Tuesday, September 1, 2020

 சேக்கிழாரும் இயற்கையும்

 

சேக்கிழார் இயற்கையையும், அதனது எழிலையும் எவ்வாறு உலகவியல்புடன் இணைத் திருக்கின்றா ரென்பதைக் குறித்து கோக்குவாம்.

 

விண்ணுலகினின்றும் மண்ணுலகிற் கனுப்பப்பட்ட ஆலால சுந்தரனாராகிய சுந்தரமூர்த்திநாயனார் பூவுலக கில் வந்து தோன்றினார். நரசிங்கமுனையர் என்பவரால் வளர்க்கப்பட்டு ஒவ்வொரு பருவமாகக் கடந்து மணவினைப் பருவத்தையடைந்தார். மணவினைக்குரிய சடங்குகள் யாவும் முடித்து மங்கல நாண்புனையும் சமயத்தில், கடவுள், தான் வாக்களித்தபடி அங்கு வந்து வழக்காடி சுந்தரரை ஆட்கொண்டனர். பின் நாவலூரர் ஒவ்வொரு சிவதலங்களாக தரிசித்துக்கொண்டு திருவாரூரை யடைந்தனர். அங்கு சிவபிரான், "நாமுன்பு தொண்டு கொண்ட வேள்வியிலன்று நீ கொண்ட கோல மென்றும் புனைந்து நின்வேட்கை தீர வாழி மண்மேல் விளையாடுவாய்'' என்றருளிச் செய்தார். அவர் கட்டளைக்கிணங்க ஆரூரர் தினமும் திருவாரூசரைச் சென்று தரிசித்து வந்தார். நிற்க.

 

கைலயங்கிரியில் ஆலாலசுந்தரரைக் கண்டு தங்கள் மனதை யவர்பால் விடுத்து மயங்கி நின்ற கமலினி, அநிந்திதை என்னும் மங்கையர் இருவருள் முற்கூறியவள், அத்திருவாரூ திருக்கருள் கணிகையர் குலத்தில் வந்து அவ தரித் தனள். அவள் பெயர் பரவை. அரனிடத்தில் மாறா அன்பு கொண்டொழுகி வந்தனள். ஒருநாள் மாலை புற்றிடங்கொண்ட பெருமானைத் தரிசிக்கவெண்ணி, பசும் பொற்றட்டில், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம் முதலிய யாவுமெடுத்து, தாதிகள் புடைசூழ தாரகை நடுவண் தண்மதியே யென்னும் வண்ணம் இடை துவள, அன்னநடை பயின்று அழகாக வந்து கொண்டிருந்தாள்.

 

அச் சமயம் நமது ஆலாலசுந்தரரும் அடியார் புடை சூழ கோயிலை நண்ணினார்.

 

மங்காவெழில் மங்கையை நந்தா வெழில் நம்பி கண்டார்; காதல் கொண்டார். மங்கையும் மன்னனைக் கண்டாள்; மையல் கொண்டாள். பின், பருகிய நோக்கெனும் பாசத்தாற் பிணிப்புண்ட இருவரும் உரையாடாக் குறையொன்றுடன் தத்த மிருப்பிடமேகினர்.

 

அம் மங்கைக்கும் மன்னனுக்கும் ஒன்றிலும் மனம் நாடவில்லை. நோமும் சென்றது. சூரியனும் இவர்கள் விரகதாபத்தைக் காணச் சகியாதவன் போல் மேற்றிசையில் மூழ்கினன். இருளாகிய மங்கையும் தனது குளிர்ந்த கரங்களால் மாந்தர்களின் கண்களைப் புதைக்க ஆரம்பித்தனள். சிறிது நோஞ் சென்றதும் நீலவானில் தண்மதி அழகாக வெழுந்தது. இருளாகிய வரக்கியை இருந்த விடந்தெரியாமல் அடித்துத் துரத்திக்கொண்டு வருந் தோற்நத்தைச் சேக்கிழார்,

 

''மறுவில் சிந்தைவன் றொண்டர் வருந்தினால்

இறு மருங்குலார்க் கியார் பிழைப் பாரென்று

நறு மலர்க்கங்கு னங்கைமுன் கொண்டபுன்

முறுவலென்ன முகிழ்த்தது வெண்ணிலா."


என்று கூறி வருணிக்கிறார்.

 

நளிர் சங்குலாகிய நங்கை தனது பற்களாகிய வெண்ணிலவை வெளியிற் காட்டி நம்பியாரூரரைப் பார்த்து,

 

''வன்றொண்டா! நீ யாண்டு மரனிடத்து மாறாதவன்பு கொண்டவன். உலகத்தின் தன்மை யித்தகையதென்றும், பெண்கள் இத்தன்மையவர்களென் ஐம் நன்குணர்ந்தவன். நல்ல அறிவாளி. ஞான நூற்கள் யாவும் கற்றுக்கரை கண்டவன். அதுவு மல்லாது கடவுளே உன்னைத் தனக்குத் தோழனாக ஆக்கிக்கொண்ட பெருமையை யுடையவன். அத்தகையோனாகிய நீயே துவளு மிடையையுடைய அப்பரவையைக்கண்டு அவளது அழகில் மூழ்கி, அவளைப் பார்த்து,


"கற்பகத்தின் பூங்கொம்போ

      காமன்றன் பெருவாழ்வோ

பொற்புடைய புண்ணியத்தின்

புண்ணியமோ புயல்சுமந்து

விற்குவளை பவள மலர்

      மதிபூத்த விரைக்கொடியோ

அற்புதமோ. . . . . . . . .”


என்று அதிசயித்தாயே! ஞானத்துயர்ந்த வுனக்கே அம் முலைமாதை வெல்ல முடியவில்லையாயின் சாதாரண மாந்தர்களைப்பற்றி யென்னென் றியம்புவது!
அவர்களுக்கு பெண்ணாசையை ஒழிக்க வியலுமோ? ஒருபொழுதும் முடியாது,'' எனக் கூறி நகைப்பது போன்றிருக்கின்றதாம்.

 

இக் கவியில் சேக்கிழார் நம்பியாரூரருக்குப் பரவைபாலிருந்த அன்பின் மிகுதியையும் நன்கு விளங்கியுள்ளார்.

 

ஒரு பொருள் ஒருவனினுள்ளத்தைக் கவருமாயின், அஃதை யெவ்விதத்திலேனு மடைய வேண்டுமென்றுமோ ரெண் ம் அவனுக் குதித்தலியல்பே. அப்பொருள் ஒரு பெண்ணாயின், அதிலும் வானோரிலும் வளப்பு மிக்க வோர் வனிதையாயின் தன்னுயிரைக் கொடுத்தேனும் அதையடைய விரும்புவனன்றோ! அப்பொழுது பிறர் ஏளனத்தைக் கவனியான், ஊணுறக் கங்கொள்ளான்; மெய்வருத்தம் பாரான், கருமத்திலேயே கண்ணாயிருப்பான். எத்துணைபேர் என்ன கூறினும் தன் மனதைத் தளரவிடான்.

இவ் வுண்மையையே நமது சேக்கிழார் இயற்கை வாயிலாக வெளிப்படுத்தி யுள்ளார். உலக வியல்புக்கும் இயற்கைக்கு மொற்றுமை யேற்படுத்தியுள்ளார். இப் பாட்டிலேயே, எத்தகைய முத்தி ஞானத் துயர்ந்தவர்களாயி பெண்களின் வலையினின்றும் மாற முடியாதென்னு முண்மையும் இனிது விளக்கி யுள்ளார்.


''மறுவில் சிந்தை வன்றொண்டர்.''


என்று கூறி யிருப்பதினின்றும் அஃது நன்கு விளங்கும்.

கவிக்கரசாகிய கம்பரும் பெண்ணாசையைப்பற்றி,


''ஊறுசேர் ஞானத்துயர்ந்தவ ராயினும்

வீறு சேர் முலைமாதரை வெல்வரோ.''

என்றும்,


“ஆண்பாலாரே பெண்பாலாரோ

டடைவம்மா.''


என்றும் கூறியுள்ளார். எட்டாந் திருமுறை இயற்றிய வாதவூரடிகளும் தில்லையில் வைத்தாளிச் செய்த போற்றித் திருவகவலில், மேலும்,


“கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில்

ஒருங்கிய சாயல் நெருங்கியுண் மதர்த்துக்

கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத்

தெய்த்திடை வருந்த எழுந்து புடைபரந்

தீர்க்கிடை போகா இளமுலை மாதர்தங்

கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும்.''


என்று கூறுகிறார். பெண்களின் பார்வையை “கூர்த்த நயனக்கொள்ளை'' என்று உண்ணடுங்கிக் கூறுகிறார்.


இனி அடுத்த செய்யுளையுஞ் சிறிது நோக்குவாம்.

 

நீலவானில் கோலமாக வெழுந்த வெண்ணிலா மேலெழுந்து கொண்டே வருகிறது. நீர் நிலைகள் யாவும் நன்கு ஒளிபெற்று விளங்குகின்றன. அக்பீர் நிலைகளிலுள்ள ஆம்பல்கள் தங்களது காதலனாகிய தண்மதியைக்கண்டு இன்ப மிகுதியால் நகுவன போன்றலர்கின்றன. பகலெலாம் தண்ணீருள் மூழ்கியிருந்து மதியின் வரவால் வெளிக்கிளம்பி யலர்ந்த கைரவத்தை,


"அரந்தை செய்வார்க் கழுங்கித் தம்மாருயிர்

வரன்கை தீண்ட மலர்குல மாதர்போற்

பரந்த வெம்பகற் கொல்கிப் பனிமதிக்

கரங்க டீண்ட வலர்ந்த கயிரவம்.''

என்று செம்மையுறச் செப்புகின்றார்.

 

ஈண்டு கவி 'கற்பு'' என்பது யாதென்றும், கற்புடை மங்கையரினியல்பும், மனப்பான்மையும் யாதென்றும் இனிது விளக்குகின்றார்.

 

சூரிய வெப்பம் காங்காது பகற்பொழுதெலாம், தண்ணீருள் மூழ்கிக்கிடந்து, தண் மதியின் நல்வரவால் அலர்ந்த ஆம்பல்களை ஓர் கற்புடைய மங்கைக்கு ஒப்பிட்டு, ''அடந்தை செய்வார்க் கழுங்கித் தம்மாருயிர் வரன்கை தீண்ட மலர்குல மாதர்போல்'' என்று கூறியுள்ளார்.

ஓர் கற்புடைய மங்கை தனது இன்னுயிர்க் காதலனை யல்லாது பிறிதொரு ஆடவனைக் காணவோ, அன்றி அவனது மெய் தன் மெய்யிற் றீண்டவோ கோடின் சொல்லொணாத் துயரடைவான். அப்பொழுது அவளைப் பெண்ணிற்குரிய குணங்களாகிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை தோன்றி வாட்டும். நிற்க வாற்றா தவளாய்த் துவளுவாள், தன் குறையைச் சோதரியாகிய பூதேலியிடத்து முறைபிடுபவன் போன்று தலைகுனிந்து நில நோக்கி நிற்பாள். அவ்வேற் நடவன் தன்னை விட்டகலும் வரை தலையிசாள். அவளது தாமரை முகம் பொலிவிழந்து வாடும், அழத குன்றும், எண்சாணுடம்பும் ஒருசாணாகக் குறுகும்.

 

பிறகு தன்னின்னுயிர்க்கா தலன் முகங்காணின் அவனைப் புன்முறுவலுடன் வரவேற்பாள். அவளுற்ற துயர் யாவையையும் மறந்து விடுவாள். தான் துன்புற்றதை விடப் பன்மடங் கதிகமாக வின்புறுவாள்.

 

அஃதேபோல் கதிரவனின் வரவால் ஆம்பல்கள் மிகவும் துயருறுகின்நன. "ஈமது காதலனாகிய தண் மதியின் வரவு எத்தகைய குளிர்ச்சியுடனும், மனகிற்கு ஒரு இன்பத்துடனு மிருக்கின்றது! இக் கதிரவனின் வரவோ, ஆயிரங்கரங்களையுடைய ஓரரக்கன் சிவந்த முகத்துடன் நம்மைச் சீறி வருவது போன்றிருக்கின்றதே!" என்று நடுங்குவது போன்று வாடுகின்றன. "இவ்வரக்கனை நாம் கண்ணெடுத்தும் பார்த்தல் தகாது'' என்று நினைப்பது போன்று இதழ்கள் எல்லாம் அடைகின்றன. “இவன் முன்னின்றால் என் செய்வானே! ஆகையால் இவன் கண்ணிற் காணாது எங்காவது சென்று விடுவோம்' என்ப போன்று தண்ணீருக்குள் தலைசாய்ந்து விடுகின்றன.

 

கதிரவன் மறைந்ததும் தண்மதி வானி லெழுகின்றது. ''நாம் நமது
காதலிகளுக்குத் தெரியாமல், நமது வருகையை எதிர்நோக்கி நின்றனரா? அல்லது யாது செய்கின்றனர் என்று ஒளிந்து பார்க்கவேண்டும்" என்னும் எண்ணங் கொண்டது போன்று மரங்களினிடையே ஒளி வீசுகின்றது. ஆனால் ஆம்பல்களோ கள்ளனிலும் கள்ளனாக விருக்கின்றன. "நமது சாதலன் நம்மிடத்தில் ஒளிந்து விளையாடுகிறான். அவன் காணா வண்ணம் நாம் அவன் கண்களைப் பொத்தவேண்டும்” என்று எண்ணம் கொண்டெ பவைபோன்று நீருக்குள்ளிருந்து தலையைத் தூக்கி வெளிக்கிளம்புகின்றன. இஃதை யறிந்த தண் மதியாகிய காதலன், ''நாம் இனி ஒளிந்தால் நம்மை வந்து பிடித்து விடுவார்கள். ஆகையால் நாமே நேரிற்சென்று தண் கரங்களால் நாமே நேரிற்சென்று தண் கரங்களால் தழுவி யின்புறுவோம்'' என்று எண்ணி வெளிவருவது போன்று மரங்களி னிடையினின்றும் வெளிவந்து நன்கு பிரகாசிக்கின்றது. காதலனைத் தம் முன் கண்ட வாம்பல்கள் ''நம் காதலன் நம்மிலும் கள்ளனா யிருக்கின்றான்'' என்று நகுவன போன்றலர்கின்றன். அப்பொழுது அவைகளுக்கு கதிரவன் செய்த கொடுமைகள் யாவும் மறந்து போய் விடுகின்றன. ஓர் புத்துணர்ச்சி யுண்டாகின்றன. வெண்ணிலவின் குளிர்ந்த கிரணங்களில் கட்டுண்ட வாம்பல்கள், காதலனின் ஆலிங்கனத்திற் குட்பட்ட காதலிகளே போன்று இன்புற்று மகிழ்வெய்து கின்றன.


இக் கவியில் சேக்கிழார் கற்பின் தன்மையை யினிது விளக்கியுள்ளார்.

 

பெண்களுக்குக் கற்பே அணிகலன், கற்புள்ள மங்கைக்கு எக்காரியமும் எளிதிற் கைகூடும். வானோர்களும் கற்புள்ள மங்கையை யஞ்சுவர். ஓர் பெண்ணிற்கு கற்பைவிட உயர்ந்த தன்மை யாதொன்று மிலது. கற்புடைய மங்கையே மங்கையர்க்கரசி. குறள் வெண்பா வடியால் வையத்தாருள்ளுவ வெல்லாம் ஓர்ந்தளந்த வள்ளுவரும்,


"பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனுக்

திண்மை யுண்டாகப் பெறின்."


என்ற இனி தோதியுள்ளார். கற்புடைய பெண்ணன்றோ பெண்! நம் பரத நாடு கற்பு நிறைந்த பொன்னாக, கற்பினால் விளைந்த காரியங்கள் எத் துணை! ஒன்றோ! இரண்டோ!


இரும்பு பொரிந்ததும் கற்பாலே!
இரவு நீண்டதும் கற்பாலே!
மன்னன் மாண்டதும் கற்பாலே!
மதுரை யெரிந்ததும் கற்பாலே!
வேடன் வெந்ததும் கற்பாலே!
வெந்தழ வந்ததும் கற்பாலே!
இத்தகைய கற்புமிக்க பொற்புடை நாடன்றோ நம்நாடு!

 

சேக்கிழார் கற்பென்னும் விழுமிய பொருளின் உயர் தன்மையை இயற்கை வாயிலாக இனி தோதியுள்ளார். அன்னவரின் பெருமையே பெருமை!

 

ஆனந்த போதினி – 1936 ௵ - டிசம்பர் ௴

 

 



 

No comments:

Post a Comment