Saturday, September 5, 2020

 

பொங்கலோ பொங்கல்!

(தி. முத்துராம கிருஷ்ணன்.)

ஒவ்வொரு வருடமும் தை மாதம் முதல் தேதி தமிழ்நாடெங்கும் சங்கராந்தி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதன் காரணத்தை நாம் இன்னும் பூர்ணமாக அறியாதவர்களாக காணப்படுகிறோம்.

இம் மண்ணுலகம் ஆண்டவனால் படைக்கப்பட்டது என்று நாம் எல்லோரும் நம்புகிறோம். ஆனால் விஞ்ஞான நூலின்படி வெகு காலத்துக்கு முன் ஏதோ ஒரு சமயத்தில் சூரியனிடமிருந்து ஒரு சிறுபாகம் விலகிப் பல தனி யுருவங்களாக பிரிந்தது என்றும், அவ்வுருவங்களே பூமியும் மற்ற கிரகங்களும் என்று தெரிய வருகிறது. ஆகவே பூமி சூரியனிட மிருந்து பிரிந்த காலத்தில் அதன் உள்ளும் புறமும் மிகவும் உயர்ந்த உஷ்ணநிலையில் இருந் திருக்கவேண்டும், வெளிப்பாகமானது உஷ்ண நிலையில்
குறைந்து கொண்டே வருகிறது. உள்பாகமானது உஷ்ணநிலையில் மிகவும் நிதானமாகவே குறைகிறது. ஏனென்றால், அதன் உள்புறத்திலுள்ள உஷ்ணம் வெளியேறி பின் பூமியிலிருந்து வெளிப்படுகிறது. ஆகவே, பூமியின் உஷ்ணம் இயற்கையல்ல. அது சூரியனிடமிருந்தே பெறப்பட்டது. இவ்வாறு கெல்லின் பிரபு ஒரு இடத்தில் பூமியின் வயதைப்பற்றி விவரிக்கையில் சொல்கிறார்.

ஆகவே, உலகில் சகல ஜீவகோடிகளும் உயிர் வாழ்வதற்கு. ஆதவன் அருள் அவசியம் வேண்டியிருக்கிறது. அதுபற்றியே அவனை தியானம் செய்யவேண்டியது நம் கடமையாகிறது.

சூரியபகவான் வருஷத்தில் இரண்டு யாத்திரை செல்கிறார். முதல் யாத்திரை வடக்கிலிருந்து 6 மாத காலம் பின் தெற்கிலிருந்து 6 மாத காலம். வடக்கிலிருந்து தெற்கே வருவதற்கு தக்ஷிணாயனம் என்றும் தெற்கிலிருந்து வடக்சே வருவதற்கு உத்திராயணம் என்றும் சொல்கிறார்கள். இப்பொழுது தைத்திங்களில் உத்திராயணம் ஆரம்பமாகிறது. திருவாதிரை முடிந்து, தை நீராடல் ஆரம்பமாகிறது. சூரியனிருக்கும் தூரத்துக்கும் இரண்டரை கோடி மைல்கள் தூரத்தில் ஆதிரை இருப்பதனால் தான் திருவாதிரையை முதலில் வைத்து திருப்பள்ளி யெழுச்சி நடக்கிறது. இப்பேர்ப்பட்ட புனிதமான தினத்தை ஆண்களும் பெண்களுமல்ல மற்றும் மிருகங்களும் கூட, அன்று ஆனந்தமாக சங்கராந்தியை கொண்டாடுகிறார்கள் என்றால் அதைப்பற்றி பின் என் சொல்வது?

தைப்பொங்க லென்றால் தமிழ்நாட்டில் ஒரே குதூகலம்தான். ஏனென்றால் பொங்கலுக்கு வெள்ளை அடியாத வீட்டை நாம் பார்க்க முடியாது. அது மாத்திரமல்ல; ஒவ்வொரு வீட்டிறுமுள்ள சகல சாமான்களையும் நீராடி கொணர்வார்கள். கடுகு போலுள்ள சாமானும் அன்று தப்ப முடியாது. நீராடியே தீரவேண்டும். வாய் பேச முடியாத அவைகளும் பொங்கலுக்காக சுத்தம் செய்து கொள்ளுகின்றன போலும். அவ்வளவு பரிசுத்தமாக இருக்கும் நம் குடிசைசன் அன்று சரஸ்வதி வெள்ளை கலையடுத்தி வெள்ளைப் பணி பூண்டு வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள். குட்டிச் சுவர் போல் கிடந்த குடிசையும் பொங்கலன்று காவி வஸ்திரங்களுடன் தாண்டவமாடுவாள் என்றால் பின் ஏன் அங்கு தர்மதேவதைகள் வராமலிருப்பார்கள். பொங்கல் வருகிறதென்றால் எல்லோருக்கும் ஆனந்தம்தான். அதனால் எத்தனை பேர் வெள்ளை யடித்து பிழைக்கிறார்கள். மிஞ்சினால் ஒரு மாதம் வெள்ளை யடிப்பார்கள். ஆனால், அடேயப்பா! அன்று என்ன பூரிப்பு. பொங்கலன்று ஏனைய தொழிலாளருடன் அவர்களும் அன்று சீட்டாட்டம் தான். ஆனால் ஒரே ஒருவர் பாடு திண்டாட்டம். அவர் பொங்கல் வருகிறதென்றால் உடனே மூட்டையைக் கட்டிக்கொண்டு டிக்கட் எடுக்க ஆரம்பித்து விடுகிறார். யார்? எங்கே? மூட்டை வாள் தான். சாக்ஷாத் சொர்க்கலோகத்துக்கு. பாவம்; அன்று அதன்பாடு அதோ கதிதான். ஆம், அதற்கு வேண்டியது தான். வருஷம் 365 நாட்களும் மனிதர்களை வேலை செய்யவிடாமல் தூணிலும், துரும்பிலும், பொந்திலும் இருந்துகொண்டு பண்ணின அட்டகாசத்திற்கு வெகுமதி பெறவேண்டியது அவர்கள் கடமை தானே.

வெள்ளை மாத்திரம் தானோ பட்டை சுத்தம் பண்ணுகிறது? அன்று அம்மணிகள் வீட்டை சாணத்தால் மெழுகி, கோலத்தால் விதவிதமான கோலங்கள்; அட அடா, பொட்டுக் கோலங்களென்ன கம்பிக் கோலங்களென்ன, காவிப் பட்டைகவென்ன! அதிலும் பெண்கள் ஒருவர்க்கு ஒருவர் போட்டி யிட்டுக்கொண்டு மிக மிக அழகாக வீட்டை வர்ணத்தில் தீட்டி விடுகிறார்கள். அன்று உதயன் ஒளி வீசுகிறது என்றால் மிகையாகாது.

அன்று பழைய மண்பானைகளெல்லாம் தெருவில் கூட்டம் கூட்டமாக சஞ்சரிப்பார்கள். மண்பானைகளை அன்று யாரும் மறைக்க முடியாது. ஏன்? அன்று விடியற்காலையிலே தோட்டிகளின் குதூகலத்தைச் சொல்லி முடியாது. அவர்கள் ஒரே கூப்பாடு போட ஆரம்பித்து விடுவார்கள். 'ஓ! அம்மாமாருங்கோ, பளையசட்டி பானைகளைப் போடுங்க. போடுங்கம்மா போடுங்க என்று தெரு தெருவாகச் சொல்லி நம்மைத் தூங்கவிட மாட்டார்கள். ஏனென்றால் மறுநாள் விடியற்காலையில் பல பலவென்று விடியும் பொழுது தெருவில் ஒரு அசுத்தம் கூட தென்படக் கூடாதல்லவா. ஆகவே அவர்கள் கடமையை நிறைவேற்றுவதில் அவ்வளவு ஆனந்தம் அவர்களுக்கு.

இவ்வளவு தான் பொங்கல் விசேஷமென்று எண்ணி விடாதீர்கள். இனிமேல் வரப்போகிறது தான் ரொம்ப ரொம்ப ருசிகரமான விஷயம். அதுதான்னா, தெரியவில்லையா? ஆண்டவனுக்கு படைக்கவேண்டிய அமுது. ஆம், அன்று கரும்புகளென்ன, மஞ்சள் குலைகளென்ன, பழங்களென்ன காய் கறிகவென்ன, வள்ளிக்கிழங்குக ளென்ன, பனங்கிழங்கு ளென்ன மற்றும் இவைகளுக்கு மத்தியில் நிறைகாழி அதாவது ஒரு படி நெல் அவைகள் மத்தியில் வீற்றிருக்கும். இவைகளே அன்று ஆண்டவன் உண்ணுகினர் போலும்.

வறுமை தாண்டவமாடும் இக்காலத்திலும், பொருளை உறுஞ்சுகின்ற இக் காலத்திலும்கூட நம் உற்சாகத்திற்கு அன்று குறைவேது? எங்கிருதாவது ஒரு கரும்பு, ஒரு மஞ்சள் குலை, ஒரு பனங்கிழக்கு மற்றும் தேங்காய் பழம் வந்து விடாதா என்ன. ஆண்டவனுக்குத்தானே. ஆகவே அவன்படி அளக்கத்தானே செய்யவேண்டும்.

இவ்வளவு வேலைப்பா டமைந்த குடிசையில் அன்று விடியற்காலையில் காகம் கறைகிறது. எங்கே என்றால் உச்சாணி ஓட்டின்மேல். 'கொலை' விடும் சப்தம் கேட்டதும் காகங்களுக்குண்டான உற்சாகத்திற்கு குறையேது. விருந்தாளிகளை ஒரே கூட்டமாக அழைத்துக்கொண்டு வீடு வீடாய்ச் செல்லுவார்கள். நம்மைப் போலல்ல, அன்று ஒரு காகம் தனியாக வருவதை நாம் பார்க்க முடியாது. எச்சிற்கையால் காக்காய் ஓட்டாதவன் கூட அன்று கா, கா என்று அழைத்துக்கொண்டு அன்ன மிடுவான்.

தைப் பொங்கல் நாள் கழிந்ததும் மாட்டுப்பொங்கல் வருகிறது. மாடுகளுக்குக்கூட அன்று ஓய்வு நாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் அன்றைய நாளின் பெருமையை. மாடுகளை, துணி மணிகளைக்கொண்டு அலங்காரம் செய்து கரும்பு கிழங்குகளை மாலைபோல் கட்டி விரட்டுவார்கள், அசல் 'சல்லிக்கட்டு’ மாதிரி. முற்காலத்தில் பணத்தைக் கட்டி விரட்டுவார்களாம். இப்பொழுது கட்ட பணமேது?

இவ்வளவு உற்சாகத்தினிடையே கரிநாள் பிறக்கிறது. ஆம், அன்று ஒருவரும் வேலையைத் தொடங்க மாட்டார்கள், பரிபூர்ணமான ஓய்வெடுத்துக் கொள்வார்கள்.

முழுமுதற் கடவுளான ஆதவனை இவ்வாறு வழிபடுவதையே சங்கராந்திப் பண்டிகை யென்றும், தைப் பொங்கலென்றும் அழைக்கிறோம்.

பொங்கலோ பொங்கல்! அருள் பொங்கு!! அமுது பொங்குக!!! இன்பப்பால் பொங்குக!!!

என்ன ‘பால் பொங்குச்சா, வயிறு வீங்குச்சா' என்று சாம் மறுநாள் குதூகல மாடுவதுதான் என்னே! வருஷத்தில் எந்த திருநாளிலாவது இவ்வாறு ஒருவருக்கொருவர் குதூகல மாடுவதும், ஆனந்தம் கொண்டாடுவதும் உண்டா! இல்லையே!

பொங்கலோ பொங்கல்!

இங்கு மங்கென்றும் இறை வனருளால்,

பொங்கல் நாள்பல பொலிந்தோங்குகவே!

 

ஆனந்த போதினி – 1942 ௵ - பிப்ரவரி ௴

 

No comments:

Post a Comment