Thursday, September 3, 2020

 நம்பிக்கையின் சக்தி



நாம் ஒரு விஷயத்தைப் பற்றியோ, பதார்த்தத்தைப் பற்றியோ, அல்லது ஒரு மனிதனைப் பற்றியோ ஒருவித அபிப்பிராயம் அல்லது நம்பிக்கை உடையவர்களாய் இருந்தால், அதை மாற்றுவது வெகு கஷ்டமாகும். இது மன தினுடைய ஓர் அபூர்வ சக்தியாகும். இந்த சக்தியைக் கொண்டு நாம் மகத்தான காரியங்களையும் சுலபமாகச் செய்து முடிக்கலாம். இதனையே செந்தாப் போதாரும்,


“எண்ணிய எண்ணியாங் கெய்தும்; எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்''                               என்றார்.

 

நம்பிக்கையினால் மோக்ஷ சாதனமும் எளிதாகும்; சகல கஷ்டங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம். உதாரணமாக, மெஸ்மெரிஸம் என்னும் மனோவசிய சக்தியால் வியாதிகளைச் சொஸ்தம் செய்வதும் இதனால் தான் சாத்தியமாகிறது. இந்த சக்தியால் வியாதியஸ்தன், தனக்கு வியாதி போய் விட்டதென்னும் எண்ணத்தைப் பலமாக வற்புறுத்துவானானால், வியாதிபோய் விடுகிறது. இங்கே நம்பிக்கை வியாதியைச் சொஸ்தம் செய்கிறது.

 

இதே விதமாகவே ஆத்ம சொரூபியாகிய நாம் “நான் அழியுந் தன்மை யுள்ள இந்த ஸ்தூல சரீரமல்ல; நித்ய வஸ்துவாகிய ஆன்மாவே நான் என் னும் எண்ணத்தைப் பழக்கத்தாலும் விடா முயற்சியாலும் மனதில் வேரூன்றச் செய்து விட்டால், மனம் எளிதில் அடங்கி, ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரத்தை அடைய சாத்தியமாகிறது. இங்கே நம்பிக்கையானது ஜனன மரணப் பிணிக்கே மருந்தாகிறது.

 

நாம் நம்பிக்கையால் நன்மை யடைவதுபோல் நம்பிக்கை யின்மையால் கஷ்டத்தை யடைகிறோம். மனோ பீதியும், நம்பிக்கையின்மையும் நோய்க்குக் காரணமாகின்றன. நம்பிக்கை யின்மையால் ஏற்படும் நோய்களுக்கு எவ்வித மருந்தும் பயன்படாது என்பது வைத்திய சாஸ்திரிகளின் துணிபு. சில பெரியோர்கள், சில குறிப்பிட்ட இடங்களில் பேய் பிசாசுகள் இருப்பதாகவும் அங்கே போகக் கூடாதென்றும் சொல்லி சிறுவர்களைப் பயமுறுத்துகின்றார்கள். இது பெருந் தவறாகும். ஏனெனில், தற்செயலாய் அச்சிறுவன் அவ்விடங்களுக்குப் போகும்படி நேர்ந்தால் அவன் அம் மனப் பீதிக்கே இரையாய் விடுவான் என்பது திண்ணம். இதற்குத் திருஷ்டாந்தமா கச் சில உதாரணங்கள் காட்டுவோம்.

 

ஒரு நாள் ஓர் ஊரில் ஒரு சிறுவனை அவன் பாட்டியார் அவ்வூர் ரஸ்தாவில் இருக்கும் ஆலமரத்தில் முனி இருப்பதால் அங்கே போகக் கூடாதென்று எச்சரிக் கை செய்திருந்தாள். மாலைப்பொழுதில் அச்சிறுவன் அங்கே தனியே சென்றபொழுது தன் பாட்டியின் சொல் ஞாபகத்திற்கு வந்ததால் உடல் நடுங்கிற்று. சுற்று முற்றும் பார்த்தான்; ஒருவருமில்லை. அம்மரத்தைப் பார்த்தான். அச்சமயம் காற்றினால் சில இலைகள் அசைந்ததால் பயத்தினால் கீழே விழுந்துவிட்டான். பயத்தினால் விழுந்ததால் மூளை கெட்டுப் போய் வாயிலிருந்து இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. பிறகு அவன் தாய் தந்தையர் அவனைக் கண்டு, சமீபத்திலிருந்த ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் எவ்வளவோ சிகித்லைகள் செய்தும் இரத்தப்பெருக்கு நிற்காமல் சில மணி நேரத்தில் இறந்து விட்டான். அந்தோ! பரிதாபம். அச்சிறுவன் தன் மனப்பதிக்கே பலியானான் என்பதில் ஐயமுண்டோ! ஆனால் அவ்வூர் ஜனங்கள் வழக்கப்படி "பையன் காத்து சேட்டையால் பயந்து போய் விட்டான்" என்று சொல்லிக் கொண்டார்கள்.

 

இம்மாதிரியே, ஓர் ஊரில் கிழவி ஒருத்தி இருந்தாள். அவளுக்குப் பாம் பென்றால் உயிர் போய்விடும். இதையறிந்த அவ்வூர் சிறுவர்கள் அவளைக்கண்ட போதெல்லாம் பரிகசிப்பது வழக்கம். ஒருநாள் அக்கிழவி வீதியில் போய்க் கொண்டிருந்த பொழுது ஒரு சிறுவன் அவளை ஏமாற்றும் பொருட்டு திகில் உண்டாகும்படி ''ஐயோ! கிழவி; பின்னால் பாம்பு'' என்று கத்தினான். கிழவி பயத்தினால் திடீரென்று கீழே விழுந்து இறந்து போனாள்.
கிழவியின் மரணத்திற்குக் காரணம் சிறுவன் ஆனதால், அவனைப் போலீசார் பிடித்து அவ்வூர் நியாயாதிபதியிடம் கொண்டு போனார்கள். நியாயாதிபதி அவனைப் பீரங்கிவாயில் வைத்துச் சுட்டு விடும்படி தீர்ப்பு செய்துவிட்டார். ஆனால், அவனைப் பீரங்கி வாயில் வைத்துக்கட்டி, மற்றொரு பீரங்கியில் சப்திக்கும் மருந்து வைத்து, அதைச் சுடும்படி ரகசியமாக ஏற்பாடு செய்திருக்தார். அச்சிறுவனோ, பீரங்கியின் சப்தம் கேட்டுத் தன்னைக் கட்டியிருக்கும் பீரங்கியின் சப்தமென்று எண்ணி பயத்தால் இறந்து போனான்.

 

ஒரு நாள் இரவு ஒருவன் வேகமாக நடந்து போகையில் ஓர் பிளந்த மாங்கொட்டை அவன் காலில் கவ்விக்கொண்டது. அவன் அதைப் பாம்பென்று நினைத்துத் தாண்டி, அருகில் இருந்த வைக்கோல் பிரியின் மேல்குதித்தான். அப்பிரியைப் பார்த்ததும் காலில் கடித்தது பாம்பென்று நிச்சயங்கொண்டு, வீட்டிற்கு வந்து அம்மாதிரியே சொல்லிப் படுத்துக்கொண்டான். உண்மையாய்ப் பாம்பு கடித்ததுபோல் மயக்கம் போட ஆரம்பித்து பட்டது. வீட்டி லிருந்தவர்கள், பாம்பு கடித்த இடத்திற்குப் போய் பார்த்ததும் கடித்தது மாங்கொட்டை யென்று தெரிந்தது. ஆனால் அவனிடம் சொல்லியும் அவன் நம்பவில்லை. அவனுக்கு நேராகக் காண்பித்து, நாளுக்கு நாள் அவன் சொஸ்தமடைந்து வருவதாகத் தேறுதல்கள் சொன்னதால் நெடு நாள் கழித்து அவனுக்குச் சொஸ்தமாயிற்று. தப்பான நம்பிக்கையால் அவஸ்தைப்படுவதற்கு இது ஓர் உதாரணமாகும்.

 

ஒரு பிரபுவின் குமாரன் அஜீர்ண ரோகத்தால் நெடுநாள் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தான். எத்தனையோ டாக்டர்கள் இதைச் சொஸ்தம் செய்து பார்த்தும் பயனில்லாமல் போய்விட்டது. இதன் உண்மையான காரணத்தை யறிந்த ஒரு டாக்டர், ஒரு டென்னிஸ் துடுப்பில் ஏதோ ஓர் மருந்தைப்பூசி இதனால் தினகனம் உடம்பு வியர்க்கும்படி பந்தாட்டங்கள் ஆடினால் உன் அஜீர்ணரோகம் எகும் என்று சொல்லித் துடுப்பைக் கொரேத்தார். அவன் தினந்தவருது அப்படிச் செய்து வரவே, ஒரே மாதத்தில் அவன் வியாதி பறந்து போய்விட்டது. சாதாரணமான துடுப்பினால் வினை யாடி யிருப்பனும் சௌக்ய மடைந்திருப்பா னாயினும் டாக்டர் கொடுத்த துடுப்பிலிருந்த மருந்து தான் குணப்படுத்துமென்ற எண்ணத்தினால் தான் விளையாடினான்.

 

ஒருவன் எவ்வளவு தைரியம் உள்ளவனாக இருப்பினும், அவன் தப்பான நம்பிக்கையைக் கைக்கொண்டால், அவன் விரைவில் அதனால் துன்பமடைவான். இதற்கு எடுத்துக் காட்டாக, ஒருவன் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கையில், மேலே சரத்தில் ஓடிக்கொண்டிருந்த ஒரு பல்லியின் பிரதி பிம்பத்தைத் தான் குடிக்கும் தண்ணீரில் கண்டான். ஆகையால், பல்லியோடு தண்ணீரைக் குடித்துவிட்டதாக எண்ணிக்கொண்டு, வாந்தி, ஒக்காளம் முதலியவற்றால் கஷ்டப்பட்டான். வைத்தியர்களால் இதைச் சௌகர்யப்படுத்த முடியவில்லை. இரண்டு மாதம் கழித்து ஒருவன் வந்து சமாசாரத்தைக் கேட்டு, இது தப்பான நம்பிக்கையின் பயன் என்று எண்ணி, மறுநாள் வாந்தி யெடுக்கும் மருந்து கொடுத்து வாந்தி யெடுத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் தன் கையில் பிடித்து வைத்திருந்த பல்லியைப் போட்டு விட்டுப் பிறகு அதையே எடுத்துக் காட்டினான். மருந்தின் வேகத்தினால், பல்லி தன் வயிற்றிலிருந்து வந்து விட்டதாக எண்ணினதினால், அவனுக்குச் சொஸ்தமாகி விட்டது.

 

நோயாளருக்கு அதைரியத்தை உண்டாக்கும் வார்த்தைகள் சொல்லக் கூடாது; அவர்கள் காதில் படும்படி பேசவும் கூடாது. ஏனெனில், அவர்கள் அதை சம்பி, மனம் வருந்திக் கஷ்டப்படுவார்கள். எவ்வளவு திடகாத்திர னாயினும், தப்பான நம்பிக்கையும், மனப்பீதியும் உண்டாகும் பொழுது, மயங்கித் தன்னிலை கெடுவான் என்பதில் சந்தேகமில்லை. உதாரணமாக ஓர் ஊரில் ஒருவனை அவன் நண்பர்களில் சிலர் அவனைக் கண்ட பொழுதெல்லாம், "ஐயோ, பாவம்! என் இப்படி மெலிந்து போய்விட்டாய்?" என்று பரிகாசமாக அடிக்கடி கேட்டுக்கொண்டு வந்ததால் அவன் தான் மெலிந்து போய்க் கொண்டிருப்பதாக நினைத்து, அதனால் மனசஞ்சலமடைந்து, நாளுக்குநாள் மெலிந்து, முடிவில் இறந்தான்.

 

இத்துணையுங் கூறியவாற்றால், தப்பான நம்பிக்கை யுண்டாகும்படி சிறுவர் முன் பேசுவதும், தப்பான நம்பிக்கையில் மனதைச் செலுத்துவதும் ஆபத்துக் கிடமாகும் என்று தெரிகிறதல்லவா? இந்த நம்பிக்கையின் ஆச்சர்யமான சக்தியை அறிந்த நம் முன்னோர்கள் இவைகளுக்குப் பரிகாரமாக “சுத்தி கொட்டுதல்" அல்லது திருஷ்டி பரிகாரம் செய்தல் போன்றவைகளை அனுஷ்டித்து, தப்பான நம்பிக்கையினாலும், மனோ பீதியினாலும் கஷ்டப்படுபவர்களின் மனதிற்கு அமைதியை உண்டாக்கும்படி ஏற்பாடு செய்திருக் கிறார்கள்.

 

இனி நம்பிக்கையின் சக்தியால் ஏகாக்ர சித்தநிலையை உபயோகித்து எல்லாவித துர்க்குணங்கா நம்மைவிட்டு, பகலும்படி செய்து நம்மனத்தை எப்படிப் பரிசுத்தம் செய்து கொள்ளலாம்பாான்று ஆராய்ந்து பார்ப்போம், மனோதத்துவ சாஸ்திரத்தின் திட்பநுட்பங்களை ஆராய்ந்து பார்க்கப்பார்க்க, சரீரத்திற்கும் மனதிற்கும் அநேக விதங்களில் ஒற்றுமை யிருப்பதாகத் தெரி ஆகையால் சரீரத்தை நல்ல நிலைமையில் வைத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் தங்கள் மனதை, நல்ல நிலைமையில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், மனிதனுடைய ஆத்ம லாபத்திற் காதாரம் அவன் கருதும் எண்ணங்களாகையால், இகபர சாதனங்கள் இரண்டிற்கும் மனோபரிசுத்தம் இன்றியமையாததாகும். பாம்பு நிறைந்த வீட்டிலுள்ளோர் ஜாக்ரதையா யிருப்பது போல், காமக்குரோத முதலிய பகைவர்களிடம் அகப்படாமல் மனிதன் ஜாக்ரதையாய் இருக்கவேண்டும். எப்பொழுதும் ஜாக்ரதையாய் விழித்துக் கொண்டிருப்பவர்களின் வீட்டில் திருடர்கள் நுழைய முடியாததுபோல், நாமும் எப்பொழுதும் ஜாக்ரதையா யிருப்போமாகில் எவ்வித தீய எண்ணமும் மனதில் பிரவேசித்து நம்மைக் கெடுக்க முடியாது. ஆனால், ஆரம்பத்தில் இது கஷ்டமாகத் தோன்றும். எனினும், காமம், கோபம் முதலிய துர்க்குணங்கள் நம்மனதில் எழக்கண்ட மாத்திரத்தில் அவற்றிற்கு அனுசரணையா
யிருந்து மூட்டி விடும் விஷயத்தை உடனே மனதை விட்டகற்றிவிட வேண்டும். இப்படிச் செய்துவந்தால், புசிகரணமில்லாத நெருப்புத் தானே அவிந்து போவது போல், துர்க்குணங்கள் நாளடைவில் நிர்மூலமாகிவிடும். அதுவரையிய், காமக்குரோத முதலியவற்றால் ஏற்படும் மனத்துடிப்பைச் சகிப்பதற்கு மனிதன் பழக வேண்டும். விஷயங்களை வெறுப்பதாலும் விடாமுயற்சியாலும் இது சாத்தியமாகும்.

 

இதோடுகூட, துர்ச்சுபாவ நடவடிக்கைகளால் ஏற்படும் கெடுதிகளைப் பற்றி சிறிது நேரம் அமைதியிலிருந்து தியானித்துவிட்டு, உறுதியான ஒரே திடச்சித்தத்தின் வல்லமையால் அவற்றை மனதை விட்டகற்ற வேண்டும். எப்பொழுதும் மனதில் சந்தோஷகரமான விஷயங்கள் மட்டும் பதிந்திருக்கவேண்டு மென்றும், அபரிசுத்தமான விஷயங்கள் அகன்றிருக்க வேண்டுமென்றும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

 

மனிதன், நினைத்திராத வேளையில், அவனறியாமலே, அவன் மனதில் அசுசியான அல்லது மனக்கிலேசத்தை உண்டாக்கக்கூடிய விஷயங்களோ உருவங்களோ திடீரென்று தோன்றுவது சகஜம். அச்சமயத்தில், அவன் அவற்றை உடனே உதறித் தள்ளிவிட்டு மனதை வேறு விஷயங்களில் செலுத்த வேண்டும். இது கஷ்டமான காரியமல்ல. இதே விதமாய் நமக்குத் துன்பத்தையும், மனோ வியாகுலத்தையும் உண்டாக்கக் கூடிய எந்த விஷயத்தையும் க்ஷணப்பொழுதில் மனதை விட்டகற்றும் திறமையைடடைந்து விடலாம்.

நாம் மனதில் தூய எண்ணங்களுக்கு மட்டும் இடங் கொடுப்போமாயின், அவ்வெண்ணங்கள் தமது காந்தக் கவர்ச்சியினால், நம்மைச் சுற்றிலுமுள்ள தூய எண்ணங்களையும், மனோகரப் புண்ணியங்களையும் நம்மிடம் இழுத்துக்கொண்டு வருகின்றன. நாம் பழக்கிய புறாவானது, தூர இடங்களுக்குச் சென்று, மற்றப் புறாக்களை இழுத்துக் கொண்டு வருவதுபோல், புண்ணிய சித்த முள்ளவர்களுக்கு மற்றவர்களின் புண்ணியங்களும், நல்லெண்ணங்களும் வந்து தவும். “இனம் இனத்தைத் தழுவும்'' என்று முதுமொழியும் சொல்லுகிறதல்லவா? இதைப் போலவே துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்தில் வளருகிறான்.

 

ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும் நம்முடைய அற்ப ஆசைகளில் அல்லது வழக்க ஒழுக்கங்களில் ஏதேனு மொன்றை நிறுத்தப் பிரயாசைப் படவேண்டும். நமக்கின்பமான ஏதேனு முணவை, பொடியை, அல்லது குடியை முதலாவதாக நிறுத்திக்கொண்டு: - "எனக்கின்பம் விளைத்த அசனமே! பானமே! வழக்கமே! இன்று முதல் உன்னை நான் வெறுத்து விட்டேன். உன் இன்பம் எனக்கு வேண்டாம்” என்று அநேகந் தடவைகளில் உச்சரிக்க அவ்வெண்ணம் மனதை விட்டகலும். ஒரு நாளைக்கு உணவைத் துறந்து உபவாசமிருப்பது கஷ்டங்களைச் சகிப்பதற்கும் நம்பிக்கையின் சக்திவிர்த்தி செய்வதற்கும் சாதனமாகும். மேற்சொன்ன உபாயங்களில், மனவடக்கம் எய்திய மனிதனிடம் உலகம் ஓடிவரும். இவ்வுலகத்திலுள்ள சகலவித நன்மைகளும், புண்ணியங்களும், ஆசீர்வாதங்களும், தன்னடக்கமும், தன்னம்பிக்கையுமுள்ள மனிதனைப் புடை சூழ்ந்து கொள்ளும். தன்னம்பிக்கையுள்ளவனிடம் சகல சக்திகளும் வந்து சேரும். இவ்வளவு உபயோகமான தன்னம்பிக்கையை அடைவதற்கு உபாயம், மனோபலமும், திடச்சித்தமும், மனோற்சாகமும் தான். இவ்விதமாகத் தன்னம்பிக்கையை விர்த்தி செய்து வருவதுடன், கடவுளிடத்திலும் நம்முடைய நம்பிக்கையை நாளுக்கு நாள் முதிரச் செய்து அவருடைய திருவடிக்குப் பாத்திர ராவோமாக.

 

ஆனந்த போதினி – 1936 ௵ - நவம்பர் ௴

 



 

No comments:

Post a Comment