற்றவேண்டும். (26)

 

அஸுரர்களுடை ரத்தம், வஸா, ஆகிய அழுக்குடைய உன் கையிலுள்ள வாள் எங்களுக்கு மங்கள சகலதக கொடுப்பதாகக் கடவது. நாங்கள் ஹே சண்டிகே! உன்னை வணங்குகின்றோம். (27)

 

நீ அருள் புரிந்தால் சகல ரோகங்களும் நீங்கும், சகல இஷ்ட சித்தியும் உண்டாகும். உன்னை யடைந்த பேகளு+த ஒரு ஆபத்துமே அணுகாது. உன்னை ஆச்ரயிப்பவர்களை நீ காப்பாற்ற வேண்டியவ ளன்றே! (28)

உன் சரீரத்தை பலளித உருவமாகக் கொண்டு அதர்மிஷ்டரான தைத்ய சிரேஷ்டர்களை நிச்சேஷமாக்கனது போல ஹே தேவி அம்பிகே! யார் செய்வார்கள்! (29)

 

வித்யை, சாஸ்திரம், விவேக தீபம் முதலான வாக்யங்களெல்லாம் இருந்தாலும், மஹா அந்தகாரம் (இருட்டு) ஆன்ற மமத்வம் (கான் என்ற பாவம்) என்ற பெரிய குழியில் உன்னை யன்னியில் யாரால் தள்ளப்பட்டு சுழலும்படி செய்ய முடியும்? (30)

 

கோரமான விஷத்தோடு கூடின பாம்பு, காட்டுத்தீ, சோரக் கூட்டம், அஸுரர்கள், சத்துருக்கள், சமுத்திர மத்தியம், ஸம்சார பந்தம் இவைகள் லிருந்து நீ உலகைக் காக்கின்றாய்! (31)

 

ஹே விசுவேசுவரீ! நீ விசுவத்தைக் காப்பாற்றுகின்றாய், விசுவரூபே தீ விசுவத்தைச் சுமக் கன்றாய், நீ விச்வேசவந்தியை, உன்னை பக்தியுடன் பூஜிப்பவர்கள் விசுவ அவலம்பராகுவார்கள். (32)

 

இப்பொழுது சத்துருக்களைக் கொன்றது போல் எப்பொழுதும் நீ மனத் தெளிவோடு எங்களை கைவிடாமல் காப்பாற்றவேண்டும். ஜூத்துக்குண்டாகும் உத்பாத பாகத்தால் உண்டாகும் மஹா உபத்திரவங்களைத் தாமஸமன்றி நாசம் செய்வாயாக. (33)

 

கை கூப்பியவரை காக்க ஹே தேவி! நீ விசுவதுக்க ப்ரணாசினியன்றோ! உலகம் மூன்றிலும் உள்ளவர்கள் புகழுகின்ற நீ உலகத்தோர்க்கு வரம் அருளுக. (34)


தேவி சொல்வது: - (35)

 

ஹே தேவர்களே! நான் வரம் தருகின்றேன். உங்களுக்கு வேண்டியதைக் கேட்கவும். லோக உபகாரத்தற்காக அதை நான் தருகின்றேன்.

 

தேவர்கள் சொல்வது: - (36)

 

ஹே ஸர்வே சுவரி! இந்தப்படிக்கு எங்களுடைய சத்துருக்களைக் கொன்று மூன்று லோகங்களுக்கும் உண்டாகின்ற கஷ்டங்களை நீக்குவது என்பதே தாங்கள் செய்யவேண்டியதாக எப்பொழுதும் உள்ளது.


தேவி சொல்வது: - (37-51)

 

வைவஸ்வத மன்வந்தரத்தில் இருபத்தெட்டாவது யுகத்தில் வேறொரு ஸும்பநிஸும்பர்கள் என்ற அஸுர சிரேஷ்டர்கள் உண்டாகப்போகிறார்கள். அவர்களை நான் நந்தகோப வமிசத்தில் யசோதையினுடைய மகளாகப் பிடிந்து விந்தியமலையில் வஹித்துக்கொண்டு நாசம் செய்வேன். பிறகு நான் அதி பொத்திரமான ரூபத்தோடுகூட பூமியில் அவதாரம் செய்து விப்பிரசித்சயினுடைய ஸந்ததுகளான அஸுர்களைக் கொல்வேன். அந்த உக்கிரர்களான வைப்பிரசத்த அஸுரர்சளைத் தின்றதனால் என் பற்கள் மாதளை பூபோல சிவப்பு நிறமாக இருக்கும். ஆகையால் ஸ்வர்க்கத்தில் தேவர்களும் பூமியில் மனுஷ்யர்களும் என்னை எப்பொழுதும் ரகீததந்தி என்று சொல்லி ஸ்தோத்திரம் செய்வார்கள். மறுபடியும் நூறு வருஷ காலம் மழையே பெய்யாமல் பூமியில் தண்ணீரேயில்லாமல் ஆகி மஹரிஷிகளால் நான் ஸ்துதி செய்யப்படப்படும் பொழுது நான் அயோனிஜையாக அவதரிப்பேன். அன்று நான் நூறு கண்களைக் கொண்டு மஹரிஷிகளைக் கடாக்ஷிப்பேன். அப்பொழு மனிதர்கள் என்னை சதாக்ஷ என்று அழைப்பார்கள். ஹே தேவர்களே பிறகு மழையுண்டாகிறவரையிலும் பிராணனைக் காப்பாற்றுவதற்கு உதவும் சாகங்கள் (கீரைகள்) என் சரீரத்திலிருந்து உண்டாகும். அதனால் நான் உலகத்தைக் காப்பாற்றுவேன். அப்பொழுது என்னை சாகம்பரி என்று அழைப்பார்கள். அன்றே நான் துர்க்கமன் என்ற அஸுரனைக் கொல்வேன்; அதனால் துர்க்காதேவி என்ற பெயர் எனக்குண்டாகும். பிறகு நான் ஒரு பீமமான உருவத்துடன் ஹிமாலய பர்வதத்தில் முனிகளுடைய ரக்ஷணத்திற்காக ராக்ஷஸர்களை பக்ஷணம் செய்வேன். அப்பொழுது மஹரிஷிகள் எல்லோரும் என்னை வணங்கி ஸ்துதி செய்வார்கள். அதனால் எனக்கு பீமாதேவி என்ற பிரசித்தமான பெயருண்டாகும். அருணன் என்பவன் மூன்று உலகங்களையும் உபத்திரவிக்கும் பொழுது நான் அனேக ஆறு கால்களோடு கூடின வண்டு ரூபத்தோடு திரைலோக்யத்தின் நன்மைக்காக அந்த அஸுனைக் கொல்வேன். அப்பொழுது என்னை உலகத்தோர் எல்லோரும் பிராமரி என்று தோத்திரம் செய்வார்கள். இப்படி யெல்லாம் எந்தெந்த சமயங்களில் அஸுரர்களால் கஷ்டம் நேரிடுமோ அப்பொழுதெல்லாம் நான் அவதரித்து சத்துருக்களைக் கொல்வேன்.

 

என்று மார்க்கண்டேய புராணத்தில் தேவீ மஹாத்மியத்தில் (11) நாராயணீ ஸ்துதி என்ற எண்பத்தெட்டாவது அத்தியாம்.

 

பனிரெண்டாவது அத்தியாயம்.

தேவி சொல்வது: - (1-29)

இந்த தோத்திரங்களால் என்னைத் தினமும் எவனொருவன் சிரத்தையுடன் தோத்திரம் செய்வானோ அவனை ஸகல கஷ்டங்களிலிருந்தும் நான் காப்பாற்றுவேன். சந்தேகமில்லை. மதுகைடப வதம், மஹிஷாஸுரவதம், ஸும்ப நிஸும்பவதம் இவைகளை யாவர் சீர்த்தனம் செய்வார்களோ, அஷ்டமி நவமி, சதுர்த்தசி ஆகிய இந்த திதிகளில் என் சிரேஷ்டமான மஹாத்மியத்தை எவரொருவர் ஏகாக்கிர சித்தத்துடன் ஸ்துதிக்கின் றனரோ, அவர்களுக்கு ஒரு பாபமும் உண்டாகாது. அந்த பாபத்தால்
ஏற்படுகின்ற ஆபத்துக்களும் உண்டாகா. தரித்திரம் பந்து வியோகம், வைகள் உண்டாகாது. அவர்களுக்கு சத்துருக்களிடத்திலிருந்து அல்லது அரசனிடமிருந்து, அல்லது ஆயுதம், தீ, ஜலப்பிரவாஹம் இவைகளிலிருந்து உண்டாகின்ற நாளும் உண்டாகாது அதிக மங்களத்தைக் கொடுக்கின்றதும் விசேஷமானதுமான என்னுடைய இந்த மஹாத்மியத்தை தினமும் பக்தியுடன் மனதைச் செலுத்திப் படிக்கவோ, கேட்கவோ செய்ய வேண்டும். வைசூரி முதலான மஹா மாரியால் உண்டாகின்ற உபத்திரவங்களையும், மூன்று வித உத்பாதங்களையும் இல்லாமல் என் மஹாத்மியம் செய்யும். என்னுடைய எந்த க்ஷேத்திரத்தில் இந்த மஹாத்மியம் தினமும் தவறாமல் சரியாக படிக்கப் படுகிறதோ அந்த இடத்தை நான் ஒரு நாளும் உபேஷிக்க மாட்டேன். அவ் விடத்தில் எப்பொழுதும் என்னுடைய ஸாந்நித்யம் இருக்கும். பலி பிரதானம் (பலி யென்றால் நிவேதனம் என்ற
பொருளே அல்லாமல் ஆடு முதலியவைகளை வெட்டுகின்றதல்ல) பூஜை ஹோமம், மஹோத்ஸவம் இவைகள் செய்யும் பொழுது என்னுடைய இந்த சரித்திரத்தை பூராவும் சொல்லவும், கேட்கவும் செய்யவேண்டும். தெரிந்தோ தெரியாமலோ அப்படி செய்யப்படும் பலி, பூஜை, ஹோமம், இவைகளை நான் பிரீதியுடன் அங்கீகரிப்பேன். சரத் காலத்திலும், வர்ஷ காலத்திலும் எனக்கு மஹாபூஜை செய்கின்ற பொழுது என்னுடைய இந்த மஹாத்மியத்தை பக்தியுடன் கேட்டால் என்னுடைய பிரசாதத்தினால் எல்லா உபத்திரவங்களும் நீங்கும். தனதானிய விருத்தி யுண்டாகும். சந்தேக மில்லை. காது.
என்னுடைய இந்த மஹாத்மியமும், சுபமான அவதாரங்களும், யுத்த பராக்கிரமங்களும், கேட்கிறவன் பயமே யறியாதவனாக இருப்பான். என்னு வடய மஹாத்மியம் கேட்கின்றவர்களுக்கு சத்துருக்கள் இருக்க மாட்டார் நன்மையே வரும்; குடும்பம் விருத்தியடையும். எல்லா சாந்தி கர்மங்களிலும், கெட்ட சொப்பனம் காணும் பொழுதும், கஷ்டமான கிரஹபீடை யிருக்கும் பொழுதும் இந்த என்னுடைய மஹாத்மியத்தைக் கேட்க வேண்டியது. அப்பொழுது உத்பாதங்களும், கோரமான கிரஹ பீடையும் இல்லாமல் ஆகும். மனுஷ்யர் பார்த்தது ஸ்வப்னம் ஸுஸ்வப்னமாக மாறும் பாலக் கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பாலர்களை இது சௌக்கிய மாக்கும். குடும்ப விவஹாரங்களைத் தீர்த்து சேர்த்து வைப்பதற்கு இது ஒரு விசேஷ சக்தியுடையதாகும். துஷ்டர்களுக்கு எல்லாம் சக்தியே இல்லாமல் செய்யும். இதை படித்தாலே ரக்ஷஸ்ஸுகள், பூதங்கள், பிசாசுகளுள் எல்லாம் விலகும். என்னுடைய இந்த மஹாத்மியம் பூராவும் என் ஸாந்நித்திய
முடையதாகும். பசுக்கள், புஷ்பங்கள், அர்க்கியங்கள், தூபதீபங்கள், சந்தனம் முதலான வாசனைத் திரவியங்கள், பிராமண போஜனம், ஹோமங்கள், இரவும் பகலும் தர்சனம், பலவிதமான தானங்ள், இவைகளைக் கொண்டு ஒரு வருஷகாலம் என்னைப் பூஜித்தால் எவ்வாறு நான் திருப்தியடைவேனோ அதை ஒரு தடவை இந்த மஹாத்மியத்தை படிப்பதனாலும் கேட்பதனாலும் கிடைக்கும். கேட்டால் பாபங்கள் இல்லாமல் ஆகும். ஆரோக்கிய முண்டாகும். என் அவதாரங்களை கீர்த்தனம் செய்தால் பூதபாதை உண்டா நான் யுத்தங்களில் துஷ்ட அஸுரர்களைக் கொன்ற சரித்திரத்தைக் கேட்கின்றவர்களுக்கு சத்துரு பயமே உண்டாகாது. நீங்கள் செய்த ஸ்துதிகளும், பிரம்மரிஷிகள் செய்த ஸ்துதிகளும், பிரம்மா செய்த ஸ்துதிகளும், நல்ல கெதியைக் கொடுக்கும். காட்டிற்குள்ளோ, பெரிய தனி மார்க்கத்திலே சத்துருக்களுடைய கையிலோ, வனத்தில் காட்டானை சிங்கம், புலி இவைகள் மத்தியிலோ, ராஜ கோபத்திலோ சிரச்சேத் குற்றம் ஏற்பட்டிருக்கும் பொழுதோ, காராக்கிரகத்திலோ, புயற் காற்றிலகப்பட்ட கப்பலிலோ, யுத்தத்
தில் அதிகடூரமான ஆயுத மேற்று கஷ்டப்படும் பொழுதோ, கடின மான வேதனைகளிலோ இருக்கும் பொழுது என்னுடைய இந்த மஹாத்மியத்தை ஸ்மாணம், (பாராயணம் அல்லது கேட்டல்) செய்யும் மனிதன் மேற்கூறிய சகல சங்கடங்களும் தீர்ந்தவனாகி விடுகிறான். என் சரிதம் ஸ்மரிக்கின்றவனுக்கு என் பிரபாவத்தினால் விஹாதிகள், திருடர்கள், சத்துருக்கள் இவர்கள் தூரத்திலேயே இருந்து ஓடிப் போய் விடுவார்கள்.

மஹரிஷி சொல்வது: - (30-38)

இவ்வாறு சொல்லி விட்டு அந்த சண்டை விக்கரமமான சண்டிகா பகவதி, தேவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவ் விடத்திலேயே அந்தர்த்தானமானாள் அவர்கள் எல்லா பேர்களும், தேவி சத்துருக்களைக் கொன்று விட்டதனால் பயலேசமின்றி முன் போல தங்கள் தங்கள் யக்ஞபாகங்களை அனுபவித்துக் கொண்டு அவர்களுடைய அதிகாரங்களை மறுபடியும் நடத்தினார்கள். மிகுந்த அஸுரர்களோ, அதி குரூரனும், அதுல்ய விக்ரமனும், மஹாவீரியவானும், ஜகத்துக்குத் துரோஹியுமாக இருந்த ஸும்பாஸுரனையும் நிஸும்பாஸுரனையும் தேவி யுத்தத்தில் கொன்றதனால் பாதாளலோகத்திற்கு ஓடிவிட்டார்கள். ராஜாவே! இப்படி அந்த பகவதியான தேவி, நித்யையானாலும் மறுபடியும் அவதாரம் செய்து உலகத்தைக் காப்பாற்றுகின்றாள். அவளே இவ்வுலகத்தை மோஹிக்கக் செய்கிறாள். அவளே இவ்வுலகத்தை விருஷ்டிக்கிறாள். நாம் பிரார்த்தனை செய்து, அவள் கருணை புரிந்தால் ஞானமும் சம்பத்தும் நமக்கு உண்டாகும். ஹே ராஜாவே! பிரளய காலத்தில் மஹாமாரி ரூபத்தோடு இந்த பிரம்மாண்டம் பூராவும் வியாபிக்கப்படுகிறது. அவளே காலத்திற்கு தக்கபடி மஹா மாரி (பெரிய மழை) யாகிறாள். ஜயான (பிறவி யில்லாத) அவளே பிறகு சிருஷ்டி கர்த்தாவாகிறாள். அந்த ஸநாதனியா னவளே பின் எல்லா பூதங்களையும் ரக்ஷிக்கவும் செய்கிறாள். அவளே நமது கல்ல காலங்களில் லக்ஷ்மியாக நம்முடைய வீடுகளைச் செழிக்கும்படி செய்கிறாள். கெட்ட காலத்தில் அவனே அலக்ஷ்மியாக எல்லா வற்றையும் நாசம் செய்கிறாள். அவளை ஸ்தோத்திரம் செய்து புஷ்பம், சந்தனம், தூபம் முதலானவைகளால் பூஜை செய்தால், அந்த தேவி, சந்ததி, சம்பத்து, தர்மபுத்தி, நற்கதி இவளைக் கொடுப்பாள்; என்று மார்க்கண்டேய
புராணத்தில் தேவீ மஹாத்மியத்தில் (12) தேவீ சரித மஹாத்மியம் என்ற எண்பத் தொன்பதாம் அத்தியாயம்.

பதின்மூன்றாவது அத்தியாயம்.

மஹரிஷி சொல்வது: - (1-3)

ராஜாவே! இந்த உத்தமமான தேவீ மஹாத்மியத்தை நான் தங்களுக்கு சொன்னேன். இந்த லோகத்தை பரிபாலிக்கின்ற அந்த தேவியினுடைய பிரபாவம் - இப்படி யிருக்கிறது. விஷ்ணு பகவானுடைய மாயையான அந்ததேவிதான் ஞானத்தைக் கொடுக்கின்றாள். அவளே தங்களையும், இந்த வைச்யனையும், உங்களைப் போல மற்ற அறிவாளிகளையும் மோஹிக்கும்படிச் செய்கிறாள். மோஹிக்கும்படிச் செய்திருக்கிறாள். மோஹிக்கும்படிச் செய்வாள். மகாராஜாவே! தாங்கள் அந்த பரமேசுவரியை சரணம் அடையவும் அவளைத் தாங்கள் ஆராதனை செய்தால் மானுஷ போகங்களும், ஸ்வர்க்காப வர்க்கங்களும் கிடைக்கும்.

மார்க்கண்டேயர் சொல்லுவது: - (4-9)

மஹாமுனே! இப்படி அவருடைய வார்த்தையைக் கேட்டு அந்த ஸுரத மஹாராஜா தீக்ஷண விருதனான அந்த மஹரிஷியை நமஸ்காரம் செய்து அதியான மமதையினாலும், ராஜ்யம் போனதினாலும் உடனேயே வைசியனோடு கூட தபஸ் செய்ய புறப்பட்டான். அவ்விருவரும் அம்பிகையை பிரத்தியக்ஷ மாக்குவதற்காக, நதியினுடைய மணலி விருந்து கொண்டு உத்தமமான தேவீ ஸுகத்தை ஜபித்துக்கொண்டு தபஸ் செய்தார்கள். அவர்கள் அந்த மணலில் மண்ணினால் தேவியின் விக்கிரகம் செய்து புஷ்பம் தூபம், தர்ப்பணம் இவைகளால் பூஜை செய்தார்கள். ஆஹாரத்தைத் தள்ளி ஆத்மாவை அடக்கி தேவியை ஏகாக்கிர சித்தத் துடன் தியானிக்கின்ற அவர்கள், தங்களுடை தேஹரத்தத்தில் நனைத்து பலி கொடுத்தார்கள். இவ்வாறு மூன்று வருஷகாலம் ஆராதனை செய்ததனால், ஜகன் மாதாவான சண்டிகை மனோப்பிரசாத மடைந்து பிரத்தியக்ஷமாக வந்து இவ்வாறு சொன்னாள்.

தேவி சொன்னது: - (10)

ஹே ராஜாவே! ஹே குலநந்தன! உங்களுக்கு எது இஷ்டமோ அதைக் கேட்கவும். திருப்தி யடைந்த நான் அதையெல்லாம் உங்களுக்குக் கொடுக்கின்றேன்.


மார்க்கண்டேயர் சொல்வது: - (11-12)

 

அப்பொழுது ராஜா தனக்கு மறு ஜன்மத்தில் ஸ்திரமான ராஜ்ய போகமும், இந்த இந்த ஜன்மத்தில் தன் சத்துருக்களைக் கொன்று தன்னுடைய ராஜ்யம் கிடைக்க வேண்டுமென்றும் கேட்டான். வைராக்யம் வந்த புத்தி சாலியான வைசியன் நான், என்னுடையது என்ற எண்ணங்களை இல்லாமல் செய்யக் கூடிய ஞானம் வேண்டுமென்றான்.


தேவி சொல்வது: - (13-15)

 

ராஜாவே! தான் சில நாட்களுக்குள் உமது ராஜ்யத்துக்கு அதிபதியாவீர். சத்துருக்களை யெல்லாம் கொன்று விடுவதனால் ஸ்திரமாகக் கிடைக்கும். அடுத்த ஜன்மத்தில் நீர் சூரிய பகவானிடமிருந்து பூமியில் பிறந்து ஸாவர்ணி என்ற மனுவாக ஆகக்கடவீர். வைசியோத்தம! நீ கேட்ட வரத்தையும் கொடுக்கின்றேன். உமக்கு ஸித்தியைக் கொடுக்கக் கூடின ஞானம் உண்டாகும்.


மார்க்கண்டேயர் சொல்வது: - (16-17)

 

இப்படி அவர்களுக்கு இஷ்டப்படிக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்து விட்டு அவர்களால் பக்தியுடன் ஸ்துதி செய்யப்பட்ட தேவி அந்த க்ஷணத்திலேயே அந்தரத்தானமானாள். இப்படி தேவியிடமிருந்து வரம்பெற்று க்ஷத்திரிய சிரேஷ்டனான ஸுரதன் ஸுரிய னிடத்திலிருந்து ஆவிர்பவித்து ஸாவர்ணி என்ற மனுவாக வருவான் என்று மார்க்கண்டேய புராணத்தில் ஸாவர்ஸூ மந்வந்தரத்தில் தேவீ மஹாத்மியத்தில் (13) ஸுரத வைசிய வரலாபம் என்ற தொண்ணூறாவது அத்தியாயம்.


தேவி மஹாத்மியம் முற்றிற்று.

 

ஆனந்த போதினி – 1933, 1936, 1937 ௵ -

ஏப்ரல், ஜுலை, ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி

 

1 comment: