Thursday, September 3, 2020

 

நவராத்திரி – சரசுவதி வணக்கம்

க. சிதம்பரம் பிள்ளை

 

நவபங்கி

நவபங்கி யாவது, ஒரு செய்யுள் ஒன்பது செய்யுளாகப் பிரிந்து, அவ்வச் செய்யுள்களின் இலக்கண அமைதி பொருந்த நிற்பது.

ஆசிரிய விருத்தம்


அருள்புரி வாய்கரு ணாகரி யேதிரு
      வாரணி யே சேரும்
அணியிழை யேதே மொழியே சிலையென
      வழகிய திருநுதலே
ஒருபிர மாமகி ழோவிய மேவரு
      மோரன மேதாரும்
உயர்தரு வேதா ரகமே தலமிசை
      யுழலுத றகையரசே
திருமக ளார்மரு மாமக ளேயரு
      சீரமு தேநேருக்
திவளொளி யேகோ மளமே நிலவிய
      செழுமலர் நிறைதிருவே
கருவணு காவகை நாயகி யேகுரு
      காரணி யேகாருங்
கலைமக ளேபா ரதியே கலைநல
      மெழுதுச ரசுவதியே.


நவபங்கியைப் பிரிப்பதற் கமைப்பு: -


அருள்புரி வாய்கரு ணாகரியே         – திரு             -      ஆரணியே
சேரும் அணியிழை யேதே மொழியே  - சிலையென      -      அழகிய திருநுதலே
ஒருபிர மாமகி ழோவியமே           - வரும்           -      ஓரனமே
தாரும் உயர் தருவேதா ரகமே         - தலமிசை        -      உழலுத றகையரசே
திருமக ளார்மரு மாமகளே            - அரு             -      சீரமுதே
கேருந் தி வெளொளி யேகோமளமே   - நிலவிய         -    செழுமலர் நிறைதிருவே
கருவணு காவகை நாயகியே          - குரு            -      காரணியே
காருங் கலைமகளே-பாரதியே          — கலைநலம்       -      எழுதுச ரசுவதியே.

 

 

 

நவபங்கியின் பிரிவு: -


1. சிந்தடிவஞ்சி விருத்தம்


அருள்புரி வாய்கரு ணாகரியே
ஒருபிர மாமகி ழோவியமே
திருமக ளார்மரு மாமகளே
கருவணு காவகை நாயகியே.


2. கலி விருத்தம்


சேரும் அணியிழை யேதே மொழியே
தாரும் உயர்தரு வேதா ரகமே
நேருந் திவளொளி யேகோ மளமே
காருங் கலைமக ளேபா ரதியே.


3. குறளடி வஞ்சித்துறை


திருவா ரணியே
வருமோ ரனமே
அருசீ ரமுதே
குருகா ரணியே.


4. குறளடி வஞ்சி


அழகிய திருநுதலே
உழலுத றகையரசே
செழுமலர் நிறைதிருவே
எழுதுச ரசுவதியே.


5. சிந்தடி வஞ்சி விருத்தம்


சிலையென அழகிய திருநுதலே
தலமிசை உழலுத றகையரசே
நிலவிய செழுமலர் நிறைதிருவே
கலைநலம் எழுதுச ரசுவதியே.


6. கட்டளைக் கலித்துறை


அருள்புரி வாய்கரு ணாகரி யே திரு வாரணியே
ஒருபிர மாமகி ழோவிய மேவரு மோரனமே

திருமக ளார்மரு மாமக ளேயரு சீரமுதே
கருவணு காவகை நாயகி யேகுரு காரணியே.


7. கொச்சகக் கலிப்பா


ஆரணியே சேரும் அணியிழையே தேமொழியே
ஓரனமே தாரும் உயர் தருவே தாரகமே
சீரமுதே நேருந் திவளொளியே கோமளமே
காரணியே காருங் கலைமகளே பாரதியே.


8. சந்த விருத்தம்


சேரும் அணியிழை யேதே மொழியே
சிலையென அழகிய திருநுதலே
தாரும் உயர்தரு வேதா ரகமே
தலமிசை உழலுத றகையரசே
நேருந் திவளொளி யேகோ மளமே
நிலவிய செழுமலர் நிறைதிருவே
காருங் கலைமக ளேபா ரதியே
கலைநல மெழுதுச ரசுவதியே.


9. நேரிசை வெண்பா


ஆரணியே சேரும் அணியிழையே தேமொழியே
காரணியே காருங் கலைமகளே- பாரதியே
சீரமுதே நேருந் திவளொளியே கோமளமே

ஆனந்த போதினி – 1944 ௵ - செப்டம்பர் ௴

 

No comments:

Post a Comment