Sunday, September 6, 2020

 மாணிக்கதிரள்

 

1.     கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே.                   (அதிவீரராம பாண்டியன்)

 

2.     கற்க கசடறக் கற்பவை கற்றபி

னிற்க வதற்குத் தக.                                    (திருவள்ளுவர்)

 

3.     மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்
 மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்.                    (ஒளவையார்)

 

4.     கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்

மற்றோ ரணிகலம் வேண்டாவாம்.                 (குமரகுருபர சுவாமிகள்)

 

5.     எல்லா வுயிர்க்குளு மிறைவனே யாயினுங்

கல்லாதார் நெஞ்சத்துக் காணவொண் ணாதே.                   (திருமந்திரம்)

 

6.     கற்றாரை நோக்கிக் கருத்தழிக; கற்ற வெல்லா

மெற்றே யிவர்க்கு நாமென்று.                           (நீதிநெறி விளக்கம்)

 

7.     கைப்பொருள் கொடுத்துங் கற்றல் கற்றபின் கண்ணுமாகு
மெய்ப்பொருள் விளைக்கு நெஞ்சின் மெலிவிற்கோர் துணையு மாகும்.

(சீவகசிந்தாமணி)

 

8.     கடைநிலத்தோ ராயினுங் கற்றுணர்ந்தோரைத்

தலைநிலத்து வைக்கப்படும்.                             (நாலடியரர்)

 

9.     கற்றிலாய் கலை கற்றுணரார் முக

முற்றுநோக்கின் மயானத்தை யொக்குமால்.               (உபதேச காண்டம்)

 

10.    உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றனன்றே.                   (புறநானூறு)

 

 

 

11.    மேற்பிறந்தாராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்

கற்றானைத் திலர் பாடு.                    (சோமேசர் முதுமொழி வெண்பா)

 

12.    கல்லாரே யாயினுங் கற்றாரைச் சேர்ந்தொழுகி

னல்லறிவு நாளுந் தலைப்படுவர்.                        (நாலடியார்)

     

13.    கல்லாத மூடரைக் காணவு மாகாது
      கல்லாத மூடர்சொற் கேட்கக் கடனன்று.                        (திருமந்திரம்)

 

14.    முற்றுமுணர்ந்தவரில்லை முழுவதூஉங்
      கற்றன மென்று களியற்க.                              (நீதிநெறி விளக்கம்)

 

15.    உடலின் சிறுமைகண் டொண்புலவர் கல்விக்கடலின் பெருமை கடவார்.

(நன்னெறி)


16.    கற்றதுங்கேட் டதுந்தானே யே துக்காகக்

கடபடமென் றுருட்டுதற்கோ.                      (தாயுமான சுவாமிகள்)


17.    வறுமையான் மடமை தன்னால் வருந்திநெஞ் சழியுங்காலை
      யுறுதிசெய் துணையாங் கற்ற வுணர்வனை வர்க்கு மென்றும். (விநாயக புராணம்)


18.    கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றா

னிளமைபா ராட்டு முலகு.                              (நான்மணிக் கடிகை)


19.    சிலகற்றார் கண்ணு முளவாம் பலகற்றார்க்

கச்சாணி யன்னதோர் சொல்.                            (அறநெறி சாரம்)


20.    தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறு மறிவு.                                 (திருவள்ளுவர்)


21.    மனத்தின் போக்கும் வெளிப்பாடும் அடக்கப்பட்டுப் பலன்

அடையுமாறு செய்யும் பயிற்சி எதுவோ அதுவே கல்வி. (சுவாமி விவேகானந்தர்)


22.    ஒருவருக்குக் கல்வித்திறமை ஏற்பட வேண்டுமாயின் முதலில்
      அவர் நல நடத்தை யுடையவராக இருத்தல் இன்றியமை யாதது.

(மகாத்மா காந்தி)


23.    பிச்சைக் காயினுங் கற்றன் மிகவினிதே

கற்றவை கைகொடுத்தல் சாலவு முன்னினிதே.           (இனிது நாற்பது)


24.    எல்லாம் படித்துணர்ந்தா ரிங்குமிலை எங்குமிலை
      எல்லாம் படித்தோமென் றேமாப்பேன்.                    (உத்தமவாதம்)

25.    வாக்குநயத் தாலன்றிக் கற்றவரை மற்றவரை

யாக்கை நயத் தாலறிய லாகாதே.                       (நீதி வெண்பா)


26.    அவைக்குப்பாழ் மூத்தோரை யின்மை தனக்குப் பாழ்
      கற்றறிவில்லா வுடம்பு.                                 (நான்மணிக் கடிகை)


27.    தாமின் புறுவ துலகின் புறக்கண்டுகாமுறுவர்

கற்றறிந் தோர்.                                         (திருவள்ளுவர்)


28.    ஆசானுடைய உள்ளத்திலே அருள் வரும்படி நடத்தலே

கல்விக்குச் சிறந்த கருவி.                               (ஆறுமுக நாவலர்)


29.    கல்வி கரையில் கற்பவர் நாள் சிலமெல்ல

நினைக்கிற் பிணிபல.                                   (நாலடியார்)


30.    கற்ற திறையளவு கல்லா துலகள் வென்றுற்ற

கலைமடந்தை ஓதுகிறாள்.                              (ஒளவையார்)

ஆனந்த போதினி – 1930 ௵ - மார்ச்சு ௴

 

No comments:

Post a Comment