Thursday, September 3, 2020

 

நற்போதனைகள்

 

1. மார்க்கத்தில் போகும் போது மண்மேடு, பசுமாடு, தெய்வம், பிராமணன், நெய்க்குடம், தேன் குடம், நாற்சந்தி, அரசு முதலிய புண் ணிய விருக்ஷம் நேரிட்டால் அவைகளைப் பிரதக்ஷணமாகத் தாண்டிப் போகவேடியது.

 

2. கன்றுக்குட்டிக் கட்டுத்தரியைத் தாண்டக் கூடாது. மேகம் மழை பெய்யும் போது ஓடப்படாது. ஜலத்தில் தன் உருவத்தைப் பார்க்கவும் கூடாது.

 

3. தன் மனைவியுடன் ஒரு பாத்திரத்தில் புசிக்கப்படாது. அவள் சாப்பிடும் போதும், மையிட்டுக்கொள்ளும் போதும், எண்ணெயிட்டுக் கொள்ளும் போதும் ஒருகாலும் பார்க்கலாகாது.

 

4. கிருகஸ்தன் ஒரு வஸ்திரத்துடன் அன்னம் புசிக்கப்படாது. வஸ்திரமில்லாமல் ஸ்நாநம் செய்யலாகாது. சாம்பல், மாட்டுத் தொழுவம், உழுதநிலம், ஜலம், யாகசாலை, மலை, பாழ்ங்கோயில், புற்று, நில வெடிப்பு முதலிய விடங்களில் மலஜலங்களை விடக்கூடாது.

 

5. நெருப்பை வாயினாலூதப்படாது. சுத்தமான வஸ்துக்களை நெருப்பில் போடக்கூடாது. காலை அக்கினியில் காய்ச்சலாகாது. உயரமாகப் படுத்துக்கொண்டு அக்கினியைக் கீழே வைக்கலாகாது. அதைக் காலாற் றாண்டவும் கூடாது.

 

6. ஜலத்தில் சிறு நீர், மலம், கோழை, எச்சில் பட்ட வஸ்துக்கள், இரத்தம், விஷம் முதலியவைகளைப் போடக்கூடாது. குடியில்லாத வீட்டில் தனியாய்ப் படுக்கவும் ஆகாது.

 

7. தண்ணீரை இரண்டு கையினாலெடுத்துச் சாப்பிடப்படாது. பக்ஷணங்களை மடியில் வைத்துக் கொண்டு புசிக்கலாகாது.

 

8. வெங்கலப் பாத்திரத்தினா லொரு போதும் கால் சுத்தி பண்ண லாகாது. பின்னமான மண் பாத்திரத்திலும், மனதுக்கு ஒவ்வாத பாத்திரத்திலும் புசிக்கலாகாது. குடுமிக்கு வெளியில் பூவைச் சுத்தலாகாது. வீடு, ஊர் முதலான விடங்களில் வாசற்கதவு சாத்தியிருக்கும் போது வேறு வழியில் உள்ளே பிரவேசிக்கலாகாது.

 

9. படுக்கையில் உட்கார்ந்து கொண்டும், இடது கையில் அன்னத்தை வைத்துக்கொண்டும், நடந்து கொண்டும், ஆசனத்தின் மீது இலை போட்டுக்கொண்டும், - சாப்பிடக்கூடாது. முகத்தை மூடிக்கொண்டும், வாயைத் திறந்து கொண்டும், தலையைக் காலில் மாட்டிக்கொண்டும் தூங் கவே கூடாது.

 

10. இரண்டு கைகளையுஞ் சேர்த்துக்கொண்டு தலையைச் சொரியப் படாது. ஒரு தினத்தில் ஸ்நாநம் செய்த பிறகு அப்பியங்கனம் செய்யலாகாது. சாப்பிட்டுக் கைகால் சுத்தி செய்யாமல் தலையை இடது கையாலும் தொடக்கூடாது.

 

11. பதிதர், சண்டாளர், புழுக்கையர், மூர்க்கர், பொருள் முதலிய வற்றால் கர்வமடைந்தவர்கள், தாழ்ந்த சாதியார் இவர்களுடன் ஒரு மரத் தினிழலிற்கூட ஒருமித்து வசிக்கக்கூடாது.

 

12. பிண்ணாக்கு முதலியன சாரமில்லாத பதார்த்தங்களைப் புசிக்கலாகாது. அளவுமீறி ஆகாரத்தை யதிகமாகப் புசிக்கப்படாது. வயிற்றைப் பாதி பங்கு அன்னத்தாலும், காற்பங்கு ஜலத்தாலும் நிறப்பிக்கொண்டு மீதி காற்பங்கு வாயு சஞ்சரித்துக்கொண்டிருக்க விட வேண்டியது.

 

(இது மநுதர்ம சாஸ்திரம் நான்காவது அத்தியாயம் ஆகிதாக்கினி என்ற விஷயத்திலுள்ளது.)

 

S. V. பழனியப்ப பிள்ளை,

 சாலியாபாளையம், கரூர்.

 

ஆனந்த போதினி – 1924 ௵ - ஜுன் ௴

 



   

 

No comments:

Post a Comment