Friday, September 4, 2020

 

 பழந் தமிழ்நாடும் பாரதியாரும்

நாம் பிறந்தது இத்தமிழ்நாடு என்று எண்ணும்போது கம உள்ளத்தில் இன்பம் ஊறுகின்றது. அன்பு பெருகுகின் வீரந் ததும்புகின்றது. அவ்வின்ப அன்பு வீரவெள்ளத் கிலே நமது உடலும் உயிரும் ஒருங்கே தோயப்பெற்றதாய் கரைகாணாது தவித்து மகிழுகின்றது.

நாம் பிறந்தது தமிழ்நாடு. வளர்ந்தது தமிழ்நாடு. நமது அன்னை தழவிப் பருவத்தே நமக்கு அமுதூட்டி அன்புப் பாடலாலும் இன்ப ஆடலாலும் நம்மை மகிழ்வித்து இன்பம் கொண்டதும் இந்நாட்டிலேயே. நாம் மண்ணகத்தே மாதரார் முகத்தினையும் மடமயிலார் இசையினையும், விண்ணகத்தே வானிரவியையும் விண்மீன் குழுவையும், கானகத்தே களிமயிலாடலையும் இளங்குயிலின் பாடலையுங் எழில்மானின் ஓட்டத்தையும், கண்டு. கேட்டு, மகிழ்ந்ததும் இந்தாட்டிலேயே. உபிரனைய நட்டாருடன் உயர்மலைச் சாரலடைந்து ஆங்குள்ள பொழில் புகுந்து எழில் மலர் கொய்து, இன்பத்தேனருவியாடி, மந்தமாருதம் நுகர்ந்து, தீங்குழலூதி, தீம்பாடல் சாற்றி சிந்தை உவந்ததும் இந்நாட்டிலேயே. நாம் கல்விக் கழகமேறி பல்கலை பயின்று அவற்றின் பயனைத் துய்த்து வருவதும் இவ்வருமைத் திருத்தமிழ் நாட்டிலேயே யன்றோ!

 

இந்நாட்டிலேயே நமது தாயும் தந்தையும் தோன்றினர். அவர்கள் குழவிப் பருவத்தே மழலைச் சொல் மிழற்றியதும், தளர்நடை பயின்றதும் இகாட்டிலேயேயாம். நமது அன்னையர் கன்னிப் பருவம் எய்தப் பெற்றதும் இங்குதான். அவர்கள் கன்னிப்பருவம் எய்தப்பெற்று வெண்மதிகாலும் தண்ணிலவிலே விளையாடி, விரிபூஞ்சோலைபை அடுத்த மணி நீரப் பொய்கைவிலே புனலாடி மகிழ்ந்ததும் இக் காட்டகத்தேயாம். அதன் பின்னர் அவர் வதுவை முடித்ததும், தங்கொழுநரை விழியினும் உயரிய தாய்ப் போற்றி விழுமிய உணவளித்து வேண்டுவன செய்து போற்றியதும் இந்நாட்டிலேயே. ஆலயம் போந்து அழகோடும் அண்ணலைத் தொழுது அவன் அன்பு பெற்று அருளொடும் வாழ்ந்து வந்ததும் இவ்வழகிய செந்தமிழ் நாட் லேயேயாம்.

 

இவ்வழகிய நாட்டிலேயே நமது அன்னையரின் முன்னையரும் தந்தையவின் முந்தையரும் வதித்தனர். அவர்கள் பலதிற இன்பம் துய்தததும் இன்கேயே. அவர்கள் தம் உள்ளத்தே தோன்றிய உயரிய கருத்துக்களால் ஓம்பியதும் இப்பொன்னாட்டையே. இஃதனைத்தும் இவ்விருபதாம் நூற்றாண்டைத் தெய்வக் கவிஞர் செந்தமிழ் பாரதியார் தம்பாவின்கண் அழகாக எடுத்துரைக்கின்றார்.

''எந்தையுந்தாயு மகிழ்ந்து குலாவி

யிருந்தது மிகாடே — அதன்

முந்தையராயிர மாண்டுகள் வாழ்ந்து

முடிந்தது மிந்நாடே-அவர்

சிந்தையிலாயிர மெண்ணம் வளர்ந்து

சிறந்தது மிந்நாடே.'' என்றும்


"இன்னுயிர் தந்தெமை யீன்று வளர்த்தரு

ளீந்தது மிந்நாடே – எங்கள்

அன்னையர் தோன்றி மழலைகள் கூறி

யறிந்தது மிந்நாடே – அவர்

கன்னியராகி நிலவினி வாடிக்

களித்தது மிந்நாடே – தங்கள்

பொன்னுட லின்புற நீர்விளையாடியில்

போந்தது மிந்நாடே."


என்றும் கூறினர்.

 

தமிழ் நாட்டிலே பண்டை நாளில் கல்வி விளக்கமுற்றிருந்தது. பண்டைத் தமிழர் ஒவ்வொருவரும் கல்வியைத் தங்கண்னெனக் கற்றுவந்தன ஆங்காங்கே கல்விக் கழகங்களும் நிறுவப்பெற்றிருந்தன, தமிழர் வெறும் எட்டுக் கலவியை மட்டும் கற்றனரல்லர். அன்னார் எட்டுக் கலவியுடன் இடற்கைக் கல்வியையும் கற்று வந்தனர். மன் பதையை மாபெருங் கழகமாகக் கொண்டு ஒவ்வொரு இயற்கைப் பொருளையும் நுணுகி ஆராய்ந்து அவற்றின் பெருமையை உலகிற்குக் காட்டி வந்தனர். அஃதுடன் சமய பாடங்களையும் தமிழர் விரும்பிக் கற்றனர். சமய ஒழுக்கங்களையும் சிறிதும் வழுவாது
தழுவிவந்தனர்.


தாய்மொழித் திறன்

 

பண்டைத் தமிழ் நாட்டில் தாய்மொழி நன்கு ஓம்பப்பெற்று வந்தது. ஒவ்வொரு தமிழரும் தம் தாய்மொழியாகிய தமிழில் நன்கு தேர்வுபெற்றிருந்தனர். அன்னாரில் ஒவ்வொருவரும் தம் தாய்மொழியில் கவிகள் கவின் பெறப்பாடவலலவராய இருந்தார். அஞ்ஞான்று புலவாகளும் தம் தாய்மொழியாகிய தமிழுக்கு நற்காவியங்கள் பல செய்து கொடு சதனா உலகம போற்றும் விழுமிய நூலாம் திருக்குறள் எனும் ரீத னெழுந்ததும் நமது திரு காட்டகத்தேயாம். தமிழ்ததாய்க்கு ஒரு பெருமிழையாக விளக சா ராமாடாம செயது கொடுத்த புலவன் கம்பன் பிறந்த நாடும் தமிழகயோம் தமிழன்னயின் நெஞ்சத்திலே நீண்டொளிரும் ஆரமாம் சிலப்பதகாரசதனை செயத புலவன் இளங்கோ எழுந்த நாடும் இர தீந்தமிழ+மே இததசையை பெருமை கொண்ட நமது தமிழகத்தைப் பாரதியார்.



"கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல

பல்விதமாயின சாத்திரத்தின் மணம்

பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு.                       என்றும்


வள்ளுவன் தன்னை உலகினுக்கே-- தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - கெஞ்சை
அள்ளுஞ் சிலப்பதிகாரமென்றோர் மணி
யாரம்படைத்த தமிழ்நாடு.                        
என்றும்,

 

தமிழ் நாட்டுப் புலவரின் பெருமையினை,


"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்த திலை. உண்மை
வெறும் புகழ்ச்சியில்லை''


என்றும் அழகாகப் பாடி புகழ்ந்துள்ளார்.

 

இவ்வாறு பழந்தமிழ் நாட்டாரின் கல்வியையும் அவர் தம் மொழிப் புலமையையும் புகழ்ந்த பாரதியார் அவர் தம் வீரத்தையும் புகழ்ந்து கூறுவாராயினர்.

 

பண்டைத் தமிழர் வீரமும் வெற்றியும்.

 

பழந்தமிழ் நாட்டார் அஞ்சா நெஞ்சுடையவர் மலை பெயர்ந்து வரினும், வானிடிந்து வீழினும் மனங்கலங்கர் இயல்பினர். அவரது வாழ்வில் வீரம் பெருகியிருந்தது. பண்டைத் தமிழ்நாட்டு மன்னரின் எபு இன்றுகாறும் இலங்கச் செய்த பெருமை தமிழ் வீரருக்கே உரியதாகும். அஞ்சாரெஞ்சுடன் பிறகாடு போர்து இவர்கள் இயற்றிய போரே பண்டைத் தமிழ் மன்னரின் வெற்றிக்கு உரியதாய் அமைந்தது. கலிங்க நாட்டில் சோழமன்னனின் வெற்றிக்குத் தலைமையாய் இருந்தவரும் பண்டைத் தமிழ்வீரரே வடநாட்டில் ஆயிரமன்னரையும் ஒருங்கே கங்கை நதிக்கரையில் புறமுதுகிட்டோடச் செய்த செங்குட்டுவன் பெருமைக்கு உரியராய் அமைந்தோரும் தமிழ் வீரரேயாம். இவர்கள் அந்நாடுகளில் அருஞ்சமராற்றி வெந்றிக்கொடி நிறுவி அங்குத் தம் கொடியினையும் முத்தரையையும் நாட்டிதனர்.


பெண்டிர் வீரம்

 

இத்தகைய தமிழ் வீரர் வாழ்ந்த பண்டைத் தமிழ் நாட்டில் பெண்களுத வீரஞ்செறிந்த வாழ்வையே கொண்டிருர் தனர். அந்நாளில் உடல் பழுக்ச் ஒரு முதியவளின் புதல்வன் போருக்குச் சென்றான். அவன் போருக்குச் சென்ற பின்னை மாற்றலர் சிலர் அவள் மாட் டணுகி ''அம்மே! நினது புதல்வன் போர்முகத்தே பகையோர் வலிக்காற்றாது புறமுதுகிட் டோடினன்.'' எனப் பொய்யுரை புகன்றனர். இஃதை உண்மையென நம்பிய அம்முதியாள் மனம் மாழ்கியவளாய் வீரமுற்றெழுந்து உறைவாள் கையகங்கொண்டு அங்ஙனம் என்மகன் போர்முகத்தே புர முதுகிட்டோடி யிருப்பானாயின் அவனுக்கு அமிழ்து கொடுத்தோம்பிய என் முலையை இன்னே அறுத்து அப்பாற்படுத்துவேன்'' என சபதச் சொற்கள் சொற்றனளாய் போர் முகஞ் சென்றாள். ஆண்டு மலையெனக் குவிந்த பிணங்களைக் கிளறி நோக்கினாள். அங்கே தன்னுயிரனைய ஒரு மகனைக் கண்டாள். அவன் அகல் மார்பகத்தே ஊறு எய்தப்பெற்று மடிந்து கிடந்தான். இஃது கண்ட அவள் இன்பம் எய்தப் பெற்றவளாய் ஊரவருரை பொய்யுரை எனத் தேறி தனதில்லம் திரும்பினான். இன்னும் ஓர் மாது போர்முகஞ் சென்ற தன திறைவன் அவண் இறந்து பட்டான் என்ற செய்தி அறிந்ததும், தனது அழகிய ஒரு புதல்வனை புனை பொருட்களால் புனைவித்துப் போர்முகம் மலைதற்கு அனுப்பினள்; என்னே பண்டைத் தமிழர் வீரம் ! பெண்டிர் வீரம்! இதை நமது பாரதியார்,


“. . . . . . . . . . . உயர்

வீரம் செறிந்த தமிழ்நாடு'                         என்றும்,


விண்ணையிடிக்குந் தலையிமயம் - எனும்
வெற்பையடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள் கெடுத்தார் தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு'


என்னும் பொன் மொழிகளால் புகழ்ந்து கூறினார்.


கைத்தோழில் உயர்வு

 

இத்தகைய வீரராய் வாழ்த்து வெற்றிக்கொடி நிறுவிய பண்டைத் தமிழ் சாட்டார் கைத்தொழிலிலும் சிறந்தவராய் இருந்தனர். இற்றை நாளையத் தமிழரைப்போல் பண்டைத் தமிழர் உண்ணும் பொருட்களாம் நெல், அரிசி முதலியன பிற நாட்டினின்றும் வரவழைத்திலர். உழவின் பெருமையை அறிந்த அன்னார் பயிர்த்தொழிலைத் தம் தலைமைத் தொழிலாகக் கொண்டிருந்தனர். அத்தொழிலை தன்னாட்டிலெங்கணும் செழுமையுறச் செய்தனர். ஆதவின் அவர்கட்கு செழிப்புமிக்கது. தம்முணவிற்குப் போதியது போக மீதியை ஏழையோர்க்கீத்தும் இரப்போர்க்குக் கொடுத்தும் அஃதிலும் மிஞ்சியதை பிற மக்கட்கும் விற்றுவந்தனர். அஃதன்றித் தமக்கு வேண்டிய உடையினையும் தாமே செய்து கொண்டனர். பண்டைத் தமிழர் உடை நெய்தலில் வல்லவநாய் இருந்தார். அவர்கள் பஞ்சினாலும், பட்டினாலும், மயிரினாலும், கண்ணைக் கவருந்தன்மையதாய் கவின் மிக்க மெல்லிய உடைகள் செய்து வந்தார்.

 

அந்நாளில் தமிழர் தமக்குப் பிறநாட்டினின்றும் உடைகள் வரவழைத்துக் கொண்டாரல்லர். தமக்கு வேண்டியவற்றைத் தாமே செய்து கொண்டனர். மேலும் அஞ்ஞான்று வெண்கலம், செம்பு, இரும்பு முதலிய கனிகளில் கலன்கள் செய்யும் தொழிற்சாலைகளும் தமிழ் நாட்டில் மிக்கிருந்தன. சிலை செதுக்கும் சிற்பிகளும், மரத்தில் பணி இயற்றும் தச்சரும், பொன்னில் கல்லோடு இழை இயற்றும் தட்டாரும் தமிழ்நாட்டில் மிகுந்து வாழ்ந்து தமது தொழிலை அழகுறச் செய்து வந்தனர். அந்நாளில் தமிழ்நாட்டில் வாணிகம் பெருகி இருந்தது.

 

தமிழர் “திரை கடலோடியும் திரவியம் தேடு என்ற பொன்மொழியை தன் உள்ளத்தே கொண்டு கடல் கடந்து வாணிபம் செய்து பொருளீட்டீ வந்தனர், அஞ்ஞான்று சீனர், யவனர், சிங்களர் முதலியோர் தமிழரோடு நெருங்கிவாணிபம் புரிந்தவராவர். அவருள் தலைமை சான்றவர் கிரேக்க நாட்டில் வதிந்த யவனரேயாம். இவர்கள் தமிழரோடு நெருங்கிய உறவு கொண்டு உயரிய முறையில் வாணிபம் செய்தனர்.தன்னாட்டு பொருட்களை இந்நாட்டிற்குதவியும் இந்நாட்டு பொருட்களை தந்நாட்டிற்குதவியும் வந்தனர். இவர்களில் பலர் பண்டைத் தமிழர் துறைமுகங்களில் வதிந்துவந்தனர். இவரது இருக்கை, வாணிபத்தின் உயர்வு  முதலியன பழந்தமிழ் நூல்களில் பரக்க காணலாம். இவ்வாறு தமிழர் அயல் நாட்டு மக்களோடு அன்புடன் நெருங்கிப்  பழகி வாணிபத்தை உயர்வுற நடத்திவந்தனர். இவ்வாறு தமிழர் புரிந்த வாணிபத்தையும் அவர்களது கைத் தொழிலையும், கல்விச் சிறப்பையும் நமது பாரதி பெருமான்,

 

சீன மிசிரம்,யவனரகம் - இன்னும்

தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை

ஞானப் படைத் தொழில் வாணிபமும் மிக

நன்று வளர்ந்த தமிழ்நாடு

 

என்று அழகாக கூறித் தம் தமிழ் நாட்டை புகழ்ந்து சென்றார்.

 

ஆனந்த போதினி – 1936 ௵ - ஜுலை ௴

 

 

No comments:

Post a Comment