Saturday, September 5, 2020

 

புராதன சங்கீதம்  
 

1. சங்கீத விசேஷம்.

 

சங்கீதம் என்ற பதத்திற்கு இன்பமென்பது பொருள்; இது வடமொழிச் சொல்; இசை என்பதே சங்கீதமென்னும் பொருளைத் தரும் தென்மொழிச் சொல்லாம். மனிதனுக்கு அவனுடைய செவியின் வாயிலாகத் தெவிட்டாத - தன்னை யறியாத ஓர் ஆனந்தத்தையும், பரவசத்தையும், இன்பத்தையும் தரவல்லது சங்கீதம். 'சங்கீத விக்ஞானம் சதுர்வர்க்க பலப்பிரதம்' என்பதால் இச்சங்கீதத்திற்குத் தர்மார்த்த காமமோமென்ற நான்குவித புருஷார்த்தங்களின் பலனையும் தரத்தக்க வல்லமையுண் டென்பதும் பெறப்படும். விஷயானுபவ மறியாத, தெய்வத்திற் கொப்பான சிறு குழந்தையும் கானத்தைக் கேட்ட அளவிலே துயில் கொள்வதாலும், வனத்தில் சஞ்சரிக்கும் பசுபோன்ற மிருகங்களுங்கூட சங்கீதத்தைக் கேட்ட அளவிலே அசைவற்று நின்று மெய்ம்மறந்து பரவசமாவதாலும் சங்கீதமானது பாமரனுக்கும் ஒருவித ஆனந்தத்தை யூட்டுகின்றதென்பது நன்கு விளங்கும். கலைகளுக்கெல்லாம் உற்பத்திஸ்தானமாகின்ற பிரம்மபத்தினியான சரஸ்வதி தேவி வீணை வாத்யததை யுடையவளாதலாலும், திருமால் கொண்ட பத்து அவதாரங்களில் முக்கியமான கிருஷ்ணாவதாரத்தில் குழலைத் தன் வாத்யமாகக் கொண்டு, கோபிகாஸ்திரீகளாக பரமாத்மாவின் ஆலங்கனத்திற்காசைப் பட்டு ஜனனமெடுத்த மஹரிஷிகளை அதன் நாதத்தா லழைத்துப் பரவசமாக்கியதாலும் சங்கீதம் தேவதாம்சமானதென்பது அறியற்பாலதாகும்.பரம பாகங்தோத்தமர்களான நாரதர், ஆதிசேடன், ஆஞ்சனேயர், வாணி, தும்புரு முதலானோர் சங்கீத மஹிமையால் பக்தர்களானார்களென நூல்கள் கூறுவதாலும் சங்கீத விசேடம் புலனாம். 'ச' வெனத் தொடங்கும் சாமவேதத்தினின்றும் சங்கீதம் உற்பத்தியாயிற்று. சாமவேதப் பிரமாணமாக சங்கீதம் உலகிற்கு வந்ததென்பாரு முளர். சங்கீத இலக்கணத்தின் மகிமையை கச்யபர், தமங்கர், பாத்வாஜர், கௌதமர், வசிஷ்டர், சியவனர், யஞ்யவல்கர் முதலான மஹரிஷிகளும், அர்ஜுனன், இராவணன், பிந்துராஜன், உருத்திரசேனன், போஜன், க்ஷேத்திரராஜன் முதலான மன்னர்களும் நன்குணர்ந்து அனுபவித்தவர்கள். ஆழ்வார்களும், நாயன்மார்களும் தாம் பாடிய பாசுரங்களை இசையாக உலகிற்கு வழங்கினமையாலும் இசையின் பெருமை புலப்படும். சதுர்யுகங்களில் ஒவ்வொரு யுகத்திலும் சர்வேஸ்வரன் தன்னையடையும் வெவ்வேறு மார்க்கங்களை மக்களுக்குப் புகட்டினான். அதில் நான்காவது யுகமான கலியில், பக்திமார்க்கத்தை விட மற்றவை கடினமாகத் தோன்று மென்றும், பக்திமார்க்கமே சுலபமான தென்றும், அப்பக்தி மார்க்கத்திலும் ஈஸ்வரநாம ஸ்மரணையால் முக்தி சித்திக்கு மென்றும், அந்த நாமசங்கீர்த்தன மார்க்கத்திற்கு சங்கீதம் அவசியமானதென்றும் கற்பித்தார். பகவந்நாமத்தின் மஹிமையை உலகிற் பரப்பி, மனித சமூகத்தின் உள்ளத்திற்கோர் புதிய உணர்ச்சி தந்த விடலர், கபீர்தாஸர், ராமதாஸர், துளஸீதாஸர் முதலான பக்த சிகாமணிகளும் சங்கீதத்தையே பக்தி மார்க்கத்தின் பாதையாகக்கொண்டு முக்திபெற்றனர். சாமவேதம் இராவணனால் பாடப்பெற்றதென்றும், ஆதி இராமாயண காவியத்தை வடமொழியிற் செய்த வான்மீக மஹரிஷி, அதைக் குசலவர்கள் கானஞ் செய்யக் கேட்டுப் பரமசந்தோஷத்தை யடைந்தாரென்றும், ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியே தமது சரித்திரத்தைத் தமது குமாரர்கள் பாடக் கேட்டுப் பரமானந்தத்தை அடைந்தாரென்றும், சங்கீத விசேஷப் பிரமாணம் விரிக்கப்படும். சங்கீத சாஸ்திரத்தைக் கூறும் சங்கீத பாரிஜாதம், ராகவிபோகம், சங்கீத ரத்னாகரம், சங்கீத சந்திரிகா, சங்கீதமயாகரம் என்ற வடமொழி நூல்களும், தென்மொழியில் சிற்சிலநூல்களும் கானத்தின் மகிமையை விஸ்தாரமாக எடுத்துக் கூறுகின்றன. சங்கீதத்தைப் பிரமாணமாகக் கொண்ட வடமொழி நூல்களையும் அந்தக் கிரந்தங்களின் கர்த்தாக்களையும் பற்றிய விஷயம் பின்னர்க் கூறப்படும். சங்கீதம் தெய்வாம்சமானதென்றும், மானிடர்க்குப் பத்தியையும், ஆனந்தத்தையும், இகபரசாதனங்களையும், மோக்ஷசாம்ராஜ்யத்தையும் ஊட்ட வல்லதென்றும் சங்கீத விசேஷம் இதுவரையிலும் கூறப்பெற்றது.


 2. சங்கீதத்தின் உற்பத்தி

 

சங்கீதம் சாமவேதத்தின் அம்சமாகப் பிறந்ததென முன்பு கூறினோம். சங்கீதமென்பது கேட்கப்படும் ஒருநாதம் அல்லது சப்தம். இதை நாதப்பிரம்மம் என்பர் பெரியார். இந்நாதமானது முதலாக மனிதன் தனது மன எழுச்சியால் எழ, அந்த வேகமானது உடம்பிலுள்ள அக்கினியை எழுப்ப, அக்கினியானது அதன் சம்பந்தமான வாயுவைத் தாக்கிக்கிளப்ப, அவ்வெழுச்சிபின்பு, நாபிக்கமலம், மார்பு, கண்டம், சிரசு முதலான பாகங்களின் வழியாக முறையே சென்று நாவையடைந்து நாதத்தை யுண்டாக்குகின்றது. இந்தநாதம் ஹிருதய கமலத்தினின்று வெளிப்படுங்கால் மந்தர மென்றும், கழுத்திலிருந்து தோன்றுங்கால் மத்ய மென்றும், சிரசிலிருந்து வரும்பொழுது தாரமென்றும் கூறப்படும். நாதம் ஹிருதய கமலத்தினின்றும் வெளிப்படும்பொழுது அது வரிசையாயுள்ள இருபத்திரண்டு திரேஹநாடிகளைக் கடந்துசெல்வதாலும், நரம்புகள் ஒவ்வொன்றும் பேதசப்தத்தைத் தரக்கூடியதாலும் இருபத்திரண்டு சுருதிகளாக மாறுகின்றது. நாதமானது ஆஹதம், அனாஹதம் என்னு மிரண்டு பிரிவுகளுள்ளது. நிசப்தமான இடத்தில் மஹான்கள் மனதை லயப்படுத்தி, தியானஞ் செய்யுங்கால் ஓம் என்ற பிரணவசப்தம் அவர்களுக்குக் கேட்கும். இந்த சப்தமானது மாறி மாறிப் பத்துவகையான நாதங்களை யுண்டுபண்ணும். அதன் பத்தாவது அம்சத்தைக் கொண்டு அதில் மனதைக் கட்டுப்படுத்தி (லயப்படுத்தி) மஹரிஷிகள் தியானம் செய்வார்கள். இது மிகவும் கஷ்டமான வழியாதலின் நாதத்தின் மேற்கூறிய பெரும் பிரிவுகளிலொன்றான ஆஹத நாதத்தைச் சுருதிப்படுத்தி, தன் போக்கில் பகவந் நாம அக்ஷரங்களை அமைத்துச் சாதாரண ஜனங்கள் சுலபமாக அடையக்கூடிய மோக்ஷசாதனமார்க்கம் கற்பிக்கப்பட்டது. நாதம் அதிசூக்ஷமம், சூக்ஷமம், புஷ்டம், அபுஷ்டம், கிருத்திரம் என்ற ஐந்து பாகங்களாகவும் பிரிக்கப்படும். சங்கீதம் சாமவேதத்தின் களையாகத் தோன்ற, பிரதமம், த்வீதியம், த்ருதீயம், சதுர்த்தம், மண்டம் முதலான ஸ்வரங்களினின்று ச வென்று ஆரம்பித்து சட்ஜம் முதலான ஏழு ஸ்வரங்களாக பிரம்மதேவனால் அமைக்கப்பட்டது.


 ஏழு ஸ்வரங்களாவன: ச, ரி, கா, ம, ப, த, நி,
 ச = சட்ஜம் ரி = ரிஷபம் கா = காந்தாரம்
 ம = மத்திமம் = பஞ்சமம் த = தைவதம்
 நி = நிஷாதம்.

 

 

இவற்றுள்,

 

ஷட்ஜம் மயிலின் சப்தத்தை ஒத்திருக்கும். நாசி, கழுத்து, ஹிருதயம், தாடை, நாக்கு, பல் முதலான ஆறு அவயவங்களினின்றும் த்வனி ஆரம்பமாகின்றதனால் ஷட்ஜ மென்று பெயர் பெற்றது.

 

ரிஷபம் சாக்ஷாத் பரமேஸ்வரனின் வாஹனமான (நந்தி) ரிஷபத்தின் குலை யொத்திருப்பதால் ரிஷபமெனப் பெயர் பெற்றது.

 

காந்தாரம் ஆட்டின் குரலை யொத்திருக்கும். இந்த நாதம் மந்தரத்தினின்றும் புறப்படுவதா லிதற்குக் காந்தார மெனப் பெயர் வரலாயிற்று.

 

மத்யமம் கிரௌஞ்சமென்ற பக்ஷியின் த்வனியை நிகர்க்கும். சப்தஸ்வரங்களில் ஸ, ரி, க இவைகளுக்குப் பின்னும், ப, த நி இவற்றிற்கு முன்னும் மத்தியில் தவனிப்பதால் மத்யம மென்று பெயர் பெற்றது.

 

பஞ்சமம் கோகில பக்ஷியின் சப்தத்தைப் போன்றிருக்கும், நாபி, மார்பு, ஹிருதயம், கண்டம், சிரா ஆகிய ஐந்து திரேஹ ஸ்தானங்களின்மார்க்கமாய்ப் பிறப்பதால் பஞ்சமம் என்று பெயர் பெற்றது.

 

தைவதம் குதிரையின் கனைப்பை நிகர்த்திருப்பது; நாபியிலிருந்து புறப்பட்டு ஹிருதயம், கண்டம், சிரசு முதலான இடங்களின் வழியே வருவது.

 

நிஷாதம் யானையின் கர்ஜனை (த்வனி) யை ஒத்தது. ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம் ஆகிய ஆறு ஸ்வரங்களின் அம்சமும் இதனிடம் பொருந்தியிருக்கும்.

 

வேதகாலத்தில் இதேஸ்வரங்கள் ஆர்ச்சிகம் (ஒரு ஸ்வரம்) காதிதம் (இரண்டு ஸ்வரங்கள்) ஸாமிகம் (மூன்று ஸ்லாங்கள்) ஸ்வாந்தரம் (நான்கு ஸ்வரங்கள்) என்ற பிரிவிற்குட் பட்டிருந்ததாயும், பின்பு, வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி' என்றபடி சாக்ஷாத் ஈஸ்வரனிடத்திலிருந்து வடமொழி உபதேசம் பெற்ற பாணினி முனிவர் உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம் என்ற மூன்று ஸ்வரங்களினின்றும் மேலே குறிப்பிட்ட ஏழுஸ்வரங்களையும் உண்டாக்கினாரென்றும், உதாத்தத்திலிருந்து காந்தாரமும் நிஷாதமும், அநுதாத்தத்திலிருந்து, ரிஷபமும், தைவதமும், ஸ்வரிதத்திலிருந்து ஷட்ஜமும், மத்யமமும், பஞ்சமமும் தோன்றின வென்பதும் ஒரு பிரமாணம்.

 

 

 

 

 

 

ஸ்வரஸம்யோகங்கள் *

 

[* ராகசம்யோகத்தை வேறுவிதமாகப் பிரித்துக் கூறுவாருமுளர்.]

 

எண்

ஸ்வரங்கள்

சம்யோகங்கள்

1

ஷட்ஜம்

1. ஷட்ஜம்

2

ரிஷபம்

2. சுத்த ரிஷபம்

 

 

3. சதுச்ருதி ரிஷபம்

 

 

4. ஷட்ச்ருதி ரிஷபம்

3

காந்தாரம்

5. சுத்தகாந்தாரம்

 

 

6. சாதாரண காந்தாரம்

 

 

7. அந்தர காந்தாரம்

4

மத்யமம்

8. சுத்தமத்யமம்

 

 

9. ப்ரதி மத்யமம்

5

பஞ்சமம்

10. பஞ்சமம்

6

தைவதம்

11. சுத்த தைவதம்

 

 

12.சதுச்ருதி தைவதம்

 

 

13.ஷட்ச்ருதி தைவதம்

7

நிஷாதம்

14. சுத்த நிஷாதம்

 

 

15. கைசிகீ நிஷாதம்

 

 

16. காகலீ நிஷாதம்

 

ஷட்ஜம், பஞ்சமம் இரண்டும் தனித்தனியே வழங்கப்படுவன.

 

சுத்த ரிஷபம் (மேலே குறிப்பிட்டபடி) ரிஷபம் மூன்று பிரிவையுடையது. அதில் சுத்த ரிஷபம் முதற்பட்டதாதலால் சுத்தமெனப்பட்டது.

 

சதுச்ருதி ரிஷபம் ஸ்வர ஆரம்பமான ஷட்ஜத்திலிருந்து இது நான்காவது ஸ்ருதியாகையால் (சதுர் ஸ்ருதி) எனப்படும்.

 

ஷட்ச்ருதி ரிஷபம் ஸ விலிருந்து ஆறாவது (ஷட்) ஸ்ருதிஸ்தான மாகையால் ட்ச்ருதி ரிஷபம் எனப்படும்.

 

சுத்த காந்தாரம் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்ட காந்தாரத்தில்இது முதல் காந்தாரமானதால் சுத்தகாந்தார மெனப்படும்.

 

சாதாரண காந்தாரம் ரிஷபத்வனியோடு இது சர்வசாதாரணமாகக் கலந்தொலிக்குந் தன்மையை யுடைத்தாதலின் இது சாதாரண காந்தாரமெனப் பெயர் பெற்றது.

 

அந்தர காந்தாரம் சுத்தகாந்தாரமும், சாதாரண காந்தாரமும் ரிஷபத்துடன் கலந்து மொலிக்குந் தன்மையன. அந்தர காந்தாரமானது தனியேத்வனிக்கும் இயல்பினதாதலின் இதற்கு அந்தர காந்தாரமெனப் பெயர் ஏற்பட்டது.

 

சுத்த மத்யமம் மத்யம ஸ்ருதி இரண்டில் இது முதல் மத்யமமானபடியால் சுத்த மத்யமமெனப்படும்.

 

ப்ரதி மத்யமம் இது சுத்தமத்யம (முதல் மத்யம்) த்தினின்றும் வேறு,பட்டு நின்று த்வனிப்பதால் ப்ரதிமத்யமமென்று பெயர் பெற்றது.

சுத்த தைவதம் மூன்று தைவதஸ்தானங்களில் இது முதலாதலால்இதற்கு சுத்த தைவத மெனும் பெயர் ஏற்பட்டது.

 

சதுஸ்ருதி தைவதம் பஞ்சமஸ்ருதியிலிருந்து இது நான்காவதுஸ்தானத்தி லிருப்பதால் சதுஸ்ருதி (நான்கு) தைவதமெனப்படும்.

 

ஷட்ஸ்ருதி தைவதம் பஞ்சமஸ்தானத்திலிருந்து இது ஆறாவது நிலையத்திலிருப்பதால் ஷட் (ஆறு) ஸ்ருதி தைவத மெனப்படும்.

 

சுத்த நிஷாதம். நிஷாத ஸ்தானங்கள் மூன்றனுள் இது முதலிடம் வகித்தலின் சுகத நிஷாத மெனப்படும்.

 

கைசிகீ நிஷாதம். தைவதத்திற்கு மூன்றாவது உச்சஸ்தானமாம் ஷட்ஸ்ருதி கைவதத்துல இது தங்கி ஈடுபட்டு நிலவுகின்றமையான் கைசிகீ நிஷாதமெனப்படும்.

 

காகலி நிஷாதம். நிஷாத நிலைகள் மூன்றனுள் இது மிக்க இனிமையும்உயர்வு முடையதாதலின் காகலி நிஷாதமெனப் பெயர் பெறும்.


4. ஸ்வர விளக்கம்.

 

இனிப் பழந்தமிழ் இசை நூற் குறிப்புக்களிற் புலனாவனவற்றையும், ஐம்பெருங் காப்பியங்களுட் சீரிய சிலப்பதிகாரத்தே காணக்கிடக்கும் இசை பற்றிய நுணுக்கங்களையும் இயன்றவரை தொகுத்து வரைவோம்.

 

நாதம் அகர உகர மகரம் என்கிற பிரணவத்தின் வடிவமாம். அப்பிரணவமான ஓங்காரத்தொனியினின்றும், ஸ்வரத்தொனி, நிர்க்கோஷத்வனி நிரணயகபெனி, வேணுத்தொனி, கானத்தொனி, சங்கததொனி, மேகத்தொனி, பேரித் தொனி, மத்தளத்தொனி, தமந்தத்தொனி எனுந் தசவிதத்தொனிகள் பிறாக, அவற்றின் காரணமாக ஆன்மா, மனது, அக்கினி, வாயுவாகும் நான்கின் முயற்சியான் ஏழு ஸ்வரங்களும், மந்தர இ ச மத்திய இசை,தார இன் தம் மூவிசைகளும் பிறப்பன வடமொழி இசை நூலோர் சட்ஜம், ரிஷபம், காரசாரம், மதயமம் பஞ்சமம், தைவதம், நிஷதம் எனப்பெயரிட்டு, குரிக்குஞ் சுருக்க எழுத்து வகையான் ச, ரி, கா, ம, ப, த, நி என்ற ஏழினையும் தமிழர் முறையே குால், துத்தம், சைக்கிள், உழைஇளி விளரி, தாரம் என்னுந் தக்க பெயர்கள் புனைந்து வழங்கி வந்தனர். இவற்றுள், மிடற்றால் குரலும். நாவால் துத்தமும், அண்ணத்தால், சைக்கிளையும், சிரத்தால் உழையும், நெற்றியால் இளியும், நெஞ்சால் விளரியும், மூக்கால்தாரமும் எய்து மென்பர்.

 

[† அகர, உகார, மகரங்கள் தம்மாற் பகர ஒரு அரிதாகி'' என்பது காண்க.]

 

இவை தமக்கு, ஓசை உவமையான் மயில், இடம், ஆடு, கொக்கு, குயில், குதிரை, யானை எனவு, சுவை உவமை பான் பால், தேன், கிழான், நெய், ஏலம், வாழை, மாதுளங்கனி எனவும், மண் உவமை பான், மௌவல், முல்லை, கடம்பு, வஞ், செய்தல், பொன்னாவிரை, புன்னை எனவும் முறைப்படுத்தினர். இவற்றிற்கு முறையே அட்சரங்களாவன அஆ, இஈ, உஊ, எஏ, ஐஇ, ஒஒ, ஒளஉ. இவைகட்கு மாத்திரை வகையான குரல், , துத்தம் , கைகள , உழை , இளி , விளரி , தாரம் எனவும் புலனாக்கினர். இவற்றுள் ஏழுபாலை பிறக்கும். அவற்றைப் பண்பற்றிய பகுதியிற் வரைவோம்.

 

இவ்வேழு சுவரங்களின் ஆயுள், அதிதேவதை, இடம், காலம், த்வனிமலர், சுவை, நாமம், பயன், வாம, திதி, நட்சத்திரம், நிறம், உணவு, ஜாதிபூச்சு, உடை, அணி, அப்யாசித்தோர், விருட்சம், வாகனம், ஆயுதம் முதலியஇலக்கணங்களுள் கிடைத்தவற்றைக் கொண்டு அறிந்தவரை சுவரச்சக்கரமொன்றை அமைத்துக் காட்டு வோம்.
 

ஸ்வரச் சக்கரம் 1.

 

ஸ்வரங்கள்

சாதி

(1)

சமியம்

(2)

அதி

தேவதை

(3)

தோன்றிடம்

(4)

மலர்

(5)

விருட்சம்

(6)

உணவு

(7)

உடை

(8)

சட்ஜம்

பிராம்ம

தேவ

அக்னி

சம்பூதீவம்

சாதி

மா

தயிர்ச் சோறு

வெண்மை

ரிஷபம்

க்ஷத்திரி

ரிஷி

பிரம்மா

சாகதீவம்

சண்பகம்

ஈச்சை

பாயஸம்

பீதாம்பரம்

காந்தாரம்

வைசிய

தேவ

நாமகள்

குசதீவம்

புன்னை

வாழை

பலகாரவகை

சிவப்பு

மத்யமம்

பிராம்ம

தேவ

சிவன்

கிரவுஞ்சதீவம்

மல்லிகை

எலுமிச்சை

சித்திரான்னம்

நீலம்

பஞ்சமம்

பிராம்ம

பிதிரு

திருமா ல்

சால்மலிதீவம்

மகிழம்பூ

மாதுளை

கனி (மா)

மஞ்சள்

தைவத

க்ஷத்திரி

ரிஷி

விநாய

சுவேததீவம்

பாதிரிப்பூ

திராட்சை

வெறுஞ் சோறு

பல நிறங்கள்

நிஷாதம்

வைசிய

ராக்ஷ

வெய்யவன்

புட்கரதீவம்

தாமரை

புன்னை

அரிசி

சாமளம்

  

 

 

ஸ்வரச் சக்கரம் 2. (தொடர்ச்சி)

 

ஸ்வரங்கள்

பாரியை

(9)

அணி

(10)

ஆயுதம்

(11)

வாகனம்

(12)

உருவம்

(13)

பூச்சு

(14)

ரஸம்

(15)

தமிழ்

பெயர்கள்

(16)

சட்ஜம்

கந்தர்வ

முத்து

கத்தி

அன்ன

தூலம்

குங்கும்

வீர, அத்புதரவுத்தர

 

குரல்

ரிஷபம்

கின்னர

நீலம்

பாகு

சிம்மம்

சூக்குமம்

அகில்

வீர, அத்புதரவுத்தர

துத்தம்

 

காந்தாரம்

யட்ச

வயிரம்

கதை

அண்டபேரண்

தூலம்

கஸ்தூரி

கருணா

கைக்கிளை

மத்யமம்

கிம்புருடம்

வைடூரியம்

ஆழி

கலை

நீட்டு

பச்சைக் கற்பூரம்

ஹாஸ்ய, சிருங்கா

உழை

பஞ்சமம்

நாக

மரகதம்

பிண்டிபாலம்

சாளுவம்

ஒழுங்கு

கோரோ சனை

ஹாஸ்ய, சிருங்கா

இளி

தைவத

தேவ

கோமே

நாராசம்

கிளி

நீட்டு

சந்தன

பீபத்ஸ்

விளரி

நிஷாதம்

இராக் கத

புட்பம்

அங்குசம்

-     - -

அதி தூ லம்

கதம்பம்

கருணா

தாரம்

 

ரசம் ஒன்பது (நவரசங்கள்). அவையாவன: பெருநகை ரஸம், சோக ரஸம், கருணா ரஸம், வீர ரஸம், அச்ச ரஸம், அற்புத ரஸம், சாந்திரஸம், ரௌத்திர ரஸம், சிருங்கார ரஸம். இவை இசைக்குறியன. இசைநாடகத்திற் கின்றியமையாதாதலின் அந்நாடகத்திற்கும் நவரஸங்களும் உரி யனவாம்.


மேற்கூறிய சுவரங்களுள் அந்தர காகலீக சுவரங்கள் சூத்திர ஜாதி என்பர்.

 

சுவரங்களின் பிறப்பிடத்தைக் கூறுங்கால் வடமொழி நூற்பிரமாணம் தமிழ் நூற் பிரமாணத்தினின்றும் சற்று பேதப்படுதல் காண்க. இச்சக்கரத்திற் கூறப் பெற்ற பதினாறு இலக்கணங்களோடு மேலே காட்டப்பெற்ற ஓசை, சுவை, மண உவமைகளைக் கூட்டிக் கொள்க. ஓசை உவமை முற்றிலும் ஒத்து வருகலும், மண உவமையான் பேதப்படுதலும் காண்க. சுவை உவமையைக் கூட்டிக் கொள்க. இனி, மாத்திரை அளவால் (மேலே கூறப்பெற்றது) ஒற்றுமை உண்டு.

 

மேற்காட்டிய சுவரங்கள் சஞ்சரிக்குங்கால் வாதீ, விவாதீ, சம்வாதீ, அனுவாதீ என நான்கு விதங்களாகச் சஞ்சரிக்கும். அவற்றுள் வாதி என்பது, பண் (ஆராகம்) ணினை உண்டு பண்ணுவதிலும், தூக்குங்கால் இன்ன இராகமென்று உணருவதிலும், தலை நிற்பதாம்; விவாதி நுணுக்கதைத் தந்து செவிக்கினிமை பயக்காது, பண்ணின் இன்பத்தைக் குறைக்கும் வாதீ சுவரங்கட்கு அரசாயும், விவாதி பகையாயும், சம்வாதி அமைச்சாயும், அனுவாதி ஏவற்றொழில் புரிவதாயு மிருப்பன சம்வாதீ என்னி, (இராகம்) பண்ணினை உணர்த்திய பின்ப அதனை நிலவச் செய்வதில் ஆற்றலுள்ளதாம்; அனுவாதீ என்பது பண்ணின் முதன்மையான சுவரங்கட்கு முனனேயாகிலும் பின்னேயாகிலும் நிலவி விரிவாச குந்தன்மையது.


 மேற்கூறிய நான்கும் பின் வருமாறு விரியும்:


சஞ்சாரபேதம்.     உதாரணம்.


 வாதீ             சரிகமபத செ, ரிகமபதநிச, கமபதநிச, மபதநிச, பதநிச, தங்க,
                  நிச, ச.


 விவாதீ.          சமகரிசரிகம, ரிபமகரி கமப - என்பது போல.
 சம்வாதீ.         சநிதபமகரிச, நிதபமகரிச, தபமகரிச, பமகரிச, மகரிசு, கரிச,
                  ரிச, ச.

அனுவாதீ.         சரிகா -, ரிகமா -, கமபா -, மபதா -, பதநீ - தநிசா -, சநிதா -, நிதபா -, தபமா -, பமகா -, மகரீ -, கரிசா


ஸ்வரபிரஸ்தாரம்.

 

ஸ்வரபிரஸ்தாரத்தின் பேதங்களின் பெயர் முறையான் சம்பூர்ணம், ஷாடம், ஒளடுவம், சுவராந்தம், சாமிகம், காதிகம், ஆர்ச்சிகம் என ஏழுவகையான் வரும். அவற்றிற்கு உதாரணம் வருமாறு.

 

சம்பூர்ணம்.             சரிகமபதநி, ஷாடவம். சரிகமபத, ஒளடுவம். சரிகமப,

சுவராந்தம்.             சரிகம், சாமிகம், சரிக, காதிகம். சரி, ஆர்ச்சிகம் ச.

ஸ்தாயி. சாதாரணமாக ஸ்தாயீ என்ற பதத்தை இசை வல்லுநரன்றி, இசைவிருப்பமுள்ள அனைவரும் கேட்டிருப்பார்கள். ஸ்தாயீயாவது கீழ் (தக்கு) நடு (மக்யம்) மேல் (எச்சு) என்று மூன்று வகைப்படும். அதாவது கீழ்க்குரலிற் பாடுகல், நடுக்குரலிற் பாடுதல், மேல் குரலிற் பாருவது. இம்மூன்றனைத் தான் நாம் மேலே மந்தரம், மத்திமம், தாரம் என்று கூறியது. தக்கு (கீழ், மந்தரம்) ஹிருதயத்திலிருந்தும், (மத்தியம் (மத்யம், நடு) கழுத்திலிருந்தும், எச்சு மேல், தாரம்) சிரத்திலிருந்தும் தோன்று மியல்பின. ஒரு ஸ்தாயீ என்பது ஷட்ஜ பஞ்சமங்கள் பொருந்திய பன்னிரண்டு சுவர ஸ்தானங்களுள்ளது.

 

தமிழர் இசைக்கலை.

 

வர்ணங்கள்: - ஸ்தாயீ, ஆரோகணம், அவரோகணம், சஞ்சாரம் என
 நான்கு திறத்தவை. வர்ணமாவது அழகு; செவிக்கினிமை.


      ஸ்தாயீ: - என்பது ஒரே ஸ்வரத்தைப் பன்முறை சமமான மாத்திரை
 கள் இடையே கொடுத்துச் சொல்வது: - ச... ச.... ச... ச.

ஆரோகணம்: - வரிசைப்படி இடைவெளி தந்து ஸ்வரத்தை மே
 லெடுத்து இசைத்தல்: - ச.... ரி... க................. நி.

 

அவரோகணம்: - வரிசையாக நிஷாதத்திலிருந்து இடையே சம மாத்திரை கொடுத்து இறக்கிப்பாடுதல்: - நி.................. க... ரி... ச.

 

சஞ்சாரம்: - மேற்கூறிய மூவகை சஞ்சாரங்களையும் கலந்து இசைத்தல் : - ச... ச... ச... நி... ம்... ம்.... நி... ம்... ப.


5 இராசம்

 

சப்த ஸ்வரங்களாலும் மேற்கூறிய ஸ்தாயீ, ஆரோகணம், அவரோகணம்
சஞ்சாரமாகிய நால்வகை வர்ணங்களாலும் அழகுற வமைந்து செவிக்கின்பந்தருவதான தொனி இராக மெனப்படும். இராசமென்பது 'பண்' ஆகும். "பண்ணுறத் தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் மக்கள் வடமொழி யுடையார் இராகம்' என்றதைப் 'பண்' ணெனக் கொண்டிருந்தனர். ஏழு ஸ்வரங்களையும் பிறவற்றையுங் கொண்டு பண்ணப்படுதலின் 'பண்' என்றனர் போலும். இதனை,

 
 பாவோ டணைத லிசையென்றார் பண்ணென்றார்
 மேவார் பெருந்தான மெட்டானும் - பாவாய்
 எடுத்தன் முதலா விருநான்கும் பண்ணிப்
 படுத்தமையாற் பண்ணென்று பார்.


 எனவரும் எதுவாலும் உணர்க.

 

ஏழு ஸ்வரங்களும் கமகங்களோடு * சுருதியுடன் கூடித் தலைமை பெற்ற முப்பத்திரண்டு இராகங்களை யெய்தி நிலவும். கமகங்கள் பத்து. அவை ஆரோகணம் அவரோகணம், டாலு, ஆந்தோளம், ஸ்புரிதம், ஆஹதம், மூர்ச்சனை, திரியுச்சம், பிரத்யாகதம், கற்பிதம் என்பன. அவற்றுள்,

 

*     சுருதிச்சக்கரம் பின்னோரிடத்தில் வரும்.

புராதன சங்கீதம் 'என்னும் தலையங்கம் இனி 'தமிழர் இசைக்கலை' என்னும் பெயர்புனைந்து வெளிவரும். இதன்கண் தற்காலம் தமிழ் நாட்டில்வழக்கிலுள்ள ஆரிய சங்கீதமுறை போன்றே, தமிழர்க்கும் தனியே தமிழ்இசைக்கலை வெகு பழங்காலந் தொட்டே உண்டென்பதையும், அதனைத்தமிழர் எங்ஙனம் கையாண்டு வந்தன ரென்பதையும், அதற்குரிய பிறப்பிலக்கணம் முதலியவற்றையும், சிறப்புகளையும், இசை தழுவி வரும் பிறவற்றையும்ஒப்பிட்டுக்காட்டி, பழந்தமிழ் நூல்களின்றும் அவற்றைத் தக்க மேற்கோளுடன் விளக்கி, மயக்கமின்றி யாவரும் தமிழ் இசையின் திறத்தை யுணர இயன்றவரை எழுதி வரப்படும்

 

திருவிளையாடற் புராணம்.

இவை, திரிபம், ஸ்புரிதம், கம்பிதம், லீனம், அந்தோளம், வலி, திரிபின்னம், குறுலம், ஆஹதம், உல்லாளிதம், பல்லவதம், கும்பிதம், முத்ரிதம், நாமிதம், மிச்ரிதம் எனப் பதினைந்தென்பர் வடமொழி இசை நூலோர். அவற்றுள் பத்தே தமிழ் நூல்களுட் காணப்படுவன. இதற்குக் காரணம் இப்பத்துவித கமகங்களே தமிழிசை நூலோரால் சாலும் எனக் கொள்ளப்பட்டது போலும். அபிதான சிந்தாமணியில் கொள்ளப் பெற்றவை இவை பத்துமேயாம்.

 

1. ஆரோகணம்: - ஸ்வரங்களை வரிசைப்படி மேலெடுத்து அகாரமாக இசைத்தல்: ச, ரி, க, ம, ப, த, நி, ச.

 

2. அவரோகணம்: - ஸ்வரங்களை வரிசைப்படி மேலிருந்து கீழிறக்கி இசைப்பது: ச, நி, த, ப, ம, க, ரி; ச. (இவ்வாரோகண அவரோகணங்களையே பிருகா என்பர்.

 

3. டாலு: - எடுத்த உடனே ஒரு ஸ்வரத்தை இசைப்பதும், மற்றொன்றைத் தொடக்கத்திற் காட்டி வேறொரு ஸ்வரத்தை முடிவில் புலப்படுத்துவதும்: பபாஸ மாஸகா.

 

4. ஆந்தோளம்: - முன்னும் பின்னுமாக ஸ்வரங்களை எழவைத்தல் - சரிசபாப சாஸமாம்.


5. ஸ்புரிதம்: - இரண்டிரண்டாக ஸ்வரங்களைப் பேசுதல் - சச, ரிரி, கக, மம்,

 

6. ஆஹதம்: - ஒரு ஸ்வரத்திலிருந்து ஆரோகணத்தில் மற்றொரு ஸ்வரத்திற்கு விரைந்தேறுதல்: சரிரிக, கமமப.

 

7. மூர்ச்சனை: - ஆரோகண அவரோகண வாயிலான் இராகத்தின் ஸ்வர ரூபத்தை உணர்த்துந் தன்மை. சரிமபதஸ, ஸநிதபமகரிஸ.

 

8. திரியுச்சம்: - உயர்த்தி மூன்று மூன்று ஸ்வரங்களாகப் பாடுதல்: சசச, ரிரிரி, ககக, மமம்.

 

9. பிரத்யாகதம்: - ஒரு ஸ்வரத்திலிருந்து அவபோகணத்தில் மற்றொரு ஸ்வரத்திற்கு விரைந்தேறுதல் சநிநி ததபப மம.

 

10. கம்பிதம்: - ஒரே ஸ்வரத்தை அசைத்துக் கொண்டே இருப்பது: பபபபப. இதில் இனிமை மிகுதி,

 

இங்ஙனம் மேற்கூறியவற்றோடு எய்தப் பெற்ற இராகங்கள் (1) மேளகர்த்தா ஜன்யம் எனவும், (2) சர்பூர்ணம் சாடவம் ஒளடுவம் எனவும் (3) சுத்தம் வக்கிரம் எனவும், (4) சுத்தம் சாயாலகம் சங்கீர்ணம் எனவும், (5) மித்திரம் சத்ரு வெனவும், (6) புருடஸ்திரீ தூதீ புத்ரமெனவும், (7) இராகாங்கம்பாஷாங்கம், கிரியாங்கம், உபாங்கம், எனவும் எழுதிறப்படும். இவற்றின் விளக்கம் பின் வருமாறு:

 

1. மேளகர்த்தா: - ஆரோகண அவரோகணங்கள் குறைவற அமைந் திருக்கும் இராகங்கள். ஜன்யம் மேளகர்த்தா நீங்கிய ஏனைய இராகங்கள்.

2. சம்பூர்ணம்: - ஏழு ஸ்வரங்களும் அமையப் பெற்ற இராகங்கள் சாடவம் ஆறு ஸ்வரங்களுள்ள இராகங்கள். ஒண்டுவம் ஐந்து ஸ்வரங்கள் பொருந்தியவை.

 

3. சுத்தம்: - ஸ்வரங்கள் 'நிப' என்பது போல் முன்பின்னாக வாராது வரிசை தவறாது வரும் இராகங்கள். வக்கிரம் ஸ்வரங்கள் முன்னும் பின்னும் பலபடியாக வருவன.

 

(4) சுத்தம் இசை நூல் வரையறைப்படி ஸ்வரங்கள் அமைந்த இராகங்கள். சாயாலகம் பிற இராகங்களின் சாயையுடைய பண் கள். சங்கீர்ணம் மேலிரண்டும் (சுத்தமும் சாயாலகமும்) அமைந்த பண்கள்.

 

(5) மித்திரம் ஒரு இராகத்தைப் பாடிய பின் எந்த இராகத்தை இசைத்தால் இனிமை மிகுமோ அவையே மித்திர ராகங்கள்; இனிமை பயக்காதவை சத்ரு ராகங்கள்.

 

மேலே தலைமை பற்றி வரும் பண்கள் முப்பதிரண்டென்றோம். மேக விரஞ்சி, குறிஞ்சி, பூபாளம், கைசிகம், வராளி, மலஹரி, பல்லதி, இந் தோளம், படமஞ்சரி, நாராயணி, நாட்டை, வசந்தம், பௌளி, சீராகம், பங்காளம், கூர்ச்சரி, கௌளி, காந்தாரி, காம்போதி, இலலிதை, தேவக்கிரியை, தேசாட்சி, மாளவி, சாவேரி, தேசீ, சாரங்கம், தோடி, இராமக்கிரியை, வேளாவளி, பைரவி, குண்டலக்கிரியை, தன்னியாசி என்பன அவ்விராகங்கள்.

 

இவ்விராகங்கள் முப்பத்திரண்டும், புருட ராகமென்றும் ஸ்திரீ ராகமென்றும் இருபெரும் பிரிவின்பாற்படுவனவாம். புருட விராகங்கள் எட்டு, ஏற்ற ஸ்திரீ ராகங்கள் இருபத்துநான்கு. அவையாவன:

 
 புருடர்கள்.                         ஸ்திரீயாகங்கள்


1. பைரவி.                     தேவக்கிரியா, மேகவிரஞ்சி, குறிஞ்சி
2. பூபாளம்.                    வேளாவளி, மலஹரி, பெளளி.
3. சீராகம்.                     இந்தோளம், பல்லதி.
4. படமஞ்சரி.                  தேசீ, இலலிதை, தோடி.
5. வசந்தம்                     இராமக்கிரியை, வராளி, கைசிகம்.
6. மாளவி                     நாராயணி, குண்டலக்கிரியை, கூர்ச்சரி
7. பங்காளம்.                   தன்னியாசி, காம்போதி, கௌளி.
8. நாட்டை.                    தேசாக்ஷரி, காந்தாரி, சாரங்கம்.

 

இப்புருட விராகங்களுக்கும் அவ்வவற்றின் ஸ்திரீ ராகங்களுக்குமாக துதி ராகங்களும் புத்திர ராகங்களும் முறையே உண்டு. இவை சாதி, அதி தேவதை, குணம், இரஸம், வேதம் முதலிய பலவும் உளவாகி இலங்குவன.


 பின்வரும் படத்தால் இவையனைத்தும் புலனாம்.


 

எண்

புருடராகம்

தூதிராகம்

புத்ரராகம்

சாதி

அதிதேவதை

குன

இரசம்

வேதம்

1

பைரவி

கன்னடம்

காபி

பிராமண

ஈசன்

ராஜஸம்

ரௌத்திரம்

சாம

2

பூபாளம்

தேசாக்ஷி

தேவகாந்தாரி

நீலாம்புரி

பிராமண

திருமால்

ராஜஸம்

சிருங்

சாம

3

ஸ்ரீராகம்

 

மாருவ

ராமக் கிரியை

க்ஷத்திரிய

கலைமகள்

தாமஸம்

பீபத்ஸ

யஜுர்

4

படமஞ்சரி

அசாவேரி

சங்கராபரணம்

மந்தாரி

சௌராட்டிர கேதாரம்

க்ஷத்திரிய

இலக்குமி

தாமஸம்

கருணா

யஜுர்

5

வசந்தம்

மோகனம்

முகாரி

லலித, தோடி

தன்னியாசி

நாராயணி

கௌளி

வைசிய

சூரியன்

சாத்வீகம்

ஹாஸ்ய

இருக்கு

6

மாளவி

இந்தோளி

பந்துவராளி

வராளி

கௌளம்

வைசிய

நாரதர்

சாத்வீகம்

பயானக

இருக்கு

7

பங்காளம்

போகி

பூர்வி

சாவேரி

பியாகடை

பெள்ளி

சூத்திர

விநாயகர்

ராஜஸம்

அத்புத

அதர்வண

8

நாட்டை

வேளாவளி

மனோஹரி

யமுனா

சூத்திர

தும்புருதேவர்

ராஜஸம்

வீர

அதர்வண

 

உறையூர். ஸ்ரீ. வெ. வரதராஜய்யங்கார்.

 

ஆனந்த போதினி – 1928, 1929 ௵ -

ஏப்ரல், ஆகஸ்டு, நவம்பர், ௴

 

 

 

 

No comments:

Post a Comment