Sunday, September 6, 2020

 ராகங்கள்

இராகங்களின் தொகையைப் பற்றிச் சாமானிய ஜனங்களுக்கிடையில் பல அபிப்பிராயங்கள் உண்டு. சிலர் இராகங்களை நிர்ணயப்படுத்துவது அசாத்திய மென்றும், அது பதினாபிரத்திற் கதிகமென்றும் சொல்லுகின்றனர். ஸ்ரீ கிருஷ்ண பகவான் பதினாறாயிரத் தெட்டு (16008) மனைவியை புடையவர் என்றும், ஒவ்வொரு மனைவியும் ஒவ்வொரு இராகத்தைத் தனித்தனியாகப் பாடிப் பகவானைத் திருப்திகரப்படுத்தினாள் என்றும், ஆகவே 16008 இராகங்கள் உண்டென்றும் ஒரு சாரார் துணிகின்றனர். இவ்வாறு பலவாறு கொள்கின்றனரே யன்றி இராகங்களுடைய சரியான தொகை கண்டு பிடிப்பதற்குச் சங்கீத சாஸ்திரத்தில் வல்லவர்களே சிரமம் எடுக்க வேண்டும். பூர்வ ஆசாரியன்மார்களுக்கும் புதிய பண்டிதர்களுக்கு மிடையில் ராகங்களின் தொகைகளைப் பற்றித் தர்க்கங்களும் உண்டாயின. ஆயினும், ஒன்றும் நிர்ணயிக்கப்பட்ட பாடில்லை.

 

பரத முனிவருடைய மதப்பிரகாரம் பதினெட்டு ஜாதி இராகங்கள் உண்டென்று தோன்றுகிறது. நாட்டிய சாஸ்திர கர்த்தாவாயிருந்த பரதமஹரிஷிபின் மதமானது ஒரு காலத்தில் சர்வசம்மதமாயிருந்தது. ஷட்மம், ஆர்ஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், ஷைாகம் முதலான18 ஜாதிகள் பரத நாட்டிய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன 13 – வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் அதாவது 1210 வது வருடம் முதல் 1247 வரை தௌலத்துப்பாத்தில் வாழ்ந்திருந்ததாய் நம்பப்படுகிற சாரங்க தேவரால் எழுதப் பெற்ற '' சங்கீதரத்னாகரம்' என்ற புஸ்தகத்தில் இராகங்கள் - மார்க்கராகங்கள் என்றும், தேசி இராகங்கள் என்றும் இரண்டு வகையாககங்கள் இருப்பதாய் எழுதப்பட்டிருக்கிறது. இப்புஸ்தகத்தை அனுசரித்தும் அங்கீகரித்தும சங்கீத ரசிகனான அஹோபல பண்டிதர் என்பவரால் ''சங்கீதபாரிசாதகம்'' என்ற ஓர் நூலும் எழுதப்பட்டுள்ளது.

 

அதன் பிறகு சோமநாத பண்டிதர் என்பவ பவரால் "இராக விபோதம்' என்ற நூல் வெளியாயிற்று. அந்நூலில் 23 ஜனக இராகங்களைப் பற்றியும் 52 ஜன்னிய இராகங்களைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. 1475-1553 ஆண்டுகட்கு இடையில் விஜய நகரத்தில் வாழ்ந்திருந்த இம்மிடி ராமதேவராய மஹாராஜாவினுடைய ஆதீன பண்டிதரும், சங்கீதரத்னா வியாக்கியகர்த்தாவுமான கல்லிநாத பண்டிதர் கலாநிதி' என்ற தமது கிரந்தத்தில் சாரங்க தேவரை அனுசரித்தே இராகங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அதற்குப் பிறகு புண்டரீக விடளனென்ற ஓர் பண்டிதரால் எழுதப்பட்ட சத்ராகசந்திரோதயம்' என்ற நூலில் 19 மேளக்கர்த்தாக்களையும் சில ஜன்னிய இராகங்களையும் பற்றி மட்டும் சொல்லப்பட்டிருக்கிறது. இராமதேவராயருடைய சமகாலத்தேயிருந்த ராமா மாத்தியன் என்ற ஒருவர், ராமதேவராயருடைய சோதரராயிருந்த வேங்கடாத்திரி ராஜாவினுடைய கட்டளையை அநுசரித்து எழுதிய “சுரகலாநிதி'' என்ற நூலில் 20 மேளக்கர்த்தா இராகங் களைப் பற்றி விவாதித்துள்ளதாய்த் தெரிகிறது. இந்தச் சுரகலா நிதியிலே யுள்ள சித்தாந்தங்களே வெங்கிடமகியினுடைய காலம் வரை அநுஷ்டானத்திலிருந்தது.

 

இவ்வாறு ஒவ்வொரு பண்டிதரும் அவரவர்களுடைய யுக்திக் கநுசரித்த வாறு பரத மதத்தைப் பேதப்படுத்திக் கொண்டு வந்திருக்கின்றனரே யன்றிச் சங்கீத சாஸ்திரத்தைச் சரியான ஒரு முடிவிற்குக் கொண்டுவரவில்லை. 1626 - ல் அடுத்து ஜீவித்திருந்த தஞ்சாவூர் மகாராஜவான அச்சுதப்ப நாயக்கர் அவர்கள்ளுடைய மந்திரியாயிருந்த கோவிந்த தீக்ஷதர், தமிழ் நாட்டில் நடப்பாயிருந்த சங்கீத சாஸ்திர வாதங்களின் சுபாநுபவங்களை அனுசரித்து 'சங்கீத சுராநிதி' என்றொரு நூ'லெழுதி வெளியிட்டனர். இவருடைய திருக்குமாரனே வெங்கிடமகி யென்ற பேர்பெற்ற வெங்கிடேஸ்வர தீக்ஷதராவார். இவர் அதுவரை நடப்பிலுண்டாயிருந்த 12 சுரஸ்தானங்களை 16 ஆக்கினர். சுத்த மத்திமத்தில் 36 - ம் பிரத மத்தியத்தில் 36 - ம் ஆக 72 மேளக் கர்த்தா இராசங்களுண்டென்று தீர்மானப்படுத்தி அதற்குப் புதிய பேர்களும் சிருட்டினை செய்தனர். அவர் எழுதிய நூல் தான் சதுர்த்தண்டி பிரகாசிகையாகும். நகாங்கி, ரத்னாக்கி என்ற பேருடைய நூல்கள் வேங்கடமகியினுடையவையல்ல. வேன்கடமகியினுடைய காலமுதல் நாளிதுவரை சங்கீத சாஸ்திர ஞானமுள்ளவர்கள் அபிப்பிராய பேதமில்லாமல் இந்த 72 இராகங்களையும் அங்கீகரித்து வருகின்றனர். இந்த 72 மேளக்கர்த்தா இராகங்கள் ஒவ்வொன்றையும், சம்பூர்ணம், ஷாடவம், ஔடவம் என்றிவ்வாறு மூன்றாயும், அவையினுடைய அவாந்தர பாகங்களை 483 ஜன்னியங்களாகவும் விஸ்தரித்து ஆக 72 மேளக்கர்த்தாக்களுக்குள் அடக்கம் 34848 இராகங்கள் உண்டென்பது சித்தாந்தமாக சர்வ சம்மதமாக இடைக்கால மிருந்தது.

 

வெங்கடமகியினுடைய இந்தச் சித்தாந்தத்தோடு இணக்கமில்லாதவர்களான சில வித்துவான்கள் இப்பொழுது தோன்றியிருக்கின்றனர். மதுரை நாதசுர வித்துவான் பொன்னுசாமி என்பவர் தோன்றியவர்களில் முதன்மையாவர். இவர் எழுதிய பூர்வீக சங்கீத உண்மை' என்ற நூலில் வெங்கிடமகியினுடைய சித்தாந்தத்தை ஆக்ஷேபித்து 72 மேளக்கர்த்தா இராகங்கள் என்பது சரி பல்ல வென்றும் உண்மையில் 32 மேளக்கர்த்தா இராகங்களே உள்ளதென்றும் பண்டைய தமிழ் நூல்களையும் சொந்த அனுபவத்தையும் அடிஸ்தானப்படுத்தி ஒரு நூல் எழுதி யிருக்கிறார்.

 

இதுவன்றி வெங்கிடமகியினுடைய சித்தாந்தத்தை அடிஸ்தானப்படுத்தி சுராந்தரமென்றும், ஸ்தாயிமார்க்கங்களென்றும் உள்ள பேதங்கள் அன்றி மொத்தம் இராகங்கள் 72,00,012 என்றும் மேலே சொல்லப்பட்ட பேதங்களையும் அடிஸ்தானப்படுத்தினால் இராகங்களின் தொகை இன்னும் அனந்த மென்றும் ஓர் அபிப்பிராயமு முண்டு.

 

எப்படியாயினும் அனந்தமான இந்த சங்கீத சாஸ்திரம் கற்பது மிகக் கடினமே யாகும். மேல் சொல்லப்பட்ட எல்லா இராகங்களையும் கொண்டவர்களுமில்லை. நித்திய உபயோகத்திற்கான சிலவற்றை மாத்திரம் மிக்கவாறு கற்றுக் கொள்கின்றனர். அச்சிலவற்றாலே தாராளமாக காலத்தை நிர்வகித்தும் கொள்கின்றனர்.

ஆனந்த போதினி – 1931 ௵ - டிசம்பர் ௴

No comments:

Post a Comment