Thursday, September 3, 2020

 தேசீயக் கல்வி என்றால் என்ன?

 

நம் தேசத்தில் சிறந்த ஞானமும் யோசனையும் ஊக்கமும் உடையமேலோர் பொதுவாக வழங்கி வருகிற இளைஞாது கல்வியில் மிகுதியும்அதிருப்தி கொண்டு, தேசத்திற்குப் போதுமான நன்மையைத் தரக் கூடியகல்லூரிகள் ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள். உதாரணமாக, கவி ரவீந்திரநாத தாகூர் வங்காளத்தில் சாந்திகேதன மென்னுமிடத்தில் ஓர் கலாசாலை ஸ்தாபித்திருக்கிறார். மகாத்மா காந்தி குஜாத் வித்யாபீடம் என்ற கலாசாலையை ஓங்கச் செய்வதில் கண்ணும் கருத்துமாயிருக்கிறார். தவிர, தேசத்திலுள்ள சகல பெரியோர்களுமே தற்காலக் கல்வி தேசத்திற்கு இசைந்ததல்ல வென்றும், தேசியக்கல்வி வேண்டு மென்றும் கோருகிறார்கள். இப்பொழுது உள்ள கல்வி எப்படி தேசீயமானதல்ல வென்றும் தேசியக்கல்வி என்றால் என்ன என்றும் இங்கு ஆராய்வோம்.

 

கல்வி என்பது சிறுவனைத் தக்க மனிகனாக்கும் சாதனம். ஒவ்வொரு சிறுவனையும் அவன் வயதான பிறகு அவனுடைய சமூகத்திற்கும் தேசத்திற்கும் எவ்வளவு பயன்படக் கூடுமோ அவ்வளவு பயன்படும் படி பயில்விப்பது தான் கல்வியின் கடமை. சிறுவர், மானிடர் சமூகத்தில் வாழ வேண்டியவர்; சமூகத்தாலேயே பலன்களை அடையவேண்டியவர்; சமூகத்தாலேயே உயர்வும் சமூகத்தாலேயே தாழ்வும் அடையும் இயற்கையுடையவர்; ஓர் தேசத்திலுள்ள ஒவ்வொரு வரும் தேசத்தின் பொது நலத்தைக் கருதி உழைந்து தேசத்தையும் கூட உயர்த்தும் மார்க்கங்களில் தங்கள் சுய நன்மையைத் தேடினால் தான் அத்தேசமும் ஓங்கும்; அதிலுள்ள ஒவ்வொருவரும் ஓங்குவர். ஆகவே சமூகத்தையும் தேசத்தையும் முன்னேறச் செய்யும் கல்வியே தக்க கல்வி,

 

அத்தகைய கல்வி தேசத்திற்குத் தோம் வேறுபடல் வேண்டும். ஒவ்வொரு தேசமும் ஒவ்வொரு வகையான பெருமையை விருத்தி செய்திருக்கிறது. ஒவ்வொரு தேசத்திலும் தொன்று தொட்டு சிற் சில சிலாக்கியங்கள் தோன்றி, அவை அதன் ஜனங்களால் கொண்டாடப்பட்டு அவர்களுடைய பெருமைக்கு காரணமாயிருக்கின்றன. உதாரணமாக, ஆங்கிலேயரின் விசேஷ மேமைகள், தைரியம், புதுமைதேடல், மதாபிமானம், தேசாபிமானம், சுதந்திரதாகம் முதலியன. இக்குணங்களே அவர்ருடைய பொதுப் பெருமைக்கு வேர்களயிருக்கிங்கன். ஆகவே, ங்கிலச் சிறுவர்களின் கல்வி அத்தேசீய குணங்களை வளரச்செய்லதாயிருக்க வேண்டும். அதேமாதிரி நம் புராதனம் பொருந்திய இந்தியாவில் என்ன விசேஷ சிலாக்கியங்கள் தோன்றி வளர்ந்திருக்கின்றனவோ, எவை நம்பூர்வ பெருமைக்கு ஊற்றாயிருந்தனவோ, எவை இனி வரும் மேன்மைக்கும் ஆதியாய் இருப்பனவோ அவற்றை நம் இளைஞர்களுக்குப் பயிற்று வித்தால்தான் நாம் கொடுக்கும் கல்வி நம்முடைய சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஏற்றதாகும். இதுவே தேசியக் கல்வியின் இலட்சணமாகும்.

ஓர் தேசத்தின் பெருமையைப் புகட்டக் கூடியவற்றில் அதன் இலக்கியமும் (Literature), சரித்திரமுமே முக்கியமானவை. இலக்கியத்தில் தான் ஓர் தேசத்தின் பலகால உயர்ந்த இலட்சியங்களும் யோசனைகளும், அதுபிரத்தியட்சத்திற் கொணரமுயன்ற உத்தம எண்ணங்களும் (Ideals) செறிந்து கிடக்கின்றன. சரித்திரத்தில் தான் ஓர் தேசத்தின் உன்னத இலட்சியங்களை நிறைவேற்ற முயன்ற பெரியோர்களின் செயல்கள் கூறப்படும். ஆகையால் இவ்விரண்டும் ஓர் தேசக்கல்வியின் முக்கிய அம்சங்களாய் இருக்க வேண்டும்.

 

நம் நாட்டின் தற்காலக் கல்வி முறையில் தேச இலக்கியமும் சரித்திரமும் திருப்தியான நிலையில் இல்லை. பாஷையில் ஆங்கிலமும் சரித்திரத்தில் ஐரோப்பிய சரித்திரமும் இப்பொழுதுள்ள கல்வி முறையில் பிரதானம் பெற்றிருக்கின்றன. தேசபாஷையிலும் தேசசரித்திரத்திலும் ஊக்கமும் அபிமானமும் போதுமான அளவு உண்டாகவில்லை. அப்படி விடாது, கல்வி அதிகார வர்க்கத்தினரும் உபாத்தியாயர்களும் மாணவர்களும் அவற்றுக்குப் பிரதானம் கொடுத்தால் தான் இப்பொழுது உள்ள கல்வி தேசீயக்கல்வியாக மாறக்கூடும்.

 

இலக்கியத்தைப் போதிப்பதில் சிறந்த யோசனை காட்டப்பட வேண்டும். இலக்கியத்தால் என்ன விசேஷங்கள் இளைஞருக்குப் புகட்டப்பட வேண்டுமோ அவ்விசேஷங்களைப் புகட்டக் கூடிய நூகள் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். அப்படியில்லாத ஓர் குறைக்கு உதாரணமாக, முதியோர்களால் மட்டும் ரசமனு பவிக்கக்கூடிய துறவறப் பாடங்கள் சிறுவர்களுக்குத் தற்காலம் அமிதமாகப் போதிக்கப்படுகின்றன. உலகத்தின் அனுபவங்களுக்குப் பேரவாக்கொண்ட வாலிபர்களுக்கு உலகத் துறவின் போதனை யாதுபயன் தரும்? உலக அனுபவங்களுக்கு ஓர் நேரிய வழி காட்டினாலல்லவா அவர்களுக்குப் பயன் உண்டாகும்?

 

சரித்திர போதனையிலும் மிகுந்த சீர்திருத்தம் அவசியம். சரித்திரம் என்பது அரசர்கள் சிமமாசனம் ஏறின் தேதியும் இறந் தேதியும் யுத்தங்கள் ஆரம்பித் முடிக்க தேதிகளும் உடன்படிக்கைகளுடைய அம்சங்களும் மட்டும் கொண்டதல்ல. இவை ஓர் அற்பமுக்கியமே யானவை. சரித்தி ரபோதனையின் விஷயம் தேசத்தின் பலகாலப் பெரியோர்களின் இலட்சியங்களும் செயல்களும் ஜனங்களின் நாகரீக அபிவிருத்தியுமாக இருத்தல் வேண்டும்.

 

ஆகவே, தேசீயக்கல்வி என்பது ஓர் தேசத்தின் விசேஷ பெருமையில் அதன் வாலிபர்களைப் பழக்குவதே. அத்தகைய கல்வியாக்க, தேசிய இலக்கியமும் தேசீய சரித்திரமும் பிரதான அம்சங்களாக்கப்பட்டுத் தக்க வழிகளில் போதிக்கப்படவேண்டும்.


சேலம் எஸ். சிவராமன், பி. ஏ., எல். டி.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - நவம்பர் ௴

 

No comments:

Post a Comment