Saturday, September 5, 2020

 

பெண்களின் சாமுத்திரிகம்

 

மக்களின் உறுப்பிலக்கணம் அல்லது சாமுத்திரிக சாஸ்திரம் மிகவும் புராதனமானது இங்கிலாந்து - அமெரிக்கா - ஜர்மனி முதலான நாடுகளில் இது மிகவும் அதிகமாய்ப் பரவியிருக்கிறது. இந்தச்சாஸ்திரத்துக்குச் சம்பந்தமான நூல்கள் - மாதப் பத்திரிகை முதலானவைகள் மேனாடுகளில் ஏராளமாக வெளியிடப்பட்டு வருகின்றன. மிகவும் சிறந்த சாஸ்திரங்களில் ஒன்று என்று மதிக்கத்தக்க சாமுத்திரிக சாஸ்திரத்தைக் கண்டு பிடித்த இந்தியப் பெரியோர்களின் அறிவு நுணுக்கத்தைப் புகழ்ந்து போற்றாத மேனாட்டு அறிஞர் ஒருவரும் இல்லை என்று கூறலாம். ஆனால் என்ன பயன்? இப்போது அந்தச் சாஸ்திரம் நமது நாட்டில் அநேகமாய் மறைந்து விட்டது என்று சொல்லுவது உயர்வு நவிற்சி அல்ல - உண்மையேயாகும். நாம் இப்போது அந்தச் சாஸ்திர உண்மைகளை நேரே தெரிந்து கொள்ளுவது சாத்திய மில்லை. மேனாட்டார் எழுதிய நூல்களின் வழியாகவே சாமுத்திரிக இலக்கணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய தூரவளதை நேரிட்டிருக்கிறது. மனிதனுடைய உடல் அமைப்பு – ரேகைகள் முதலியவைகளால் வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளைக் கண்டு தீர்மானித்துச் சாஸ்திரமாகச் செய்த முனிவர்கள் நூற்றுக் கணக்கானவர்கள். அவர்களுடைய பெயர்களுங் கூட இப்போது நமக்குத் தெரிவ துர்லபம். நிற்க, பெண்களுக்குச் சமபந்தப்பட்ட வரை உள்ள சாமுத்திரிக இலக்கணங்களை ஒருவாறு திரட்டி நமது ''ஆனந்தபோதினி" யில் வெளியிட எண்ணுகிறேன்.


பெண் முகம் முகம் - நெற்றி

 

1. அர்த்த சந்திர வடிவமைந்த நெற்றியோடு கூடிய பெண் பிறந்தவீட்டில் சம்பத்தும், கல்வியும், பொருளும் நிறைந்து விளங்கும். அவளுக்கு மக்கட் பேறு உண்டாகும். உடன் பிறந்த சகோதரர்கள் இருப்பார்கள். இவள் பிறந்தது முதல் இறக்கும் வரை, வீட்டில் உள்ள எல்லாரும் எல்லா நலன்களையும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

 

2. விசாலமான நெற்றியோடு விளங்கும் பெண் தீர்க்காயுள் - அறிவுச்சிறப்பு - பேச்சு வன்மை -பரோபகாரம் முதலான சற்குணபொருந்தி யிருப்பாள்.

 

3. நெற்றியிலும் முகத்திலும் எள்ளுக்கு நிகரான கரிய மச்சங்கள் (பிறவி மச்சங்கள் அல்ல) பொருந்தியுள்ள பெண் மக்கட் செல்வத்தையும் பொருட் செல்வத்தையும் படைத்திருப்பாள்.

 

4. நெற்றியில் துண்டு விழாத ஐந்து பேரான குறுக்கு ரேகைகள் உள்ள பெண் நூறு ஆண்டுகள் வாழ்வாள். இத்தகைய ரேகைகள் நான்கு இருந்தால் எண்பது ஆண்டுகள் வாழ்வாள். நெற்றியில் சுத்தமாக ரேகைகளே இல்லாத பெண் ஏற்றெட்டு ஆண்டுகள் வாழ்வான்.

 

5. நெற்றியில் எந்த விதமான ரேகைகளும் இல்லாமல், சில நரம்புகள் மாத்திரம் தடித்தது போல் காணப்படும் பெண் ராஜ மகிஷிக்கு நிகரான ஆயுளையும் செல்வத்தையும் நுகர்வதோடு தயை - தாட்சணியம் - பொறுமை முதலிய நற்குணங்கள் பொருந்தப் பெற்று உண்மையே பேசுவாள். தகைய பெண்மணியைத் திருமணஞ் செய்த கணவன் அஷ்ட ஐசுவரியங் களையும் அறுபவிப்பான்.

 

6. நெற்றி குறுகியும், மத்தியபாகம் பள்ளமாகவும் உள்ள பெண்ணினிடம் போக சுகமும், தெய்வ பக்தியும் காண்பது அரிது. இவள் அநுபவிக்கத்தக்க இன்பங்கள் எல்லாம் நாற்பது ஆண்டுகள் நிறைவதற்கு முன்பே பூர்த்தியாகி விடும்.

 

7. துண்டு துண்டான - கத்தரிப்பு ரேகைகள் பொருந்திய நெற்றி யோடு கூடிய பெண் துன்பத்தையும் வறுமையையும் அனுபவிப்பாள்.

 

8. தப்புச்சுழி (இடச்சுழி) நெற்றியில் பொருந்தப் பெற்ற பெண் விதவை ஆவாள். நெற்றி நடுவில் சரியான சுழி (வலச்சுழி) இருந்தால் அந்தப் பெண் கலியாணமான சில நாட்களிலேயே விட்டு விடவேண்டி நேரிடும்.

 

9. சதைப் பற்றோடு கூடி, கூந்தலுக்கும் (வகுப்பு எடுக்கும் இடத்துக்கும்) கண் புருவங்களுக்கும் நடுவிடம் மூன்று விரற்கிடை அகலம் உள்ள நெற்றியோடு விளக்கும் பெண், பொன்னும் பொருளும் வாகனங்களும் சிறக்கப் பெற்று உத்தியோக லாபத்தையும் பெறுவான். நிற்க, இயளுடைய குடும்பமும் ஏக குடும்பமாகவே இருக்கும். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உண்மை பேசுபவர்களாகவும், ஒழுக்கத்திற் சிறந்தவர்களாகவும் விளங்குவார்கள்.

 

10. குறுகிய நெற்றியுள்ள (வகுப்பு எடுக்கும் இடத்துக்கும் புருவங்களுக்கும் நடுவிடம்) பெண்ணின் கணவன் எப்பொழுதும் அபாயகரமான தொல்லைகளில் மாட்டிக் கொண்டிருப்பான். அன்பு அற்றவர்களா யிருப்பார்கள். தெய்வ பக்தி சூனியம்.

 

11. பூரண சந்திரனுக்கு நிகரான முகத்தோடு விளங்கும் பெண் எல்லாராலும் போற்றிப் புகழப் படுவாள். ராஜமகிஷிக்குச் சமமான இன்பங்களை நுகர்ந்து கொண்டிருப்பாள்.

 

12. செந்தாமரை மலருக்கு ஒப்பான நிறம் பொருந்திய முகத்தோடு விளங்ம் பெண் எல்லாவித போக போக்கியங்களையும் அனுபவிப்பது மாத்திரம் அல்லாமல் வேறு விதமான வருவாயுக்கூடப் பொருந்தி வாழ்வாள்.

 

13. வட்டமாகவுள்ள முகத்தோடு கூடிய பெண், புகழ், பொருள், கல்விகளைப் பொருந்தியிருப்பதோடு உத்தியோகத்தையுங் கூட வகிப்பாள்.

 

14. மிகவும் அகன்ற முசத்தோடு கூடிய பெண்ணுக்கு இன்ப துன்பங்கள் இரண்டும் சமமாக இருக்கும். " கீருஹ லக்ஷிமி "

 

15. மிக மிக அழகோடு மலர்ந்து விளங்கும் முகம் பொருந்திய பெண் சகல சம்பத்தோடு பிறந்தது முதல் இறக்கும் வரை மகத்தான சுகங்களை நுகர்ந்து கொண்டிருப்பாள். அவளிடம் பரோபகாரம், தரும சிந்தனைமுதலான நற்குணங்கள் தாண்டவ மாடிக்கொண்டிருக்கும்.

 

16. சதைப் பற்றோடு கூடி நல்ல குண்டு முகம் பொருந்தி விளங்கும் பெண் சகல சம்பத்தோடு அநேக ஏவலாளர்களையும், பசுக்களையும், குதிரைகளையும் உடையவளா பிருப்பாள்.

 

17. முகம் கரிய நிறமாக இருந்து, ஆண் தன்மைக் கூறுகள் மைந்துள்ள பெண் குரூரத்தன்மை வாய்ந்தவளாகவும், மற்றவர்களின் மீது அதிகாரம் செலுத்தும் தன் ம வாய்ந்தவ ளாகவும் இருப்பான்.

 

18. முகத்தில் ரத்தம் வற்றி தேஜஸ் குறைந்திருக்கும் பெண் துன்பங்களை அனுபவிவிப்பாள். எல்லா விஷயங்களிலும் அவளுக்கு அதிருப்தி தோன்றிக் கொண்டே இருக்கும்.

 

19. நீளமான முகங்கொண்ட பெண்ணுக்கு போக சுகம் குறைவாக இருக்கும். அதுவும் நாற்பது வயதுக்குள்ளேயே முடிந்து விடும்.

 

20. ரேகைகளும் மேடுபள்ளகளும் இன்றிச் சுத்தமாகவுள்ள நெற்றியோடு கூடிய பெண் சிறந்த இன்பங்கள் அநுபவிப்பாள். முகம் எவ்வளவு அழகாயிருக்கிறதோ அவ்வளவு இன்பத்தை அந்தப் பெண் அநுபவிப்பாள்.

 

21. முகத்தில் சுழி இருந்த பெண் விதவை யாவாள்.

 

கூந்தல்: -

 

1. மோதிரங்களைப்போல் சுருண்டும், சர்ப்பவடிவான அழகோடும், கருமையாயும், நீண்டும் உள்ள கூந்தலையடைய பெண் எல்லாச் செல்வமும்பெற்று ராஜபத்தினிக்குச் சமமான போக போக்கியங்களை அநுபவிப்பாள்.

 

2. வண்டினுடைய இறகுகளுக்கு ஒப்பான கரிய கூந்தலையுடையபெண்மணி அறிவு ஆற்றல்களோடு விளங்குவது மாத்திரம் அல்லாமல், கல்விச் செல்வம், பொருட் செல்வம் முதலிய சகல சம்பத்தும் வாய்ந்து வாழ்வாள்.

 

3. மெல்லிய கூந்தல் பொருந்தி யிருக்கும் பெண் சகல செல்வமும்பெற்று இன்ப மயமான வாழ்க்கை நடத்துவாள்.

 

4. ஒருபெண் எவ்வளவு அழகான கூந்தலைப் பெற்றிருக்கிறாளோஅவ்வளவு சிறப்பான இன்பத்தை அனுபவிப்பாள்.

 

5. சில பெண்களின் கூந்தல் தாம்பிர நிறமாயிருக்கும். அத்தகையபெண்கள் தாங்கள் நினைத்ததைப் பிடிவாதமாகச் சாதித்துக் கொள்ளுவர்.

 

6. பெண்களுக்குக் கூந்தல் மிகவும் நீளமாகவும், மிகவும் குறுகலாகவும்இருக்கக் கூடாது என்று சாமுத்திரிக சாஸ்திர அறிஞர் கூறுகின்றனர்.

 

7. கூந்தல் தாராளமா யிருந்து, செவிகள் வரை வியாபித்திருக்கிறபெண் கல்வியறிவு'படைத்தவளாக இருப்பாள். ஆனால் முன் கோபம் அதிகம்.


மூக்கு: -

 

1. மூக்கு நீளமாயிருக்கிற பெண், நிறைந்த வயதையும், புகழையும், செல்வத்தையும் பெற்று வாழ்வாள்.

 

2. மூக்குச் சிறுத்து, அமிழ்ந்திருக்கும் (சட்டி மூக்கு) பெண் வறுமையை அநுபவிப்பாள்.

 

3. மூக்கு மெல்லிதாகவும், மூக்குத் துவாரங்கள் சிறுத்தும் இருக்கும்பெண் பதிவிரதை ஆவாள். தெய்வ பயத்தோடு நடந்து கொள்ளுவாள். மிகுந்த செல்வத்தில் வளர்வாள்.

 

4. இடது பக்கத்து முக்குத் துவாரத்துக்குச் சமீபத்தில் கரிய மச்சம்பொருந்திய பெண்மணி மிகுதியான நிலங்களையும், வீடுகளையும் உடையவளாயிருப்பாள்.

 

5. மூக்கு வட்டமாகவும், மெல்லிதாகவும், நாசித்துவாரங்கள் இரண்டும் சமமாகவும் பொருந்தியிருக்கும் பெண் சௌபாக்கியவதியாக விளங்குவான்.

 

6. மூக்கு சரிந்திருந்தாலும், சிறிதாயிருந்தாலும், துவாரங்கள் இரண்நம் பெரியனவகளா யிருக்கும் பெண் கணவனுடைய அன்புக்கு உரியவனாகமாட்டாள், ஸ்நேகம் இருக்காது. அவர்களுடைய வீட்டில் எப்பொழுதும்நோயாளிகள் இருப்பார்கள்.

 

7. கிளியினுடைய மூக்கைப் போன்றிருக்கும் பெண் மணி ராஜ மகிஷிக்கு நிகரான பாக்கியமும் ஒப்பற்ற கல்வித்திறமையும் வாய்ந்து நாடுமுழுவதிலும் அபூர்வமான புகழை அடைவாள். எப்போதும் சுதந்தரத்தையே விரும்பியிருப்பாள்.

 

8. கிளிமூக்கு வாய்ந்த பெண்மணி வறிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், இருபது வயது நிறைந்த அளவிலேயே சகல சம்பத்தோடுங் கூடிவாழ்வாள். கீருஹலக்ஷ்மி.

 

 

 

 

கண்கள்: -

 

1. தாமரை இதழ்களுக்கு நிகராகிய கண்களையும் யுடைய பெண் எல்லாச்செல்வங்களையும் அனுபவிப்பாள்.

 

2. அன்னைப் பார்வை பொருந்தி யிருக்கும் பெண் பாவி. கணவனைத்தூற்றுவாள்.

 

3. கண்ணில் கரிய மச்சங்களைப் பொருந்திய பெண்மணி பாக்கியவதி.

 

4. கண்களில் வெள்ளை விழிகளின் மீது இரத்த நாடிகளை விசேஷமாகப் பொருந்திய பெண் மகாராணிக்கு ஒப்பான எல்லாச் செல்வங்களை யும்அரபவிப்பாள்,

 

5. இலைப்பச்சை நிறமாவது, இளங்கோதுமை நிறமாவது உள்ள கண்களையுடைய பெண் தீய ஒழுக்கம் வாய்ந்தவளாக இருப்பாள்.

 

6. பூனைக்கண்களைப் போன்ற நேத்திரங்களையுடைய பெண் முன்கோபம் உ எவளாக இருப்பாள்.

 

7. தேன் நிறக் கண்களையுடைய பெண்மணி மிகுந்த பாக்கியவதியாயிருப்பாள்.

 

8. உருண்டை வடிவான கண்களையுடைய பெண் ராஜமகிஷிக்கு நிகரான போக பாக்கியங்களை அனுபவிப்பாள்.

 

9. உயிர் அற்றுப்போய் களை கெட்ட கண்களையுடைய பெண் ஜாதிக்கட்டுப் பாட்டினின்றும் நீங்குவான்.

 

10. கண்களின் உட்புறம் செவந்தும், வெள்ளை விழி பசுவின் பாலைப்போன்று வெண்மையாகவும், கருவிழிகள் மிகுந்த கருமையாகவும், கண்ணிமைகளில் கரிய மயிர்களும் பொருந்திய பெண்கள் கல்வி- செல்வம் - புகழ்கனைப் பொருந்தி வாழ்வார்கள்.

 

11. ஒளித்தும்பும் மெல்லிய கண்களையுடைய பெண் ரத்தினாபரணங்களைத் தரிப்பாள்.

 

பற்கள்: -

 

1. பற்கள் பளிங்கைப்போல் வெண்மையாகப் பொருந்தப் பெற்றபென்மணி நீண்ட ஆயுளும் செல்வமும் வாய்ந்து புகழைத் தேடுவாள்.

 

2. பற்கள் வரிசை தப்பிக் கீழ்மேலாகப் பொருந்தப் பெற்ற பெண்கள் துன்பம் அநுபவிப்பார்கள். பிறமதத்தைத் தழுவக் கூடியவர்களா யிருப்பார்கள். ஆனால் மற்ற அங்கலக்ஷணங்கள் சரியாகப் பொருந்தியிருந்தால் மேலே கூறிய குற்றங்கள் நேராதிருக்கலாம்.

 

3. பற்கள் பெரியவைகளாக இருக்கும் பெண்களுக்குச் செல்வம், கல்வி முதலியவைகள் வாய்க்கமாட்டா.

 

4. மல்லிகை அரும்புகளுக்கு நிகரான பற்கள் வாய்ந்த நாரீமணி, செல்வம் உள்ள கணவனை மணந்து எல்லாச் செல்வங்களையும் பெற்றுமிகுந்த இன்பமயமான வாழ்க்கையை நடத்துவாள்.

 

5. பசுவின் பாலுக்கு ஒப்பான வெள்ளிய பல் வரிசை சமமாக வாய்ந்தபெண் அஷ்ட ஐசுவரியங்களையும் அநுபவிப்பாள்.

 

6. பற்கள் மென்மையாய் விளங்கும் பெண்மணிக்குப் பூமி, வீடுகள், பசுக்கள், வேலைக்காரர்கள் முதலான சம்பத்துக்கள் நிறைந்திருக்கும். நோயற்ற வாழ்வைப் பெற்று, கல்வியும் புகழும் பொருந்தி வாழ்வாள்.  

 

7. வெண்மை நிறம் வாய்ந்து ஒளி வீசும் பற்களை யுடைய பெண் பதிவிரதையாகிக் கணவனுடைய காதலுக்குப் பாத்திரம் ஆவாள். பிறருக்கு உபகாரம் செய்யும் விஷயங்களில் ஊக்கமும் உற்சாகமும் கொண்டு விளங்குவாள்.

 

8. சத்தியைப் போல் பதம் பொருந்தியிருக்கும் பர்களை யுடையபெண்ணுக்கு குடும்ப சுகம் அதிகம். இன்பம் தரும் மக்கள் உண்டாவார்கள். நல்ல ஆரோக்கியம் இருக்கும். சகல சம்பத்தும் உண்டாகும்.

 

9. பதம் இல்லாத பற்களையுடைய பெண் மலடியாவாள். தேய்ந்தபற்களையுடைய பெண் துன்பங்களை அதுபவித்துக்கொண்டிருப்பாள்.

 

10. ஒருபெண் எவ்வளவு அழ நான பற்களை வாய்ந்திருக்கிறாளோ அவ்வளவு சுகத்தை அநுபவிப்பாள்.

 

11. பல் மேல் பல் - அடுக்குப் பல் வாய்ந்த பந்த பெண் பாலியத்திலேயே தாயை இழப்பாள்.

 

(லி. ரா.)

 

ஆனந்த போதினி – 1930 ௵ -

மார்ச்சு, ஏப்ரல், மே ௴

 

 

No comments:

Post a Comment