Sunday, September 6, 2020

 மணிமேகலை ஆராய்ச்சி


4. தெய்விகத்தன்மை – விசேடணங்கள்

 

மணிமேகலையில், ஆசிரியர் சாத்தனார், இக்காலத்தில் நன்கு விளங்காத சில தெய்வங்களின் பெயர்களையம், எளிதில் எராலும் செய்ய முடியாத பல தெய்விகச் செயல்களையும், நிறையக் கூறி யுள்ளனர். சாமானியமாக மனிதர்களிடத்தில் இயற்கையிலே பொருந்திதுள்ள குணங்களோடு, எளிதி லெ வரும் கொண்டிராத பல குணங்களும், தோற்றமும், செயல்களும் அவர்களிடம் இருந்தனவாக இங்கு கூறப்பட்டுள்ளன. மேற்போக்காக நோக்குமிடத்து, எவருக்கும் இவை யாவும் கவியின் கற்பனையால் உதித்தவையென்று தோன்றுமேயன்றி, உண்மையாக நிகழ்ந்தவையே யென்பது சடிதியில் விளங்காது. மானிடரது செய்கிகளில் தெய்வங்களும் உடனிருந்து உதவி செய்த விவரங்கள் பழங்கசைகளைப் படித்து பாவரும் உணர்ந்ததே. மணிமேகலையில் காணப்படும் தெய்விகத்தன்மை பொருந்திய செயல்கள் சிலவற்றைக் கீழே குறித்திடுவோம்.


(மணிமேகலா தெய்வம்)

 

மணிமேகலா தெய்வத்தைக் குறிக்கும் செய்திகள் யாவும் வெகுவிநோதமாக
உள்ளன. இச் தெய்வம், இந்திரனது ஏவலால், அரக்கரின் வாதையி னின்றும் சில தீவிலுள்ள மக்களைக் காதது வந்தது சாமானியமாக எல்லோராலும் செய்தற்கியலா தனவற்றை எளிதில் செய்கிடு மாற்றல் பெற்றது. அந்தரத்தே செல்லுதலும், பிறரறியாதி உலவுதலுமாகிய இத்திறத் தனவாகிய பல செயல்களைக் கொண்டிருந்தது. இது, கோவலன குலதெய்வம். கடலினின்றும் அவன் குலத்து முன்னோ னொருவனைக் காததது. (21) அது பற்றியே, மாதவிக்குப் பிறந்த மகளுக்கு இத் தெய்வத்தின் பெயரிடப்பட்டது. (7: 32: 35) தனது தெய்விகத்தன்மை விளங்க அதுவே "விஞ்சையிற் பெயர்ந்து நின் விளங்கிழை தன்னை'' (7: 21) எனப் பாராட்டிக்கூறியு முள்ளது.

 

மணிமேகலைக்குப் பல விடங்களிலும் இத் தெய்வம் வேண்டிய நல்லுதவி பாக கடுகல் நோக்குக, புத்த தேவனது பெருமை விளங்க, இத்தெய்வம் பலவிடத்தும் அத் தேவனைப் புகழ்ந்து துதி செய்துள்ளது. (5; 98. 105) இந்திரவிழாவைக் காணவந்த இது, மாறுவேடம் பூண்டு, உவவனம் வந்து சகரவாளக் கோட்டத்தின் வரலாறு கூறிப் பின்னர் மணிமேகலையை எடுத்து ஆகாய வழியே சென்று, மணிபல்லவத் தீவிலிட்டது. (காதை. 6) உல. வனத்தில் மணிமேகலை பிரிந்து சென்றதும் அறியாது தூங்குகின் தோழி சுதமதியை மெழுப்பித் தனது உயர்வைக் கூறி, மணிமேகலைக்கு இனி வர உள்ள நிகழ்ச்சிகளையும் மொழிந்து சென்றது. (கா. 7) பின்னர், ஆகாயத்தினின்று மிறங்கி, மணிபல்லவ தீவத்தில், பீடிகையை வலம் வந்து வாழ்ச்தி தொழுது பின்னர், மணிமேகலைக்கு இராகுலன், வீரை, தாரையாகிய மூவரின் சரிதமும் முறையே கூறி, மந்திரம் மூன்றும் உபதேசித்துச் செல்லுகின்றது. (10.)


(தெய்வ கணங்கள்)

 

தூண்களிலிருந்த தெய்வங்கள் பேசுந் தன்மையனவாகக் கூறப்பட்டுள் இவை நாவடைபாவை' யெனப்படல் காண்க. (22; 94) மற்றும், முக்கால நிழச்சிசளு முணர்ந்தன. (19: 10-4). துயிலெழுந்து இரவில் உலகவறவி சென்ற சுதமதிக்கு, நெடிய தூணொன்றில் எழுதப்பட்டிருந்த அற்புதப்பாவை யொன்று அவள் கண்டு மயங்கி அஞ்சவும், அவளது பிறப்பு வரலாற்றைக் கூறுவதாயிற்று. (7: 94: 7) அங்கி யொன்றும் செய்யாதது கண்டு வருந்திய ஆதினரக்கு ஆகாயவாணி தேறுதல் கூறியது. 16) காய சண்டிகை வடி வோடு வெளிவந்த மணிமேகலையைக்கண்டு கலங்கிய உதயகுமரன், சம்பாபதி கோயிலுட்சென்று "என் குறை தீர்ப்பாய். உன்னடி தொட்டேன்'' என்று வஞ்சினங் கூற, ஆங்கிருந்த சித்திரங்கள் ஒன்றில ருந்த தெய்வம், ஆராயாது சபதங் கூறியது பயனற்றதெனப் பேசியது காணம், (19) துர்ககை, சாதனைப் பரசுராமன் வருதலால் போரியற்றாது வெளிப்போகுமாறு கூறியது நோக்குக (22! பத்தினிக் கடவுள் கண்ணகியிடம், மணிமேகலை, மதுரையை யெரித்த வரலாறும், கண்ணகியின் எதிர்கால வரலாறும் உணர்ந்திருந்தனள். (26) மதுராபதி, கண்ணகி யிடத்துக் கோவலன் இறந்த தற்குக் காரணம் கூறுதலும் கவனிக்க. (26)


(கந்திற்பாவை தெய்வம்)

 

இந்நூல் முழுவதிலும் கந்திற்பாவை தெய்வத்தைப்பற்றிய செய்தியே பல வடத்திலும்
காணப்படுகின்றன. இத் தெய்வம், சக்கரவாளக் கோட்டத்தி'', சபாபதி கோயிலின் கிழக்கேயுள்ள தூணொன்றில், தே6: தச்சன் மயனால் நிருமிக்கப்பட்டது. (21: 132-3). தவதிக னென்னும் தேவனது வடிவாக அமைந்தது. (21) அத்தூணினின்றும் நீங்காது முக்கால நிகழ்ச்சிகளையும் கூறும் சக்தி வாய்ந்தது. வழுவறு மரனிலும் மண்ணிலும் கல்லீலும் தன்போ லெழுதப்பட்ட பாவைகள் பேசு மாற்றலைக் கொண்ட தென்றும், தம் போன்ற தெய்வங்கள் உள்ள இடத்தை,

 

"முடித்த வருசிறப்பின் மூதூர் யாங்கணும்

கொடித்தேர் வீதியுந் தேவர் கோட்டமு

முதுமர விடங்களு முதுநீர்த் துறைகளும்

பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடிக்

காப்புடை மாநகர்க் காவலுங் கண்ணி

யாப்புடைத்தாக வறிந்தோர் வலித்து

. . . . . . . . . . . . . . வகுக்க அது நீங்கா."

(21-124 9} என்றும் சந்திற்பாவையே மொழிந்திடும் இவ்வடிகளோடு திருமுருகாற்றுப்படை, 218-26 அடிகளை ஒப்பு நோக்குக) சாவக நாட்டில் ஆபுத்திரன் பிறந்த காலை நிகழ்ந்த நன்னிமித்தங்களைக்கண்டு, சக்கரவாளக்கோட்டத்து முனிவர்கள் கந்திற்பாவையை 'உற்றது யாதென' வினவ, அத்தெய்வம் நிகழ்ந்தது கூறிற்று. (15) காஞ்சனன், உதய குமரனை வெட்டிக் கீழ் வீழ்த்தியதும், காயசண்டிகை உருக்கொண்டிருந்த மணிமேகலையை எடுத்துச் செல்ல அவளருகில் வரச் கந்திற்பாவை, அவனை விலக இருக்கச் செய்து, விந்தா கடிகையின் வயிற்றிற்சென்ற காயசண்டிகைக்குற்ற கேட்டையும், அவளது வினைப்பயனையும் உணர்த்துவ தாயிற்று. (20)

 

மணிமேகலைக்கு இனி அவளுக்கு வரவுள்ளனவற்றைக் கூறி,


“நினக்கிவன் மகனாத் தோன்றியதூஉ

மனக்கினியாற்கு நீ மகளாய தூஉம்

பண்டும் பண்டும் பல்பிறப் புளவாற்

கண்ட பிறவியே யல்ல காரிகை.''                  (21-29-32).


என மணிமேகலையும் உதயகுமரனும் மனைவியம் கணவனுமாக இருந்தது, கழிந்த பல பிறவிகளிலும் நிகழ்ந்ததெனத் தனது நிகழ்ந்த கால அறிவால் கூற லுற்றது. (21) பழிமாற்ற வேண்டிய விசாகைக்காக நகரினர் முன்னிலையில் அவளது தூய்மையை விளங்கச் செய்தது. (22) நாடுற்றவமைக்கு வருந்திய காஞ்சி அரசன் முன்பு, சந்திற்பாவை தெய்வமொன்று தோன்றி, மணிமேகலை வருதலையும், அவளிடத்துள்ள நற்பாத்திரத்தால் அவனது நாட்டின் பசிப்பிணி யகன்றிடுமென்றும் கூறிப் போந்தது. (28} சமந்தகூட மலையைத் தரிசித்து வந்தபின், இந்திரனது கட்டளைப்படி தீவதிலகை யென்னும் தெய்வமாது மணிபல்லவத்துள்ள புத்த பீடிகையைப் பல்லாண்டுகளாகக் காத்து வருவாளாயினள். அக்ஷய பாத்திரத்தின் முழுவரலாற்றையும் மணிமேகலை அறவணர்பால் அறிந்திடுவளென முன்னதாகக் கூறியவளும் (11. கா) ஆபுத்திரனது கழிந்த பிறவியை அவனறியச் செப்பியவளுமாகிய (15. கா), இத் தெய்வம் முக்கால நிகழ்ச்சியு முணர்ந்தவள். விந்தாகடிகை யென்னும் மற்றொரு தெய்வமாது துர்க்கை கோயிலுக்கு நேர்மேலே சொல்லுவோர்களைச் சாயையினால் இழுத்துத் தனது வயிற்றில் அடக்கிக்கொள்ளும் அதிவிந்தையான செயலுடையவள், (20.)


(பூதங்கள்)

 

பாவிகளைப் புடைத்துண்ணும் சதுக்கப் பூதமொன்று காவிரிப்பூம் பட்டினத்தி லுண்டு. (காதை. 1.) அது தீயவர்களைத் தன் பாசம் கட்டி வர அறைந் துண்ணு மியல்பினது. அரசனால் ஏழு தினங்களில் தண்டியாது விடப்பட்ட கொடியோர்களைத் தான் தண்டித்திடும். இச் சதுக்கப் பூதம் மருதி மூன்னர்த் தோன்றிக் கற்புடைய மாத ரிலக்கணங் கூறுதல் காண்க. (22) சதுக்கப் பூசத்தின் வரலாறு சிலப்பதிகாரத்திலும் கூறப்படுதல் நோக்குக.

(வித்தியாதரர்)

 

இந்துக்களின், பரம்பரைக் கொள்கைப்படி, வித்தியாதரர்களைப்பற்றியும், அவர்கள் கொண்டுள்ளதாகப் புராணங்கள் கூறும் தெய்விகச் செயல்களைப்பற்றியும் உள்ள படி இந்நூலில் பல விடங்களிலும் கூறப்பட்டுள்ளன. கந்தர்வர், யக்ஷர், கின்னரர் முதலிய பதினெட்டு வகையான தேவகணங்களில் வித்தியாதரரு மொருவர். இவர்கள், மாலிகாஞ்சனம் முதலிய மாயவித்தையை யுடையவர்கள். பேரழகு வாய்க்கப் பெற்றவர்கள். மலைபடுக்குகளில் வாழ்ந்து வருவோர். இதனைக் கம்பர், "கமருறு பொருப்பின் வாழும் விஞ்சையர்'' என்றும் (பால. வரை. 28) 'மஞ்சளாவிய மாணிக்கப்பாறையில், கொழுநரோடூடிச் சென்ற விஞ்சைமாதின் பஞ்சகாவிய சீறடிவடுக்க ளுள்ளதைக் காணாய்” (அயோ. சித்தி.20), இராமபிரான் சீதாபிராட்டியாருக்குச் சித்திர கூடத்தின் காட்சிகள் பலவும் காட்டி வந்த இடத்தில் கூறியதாக உள்ளதும் நோக்குக. இவ்வாறாக நூற்களில் பல விடங்களிலும் வருவன அங்கங்கே கண்டு கொள்க.

 

வித்தியாதரர்களில், ஆடவரும் பெண்டிருமாகிய இருபாற் பட்டவரும் ஆகாய வழியே பறந்து செல்லுமாற்றலைப் பெற்றிருந்தனர். ஆசிரியர் இவர்களை "ஆகாய சாரிகள்'' எனக் கூட றியுள்ளது காண்க. (கா. 20) இந்திர விழாவைக் காண வந்த, மாருதவேகன் ஆராயாது தனிவழியேகிய சுதமதியை யெடுத்து ஆகாயவழியே சென்றனன். (3: 5.) சாத்தனார் இவ் வித்தியாதரனுடைய செய      லைக் கூறுமிடத்து,


“தாரன் மாலையன் றமனியப் பூணினன்

பாரோர் காணாப் பலர் தொழும் படிமைய

னெடுத்தன னெற்கொண் டெழுந்தனன் விசும்பில்''


(3: 36-8) என மொழிதல் காண்க. காஞ்சனன் ஆகாயவழியே சஞ்சரிப்பவன் (20) அவன் மனைவி கடும்பசி யொழித்துக் காயசண்டிகை விசும்பு வழியாகச் செல்லுகையில், விந்திய மலையின் மேலே சென்றதால் விந்தா கடிகைபின் வயிற்றகம் சென்றனள் (20).


(முனிவர்கள்)

 

மன மொழி மெய்களால் பரிசுத்தராக இருந்து, புத்த மதப் பற்றுகளைக் கொண்டொழுகும் புத்த முனிவர்கள் ஏனையோரால் செய்தற்கியலாத செயல்கள் பலவற்றையும் செய்து வந்தனர். தமது தவபலத்தாலும், சித்த சுத்தியா ஓம் தவசிகள் பலர், இங்ஙனமாக இருந்து வந்தது இந்நாட்டில் விந்தையன்று. பிரமதருமன், பூமி நடுங்குற்று ஏற்பட்ட பூகம்பத்தால் எழுதினங்களில் அத்திபுதியின் நாடு அழிந்து வியன் பாதலத்தில் வீழ்ந்து கேடெய்திச் செல்லுமென்றும், தினங்கள் பதினொன்றில் திட்டிவிடமென்னும் அரவு கடித்துத்தகை குணன் இராகுல னிறந்திட, இலக்குமி அவனுடனே தீப்புகுவளென்றும் கூறியபடியே, இரண்டும் நிகழ்ந்திடுதல் காண்க. (9.கா.) பொதியமலைச் சாரலில் தவஞ் செய்திருந்த முனிவிருச்சிகன் பன்னிரு ஆண்டுகளுக்கொரு முறை யுண்ணும் நோன்பினன். பன்னிரு வருடங்களுக் கொருமுறை பழுத்திடுவதும், பனங்கனி போன்ற பருமனுடையதும், தன்னை யுண்போரது பசியைப் பன்னிரு வருடங்களுள் அடக்குவதுமாகிய, நாவன் மரத்தின் தீங்கனியே அம்முனிவன் அருந்துவது. அவனிட்ட சாபம் உடனே காயசண்டிக்குப் பலித்திட்டது. (17) முக்கால ஞானமுமறிந்த மண்முகமுனி, ஆபுத்திரன் பசுவயிற்றில் பிறத்தலை முன்ன தாகக் கூ றியது காண்க. 15) சாது சக்கரனென்ற முனி ஆகாயவழியே செல்லுபவன். (10) இம்முனிக்குத் தனது முற்பிறப்பில் அமுதளித்த புண்ணியமே அடுத்த பிறவியில் மணிமேகலையை மேம்பாடுறச் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. (21) புத்த சாரணன் கொண்டுள்ள அருஞ் செயலைக் கூறுமிடத்து ஆசிரியர்,


"நிலத்திற் குளித்து நெடுவிசும் பேறிச்

சலத்திற் றிரியுமோர் சாரணன்'' (24: 46-7)


என்று கூறினர். ''என்னுயிர் போன்றா ளெங்கொளித்தன' ளென அலைந்து திரிந்த அரசன் முன்வந்த சாரணர் "இப்பொழுது கண்டிலே னாபினும் முன்பு கண்ட துண்டு'' என்று பீலிவளையின் பிறப்பு வரலாற்றையும், சோதிடர் மொழியும் இந்திர சாபமும் கூறிப் போயினர். (24)


(அறவண வடிகள்)

 

அறவண வடிகள் புத்த தருமங்களை நன்கு உணர்ந்த புத்த முனிவர். மணிமேகலைக்குச் செய்தவாறு புத்த தருமங்களை விரித்துக்கூறி பலருக்கும் உபதேசம் செய்து நல்ல வழியுட் படுத்தியவர். பல ஆண்டுகளாக இருந்தவர். முக்கால உணர்ச்சி யுடையதொரு மூதறிவாளர். மணிமேகலா தெய்வம், தீவதிலகை, (12) கந்திற் பாவை, (15-21) முதலிய தெய்வங்களின் நன்மதிப்பைப் பெற்றவர். துச்சயராசனது மனைவியராயிருந்த தாரை, வீரையென்பாரைப் புண்ணிய மலையாகிய பாதபங்கயத்தைக் கண்டுவருமாறு செய்தவர். அவ்விருவரும் ஒருங்குடன் மாண்ட விதத்தையும் (12) ஆபுத்திரனது கழிந்த பிறவியின் சரிதையையும் (13) மணிமேகலைக்குக் கூறியவர். புத்தன் பிறக்கும் தினத்தையும், அவன் பிறக்குங்காலை நிகழும் நன்னிமித்தங்களையும் உணர்ந்து கூறியவர். மாதவியின் கணவனிறந்த துன்பந் துடைத்து மேன்மையுறத் துறவுக்கோலங் கொள்ளுமாறு செய்தவர் (3.) பலகாலமாக இருந்து,
குறைவுபட்டுவரும் புத்த தருமத்தைத் தழைத்தோங்கச் செய்யும் நோக்கத்தோடும், தரும உபதேசம் செய்துவந்தார், கடலுண்ட பட்டினத்தை நீத்து மாதவியோடும், சுதமதியோடும் கச்சியேகிய இவர், ஆங்கு பவத்திற மறுக்கப் பாவை மணிமேகலைக்குப் பௌத்த தருமங்களை உபதேசித்தார். ஆண்டு பலவாகிய மிக்க வயோதிகரா யிருந்தும் நாத்தொலை வில்லாதிருந்த இவ்ரைப் “பழுதறு மாதவன்", "துணி பொருள் மாதவன்', “நன்றறி மாதவன்'', என்றிவ்வாறாக அங்கங்கே சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதால் இவரது தூய்மையும்; மதாபிமானமும், அறிவும் விளங்கிடும். அக்காலத்திலிருந்த தபோதனர்களில் இப்பெயரோடு இருந்தவரென்பது எளிதில் அறிய முடியாதுள்ளது.

 

(மணிமேகலை)

 

நாடகக் கணிகையரின் இனத்தவளாயினும், மணிமேகலை அக்குலத்தவர்களின் தீய ஒழுக்கங்கள் சற்றும் தன்னைப் பாதியா தொழியும்படி, இளவயது தொட்டே நல்வழியை நாடிநின்று, மேன்மையுறக் கருதி, அங்ஙனமே இறுதியில் நற்பதவியு மடைந்தனள். அவளது நல்வினைப் பயனும், நற்குணமும் நற்செய்கையுமே அவளை மனிதர்களாலன்றி தெய்வங்களாலும் நேசிக்கும்படி செய்தது. தெய்வமிட்டுச் செல்லத் தனது பழம் பிறப்பை யுணர்ந்தனள், மணிமேகலா தெய்வத்தின் மந்திர உபதேசத்தால், மணிமேகலையும் பசியொழித்தல், வேற்றுருக் கொள்ளுதல், அந்தரத்தே செல்லுதல், எப்பிணியம் தன்னை வருத்தாதொழியச் செய்தலாகிய (10) இத்திறத்திய அருஞ் செயல்களைக் கொண்டிருந்தனள். வேண்டிய சமயத்து அம்மந்திரங்கள் அவளுக்கு உதவியாக உடனிருந்து பயன்பட்டும் வந்தன. மணி பல்லவத்தி லிருந்து காவிரிப்பூம் பட்டினத்திற்கும் (11); ஆங்கிருந்து ஆபுத்திர நாட்டிற்கும் மீட்டும் மணி பல்லவத்திற்கும் (24); வஞ்சிக்கும் (25), காஞ்சிக்கும் (28) மணிமேகலை ஆகாயவழியே பறந்து சென்றனள். காவிரிப்பூம் பட்டினத்தில் உதயகுமாரனுக்குப் பயந்து அம்பலத்தும் (17); அரசியின் வஞ்சனைச் செயலினின்றும் தன்னை மீட்டுக்கொண்ட சமயத்தும் (24), சமயக் கணக்கரின் திறனைக் கேட்ட வமயத்தும் (26); வேற்றுவடிவங் கொண்டிருந்தனள். ஊணொழித்துப் பல காலமு மிருந்தனள். (23).


(அற்புத ஆவும் அதன் புத்திரனும்)

 

சாலி எறிந்து சென்ற ஆ புத்திரனை பூதியெடுத்து வளர்ப்பதற்கு முன்னதாகத் தனித்திருந்த அவனை, எழு தினங்கள் அவனை, எழு தினங்கள் பசுவொன்று பாலூட்டி வளர்த்து வந்தது. அந்நற்பயனின் விசேடத்தால் அப்பசு, சாவக நாட்டில், மண்ழக முனி தவஞ் செய்துவந்த தவள மலையில், பொன்னிறக் கொம்பும், பொற்குளம்பு முடையதாகச் சென்று உயிர்களுக் கெல்லாம் தனது பாலைச்சுரந்து ஊட்டுவித்து வந்தது. அப்பசு வயிற்றில், நன்னிமித்தம் பலநிகழ்ந்த சுபதினத்தில் அக்ஷய பாத்திரத்தைக் கோமுகியி லிட்டுப் பட்டினியிருந்து உயிர் நீத்த ஆபுத்திரன், (தன்னை இளமையில் காத்த பசுவை மறவாத உள்ளத்தினனாக இருந்தமையின்) பிறந்தனன். இங்ஙனமே, பசு வயிற்றில் அசலனும், நரி வயிற்றில் தேசகம்பளனும், மான் வயிற்றில் சிருங்கியும், புலி வயிற்றில் விரிஞ்சியென்ற முனிவனும் பிறந்ததாகக் கூறப்பட்டுள்ளது காண்க. ஈகையின் சிறப்பால் ஆபுத்திரன் தெய்வீக சக்தியைப் பெற்றிருந்தான். அது பற்றிச் சிந்தாதேவி அமுதசுரபியை அவனுக்குக் கொடுத்தது.

 

சாமானியமான மனிதர்களாகிய மணிமேகலையிடமும், ஆபுத்திரனிடமுர், எளிதி லெவரிடமும் காண முடியாத பெரும் சக்திகள் இருந்தன வெனக் கூறுவது பொருந்துமா வென்ற சந்தேகம் பிறந்திடலாம். தத்துவ நூற்கள் ஐம்புலனை யொடுக்கி, நல்லறிவைக் கொண்டு, வழுவின்றித் தருமமுறைப்படி நடந்து பரிபக்குவமடைந்த எவருக்கும், அசாத்தியமான காரியங்களாக இவ்வுலகிலெதுவும் இருந்திடாதெனக் கூறுகின்றன. மாபெருங்குணங்களைக் கொண்ட அத்தகையோருக்கு எப்பொருளும் எளிதில் கைகூடும். ஆகலின், முதிய அறிவு நிறையக் கொண்டிருந்த மணிமேகலையிடம் இத்தகைய பெறுதற்கரிய பெருங்குணங்களிருந்தனவாகக் கூறப்பட்டிருப்பது, அவள் போன்ற மதவைராக்கியங் கொண்டிருப்போ ரனைவரு மெளிதாக அடையக் கூடியவைகளே. பரத்தையின் பெண்ணாயிருந்தும், மணிமேகலை, தனது மனவலிமையாலும், ஊக்கத்தாலும், பேரின்ப மார்க்கங்களையே நாடிவவளாய் நின்று, மேலான பதவியை யெய்தினள். மணிமேகலை யைப் போல ஆபுத்திரனிடமும், அவனது நல்வினைப்பயனின் காரணமாக, இன்னவான நற்குணங்களும், பெருஞ் செயல்களும், அதிகமாகவே இருந்ததாகக் கூறப்பட்டிருக்கின்றது. ஆகலின் இவ்விருவரும் கொண்டிருந்த விசித்திர குணங்கள்
புத்த மதப்பற்றைக்கொண்டு அறவழியை நாடி நிற்போ ரெவரிடத்தும் வாகக் கூடியவையென அக்காலத்தினர் நம்பியிருத்தல் வேண்டுமென்பது, ஆசிரியர் அதற்கு மாறாக எவ்விடத்தும் தமது நூலில் எழுதா திருத்தலால் தெரியவரும். நூல் முழுவதும் ஆசிரியர் சாமானிய மனிதருக்கும், தெய்வீகச் செயல்கள் பொருந்தியவர்களுக்கு முள்ள பேதங்கள் வெளிப்படையாகத் தோன்றும்படியாகவே எழுதிப் போத்துள்ளது காண்க,


(சக்கரவாளக் கோட்டம்)

 

சார்ங்கலன் என்னும் தன் மைந்தனிறந்திட மனம் நொந்து வருந்திய பார்ப்பினி கோதமையினது துயரைக் களைந்திடும் நோக்கமொடு, மீண்ட உயிரைக் கொடுத்திடும் சக்திவாய்ந்த தெய்வங்க ளெங்குமில்லை யென்பதைக் காட்டச் சம்பாபதி தெய்வம் உலகிலுள்ள எல்லா தெய்வங்களையும் அழைத்துக் காட்டியது. தெய்வங்க ளொருங்கு கூடியிருந்த அப் புனித இடத்தின், அந்நற்காட்சி யென்றும் மறந்திடாது பின்பு எக்காலத்திலும் யாவருங் கண்டு களித்திடுமாறு அத்தெய்வ உருவங்களைப் பொருத்தி மயனால் கட்டப்பட்டது சக்கரவாளக் கோட்டமென்பது (6). அது பூம்புகாரில் இருந்தது. அருந்தவ மூனிவர்கள் அனேகரைக் கொண்டது. (22).


(அமுத சுரபி)

 

தீராத பசியைத் தீர்த்து வற்றா உணவை வாரி அள்ளக் குறையாது அளிக்கும் புகழைக்கொண்ட அக்ஷய பாத்திரமும் தெய்வீகத்தன்மை கொண் இள்ளதாகவே யுள்ளது. அது தன்னுள்ளிட்ட அன்னத்தை அதிகரிக்கு மியல்பினது. தென்மதுரையில் கலா நிலயத்திலிருந்த சிந்தாதேவி அப்பாத்திரத்தை ஆபுத்திரனுக்குக் கொடுத்தது. அப்பாத்திர மகிமையை அத்தெய்வமே,


''நாடுவறங் கூறினு மிவ்வோடு வறங் கூறாது.

வாங்கு நர்கையகம் வருத்த லல்லது,

தான்றொலை வில்லாத் தகை மையது.'' (14: 13: 5)


எனக் கூறிப் புகழலுற்றது. பரிசுத்தமான கோமுகிப் பொய்கையில் ஆண்டு தோறும் புத்தன் அவதரித்த தினமாகிய வைகாச சுத்த பூர்ணமை தினத்தன்று வெளிப்பட்டு வந்தது. (11). மணிமேகலையின் கைப்பட்ட பின் காய சண்டிகையின் தீராப் பசியைத் தீர்த்ததோடு, அப்பாத்திரம் பசித்து வந்தோ ரெவருக்கும் உணவளித்துப் பசி யொழித்து உண்பித்தது. உயிர்மருந்தாகிய இப்பாத்திரத்தை மணிமேகலையும் அரசன் முன்னர் புகழ்ந்து கூறுதல் காண்க. (19). இப்பாத்திரங் கொண்டு உலக வறவியில் வந்தோருக்கு உணவிட்டனன். (17). சிறைச்சாலையி லுள்ள வரும் அதிலுள்ள அன்னத்தை உண்டு மகிழ்ந்தனர். (19). ஒரே காலத்தில் இப்பாத்திரத்தைக் கொண்டு கச்சியில் மணி மேகலை,


"மொய்த்த மூவறு பாடை மாக்களிற்

கோணார் கேளார்   கான் முட மானோர்

பேணா மாக்கள் பேசார் பிணித்தோர்

படிவ நோன்பியர் பசிநோ யுற்றோர்

மடிநல் கூர்ந்த மாக்கள் யாவரும்

பன்னூறா யிரம் விளங்கின் றொகுதியு

மன்னுயி ரடங்கலும் வந்தொரும் கீண்டி.” 10 (28-221-7)

 

எல்லா உயிர்களுக்கும் உண்டியளித்து உகந்தேகுமாறு செய்தனள்.


(வனங்கள்)

 

காவிரிப்பூம் பட்டினத்திலுள்ள வனங்களைக் கூறுமிடத்து ஆசிரியர் உய்யா வனத்தில், வானவர்களாலின்றி மண்ணவர்களால் விரும்பப் படாதனவும், பாடும் வண்டுகளால் அணுகப்படாதனவுமாகிய மலர்களைக் கொண்ட பல மரங்கள் வாடாதமலர்களைக் கொண்டுள்ளதால் " இவ்வனம், பூதம் காத்திட்ட'' தென நினைத்து உணர்ந்தோர் அதனை யடைந்து செல்லார் ; கதிரவனின் வெம்மையால் விரிசிறையிழந்த சம்பாபதியிருந்த சம்பாபதி வனமும், காவிரிப் பாவையின் தாதை கவேரனிருந்த தவவனமும், முதுமையுடையனவும் தாக்கி வருத்தும் தன்மை பதுமாகிய பொல்லாத் தெய்வங்களாற் காக்கப்படுதலின் அறிந்தோர் அவைகளையும் எய்தாரெனப் புதுமையையுடைய வனங்களி னியல்பு கூறுவதுங் காண்க.


(பளிக்கறை)

 

தன்னகத் துள்ளோரது ஓசையைப் புறத்துள்ளோர் அறியா வண்ணம் செய்து, அவர்களின் மெய்யை மட்டும் வெளிப்படுத்துவதாகிய பளிக்கதை மண்டபமொன்று, பகவனது ஆணையால் பல மாமும் பூத்திடும் உவவனத்திலுள்ளது. அம்மண்டபத்தே 'துநிற மாமணிச் சுடரொளி விரிந்த தாமரைப் பீடிகை யொன்றுண்டு. அப்பாத பீடத்திலிட்ட அரும்புகள் மலரும். தொல்லாண்டு கழியினும் அதிலிட்ட மலர்கள் வாடா. அம் மலர்களை வண்டுகள் மொய்த் திடாது. தன்ன த்திட்ட மலர்களை நினைத்த கடவுளின் பொற்பாதங்களில் அடைவிக்கும். நினைப்பிலராய் மலரையிடின், அவை யெங்கும் சென்றிடாது. ' செய்யும் வினைகள் சிரத்தையோடு கலவாவிடத்துப் பலியா" என்ற புருஷார்த்தத்தைக் காட்டுதற்கு பயனென்பானால் அது கட்டப்பட்டது. (கா. 3.)

 

உதய குமரனுக்குப் பயந்து மணிமேகலை பளிக்கறையில் புகுந்திட, அரச குமரனுக்கு அவளது உருவமே தோன்றுவதாயிற்று. அவளை அடைய விரும்பிய இளங்கோனுக்கு வழி யொன்றும் தோன்றாது போக, அத்தா ழொளி மண்டபத்தைத் தன் கையாற் றடவி வாயிலை யெங்கும் காணாது அதனைச் சூழ்ந்து கலங்கி வந்தனன். இப்பீடிகையோ டன்றித் தேவர் கோனா விடப்பட்டதும், தன்னைத் தரிசித்த புத்தனது நல்லறத்தைக் கைப்பற்றி நடந்திடும் பரிசுத்தருக்குப் பழம் பிறப்பைத் தெளிவுபட உணர்த்துவிக்கும் சிறப்புற் றோங்கியதும் (11). ஒரு வழித்தோன்றிய மன்னரிருவர் "எமதிது" என்று வாது புரிந்து தம் பெருஞ்சேனை யோடு வெஞ்சமர் புரிந்த நாளில் "செருவொழிமின். இது எமது'' என்று பெருந்தவ முனிவன் புத்த தேவன் தான் அதிலமர்ந்து முறை செய்தது மாகிய புத்தபீடிகையொன்று மணி பல்லவத்திலுண்டு. அது,

 

"விரிந்திலங் கவிரொளி சிறந்து கதிர் பரப்பி

யுரைபெறும் மும்முழ நிலமிசை யோங்கித்

திசைதொறு மொன்பான் முழநில மகன்று

விதி மாணாடியின் வட்டங் குயின்று

பதும சதுர மீமிசை விளங்கி

யறவோற் கமைந்த வாசன" மாகும். (8:44: 9)


அங்கு, நறுமல ரல்லது பிறமரஞ் சொரியாது. அதனருகில் பறவையு முதிர் சிறை சென்றதிராது. தனது பழம்பிறப்பை அப்பீடிகையா லுணர்ந்து கொண்டு (9.கா.) மணிமேகலை ஆபுத்திரனையும் அறியச் செய்வா ளாயினள். (25). அவ்வுயர் மணிப்பீடிகை "குலந்த பிறவியை, மையறு மண்டிலம் போலக் காட்டு மியல்பினது. (25:135: 7:)

 

எண்ணிலா அருந்தவத்தவர்கள் நிறைந்து இருந்து செயற்கரிய காரியங்களைச் செய்திட்ட பெருமை வாய்ந்த நம்மிந்திய நாட்டில், இந்துக்கள் இத்தகைய கருத்தைக் கொண்டு, இவ்வித விஷயங்களில் பூரண நம்பிக்கையும் காண்டிருந்தன ரென்பது இதிகாச புராணங்களாலும், அனைத்து முணர்ந்த அறிவாளிகளின் நூற்களாலும் நன்கு விளங்குகின்றன. புத்த நூற்களிலன்றிப் பிற நூற்களிலும் இத்தகைய செய்திகள் வந்துள்ளன காண்க. இக்காலத்தில், இத்திறப்பட்ட தெய்வீகச் செயல்களைச் சாமானியமாக நிகழ்ந்திடக் கண்டிலாத சாரணத்தால், அக்காலத்திலுள்ளனவென்று நூற்கள் கூறும் இவை போன்ற மேன்மையான அற்புதச் செய்திகள், உண்மையாக இருந்திருக்குமா வென்று ஐயப்படுவதில் பயனொன்றுமில்லை. அக்காலத்திலிருந்தது இக்காலத்தி லில்லாமலும், இக்காலத்தி லுள்ளவை அக்காலத்திலில்லாமலும், இருக்கலாம். இதுவே காலச் சக்கரத்தின் கூற்று. சாத்தனாரும் இவ்வாறான தெய்வீகச் செயல்கள் சாமானியமான மனிதரிடத்துப் பொருந்தி யிருந்தனவெனக் கூறாது; அவைகளைக் கொள்ள அருகராவோரிடத்தும், கொண்டிருக்கக் கூடியவரிடத்துமே இருந்தனவாகப் புத்த மதத்தினரின் கொள்கைகளுக்கு முரணாகா வண்ணம் பொருந்தும் முறைப்படி கூறியுள்ளனர். தெய்வங்கள் தூணிலோ திரும்பிலோ எங்கிருப்பினும், அவை அதிசய சக்திவாய்க்கப் பெற்றனவக ளென்றே நூற்கள் கூறும். அங்ஙன மிருத்தல் பற்றியே அவை தெய்வங்களெனவும் படும். ஆகலின், மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வீக சம்பவங்கள் யாவும் நிகழ்ந்தவை யென்றே துணிந்திடவேண்டியுள்ளது.

 

3. சரித்திரக் குறிப்பு


9. பாண்டிய நாடும் பாண்டியனும்

 

இனிச் சோழநாட்டை விடுத்துப் பாண்டிய நாட்டினைக் குறித்து இந் நூலகத்துக் காணப்படும் விஷயங்களைக் கவனித்திடுவோம். 'மறை நூலென்று மண்ணகத்துள்ள யாவராலும் ஒரு நிகராகப் புகழ்ந்து கொண்டாடப்படும் சிறந்த நூலாகிய திருக்குறளுக்குத் தமது பேரறிவின் பெரும்பயனின் காரணத்தால், இணையில்லா உரை நூலை எழுதித் தமிழ் உலகிற்கு அளித்திட்ட பேரறிவாளர் பரிமேலழகர், தமது உரை எலகத்துப் படைப்புக் காலந்தொட்டுத் தமிழ்நாடுகள் மூன்றும், தலை சிறந்து விளங்கி இருந்தனவென்று கூறிப் போந்தனர். பாண்டிய நாட்டின் எல்லைகள்,


“வெள்ளாறது வடக்கா மேற்குப் பெருவழியா

வெள்ளாற் புனற்கன்னி தெற்காகு – முள்ளறா

வாண்டகடல் கிழக்கா மைம்பத்தாறு காதம்

பாண்டிநாட் டெல்லைப் பதி."

என்ற வெண்பாவால் விளங்கும்.


(பாண்டிய நாடும் மதுரையும்)

 

அக்காலத்தில் பாண்டியரின் நாடு தென்பாண்டிநாடு, பன்றி நாடென்ற மூன்று பிரிவினைக் கொண்டிருந்ததாகக் கூறுவர். கூறுவர். தற்காலத்திலுள்ள ராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்கள் தென்பாண்டி நாடாகவும், மதுரை ஜில்லா பாண்டிய நாடாகவும், தஞ்சை ஜில்லாவின் தென்பாகம் பன்றி நாடாகவும் கருதப்பட்டு வந்ததாகத் தெரிய வருகிறது. ஆனை மலை கீழ்ப்பாகத்தில் உற்பத்தியாகி வரும் வைகையாற்றங் கரையிலுள்ள மதுரையம்பதி, பாண்டிய நாட்டிற்குத் தலைநகராக இருந்தது. இது தக்ஷண மதுரை யென்றும் அழைக்கப்பட்டு வந்தது. (மணி. 13: 105). மதுரையைப் பற்றிய விஷயங்கள் பல, சிலப்பதிகாரம் ஊர்காண் காதையிலும் (14); அடைக்கலக் காதையிலும் (15; விரிவாகக் காணப்படுகின்றன.
"மாடமலி மறுகிற் கூடல்" (முருகு. 71); "மாடம் பிறங்கியமலி புகழ்கூடல்" (மதுரை, 429) மாட மதுரை" சிலப் பதி, 20, 8:3; 9:76; 15; 112); “மாடக்கூடல்" (பரிபா. 20: 106); “நான்மாடக் கூடல்" (கலி: 92); "தமிழ் முதல் பிறக்கு நாடாய்த் தயக்கு மாற்பாண்டி நாடு" (சிவப். சீகாள. நக்கீரச் சருக்கம்); எனப் பிற நூற்களில் பலவாறாகப் புகழ்ந்து கூறப்பட்டுள்ள பாண்டியநாடு மதுரையை மணிமேகலையிலும், 'காவலன் பேரூர்" (2: 54); ''பாண்டி நன்னாடு" (14:55); "பதிகெழு நன்னாடு'' (25: 101); என அதன் ஆசிரியர் சிறப்பித்துக் கூறியள்ளன காண்க.

 

இம் மதுரையம்பதியில், ''மிக்க செல்வத்து விளங்கியோர் வாழ்ந்து'' வந்தனர். (13:104; 22: 105) அது அரசனால் நன்கு காக்கப்பட்டு வந்தது. (13:85) சிந்தா தேவியின் கோயிலும், மதுராபதியின் கோயிலும் அங்கு இருந்தது. தமிழ்நாட்டில் மேன்மையாக விளங்கியதொரு நகரமென்று குறித்தற்கோ, அன்றித் தமிழ்க்கழகங்கள் விளங்கியதும், தமிழைப் பெரிதும் ஆதரித்த மன்னர்கள் வசித்ததும், தமிழ் வளர்ந்து வந்ததுமாகிய பிரசித்தி பெற்ற நாடென்பதைப் பிரித்துக் காட்டுதற்கோ சாத்தனார், ''தென்றமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய்" எனப் பெருமைப்படுத்திக் கூறுகின்றார், நற்றமிழ் நாடு மதுரை யென்பது,


“செந்தமிழ் நாடே

சந்தனப் பொதியச் செந்தமிழ் முனிவனுஞ்

சௌந்தர பாண்டிய னென்னுந் தமிழ்நாடனுஞ்

சங்கப் புலவருக் தழைத்தினி திருக்கும்

மங்கலப் பாண்டிவள நாடென்ப.”

என்ற சூத்திரமும் கூறுதல் காண்க.

 

('மணிமேகலை'யும் மதுரையும்)

 

சிலம்பை விற்றிடும் நோக்கமோடும் கண்ணகி தனது கணவனுடன் மதுரை சென்றாள். விதி வசத்தால் காவலனது ஆணைப்படி கைவாளுக்கிறையாகி அவள் காதலன் இறந்தான். (மணி, 8: 41-3) அக் கடுந்துயரம் பொறாது கற்பரசி மதுரையை எரிவாயுட் படுத்தினள் (2: 50-4). அதன் பின்னர், பன்னிரண்டு ஆண்டுகளாகப் பாண்டி நன்னாடு, மன்னுயிர் மடிய மழை ள மிழந்து, கொடிய வறுமையால் வருந்தி வந்தது. (14:55-6; 25:101-3) இவ் விஷயங்களையன்றி, மதுரையைக் குறித்தும், பாண்டி நாட்டைக் குறித்தும் விவரமாகப் பிற செய்திகள் ஒன்றும் இந்நூலில் காணப்படவில்லை.

 

சிலப்பதிகாரத்திலும் மதுரை, கோவல னிறந்த பின்னர் வறுமையால் வாடியதென்றும், அது தெரிந்து கொற்கை நகரிலிருந்து பாண்டிய நாட்டை ஆண்டுவந்த இளஞ் செழியன், பொற்கொல்ல னொருவன் காரணமாகக் கோவலன் இறந்தானாகையால், பொற்கொல்லர் ஆயிரம் பேரைப் பலியிட்டுச் சாந்தி செய்தனனென்றும் கூறப்பட்டுள்ளன. இவ்விளஞ் செழியனை வெற்றி வேற்செழிய னென்பர். (சில: 27: 114-138.)


(கொற்கை)

 

மணிமேகலையில் மதுரையோடன்றிப் பாண்டிய நாட்டின் மற்றொரு தலைநகராக இருந்த ''கொற்கையம் பேரூரைப் பற்றியும் (13: 84) சிற்சில இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது. கொற்கை யென்பது அகஸ்திய மலைக்கூட்டத்தில் உற்பத்தியாகிவரும் தாம்பிரபரணியின் வாயிலுள்ள தென்பர். அது பாண்டியர்களின் பழைய இராசதானியாக இருந்தது. பாண்டிய மன்னரின் பிரதிநிதியாக இளவரசனால் ஆளப்பட்டு வந்ததொரு புராதன நகரமென்பர். தென்னாட்டில் விளங்கிய சிறந்ததொரு துறைமுகப்பட்டினம் வெளிநாட்டு வியாபாரத்திற்குப் பயன்பட்ட தொரு பேரூர். இங்கு நடந்து வந்த பவழ வியாபாரத்தைக் கிரேக்கரது நூற்களும் புகழ்ந்து உரைக்கின்றன.

 

'மணிமேகலை'யில், தீய ஒழுக்கத்தால் கணவனைப் பிரிந்து கன்னியாகுமரிக்கு நீராடச் சென்ற வாரணாசியில் வசித்து வந்த அந்தணன் அபஞ்சிகனின் மனைவி சாலி யென்பாள் "பொற்றேர்ச் செழியன் கொற்கையம் பேரூ''ருக்குக் காதவழி தூரத்திலுள்ள (13: 84) இடைச்சேரியில் ஒரு ஆண்மகவைப் பெற்றதாகக் கூறப்பட்டுள்ள தால்; பொற்றேர்ச் செழியன், கொற்கையை அரச இருக்கையாகக் கொண்டு ஆண்டு வந்தனனா? அன்றி மதுரையி லிருந்து ஆண்டுவந்த பொற்றேர்ச் செழியனாகிய பாண்டியனுக்குச் சொந்தமாகிய கொற்கையம் பேரூரைச் சாலி குறித்தனளா வென்பது விளங்கவில்லை. கோவலன் இறந்ததும், கண்ணகி எரித்ததும் மதுரையென்தே கூறப்பட்டிருப்பதால், அக் காலத்தில் மதுரையே பாண்டியரின் தலைநகராக இருந்தது விளங்கும். ஆகலின் இங்கு குறிக்கப்பட்டுள்ள செழியன், மதுரையி லிருந்தே ஆண்டு வந்தன னெனவும் அவனது ஆட்சிக்குட்பட் டிருந்த கொற்கையைச் சாலி அடைந்தன ளெனவும் கொள்ளுதலே சாலவு மேற்றதாகும். சாலி பெற்ற ஆபுத்திரன் இறந்து சாவக நாட்டில் மறுபிறப் பெடுத்துப் புண்ணியராசனென்ற பெயரொடும் ஆண்டு வந்தனன். அப் புண்ணியராசனையே மணிமேகலை மணிபல்லவத்திற்கு அழைத்துச் சென்றனள். ஆகலின் புண்ணிய ராசனுக்கு ஒரு பிறப்பிற்கு முன்பிருந்த சாலி குறித்திடும் பொற்றேர்ச் செழியன், புண்ணியராசன் சாவக நாட்டில் பிறந்து, பின் அரசனா யிருந்த காலத்தில் நிகழாது, அவன் பிறத்தற்கு முன்பு நடந்திருக்க வேண்டிய செயலாகிய கோவல னிறந்ததற்குக் காரணமா யிருந்த நெடுஞ்செழியனாகவே இருத்தல் வேண்டும். மற்றும் சிலப்பதிகாரக் கதைத் தொடர்பை யொட்டி மணிமேகலையின் கதை நிகழ்ச்சியும் நடந்துள்ளதால், மணிமேகலை பின் காலத்திலிருந்த ஆபுத்திரனாகிய புண்ணிய ராசனது தாயாக முற்பிறப்பிலிருந்த சாலியின் காலத்தவனாகலின், இம் மன்னன் கண்ணகியின் கணவனைக் காரணமின்றிக் கொன்றதால் கவலையுற்று, ஆராயாது செய்த அடாத பிழைக்குத் தண்டமாகத் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட பாண்டியனா யிருத்தல் வேண்டுமென்றே கூறலாம். மணிமேகலையின் காலத்திலிருந்ததாகக் குறிக்கப்பட்டுள்ள மதுரையும், கண்ணகியால்,


''பார்ப்பா ரறவோர் பசுப்பத்தினிப் பெண்டிர்

மூத்தோர் குழவியெனு மிவரைக் கைவிட்டுத்

தீத்திறத்தார் பக்கமே சேர்க."


(சிலப்ப. 21:53-5) என்று சபித்து எரிக்கப்பட்டு அழிந்து சென்ற மதுரைக்குப் பிந்தியதாகவே இருத்தல் வேண்டும். தனது சாபத்தால் மதுரை அழிந்தொழிந்த செய்தியைக் கண்ணகி தெய்வம் மணிமேகலையிடம் கூறுதல் காண்க. (காதை. 21.)

 

(பொற்றேர்ச் செழியன்)

 

செழிய னென்பது பாண்டியரைப் பொதுவாகக் குறித்திடும் பெயர்களில் ஒன்று. பிற, மாறன், தென்னவன், வழுதி யென்பனவாம். இங்கு ஆசிரியர் பொற்றேர்ச் செழியனென்ற அடைமொழியோடும் பாண்டியனை அழைப்பாராயினர். கண்ணகியின் சீற்றத்திற்கு இலக்காகிய பாண்டியன் நெடுஞ் செழியனென்பது பிற நூற்களில் விளங்கும் உண்மையாகும். எனவே இப் பொற்றேர்ச் செழியன் அந்நெடுஞ் செழியனாதல் வேண்டும். நெடுஞ்செழியனாகிய இப் பொற்றேர்ச் செழியனை, ஆரியப்படை க. நெடுஞ்செழிய னெனவும் கூறுவர். இளங்கோவடிகள், "வடவாரியர் படை கடந்து தென்றமிழ் நாடொருங்கு காணப், புரைதீர் கற்பிற்றேவி கன்னுடன், அரசுகட்டிலிற் றுஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழிய" னெனச் சிறப்பாகக் கூறியுள்ளனர். (மதுரைக் காண்டத்தி னிறுதிக் கட்டுரை.)


(நெடுஞ் செழியன்)

 

இளங்கோவடிகளின் வாக்கால், இச் செழியன் வடகாடு சென்றதும், ஆரியரது படையை வென்றதும், நல்லாட்சி புரிந்ததும், தென்னாடு காண உயிர் துறந்ததும் விளங்குகின் றன. நெடுஞ் செழியனென்று பெயர் தாங்கிய மன்னர்கள் பலர் அக்காலத்தில் இருந்ததால், அவரில் இவனை வேறாகக் காட்டப் பழம் தமிழ் நூற்புலவர் இவனை "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழிய" னென்பா ராயினர். மணிமேகலையின் ஆசிரியரது காலத் *லேயே நெடுஞ்செழியனென்று பெயருடைய அரசர்கள் இருந்ததால் அவானும் இம் மன்னன் பிரித்துக் காட்டப்பட்டுள்ளனன். இந் நெடுஞ்செழியன் சிறந்த தமிழ்ப் புலவன். தமிழ்ப் புலவர்களை ஆதரித்து வந்த ஈகையாளன். சங்க நூற்கள், நெடுநல்வாடையிலும், மதுரைக் காஞ்சியிலும் இம்மன்னனது முழு வரலாற்றையும் காண்க. இப் பாண்டியன் கல்வியின் உயர்வைக் குறித்துக் கூறியதாக உள்ள பாடலொன்று புறநானூற்றில் (183) உள்ளது. அச் செய்யுளின் இனிமை போற்றற் குரியது.

 

சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரையில் கூறப்பட்டுள்ள வெற்றி வேற்செழியன், இவ்வாரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்குப் பின் நாடாள வந்தவனாக இருத்தல் வேண்டும். இவ் வரசனது வரலாறு அடியார்க்கு நல்லாரின் உரையில் விரிவாகக் காணப்படுகின்றது. (சிலப், 27:127-8) பழிக்குப் பாத்திரனான பாண்டியன் நெடுஞ்செழியனுக்குக் கோப்பெருந் தேவியென்ற மாதரசி மனைவியாக வாய்ந் திருந்தாள். அக் கற்பரசி, தனது கணவன் அரசு கட்டிலில் வீழ்ந்து துஞ்சிய செயல்கண்டு தாளாத மனத்தினளாகித்தானும் ஒருங்குடன் மாய்ந்து உலகுள்ளளவும் புகழுக்குப் பாத்திரமாயினள். அவ்வருஞ் செயலைப் பாராட்டி,

"கலக்கம் கொள்ளாள் கடுந்துயர் பொறாள்

மன்னவன் செல்வுழிச் செல்க யானென

தன்னுயிர் கொண்டவன் உயிர் தேடினள் போல்

கோப்பெரும் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்.''

என்ற செய்யுளடிகள் கூறுவன நோக்குக.


3. சரித்திரப் பகுதி

9. சேரநாடும் வஞ்சியும்

 

சேரநாட்டைக் குறித்தும் அதன் தலைநகராக அக்காலத்தில் விளங்கி இருந்த வஞ்சியைப் பற்றியும் "மணிமேகலையில் பலவிஷயங்கள் கூறப்பட்டுள்ளன. சேரநாட்டின் எல்லைகளை,


''வடக்குத் திசை பழனிவான் கீழ் தென்காசி

குடக்குத் திசை கோழிக்கூடம் – கடற்கரையி

னோரமே தெற்காகு முள்ளொன்பதின் காதம்

சேரநாட்டுக் கெல்லைடெனச் செப்பு.'',


என்ற வெண்பாவால் அறியலாம். அக்காலத்தில் சேரநாடு, பூழிநாடு, குடநாடு, குட்டநாடு, வேந்நாடு, கல்நாடு என்ற ஐந்து பிரிவினதாக இருந்த தென்பா. பூழிநாடு, மணல் அதிகமாக உள்ள வடமலையாள தேச மென்பர். குட நாடு தென்மலையாள தேசமாம். குட்டநாடு கொச்சிப்பிரதேசம். கல்சாடு நீலகிரியின் அடியிலுள்ள பாலக் காடும் ஆனைமலையு மாகு மென்பர்.

 

மேற்கூறிய வஞ்சிக்குக் கருவூரென்றும் பெயர் வழங்கி வந்தது. இதனைத் திருச்சி ஜில்லாவைச் சார்ந்துள்ளதும், அமராவதிக் கரையிலுள்ளது மான கரூரென்பர் சிலர். வேறு சிலர், திருவஞ்சைக்கள மென்பதே வஞ்சியா மென்பர். மற்றுஞ் சிலரோ பேரியாற்றங் கரையிலுள்ள திருக்கரூ ரென் திருவஞ்சைக் களத்தையே உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிக்கின்றனர். (சில. பதிக உரை. 3) இளங்கோவடிகள் வஞ்சி நகரின் கீழ்க்திசையிலுள்ள குணவாயிலென்னு மூரில் கோயிலொன்றில் வசித்து வந்ததாகக் கூறப்படுகின் றனர். அக் குணவாயி லென்பது யாதென்பதை அறிந்திஉல் சேராது நகரம் மேற்கூறிய மூன்றினில் எது வென்பது விளங்கும். கருவூரென்பது ஆன் பொருரையாற்றின் கரையில் விளங்கியதொரு பட்டணமா அகநானூறும் (93) புறநானூறும் (11, 387) சிலப்பதிகாரமும் (29) கூறுவது காண்க. இங்கு வஞ்சி யென்பது எதனைக் குறிப்பதென்பது நன்கு விளங்கவில்லை. சரித்திர ஆராய்ச்சியாளர்களால் இது விளக்கப்படல் வேண்டும்.


 (வஞ்சிமா நகரின் புகழ்ச்சி)

 

கந்திற்பாவை, "வஞ்சிமாநகர் புகுவை" யென (21:91) வருவ துரைத்த படியும், கண்ணகி தெய்வம், 'இளையளோ டன்றி வளையணிந்த பெண்ணாகவுமிருத்தலி னெவரும் விளைபொருளுரையா' ராகலின் வேற்றுருக்கொண்டு “பல்வேறு சமயப் படிற்றுரையெல்லாம்” பாங்குடன் கேட்டிடுகவெனக் கூறியாங்கு, மணிமேகலை,

"மையறு சிறப்பிற் றெய்வதந் தந்த

மந்திர மோதியோர் மாதவன் வடிவாய்.''


அப் “பொன்னகர்ப் பொலிந்தனள்'' எனக் கூறினும், பொருள் தெளிவாக விளங்கி இருக்குமாயினும் செங்குட்டுவன் தமக்கு இருந்த அபிமானம் பற்றியோ; சிறப்புற்ற அரசனின் தலைநகர மென்றதாலோ; இளங்கோவடிக்ளிடத் திருந்த நேசத்தின் காரணத்தாலோ; அல்லது முத்தமிழ் வேந்தரின் நாட்டையும் ஒரு நிகராகப் புகழு மாசையாலோ; அன்றி மிகவும் உன்னதமான பதவியுற்று விளங்கி யிருந்தும், மிக்க பல சமயவாதிகளைக் கொண்டிருந்தும், அச் சமயங்க ளனைத்தும் மணிமேகலையால் மெய்யற்றனவென்று விலக்கப் பட்டமையின், சிறந்த வப்பதியி னிழிவைக் குறிப்பாக நன்கு விளக்கிடவோ, யாது பற்றியோ வேண்டா திருக்கவும், ஆசிரியர் சாத்தனார் அந் நாட்டினைப் பற்றி வெகு விரிவாகவும், அதன் மன்னனது மாண்பைச் சாலவும் உயர்த்தியும் கூறியுள்ளனர்.

 

இந் நகரின் சிறப்பை ஆசிரியர், மணிமேகலை இதனகத்துப் புகுத்தன ளென்று கூறிய சமயத்தும், மீட்டுமதனை விட்டு வெளிப்போந்தனளென்று கூறியுள்ள அமயத்துமாக இரு முறையுங் குறித்துள்ளனர். சாத்தனார், வஞ்சிமாநகரை அவ்வமயத்து ஆண்டுவந்த சேரன் செங்குட்டுவனது, உற்றதொரு நண்பர், அவனால் நன்கு மதிக்கப்பட்ட கண்ணகிக்குற்ற கடுந் துயரையும், மதுரை யடைந்த கேட்டையும் நேரிற் கண்டவாறு அச் சேரனிடம் கூறியவர். ஆகலின் ஆசிரியர் அக்காலத்திலிருந்தபடியே அம் மன்னனது நாட்டைச் சிறப்பாகக் கூறியுள்ளன ரென்றே கொள்ளவேண்டும். பண்டைத் தமிழ் நூற்களிலும் வஞ்சி மிகவும் உயர்வாகவே கூறப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் இப் பதியை ''பூவாவஞ்சி" (26: 50) “வாடாவஞ்சி" (28: 180) 'கோநகர்'' (27: 255) எனக் கூறப்படுதல் காண்க.


(நகரின் வனப்பு)

 

வஞ்சியம்பதியைப் பல வகையிலும் மேன்மை புறச் செய்தனவற்றை, ஆசிரியர் மணிமேகலையில் பரக்கக் கூறியுள்ளனர். அந்நாட்டில் தேவர்களின் கோயிற்களும், பொய்கைகளும் எங்கும் நிறைந்திருந்தன. நற்றவ முனிவர்களும், கற்றுணர்ந்த பெரியோர்களும், தொன்னூற் புலவர்களும் எங்கும் உறைந்திருந்தனர். (26=72-6) நீர்வளம், நிலவளம் கொண்ட அந்நாட்டில் சுருங்கைத் தூம்பின் வாயிலாக நகரெங்கும் நீர்பாய்ச்சி வந்தனர். (காதை. 28) ஆசிரியர் வஞ்சியின் கோட்டை யழகையும், அதனைக் காத்து வந்த வீரரின் தீரத்தையும் வெகு அழகாக மொழிந்துள்ளனர். நான்கு வகை யின் பாற்பட்ட வீரரும் பிறரும் புறக்கரில் வசித்திருந்தனர். உழிஞைமாலையைச் சூடி அரணைப் படைவீரர்கள் பாதுகாத்து வந்தனர். (28: 2-4) உயர்ச்சியும், பருமனும், வலிமையும் கொண்டதாய்க் கற்களால் கட்டப்பட்ட மாண்புடைய மதிற்சுவர்கள் அரணைச் சுற்றி யிருந்தன.


(நகரின் தெருக்கள்)

 

இங்ஙன மோங்கி வானளாவி நின்ற மதிலி னிடையில் பூக்கள் நிறைந்த கொடிமிடை வாயில் பல பொலிந்து விளங்கின. காவற்காரர்கள் எங்கும் தங்கித் தமது கடமைகளை முறைபிறழாது விதித்தன விதித்தாங்கு ஒழுங்கு படச் செய்து வந்தனர். நகரின் உட்புறத்தில் பல தெருக்கள் இருந்தன. மீன், உப்பு, கள், பிட்டு, அப்பம் முதலியன விற்பவர்களும்; ஆட்டு வர்த்தகர், பாசவர், பஞ்சவாசம் விற்பவர் ஆகிய இவர்கள் வசிக்கும் தெருக்கள் ஒரு புறமாக இருந்தன. குயவர், செம்பு, வெண்கலம் முதலியன செய்வோர்; பொற்பணியாளர்; உருக்குத் தட்டர், மரங்கொல் தச்சா, மண்ணீட்டாளர், ஓவியக்காரர், தோல் விற்போர், தையற்காரர், மாலைக்காரர், சோதிட நூலோர், இசைக்காரர் முதலிய இத் திறத்தினோர் தங்களின் தொழிற்களைச் செய்து கொண்டு இன்புற்றுறைக் திருந்த தெருக்கள் மற்றொரு புறமாக இருந்தன. விலங்கரம் (வாளரம்) செய்வோர், வளை போழ்நர் (சங்கறுப்போர்), மணிகோப்போராயெ இவர்கள் வாழ்ந்து வர்த தெருக்கள் பிறிதொரு புறத்தே விளங்கி யிருந்தன. மற்றும் கூத்தியர் மறுகும், கூலமறுகும் (இருந்தேத்து வோராகிய) மாகதர், (நின்றேத்துவோராநிய) சூதர் , (பலதிறப்பட்ட தாளத்தி லாடுவோராகிய) வேதாளிகர், முதலிய இந்திறத்தினராகிய இசைப்பிரியர்கள் ஒருபுற மிருந்தனர். இவற்றோடன்றி "போகம் புரக்கும் பொதுவர் பொலிமறுகும்," "நுண்ணூற் கைவினை வண்ண வறுவையரின் (உடை நெய்வோ ரின்) வளந்திகழ் மறுகும்'' "பொன்னுரை காண்போர் நன்மனை மறுகும்,
"பன்மணி பகர்வோரின் மன்னிய மறுகும்' அந்தணர் வீதியும், அரசர் பெருந்தெருவும், அமைச்சரின் வீதிகளும், புதுக்கோள் யானையையும் பொற்றேர்ப்புரவியையும் பயிற்சிப்போரின் கவின்பெறு வீதியமாகப் பலவகையான வீதிகளும் நாற்புறமும் நகரெங்கும் விளங்கின, தெருக்களோ டன் றி, மன்றமும், பொதியிலும், சந்தியும், சதுக்கமும், குன்றங்களும், அறச்சாலைகளும், கூடங்களும், கோலங்குயின்ற கொள்கை யிடங்களுமாகிய இவையும் காணப்பட்டன.


(வஞ்சியும் சாத்தனாரும்)

 

இங்ஙனமாக வஞ்சிமாநகரைச் சாத்தனார் அதிகமாகப் புகழ்ந்து கூறியுள்ளதை நோக்குங்கால், அக் காலத்தில் அது சாலவும் சிறந்து எழில் வாய்ந்து விளங்கிய நகரங்களி லொன்றாக விளங்கி யிருத்தல் வேண்டுமென்பது கூறாமல் விளங்கும். மீட்டும் கூறுமிடத்து, சாத்தனார், தம் காலத்திலிருந்த தமிழ்நாட்டு அரசர்கள் மூவரி லொருவனும், புகழுக்குப் பாத்திரனாக விளங்கியவனும், தம்மிடம் நட்புப் பூண்டொழுகியவனும், மேன்மையொடு நாடாண்டு வந்தவனுமாகிய சேரன் செங்குட்டுவனது தலைநகரைப் புகழ்ந்து கூறி யுள்ளனர். இவரது நட்பாளராகிய இளங்கோவடிகள், தமது நூலாகிய சிலப்பதிகாரத்தில், பூம்புகாரை வெகு அழகாக அதன் வனப்புகள் தோன்றுமாறு மேன்மைப்படுத்திக் கூறியுள்ளனர். எனவே சிலப்பதிகாரத்தில் முக்கியமாக விளங்கிய காஞ்சிநகரை மணிமேகலை ஆசிரியரும், மணிமேகலையில் முக்கியமாக விளங்கிய புகாரை சிலப்பதிகார ஆசிரியருமாக நண்பரிருவரும், இரு தலை நகரங்களையும் உயர்த்திக் கூறியுள்ள செம்மை நோக்கி மகிழவேண்டி யுள்ளது. ஆயின் இரு பெரும் புலவரும் தாம் நேரிற்கண்டனவும், தம் காலத்துனவுமாகிய விஷயங்களையே வரிவடிவாக்கித் தத்தமது நூற்களிற் பொதித்து வைத்து இருக்கின்றன ரென்றே கருத வேண்டியது. புகழ்ச்சியாக, இல்லாதனவற்றைக் கூறி இருப்பரென்பது இழுக்குடையதாகும். வஞ்சியைப்பற்றிய பிற விஷயங்களில், அதன் அரண்மனையின் மாண்பும் (28: 46-50); அங்குள்ள பல மண்டபங்களின் சிறப்பும் (25:4); வேற்றாசர்கள் தங்குதற்குப் பயன்பட்டு வந்த மாளிகையின் அமைப்பும் (28: 198); திருமாலின் ஆலயமாக விளங்கிய ''ஆகமாட" மென்ற பெயர் பெற்ற கோவிலின் பெருமையும் (26:32; 30-51), சிலப்பதிகாரத்தில் காண்க.


(சேரலன்)

 

சேர அரசர்களது சரித்திரங்களைப்பற்றிய விஷயங்கள் பல. பதிற்றுப்பத்து, புறநானூறு, சிலப்பதிகாரம் முதலிய நூற்களில் அறிந்திடலாம். இவற்றுள் பதிற்றுப்பத்து நூல் முழுவதும் சேரர்களைப்பற்றியே கூறுவதாக அமைந்துள்ளது. மணிமேகலையில் சேரலனைப்பற்றிச் சில செய்திகள் கூறப்பட்டுள்ளன. இந்நூலில் அம்மன்னன், குட்டுவர் பெருந்தகை; விடர்ச்சிலை பொறித்த வேந்தன்; குடக்கோச் சேரலன்: என்று உயர்த்திக் கூறப்பட்டுள்ளனன். "குட்டுவர் பெருந்தகை ' யென்றும், "குடக்கோச் சேரலன்" எனவும் வந்துள்ள அடிகளை நோக்கு மிடத்து, இவ்வரசனை ஒரு சிற்றரசனாகவே கருதவேண்டி யுள்ளது. குடா, குட்டமென்பன கொடுந் தமிழ்நாடுகளைக் குறிப்பனவாகும். இச் சேரலனுக்கு மனைவியர் பலருண்டு. இலங்கையினின்று வந்த தரும சாரணரால் இவன் உண்மைத் தத்துவப் பொருளை யுணர்ந்தவன். (மணி. காதை. 28.)

 

10. இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன்

(சேரலன் காலம்)

 

மாசாத்துவான் தான் வஞ்சிக்கு வந்து தங்கிய செய்தியை மணிமேகலையிடம் கூறுமிடத்து, இச் சேரலன் கண்ணகியின் சவைனாயெ சோவல ஓக்க ஒன்பது வழி முறைக்கு முன்னோயை மற்றொரு கோவலனின் நண்பனென்று மொழிதல் காண்க. கோவலனின் கதை நிகழ்ந்ததும் அவன் இறந்ததும், சேரன் செங்குட்டுவனது காலத்திலென்பதி நூற்களால் அறியப்படும். இக் சோவலனுக்கு ஒன்பது தலைமுறைகளுக்கு முற்பட்டிருந்ததாகக் கூறப்படும் அக் கோவலனது காலத்தவனாகிய சேரலன், சேரன் செங்குட்டுவனது காலத்திற்குப் பல்லாண்டுகளுக்கு முற் ட்டவனாக இருத்தல் வேண்டுமென்பது பெறப்படும். பதிற்றுப்பத்து, ஐந்தாம்பத்தில் சேரன் செங்குட்டுவனை,


"வடவருட்கும் வான்றோய் நல்லிசைக்

குடவர் கோமான் நெடுஞ் சேரலாதனுக்கு''


மகனெக் கூறியுள்ள படி, 'மணிமேகலை'யிலும் அதன் ஆசிரியர் தாம் குறித்ள்ள சேரலனைக் குடக்கோச்சேரலன், "குட்டுவர் பெருந்தகை" யெனக் உறுதலால், இருநூற்களும் சேரன் செங்குட்டுவனது தந்தையாகிய நெடுஞ்சேரலனையே குறிப்பனவாகுமோ என்றும் எண்ண இடமுள்ளது.

 

இந் நூலாசிரியர் தாம் குறித்த சேரனை 'விடர்ச்சினை பொறித்த வேந்த' னென்ற கூறுமாறு

(28: 104);

“ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம் தென்னங்குமரி யொடாயிடை.

மன் மீச்கூறு நர்மறந்த பக்கடந்தே"


எனப் பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்திலும்;


''இமயஞ் சூட்டிய வேமவிற் பொறி

மாண் வினை நெடுந்தேர் வானவன்''


எனச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை மாறோகத்து நப்பச லை யார் பாடிய புறநானூற்றிலும் (39); “இமயமலையில் சூட்டப்பட்ட சாவலாகிய விற்பொறியையும், மாட்சிமைப்பட்ட தொழில் பொருந்திய நெடிய தேரையு முடைய சோன்'' என்ற அதன் உரையிலும் உள்ள கருத்துக்கள்,


"மாநீர் வேலிக் கடம்பறுத் திமயத்து

வானவர் மருள மலைவிற் பூட்டிய

வானவர் தோன்றல்'' (காட்சி. 1-3)


“விடர்ச்சிலை பொறித்த வேந்தன்” (23: 82)

 

“விடர்ச்சிலை பொறித்த விறலோன்”' (28: 136)


என்ற சிலப்பதிகார அடிகளில் இளங்கோவடிகள் கூறியுள்ள கருத்துக்ளோடு ஒத்திருத்தலின், இவ்வடிகள் யாவும் குறிப்பது, இணையற்ற தனது வீரர் தோன்ற, குமரி முதல் இமயகிரி வரையிலும் வென்று சென்று, அதற்கறிகுறியாகத் தனது இலச்சினையாகிய விற்பொறியை, இமயத்தில் பொறித்திட்ட இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையே குறிப்பனவாமென்று எண்ணஇடமுள்ளது. எனினும் மேலே குறித்தபடி சாத்தனார் கோவலனது ஒன்பதாவது மூதாதையின் நண்பனாகிய சேரலனென்று கூறுதலால், அவர் கூறுவது செங்குட்டுவனது தந்தையோ அன்றிப் பிறனொருவனோவென்று சக்தேகிக்கவும் இடமுள்ளது. அங்ஙனம் கொள்ளின் செங்குட்டுவது தந்தை இமயம் சென்று வெற்றியுடன் மீண்டவாறே மணமேகலை கூறும் சேரனும் சென்று விற்பொறி நாட்டி வந்ததாக எண்ண வேண்டும். சரித்திர ஆராய்ச்சியாளர் கவனிக்கவேண்டிய விவயங்களில் இதுவு மொன்றாகும்.


இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

 

இவனைச் செங்குட்டுவனது தந்தையெனக் கருதுவோர், அவனது ஆட்சி வரலாறு முழுவதும், பெரும் பரிசு பெற்று அவனைப் பாடிய குமட்டுச் கண்ணனாரென்ற நல்லிசைத் தமிழ்ப்புலவரது பதிற்றுப்பத்து இரண்டாம் பத்திலும், மற்றும் அகநானூற்றிலும் (55, 127,347, 396); புறநானூற்றிலும் (செ. 62; 63;65;) சிலப்பதிகாரத்திலும் அவனைக் குறித்துக் கூறப்பட்டுள்ளன கண்டுகொள்க. புறநானூற்றில் இவன் பெருஞ் சேரலாதனென்றும் வழங்கப்படுகின்றனன். சோழன் கரிகாலனோடு போர் செய்து புறப்புண் நாணி வடக்கிருந்த சேரனிவ னென்பர். அச் சேரனைக் கழாத்தலையாரென்ற புலவர் புறத்தில் பாடியுள்ளனர். (புறம். 65) வெண்ணிலென்ற அப்போரில் தோற்றோடிய சேரனை வெண்ணிக் குயத்தியாரென்ற பெண்மணியா --ம் புறத்தில் பாடியுள்ளனர். (66) வடக்கே சென்ற சேரனது செயல் அகநானூற்றிலும் (செ. 55) குறிக்கப்பட்டுள்ளது.

 

இச் சேரலன் கடலிடைச் சென்று ஆங்கிருந்த தன் பகைவரது கடம் பினையறுத்த செய்தியும், (செ. 127; 347); வடநாடு சென்று வடவேந்தர்கஎாகிய ஆரியர்களை அடிபணியுமாறு பொருது தாழ்த்தி, சிலரைச் சிறையும் செய்து, இமயத்தில் தனது விற்பொறியையு விட்டு (செ. 396) மீண்ட செய்தியும்; ஆபரணங்கள் பலவுடன் பொற்பாவை யொன்றும் தனது பகைவரிடமிருந்து பெற்ற வரலாறும் (செ. 127) அகநானூற்றால் விளங்குகின்றன. விற்பொறியை இமயத்திலிட்டமை பற்றியே இவனது பெயரும் இமயவரம்பன் கெடுஞ்சேரலாதனென்று வழங்கலுற்றது போலும்! பகைவரிடம் பெற்ற திறைப்பொருள் யாவும் ஒருபுறத்திட்டு இச்சேரன் புறப்புண்னுக்கு நாணி காட்டை சீசகித் துறவு பூண்டு வடக் கிருந்தன னென்பது அகநானூற்றால் பெறப்படுகின்றது. (செ. 127) அக்கால, தில் இவ்வரசனோடு இன்ப துன்பங்களை உடனிருந்து நகர்ந்துவந்த நல்லிசைச் சான்றோர் பலராவர். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் தமது தந்தை கரிகாலனோடு பொருத செய்தியொன்றும் கூறினாரில்லை. ஆயின் அவரது நூலில் கோவலனது கதை நிகழ்ந்தகாலம் கரிகாலனது காலமென விளக்குதலால், அவரது தந்தையும் அக்காலத்தவராக இருக் கருத்தல் கூடுமென்பதை ஊகித்தறியலாம். ''சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியும் போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தாரைக் கழாத் தலையார் பாடியதும் (புறம் 62;) ''போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தாரங் கழுத்தன்னதாக உயிர் போகாது கிடந்தானைக் கழாத்தலையார்''' பாடியதும் (புறம். 368); அவரைப் பரணர் பாடியதுமாக உள்ள (புறம். 63) புறப்பாட்டுகளை நோக்குக.


11. சேரன் செங்குட்டுவன்

 

'மணிமேகலை'யில் சேரன் செங்குட்டுவனது செய்கைகள் பலவும் காணப்படுகின்றன. பிற மன்னர்களின் மாண்பை இவ்வாசிரியர் குறித்துள்எவாறன்றி, செங்குட்டுவனது வீரத்தை வியந்து ஒழுங்குபட விரிவாக இவர் கூறியுள்ளதும் காணத் தக்கது. (26: 77-92) செங்குட்டுவனின் முழுவரலாறும், இவனது இளைய சகோதரர் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் காண்டம் முழுவதிலுமாகக் கூறப்பட்டுள்ளது. மற்றும், இவனைப் பாட்டிசைப்புலவர் பரணர் பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்திலும் பாடியுள்ளனர். இவ்வாதாரங்களைக் கொண்டு சேரன் செங்குட்டுவனது போர்த்திறனும் குணாகுணங்களும் அரசியல் முறையும் தெய்வ வழிபாட்டின் போக்கும் அக்காலத்திய பழக்க வழக்கங்களும் தற்காலத்தில் பளிங்கிற்கண்ட பரிதிமுகம் போலத் தெளிவாக அறிய இயலுகின்றன.

 

செங்குட்டுவன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு உறையூர்ச் சோழன் மணக்கிள்ளியின் மகள் நற்சோணையிடம் பிறந்தவன். அடியார்க்கு நல்லாரும் "சேரலாதற்குச் சோழன் மகள் நற்சோணை யீன்ற மக்களிருவருள்' என்று கூறுவது நோக்குக. நீதி தவறாது செங்கோ லோச்சியவன். எங்கும் வெற்றியே கொண்ட வீரன். சோழனோடு முனைந்து நின்ற போர்க்களத்தில் தனது கணவன் நெடுஞ்சேரன் மாண்டிட, நற்சோணை யுத்த முனையில் கணவ னுயிரோடு தன்னுயிரையும் நீத்தனள். (புறம். 63) அவ் வீரச்செயலைப் பாராட்டி, அதற்கறிகுறியாக அன்னைக்கு நடுகல்லிடக்கருதி, சேரன் செங்குட்டுவன், கங்கை சென்று அக்கல்லை நறுநீராட்டித் தூய்மைப் படுத்தப் போவான். எதிர்த்து வந்த ஆரியப் பகையாசர்களைப் பொருது வெற்றிபெற்று மீண்டான். இது பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்துப் பதிகத்தில் காணப்படும் வரலாறாகும்.

 

சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவன் மனைவியின் வேண்டுகோட் கிணங்கி, அமைச்சரின் மொழிப்படி, பத்தினிக்கடவுளாகிய கண்ணகி தேவியை பிரதிஷ்டை செய்ய இமயத்தினின்றும் கற்கொணருவான் வேண்டியும், தம்ழாசரை இகழ்ந்து கூறிய பாலகுமா னெனும் அரசனின் மக்களாகிய கனகன், வீசயனென் 2 ஆரியமன்னரை அடக்கவும் வடநாடு சென்றதாகக் கூறப்பட்டுள்ளது காண்க. இவற்தை விரிவாகச் சிலப்பதிகாரம் வாழ்த்துக்காதையில் “உரைப்பாட்டு மடை" யென்ற தலைப்பின் கீழ் இளங்கோவடிகள் கூறியுள்ளனர். இவன் கண்ணகியின் கோயிலைக் கட்டுதற்குக் கல்லெடுத்து வரவே இமயம் சென்றனனென மணிமேகலையிலும் கூறப்பட்டுள்ளது. (காதை. 26.)

 

பதிற்றுப்பத்தும், சிலப்பதிகாரமும் கூறும் செய்திகளை ஒப்பிட்டு நோக்குமிடத்து இச் சோன் இருமுறைகள் வடநாட்டிற்குச் சென்று வக் திருத்தல் வேண்டுபென எண்ண இ-முள்ளது. ஒன்று தாயின் நிமித்தம் நடுகலலை கங்கை நன்னீரில் நனைத்து வரவும், மற்சென்று கற்பரசி கண்ணகித் தெய்வத்திற்குக் கோயில் கட்ட கல்லெடுத்து வர இமயத்திற்குச் சென்று வந்ததுமாகும். இவ் வடநாட்டு எழுச்சியை இளங்கோ வடிகளும்,


“கங்கைப் பேர்யாற்றுக் கடும் புனனீத்தம்

சாங்கோ மகளை யாட்டிய வந்தாள்

ஆரிய மன்ன ரீரைஞ் தூற்றுவர்க்கு

ஒரு யோகய செருவெங் கோலம்

கண் விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்''


எனக் கூறுதல் காண்க. மணிமேகலையிலும் புகழ்கொண்டு வடநாடு சென்று, இச்சேரன், கங்கையை நாவாயிற்க ஆரிய அரசர் பலரையும் தன்னை முன் பிகழ்ந்த, கனக விசயரின் மென முடிமேல் இமயத்தினின்றும் கற்களைக் கொணரச் செய்து அவர்களின் முடிமிசைக் கல்லும் தன்றிரு முடிமிசைச் செய்ய பொன் வாகையஞ் சேர்த்தி வெற்றியொடு மீண்டன
னெனச் குறிக்கப்பட்டுள்ளன. (காதை. 26)


(செங்குட்டுவனின் போர் வகை)

 

கரியாற்றில் துஞ்சிய காவலன் நெடுங்கிள்ளிக்குப் பின்பு, அவனது மகன் பெருங்கிள்ளி யென்பான் உரையூர் அரச வுரிமையைப் பெற்றனனென்பர். இப் பெருங்கிள்ளி ஆண்டில் இளையனா யிருந்தமையின், இவனை யெதிர்த்துப் பகைவர் பலரொருங்குகூடி வந்தனர். செங்குட்டுவன் இது கண்டு சீற்தங்கொண்டு, இளையனும் தனது மைத்துனனுமாகிய பெருங்கிள்ளிக்குத் துணையாகச் சென்று உறையூரை யடுத்துள்ள நேரிவாயிலில் சோமர் குடிப் பிறக்க ஒன்பது இளவரசர்களை ஒருக்காக வென்று ஓட விட்டனன். (சில, 27: 118-123) இவ் வரலாற்றை பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தின் பதிகத்திலும் காண்க. இப் பெருங்கிள்ளியே புறானூறு கூறும் இராசசூயம் வேட்ட பெருங்கிள்ளி யென்பர். (செ 16) அடியார்க்கு நல்லார் இங்கு குறித்த செங்குட்டுவனின் மைத்துனனை பெருகற்கிள்ளி யென்றுள்ளனர். (சில. பக். 32) சிலப்பதிகாரத்து உரைபெறு கட்டுரையில் பெருநற் கிள்ளியெனக் குறித்துள்ளது. சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் “நேரிவாயில்- உறையூக்குத் தெற்கில் வாயில தோர் ஊ"ர் என்பர் (பக். 73) மற்று மிச்சேரமன்னன் சோழ பாண்டியர்களைப் பலவிடத்தலும் எதிர்த்துப் போர் செய்து, கொடுகூர், வியலூர், இடும்பிற் புறமாகிய பலவிடங்களிலும் வெற்றிபெற்றனன். சிலப்பதிகாரம் இப் போர்களை முறையே,


"சிறுகுர னெய்தல் வியலூ ரெறிந்தபின்

ஆர்புனை தெரிய லொன்பது மன்னரை

நேரிவாயில் நிலைச் செரு வென்று

நெடுந்தேர்த் தானையொ டிடும்பிற் புறத்திறுத்துக்

கொடும்போர் கடந்து” (28: 115-9)


எனக் கூறுதல் போக்குக. சோழ பாண்டியரை முறியடித்துக் கொங்கர் செங்களத்தில் வெற்றி பெற்றுக் கொடுகூரெறிந்த போரை, சிலப்பதிகாரம் 25-ம் காதையலும் குறித்தல் காண்க. (152-5)

 

(பழையனை வீழ்த்தியது)

 

செங்குட்டுவன், மோகூரின் உரிமையாளனும், பாண்டியனின் படைத்தலைவனும் நண்பன் அறுகை சென்ற சோழக் குறுநில மன்னனது பகைவனுமாகிய பழைய னென்பானை யுத்த முனையில் வென்று அவனது காவல் மரமாகிய வேம்பை வெட்டிச் சாய்த்திப் பலவகையாலும் அவனை அவமதித்தனன். (மதுரைக்காஞ்சி; பதிற். 44; சில: 27: 124-6) பழைய னென்ற பெயரோடு, சோழநாட்டிலுள்ள போரென்னு மூர்க்குத் தலைவனாக மற்றொருவ னிருந்தனனென்பது அகநானூற்றால் விளங்குகின்றது. முன்னவன் பாண்டியனின் படைத்தலைவனாயிருந்தவாறு, பின்னவன் சோழனது சேனாபதியாக இருந்தனன். முன்னவன் தலைமை வகித்த மோகூரென்பது பாண்டியநாட்டி லிருந்தவாறு (மதுரைக் காஞ்சி) பின்னவன் தலைமை வகித்து ஆண்டு வந்த நகரமானது காவிரிபாயும் நன்னாட்டின்கணுள்ள தொன்றாக விளங்கியது. (அகம். 326). சேரரது
படையோடு பொருது பின்னவன், கழுமலப் போரில் பட்டானாகச் சோழன் பெரும் பூட்சென்னி யென்பான் அது கண்டு சினந்து கணையனென்ற படைத் தலைவன் கீழிருந்த சேரனது படையை வென்று, படைத்தலைவனை யகப் படுத்திக்கொண்டு கழுமல மென்ற நகரையும் கைப்பற்றிக் பொண்டனன். (அகம். 44) இக் கணைய னென்பானே பின்னர், மற்போ ரொன்றில் தோல்வியுற்று அதற்கு நாணி மறைந்தன னென்பது அகநானூற்றுச் செய்யுளொன்றால் விளங்குகின்றது. (செ.386) மேலே கூறிய வரலாற்றுக்களால் பழையனென்ற படைத் தலைவர்களிருவரும் வெவ்வேறானவர்க ளென்பது விளங்கும். பழையன் போரைச் சிலப்பதிகாரமும் சிறப்பித்துள்ளது. (சில. 28: 119-21; சில. இறுதிக்கட்டுரை (11- 5.)


(கடற் போர்)

 

செங்குட்டுவனோடு முரணிக் கடலிடையிருந்த பகைவர் பலரைக் கடற்படையொடுஞ் சென்று, இவன் கலங்க அடித்தனன். (சிலப்: 25:119; 30-கட்டுரை) கடற்படை யொன்றை இவன் கொண்டிருந்ததும், கடற்போரில் தேர்ச்சி பெற்றிருந்த படையினை இவன் வாய்க்கப் பெற்றிருந்ததும் இதனால் விளங்கும். இவனது கடல் வெற்றியின் காரணத்தால் இவன் "கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்" என்றும் (பதிற்) “சேரமான் கடலோட்டிய வேல் கெழுகுட்டுவன்" என்றும் (புறம். 369) கூறப்படுவன். பரணர் இச்செங்குட்டுவனது கடற்போரையும், (திற். 45, 46, 48; அ. 212) பழைய னிடத்துப் பெற்ற வெற்றியையும் மிகவும் புகழ்ந்து கூறியுள்ளனர். பதிற்றுப்பத்தில் வந்துள்ள,


"கெடலரும் பல்புகழ் நிலை இ நீர்புக்குக்

கடலொ இழந்த பனித் துறைப் பரதவ'' (46, 48)


என்ற அடிகளை நோக்குக.

 

மேற்குறித்துள்ள போர்களை இச் சேரன் யாதுபற்றி மேற்கொண்டனனென்பது நன்கு விளங்கவில்லை. இளங்கோவடிகளும் காரணமொன்றும் புகன்றிலர். இங்ஙனமாகப் பல போர்களிலும் வெற்றிபெறு வீரக்கழலணிந்த ஒப்பற்ற வீரனிச் சேரனென்பது விளங்கவே, மணிமேகலையிலும் சாத்தனார், “நிலைநா டெல்லை தன் மலைகாடென்ன" பரந்த விசாலமாயிருந்த மாபெரும் நாட்டிற்கு மன்னனாக இருந்தனனென்று சுருங்கக் கூறிக் கருத்துகள் பலவும் அடங்குமாறு வைத்துள்ளனர். பரணரும், இக் கருத்துக்களமையவே,


"வடதிசை யெல்லை யிமயமாகத்

தென்னங் மரியொ டாயிடை யரசர்

முரசுடைப் பெருஞ் சமந்ததைய வார்ப்பெழச்

சொல் பலநாட்டைத் தொல்கவி னழித்தழ

போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவன்"

எனக் கூறுவாராயினர். சோழ பாண்டியர்களிலும் இச் சேரன் சிறந்து. விளங்கினனென்பது இளங்கோவடிகளின் வாக்கினால் விளங்கும். (சில, 25 :87-90, 26: 167171)

 

(கோவலன் கதை நிகழ்ச்சி)

கண்ணகி கணவனோடும் மேலுலகஞ் சென்றதைக் கண்ணிற்கண்ட
குறவர்கள், மலைநாட்டு முறைப்படி, மலைவளங் காண மனைவியோடு மிளையரோடும் பேரியாற்றங்கரைக்கு வந்திருந்த செங்குட்டுவனிடம், மலைபடு பொருள்கள் பலவும் வாரிவந்து கொடுத்திட்டுக் காரிகையின் அற்புதச் செயலையும் கூறினரென்பதும், அவ்வமயத்து ஆங்கிருந்த புலவர் சாத்தனார், மதுரையில் தாம் நேரில் கண்ட கண்ணகியின் விருத்தாந்தங்களை ஒன்றன் பின் ஒனான்றாகக் கூறினரென்பதும் சிலப்பதிகாரத்தால் விளங்கும். இச்செங்குட்டுவன் ஐம்பத்தைந்தாண்டுகள் இருந் தனனென்பது பதிற்றுப்பத்தால் அறியலாம்.

(தலை நகரங்கள்)

தமிழ்நாட்டின் தலைநகரங்களாக விளங்கியிருந்த மூன்று நகரங்களையும் குறித்துச் சாத்தனார் கூறி புள்ளவைகளால், அந்நகரங்களின் தொன்மையும் அதில் வசித்து வந்தோரின் குணப்பான்மையும், அவற்றை ஆண்டுவந்தவர்களின் மேன்மையும் ஒருவாறாக அறிதற் கியலுகின்றன. கல்வியாலும் போர்த்திறத்தாலும் செல்வச் செழிப்பாலும், சீரும் சிறப்புமுற்று விளங்கி இப்பதிகளிருந்தமைபற்றி யன்றோ, ஒளவையாரும்,

''வேழ முடைத்து மலைகாடு மேதக்க

சோழவளநாடு சோறுடைத்து – பூழியர்கோன்

தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை

நன்னாடு சான்றோர் உடைத்து.”


எனப் பாராட்டிக் கூறியுள்ளனர். சாத்தனார் தமது நூலில் தமிழ்நாடுகளாகிய இவற்றின் பெருமை அழியாது என்றும் நிலைத்து நிற்கவெனக் கருதி அவற்றைக் குறித்துக் கூறியுள்ளனவற்றில் சிலவற்றை உயர்த்திக் கூறியு மிருக்கலாம். ஆயின் சரித்திர நூலாராய்ச்சியின் ரெவரும் பல ஆதாரங்களை மூலாதாரமாகக்கொண்டு, இந்நகரங்கள் நலம் பல கொண்டு மேன்மையாகச் சிறந்து விளங்கி யிருந்தனவாகவே கூறியுள்ளமையின், இங்கு இவ்வாசிரியர் மொழிக்துள்ளவைகளும் பெரும்பாலும் உண்மையாகவே இருத்தல் வேண்டு மென்பதைத் துணிவுடன் கூற இடமுள்ளது.

12. பிற சரித்திரச் செய்திகள். தீவுகள்.

 

சரித்திர நூற்களறிந்த தீவுகளும், மலைகளும் வேறு பலவம் மணிமேகலையில் காணப்படுகின்றன. மணிபல்லவம், காவிரிப்பூம்பட்டினத்திற்குத் தென்றிசையில் ஆறைந்து யோசனை தூரத்திற் கப்பாலுள்ளது. அது ‘இருங்கடல் வாங்குதிரை' யா லுடுத்தப்பட்டதொரு தீவு. (மணி. 6:211-4; 8:1-2; 9: 55-7) புண்ணியராசனது கழிந்த பிறப்பு வரலாற்றை அவனுக்கு உணர்த்தியவளும், காவிரிப்பூம்பட்டினம் கடலாலழிந்ததை மணிமேகலைக்குக் கூறிய
வளுமாகிய தீவதிலகை யென்பவளால் அது இந்திரனின் கட்டளைப்படி காக்கப்பட்டு வந்தது. பழம் பிறப்பை யுணர்த்தும் புத்தபீடிகை யொன்றும், கோமுகி யென்ற பொய்கையொன்றும், அங்கிருந்தன. (காதை. 25.) மணி பல்லவம் இலங்கைத் தீவிற்கு வடக்கேயுள்ள, 'ஜப்னு' வெனப்படும் யாழ்ப்பாணம் முதலிய சிறு தீவுகளா யிருக்கலாமென்பது பெறப்படும்,


மற்றும்,

''நால்வகை மரபின் மா பெருந்தீவு

மோரீராயிரஞ் சிற்றிடைத் தீவு.''


என (6: 185-6; 25: 223-5) இவ்வுலகின் நடுவேயுள்ள மேருமலையினையும் அதைச் சூழ்ந்துள்ள ஏழுமலைகளும், நான்கு வகைப்பட்ட பெருந்தீவுகளைப் பற்றியும் ஈராயிரம் சிறிய தீவுகளைப்பற்றியும் இங்கு கூறப்பட்டுள்ளது. இத்தீவுகள் யாவும் எவற்றைக் குறிப்பனவென்பது துணிய முடியவில்லை.

 

சாவக நாடென்பது ஒரு தீவு. அது பெரிய அரசிறைக் குட்பட்டிருந்தது. நாகபுரமென்பது அதன் தலைநகரம். அமரசுந்தரியின் கணவனாகிய பூமிசந்திரனென்பவன் அதனை அக்காலத்திலாண்ட மன்னன். அவன் புத்தமதத்தைச் சார்ந்தவன். இந்நாடு மழையின்றிப் பஞ்சப்பிணி பாதிக்க வருந்திப் பல உயிர்களையும் பசியெனுங் காலனுக்கு இரையாக்கியது. (மணி. 14: 73-84) சகையிற் சிறந்து விளங்கிய ஆபுத்திரனாகிய புண்ணியராசன் பின்னர் அந்நாட்டிற்கு மன்னனா யிருந்தனன். (21:89) அவன் பிறந்த தினத்திலிருந்து அந்நாடு பலவளமும் பெறுவதாயிற்று. இந்நாட்டில் தவளமலை யென்ற மலை யொன்றுண்டு. இத் தீவை தற்காலத்தில் விளங்காநிற்கும் ''ஜாவா' என்பர்.


(நாக நாடுகள்)

 

நாகநாடென்ற பெயர் கொண்டு மணிமேகலையில் இரண்டு நாடுகள் வந்துள்ளன. ஒன்று புத்த பீடிகையை யெடுத்துச்செல்ல முயன்ற பகைமை கொண்ட மன்னர்களது. மர்றொன்று, கடலருகிலிருந்த “நக்க சாரணர் நாகர்"கள் வாழும் மலையைப்பற்றியும், அதை யாண்டுவந்த குருமகனைப்பற்றியும், மனிதரைத் தின்றல், கள்ளுண்ணலாகிய அந்நாட்டினரின் இழிய பழக்க வழக்கங்களைப்பற்றியும், பெண்டிரு முண்டியுமே பிறவியிலுரு மின்பமெனக்கொண்டிருந்த அவர்களின் கொள்கையைத் திருத்திக் கற்பரசி ஆதிரையின் கணவன் சாதுவன், அம்மக்களை நல்வழிப்படுத்தியதையும்; ஆசிரியர் கூறியுள்ள நாடாகும். இவைகள் எவரைக் குறிப்பனவென்பது விளங்கவில்லை.
ஆராய்ச்சி வேண்டும்.

 

இவற்றோடன்றிக் கிள்ளிவளவன் மணந்த பீலிவளையின் தந்தையும், வாசமயிலையின் கணவனுமான, வாகைவேலோன் வளைவாணனென்னும் அரசன் ஆண்டு வந்த நாகநா டொன்றும் குறிக்கப்பட்டுள்ளது. (25:54-5) தொண்டைமானிளந்திரையனது கதையைக் கூறுமிடத்து நச்சினார்க்கினியர் காகரைப் பாதளத்திலுள்ளவராக்கிக் கூறுகின்றனர். அப் பாதளவாசிகள் படமும் வாலுமுடையரான தேவசா தியரி லொருவராகக் கூறப்படுவர். நாகரென்ற சாதி வகுப்புட்பட்ட இம்மக்கள் தமிழ்காட்டின் சில பாகங்களிலும் சாவகத்தீவு முதலிய இடங்களிலும் வசித்து வந்தவராகச் சிலர் கூறுவர். பீலிவளை யென்பவள் ஜாவா என சப்படும் தீவிலுள்ள நாக மக்களின் அரசகிய வளைவாண னென்பானின் மகளென்பது ஒரு சிலரின். கூற்று. இக் நூலாசிரியரும், வளைவாணனைக் கீழுலகத்து மன்னனனக் கூறாது, ரென்ற பகுப்பினரின் அரசனெனவே கூறி யிருப்பரென்று எண்ண இடமுள்ளது. அத்திபதிக்கு முனிவர் பிரமதருமர், தருமோபதேசம் செய்கையில், "பூகம்பத்தினால் நாகான்னாட்டில் நானூறு யோசனை யளவும் பாதளத்தே வீழ்ந்து கெட்டழியு மென்று அறிவிப்பாராயினர். (காதை. 9) அந்நாககாடு பாதளலோகத் துள்ள நாகரின் நாடாயின் அது மீண்டும் பூகம்பத்தால் பாதளம் செல்லுமென முனிவர் கூறினரெனக் கொள்ளுவது வருந்திக் கொள்ளினன்றி, மேலாக நோக்குமிடத்துப் பொருத்தமாகத் தோன்றவில்லை. ஆசிரியர் பலவகை சாதி மக்களில் ஒருவராகிய நாகரென்போர் வசித்து வந்த நிலப்பரப்பைக் குறித்தாரென்று கொள்காள்ளுவதே சிறப்பாகத் தோன்றுகின்றது அங்ஙனமே, சோழனுடன் பூங்காவில் வசித்த பீலிவளையையும் பாதளவாசியாகக் கருதுவது அத்துணை சிறந்ததாகத் தோற்றவில்லை. நச்சினார்க்கினியர் குறித்திடுமாறு பாதளத்துள்ள நாகரென நினைத் திடுவது ஒத்த பொருளாகுமா வென்பது கற்றோர் ஆராய்ந்தறிந்து தெளிவுபடுத்த வேண்டியதொரு விஷயம். நாகரென்பவர் நாகலோக மெனப்படும் மெனப்படும் பாதளத்தில் வசிப்பவராக இருக்கலாம். அன்றி நாகங்களைக் கற்களில் பொறித்து அதனைத் தெய்வமா
கத் தொழுது கொண்டாடும் ஒருவகைச் சாதியினராக இருக்கலாம். அவ்வா நன்றி நாக இலச்சினையை யுடைமைபற்றி இப் பெயரைப் பெற்றவராகவுமிருக்கலாம். நாகநாடு நடுக்கின்றாள்பவன்” (24=54); ''நாக நன்னாடாள்வோன்" (25: 178); "நாக நாடாள்வோன்'' (26: 3) என பலவகையாக நாகநாட்டு மன்னனைக் கூறுதல் நோக்குக.


(பிறநாடு முதலியன)

 

புத்ததேவனின் பிறந்த இடமாகலின் சாத்தனார் மகதத்தையும் கபிலையையும் நூலெங்கணும் உயர்த்திக் கூறியுள்ளனர். சிங்கபுரத்தரசனாகிய வசுவென்பானோடு போர் செய்த குமரனென்னும் அரசனுடைய தலைநகராகிய கபிலபுரமென்று மற்றொரு கபிலையும் இங்கு கூறப்பட்டுள்ளது. இது கலிங்க நாட்டிலுள்ளது. புத்தர் அவதரித்த கபிலையைக் கபிலவாஸ்துவென்றும் கூறுவர். மேற்கூறிய கலிங்கநாடு, வசு, குமரனென்ற இருவர்க்கு முரியது. சமந்தமென்ற பெயருடைய மலையொன் றுண்டென்பதும், அது மணிபல்லவதீவத்திற்குச் சமீபத்திலுள்ள தென்பதும், ஆங்கு புத்ததேவனது பாதபீடிகை யொன்றுண் டென்பதும்,


''ஈங்கித னயலகத் திரத்தின தீவத்

தோங்குயர் சமந்தத் துச்சி மீமிசை

யறவியங் கிழவோ னடியிணை யாகிய."

(11; 21-3) என்ற அடிகள் குறித்திடும்.


 பின்னர்,

 

“இலங்கா தீவத்துச் சமனொளி யென்னுஞ்

சிலம்பினை யெய்தி.........” (28: 107-8)


என இலங்கைத் தீவில் சமனொளி யென்ற மலையுள்ளதையும் கூறப்பட்டுள்ளது. இவற்றிலே கூறிய சமந்தமென்பதும் சமனொளி யென்பதும் ஒரு மலையாகவே இருத்தல் வேண்டுமெனத் தெளியலாம். முன்னடிகளில் இரத்தினத் தீவமென்றதும், பின்னடிகளில் இலங்கா தீவமென்பதும் ஒன்றாகவே இருத்தல் வேண்டும்.
மணிபல்லவம் காவிரிப்பூம் பட்டினத்திறகுத் தென்பக்கத்திலுள்ளதென்று கூறப்பட்டிருப்பதாலும் (6: 211-3) இரத்தின தீவம் மணிபல்லவத்திற்கு அயலிடத்துள்ளதென்றும், அங்கு புத்தனின் பாதக்குறியுள்ள சமந்தமென்னும் மலையொன்றுள்ளதாகத் தெரிவதாலும், மற்றும் இலங்கையில் பௌத்தர்களால் விசேடித்துக் கூறப்படும் சமனொளியென்ற பெயருள்ள மலையொன்றுண்டென்று தெரிவதாலும் (28: 107-8) சமந்தமென்பதும் சமனொளியென் பதும் இலங்கையிலுள்ள “ஆடம்ஸ் பீக்' என்று தற்காலத்தில் வழங்கப்படும் மலையினையே குறிப்பதென்பர். இம்மலை காவிரிப்பூம்பட்டினத்திற்குச் சற்றேறக்குறைய முப்பது காத தூரத்தில் தற்காலத்திலிருப்பதும்; இக்காலத்திலு மது சமந்த கூடமென்றும் சமனெலை யென்றும் கூறப்பட்டு வருதலும்; இரத்தினத்தீவமென்பது இலங்கைத் தீவையும் சமனொளியென்பது "ஆடம்ஸ் பீக்' என்ற மலையினையும் குறிப்பன வென்பதற் குப் போதிய சான்றுகளாகும்.

 

இந்நூலில் மற்றும், அமுதபதியின் கணவனும், அங்க நாட்டிலுள்ள கச்சயநகரின் அரசனும், அறவணவடிகளால் பாதபங்கயமலையைத் தரிசித்தவனுமாகிய துச்சயனது மனைவியரா யிருந்து பின்னர் மாதவியும் சுதமதியுமாகப் பிறந்த தாரை வீரையுமாகிய இரு சகோதரிகளோடு பாம்பு கடித்துக் கணவன் இராகுல னிறந்தபின்னர் தீக்குளித்து உயிர்நீத்துப் பின், நல்வினைப்பயனால் மணிமேகலையாகப் பிறந்து மேம்பாடுற்ற இலக்கு கியுமாகிய சகோதரிகள் மூவரின் தந்தையான இரவிவன்மனென்னும் அரசனது நகரமாகிய அசோதர மும்; சீதரனென்னும் சித்திபுரத்து அரசனது மகள் நீலபதியின் கணவனும், கண்களில் விடமுடைய திட்டிவிடமென்னும் பாம்பு தீண்ட இறந்து பின்னர் புகாரின் அரசனாகிய கிள்ளிவளவனது புதல்வன் உதயகுமானாகப் பிறந்த இராகுலனின் தந்தையும், காந்தாரமென்ற பெரியதொரு நாட்டிலுள்ள பூருவதேசத்தின் அத்திபதியின் நகரமும், பூகம்பத்தால் அழிந்து சென்றதுமான இடவயமும் (9: 27-8); அப்பூகம்பத்திற்குப் பயந்து அத்திபதிநகரினரோடும் சென்ற வடபாலுள்ள அவந்தி நகரமும் , அசோதரத்து மன்னன் இரவிவன் மனது மருமகனாகிய துச்சயராஜனுடைய இராசதானி நகரமாகிய கச்சயமும்; வித்தியாதரர்களின் பல நகரங்களி லொன்றான காஞ்சனபுரமும் (17:21); கோசாம்பியும்; மாதவியின் தோழியான சுதமதியின் தந்தை கௌசிகன் வசித்து வந்ததும் கடலருகிலுள்ள நகரங்களிலொன்றானதுமான சண்பையும்; கபிலபுரத்தரசனான குமரனோடு போர் செய்த வசுவென்னும் மன்னன் ஆண்டு வர்த கலிங்க நாட்டிலுள்ள சிறந்ததொரு தலைநகரமாகிய சிங்கிபுரமும் (26: 15-7); பாண்டிய நாட்டிலுள்ள வயனங்கோடும்; நியமந்தப்பிய சாலியின் கணவன் வேதமோதுவிக்கும் அபஞ்சிகனென்பான் வசித்துவந்த காசி யெனப்படும் வாரணாசியும் (13: 3) இவைபோன்ற பல நாடுகளும் நகரங்களும் குறிக்கப்பட்டுள்ளன. மற்றும், காயங்கரை, குமரியாறு முதலிய நதிகளும்; விந்தம், பொதியில், முதலிய மலைகளும்; அங்கங்கே கூறப்பட்டுள்ள மேற்கூறிய நாடு நகரங்களும், ஆறுகளும், மலைகளும் தற்காலத்தில் எங் குள்ளன வென்பதை ஆராய்ந்தறிந்து கொள்க.

5. மதக் கொள்கைகள்.

ஆசிரியரின் மதப்பற்று.

மணிமேகலையில் பல விடங்களிலும் புத்தமதக் கொள்கைகள் கூறப்பட் டிருப்பதோடன்றிச் சமயக்கணக்கர் தந்திறங் கேட்ட காதை' (27). ‘தவத்திறம் பூண்டு தருமங்கேட்ட காதை (29), 'பவத்திற மறுகெனப் டாவை நோற்ற காதை' (30) என்னும் மூன்று காதைகளிலும் மதவிஷயமானவைகளே கையாளப்பட்டு முள்ளன. அக்காலத்தில்
பாவி பிருந்த பிறமதக் கொள்கைகளைச் சுருக்கமாகவும், புத்தமதக் கோட்பாடுகளை பரக்கவும் இவற்றுள் கூறப்பட்டுள்ளன. பௌத்த மதத்தை நன்கு அறிந்தவராகலின் சாத்தனார், அதன் பெருமையைத் தமிழ்மக்கள் உள்ளபடி அறிந்து கொள்ளும்படி, தெளிவாகவும், வெகு விரிவாகவும் எழுதி யுள்ளனர். இவற்றினை நோக்குமிடத்துச் சாத்தனார் புத்தமதத்துக் கொண்டிருந்த பற்று நன்கு விளங்குவது நோக்கற்பாலது. அத்வைதக கொள்கையினரன்றிப் பிற எம்மதத்தவரும், தம்மதமே தமக்குச் சம்மதமெனக்கொண்டு பிறமதங்களைத் தம்மதம் போலக் கருதாது அவற்றினை உயர்த்தியும் தாழ்த்தியும் கூறுதல் சாமானியமாக நிகழக்கூடியது. அங்ஙன மானோரில் சாத்தனாரும் ஒருவராக இருக்கலாம்! இவ்வாசிரியர் காலத்தில் பொத்தமதம் இத் தென்னாட்டில் பரவி யிருந்ததைச் சிலப்பதிகாரம் முதலிய பிறதமிழ் நூற்களிலிருந்தும்
உணரலாம். இந்நூலில் கூறப்பட்டுள்ள மதசம்பந்தமான விஷயங்களிலிருந்து மணிமேகலை எழுதப்பட்ட காலமும் அதனால் மற்றுமுள்ள பிற சங்க நூற்களின் காலமும் ஒருவாறாக அறிதற் கேதுவாக உள்ளன.

சமய நரலாராய்ச்சி.

மேற்காட்டிய மூன்று கதைகளிலும், மணிமேகலை, புத்தமதக்கொள்கைகளில் பற்றுக்கொண்டவளென்பது தெரிய வருகின்றது. அவள் பௌத்த சமயவாதிக ளிடத்தும், மற்றும் தத்தமது மதத்தகத்தே மதவைராக்கியம் கொண்ட மதாபிமானிகளான அளவைவாதி, சைவவாதி, பிரமவாதி, பணவவாதி, வேதவாதி, ஆசிகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி முதலிய பல சமயவாதிகளிடத்தும் உரையாடி, அவரவர்களின் மதவமசங்களையும், மதச் சார்பான பிறவிஷயங்களையும், அவற்றைக்
குறித்துக்கூறும் மேம்பாடுற்ற மத நூற்களின் குணா குணங்களையும் உணர்ந்து
கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. முற்காலத்தில் வழங்கி வந்த பல சமய நூற்களிலும், தருக்க முறைகளிலும் சாத்தனார் மிகுந்த ஆராய்ச்சியுடையா ரென்பது 'மணிமேகலையில்' அவர் தத்துவ விஷயங்களைக் கையாண்டுள்ள முறையால தெளிவாகின்றன; இங்கு சாத்தனார் தாம் கொண்டுள்ள கருத்துப்படி, துறவியின் பெருமைகளை விரித்துக் கூறி யுள்ள தோடன்றி, அக்காலத்திலிருந்த மதங்களின் கொள்கைகளையும் தாமுணர்ந்தவாறு இன்னவை யென்று காட்டா நிற்கின்றனர். அவை யாவும சுருக்கமாகக் கீழே கூறப்பட்
டுள்ளன.

நூற்கள் அறமுணர்த்தல்.

'மணிமேகலை' பெரும்பாலும் புத்தமதத்தைப்பற்றியே கூறுவதாகலின் கதைத்தொடர்பும், அதிகமாகப் படிப்பவருக்கு இன்பம் தருவதாகக் காணப்படவில்லை காம வெறி கொண்ட உதயகுமரன், காஞ்சனன் வாளுக்கு இறையாகி உயிர் துறந்த பின்னர் மத விஷயங்களை யேயன்றி, சாமானியமாகப் படிப்பவர்களுக்கு இன்பம் பெறுவிக்குப்படியான கதை விஷயம் அதிகமாகக் காணவில்லை. இக்காரணத்தால் நூலடத்துக் குறை கூறுதல் அடுக்குமோ என ஆராயுமிடத்து, ஆன்றோர்கள் கூறாநிற்கும சான்றுகளைக் காண்புழி,
அவை சாறும தவறாகாதெனத் தோந்து தெளியவே வேண்டியுள்ளது. நன்னூலிடத்துப் பொருந்த வேண்டிய அமசங்களைக் கூறுமிடத்துக் கற்றறிந்த பெரியோர்கள், “இம்மை சலநகளையே பெரிதாகக்கொண்டு அவற்றில் ஈடுபட்டு அழிகின்ற மன்னுயிர்களை உய்விக்குமாறு, உலக நிலையாமை, யாக்கை நிலையான ம, செல்வ நிலையாமை முதல யவற்றைக்காடடி, உலக மாயையினால் மறைவுடிைருக்கும ஆன்ம விசேஷங்களை விளக்கி, உலகில எளியாரை வலியார் நலியாமல எல்லோரும் அறத்தாற்றிற் பொருளீட்டி இன்ப நுகர்ந்து வீடடையுமாறு ஹிதோபதேசம் செய்வதே உத்தமக கவிகளின் உள் நோக்கம்” என்பர்.

''நீப்பரும் உறக்கத்துக் கனவே போன்றும்

நனவு பெயர்பெற்ற மாயவாழ்ககையை மதித்துக்

காயத்தைக் கல்லினும் வலித கக கருதி.''


விதிதனை நனையாது, சதமற்ற உலகப்பற்றுக்களில் நொந்து கிடக்கும் சிற்றின்பம் பிரியராயோருக்குப் பேரின்பப் பெருங்களஞ்சியததை யெய்துதற்கு இந்நூல் வழிகாட்டியாக உள்ள தென்பதல் ஐய பில்லை. இந்நூலோ நற்கருத்துக்களை நிறையக் கொண்டுள்ளது சங்ககால நூற்கள் பெரும்பாலும், அறம், பொருள் இன்பம் வீடு என்ற புருஷார்த்தங்களை பற்றியே கூறுவன என்பது எவரு மறிந்ததே அவை பிறவிப் பெருங் கடலுட் புகுத்தும் முமமலங்களைப்போக்கி முத்தியங்கரையிற் சேர்க்கும் பேருரிமை பெற்றன ‘மணிமேகலை’ யும் அங்ஙனமாயதோர் நூலேயாகும்.

தத்துவக் கிளாச்சி.

சரித்திர நூற்கள், கிறிஸ்து பிறப்பதற்கு ஐந்நூறு வருடங்களுக்கு முற்பட்ட ஐந்நூறு வருஷங்களில், வட இந்தியநாட்டில் ஒரு பெரும் தத்துவக் கிளர்ச்சி யோபட்டதைக் கூறும் சண்டை சசசரவின்றிச் சமாதானமே எங்கும் நிறைக் கருந்த அக்காலத்தில், ஆராய்ந் தறியுப் ஆற்றலும், நூற்கேள்விகளின் பயிற்சியும் மிக இருந்த கற்றறிந்தோர் பலா, இயற்கை தோற்றம், ஆத்துமாவின் உண்மை நிலை. பிரபஞ்ச வாழ்க்கையின் அநித்தியமாகிய இத்திறத்திய விடயங்களை ஆராய்வதில் தமது மனதைச் செலுத்துவாராயினர். அஹிம்சா தருமத்திற்கு விரோதமாக உயிர்கள் அதிகமாகக் கொல்லப்பட்டு வந்தன. அதனைக் கண்டித்துப் பலர் கூறினர். வேதங்களைப் போற்றினராயினும் அவை கூறும் முறைகளைப் பலா வழிபடாராபினர். இந்துமதப் பற்றுடையோரும் தமது மதவழிபாடுகளில் பற்பல சடங்குகளை விடுத்துச் சிலவற்றையே கைக்கொள்ளவா ராயினர். பலர் தமது புதிய கொள்கைகளை நாடெங்கும் சென்று போதித்துப் பரவச் செய்து வந்தனர். இப் புதிய இயக்கம், பல நாடுகளிலும் சிறந்து அக்காலத்தில் தலை தூக்கி முன்னுக்கு வந்த மகதநாட்டில் வேரூன்றுவ தாயிற்று. இங்ஙனமாக எழுந்த புதிய மதங்களுள் புத்தமதமும், ஜைனமதமும், இரண்டாகும். இவ்விரு மதங்களும் இந்து மதத்திலிருந்தே வெளிவந்தவைக ளென்பர். புத்தமதம் இந்தியாவிலன்றி, சைனா, ஜப்பான், தென் அமெரிக்கா, இலங்கை முதலிய பல வெளி நாடுகளிலும் பரவி யிருந்தது. கரும சம்பந்தத்தால் உளவாகும் பிறப்பையும், இறப்பையும் போக்குதற்காகிய மார்க்கங்களைத் தேடுவதே இவ்விரு மதங்களின் நோக்கமாக இருந்தது இம் மதங்கள் வெகு தீவிரமாகத் தோன்றி, இந்நாடெங்கும் பரவின வெளியிடங்களிலும் பரவின. ஆயின் சிற்சில இடங்களிலேயே அவை நிலைப்பதாயின். பரவிய எங்கும் இராது மின்னலைப் போன்று, பிறந்த இந்நாட்டிலேயே சடிதியில் தலைசாய்வதாயின்.
இவ் வரலாறுகள் யாவும் சரித்திர நூற்களில் படித்தறிக. மகாயானம், ஹீனயானம் என்ற இரு பகுப்புட்பட்ட பௌத்தரின் கொள்கைகளில், மணிமேகலை, ஹீனயானரின் முறைகளைப் பின்பற்றுகின்றது.

புத்தரைப்பற்றிய பல செய்திகளும் பெளத்தமதத்தினரின் கொள்கைகளும், புத்தருடைய பிறப்பைக் கூறும் ‘புத்தஜாதகக் கதை'களாலும், பௌத்தமத வெழுச்சியையும், அது எங்கணும் பரவிய செய்திகளையும் கூறும் இலங்கைத் தீவிலுள்ள 'தீபவம்சம்' 'மகாலம்சம்' என்னும் நூற்களாலும்; வினயதர்ம பீடகம், சுத்ததர்ம பீடகம், ஆதிதர்ம பீடகம் என்னும் திரிபீடகமென்னும் நூலாலும், 'லலித விஸ்தார்'மென்ற நூலாலும், திபேத்து தேசத்தில் ஒன்பதாவது, பன்னிரண்டாவது நூற்றாண்டுகளில்
எழுதப்பட்டதெனக் கூறப்படும், புத்த சரித' மென்னும் நூலாலும்; ஆங்கிலத்திலும் எட்வர்டு ஆர்னால்டு என்பவர் எழுதியுள்ள லைட் ஆப் ஆசியா' என்னும் நூலாலும் விளங்கும். சுவாமி ராமகிருஷ்ணர் இம்மதத்தனான் கொள்கைகளை ஒட்டியும் வெட்டியும் தமது அரிய பிரசங்கங்களில் கூறுவனவும் நோக்கற்பாலன.

அளவை வாதி.

மணிமேகலை, மந்திரபலத்தினால் முனியுருக்கொண்டு, பல சமயவாதிகளின் கருத்தையு முணர்ந்திட, சேரர் தலைநகராகிய வஞ்சியம்பதியையடைந்தனள். வாதி யென்போன், காரணங்கள் கூறி, மேற்கோள்களை எடுத்துக்காட்டிப் பிற கொள்கைகளைக் கண்டித்துத் தனது கொள்கைகளை நிலைநாட்டுபவன். அளவைவாதியின் வாயிலாகச் சாத்தனார் வைதிக வாதத்தின் இலக்கணையைக் கூறி யுள்ளனர். அவர்கள் காட்சி முதலிய பிரமாணங்களைக்கொண்டு, காரணம் பகர்ந்து தமது மதக்கருத்துக்களைப் புகன்றிடு
மியல்பினர். முதற்கண், மணிமேகலை அளவைவா தியைளவைவாதியை யடைந்து "நின்கடைப்பிடி யியம்பு'' எனக் கேட்டலும், அவனும் அறிவைப் பெறுதற்கும், நற் கருத்தை யளித்தற்கும் தேர்ந்த கருவிகளாக உள்ள பிரமாணங்களைப்பற்றி விரிவாக விளக்குவானாயினன். அதன் சுருக்கம் வருமாறு. விரிவை முதனூலில் கண்டுகொள்க.

வேதவியாசர், கிருதகோடி, சைமினி யென்னும் இவ்வாசிரியர்கள், பிரமாணங்களி னியல்பைத் தமது கருத்துப்படி வெவ்வேறாகக் கொண்டுள்ளனர். வியாசர் அளவைகள் பத்தென்பர். கிருதகோடி இரண்டைவிட்டு எட்டு அளவைகளைக் கூறுவர். சைமினி நான்கினை நீக்கி அளவைகள் ஆறை மொழிந்திடுவர்.

வியாசர் கூறும் பத்துப் பிரமாணங்கள், காண்டல், கருதல், உவமம், ஆகமம், அருத்தாபத்தி, இயல்பு, ஐதிகம், அபாவம், மீட்சி, உள்ள நெறியென்பன. இவற்றுள் காட்சி இலக்கணம் ஐந்து வகையாகக் கூறப்பட்டுள்ளன இதனை நூலில் காண்க. (27-13-20) கருத்தளவாவது அனுமானத்தால் பொருள்களின் மெய்த்தகைமை உணர்ந்திடும் தன்மையாகும். அனுமானப் பிரமாணமாவது, உள்ளதை வைத்துக்கொண்டு இல்லாத தொன்றின் உண்மையைக் காரணத்தாடு அறிந்திடுதலாகும். அது பொது, எச்சம், முதலென்ற மூவகைப்பட்டது. பொதுவை சாமானிய அனுமானமென்றும் எச்சத்தைக் காரியானுமானமென்றும், முதலைக் காரணானுமானமென்றும் கூறுவர். பொதுவெனப்படுவது சாதனம் சாத்தியமாகிய இவை தம்மொடு அநுவயமின்றா யிருந்தும், மதங்கொண்டு விளங்குகின்ற யானையின் கானொலியைக் கேட்டோன், உடனே அங்கு யானை உண்டென உணர்த்தலுமாகும். எச்சமென்பது நீர்வெள்ள முள்ளதால், அவ்வே துவினால் அவ்விடத்து மழை நிகழ்வு உண்டென்பதை நிச்சயித்து உரைத்தலாம். முதலென மொழிவது கரிய மேகத்தைக் கண்டவிடத்து, இது மழை பெய்திடுமென இயம்புமாறு,
கண்டதொரு பொருளைக் கொண்டு காணாதனவற்றை உணர்ந்திடுதலாம்.

அளவைகளின் இலக்கணம்.

உவமமாவது ஒப்புமையளவை. ஒப்புமை முகத்தான் பொருளின் உண்மையை ஊகித்தல். ஆகமவளவையாவது கற்றறிந்த சான்றோர்களின் நன்னூற்களால் போக புவனமாகிய சுவர்க்கமும் நரகமும் உண்டெனப் புலங் கொளலாம். அருத்தாபத்தியாவது கூறிய ஒன்றைக் கொண்டு கூறாத அதற்கு மாறாக உள்ள பொருளை அறிந்திடுவது. அது கொடுப்பவ ருண்டென்ற விடத்து கொடாதாரு முண்டென்று கொள்ளுமாறு போல்வன. இயல்பளவையாவது "யானைமே லிருந்தோன் றோட்டிக்கய லொன்றீயாது, அதுவே கொடுத்தலை” ப் போன்றது. ஐதிக மெனப்படுவது வெகுகாலமாக வழங்கி வருவதொரு செய்தியாகும். 'இம்மரத்தில் பேயொன்று எய்தி யுள்ளது' எனக் கூறப்படுதலால் அம்மரத்தி னியல்புணர்ந்து தெளிதலைப் போலாம். அபாவமென்பது இல்லாததொரு பொருளை இல்லை யென்பதாம். மீட்சி யென்பது இராமன் வென்றானென இராவணன் தோற்றமை
தானாக விளங்குதல் போல்வது. உள்ள மெறியென்பது இயற்கையாக உள்ளதொரு பொருளை உள்ளவாறு கூறுவது. அதனை, "வியக்குற்ற கால் சலிச்குந் தீச்சுடும் வியனீர் குளிரும், வயக்குற்ற மண்வலிதென்று பட்டாங்கு வழங்குவதே'' என்பர்.

அவைகளின் போலி வகைகள்.

மேற்கூறிய பிரமாணங்களின் பாசங்கள் எட்டு வகைப்படும். அவை சுட்டுணர்வு, திரியக்கோடல், ஐயம், தேராது தெளிதல் கண்டு உணராமை, இல்வழக்கு உணராததை யுணர்தல், நினைப்பு என்பனவாம். சுட்டுணர்வாவது குறிப்பாக உணருவது. ஒன்றை மற்றொன்றாகக் கொள்ளுதல் திரியக்கோடலாம். ஒரு பொருளையும் நிச்சயமாகக்
கொள்ளாது சந்தேகித்தல் ஐயம். "செண்டுவெளியி, லோராது
மகனென வுணர்தல்'' தேராது தெளித லென்றனர். ஒரு பொருளின் உண்மை நிலையைக் கண்டும் தெரிந்திடாதிருத்தல் கண்டுணராமை. இல் வழக்கென்பது முயற்கோடொப்பின சொல்லின், சொல்லிய வப்பொருளை சொல்லளவாகக் கொண்டிருந்து கருத்திற் றறியாமை. பிணிக்குத் தீப்புணர்ந்திடன் மருந்து'' என்று கூறிய விடத்துப் புலங்கொள நினைத்தலைப் போல்வன, உணரா தொரு பொருளைச் சிந்தித்து உணருதலாம். நினைப்பெனப்படுவது காரணமின்றி, 'நினக்கிவர் தாயுந் தந்தையுமென்று' பிறர் சொல்லிய சொல்லைக் கருதலைப் போல்வதாம்.

 

 

மறைந்தன நிங்க எஞ்சிய கொள்கைகள்.

இத் தன்மையனவாகிய அளவைகள் இவ்வுலகில் லோகாயதம், பெளத்தம், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், மீமாமிசமென்ற பெயரொடும் விளங்கும். அவற்றின் ஆசிரியர்கள் முறையே பிருகற்பதி, சினன், கபிலன், அக்கபாதன், கணாதன், சயிமினி முதலியோராவர். இவர்களின் கொள்கைகளைத் தழுவி அப்போதியின்றுள்ள அளவைகள், முறையே பிரத்தியக்ஷம், அனுமானம், சப்தம், உவமானம், அருத்தாபத்தி, அபாவம் என்பன. ஒரோரிடத்திலுள்ள சிறுவேற்றுமைகளை யன்றிப் பதஞ்சலியின் யோகசூத்திரங்கள், சாங்கியர் கூறும் முறைப்படியே இருப்பது நோக்கற்பாலது. கபிலர் தனித்துக் கடவுளில்லையென்றும், பந்றைக்களைந்து அதனால் பிறப்பும் இறப்பு மற்றிருக்கும் பந்தமற்ற ஆத்துமாவே கடவுளென்றும் கூறுவா. இவற்றை விரிவாக முதனூலில் காண்க.

மும்மூர்த்திகளின் மதவாதிகள்.

பின்னர், மணிமேகலை, மும்மூர்த்திகளின் மதவாதிகளை யணுகி முதலாக “இறைவா! ஈசா!'' எனக் கூறிகின்ற சைவவாதி முன்வர, “நின்றெய்வத்தின் தன்மை யாது?'' என, அவனும், “எம்மிறைவன், இருசுடரோடிய மானன்; கலையுருவினன். படைத்து விளையாடும் பண்பினன். தொடைத் துயர் தீர் தோற்றத்தோன், தன்னில் வேறு தானொன் றில்லோன். இத்தகைமைத்தாயவன்" என்று உரைத் திட்டான். பின் வந்த பிரமம
வாதி, "பேருலகெல்லாம் தேவனிட்ட முட்டை' யென் றனன். காதல் கொண்டு கடல்வண்ணன் புராண மோதின வைணவவாதி, “பேருலகெல்லாம் ஆரணன் காப்பெ” ன்றான்.

வேதவாதி.

பின்னர் வேதவாதி ஆதியும் அந்தமுமில்லாது நிற்கும் வேதத்திற்குக் கற்பம் கையும், சர் தம் காலும், எண் கண்ணும், நிருத்தம் செவியும், சிக்ஷை மூக்கும், வியாகரணம் முகமுமாகப் பொருந்த அமைக்கப்பெற்றுள்ள தென்பானாயினன். உரையாசிரியர் நச்சினார்க்கினியர் வேதத்தின் ஆறு அங்கங்கள் யாதென்பதைக் கூறுவது காண்க. (தொல், புறத். 20) கலித்தொகையில் கடவுள் வாழ்த்துச் செய்யுளுரையிலும் இதனை நோக்குக.

ஆசீவக மதம்.

“நின் நிறை நூற்பொருள் யாது'' என மணிமேகலை ஆசீவக நூலறிந்த புராணனை வினவ அவனும், "எல்லையில்லாத பொருள்களெங்கும் எப்பொழுதும், புலிக்கிடந்து புலப்படுகின்ற வரம்பில்லாத அறிவன் எம்மிறைவன். எமது நூல் உயிரும் நான்கு வகை யணுக்களுமாகிய ஐந்து நற்பொருள்களையும் கூறும். அந்நான்கும் நிலம், நீர், தீ, காற்று என்பனவாம். அவை உயிருடன் பொய் வகையாகக் கூடிப் பிரிவதுஞ் செய்யும். திரள்வதுஞ் செய்யும். வெவ்வேறாகி விரிவதுஞ் செய்யும். அவ்வடையாக அறிவது உயிரெனப்படும். ஆதியில்லாத பரமாணுக்களாகிய நிலம், நீர், காற்று இவை ஒன்றோடொன்று சேரும் தன்மையன. ஆயினவை தீதுற்று யாதும் சிதை செய்யா. புதிதாய்ப் பிறந்தொன்றொன்றிற் புகுதா. முதுநீரணு நிலவணுவாய்த் திரியா. ஒன்றிரண்டாகிப் பிளந்துஞ் செய்யா. பூதங்களெனப்படும் இவ்வணுக்கள் கூடும். பிரியும் அவை

"மெய்க்குணத் தடைந்தா லல்லதூஉ நிலனாய்ச்

சிக்கென் பதுவு நீரா யிழைவதுந்

தீயாய்ச் சுடுவதுங் காற்றாய் வீசுவது

மாய தொழிலை யடைந் திட மாட்டா." (27-141-3)


தெய்வத் தன்மையனவான இவையாவு முணர்ந்து, இப் பூதங்களின் திரட்சியுள்ளானோர், கருமப் பிறப்பும், கருநிலப்பிறப்பும், சேமப்பிறப்பும், வெண்ணப்பிறப்பு மென்ற பலபிறப்பு மெடுப்பர். கழிந்த பிறவியி னறிவே ஒவ்வொரு பிறவியிலும் கலந்து வந்திடும். இப்பிறவிகளி னிறுதியிலே வீடடைந்திடுவர். பெறுதலும், இழத்தலும், இடையூறுறுதலும், பெரிதவை நீங்கலும், பிறத்தலும், சாதலும், கருவிற்பட்ட பொழுதே கலக்கும். இன்பமும் துன்பமும் மக்களைப் பாதிக்கும். இவை யாவும் முன்னுள வூழின்படி யாகும். அவ்வூழே பின்னு முறுவிப்பது. இவையாவும் மற்கலி நூலின் வகையாம்'' என்பானன். இவ்வாசிக மதத்தினர் சமண சமயத்தின் இரு வகுப்பினரி லொருவரென்றும், இவருக்குத் தெய்வம் மற்கலி யென்றும்; இவரது மத நூல் நவகதி ரென்பதும்; இம்மாதம் முற்காலத்தில் சமதண்ட மென்று பெயருள்ள ஓரூரில் பரவியிருந்ததென்றும் கூறுவர். இமமதக் கொள்கைகளை ஆசிரியர் விரித்துக் கூறியவாறு நூலில் கண்டுகொள்க. (27: 105-164.)

நிகண்ட வாதம்.

பின்னர் நிகண்டவாதியை மணிமேகலை யடைந்து "நீயுரை. நின்னாற் புகழ்ந்த தலைவன் யார்? உனது நூற்பொருள் யாவை? அப் பொருணிகழ்வும கட்டும் வீடும் மெய்ப்பட விளமபு" என, அவன் “இந்திரர் தொழப்படும் இறைவனெம் மறைவன். அவன் தந்த நூற்பிடகம், ஆத்திகாயமும், அதன் மாத்திகாயமு மாகும். காலாளதகாசமும், திதில் சீவனும் பரமாணுக்களும் நல்வினையும் தீவினையும், அவ்வினையாற் பந்தமும் வீடுமாகிய இத் திறத்தியவாகிய பொருளின் தன்மையதாயும் பத்துப் பகுதியினதாகத் தோன்றும்,'' என்று கூறிப்பின்னர் தோன்றலின் பலவேறு வகைகள் முதலியன மொழிந்திட்டு, இறுதியாக வினைப்பயனால் வீடெய்தும் வழியினையும் கூறுவா னாயினன். இந் நிகண்டவாதிகள் சமணர் இரு திறத்தாரில் ஒருவகை பினரென்றும், அவர்களது தெய்வம் அருகனென்றும் நிகண்ட வாதத்தை நீர்க்கந்த வாதமென்றும் திகம்பர வாதமென்றும் கூறுவர்.

சாத்தனாரும் சமணரும்.

ஜைன மதத்திடத்துத் தனக்குள்ள வெறுப்பாலோ, தனக்குப் பற்றில்லாததாலோ, அவர்களின் கொள்கைகளும் வழக்கங்களும் தன் மனத்திற்கு ஒவ்வாததாலோ அன்றித் தனக்குள்ள அளவு கடந்த பெளத்தமதப் பற்றால் பிறமகங்களைக் கீழாகக் கூறும் நோக்கத்தாலோ யாது பற்றியோ சாத்தனார், சமண மதத்தையும் அம்மதத்தினரையும் தாழ்த்திப் பல விடங்களிலும் தனது நூலில் கூறியுள்ளனர். (3:86-91) அவர்கள் பௌத்தர்களைப்போல இரப்பவர்களுக்கு இரக்கங்கொண்டு இல்லையென்னாது இருப்பதை இட்டு இன்புறச் செய்திடும் உதார குணத்தைக் கொள்ளாது, பசு முட்டக்கிழிந்த வயிற்றில்
சரிந்திட்ட குடலொடு வந்து, சரணமெனத் தம்மை அடைந்த சுதவதியின் தந்தையைப் புறக்கணித்து ஓட்டியவாறுபோல, துன்புற்றோருக்குத் துணை புரியாத துர்க்குணத்தவர்களென்று மொழிந்துள்ளார் (5:61-70.)

சாங்கிய வாதம்.

முக்குணத்தின் செயலால் இயற்கைத்தோற்றம் உளவாயிற்றென்று தொடங்கி சாங்கியவாதி, ''புத்தி வெளிப்பட, அதன் கண் வாயு வெளிப்பட, அதன்கண் அங்கி வெளிப்பட, அதன் கண் அப்பின் தன்மை வெளிப்பட்டு, அதில் மண் வெளிப்பட்டு அவற்றின் கூட்டத்தின் மனம் வெளிப்படு மென்று கூறிப் பின்னர், முறையே இவற்றில் வெளிப்படும் விகாரங்களைக் கூறி,அவை உலகாய் நிகழ்ந்து, பின் தாம் வந்த வழியே சென்றடங்கும் தன்மையைக் கூறி, முக்குணமன்றிச் செயலெதுவும் நிகழ்ந் திடாத தென்பதை முற்றும் நவின்று, நிலம், நீர், தீ, வளி, ஆகாயம், மெய் வாய் கண் மூக்குச் செவியாகுமென்ப துரைத்துப் பின்னும் பலவும் கூறுவது தெளிய நூலில் கண்டு கொள்க.

வைசேடிக, பூதவாதங்கள்.

பின்னர், வைசேடிகவாதியை யடைந்து நின் வழக்குரையென்ன அவனும் "பொருளும், கரணமும், கருமமும், சாமானியமும், விசேடமும், கூட்டமுமாகிய ஆறுகூறுகள் உண்டு. அவற்றுள் பொருளென்பது குணமும் தொழிலும் உடையதாகி, எத்தொகைப் பொருளுக்கு மேதுவாம். பொருள் ஒன்பது வகைத்து. அவை, ஞாலம், நீர், தீ, வளி, ஆகாயம், திசை, காலம், ஆன்மா முதலியனவாம். இவற்றுள் நிலம் ஒலி, ஊறு, நிறம், சுவை, நாற்றமாகிய ஐந்து குண முடையது. அது நீங்க நின்ற நான்கும் சுவை முதல் ஒவ்வொரு குணத்தைக் குறைவாக உடையன. அதாவது, நீர் சத்த முதலிய நான்கு குணங்களையும், தீ சத்தம் முதலிய மூன்றினையும், காற்று சத்தம் முதலிய இரண்டினையும், ஆகாயம் சத்தம் ஒன்றினையு முடையது. பெருமை, சிறுமை, வன்மை, மென்மை, சீர்மை, நொய்ம்மை, வடிவம், நீர்மை, பக்கம் முதலாக பலவும் பொருள்களின் குணங்களாகும். அப்பொருளும் குணமும் கருமங்களை இயற்றற் குரியன. சாதலும் நிகழ்தலும் அப் பொருளின்தன்மை'' என்றிவ்வாறாகக் கூறினன். பூதவாதி தனது கொள்கைப்படி ஐம்பூதங்களின் தன்மையும், பூத வழியாகப் பிறந்திடும் உலகத் தோற்றத்தையும் உணர்த்தினன். இவ்வாத வகைகளை நூலிற் காண்க. முதுமை வாய்ந்த சங்க இலக்கண நூலாகிய தொல்காப்பியமும், ''நிலந் தீ நீர் வளி விசும்போடைந்தும், கலந்த மயக்கம் உலகம்'' என்று (மரபி. 8 9) உலகம் ஐம்பூதச் சேர்க்கையா லாயதென்று தமிழர்க் கொண்டிருந்த கருத்துப்படி கூறுதல் காண்க. புறநானூற்றிலும் இங்ஙனமாகக் கூறப்படுதல் காண்க. (செ. 2.)

மதங்கள் ஐந்தெனல்.

மேற் கூறிவந்த சமயங்களுள், மணிமேகலை, முதற்கண் கூறிய ஐந்து மதத்தினரையும் ஒன்றனுள் ளடக்கி ஒன்றெனக் கொண்டும், ஆசீவகம், நிகண்ட மிரண்டினையும் ஒன்றாகச் சேர்த்து இரண்டெனக் கொண்டும், எஞ்சிய மூன்றும் தனித்து ஒவ்வொன்றாகக் கூட்டியும் முடிவாக ஐந்து மதத்தினரின் கொள்கைகளையும் முறையே அவ்வம்மதத்தினரிடத்து அறிந்து கொண்டதாகக் கூறப்படுதல் காண்க. 'தவத்திறம் பூண்டு தருமங்கேட்ட காதை யிலும், மணிமேகலை, அறவணரிடத்துத்தான் வெவ்வேறுரைக்கும் நூற்றிறச் சமய நூல்களின் பொருள்களை வஞ்சி நகரில் கேட்டு, ஐந்து விதமாக உரைத்திடும் அக் கொள்கைகள் தன் மனதிற்கும் பொருந்தாமையால், அவையும் தான் கொண்டிருந்த வேற்றுருவமும் துறந்து, மெய்ப்பொருளை அறிந்திட அவர்பால் வந்ததாக மொழிவது நோக்குக. இவ்வாறே கண்ணகித் தெய்வமும்,

"முறைமையி னிந்த மூதூ ரகத்தே

யவ்வவர் சமயத்தறி பொருள் கேட்டு

மெய்வகை யின் மை நினக்கே விளங்கிய

பின்னர்ப் பெரியோன் பிடகநெறி கடவாய்." (26: 63-6)

 

எனத் தான் முன்னரே பிறமதங்களை மெய்யற்றன என்று துணிந்து கொண்டுள்ளதாகவும், அது மணிமேகலைக்கும் தானாகவே விளங்குமென்றும் கூறியதாக உள்ளன. பேதமான கொள்கைகளைக் கெண்ட மதங்கள் ஆறு உண்டென்பது அக்காலத்திய புத்தர்களின் எண்ணமென்பது இதனால் விளங்கும். அவ்வாறினுள் அவர் தமது மதமு மொன்றாகும். இந்த ஆறினையே அளவை வாதியின் வாதமுடிவில் ஆசிரியர் குறித்துள்ளனர் போலும். ''ஐவகைச் சமயமு மறிந்து'' எனப் பெருங் கதையிலும் வருதல் காண்க. (உஞ்சைக்காண்டம்)

5. மதக் கொள்கைகள்.

பௌத்தர்களின் தருக்க வகை.

பெளத்த மதத்தவர்கள் உண்மைப் பொருளை அறிந்திடக் கொண்டிருந்த தத்துவ விசாரணை மார்க்கங்களைத் தமிழ் நாட்டில் அக்காலத்தில் பரவியிருந்த முறைப்படி, 'மணிமேகலை' நூலாசிரியர் சாத்தனார், தமது நூலில் விரிவாக அறவணவடிகள் கூறியவாறு கூறியுள்ளனர். அதன் சுருக்கம் வருமாறு:

அறவண வடிகள் பௌத்த மதத்தின் முதல்வன் ஆதி சினேந்திரனென்றனர். இம்மதம் கொண்டுள்ள அளவைகள் பிரத்யக்ஷம், அனுமானமென்ற இரண்டென்பர். அவர்கள் வாதம் செய்தலின் முறை ஐந்து வகைப்படும். முறையே அவை, பக்கம், ஏது, திருட்டாந்தம், உபநயம், நிகமன மெனப்பட் இவ்வைந்தனுள் கடையுள்ள இரண்டும், திருட்டாந்தத்திலே சென்றடங்குமெனச் செப்பி, முனிவர் முதலுள்ள மூன்றின் நித்திய அநித்தியத்தன்மைகள் இத்திறத்தின என்பதும் கூறி, அம்மூன்றின் உபபாகங்களாக உள்ளவை இவையிவை யென்றும் அவற்றின் தன்மைகள் இத்தகையன வென்றும் கூறுவாராயினர். அவர் கூறியபடி, பக்கப்போலி, ஏதுப்போலி, திருட்டாந்தப் போலியென போலி வகைகள் மூன்றாகும். பக்கப்போலி, பிரத்தியக்க விருத்தம், அனுமான விருத்தம், சுவாசன விருத்தம், உலோக விருத்தம், ஆகம விருத்தம் அப்பிரத்த விசேடணம், அப்பிரசித்த விசேடியம், அப்பிரசித்த உபயம், அப்பிரசித்த சம்பந்தம் என்ற ஒன்பது வகைப்படும். எதுப்போலி, சித்தம், அநைகாந்திகம், விருத்தமென்ற மூன்றாகும். அவற்றுள் சித்தமென்பது உபயாசித்தம், அன்னியதா சித்தம், சித்தாசித்தம், ஆச்சரிய சித்தமென நான்காகும். அசைகாந்திகம், சாதாரணம், அசாதாரணம், சபக்கதேச விருத்தி விபக்க வியாபி, விபக்கைத்தேச விருத்தி சபக்கவியாபி, உபயைகதேச விருத்தி, விருத்த வியாபிசாரி என்று அறுவகைப்படும். விருத்தம், தன்மச்சொரூப விபரீத சாதனம், தன்ம விசே-விபரீத சாதனம், தன்மிச் சொரூப விபரீத சாதனம், தன்மி விசேட விபரீத சாதனமென நான்காம், திருட்டாந்தம் ஆபாசங்கள் வாய்பாடு என இருவகைப்படும். இவற்றின் விரிவும் அவற்றின் இலக்கணையும், மற்றும் மேற் கூ றியவைகளின் இலக்கணையும் நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. விளக்கமாக
அங்கு கண்டு கொள்க. இவ்விதங்களாக பௌத்தர்கள் தங்களது மதத்தினைக்கண்டு அறிந்து கொள்ளக் கொண்டுள்ள தருக்க முறைகள் யாவும் ஒழுங்குப்பட ஒன்றன்பின் ஒன்றாக ஆசிரியர் கூறியுள்ளனர். அவற்றின் முழு விவரங்களும் வல்லார் வாய்கேட்டு அறியவேண்டும்.

சாத்தனார், பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதையில், தாம் அறிந்து உணர்ந்தபடியோ, அன்றித் தமிழ்நாட்டில் பரவி யிருந்தபடியோ, புத்த மதத்தவரின் உபதேசங்களையும், அவர்கள் கூறும் நான்கு வாய்மைகளின் தன்மைகளையும், அவற்றைத் தெளிய அறிதற்குச் சாதகமாகிய பன்னிரு நிதானங்களின் தோற்ற வொடுக்கங்களையும், மெய்யறிவைப் பெற்று இச்சைக்கு இடங்கொடாது, எப்பொருளிடத்தும் அன்பு பூண்டிருந்து, பிறவியைக் களைந்திடு முபாயங்களையும் தெளிவாகக் கூறுகின்றனர். இவ்விஷயங்களை, கந்திற் பாவையின் வாயிலாக வருவதுரைத்த காதையிலும்; அறவணர் அரசிக்குக் கூறியதாக சிறைவிடு காதையிலும்; மீண்டும் கண்ணகித் தெய்வத்தின் வாயிலாகவும் மும்முறையாகச் சாத்தனார் ஒன்றினுமொன்று மனதில் நன்கு பதியுமாறு கூறியுள்ளனர்.

புத்த மந்திரமும் சங்கமும்.

தானம் செய்தலைத்தாங்கி, சீலத்தில் தலைசிறந்து நின்று, போன பிறவியின் செய்திகளை யுணர்ந்திட்டு, முத்திர மணிகளாகிய புத்தனையும், அவன் கூறிய திரி பீடகத்திலுள்ள தருமங்களையும், துறவறம் பூண்ட பௌத்த முனிவர்களின் கூட்டமாகிய சங்கத்தையும், சரணமடைந்து வணங்கி நின்ற மணிமேகலைக்கு, அறவணவடிகள் உபதேசங்கள் செய்ததாக உள்ளது. சீலத்தின் வகைக் கீழே குறிக்கப்பட்டுள்ளன. பெளத்தர்கள் "புத்தம் சரணங்கச்சாமீ, தருமம் சரணங்கச்சாமி, சங்கம் சாணங்கச்சாமி" யென்ற இம் மூன்றினையும், மந்திரங்களாகக் கொண்டுள்ளனரென்பது இதனால் விளங்கும். புத்த சங்கத்தில் இருப்பாற்பட்ட மக்களுமிருப்பர். ஆண் பாலருக்குப் பிக்ஷுக்களென்றும் பெண் பாலருக்குப் பிக்குணியென்றும் பெயர். மணிமேகலையும் பல விடங்களிலும் பிக்குணிக்கோலங் கொண்டவகை இந்நூலில் கூறப்படுதல் காண்க. இச் சங்கங்களில் பதின் மருக்குக் குறைவின்றி இருத்தல் வேண்டு மென்பதும்; பிக்குணிகள் பிக்ஷுக்கு அடங்கி நடக்கவேண்டு மென்றும் விதிக ளுண்டென்பர். இத்தகைய சங்கம் புத்தராலேயே முதன் முதலாக உண்டாக்கப் பட்டதென்பர். இச் சங்கங்களில் சாதிமுறை வேற்றுமை யொன்றும் கவனிக்கப் படாதென்பர்.

புத்தனது அவதாரம்

"உலகில் ஞான அறிவு வறிதாக, உயிர்கள் அலைந்த காலத்து, அமரர்கள் குறையிரந்து வேண்டத் தனது இருப்பிடமாகிய துடிதலோக மொழித்து இவ்வுலகில் தோன்றி, போதி மரத்தின் கீழ் பொருந்தி இருந்தது, மாரனைவென்ற வீரனும், காமம் வெகுளி மயக்கமாகிய முக்குறும்பு முற்ற வறுத்த புத்ததேவன் உரைத் தருளிய வாய்மையே இவையாகும். இவ்வறத்தையே இறந்த காலத்திலும் எண்ணில்லாத புத்தர்கள் தோன்றி அருளோடும் திருவாய் மலர்ந்தருளினர்'' என அறவண வடிகள் தரும முரைத்தற்கு முதலாகக் கூறுவாராயினர். இவற்றின் உண்மை புத்த ஜாதக கதைகளில் விரிவாகக் காணலாம். இவ்வாறே முக்கால அறிவும் கொண்ட பெளத்த முனிவர்கள் மக்களை நல்வழிப் படுத்து மெண்ணத்தோடு பலருக்கும் உபதேசம் செய்து வந்தன ரென்பது இந் நூலில் கூறப்படுதல் காண்க. சங்க தருமர் சுதமதிக்கும் அவள் தந்தைக்கும் தருமோபதேசஞ் செய்த வரலாறும், தரும் சாவகன் புண்ணிராசனுக்கு நல்லுபதேசம் புரிந்த செய்தியும், பிரும தருமர் இராகு லனது தந்தையான அத்தி பதிக்கு அற முரைத்தன ரென்பதும் வந்துள்ளன. அவதார புருடன் தோன்றுவ னென்பதைச் சாத்தனார்,

"உயிர்க ளெல்லா முணர்வு பாழாகிப்

பொருள் வழங்கு செவித்துளை தூர்ந்தறி விழந்த

வறந்தலை யுலகத்துத் தறம்பாடு சிறக்கச்

சுடர் வழக்கற்றுத் தடுமாறு காலை" யில்


இளவள ஞாயிறு தோன்றிய தென்ன புத்தன் தோன்றிய தாகக் கூறியுள்ளனர். (10: 7: 10). கௌதம புத்தர் பிறப்பதற்கு முன், தருமம் குறைந்து அஞ்ஞான இருள் மூடியிருந்த ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு புத்தராகத் தோன்றி, ஞானத் தீயைப் பரக்கச் செய்தன ரென்பது மேலே கூறியதால் விளங்கும். பௌத்த நூற்களின் துணிவும் இவ்வாறே இருத்தல் காண்க. கௌதம புத்தரும் தன்னை இருபத்தைந்தாவது புத்தராகக் கூறுவர்.

அவதார புருடன் தோன்றுங் காலத்தில் பல நன்னிமித்தங்கள் நிகழுமென்பதும், பெளத்தரானோரின் கொள்கை. இவ் விஷயம் சக்கரவாளக் கோட்டத்து தேவரெல்லாம் ஒருங்கு திரண் துடிதலோகத்து மிக்கோன் பாதம் தொழுது வேண்ட இருள் பரந்து கிடந்த மலர் தலை யுலகத்து, விரிகதிர்ச் செல்வன் தோன்றினன் எனவும் குறித்துள்ளது காண்க. பகவத் கீதையிலும் மாயன்,

''பரித்ராணாய சாதூனாம்

விநாசாய சதுஷ் கிருதாம்

தர்ம ஸம்ஸ்தாப னார்த்தாய

ஸம்பவாமி யுகே யுகே''

 

என அதர்மம் மேலிட்டு தர்மம் சீர் குலைந்த காலத்தில் அறத்தை நிலை நாட்டவும், சாதுக்களைக் காத் தளித்திடவும் யுகந்தோறும் தான் அவதரிப்பதாகக் கூறுவது நோக்குக. புத்த தரும சங்கங்களைக் குறித்து பல விஷயங்கள் ரைஸ் டேவிட்ஸ், மாக்ஸ் முல்லர், ஒல்டன் பர்க் முதலிய ஐரோப்பியர்கள் எழுதியுள்ள நூற்களில் கண்டறிக.

புத்தன் பிறந்த தினம்.

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் பிருந்த கௌதம புத்தன் சற்றேக் குறைய அவதரித்த தினமும், பொது அறிவு இழந்து மெய்ஞ்ஞானம் பெற்ற தினமும், வைசாக சுத்த பௌர்ணமையாதலால் அதனை விளக்குதற் பொருட்டுச் சாத்தனார் "மதி நாண் முற்றிய மங்கலத் திருநாள்'' (10: 83) என்றனர். மற்றும் அவன் பிறந்த தினம்.

"இருதிள வேனிலி லெரிகதி ரிடபத்

தொருபதின் மேலுமொரு மூன்று சென்ற பின்

மீனத்திடை நிலை மீனத்தக வையிற்

போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்''

 

என்றும் (11:40: 3) கூறியுள்ளனர். 'இருதிள வேனில்' என்றது சித்திரை வைகாசி மாதங்களாகிய இளவேனில் பருவத்தை. 'எரிகதி ரிடபம்' என்றதனால் சூரியன் மிக்க வெம்மையைச் செய்கின்ற மாதமாகிய வைகாசியைக் குறித்தது. நட்சத்திரங்களுள் நடுவில் நிற்றலை யுடையதான விசாக நட்சத்திரத்தில் புத்தன் பிறந்த தாகக் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் இதனை “ஒரு பதின் மேலு மொரு மூன்று சென்றபின்' என்ற அடியில் இருபத்தேழு நட்சத்திரங்களுள் பதின்மூன்றாவதாகிய நட்சத்திரத்தில் பிறந்தன னென்பர். தற் காலத்திலுள்ள நட்சத்திர முறைப்படி பதின்மூன்றாவது நட்சத்திரம் அஸ்தமாகும். புத்தனின் நட்சத்திரம் விசாக மென்று கூறப் படுவதாலும், ஆசிரியர் அதனை பதின் மூன்றாவதாகக் கூறுவதாலும், அவர் கார்த்திகை நட்சத்திரத்தை முதலாக வைத்து எண்ணி யிருப்பது விளங்கும். முறை தவறிக் கூறும் இஃது இழுக்குடையதாகா தென்று கற்றறிந்தோர் கூறுவது காண்க. புத்தன் பிறந்த தினத்தை பௌத்தர்கள் திருவிழாவாகக் கொண்டாடுவர். கபிலையம்பதி பௌத்தருக்கு முக்கியமான புண்ணிய க்ஷேத்திர மென்பது, அப் பதியிலேயே புத்தன் நீட்டும் பிறந்து அறங்களைப் போதிப்பனென்பதும் இர் நூல் கூறும். (28: 141:4). புத்தன் மீட்டும் பிறந்திடு மாண்டை,

''ஈரெண் ணூற்றோடீ ரெட்டாண்டிற்

போறிவாளன் றோன்றும்”             (12: 78: 8)


என்று 1616 வருடங்களுக்குப் பிறகு தோன்றுவ னெனக் கூறப்பட்டுள்ளது. இவ்வாண்டு எந்த சகாப்தத்தைச் சேர்ந்த தென்பது நன்கு புலப்பட வில்லை. இதனை சரித்திர ஆராய்ச்சியாளர் விளக்க வேண்டும்.

போதி மரம்.

மேலே துடிதலோக மென்றது ஆறு வகையினதாகிய தெய்வ லோகங்களி லொன்று. இது போதிசத்துவர் கௌதம புத்தராக உலகில் அவதரிப்பதற்கு முன்பு இருந்த இடமென்பர். உலக இன்பங்களில் வெறுப்புற்றுச் சித்தார்த்தர் தனது 29 ஆண்டில் மனைவி யசோதரையையும் இளஞ் சிறுவனையும் விட்டுத் துறவியாகி, உண்மை யறிவைப் பெற்றிட பல விடங்களுக்குஞ் சென்று, பல துறவிகளையும் கண்டு அவர்கள் கூறுவன கேட்டு அறிந்து முடிவாகப் போதி மரத்தடியில் சில சமாதி நிலையிலிருந்து, பூர்வ அறிவு வரப் பெற்று, சென்ற பிறவிகளை உள்ளவாறு அறிந்திட்டு, ஞானம் பெற்றுத் தத்துவ ஆராய்ச்சி செய்த இடம் போதி மரத்தடி யென்பர். ஐந்து கிளையோடு இம் மரமிருப்பதாகச் சிலப்பதிகாரம் கூறும். (நாடு. 11) இம் மரத்தை பெளத்தர்கள் மகாபோதி விருக்ஷ மென்பர். எங்கு இருப்பினும் அவர்கள் இம் மரமுள்ள திசையை நோக்கித் தொழுவர்.

புத்தனது புகழ்.

'மாரனை வென்ற வீரனெனப்பட்ட புத்தனை, இந் நூலில் சாத்தனார் பல விடங்களிலும் அவனது உயர்ந்த குணங்கள் விளங்குமாறு புகழ்ந்து கூறியுள்ளனர். ''புத்தன் இயல் குணன்; ஏதமில் குணப்பொருள்; உலக நோன்பிற் பல கதியுணர்ந்து தனக்கென வாழாப் பிறர்க் குரியாளன். உயிர்ப்பான்மைகள் இன்பச் செவ்வி யடையும்படி அருளறம் பூண்டவன். அறக்கதிராழி திறப்பட வுருட்டிக் காமற் கடந்த வாமன்" என உவவனத்தில் உதயகுமரனுக்குச் சுதமதி கூறுமிடத்தும் (5;71. 9) மணி பல்லவத்தில் மணிமேகலா தெய்வம் ''புலவன்; தீர்த்தன், புண்ணியன். புராணன். உலக நோன்பின் உயர்ந்தோன். குற்றங் கெடுத்தவன், செற்றஞ் செறுத்தவன். முற்றவுணர்ந்த முதல்வன். காமற் கடந்தவன். ஏமமானவன். தீ நெறி கடும்பகை கடிந்தவன். ஆயிர வார்த்தாழி யந்திருந்தடி," நாவாயிரமிலாது புகழுதல் அரிதென வியந்து கூறியதைக் கூறுமிடத்தும் (5; 98-105;) பாத்திரம் பெற்றபின் மணிமேகலை புத்தனது அடியை வணங்கி "மாரனை வெல்லும் வீரன். தீ நெறிக் கடும்பகை கடந்தோன். துறக்கம் வேண்டாத் தொல்லோன். எண் பிறக்கொழிய இறந்தோன். கண் பிறர்க்களிக்கும் கண்ணோன். தீ மொழிகடந்த செவியோன். வாய் மொழி சிறந்த நாவோன். நரகர் துயர்கெட நடப்போன். உரகர் துயர மொழிப்போன்'' என்று வாழ்த்துதலையும், சாத்தனார் வெகு உருக்கமாகவும் அழகாகவும் கூறியிருக்கின்றனர். புத்த தேவனும், அவனது மதத்தினரும் ஜீவகாருண்யத்தின் உயர்வையே வெகுவாக விளக்கிக் கூறி வந்தனர். மேலுள்ளவாறு புத்தன் அறக்கதிராழி யுருட்டின னென்றும் (5;76) "ஆயிர வாரத்தாழிய" னென்றும் (5;105)"அறவாழியாள் வோன்'' (6; 11) என்றும் தருமமாகிய சக்கரத்தை உருட்டியவ னென்றும் கூறுவது பெளத்தர்களின் வழக்கு.

தத்துவ ஆராய்ச்சிக் காதையில், சாத்தனார், பன்னிரு நிதானங்கள், அவற்றின் மீட்சி யொடுக்கம்: நான்கு கண்டங்கள்; மூன்று சந்திவகை; மூன்று பிறப்புவகை ; அப் பிறப்பிற்கேற்ற மூன்று காலம்; அவற்றில் விளைந்திடும் குற்றம்; வினை, பயன், துன்பம் முதலியன; வீடு நால்வகை வாய்மை; ஐந்து வகைக் கந்தம்; ஆறு வகை வழக்கு, நான்கு நயன்கள், அவற்றின் பயன், நான்கு வகையாகிய வினா விடைகள் முதலிய பலவும் கூறி அவற்றில் ஒன்றற் கொன்று கொண்டுள்ள சம்பந்தங்களையும் நன்கு விளங்க உரைத்துத் தொடக்கமும் இறுதியுமில்லாது, பண்ணுனரின்றிப் பண்ணப்படாதாகி, போனது மின்றி வந்தது மின்றி, முடித்தலு மின்றி முடிவு மின்றி, வினை பயன் பிறப்பு வீடாகிய இவை யெல்லாம் தானேயாகிய பன்னிருந் தானங்களின் தன்மையை உள்ளவாறு அறிந்த பிறந்தவரில் எவரும், நிருவாணமாகிய பெரும் பேறறிந்தவ ராவர். அறியார் நரகிற்கே உரியவ ரென்றார். அப் பன்னிரு பொருள்களும் முறையே பேதமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன் என்பன திரிபிடகத்திலுள்ளவாறு இவை யாவும் விரிவாக, ஒல்டன்பர்க் என்பவர் எழுதியுள்ள நூலில் கூறப்படுவது காண்க. ஆசிரியர் சாத்தனாரும் இவற்றைப் பல விடங்களிலும் குறித்துள்ளனர். (30-45-8)

பேதமையும் செய்கையும்.

பேதமையாவது அறியாமை. உண்மைப் பொருள்களை உணராது மயங்கி, இயற்படு பொருளால் கண்டது மறந்து; முயற் கோடுண்டென கேட்டது தெளிதல்.

செய்கையாவது செய்திடும் கருமம். மூன்று வகையினதாகிய உலகத்திலுமுள்ள பல்லுயிர்களும் அறுவகைத்தாகும். அவை மக்கள், தேவர், பிரம்மர், நரகர், விலங்கு, பேய் என்பன. அவர் தாம் நல்வினை தீவினை யென்ற இருவினையின் பயத்தால், சொல்லப்பட்ட கருவிற் சார்வர். கருவினுட் பட்ட பொழுதே தோன்றி, அவ்வினையின் பயன் வந்து பற்றிடும். நல்வினையாகிய மனப்பேரின்பமும் தீவினையாகிய கவலையுங் காட்டும். தீவினை யென்பது கொலை, களவு, காமம்; ஆகிய உடம்பிற் றோன்றுவன மூன்றும், பொய், குறளை, கடுஞ்சொல், பயனில்லாதசொற்கள்; இவையாகிய சொல்லாற் தோன்றிடும் நான்கும்; வெஃகல், வெகுளல், பொல்லாக்காட்சி, உள்ளத்தால் நிகழ்வன மூன்று மாகிய இப்பத்து மாகும். இதனைத் தசதோஷ மென பொத்த நூல் கூறும். ஏற்பயனறிந்த நுண்ணுணர்வினர் இப்பத்தையும் விலக்குவர். விலக்காதவர் விலங்கும் பேயும் நரகருமாகிக் கலங்கிய உள்ளக் கவலையிற் றோன்றுவர். நல்வினை யென்பது மேற்கூறிய பத்தும் தம்மையடையாதவாறு விலக்கி சீலந்தாங்கித் தானவழி நிற்றலாகும். அங்ஙன மிருப்போர் மேலாகக் கூறப்படும் தேவரும் மக்களும் பிரம்மருமாகிய நற்பிறவியுற்று நல்வினைப்பயனை அடைந்திடுவர். எனவே, செய்கை யென்பது கரும விளக்க மாயிற்று.

பஞ்சசீலம்.

மேற்கூறிய சீலமாவது காமம், கொலை, கள், பொய், களவு என்பன
வாம். சீலத்தைத் தசசீல மெனப் பத்தாக்கியும், சில பெளத்த நூற்கள்
கூறும், மேம்பாடடையக் கருதும் பௌத்த னொருவன் இவற்றினை முற்
றத் துறத்தல் வேண்டுமென்ற பௌத்தர்களின் கொள்கை இந்நூலிலும் பல
விடங்களிலும் கூறப்பட்டுள்ளன. (21: 57; 24: 137; 30; 1.)

“கள்ளும் பொய்யுங் காமமுங் கொலையு

முள்ளக்களவு மென்றுரவோர் துறந்தவை.''

(24; 77)-8) என்றனர். மற்றும்,

"கழிபெருஞ் செல்வக் கள்ளாட் டயர்ந்து

மிக்க நல்லறம் விரும்பாது வாழு

மக்களிற் சிறந்த மடவோ ருண்டோ.'' (6: 102-4)


எனக் கள்ளின் இழிவு தோன்றவும்; சாதுவன் நாகநாட்டினரின் தலைமகனுக்கு, "மயக்குமியில் புடைய கள்ளும், மன்னுயிரைக் கொல்லும் இழிய தொழிலையும், கயக்கறுமாக்கள் கடிந்தனர். மற்றுங்கேள்! பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது. இதுவே உண்மைப் பொருள். நல்லறஞ் செய்வோர் நல்லுல கடைவர். அல்லது செய்வோர் அருநரகடைவர். இதனை உணர்ந்த பெரியோர் மேற்கூறிய இரண்டுஞ் செய்யார்" (16:84.90) எனக் கள்ளின் இழிவும் ஜீவகாருண்யத்தின் பெருமையும் நன்னெறி நிற்றலின் உயர்வும் தோன்றக் கூறுமிடத்தும் இப்பஞ்சசீலங்களின் தன்மையும் அவைகளைக் கையாள வேண்டிய விதத்தினையும் ஏற்ற
இடங்களில் இயைய அமைத்துக் கூறியுள்ளாரென்பது இங்கும் விளங்கும். மற்றும், "முதுநீருலகில், முடி பொருளுணர்ந்தோர் கடியப்படுவன ஐந்துள; அவை கள்ளும், கொலையும் காமமுமாகியவை. இவற்றை நீக்கினோர் நிறை தவமாக்களாவர். நீக்கோர் தாங்கா நாகந் தன்னிடை யுழப்போராவர்” எனச் சக்கரவாளக் கோட்டத்து முனிவரில் ஒருவர் அரசனுக்குக் கூறு மிடத்தில் வந்துள்ள தாலும் (22; 169-176); "மன் பேருலகத்து வாழ்வோர்க்கு, காமம், கொலை, கள், பொய், களவென்னும் இவ்வைந்தும் துன்பம் தருவன; ஆகலின் இவை களைந் திடல் வேண்டும்'' (சாதை. 23) என மணிமேகலை அரசிக்குக் கூறுவதும் இராசமாதேவி, கள், பொய் முதலிய இவை கற்றறிந்தோர் துறந்தவை யெனக் கூறுவதும் (24:77- 8) காண்க

 

உணர்வு, அருவுரு, வாயில், ஊறு.

உணரீ வெனப் படுவது "உறங்குவோருணர்விற், புரிவின்றாகிப் புலன் கொளாதது'' என் றனர். அதாவது கருமம் யாதும் செய்திடாது நிற்சிந்தனையாகக் கண்மூடித் துயிலுவானின் தன்மையைப் போன்றது. இதனை விஞ்ஞான மென்பர். அருவுரு வென்பது அவ்வுணர்வு சார்ந்த உயிரும் உடம்பு மாகும். "அவ்வுருத்தன்மை, யாக்கை" (30: 102-3) என்றனர் பின்னும், இதனை நாமரூப மென்பர். வாயிலென்பது உள்ள முறுவிக்க வுறுமிடங்களாகும். மனமும் ஞானேந்திரியங்களுமாகிய ஆறுமாம். இதனை ஷடாயதன மென்பர். ஊறென்பது உள்ளமும் வாயிலும் வேறுபுலன்களை மேவுதலென்பர். அதாவது இந்திரியங்கள் அவற்றின் செயல்களோடு சம்பந்தப்படுத்தலாகும். இதனை ஸ்பரிச மென்பர்.

நுகர்வு, வேட்கை, பற்று, பவம், பிறப்பு.

நுகர் வென்பது ஐம்புலன்களை நுகர்தல். அதாவது சுகத்தையும், கத்தையும் அனுபவித்தல். இதனை வேதனை யென்பர். வேட்கை யென்பது விரும்பி நுகர்ச்சியாராமை. அதாவது துன்பம் போக்கி இன்பத்தைப் பெற்றிடு மிச்சையைக் கொள்ளுதல்.
த்ருஷணை யென்பர். பற்றென்பது ஒட்டி யிருக்கும் அறிவு; வேட்கையால் பிறந்திடுவது. இதனை உபாதான மென்பர். பவ மென்பது சருமத் தொகுதி. தருமுறை யிதுவெனத் தாந்தாஞ் சார்தல். பிறப் பெனப்படுவது, 'அக் கருமப் பெற்றியால்உறப் புணருள்ளஞ் சார்பொடு கதிகளிற் காரண காரிய உருக்களில் தோன்ற' லென்றனர். அதாவது உள்ளம், தான் செய்த கருமங்களின் இயல் பொடு புணர்ந்து, பிறவிக ளெடுத்தல். இதனைத் தேற்ற மென்பர்.

வினைப்பயன், இறப்பு.

வினைப் பயன்கள் பிணி, மூப்பு, சாக்காடு என்பன. பிணி யென்பது
இயற்கையாக உள்ள தன்மைக்கு மாறாகப் போகுமிடத்து உடம்பு துன்புறுதல். மூப் பென்பது உடம்பு தளர்ச்சி யுற்று நிலையாத தன்மையுறும் அந்தத்தின் அளவு. சாக்கா டென்பது அருவுருத் தன்மை. யாக்கை வீழ் கதிர் போன்று மடைறைந்திடு மியல்
புடையது. விதித்த காலம் முடிந்த பின்னர், இம்மியும் தாமதியாது உயிர்களைக் கூற்றுவன் கொண்டு சென்று விடுவா னென்பது அந் நூற்களின் கருத்து. வந்த காலனை பொருள் கொடுத்துப் போற்றினும் போகான். நல்லன கூறி அவனை உயர்த்திப் பேசினும் போகான். கண்ணீர் வடித்து அழுவோரைக் கண்டு இரக்கங் கொள்ளான். சிறியோர் பெரியோ ரென்ற பேதமும் பாரான். தனது பணியைச் சற்றும் பின் வாங்காது செய்திடும் அவனுக்கே தருமனென்ற பெயர் பொருத்த முடையது. இவற்றினை விளக்கிக் கூறி, காலன் வரு முன்னே, ஆவி போக மேனி செயலற்றுக் கிடக்கக் கண் பஞ்சடையு முன்னே பட்டும் உண்மை யறியாத உற்றார் மேல் விழுந்து அழு முன்னே, ஓரடியும் அப்பால் வைக்காத ஊரார் சுடு முன்னே, நல்லறம் விரும்பிச் செய்து வாழ் நாளைக் கழித்து, நல்ல பிறவியை யெய்திடு மாறு கூறுவான் வேண்டி,

"தவத் துறைமாக்கண் மிகப் பெருஞ் செல்வர்

ஈற்றிளம் பெண்டி ராற்றாப் பாலகர்

முதியோ ரென்னா னிளையோ ரென்னான்

கொடுந் தொழிலாளன் கொன்று” (6:97:100)

குவிப்பதன் முன்னர் நல்லன செய்திடல் வேண்டுமென வலி யுறுத்துதல் காண்க!! காலனும் காலம் பார்க்கும்'' எனப் புற நானூறும் (41-1) உற்ற கால மறிந்து உயிரைத் தவறாது கொண்டு செல்லக் காலன் வருதலைக் கூறும், பழமொழி, (செ. 89) கலித் தொகை (105) முதலிய நூற்களும் இவ்வாறே மொழிந்திடும். உயிர் உடம்பினின்றும் நீங்கும் பொழுது கொள்ளும் நினைப்பின் பயனை மறு பிறப்பில் அவ்வுயிர் அடைய மென்பது தொன்னூல் துணி பாதலின் சாத்தனாரும் அங்ஙனமே கூறியுள்ளனர். (11:105-6-14: 101-4) ஆண்டாண்டுகளாக மாண்டாருக்கு அழுது கிடக்கினும் அவர்கள் மீண்டும் வாரார்கள் என்பதைக் கூறவும்: உடல் வேறு அதனை ஆட்டுவிக்கும் உயிர் வேறு என்றதின் உண்மை தோன் றவும், ஆசிரியர் மணிமேகலை இராசமா தேவியைப் புத்திர சோகத்தைப் பொருட்படுத்தா திருக்க வெனத் தேறுதல் கூறும் அமயத்து,

“யாங்கிருந் தழுதனை யிளங் கோன் றனக்கு

பூங்கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை

உடற் கழுதனையோ வுயிர்க் கழுதனையோ

உயிர்க்கழுதனையே லுயிர் புகும் புக்கில்

செயப்பாட்டு வினையாற்றெரிந்துணர் வரிய

தவ் வுயிர்க் கன்பினையாயி னாய் தொடி

யெவ் வுயிர்க் காயினு மிரங்கல் வேண்டும்'' (23. காதை)

எனக் கூறா நிற்கின்றனர். உடலினின்றும் உபிரை வேறாக்கிக் காட்டல் வேண்டியே, அரசியின் உபசார மொழிக்கு முனி அறவணர்,

"தேவி கேளாய் செய்தவ யாக்கையின்

மேவினோ னாயினும் வீழ் கதிர் போன்றேன்'' (24;101-2.)

எனத் தவயாச்கையை வேறாக்கி அதனுட் பொருந்திய ''நான்'' என்னும் பரமனைப்
பிரித்துக் கூறினர். தமிழ் மக்களில் எம் மதத்தினரும் உடல் வேறு உயிர் வேறு எனக் கருதினர். தனை மிகுந்த பழைமை வாய்ந்த தமிழ் நூலாகிய தொல் காப்பியமும்,

“காலம் உலகம் உயிரே உடம்பே

பால்வரை தெய்வம் வினையே பூதம்"

எனக் கூறுகின்றது.

ஆனந்த போதினி – 1936, 1937 ௵ -

ஜுலை, ஆகஸ்டு, செப்டம்பர், டிசம்பர், ஜனவரி, ஏப்ரல், மே, ௴

 

No comments:

Post a Comment