Sunday, September 6, 2020

 மந்திரங்கள்

 

{1). ஆண் பால், பெண் பால், ஒன்றன் பால், என மந்திரங்கள் மூவகையாம். 'ஹும், பட்' என்ற பதங்களைக் கொண்டு முடிகிற மந்திரங்களுக்கு ஆண்பால் மந்திரங்களென்றும், ச்வாஹா' என்ற பதத்தைக் கொண்டு முடிகிறவற்றிற்குப் பெண்பால் என்றும், 'நம' என்ற பதத்தைக் கொண்டு முடிகிறவற்றிற்கு ஒன்றன் பாலெனவும் பெயர்.


உதாரணம்: -

 

"ஓம் ஹரீம், ஸ்புரஸ்புர, ஸ்புரஸ்புர, ஸ்புரஸ்புர, கோர கோரதனுரூப
சட சட, ப்ரசட ப்ரசட கஹ கஹ, வம வம பந்த பந்த, காதய காதய ஹும் பட் " இது ஹும்பட் என்ற பதத்தைக்கொண்டு முடிகிறபடியால், ஆண்பால் மந்திரம்.

 

"ஓம், ஹரீம், விரி, விரி கணபதி வரவரத ஸர்வலோகம்மே வசமானய
ஸ்வாஹா'' இது ஸ்வாஹா என்ற பதத்தைக் கொண்டு முடிகிறபடியால், பெண்பால் மந்திரம்.

 

''ஓம், கூம் நமா'' இது நம: என்ற பதத்தைக் கொண்டு முடிகிறபடியால் ஒன்றன் பால் மந்திரம்.

 

(2) ஒன்று முதல் பதினாறு எழுத்துக்களுள்ள, மந்திரங்களுக்கு பால மந்திரங்களென்றும், பதினேழு முதல் இருபது எழுத்துக்களுள்ளவற்றிற்கு ப்ரௌட மந்திரங்களென்றும், இருபது முதல் எல்லாவற்றிற்கும், விருத்தமந்திரங்களென்றும் பெயர்.


(3) மந்திரம் ஜெபம் செய்யத்தக்க காலம்.

 

காற்று தென்பாகத்தில் வீசும் காலத்திற்கு தக்ஷிணாயனம் என்று பெயர். அப்பொழுது மந்திரங்களிலிருக்கும் குறிலெழுத்துக்களெல்லாம், விழித்துக் கொள்கின்றன. குறிலெழுத்தை முதலிலுடைய மந்திரங்களும் விழித்துக் கொள்கின்றன. அப்பொழுது மற்ற எழுத்துக்களும், மந்திரங்களும் நித்திரை செய்கின்றன. காற்று வடபாகத்தில் வீசும் காலத்திற்கு உத்தராயணம் என்று பெயர். அப்பொழுது நெடில் எழுத்துக்களும். அவைகளை முதலிலுடைய மந்திரங்களும் விழித்துக் கொள்கின்றன. அப்பொழுது மற்ற எழுத்துக்களும், மந்திரங்களும் நித்திரை செய்கின்றன. காற்று தென்பாகத்திலிருந்து வடபாகத்திற்குச் செல்லும் பொழுது சிலகாலம் அசைவற்றிருக்கிறது. அக்காலத்திற்கு விஷவம் என்று பெயர். அப்பொழுது லு, லூ என்ற இரு எழுத்துக்களும் விழித்துக் கொள்கின்றன. வடபாகத்திலிருந்து காற்று தென்பாகத்திற்குச் செல்லும் பொழுது சிலகாலம் அசைவற்றிருக்கிறது. அதற்கும் விஷவமென்று பெயர். அப்பொழுதுரு, ரூ என்ற இரு எழுத்துக்களும் விழித்துக் கொள்கின்றன. அல்லது பிராண வாயுவையும், அபான வாயுவையும் சமரஸ நிலைமையில் நிறுத்தி மூலாதாரத்தினின்று மேலே செல்லும் மின்னல் கொடி போல், ஒரே க்ஷணத்தில் எல்லா சக்கிரங்களையும் ஆக்ரமிக்கும், எல்லையற்ற ஆனந்தத்தை அளிக்க வல்லமையுடைய, குண்டலி சக்தியை எழுப்பி, சிவசக்தி சமரஸ நிலைமையையடையலான ஓர் உபாஸகனுடைய ஆனந்த அனுபவ நிலைமை, எல்லா மந்திரங்களுக்கும் ப்ரபோத காலமென்று சிலர் கருத்து. எல்லா மந்திரங்களையும் ப்ரபோத காலத்தில் ஜெபம் செய்ய வேண்டும். அ, ஆ முதலிய எழுத்துக்களுடன் லகரம் வரை அனுஸ்வரத்தைச் சேர்த்து ஜெபம் செய்ய வேண்டிய மந்திரத்துடன், தனித் தனியாகச் சேர்த்து, க்ஷகரத்தை மாத்திரம் உச்சரித்து, மறுபடி லகரம் முதலிய அக்ஷரங்களுடன் விசர்க்கம் சேர்த்து ஜெபம் செய்ய மந்திரம் சீக்கிரத்தில் பயனையளிக்கும்.


(4) மந்திரத்தை உபதேசிக்கும் குருவின் லக்ஷணம்.

 

உயர்குலத்தில் பிறந்தவராயும், நல்லொழுக்கமுடையவராயும், மந்திரசாஸ்திரத்தின் தத்வங்களை அறிந்தவராயும், பொறுமையுடையவராயும், நிக்ரஹ அனுக்ரஹம் செய்ய சக்தியுடையவராயும் இருக்க வேண்டும்.


(5) மந்திரத்தை உபதேசம் பெற்றுக்கொள்ளும் மாணாக்கன் லக்ஷணம்.

 

உயர்குலத்தில் பிறந்தவனாயும், நல்லொழுக்கமுடையவனாயும், மந்திர சாஸ்திரத்தின் தத்வங்களைக் கற்றுக் கொள்ள விருப்பமுடையவனாயும், பொறுமையுடையவனாயும் இருக்கவேண்டும். மந்திரத்தைக் கற்றுக் கொள்ளும் மாணாக்கர்கள், சித்தர்கள், சாத்யர்கள், சுசித்தர்கள், அரிகள் என்று நான் குவகை. சித்தர்களும், சுசித்தர்களும் உத்தமர்கள். சாத்யர்கள் மத்யமர்கள். அரிகள் அதமர்கள். மறுபடியும், சித்தசித்தர்கள், சுசித்த சித்தர்கள், சாத்யசித்தர்கள், அரிசித்தர்களென்றும், சித்த சுசித்தர்கள், சுசித்த சுசித்தர்கள், சாத்ய சுசித்தர்கள், அரிசுசித்தர்கள், என்றும், சித்தசாத்யர்கள், சுசித்த சாதயர்கள் சாத்ய சாத்யர்கள், அரிசாத்யர்களென்றும், சித்தாரிகள், சுசித் தாரிகள், சாத்யாரிகள், அர்யாரிகள் என்றும், பதினாறுவகை. இவ்வாறு, சித்த சாத்யர்களை சோதித்து குரு, மந்திரத்தை உபதேசம் செய்ய வேண்டும். ஆனால் நரஸிம்ஹ மந்திரங்களுக்கும், சூரிய மந்திரங்களுக்கும், வராஹ மந்திரங்களுக்கும், மூன்று அக்ஷரங்களையுடைய மந்திரங்களுக்கும், கனவில் கண்ட மந்திரங்களுக்கும், பெண்ணால் கொடுக்கப்பட்ட மந்திரங்களுக்கும், மாலா மந்திரங்களுக்கும், சித்தர்களை சோதிக்க வேண்டியதில்லை.

 

(6) சித்த சாத்யர்களை சோதிக்கும் முறை.

 

கிழக்கு மேற்காக ஐந்து கோடுகள் கிழித்து, அப்படியே அவைகளின் மேல் தென்வடக்காகவும் ஐந்து கோடுகள் கிழிக்கவேண்டும். ஆக பதினாறு கட்டங்களாகும், ஒன்று மூன்று, ஒன்பது பதினொன்று கட்டங்களில், முதல் நான்கு உயிரெழுத்துக்களையும், அப்படியே, ஆறு, எட்டு, பதினான்கு, பதினாறு கட்டடங்களில், மிகுதியான உயிரெழுத்துக்களையும், எழுதி, ககரம் முதலிய மெய்யெழுத்துக்களையும் வர்க்கத்திற்கைந்து ஐந்தாக எழுத வேண்டும். அதாவது வர்க்கத்தின் இரண்டு நான்கு எழுத்துக்களுள்ள கட்டங்களில் ஐந்தாம் எழுத்துக்களையும் எழுத வேண்டும். தன் பெயரின் முதலெழுத்து முதல் ஜெபம் செய்ய வேண்டிய மந்திரத்தின் முதலெழுத்து இருக்கும் கட்டம் வரை பிரதக்ஷிணமாக சித்த, சுசித்த சாத்ய, அரி, என்று அறிய வேண்டும்.


மந்திராக்ஷரங்களின் வர்க்கம்.

 

உ, ஊ, ஓம், க (3) ச (3) - (3) த (3) ப (3) ல, ள, இவைகள் பார்த்திபங்கள். (பூமியைச் சேர்ந்த வை). ரு, ரூ, ஒள, க, ச, ட, த, ப, ல, ஸ, இவைகள் ஆப்பியங்கள். (தண்ணீ ரைச் சேர்ந்தவை) இ, ஈ, ஐ, க (2) ச (2) - (2) த (2) ப (2) ழ, க்ஷ. இவைகள் ஆக்னேயங்கள் (நெருப்பைச் சேர்ந்தவை) அ, ஆ, இ, க, ச, ட, த, ப, ய, ஷ. இவைகள் மாருதங்கள். (கார்றைச் சேர்ந்த வை.) ரு, ரூ, அ, ங, ஞ, ண, ன, ம, ஸ, ஹ. இவைகள் நாபசங்கள் (ஆகாயத்தைச் சேர்ந்தவைகள்) மந்திரத்தை ஜெபம் செய்கிறவனுடைய பெயரின் முதல் எழுத்தும் மந்திரத்தின் முதல் எழுத்தும், ஒரு வர்க்கத்தைச் சேர்ந்ததாக விருந்தால், ஸ்வகுலம் என்று சொல்லப்படும். பார்த்திவங்களுக்கு, ஆப்பியங்களும் அக்னேயங்களும் மாருதங்களும் மித்திரமாம். மாருதங்கள், பார்த்திவங்களுக்கும் ஆப்பியங்களுக்கும் சத்துருவாம். ஆக்னேயங்களுக்கு ஆப்பியங்கள் சத்துருவாம். நாபசங்கள் எல்லாவற்றிற்கும் மித்திரமாம். ஒன்றுக் கொன்று பகையுள்ள எழுத்துக்களை ஆதியிலுடையவனையும் மந்திரங்களையும் சேர்க்கக்கூடாது.


(8) எழுத்துக்களின் ராசி.

 

அ ஆ இ ஈ, மேஷம். உ ஊ ரு ரூ, வ்ருஷபம். ளு ளூ, மிதுனம். ஏ ஐ, கடகம். ஓ ஒள, சிம்ஹம். அம் அஹஸ, ஷ சஹ ள க்ஷ கன்யா. கவர்க்கம் துலா. சவர்க்கம், விருச்சிகம். டவர்க்கம்தனு. தவர்க்கம் மகரம். பவர்க்கம் கும்பம். யரலவ மீனம். ஜெபம் செய்கிறவனுடைய பெயரின் முதலெழுத்திலிருந்து, கணக்கிட வேண்டும், ஒன்று, ஐந்து, ஒன்பது மித்திரன். இரண்டு, ஆறு, பத்து சேவகர்கள். மூன்று, ஏழு, பரம மித்திரன். பன்னிரண்டு, எட்டு, நான்கு, சத்ரு.

 

(9) எழுத்துகளின் நக்ஷத்திரமும் கணமும்

 

(அ, ஆ, அச்வதி, தேவகணம். இ. பரணி, மனுஷ்ய கணம். ஈ உ ஊ, கார்த்திகை ராக்ஷஸ கணம். ரு ரூளுளூ ரோகிணி, மனுஷ்ய கணம். ஏமிருகசீர்ஷம், தேவகணம். ஐ, திருவாதிரை, மனுஷ்ய கணம். ஓ ஒள புனர்பூசம், தேவகணம். க, பூசம், தேவகணம். (2) (3) ஆயில்யம் ராக்ஷஸகணம். க (4) மகம் ராக்ஷஸ கணம். ச, பூரம், மனுஷ்ய கணம். ச (2) ச (3) உத்திரம் மனுஷ்ய கணம். ச (4) » அஸ்தம் தேவகணம். டட (2) சித்திரை ராஷஸகணம். ட (3) ஸ்வாதி தேவகணம். ட (4) ண விசாகம் ராஷஸ கணம். தத (2) த (3) அனுஷம் தேவகணம். த (4) கேட்டை ராக்ஷஸகணம். ந பப (2) மூலம் ராக்ஷஸ கணம். ப (3) பூராவும் மனுஷ்யகணம். ப (4) உத்திராடம் மனுஷ்ய கணம். ம திருவோணம் தேவகணம். யா அவிட்டம் ராக்ஷஸ கணம். ல சதயம் ராக்ஷஸ கணம். வச பூரட்டாதி, மனுஷ்யகணம். ஷ ஸ ஹ க்ஷ உத்திரட்டாதி மனுஷ்ய கணம். அம், அஹ, ள, ரேவதி தேவகணம். ஜெபம் செய்கிறவனுடைய முதலெழுத்திலிருந்து கணக்கிட வேண்டும். இப்பிரகாரம் சோதனை செய்து, குரு, மாணாக்கனுக்கு மந்திர தீக்ஷை செய்யவேண்டும். முறைப்படி தீக்ஷை பெற்று, சுபதினத்தில் மந்திரத்தையும் உபதேசம் பெற்று, ஜெபம் செய்து, தனது சூத்திரத்தில் சொன்னபடி அக்னி வளர்த்து, ஹோமம் செய்து, தர்ப்பணமும், அன்னதானமும் செய்ய, மந்திர பலனை அடைகிறான். ஒரே மந்திரத்தை ஒவ்வொரு விசேஷமான பதார்த்தத்தைச் சேர்த்து, ஹோமம் செய்ய, வெவ்வேறு பலனையடையலாம். உதாரணமாக மந்திரங்களுக்கெல்லாம் மாதாவான காயத்ரீ என்று வழங்கும் சாவித்ரியைக் கூறுவோம். ஒவ்வொரு நாளும் காலையில் ஸ்நானம் செய்து ஆயிரம் ஜெபிக்க நம்பிய பொருள் கைகூடும். சூரியக்ரஹண புண்ய காலத்தில் கருங்காலி மரத்தின் சமித்தை நெய் சேர்த்து ஹோமம் செய்ய, பொருளடையலாம். அமாவாசை தினமன்று, காயத்ரீமந்திரத்தால் ஆயிரம் தர்ப்பணம் செய்ய அசாத்தியமான காரியமெல்லாம் சாத்தியமாகும். பசுக்களைக் கட்டுமிடத்தில், நெய்யுடன் சேர்த்து எருவால் ஹோமம் செய்ய, பசுசமிருத்தியை அடையலாம். அரிசியால். ஹோமம் செய்யப் பெண்களைப் பெறுவான். நெல்லால் ஹோமம் செய்ய இஷ்டமான சந்ததியை அடைகிறான். காயத்ரீ மந்திரத்தைச் சொல்லி அதிகாலையில் கிணற்றிலிருந்து தண்ணீரை யெடுத்து எண்ணாயிரம் ஜபித்து அத்தண்ணீரில் ஸ்நானம் செய்தால் கெட்ட கனவுகள் நிவர்த்தியாகும். ஆவின் பாலை மாத்திரம் புசித்து, லக்ஷம் ஜெபிக்க அபிமிருத்தி நேரிடாது. ஆவின் நெய்யை மாத்திரம் புசித்து லக்ஷம் ஜெபிக்க அறுபத்தி நான்கு கலாவித்தைகளிலும் தேர்ச்சியடைகிறான். நாபி வரையில் ஜலத்தில் நின்று கொண்டு லக்ஷம் ஜெபிக்க சக்ரவர்த்தியாகிறான். புரசம்பூவால் ஹோமம் செய்ய அஷ்டைச்வர்யத்தை யடைகிறான். நீர் நொச்சியின் பூவால் ஹோமம் செய்ய, மழை வரும். தேனால் ஹோமம் செய்ய ராஜாவை ஜெயிக்கலாம். பாயஸமும் தேனும் சேர்த்து ஹோமம் செய்ய ஸ்திரீகளையெல்லாம் வசமாக்கலாம்.

 

லக்ஷம் ஜெபிக்க தனது முன் பிறப்பை யெல்லாம் நினைக்கிறான். முழங்கால் வரை தண்ணீரில் நின்று கொண்டு, தனது சத்ருக்கள் வசிக்கும் திசையை நோக்கி கோபத்துடன் ஜெபம் செய்ய யுத்தத்தில் ஜெயிக்கிறான். தீக்ஷணதைலத்துடன் எருக்கின் சமித்துக்களால் ஹோமம் செய்ய எழுநாட்களில் சத்ரு இறந்து விடுவான். சத்ருவின் உருவத்தை பூமியில் வரைந்து அவ்வுருவத்தின் மார்பில் அவன் பெயரையும் எழுதி அதன் மேல் நின்று ஆயிரம் ஜெபிக்க சத்துருகாசமடைவான். இம்மாதிரியான ஆபிசாரப் பிரயோகங்களின், காயத்ரீ என்று வழங்கும், சாவித்ரியை அக்ஷரக்கிரமமாக தலைகீழாகப் படிக்க வேண்டும். இப்பிரயோகம் செய்த பிறகு அஸ்திரத்தை உபஸம்ஹாரம் செய்ய, நெய், பால், பஞ்சகவ்யம், எள்ளு இவற்றின் ஒன்றால் ஹோமம் செய்ய வேண்டும். மாவின் இலையால் ஹோமம் செய்ய, எவ்வித ஜ்வரமும் நிவர்த்தியாகும். அத்தியிலை, அரசிலை, இவற்றால் ஹோமம் செய்ய, பசு, குதிரை முதலிய மிருகங்களுக்கு நேரிடும் வியாதி போய்விடும்.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - மார்ச்சு ௴

 



 

No comments:

Post a Comment