Tuesday, September 1, 2020

 சேக்கிழார் உவமை மாண்பு

 

பொதுவாக எல்லா ஆசிரியர்களும், தாங்களியற்ற வெடுத்துக் கொண்ட நூலிற்கு, முதலில் கடவுள் வாழ்த்து, பின் பாயிரம், அதன் பிறகு நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு முதலியன கூறியே நூலின் கருத்தைத் துவக்குவது மரபு. ஆசிரியர்களின் கல்வித்திற மனைத்தையும் சிறப்புக்கள் கூறுமிடத்திலேயே காட்டுவார்கள். அவர்களது உவமையின் மாண்பும் ஆண்டே பயில்வோரைப் பரவச முறச்செய்யும் பான்மைத்தாய்த் திகழும்.

 

நமது சேக்கிழார் பிரானும் ஏனைய வாசிரியர்களைப்போல் மரபுக்கிணங்க கடவுள் வாழ்த்து, பாயிரம் முதலிய யாவும் முறையே கூறியுள்ளார். அன்னவர் அவரது கவித்திறமையையும், அறிவி னுயர்வையும் இக்தகையதென்று எடுத்துக் காட்டி உலகத்தாருக்கு உலையாவின்ப மளித்திருக்கின்றார்.

 

நாட்டுச் சிறப்புக் கூறப் போந்த நாயனார், சோழராட்டி லொழுச்செல்லுங் காவிரி நதியை, நான்முகன், கங்கைமாநதி முதலியவற்றிற் கொப்பிட்டுரைத்துக்கொண்டு வருங்கால்,


''வம்புலா மலர் நீரால் வழிபட்டுச்

செம்பொன் வார்கரை யெண்ணில் சிவாலயத்

தெம்பிரானை யிறைஞ்சலி னீர்ம் பொன்னி

உம்பர் நாயகர்க் கன்பரு மொக்குமால்''


என்று அழகுபெறக் கூறியுள்ளார்.

 

நதி மிகவும் அழகாக வோடி வருகின்றது. அதனிரு கரைகளிலும் பொற்றுகள்கள் சிந்திக் கிடக்கின்றன. அக்கரைகளி னிருமருங்குஞ் சிவாலயங்களுள. அஃதாவது, இரு கரைகளிலும் சிவாலயங்கள். நடுவில் நதிபாய்கின்றது. அத்தன்மையை எவ்வளவு அழகாகச் சித்திரித்துள்ளார் என்பதை யறிந்து மகிழுங்கள். அக்நதியை யோரடியாருக் கொப்பிட் டுரைத்திருக்கின்றார். ஓடும் நதியிலும் கடவுளின் கவினும் அடியாரின் அகமுங்காணும் கவியின் திறன் தானென்னே! ஒழுகும் ஆறிலும் கடவுளைக் காண்கின்றார் சேக்கிழார். காவிரி நதியை யடியார்களுக்கு ஒப்பிட்டுள்ள தன்மைஉள்ளங் கொள்ளா உவகை யளிக்கின்ற தன்றோ!

அடியார்க ளெப்பொழுதும் அரனிடத்தில் மாறா அன்பு பூண்டவர்கள். அல்லும் பகலும் அவரை அகமுற வணங்கும் வித்தகர்கள். தங்கள் பொருட்கள் யாவையும் மாலயற்கரிய நாதனுக்கே யளிக்குக் தன்மையர்கள். அஃதேபோல் இக்காவிரியும். ஒடும் பொழுது, தனது இருமருங்குமுள்ள கரைகளில் தனது பொருட்களாகிய செம்பொற்றுகள்களைத் தங்கவிட்டுச் செல்கின்றது. மேலும், என்று மொரு குறைவுமின்றி கோயில்களின் முன்பாகப் பாய்வது, அடியார்கள் இறைவனை யிறைஞ்சுவது போன்றுளது.

 

அடியார்களின் மனம் எப்பொழுதுங் குளிர்ந்த தன்மையது. அவர்கள் கடவுளி னிருகழல்களை யன்றோ யாண்டும் வணங்கி, மனதிலும் கொண்டிருக்கின்றனர். அரன் கழல் வணங்கு மொருவனுக்கு ஈரநெஞ் சிருப்பதியல்பே யன்றோ! குளிர்ச்சி பொருந்திய அக்காவிரியின் நீரும் அடியார்களினகத்தைப் போன்றுளது. அதன் பொருட்டே அது குளிர்ந்திருக்கின்றதென்னு முண்மையைக் கூறாமற் கூறியுள்ளார்.

 

அன்னவரின் சிறப்பு விளங்க இச்செய்யு ளொன்றே போதுமாயினும், இன்னுமொன் றிரண்டு பாக்கள் கூட நோக்கி, அவற்றின் அழகென்னும் கறவை மாந்தி பின்ப மெய்துவாம்.

 

இந்நதிக்கரையை விடுத்து நாட்டிற்குட் சிறிது சென்று நோக்குவாம். எங்கு நோக்கினும் பச்சைப் பசேலென்று நெற் கதிர்கள் வயல்களெங்கும் நிறைந்து நிற்கின்றன. இடையிடையே சில சிற்றோடைகள் சல சலவென்னு மோசையுடன், இளமங்கையர் தங்கள் காற் சிலம்பொலிக்க, இடை துவள நடந்து வருவது போன்று அழகாக ஓடுகின்றன. வயல்களி லெங்கும் களைகளையுங் கடைசியர்கள் தங்கள் தங்கள் வேலைகளைச் செய்து நிற்கின்றனர். சிலர் அங்கு மலரா நிற்கும் செங்குவளைப் பூக்களைப் பறித்துத் தங்கள் கருங்குழன்மேற் சூடுகின்றனர். சிலர் தங்கள் திங்கணுதலிற் றோன்றும் முத்துப்போன்ற வியர்வை நீரைத் துடைத்துக் கொள்ளுகின்றனர். இன்னுஞ் சில பெண்கள் ஆண்டுள்ள கமலத்தின் நறவை மாந்தி யின்புறுகின்றனர். ஈண்டு இவ்வண்ணமிருக்க இன்னஞ் சிறிதப்பாற் செல்வாம்.

 

அங்கு நீண்டதோர் வயல். நெற்கதிர்கள் யாவும் தங்களுக்கு நிகர்யாவையு மில்லையென்று தோன்று மாறு நன்றாக வளர்ந்து, தடித்துயர்ந்து, அகத்தேயுள்ள வெண்மைக் கருவின் வளமையினால் நன்றாகப் பசந் அப்பசப்பு வெளியிற் றோன் தாள் விரித்து நிற்கின்றன. அத்தன்மையை நமது சேக்கிழார்,

 

“சாலிநீள் வயலினோங்கத் தன்னிக ரின்றி மிக்கு

வாலிதாம் வெண்மையுண்மைக் கருவினாம் வளத்தவாகிச்

சூன் முதிர் பசலைகொண்டு சுருள்விரித் தரனுக் கன்பர்

ஆலின் சிந்தை போல வலர்ந்தன கதிர்க ளெல்லாம்.''


என்று கூறுந் தன்மையை என்னென்றியம்புவாம்!

 

சுருள் விரித்து நிற்கும் கதிர்களில் அடியாரின் ஆலின் சிந்தையைக் காணும் சேக்கிழாரின், அடியாரிடத்துள்ள பெரு மதிப்பும், அரனிடத்துள்ள அன்பும் நம்மால் வரைய வியலுவோ? அவர் உவமித்திருக்குந் தன்மை உள்ளத்கைக் கவருகின்ற தன்றோ! இயற்கையிலன்றோ இறைவனைக் காண்கின்றார்.

 

கதிர்கள் சுருள் விரித்து நிற்குந்தன்மை அடியார்கள் மனம் போலிருக்கிறது. அஃதை, அரனுக்கன்பர் ஆலின் சிந்தை போ லென்று கூறியிருக்கிறார்.

 

அடியார்கள் தங்கள் மனதிற் குற்றமென்பதைக் கொள்ளாதவர்கள்.
அவர்களை காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாற்சரியம் என்னுமுட்பகையாகிய அரக்கர்கள் அணுகார். எப்பொழுதும் அரனிடத்தில் அகலா வன்பு கொண்டவர்கள். தங்களது உடல், பொருள், ஆவி மூன்றையும் அடியாரின் பொருட்டுச் செலவிடும் தன்மை வாய்ந்தவர்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் மனத்தினரன்று. வாய்மை யல்லாததைக் கனவிலுங் கருதார். அரனடியாரைக் காணின், அவர்கள் முன்னால் தங்கள் திருவனைத்தையு மெடுத் திட்டு, அவர்கள் மனம்போல் அவைகளைப் பயன் படுத்துமாறு வேண்டுவர். பிறருக்குத் தீங்கு செய்யார். இத்தகைய தன்மை யுடையவர்கள் சிந்தை ஆலின சிந்தையென்பதற் கையமு முண்டோ? ஆகையினாலேயே அடியார்களை ஆலின் சிந்தையரென்றார்.

 

அஃதேபோல் கதிர்கள் சுருள்விரித்து நிற்பது 'நாங்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று காட்டவில்லை. நாங்கள் தாங்கி நிற்கும் இந்நென்மணிகள் யாவும் மனிதர்களுக்குப் பயன்படும் பொருட்டே யிருக்கினறன. ஆகையால் யாவரும் வருவீர். இம்மணிகளை யுங்கள் மனம்போற் கொள்வீர்” என்று கூறுவன போலிருக்கின்றனவாம்.

 

இவ்வுவமையைச் சேக்கிழார் எத்தகைய கவினுடன் மொழிந்துள்ளார்! படிக்கப் படிக்கத் தெவிட்டா வின்பமன்றோ நல்குகின்றது!

 

அவரது புலமையை இன்னுஞ் சிறிது நோக்குவாம்.

 

சிறிது தூரத்திற்கப்பால் வேறொரு வயல். அங்கு கதிர்கள் தங்கள் சுமைதாங்கவொண்ணாது தலைசாய்ந்து, ஒன்றன் மேலொன்று விழுந்து கிடக்கின்தன. அறுவடைக்குச் சமய மடுத்து விட்டது. அத்தோற்றத்தை,


“பத்தியின் பாலராகிப் பரமனுக் காளாமன்பர்

தத்தமிற் கூடினார்க டலையினால் வணங்குமாபோன்

மொய்த்த நீள் பத்தியின்பான் முதிர்தலை வணங்கிமற்றை

லித்தகர் தன்மைபோல விளைந்தன சாலியெல்லாம்.''


என்று பெருமைபடுத்திக் கூறியள்ளார்.

 

அடியார்கள் ஒருவரை யொருவர் காணுவார்களாயின் அவர்கள் அடியின் மிசை தமது முடிபட வணங்கி நிற்பார்கள். அஃதேபோல், இக்கதிர்கள் தலை சாய்ந்து ஒன்றன் மேலொன்று விழுந்து கிடப்பது, அடியார்கள் ஒருவரை யொருவர் வணங்குவது போன்றிருக்கின்றதாம்.

சேக்கிழார் கண்ணுறும் பொருள்கள் யாவற்றிலும் அரனி னன்பையும், அடியாரின் பெருமையைய மல்லாது பிரிதொன்றைக் காண்கின்றாரில்லை. அவ்வளவ பெருமைப்படுத்திக் கூறும் அடியாரின் தன்மைதான் யாதென்று சிறிது நோக்குவாம்.

 

"அடியார்'' என்னும் பதத்திற்கு "தொண்டு செய்பவர்'' என்பது பொருள். தொண்டு செய்தல் என்பது பணிசெய்தல் என்பதாம்.

 

அவர்கள் மனத்தகத்து மாசில்லாப் பெருந்தகையாளர்கள். பிறருக்குத் தீங்கு நினையா உத்தமர்கள். அரனன்பரைக் காண நேரிடின், நதிநிசியாயினுஞ் சிறிதுந் தயங்காது அவர்களுக்கு வேண்டுவன வியற்றிக் கொடுக்குங் குணத்தினர். உட்பகையென்னு மரக்கர்களை அணுகவொட்டாது அகலவோட்டு மறிவினர். எப்பொழுதும் அரனது கழல்களையே தங்களது மனமாகிய வில்லத்தில் இருத்திக் கொண்டிருப்பவர்கள்.

 

இத்தகைய வாழ்ந்த கருத்துக்களை யெல்லாஞ் சேக்கிழார் எத்தகைய கவினுடன் கூறியுள்ளார்! இதன்றோ இன்மொழிப் புலவரி னியல்பு! புதை பொருட்கள் பல புகுத்திக் கவி செய்தலன்றோ கற்றோரின் மாண்பு!

 

ஆனந்த போதினி – 1936 ௵ - அக்டோபர் ௴

 





 

No comments:

Post a Comment