Thursday, September 3, 2020

 

நற்போத மஞ்சரி

 

1. நுதினமுங் கடவுளை 'மனவாக்குக் காயமெனுந் திரிகரண சுத்தியோடு வணக்கஞ் செய்ய வேண்டும்!


2. பிரதி தினமுங் காலையில் படுக்கை விட்டெழுந்து ஈசுர நாம சங்கீர்த்தனம்' செய்ய வேண்டும்!


3. கடவுளை வணங்கும்போது 'வேறெண்ணங்கள்' மனதில் எழும்படி இடங் கொடாது ஒரு நினைவாக' வணங்க வேண்டும்!

 

4.அன்புருவாய 'இறைவனை 'அன்பு செலுத்தி 'அன்பால்' அறிய
 வேண்டும்!


5. 'ஐங்குரவர்களிடத்து' வணக்கத்துடனும், விசுவாசத்துடனும் பட்சமாக நடக்க வேண்டும்!

 

6. 'பெரியோர்களிடம்' மரியாதையாகவும், வணக்கமாகவும் நடக்கவேண்டும் 


7. 'ஸத்ஜனசங்க' சகவாசஞ் செய்யவேண்டும்!

 

8. 'கெட்ட சகவாசத்தை' அடியோடு நீக்க வேண்டும்!


9. கற்க வேண்டிய'விஷயங்களை 'ஐயந்திரிபறக்கற்று அதன்படி நடக்கவேண்டும்.


10. மிதமிஞ்சி - அதிகமாக சாப்பிடுவதையும் பேசுவதையும் 'நீக்கி விடவேண்டும்!


11. 'வஞ்சகத்தை' அடியோடு நீக்க வேண்டும்!


12. 'நாணயத்தை' நன்றாகக் காப்பாற்ற வேண்டும்!


13. 'நல்வழியில் நடந்து 'நல்லவன் " என்ற நற்பெயரெடுக்க வேண்டும்!


14. 'செல்வச் செருக்கென்பதை' அறவே நீக்க வேண்டும்!


15. சகல ஜனங்களிடத்தும் பட்சமாக' இருக்க வேண்டும்!


16. மதக்குறியாகிய' விபூதி - உருத்திராக்கம்' சரீரத்தில் அணிய வேண்டும்.

 

17. ஒவ்வொரு நாளும் சுத்தநீரில் மூழ்கி, சுத்தமாய்' இருக்க வேண்டும்!

18. தேகசுகத்தைப் போல' மனதை 'யுஞ் சுத்தமாக' வைத்துக் கொள்ளவேண்டும்!

 

19. மனதிலெழுங் 'கெட்ட எண்ணங்களை' நீங்கி நல்லெண்ணங்களை' மனதிற் படியச் செய்ய வேண்டும்!


20. வெளியிடங்களுக்குச் சென்று வீடு புகின் கால் கழுவிப் புகவேண்டும்!


21. 'நித்திய கருமவிதி' களைத் தவறாது செய்யவேண்டும்!

 

22. 'தருமம்' செய்யுங் குணத்தை சதா கைக் கொள்ள வேண்டும்!


23. 'ஜீவ ஹிம்சை' யைக் கனவிலுஞ் செய்யாதிருக்க வேண்டும்!


24. 'புலாலுண்ணுந் தீய வழக்கத்தை' இன்றே இன்னே இப்பொழுதேநீக்க வேண்டும்!


25. 'புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு' அடிக்கடி சென்று தெரிசிக்க வேண்டும்!

 

க. அ. கந்தசுவாமி, தமிழ்மாணவர், குரும்பூர்.

 

ஆனந்த போதினி – 1927 ௵ - டிசம்பர் ௴

 



 

No comments:

Post a Comment