Sunday, September 6, 2020

 மணிவாசகர் வீரசைவரா

மணிவாசகப் பெருமானின் சரிதத்தை ஆராய்வதற்கு ஆதாரமாயுள்ள நூல்கள் திருவாதவூரர் புராணம், திருவாசகம், திருக்கோவையார் என்பன. இவற்றுள் வாதவூரர் புராணம் இவரது சமயம் சைவமெனவும் குலம் ஆமாத்திய ரெனவுங் கூறுகின் றது.
இவ்வரலாறே இப்போது தமிழுலகில் வழங்கி வருகின்றது. ஆனால் யான் எனது ஆராய்ச்சியின் பயனாக அவரது சமயம் வீரசைவம் என்பதைத் தக்க சான்றுகொண்டு விளக்க முற்படுகின்றேன்.


1. மணிவாசகரின் சமயம்.

 

அந்தணருள் ஆராத்திய ரெனவும் ஆதிசைவ ரெனவும், நம்பூரி எனவும், வைணவ ரென்றும், மாத்வர் என்றும், சுமார்த்தர் என்றும் சில வகுப்புகள் ளவேயன்றி ஆமாத்தியரென்று ஒரு வகுப்பின ரிருப்பதாகத் தெரியவில்லை. ஆமாத்தியர் என்னும் ஆரியமொழிக்கு வட மொழிப் புலவர்கள் " மந்திரி' என்று பொருள் கூறுகின்றனர். எனவே, ஆமாத்தியர் என்பது ஒரு தொழிலைக் குறித்ததேயொழிய ஒரு குலத்தைக் குறிக்கவில்லை என்பது பெறப்படும். அவரது பிள்ளைத் திருசாமம் திருவாதவூரர் என்ப. ஒருவர் வசிக்கும் ஊரின் காரணமாக பட்டினத்தார், மதுரையாா, வேலூரார் என்று வழங்கப்படுவரே யன்றி அது அவரது பிள்ளைத் திருநாமமாக இருக்க வியலாது. அதுபோலவே திருவாதவூரர் என்பது அவரது பிள்ளைத் திருகாமமன்று. எனவே அவரது இயற்பெயரும் இன்னதென விளங்கவில்லை. நிற்க. மணிவாசகனாரது இருப்பிடம் கன்னடதேய மென்றும், ஆராத்தியரென்னும் வீரசைவ அந்தணர் குலத்தைச் சேர்ந்தவரென்றும், அவர் தென்றமிழ்நாடுற்று வதிந்தனரெனவும் ஒரு வரலாறு கர்ணபரம்பரையாக வழங்கி வருகின்றது. அது எவ்வளவு உண்மை என்பதை சான்று கொண்டு ஆராய்வோம். திருவாசகத்தில் அருட்பத்து என்னும் பதிகத்தில் “அதெந்துவே" எனும் கன்னட பதத்தை அமைத்துப்பாடி இருக்கின்றனர். இப்பதம் தமிழில் கிடையாது. " அதெந்துவே " என்றால் '' அது எப்படி'' என்று பொருள்படும். இதுவேயன்றி பாண்டூர், தேவூர் என்னும் கன்னட நாட்டு ஊர்கள் பலவிடங்களில் கூறப்படுகின்றன.
இக் காரணங்களைக் கொண்டு மாணிக்கவாசகரது பிறப்பிடம் கன்னடதேயமாய் இருக்கலாம் என்று ஒருவாறு ஊகிக்க இடமிருக்கிறது. ஆனால் அவர் ஆராத்தியர் எனும் வீரசைவ குலத்தைச் சார்ந்தவரெனக் கூறுதற்கு என்ன ஆதார மிருக்கிறதென ஆராய்வோம். பண்டைக் காலத்திலிருந்த ஏட்டுப் பிரதிகளில் கூட்டெழுத்துக்கள் எழுதுவது வழக்கம். ஆகையால் ஆராத்தியர் என்னும் பதத்தை (ஆரா) என்று எழுதி யிருத்தல் கூடும். "ரா ழுத்தை மூலைகளில்லாமல் ரா என்று கூட்டு ழுத்துக்காரர்கள் சுவடிகளில் எழுதியுள்ளதை இன்றுங் காணலாம்.) எனவே அங்ஙனமெழுதப்பட்ட பதத்தை ஆராத்தியர் என வாசியாமல் ஆமாத்தியர் என வாசித்து “படித்தவன் பாட்டைக் கெடுத்தான், எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் '' என்ற பழமொழிப்படி, மாற்றியிருக்கவேண்டும் என்றும் அங்ஙனமே ஆராத்தியர் ஆமாத்தியர் என்று பிற்காலத்தில் வழக்கத்திற்கு வந்திருக்கக்கூடுமெனவுங் கூறுவர் ஒரு சாரார். இவ்வொரு காரண மட்டுங் கொண்டு அவரை வீரசைவரென கூறற்கியலாது. திருவாதவூரர் புராணத்தில் அவர் சைவரா அன்றி வீரசைவரா என்று விளக்காததின் காரணமென்னை? ஆராத்தியர் என்ற பதத்தை ஆமாத்தியர் என்று திருத்தி அமைத்தபின் அவரது சமய சம்பந்தமான பாடல்களை யேனும் குறிப்புகளையேதுயனும் நூலில் வைத்திருந்தால் முன்னுக்குப் பின் முரணுமாகலின் அவற்றை நீக்கி விட்டனரென்றே கூற வேண்டும். திருப்பூவல்லியில் 19- பாடல்களும் திருவுந்தியாரில் 19 - பாடல்களும் திருத்தோணோக்கத்தில் 14-பாடல்களும் திருப்பொன்னூசலில் 7-பாடல்களும் திருப்படையெழுச்சியில் 2- பாடல்களும், அச்சோப் பதிகத்தில் 9 - பாடல்களும் காணப்படுகின்றன. மணிவாசகப் பெருமான் திருச்சதகம் முதலிய ஒவ்வொரு பதிகத்திலும் 10, 20, 50, 100, என்னும் தெ தாகையாக வரையறுத்துப் பாடியிருத்தலின் மேற்கூறிய பதிகங்களில் மட்டும் பாடல்கள் குறைந்திருப்பதற்குக் காரணமென்ன என்ற விஷயம் ஆராய்ச்சிக்குரியதாகும். மற்றும வாதவூரர் புராணச் செய்யுளொன்று,

 

“திருச்சதக முதலாகச் சிறந்த தமி ழெழுநூறும்

விரித்த வகப்பொருட் கோவை விளங்கவொரு கானூறு

முரைத்தனர் பின் முடிந்தவிடத் துயர்வாத வூரன் மொழி

தரித்தெழுது மம்பலவ னெழுத்தென்று சாற்றினார்.”

 

என்று திருவாசகம் 700-செய்யுளென அறுதியிட்டுக் கூறுகிறது. இப்பாடல் எழுநூறு என்னும் பேரெண்ணைக் குறித்ததேயன்றி அதற்கு மேற்பட்ட சில்லரைத் தொகையைக் கூறவில்லை. எப்படியும் இப்போது சில பாடல்கள் குறைந்திருப்பது வெளிப்படை. ஒருகால் குறையும் பாடல்கள் தேவாரத் திருப்பனுவல்களைப்போல் சிதலைவாய்ப் பட்டிருக்கலாம் எனக் கூறுவதற்கும் இடமில்லை. தேவாரப்பாக்களை செல்லரிக்கப்பட்டதற்கு கதை இருப்பது போல் இதற்குக் கதை இல்லை. எனவே, மாணிக்கவாசகப் பெருமான் கன்னட தேயத்திலே வீரசைவ சிகாமணிகளாகிய ஆராத்தியர் குலத்திலே அவதரித்தவ ரென்பதை வெளிப்படுத்த விருப்பமில்லாத சிலர் இவ்விதம் பாடல்களைக் குறைத்தும் திருத்தியும் இருக்கலாம். இவர் நந்தியம் பெருமானின் அமிசமாவர் என்று கூறுவாருமுளர். சம்பந்தரை ஆளுடைய பிள்ளை யென்றும் அப்பரை ஆளுடைய அரசு என்றும், சுந்தரரை ஆளுடைய நம்பி என்றும் வாதவூரரை ஆளுடைய அடிகளென்றும் (பல நூல்களில் அடிகள்
என்று நந்தியெம் பெருமானைக் குறிக்கின்றது) வழங்குதலே இதற்குச் சான்றாகும். வீரசைவ சமயத் தலைவரும் நந்தியின் அமிசருமாகிய வசவதேவரின் சரித்திரமும் மாணிக்கவாசகரின் சரித்திரமும் ஏறக்குறைய ஒத்திருத்தல் காண்க. மணிவாசகர் நந்தியின் கூறாய் அவதரித்தவர் என்றதனால் அவர் வீரசைவர் எனக் கொள்ள இடந்தருகின்றது.

 

இனி, மணிவாசகர் வீரசைவர் எனக் கோடற்குரிய அகச்சான்றுகள் சிலவற்றை அவாது நூலினின்றும் தர விரும்புகிறேன்.

திருவாசகத்தில் பல விடங்களில் கன்னடதேசப் பெயர்களும் சரித்திரி
மும் கூறப்படுகின்றன. (1) கீர்த்தித் திருவகவலில்,

 

மொக்கணி யருளிய முழுத்தழல் மேனி
சொக்கதாகக் காட்டிய தொன்மையும்

 

என்ற அடிகளில் கன்னட தேயத்தில் நடைபெற்றதாக வசவபுராணம் கூறு கின்ற வள்ளேசர் சரிதங் குறிப்பிடப்படுகின்றது.

 

(2) சிவபுராணத்தில் 'கோகழியாண்ட குருமணி தன்றாள் வாழ்க' என்ற அடியில் கோகழி என்னும் கன்னடநாட்டுத்தலம் குறிக்கப்பட்டுள்ளது. மற்றும்


“பாண்டூர் தன்னில் ஈண்ட விருந்தும்

தேவூர்த் தென்பாற் றிகழ்தரு தீவிற்

கோவார் கோலங் கொண்ட கொள்கையும்”


என்ற அடிகளில் பாண்டூர் தேவூர் எனும் கன்னட நாட்டு ஊர்கள் கூறப்பட்டுள்ளன.

 

(3) மற்றும் இப்போது அச்சுப்பிரதிகளில் கிடைக்காத சில திருவாசக ஏட்டுப்பிரதி பாடல்களில் அவரே தன்னை வீரசைவரென விளக்கியிருத்தல் காண்க. அவை வருமாறு: -

எத்தனையோ மெய்யன்ப ரேமாக்க நாயடியேன்

சித்தமயக் கத்தனையுந் தீர்ந்தே யிறு மாக்க

வித்தரையி லங்கலிங்க வேகாந்த மெற்களித்த

புத்தமுதைப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ.            - திருப்பூவல்லி.


புரங்களோர் மூன்றும் பொடிபட மூவ

ராந்தை யடைந்தில ருந்தீபற

வவர்கள் சிவாத்துவித ருந்தீபற.                         - திருவுந்தியார்.


கண்டமுரஞ் சிரம் வலதுகரமி விடத் தாலால

முண்ட தனது வுருத்தரித்தே யுலவு சிவசரண ரெனுந்

தொண்டனைத் தொருவனெனத் தொல்லுக ரேத்தும் வண்ணம்

அண்டர்பிரா னருளியவா றார்பெறுவா ரச்சோவே.          - அச்சோப்பதிகம்.

 

மேற்கூறிய விடுபட்ட பாடல்களில் வரும் '' அங்கலிங்க ஏகாந்தம் " "சிவாத்து விதர்'' “சிவசரணர்'' என்னும் சொற்றொடர்கள் முறையே வீரசைவ சித்தாந்தத்தையும் வீரசைவ மாகேஸ்வரையும் உணர்த்துகின்றன.

 

4. பிடித்த பத்தில் “சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவ தினியே'' என்றார். சைவர்கள் சிவலிங்கத்தை பூசைப்பெட்டியில் வைத்து வழிபடுவது போலல்லாமல் வீரசைவர்கள் அங்கம் வேறு இலிங்கம் வேறு என்ற பேதபாவனையை யொழித்து அங்கலிங்க சையோகமாய் இருப்பதால் “உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்" என்றார். இதே கருத்தை கோயின் மூத்த திருப்பதிகத்தில்,


"உடையாளுன் றன் நடுவிருக்கு முடையாணடுவு ணீயிருத்தி

யடியனே னடுவுளிருவீரு மிருப்பதானா லடியேனுன்

அடியார் நடுவுளிருக்கு மருளைப்புரியாய் பொன்னம்பலத்தெம்

முடியாமுதலே யென் கருத்து முடியும் வண்ண முன்னின்றே"


என்று விளக்கினார்.

 

5. மற்றும் பிடித்த பத்தில் அவர் தமக்கு ஆசார்ய தீட்சையான காலத்தையும் அதற்குமுன் தான் அடைந்திருந்த துன்பத்தையும் கீழ்வரு மடிகளில்


"இருளிடத் துன்னை சிக்கெனப் பிடித்தேன்"

“இரவிலே யுன்னை சிக்கெனப் பிடித்தேன்''

"எய்ப்பிடத் துன்னை சிக்கெனப் பிடித்தேன்”   என்றார்.


இராக்காலமே பிராணிகளின் விவகாரமுற்றும் ஒடுங்கிய காலமாதலானும், அப்போதுதான் மனோலய முண்டாகு மாதலானும், மனோலயமே சிவபெருமானை பூசிக்கவும் வணங்கவும் ஏற்ற தருணமாதலானும், ஆகமங்களும் அக்காலமே தீக்ஷாகாலமெனக் குறிப்பதாலும் மணிவாசகர் இரவில் தீட்சைபெற்றதாகக் குறித்தது பொருத்தமானதே. அவர் ஞானாசிரியனை யடைந்து தீட்சை பெற்ற இடம் திருப்பெருந்துறை என வாதவூரர் புராணங் கூறு
கின்றது.

இனி மணிவாசகர் வீரசைவ சமயத்தைச் சேர்ந்தவரெனக் கொள்ளுதற்குரிய புறச்சான்றுகள் சிலவற்றை ஆராய்வாம்.

 

இப்போது தேவாரம் பெரும்பாலும் சைவர்களாலும் திருவாசகம் எல்லா வீர சைவர்களாலும் ஓதப்பட்டு வருகின்றன. (2) இக்காலத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியோர்வரை வீரசைவர்களில் திருவாசகத்தில் ஒரு பாடலேனும் தெரியா தவர்களில்லை. அன்றியும் திருவாசகம் ஓதுவிக்க எண்ணங் கொள்பவரெல்லாம் இலிங்கதாரிகளை வரவழைத்தே ஓதச் செய்வது நாளைக்கும் வழக்கமாக இருந்து வருகிறது. (3) இந்நாளில் திருவாசகத்தை தொன்று தொட்டு நாளது வரையில் பூசித்துக்கொண்டும் அதற்கென ஓர் மடமும் ஏற்படுத்திக்கொண்டும் பரம்பரையாக மணிவாசகரது நட்சத்திரத்தன்று விழாநடத்திக் கொண்டும் வருபவர்கள் வீரசைவர்களே. அதனை இன்றும் சிதம்பரத்திலும் புதுவையிலுமுள்ள அம்பலத்தாடுவார் மடத்தில் காணலாம்.

 

(4) இப்போது மரண காலத்தில் சைவ வீரசைவர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் திருவாசகம் ஓதப்படுகிறதேயன்றி தேவாரம் ஓதப்படுவதில்லை.

 

இங்ஙனமாக, மேற்கூறிய சான்றுகள் பலவற்றைக் கொண்டு, வான்கலந்த மாணிக்கவாசகப் பெருமான் வீரசைவ சமயத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும் என ஒருவாறு துணியப்படுகின்றது. இச்சான்றுகளைக் கொண்டே மணிவாசகரின் காலத்தை ஆராய்வோம்.


2. காலம்

 

“சைவ சமய குரவராகிய மாணிக்கவாசக சுவாமிகள் வீரசைவ மதத்தினரென்று இக்காலத்துப் பண்டித ரொருவர் ஸ்தாபிக்க முயன்றார். கி.பி. 12-ம் நூற்றாண்டின் முன் வீரசைவம் எந்நாட்டிலும் இருந்தில தாகலானும் அக்காலத்திலாயினும் அதற்குப் பின்னராயினும் திருவாசக முடையார் திகழ்ந்தாரெனல் அவருடைய சரித்திரத்தோடு முற்றும் முரணுமாகலானும் அது பொருந்தாது."

 

என சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் S. அனவரத விநாயகம் பிள்ளை என்பார் தாம் 1907ம் ஆண்டு பதிப்பித்த “திருவாசகம்" என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். அது தவறாகும். வீரசைவ சித்தாந்தம் வேதாகம காலந்தொட்டு வழக்கிலிருந்து வருகிறது. வீரசைவ மெய்ந் நெறியும், பஞ்சாசாரியர்களின் அவதாரமும் அனுக்கிரகமும் வீரலைங்கோபநிஷத் முதலிய உபநிடதங்களிலும், காமிகாகமம், வீராகமம், வாதுளாகமம், பாரமேஸ்வராகமம், சுப்ரபேதாகமம் முதலிய ஆகமங்களின் உத்தர பாகங்களிலும் பரக்கக் கூதப்படுகின்றன. பரமசிவனது பஞ்ச முகங்களினின்றும் இரேவணாராத்யர், மருளாராத்யர், பண்டிதாராத்யர், ஏகோராமாராத்யர், விஸ்வாராத்யர் என்னும் ஐம்பெருந் தலைவர்கள் உற்பவித்து முறையே ரம்பாபுரி, உஜ்ஜயினி, ஸ்ரீசைலம், பதரிகேதாரம், காசி எனுமிடங்களில் தமது சிம்மாசனங்களை ஸ்தாபித்துச் சென்றதாக பரமேஸ்வராகமம் கூறுகின்றது. சுவாயம்புவாகமத்தின் 9 வது படலத்தில் ஆதி ஆசாரியர்களின் பெயர்கள் தெளிவாகக் கூறப்படுகின்றன. வீரசைவ சமயத்தின் தொன்மையை விளக்க இன்னும் சில ஆதாரங்களை எடுத்துக் காட்டுவோம்: -

 

(1) இற்றைக்கு சுமார் ஆறாயிரமாண்டுகட்கு முன், சிவயோகி ராட் என்பார் சித்தாந்த சிகாமணி என்ற ஒரு நூலை வடமொழியில் இயற்றியருளினார். அதுவே பிற்காலத்தில் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.  

 

(2) வியாச பாரதத்தில் அனுசாசன பருவத்தில் தருமருக்கும் பீஷ்மருக்கும் நடந்த ஒரு சம்பாஷணையில் அக்காலத்தில் வீர சைவ சமய மிருந்ததாகத் தெரிகிறது.  

 

(3) வடமொழிக் கந்தபுராணம் சங்கர சம்ஹிதையில் பிங்கலனென்னுமோ ரந்தணன் சதாநந்த முனிவரால் வீசைவ னாக்கப்பட்டமை கூறப்படுகின்றது.

 

(4) சங்கராசாரியாது தாய் தந்தையர் மகப்பேறின்மையால் சிவபெருமானை சங்கம மூர்த்தியாக வழிபட்டு சங்கரரைப் பெற்றனர் என்ப.

 

(5) கி. பி. 1165- ஆண்டில் திரிபுவன தாதா என்னும் வேதியர் பதுமராசு என்னும் வீரசைவ பண்டிதரோடு வாதிட்டு தோற்று வீரசைவராயினர்.

 

(6) கி. பி. 1195-ல் சக்கரபாணி ரங்கநாதர் என்னும் வைணவ அந்தண ரொருவர் பால் குருகி சோமநாத ஆராத்தியர் எனும் வீரசைவப் பெரியாருடன் வாதில் தோல்வியுற்று வீரசைவ மெய்ந் நெறியைக் கடைப்பிடித்தன ரென்ப.

 

(7) இற்றைக்கு 5500 ஆண்டுகளுக்கு முன்னிருந்த ஜனமே ஜய மன்னன், அப்போது கேதார பீடாதி பதியாய் விளங்கிய ஆனந்தலிங்க ஜங்கம சுவாமிகளுக்கு நிலங்களை நங்கொடையாகக் கொடுத்ததைப் பற்றிய கல்வெட்டு பின் வருமாறு: -

 

“I, Sreeman Maharajadhiraja Janamejaya Boopala, King of Hastinavathi and preserver of the four Varnagramas, make on this Monday, the Amavasya day of the lunar month Margą.
seersha in the cyclic year Plavanga corresponding to the 89th year of the Yudhistra Era, grant of the land lying between the rivers Mandhakini, Ksheeraganga, Madhuganga, Swargadwara-ganga, and the confluence of the Saraswathi and Mandhakini for the purpose of worship of the God Kedaranath through Ganesalinga Jangama, the resident of Sri Kedhar Kshetra and the disciple of Sri Goswamy Anandhalinga Japgama, the spiritual head of Okhi Math in order to procure for my parents the eternal bliss of living in the abode of Shiva... ....May it happen that those who misap-propriate this gift of mine will be born again and again as worms on earth for sixty thousand years.


கல் வெட்டுகளின் ஆராய்ச்சியால் ஜனமே ஜய மன்னனின் காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டென நிலை நிறுத்தப்படுகின்றது.

(8) Many stone and copper plate inscriptions bear witness to the fact even four or five thousand years ago, several kings in India had been initiated with Lingadharana'' என வட நாட்டாராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

(9) மற்றும் வில்லியம்ஸ், மூர், வில்சன், டாக்டர் பர்நார்டு முதலிய பல மேனாட்டாசிரியர், வீரசைவ சமயமானது மிகப் பழமையான தென்று தங்கள் தங்கள் ஆராய்ச்சியால் முடிவு கூறியுள்ளனர்.

 

இதுகாறும் அகப்புறச் சான்றுகள் பலவற்றின் ஆதரவால் மாணிக்கவாசகரைக் கூறினேன்.

நால்வர் என்ற சொற்றொடர் இடைக்காலத்தி லெழுந்ததொன்றே. தாயுமானவர் காலம் இற்றைக்கு 250 ஆண்டுகட்கு முன் ஆதலானும், அவர் காலம் வரை மூவரென வழங்கி வர்திருந்தமையாலும் "நால்வர்' என்ற சொற்றொடர் அவருக்குப் பின்னர்தான் ஏற்பட்டிருத்தல் வேண்டும். எனவே மாணிக்கவாசகப் பெருமானை மூவரோடும் சேர்த்துரைக்காமையும் அவரது நால்களைத் தனித் திருமுறைகளாக வகுத்தமையுமே அவர் வீரசைவ ரென்பதைப் புலப்படுத்துகின்றன.


(2) மணிவாசகப் பெருமான் திருக்கோத் தும்பியில் 2-ம் செய்யுளில்

 

"கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை கண்டபின்''

 

என்று கண்ணப்பரையும், "தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானை
சண்டேசுர நாயனாரையும் கூறியுள்ளா ராகலின் அவர் கண்ணப்பரது காலத்திற்கு பிற்பட்டவரென்பது பெறப்படுகின்றது.


(3)     அருப்போட்டு முலை மடவாள் .............

மணமலிந்த நடந்தோன்று மணியார் வைகைத்

திருக்கோட்டி னின்றதோர் திறமுந் தோன்றுஞ்

செக்கர்.....    புனித னார்க்கே"

 

என்ற திருப்பூவணத் திருத்தாண்டகத்தில் வாகீசப் பெருந்தகையார், சிவபெருமான் வைகையில் மண்சுமந்த திருவிளையாடலைக் கூறியுள்ளார். இக்குறிப்பினால் மாணிக்கவாசகர் காலம் மூவருக்கும் முற்பட்டது என்பது பெறப்படும்.

 

(4) திருத்தொண்டத் தொகையில் சுந்தரர் மணிவாசகரைக் குறியாது விட்டமையான், அவர் சுந்தரருக்கும் பிற்பட்டவரென்பர் ஒரு சாரார். மணிவாசகர் வீரசைவ சமயாசாரியரா யிருந்தமையின், சைவ சமய குரவரோடு சேர்த்துக் கூறாம லிருந்திருக்கக் கூடுமாகலின், இக்கருத்துப் பொருந்தாது.

 

(5) திருக்கோவையாரில் வரகுண பாண்டியன் என்னும் பெயர் குறிக்கப்படுதலால் அவர் அவனது காலமாகிய 9-ம் நூற்றாண்டி லிருந்தவ ரென்று ஒரு சாரர் கூறுவர்.

 

(6) அம்பலம் பொன்வேய்ந்த பராந்தக சோழனுக்கு முன் பொன்னம்பலமென்னும் வழக்காறில்லை யாகலின் மாணிக்கவாசகர் அவன் காலமாகிய 10-ம் நூற்றாண்டி லிருந்தாரெனக் கூறுவாருமுளர்.

 

(7) அரிமர்த்தன பாண்டியனிடம் மணிவாசகர் அமைச்சராய் இருந்தது உண்மை. பரஞ்சோதியார் திருவிளையாடலில் வரகுண பாண்டியனைப் பின்பற்றி சுமார் 40 அரசர் ஆண்ட பின்னர் அரிமர்த்தன பாண்டியன் ஆண்டானென்றும் அவனுக்குப் பின் பதின்மர் பாண்டியர் ஆண்டபின் வந்தவன் கூன்பாண்டிய னென்றும் காலவரையறை கூறப்படுகின்றது. எனவே மாணிக்க வாசகருக்குப் பின்னரே ஞானசம்பந்தரும் அப்பரும் இருந்திருக்க வேண்டும்.

 

(8) மாணிக்க வாசகர் சங்ககாலத்தில் லிருந்தவரெனக் கூறுவாருமுளர்.

 

இங்ஙனம் பலதிறப்பட்ட சான்றுகளும் ஆராய்ச்சிகளும் எழுந்த காரணத்தால் மாணிக்கவாசகர் காலம் இன்னதெனத் துணிந்து கூறற்கியலாதாயிற்று. இத்தகைய ஆதாரங்கள் பலவற்றையும் கொண்டு இக்காலத்தில் மாணிக்கவாசகர் காலத்தை கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டென்று ஆராய்ச்சியாளர் முடிவு கூறுகின்றனர்.

 

ஆனந்த போதினி – 1936 ௵ - செப்டம்பர் ௴

 

No comments:

Post a Comment