Saturday, September 5, 2020

 

பெண் கல்வி

 

1. பெண்பாலர்க்குரிய பருவங்களேழில் பேதை, பெதும்பை, மங்கைப் பருவங்களே அவர்கள் கல்விக்குரியனவாம். மற்றைய நான்கும் கற்றவற்றை அநுபோக முறையிற் காட்டுவதற் கேற்றனவாம்.

 

2. “Home is the best school for character, என்ற ஆங்கில மொழிப்படி, நன்னடக்கை பயில்வதற்கு ஏற்ற இடம் இல்லமே. தாய் தந்தையர்களே தங்கள் மக்கள் நன்னடக்கைக்கு காரண கர்த்தராவர். குலவிருத்தி, குடும்பவிருத்தி குலமங்கையர் வசமிருப்பதாலும், வாழ்மனை தனக்கழகு குலமங்கை','மனைக்கு துதிமனையாள்'என ஆன்றோர் மொழியுளதாதலாலும், பெண்களை இளமையிலேயே அத்தகைய நெறியில் பயிற்றுவது பெற்றோர் கடனாகும்.

 

3. இந்து மதா சாரத்திற்கேற்ற கல்விதான் நம் இந்துப்பெண்களுக்கு அவசியமே யொழிய, மேனாட்டு நாகரீகத்தை யொட்டி, சர்வகலாசாலைப் பட்டத்துடன் உயர் தரக் கல்விகற்று, ஆண்பாலர் பெண்பால ரென்கிற பேதமின்றிச் சபைகளில் கூடிக்குலாவுவதும், தனியே உலாவுவது மாகிய கல்வியன்று. இதர சீர்திருத்தம்! மேனாட்டு நாகரீகம்!!

 

4. “கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான் - தாளை வணங்காத் தலை'' என்றபடி பெண்கள் இளமையிலேயே தெய்வபக்தி இன்னதென அறியவேண்டிய தவசியம். ஆதலின், பெண்கள் அதிகாலையிலேயே படுககை விட்டெழுந்து காலைக்கடன்களை முடித்து, தந்தசுத்தி செய்து, முகங்கழுவித் திலகமிட்டுப் பூசைவீட்டைச் சாணங்கொண்டு மெழுகிச் சுத்திசெய்து சித்திரக் கோலத்தால் அலங்கரிக்கத் தெரிய வேண்டிய தவசியம். சிறுவயதிலேயே காலை எட்டு மணிவரை தூங்கி விழித்து, இருந்த இடத்திலேயே அரை, குலறயாய்ப் பல்விளக்கி முகங்கழுவிக் காலை உண்டி கொண்டு 'ஏழாங்காய்' முதலிய விளையாட்டுகளில் தேர்ச்சியடையும் பெண்களா குடும்ப பாதுகாப்புக் குரியராவர்? தொட்டிற்பழக்கம் சுடுகாடு மட்டு மன்றோ!

 

5. ஔவையாரியற்றிய அரிச்சுவடி முதல் தேவர் திருக்குறள் வரையிலுள்ள அரிய நூல்களை அறவே கற்றுணர்வதும், மகாபாரதம், இராமாயணம், பாகவதம், பக்தவிஜயம் முதலியவசன நூல்களைப்படித்துத் தேர்ச்சியடைய வேண்டியதும் முக்கியம். பண்டைக்காலத்தில், டெணகள் எத்தகைய குண தசராய் எவ்வித நெறியை மேற்கொண்டு பெற்றோர், உற்றோர், மற்றோர்களிடத்திலும், மணமானபின் கணவன், மாமி, மாமன், நாத்திமார், மைத்துனன் மார்களிடத்திலும் எவ்விதம் பக்தி பூண்டொழுகி வந்தார்க ளென்றும், அவர்கள் நடை, உடை, பாவனைகள் எத்தன்மைத் தெனறும் நன்கு புலப்படுமன்றோ! இதை நீக்கி,'பையில் உமன்'களைக்கொண்டு கல்வி பயிற்று வித்தல் விவேகமாமோ! இக்காலத்தில் பெண்களில் அநேகர் கல்வியே கற்காது, அழகையும் தன்னையலங்கரிப்பதையுமே மேற்கொண்டு தங்களை மணக்கும் கல்விவாய்ந்த ஆடவர் முன் நிரக்ஷா குக்ஷிகளாய் நாணமுறத் தலைகுனிந்து நிற்கக் கண்டுளோம்.

   "கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
   புண்ணுடையர் கல்லா தவர்''            

 

என்ற தேவர் வாக்கு பெண்களுக்கு ஒவ்வாதோ!

 

6. கணக்கு வகைகளில், குடித்தனப் பாங்கு இன்னதெனத் தெரிந்து வரும்படிக்கேற்ற செலவு சிக்கனமாகச் செய்யவும், குடும்பத்திற்குரிய வரவு செலவு கணக்குகளைப் பதியவும் தெரியவேண்டிய தவசியம்.

 

7. தாய்மார்களுடன் கலந்து சமைய லறையில் அவர்களுக்கு ஒத்தாசையாயிருந்து சிறுகச் சிறுகச் சமையல் வேலையில் தேர்ச்சியடைய வேண்டும். நளமகாராஜனும் சமையலில் தேர்ச்சி பெற்றானென்றால், பெண்களுக்குச் சொல்லவும் வேண்டுமா! அநேக நாரீமணிகள் செல்வப் பெண்களாய் வளர்ந்து மணமடைந்த பின் புக்ககத்திற்குச் சென்று சாதம் வடிக்கத் தெரியாமல் வடிகஞ்சியைக் கையில் ஊற்றிக் கொண்டதினால் கை கொப்புளிக்க, மாமி, நாத்திமார், அண்டை அயல் வீட்டார்'' இதுவும் தெரியாமலா அம்மா நீ இதுவரை வளர்ந்தாய்'' என நெட்டொடிக்க மனம் புண்ணாகிச் செய்வதின்னதென்று தெரியாமல் சிந்தைகலங்கி விழிப்பதையும் நாம் பார்த்துள்ளோம்.

 

8. வீட்டுவேலை முடிந்தபின், போஜனத்திற்கு முன் மெய்குளித்து ஆடையுடுத்திப் பொட்டிட்டு, தம் இஷ்டதெய்வங்களை அர்ச்சித்து பூஜிக்க வேண்டும். 9. பெண்களுக்கு இனிய குரல் இயற்கையிலேயே அமைப்பு ஆனது பற்றிப் பூஜிக்குங்கால், தேவாரம், திருவாசகம், திருவருட்பா, தாயுமான சுவாமி பாடல்கள், இவற்றை இனிய கீதத்துடன் பாடி ஸ்மரித்தல் வேண்டும்

 

9. அதைவிட்டு, ச, ரி, க, ம, ப, த, நி என்கிற சப்த ஸ்வரங்களுடன் ஆர்மோனிய முதலிய வாத்தியங்களை அயலானைக் கொண்டு பயில்விப்பது, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பென்னும் நால்வகைக் குணங்களையு மறவே யொழித்து அம்பலங்களில் நடித்து ஆடவரை மயக்கி, காசைப் பறித்து அநேக குடிகளை நாசமாக்கும் வேசியர் செயற் கொப்பா மன்றோ!

 

10. தையல் வேலைகளில் பயிற்சியடையவும், இரவிக்கை முதலியவைகளைத் தாங்களே தைத்துக்கொள்ளவும், கிழிந்த ஆடைகளை ஒழுங்காகத் தைக்கவும், நூல்வகைகளில் சித்திரப் பின்னல்கள் போடவும் தெரிய வேண்டிய தவசியம்.

 

11. அந்திப் பொழுதிலே, கால் முகங்கழுவி, நெற்றியிலே பொட்டணிந்து, திருவிளக் கேற்றிவைத்துத் திருமகளை நினைந்து கும்பிட வேண்டும்

 

12. வேலை முடிந்தபின், இராப்போஜன முண்டு பகவானை நினைத்துப் படுக்கை சென்று மிதமான துயில் கொளல் வேண்டும்.

 

இத்தகைய கல்விபெற்ற மங்கையை மணந்தவனன்றோ எல்லோராலும் நன்கு மதிக்கப்பட்டு புண்ணியவானாம், பாக்கியவானாமென போற்றப்படுவன். அவரில்லமே திருமகள் உறைவிடமாம். அந்நாரீமணியை யீன்றோரே சான்றோராம்.

 
 

வே.இ. குப்புசாமி,

 

ஆனந்த போதினி – 1921 ௵ - பிப்ரவரி ௴

 

 

 

 

No comments:

Post a Comment