Wednesday, September 2, 2020

 


திருக்கோட்டியூர் நம்பி ஶ்ரீ உடையவருக்குத் தெரிவித்த பதினெட்டுத் திருமொழிகள்

 

(1) சேற்றிலுள்ள பிள்ளைப்பூச்சிக்கு அச்சேறு ஒட்டாததுபோல ஞானிக்குப் பிறப்பிடம் லோகமேயானாலும் அவனுக்கு லோக வாசனை சேராது அதுபோல முழக்ஷவுக்குச் சம்ஸார பீஜம் நசிக்க வேண்டும்.

 

(2) அக்னியிலே பிறந்த விளக்கானது சீதளமான காற்றினாலே அமருவது போல சாத்வீகம் தலை யெடுக்தால் அகங்கார மமகாரங்கள் நிவர்த்தியாம். அதுபோல சம்ஸாரபீஜம் நசித்தா லொழிய அகங்காரமமகாரங்கள் நிவர்த்தியாகமாட்டா.

 

(3) அகங்கார மமகாரங்கள் நிவர்த்தியானா லொழிய தேகாபிமானம் போகாது.

 

(4) தேகாபிமானம் போனாலொழிய ஆத்ம ஞானம் பிறவாது.

 

(5) ஆத்மஞானம் பிறந்தாலொழிய ஐசுவரிய போகாதிகளி பிறக்கமாட்டாது.

 

(6) ஐசுவரிய போகாதிகளில் உபேக்ஷை பிறந்தாலொழிய பகவத் பிரேமம் பிறக்கமாட்டாது.

 

(7) பகவத் பிரேமம் பிறந்தாலொழிய விஷயாந்தர ருசி நீங்காது.

 

(8) விஷயாந்தரருசி நீங்கினாலொழிய பாரதந்தரியம் பிறவாது.

 

(9) பாரதந்த்ரியம் பிறந்தாலொழிய அர்த்த காம ராகத்வேஷாதிகள் ஒழியா.

 

(10) ராகத்வேஷாதிகள் ஒழிந்தாலொழிய ஸ்ரீவைஷ்ணவத்வம் கைகூடாது.

 

(11) ஸ்ரீ வைஷ்ணவத்வம் கைகூடினாலொழிய சாத்வீக பரிக்ரஹம் பிறவாது.

 

(12) சாத்வீக பரிக்ரஹம் பிறந்தாலொழிய பாகவத பரிக்ரஹம் பிறவாது.

 

(13) பாகவத பரிக்ரஹம் பிறந்தாலொழிய பகவத் பரிக்ரஹம் பிறவாது.

 

(14) பகவத் பரிக்ரஹம் பிறந்தாலொழிய அனன்ய பிரயோசன னாகமாட்டான்.

 

(15) அனன்ய பிரயோசனனாகாதே அனன்யார்கசேஷபூத னாகமாட்டான்

 

(16) அனன்யார்க சேஷபூதனாகாமல் அனன்ய சரணனாகமாட்டான்.

 

(17) அனன்ய சாணனாகாமல் அதிகாரி புருஷனாகமாட்டான்.

 

(18) அதிகாரி புருஷனானவனுக்கே திருமந்தரார்த்தம் கை கூடும்.


ஓரன்பன்,

 

ஆனந்த போதினி – 1927 ௵ - ஜுன் ௴



 

 

No comments:

Post a Comment