Sunday, September 6, 2020

 மணிவாசகர் மதுரவாசகம்

 

வான் கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை

கான் கலந்து பாடுங்கா னற்கருப்பஞ் சாற்றினிலே

தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ் சுவைகலர்தென்

உன் கலந்து வுயிர் கலந்து வுவட்டாமலினிப் பதுவே    (இராமலிங்க சுவாமிகள்)

 

மணிவாசகப் பெருமான் மலர்வாய்ப் பிறந்த மணிவாசகங்களிரண்டினுள்ளும் திருவாசகமே மிகச் சிறந்து விளங்குவதாகும். இது திராவிட வேத மெனக் கூறப்படும் பன்னிரு திரு முறைகளில் எட்டாந் திருமுறையாய் 51 பதிகவடிவமான 658 பாடல்களையுடையது. மற்றும் சிவ லாரம்பித்து அச்சோப்பதிகத்தோடு முடிவடைகிறது. இதன் சிறப்பைச் சிறிது சிந்திப்பாம்.


நூலின் பயன்

 

இந்நூலின் பயனாவது தன்னைக் கற்பாரது பிறவித் துன்பங்களை யெல்லாம் வேரோடு ஒழித்து அவர்கட்கு முத்திப்பேரானந்தத்தை யளித்தலாம். இதனை


 ‘தொல்லை விரும்பிறவி சூழுந் தளை நீக்கி
 அல்லலறுத்து ஆனந்தமாக்கியதே- எல்லை
 மருவா நெறியளிக்கும் வாதவூரெங்கோன்
 திருவாசகமென்னுந் தேன்.'


 என்ற சிறப்புப் பாயிரத்தாலும்,


 ‘வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தைக்
 கேட்ட பொழுதங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
 வேட்டமுறும் பொல்லா விலங்குகளு மெஞ்ஞான
 நாட்ட முறு மென்னிலங்கு நானடைதல் வியப்பன்றே.'


 என்ற திருவருட்பாத் திருப்பாடலும் நன்கு தெளிவாம்.


 

 

நூலின் பெருமை


 ஒருவாசகத்துக்கு முருகாதார்
 திருவாசகத்துள் ளுருகாரே –


 என்ற திருப் பெருந்துறைப் புராணத்தாலும்,


"மனங்கரைத்து மலங்கெடுக்கும்
 வாசகத்தின் மாண்டோர்கள்
 கனஞ்சடை யென்றுரு வேற்றிக்
 கண் மூடிக் கதறுவரோ”


என்று மனோன்மணீயம் ஆசிரியர் (ராவ்பஹதூர் பி. சுந்தரம் பிள்ளை, எம்.ஏ.) அவர்கள் அறைவதினாலும் இந்நூலின் பெருமையை நன்கு அறியலாம். எத்தன்மையான கல் நெஞ்சையும் கசிந்துருகச் செய்து பக்தியுண்டாக்க வல்லது திருவாசகமென்பது மேற்கூறியவற்றால் நனிவிளங்கும். இதே கருத்தைத் திருவருட்டன்மையும் பைந்தமிழ்ப் புலமையும் நிரம்பிய துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்,


 திருவாசகமிங் கொருகாலோதிற்
 கருங்கன் மனமுங் கரைந்துருகக் கண்கள்
 தொடு மணற்கேணியிற் சுரந்து நீர்பாய
 மெய்ம் மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி
 அன்பராகுந ரன்றி
 மன்பதை யுக கின் மற்றைய ரிலரே.


 என்று அருளிப் போந்துளார். இன்னும் அருந்தமிழ் அன்னையாகிய அவ்வைப் பிராட்டியார்,


 தேவர் குறளுந் திருநான் மறைமுடிவும்
 மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
 திருவாசகமும் திருமூலர் சொல்லும்
 ஒருவாசகமென்றுணர்.


 என்று பாடியதினாலும் இந்நூலின் மாண்பு இனிது புலனாம்.


நூலின் மறுபெயர்கள்

 

நான்மறைகளிலும் நவிலப்பட்டுள்ள சைவ சித்தாந்தமே இந்தலில் பதிப்பிக்கப்பட்டதென்ற கருத்தால் இஃது மூவர் தேவாரங்களைப் போல் தமிழ் மறையெனத் தமிழர்களால் கருதப் படுகின்றது. மற்றும் " வடிவுடைமழுவேந்தி மதகரியுரி போர்த்து புரிகுழலுமையொடும் "மழவிடை மீதமர்ந்தமன்றாடிதானே திருவருள் கொண்டு திருவாதவூர் திருவுள்ளத்தில் திளைத்துத் திருவாசகத் திருப்பாடல்களை ஆக்கியதினால் திருவருட்பா எனவும் வழங்கும்.


மாணிக்க வாசகர் மாண்பு

 

மாணிக்க வாசக சுவாமிகள் பிறப்பிலே செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர் குலத்துதித்தவராயினும் கல்விக் கடலைக் கரைகடந்தவராதலால் தென்னவனால் மிகவும் போற்றப்பட்டு முதன் மந்திரியாகிப் ‘பிரமராயர்' என்னும் பட்டத்தைப் பெற்றனர். அமைச்சத்தொழில் பூண்டெ டாழுகுங்கால் ஓர் இராஜ தந்திரி (Politician) யாக விளங்கினார். பின்னர் திருப்பெருந்துறை குருவருள் பெற்ற பின்பு ஓர் பக்திமான மானாக விளங்கினார். அதோடு ஓர் மாப்பெருங்கவியாகவும் விளங்கினார். மற்றும் ஓர் தத்துவ சாஸ்திரி (Philosopher) யாகவு மிலங்கினார். ஆகவே மேற் கூறிய வற்றால் அவர் சாமானிய புலவரைப் போல்வாரல்லர் என்பது வெள்ளிடை மலையென் விளங்குகின்றது.

 

மற்றும் திருவாசகத்தில் பாஷாபிமான மிகுந்த அடிகளும், தேசாபிமானஞ் செறிந்தவர்களும் மிகவும் காணப்படுகின்றது. அமிழ்தினு மினியதமிழ் மொழியின் மாண்பை அடிக்கடி விளக்குவதால் மணிவாசகருக்குத் தம் தாய் மொழியாகிய தமிழ் மொழியினிடத்து அளவிறந்த அன்புண்டென்பது இனிது புலனாகிறது.


 . . . . . . . . . . . . . . . .    " காதலவர்க்
 கன்பாண்டு மீளா அருள் புரிவா னாடென்றுந்
 தென்பாண்டி நாடே தெளி.


என்பன முதலான அடிகள் மணிவாசகத்தில் மிளிர்வதால் ஆசிரியாது நாட்டுப்பற்று
(Patriotism) நன்கு புலனாகிறது.


 இனி வடர் - இராமலிங்க சுவாமிகள்,


 பெண்சுமந்த பாகப் பெருமா னொரு மாமேல்
 என் சுமந்த சேவகன் போ லெய்தியதும் வைகைநதி
 மண் சுமந்து நின்றது மோர் மாறன் பிரம்படியாற்
 புண்சுமந்து கொண்டது நின் பொருட்டன்றோ புண்ணியனே.


என்று மாணிக்கவாசக சுவாமிகளது பக்தியின் மாட்சியைப் போற்றித் துதிப்பதால் அவரது அருளின் தன்மையும், தம்மரும் பனுவலின் பெருமையும் இனிது புலனாகிறது. இக்கட்டுரையிற் பிழையுனதேல் அன்பர் அதனைப்பொறுக்க.

 

சுபம்.

(K. மழவராயன்)

ஆனந்த போதினி – 1930 ௵ - மே ௴

 

No comments:

Post a Comment