Tuesday, September 1, 2020

தமிழர் இசைக்கலை

 



 (உறையூர் - ஸ்ரீ. வெ. வரதராஜையங்கார்.)

ஆனந்தபோதினி 1929 பிப்ரவரி


      வர்ணங்கள்: - ஸ்தாயீ, ஆரோகணம், அவரோகணம், சஞ்சாரம் என
 நான்கு திறத்தவை. வர்ணமாவது அழகு; செவிக்கினிமை.

 

ஸ்தாயீ: - என்பது ஒரே ஸ்வரத்தைப் பன்முறை சமமான மாத்திரை
 கள் இடையே கொடுத்துச் சொல்வது: - ச... ச.... ச... ச.


      ஆரோகணம்: - வரிசைப்படி இடைவெளி தந்து ஸ்வரத்தை மே
 லெடுத்து இசைத்தல்: - ச.... ரி... க................. நி.


      அவரோகணம்: - வரிசையாக நிஷாதத்திலிருந்து இடையே சம மாத்
 திரை கொடுத்து இறக்கிப்பாடுதல்: - நி.................. க... ரி... ச.

 

சஞ்சாரம்: - மேற்கூறிய மூவகை சஞ்சாரங்களையும் கலந்து இசைத்
 தல்: - ச... ச... ச... நி... ம்... ம்.... நி... ம்... ப.


 5 இராசம்

 

சப்த ஸ்வரங்களாலும் மேற்கூறிய ஸ்தாயீ, ஆரோகணம், அவரோகணம்
சஞ்சாரமாகிய நால்வகை வர்ணங்களாலும் அழகுற வமைந்து செவிக்கின்பந்தருவதான தொனி இராக மெனப்படும். இராசமென்பது 'பண்' ஆகும். "பண்ணுறத் தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் மக்கள் வடமொழி யுடையார் இராகம்' என்றதைப் 'பண்' ணெனக் கொண்டிருந்தனர். ஏழு ஸ்வரங்களையும் பிறவற்றையுங் கொண்டு பண்ணப்படுதலின் 'பண்' என்றனர் போலும். இதனை,

 
 பாவோ டணைத லிசையென்றார் பண்ணென்றார்
 மேவார் பெருந்தான மெட்டானும் - பாவாய்
 எடுத்தன் முதலா விருநான்கும் பண்ணிப்
 படுத்தமையாற் பண்ணென்று பார்.


 எனவரும் எதுவாலும் உணர்க.

 

ஏழு ஸ்வரங்களும் கமகங்களோடு * சுருதியுடன் கூடித் தலைமை பெற்ற முப்பத்திரண்டு இராகங்களை யெய்தி நிலவும். கமகங்கள் பத்து. அவை ஆரோகணம் அவரோகணம், டாலு, ஆந்தோளம், ஸ்புரிதம், ஆஹதம், மூர்ச்சனை, திரியுச்சம், பிரத்யாகதம், கற்பிதம் என்பன. அவற்றுள்,

 

* சுருதிச்சக்கரம் பின்னோரிடத்தில் வரும்.

புராதன சங்கீதம் 'என்னும் தலையங்கம் இனி 'தமிழர் இசைக்கலை' என்னும் பெயர்புனைந்து வெளிவரும். இதன்கண் தற்காலம் தமிழ் நாட்டில்வழக்கிலுள்ள ஆரிய சங்கீதமுறை போன்றே, தமிழர்க்கும் தனியே தமிழ்இசைக்கலை வெகு பழங்காலந் தொட்டே உண்டென்பதையும், அதனைத்தமிழர் எங்ஙனம் கையாண்டு வந்தன ரென்பதையும், அதற்குரிய பிறப்பிலக்கணம் முதலியவற்றையும், சிறப்புகளையும், இசை தழுவி வரும் பிறவற்றையும்ஒப்பிட்டுக்காட்டி, பழந்தமிழ் நூல்களின்றும் அவற்றைத் தக்க மேற்கோளுடன் விளக்கி, மயக்கமின்றி யாவரும் தமிழ் இசையின் திறத்தை யுணர இயன்றவரை எழுதி வரப்படும்

 

திருவிளையாடற் புராணம்.

இவை, திரிபம், ஸ்புரிதம், கம்பிதம், லீனம், அந்தோளம், வலி, திரிபின்னம், குறுலம், ஆஹதம், உல்லாளிதம், பல்லவதம், கும்பிதம், முத்ரிதம், நாமிதம், மிச்ரிதம் எனப் பதினைந்தென்பர் வடமொழி இசை நூலோர். அவற்றுள் பத்தே தமிழ் நூல்களுட் காணப்படுவன. இதற்குக் காரணம் இப்பத்துவித கமகங்களே தமிழிசை நூலோரால் சாலும் எனக் கொள்ளப்பட்டது போலும். அபிதான சிந்தாமணியில் கொள்ளப் பெற்றவை இவை பத்துமேயாம்.

 

1. ஆரோகணம்: - ஸ்வரங்களை வரிசைப்படி மேலெடுத்து அகாரமாக இசைத்தல்: ச, ரி, க, ம, ப, த, நி, ச.

 

2. அவரோகணம்: - ஸ்வரங்களை வரிசைப்படி மேலிருந்து கீழிறக்கி இசைப்பது: ச, நி, த, ப, ம, க, ரி; ச. (இவ்வாரோகண அவரோகணங்களையே பிருகா என்பர்.

 

3. டாலு: - எடுத்த உடனே ஒரு ஸ்வரத்தை இசைப்பதும், மற்றொன்றைத் தொடக்கத்திற் காட்டி வேறொரு ஸ்வரத்தை முடிவில் புலப்படுத்துவதும்: பபாஸ மாஸகா.

 

4. ஆந்தோளம்: - முன்னும் பின்னுமாக ஸ்வரங்களை எழவைத்தல் - சரிசபாப சாஸமாம்.


5. ஸ்புரிதம்: - இரண்டிரண்டாக ஸ்வரங்களைப் பேசுதல் - சச, ரிரி, கக, மம்,

 

6. ஆஹதம்: - ஒரு ஸ்வரத்திலிருந்து ஆரோகணத்தில் மற்றொரு ஸ்வரத்திற்கு விரைந்தேறுதல்: சரிரிக, கமமப.

 

7. மூர்ச்சனை: - ஆரோகண அவரோகண வாயிலான் இராகத்தின் ஸ்வர ரூபத்தை உணர்த்துந் தன்மை. சரிமபதஸ, ஸநிதபமகரிஸ.

 

8. திரியுச்சம்: - உயர்த்தி மூன்று மூன்று ஸ்வரங்களாகப் பாடுதல்: சசச, ரிரிரி, ககக, மமம்.

 

9. பிரத்யாகதம்: - ஒரு ஸ்வரத்திலிருந்து அவபோகணத்தில் மற்றொரு ஸ்வரத்திற்கு விரைந்தேறுதல் சநிநி ததபப மம.

 

10. கம்பிதம்: - ஒரே ஸ்வரத்தை அசைத்துக் கொண்டே இருப்பது: பபபபப. இதில் இனிமை மிகுதி,

 

இங்ஙனம் மேற்கூறியவற்றோடு எய்தப் பெற்ற இராகங்கள் (1) மேளகர்த்தா ஜன்யம் எனவும், (2) சர்பூர்ணம் சாடவம் ஒளடுவம் எனவும் (3) சுத்தம் வக்கிரம் எனவும், (4) சுத்தம் சாயாலகம் சங்கீர்ணம் எனவும், (5) மித்திரம் சத்ரு வெனவும், (6) புருடஸ்திரீ தூதீ புத்ரமெனவும், (7) இராகாங்கம்பாஷாங்கம், கிரியாங்கம், உபாங்கம், எனவும் எழுதிறப்படும். இவற்றின் விளக்கம் பின் வருமாறு:

 

1. மேளகர்த்தா: - ஆரோகண அவரோகணங்கள் குறைவற அமைந் திருக்கும் இராகங்கள். ஜன்யம் மேளகர்த்தா நீங்கிய ஏனைய இராகங்கள்.

 

2. சம்பூர்ணம்: - ஏழு ஸ்வரங்களும் அமையப் பெற்ற இராகங்கள் சாடவம் ஆறு ஸ்வரங்களுள்ள இராகங்கள். ஒண்டுவம் ஐந்து ஸ்வரங்கள் பொருந்தியவை.

 

3. சுத்தம்: - ஸ்வரங்கள் 'நிப' என்பது போல் முன்பின்னாக வாராது வரிசை தவறாது வரும் இராகங்கள். வக்கிரம் ஸ்வரங்கள் முன்னும் பின்னும் பலபடியாக வருவன.

 

(4) சுத்தம் இசை நூல் வரையறைப்படி ஸ்வரங்கள் அமைந்த இராகங்கள். சாயாலகம் பிற இராகங்களின் சாயையுடைய பண் கள். சங்கீர்ணம் மேலிரண்டும் (சுத்தமும் சாயாலகமும்) அமைந்த பண்கள்.

 

(5) மித்திரம் ஒரு இராகத்தைப் பாடிய பின் எந்த இராகத்தை இசைத்தால் இனிமை மிகுமோ அவையே மித்திர ராகங்கள்; இனிமை பயக்காதவை சத்ரு ராகங்கள்.

 

மேலே தலைமை பற்றி வரும் பண்கள் முப்பதிரண்டென்றோம். மேக விரஞ்சி, குறிஞ்சி, பூபாளம், கைசிகம், வராளி, மலஹரி, பல்லதி, இந் தோளம், படமஞ்சரி, நாராயணி, நாட்டை, வசந்தம், பௌளி, சீராகம், பங்காளம், கூர்ச்சரி, கௌளி, காந்தாரி, காம்போதி, இலலிதை, தேவக்கிரியை, தேசாட்சி, மாளவி, சாவேரி, தேசீ, சாரங்கம், தோடி, இராமக்கிரியை, வேளாவளி, பைரவி, குண்டலக்கிரியை, தன்னியாசி என்பன அவ்விராகங்கள்.

 

இவ்விராகங்கள் முப்பத்திரண்டும், புருட ராகமென்றும் ஸ்திரீ ராகமென்றும் இருபெரும் பிரிவின்பாற்படுவனவாம். புருட விராகங்கள் எட்டு, ஏற்ற ஸ்திரீ ராகங்கள் இருபத்துநான்கு. அவையாவன

 :
 புருடர்கள்.                          ஸ்திரீயாகங்கள்


1. பைரவி.                     தேவக்கிரியா, மேகவிரஞ்சி, குறிஞ்சி
2. பூபாளம்.                    வேளாவளி, மலஹரி, பெளளி.
3. சீராகம்.                     இந்தோளம், பல்லதி.
4. படமஞ்சரி.                  தேசீ, இலலிதை, தோடி.
5. வசந்தம்                     இராமக்கிரியை, வராளி, கைசிகம்.
6. மாளவி                     நாராயணி, குண்டலக்கிரியை, கூர்ச்சரி
7. பங்காளம்.                   தன்னியாசி, காம்போதி, கௌளி.
8. நாட்டை.                    தேசாக்ஷரி, காந்தாரி, சாரங்கம்.

 

இப்புருட விராகங்களுக்கும் அவ்வவற்றின் ஸ்திரீ ராகங்களுக்குமாக துதி ராகங்களும் புத்திர ராகங்களும் முறையே உண்டு. இவை சாதி, அதி தேவதை, குணம், இரஸம், வேதம் முதலிய பலவும் உளவாகி இலங்குவன.


 பின்வரும் படத்தால் இவையனைத்தும் புலனாம்.


 

எண்

புருடராகம்

தூதிராகம்

புத்ரராகம்

சாதி

அதிதேவதை

குன

இரசம்

வேதம்

1

பைரவி

கன்னடம்

காபி

பிராமண

ஈசன்

ராஜஸம்

ரௌத்திரம்

சாம

2

பூபாளம்

தேசாக்ஷி

தேவகாந்தாரி

நீலாம்புரி

பிராமண

திருமால்

ராஜஸம்

சிருங்

சாம

3

ஸ்ரீராகம்

 

மாருவ

ராமக் கிரியை

க்ஷத்திரிய

கலைமகள்

தாமஸம்

பீபத்ஸ

யஜுர்

4

படமஞ்சரி

அசாவேரி

சங்கராபரணம்

மந்தாரி

சௌராட்டிர கேதாரம்

க்ஷத்திரிய

இலக்குமி

தாமஸம்

கருணா

யஜுர்

5

வசந்தம்

மோகனம்

முகாரி

லலித, தோடி

தன்னியாசி

நாராயணி

கௌளி

வைசிய

சூரியன்

சாத்வீகம்

ஹாஸ்ய

இருக்கு

6

மாளவி

இந்தோளி

பந்துவராளி

வராளி

கௌளம்

வைசிய

நாரதர்

சாத்வீகம்

பயானக

இருக்கு

7

பங்காளம்

போகி

பூர்வி

சாவேரி

பியாகடை

பெள்ளி

சூத்திர

விநாயகர்

ராஜஸம்

அத்புத

அதர்வண

8

நாட்டை

வேளாவளி

மனோஹரி

யமுனா

சூத்திர

தும்புருதேவர்

ராஜஸம்

வீர

அதர்வண

 

ஆனந்த போதினி – 1929 ௵ - பிப்ரவரி ௴

No comments:

Post a Comment