Saturday, September 5, 2020

பொதுமறைப் பெருமை

 

[* திண்டிவனம் ஸ்ரீ, அம்பிகா கழகத்தின் ஆதாவில், திருவுள்ளுவர் தினத்தன்று செய்த சொற்பொழிவின் திரட்டு.]

 

திருவள்ளுவனாரின் குறள் தமிழ்க் கடலாகும். அதை என் சிற்றறிவாகிய நாழியைக் கொண்டு அளக்க முயல்கிறேன். திருக்குறள் எவ்வாறு பொதுமறையாகும்? அதன் பெருமை என்ன? என்ற இருதலைப்புகளின் கீழ் அகப்புறச் சான்றுகளுடன், ஒல்லும் வகை ஆராய விரும்புகிறேன்,

 

ஒரு காலத்திலே ஒரு புலவராலே ஒரு நூலியற்றப்படுமாயின், அந்நூல், அவர் காலத்தில் மட்டுமோ, அல்லது அவருக்குச் சற்றுப் பிற்காலம் வரையிலோ, அவர் வாழ்த நாட்டிலே தான் பெரும்பான்மை போற்றபடும் என்ற உண்மையை நீவீர் அறிவீர். இவ்வுண்மை எந்நாட்டுப் புலவர் நூன் மாட்டும் ஏற்புடைத்தே. ஆனால், குறள் அத்தகைய நூலன்று. எக்காலத்தவரும் எந்நாட்டினரும் எம்மதத்தினரும் போற்றிப் பயிலும் நூலாக இது அமைந்திருக்கின்றது. இந்திய நாட்டிலுள்ள பல மதத்தோரும் வள்ளுவனாரைத் தம்மதத்தினராகக் கூறும் காரணத்தையும், பதினெட்டு மேனாட்டு மொழிகளில் அவர் நூல் மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கும் காரணத்தையும் கருதின் குறளைப் பொது நூல் என்றல் சாலும். மானி - வாழ்க்கை சிறப்புறுவது அவர்கள் பின்பற்றும் ஒழுக்கத்தாலாம். ஒழுக்கத்தை விளக்கும் நெறிகள் சான்ற நூல் "மறை" எனப்படும். ''மறை" என்பது வேதம்'' என்ற ஆரியமொழியால் குறிக்கப்படுகின்ற தென்பர். தமிழர்களால் மறை எனக் கொண்டாடப்படும் திருக்குறளாகும். இந்நூலின் பொதுத்தன்மையை விளக்கவந்த வெள்ளி வீதியார்,


"செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே - செய்யா
அதம்குரியார் அந்தணரே ஆராயின் எனை
இதற்குரியார் அல்லாதார் இல்''


என்று வியந்து கூறுகிறார்.

 

சிறிது காலத்திற்கு முன்னிருந்து காலஞ்சென்ற ஆசிரியர் சுந்தரம் பிள்ளை ''வள்ளுவர் தம் திருக்குறளை மறவற நன்குணர்ந்தோர்கள், உள்ளுவரோ மநுவாதி ஒரு குலத்துக் கொருநீதி' என்று இந்நூலை வாயாரப் புகழ் கின்றார். தேசீயக்கவி பாரதியார்,

 

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு.''


என்றும், ' யாமறிந்த புலவரிலே வள்ளுவர்போல், கம்பனைப்போல், இளங்கோவைப் போல் யாங்கணுமே கண்டதில்லை'' என்றும் போற்றுகின்றார்.

 

இப்படிப் பண்டைய, இன்றைய புலவர்களாலே திருவள்ளுவர் புகழப்படுவதற்ருக் காரணம் இவர் யாத்த நூலின் பொதுத்தன்மையேயாம்.

 

அடுத்தபடியாக இந்த நூலின் பெருமையைப் பற்றி ஆராய்வோம். குறளை நன்கு ஓதியுணர்ந்த பாதிரியார் ஒருவர், "Though Valluvar was a heathen, his tongue would never go to hell"

"திருவள்ளுவர் பதிதராயினும்-கிர'ஸ்துவப் பரிபாஷை-

அவர் நாகாகஞ் செல்லாது."

 

என்று வள்ளுவரைப் போற்று முகத்தால் அவர் செய்த நூலைப் போற்றுகின்றார். மகாத்மா காந்தியடிகள் இந் நூலைப்பற்றிக் குறிப்பிடுங் காலத்தில் (Thirukkural contains the highest and purest expressions of human thought', 'மனித உள்ளத்தி லெழக்கூடிய மிக உயர்ந்த, கருத்துக்கள் திருக்களில் நிறைந்து கிடக்கின்றன'' என்றார். வீரமா முனிவர் என்னும் கிருஸ்துவச் சாமியார், ஒரு தமிழறிஞரிடம் சென்று பல சோதனைகள் செய்து, குறளின் பெருமையை அறிந்தார் என்ற விஷயமும் நீங்கள் அறிந்ததே. அவர் செய்த சோதனைகளைச் சொல்லப்புகின் அது ஓர் அத்தியாயமாக காய்தல் உவத்தலின்றி, ஆராய்ச்சிக் கண்ணுடன் நூலைப் பயில்வோர்,


''அல்லாப் பொருளும் இதன் பாலுள; இதன் பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால்''.


என்று கூறிய மது
ரைத் தமிழ் நாகனார் உண்மைக் கூற்றை உணர்வர். ஒன்றே முக்காலடிகளாகிய குறட்பாக்களையுடைய ஒரு சிறு நூல் கடலனைய பொருட்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றதெனின்,


'மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாண்டியால்
ஞால முழுதும் நயந்தளந்தான்- வாலறிவன்
வள்ளுவரும் தங்குறள் வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவவெல் லாமளந்தார் ஓர்ந்து-''


என்று சொன்ன பரணரின் வார்ச்தை எவ்வளவு பொருத்த முடைத்தென்பதை நான் சொல்லவேண்டியதில்லை. சுருங்கச் சொல்லின் குறள் என்பது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய எவ்விதச் சிக்கலையும் போக்கிக்கொள்ள உபாயங்கூறும் ஓர் அகராதியாம். இலக்கிய மாண்பிலோ இணையற்றது.

 

"ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்
பாயிர்த்த னோடு பகர்ந்ததற்பின் - போயொருத்தர்
வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவர்
ஆய்க்கேட்க வீற்றிருக்கலாம். '


என்ற நத்தத்தனார் உண்மையையே உரைத்தார்.


இனி, அகச்சான்றாகச் சில குறட்பாக்களை ஆராய்வோம்.

 

எந்தப் பக்குவ நிலையி லிருப்போருக்கும் அவரவர்கள் ஆற்றலுக்கும், அறிவுத்திறனுக்கும் பக்குவத்திற்கும் ஏற்பப் பொருள் தந்து நிற்பதே உண்மை நூலாகும். மற்றவை தறி நூலாம். இவ்வுண்மையை, நாயனார் குறளிலே "நவில்தொறும் நூல் நயம்போலும்'' என்று நயம்படக் கூறும் ஆற்றலைக் கவனிக்க.


"தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்''.


“மகன் தந்தைக் காற்று முதவி யிவன் தந்தை
என்னோற்றான் கொல்லெனுஞ் சொல்.''


என்ற இரு குறட் பாக்களிலும், தந்தை மகற்கும், மகன் தந்தைக்கும் செய்யவேண்டிய ஒரு கடமை இதுதானெனக் குறளைப்போன்று வரையறுத்துக் கூறும் நூல் எப்பாஷையிலும் கிடையா தென்றே துணிந்து சொல்லலாம்.

 

ஆசிரியர் தம் நூலில் அதிகாரங்களை வகுத்திருக்கும் கூர்த்தமதி நலத்தைக் கண்டு இன்புறாதார் யாவர்? உதாரணமாக, செய்ந்நன்றி யறிதலின் பின் நடுவு நிலைமையை வைத்ததின் பொருத்தத்தைப் பார்ப்போம். ஒருவன் செய்த நன்றியை மறத்தவினுங் கேடு தருவது ஒன்றுமில்லை என்ற நாயனாரின் கட்டளையை மேற்கொண்ட ஒருவன், தனக்கு உபகாரம் செய்தான் பிழை செய்த காலத்து, நடுவு இகந்து, அவன் செய்த நன்றி காரணமாக அவனிடம் பரிவு காட்டுவது அறநெறிக்கு மாறாகும் என்பதை வற்புறுத்தவே, செய்ந்நன்றியின் பின் நடுவு நிலையை வைத்தார் என்பது புலப்படும். இருவாறே, அத்தியாயங்களின் வைப்பு முறையை ஆராய்ந்து பார்ப்பின் புலவரின் ஆற்றல் தோற்றும். தம் நூற்பொருளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனப் பகுத்துக்கொண்டு முதலில் அறத்துப் பாலில் அறம் இன்னதென்பதை,


"அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான் கும்
இழுக்கா இயன்றது அறம்”


என்ற குறளில் திறம்படக்கூறி அறத்தைக் கைப்பிடித் தொழுகுதலான் வரும் பயனைக் காட்சி வகை உபமானத்தால்

 

"அறத்தாறு இதுவென வேண்டா, சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை''


என்ற குறளில் விளக்கியிருக்கும் புலமையை நாம் எவ்வாறு வியப்போம்?

 

நாயனார் அறத்தை இல்லறம், துறவறம் என இருபகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, இவ்விரண்டு ஒழுக்கங்களினியல்பை,


"அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
பிறன் பழிப் பதில்லாயின் நன்று'


என்னும் ஒரே குறளில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கின்றார்.

 

பின்னர்ப் பொருட்பாலில், பொருட்பெருக்கத்திற்கு அரசனின் நன் னீதியே ஆதாரமென்றும், நன்னீதி கல்வியில்லாத வழியில்லென்றும், கல்லாமையைப்பற்றி,


"கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லா தாள் பெண் காமுற்றற்று"


என்று இன்பம் ததும்பச் சொல்லும் ஆசிரியரின் தெய்வப் புலமைதான் என்னே?

 

பொருள் தனைத் தேடும் முயற்சியில் மனிதனுக்குப் பல இடையூறுகள் வரக்கூடு மென்றும், அவைகளைக் கண்டு மனம் சாம்புதல் கூடாதென்றும், அவைகளை வெற்றி கொள்ளும் உபாயம் இதுதான் என்றும்,


"இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
அடுத்தூர்வது அஃதொப் பதில்"


என்ற குறளில் ஆணி அறைந்தாற்போன்று வள்ளுவனார் உறுதி கூறியிருக்கின்றார். அத்துட னமையாது, நமக்கு வருங் கேட்டினால் நன்மை பெரிதும் உண்டென்று வெகு நயமாக,


“கேட்டினும் உண்டோ ருறுதி; கிளைஞரை
நீட்டி யஎப்பதோர் கோல்''


என்ற செய்யுளிற் கூறுகிறார்: யந்திர யுக மாகிய இக்காலத்தில் உஷ்ணத்தை அளப்பதற்கு உஷ்ணமானியும்
(Thermometre) வாயுவை அளப்பதற்கு வாயு மானியும்; (Barometre) பாலை அளப்பதற்குத் திரமோனியும் (Lactometre) கண்டு பிடித்திருக்கிறார்கள்.

 

நம் நாயனார் உண்மை நட்பினரை அளந்தறிவதற்கு "கேடு" என்னும் அளவு கோலைக் கொடுத்திருக்கின்றார். இதிலிருந்து ஆசிரியர் எவ்வளவு தூரம் உள நூலைப் பயின்றிருக்கின்றார் என்பது புலனாம்.

ஒத்த உருவம், திருவம், குணமும் குலமும் உடைய ஒருவனும் ஒருத்தியம் வினைப்பயனால் தம்கான் ஒன்றுகூடி, இல்லறவாழ்க்கையை நடத்துவதற்கு அவர்களுள் இருக்கவேண்டியது அன்பு. கணவன் மனைவியர் மாட்டுக் காணப்படும் அன்பு காதல் எனப்படும். இது மிருக உணர்ச்சிபற்றி பெழமாயின் வெறுக்கத் தக்கதாம். நல்லுணர்ச்சிபற்றி யெழுமாயின் போற்றத் தக்கதாம். பின்னையதையே நம் புலவர் இங்கு எடுத்து விதர்தோதுகிறார். ஆங்கிலத்தும் இதைத் தெய்வத்தன்மை வாய்ந்த அன்பு என்கிறார்கள். (Love is divine) இத்தகைய அன்பை உணர்ந்து பின்பற்றுகின்றவர்கள் மிகச் சிலரே என்பதை,


"மலரினு மெல்லிது காமஞ் சிலாதன்
செவ்வி தலைப்படு வார்''


என்ற குறளில் குறிப்பிடுகிறார்.

 

காதல் என்பது ஒருவித நோய் என்றும், அது உண்டாகி, வளர்ந்து, முதிரும் பருவங்கள் இவையென்றும்,


"காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்''


என்ற குறட்பாவி லடக்கியிருக்கும் நயம் கருதற்பாலது.

 

உலகில், நோயை உண்டாக்கும் பொருள் ஒன்றாயும், அதைப் போக்கும் மருந்து வேறாயுமிருக்கக் காசலாகிய நோயையை உண்டாக்கும் பொருளும், அந்
நோயைப் போக்கும் மருந்தாகிய பொருளும் ஒன்றேயென்று,


''பிணிக்கு மருந்து பிறமன் அணிபிழை
தன்னோய்க கத்தானே மருந்து

 

இக்குறட் பாவில் வெளியிட்டிருக்கும் உண்மை பயிலுந்தொறும் விஞ்சிய மகிழ்வூட்டுகின்றது.

 

ஆனந்த போதினி – 1936 ௵ - ஜுலை ௴

 

No comments:

Post a Comment