Sunday, September 6, 2020

 

யான் காணும் கலியாணசுந்தரர்

(நாவலர் - பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார்)

திருவாளர் திரு. வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள் அரசியல், தொழிலியக்கம், கல்வி நிலை, சமய நெறி முதலிய பல நிலைகளில் நின்று பணியாற்றி வந்தோர். ஆற்றி வருவோர். ஆகலின் தமிழ் நாட்டிலே மலை விளக்கெனத் திகழும் மான்புடையோர்; தமிழ் நாட்டின் புறத்திலும் பலரால் நன்கறியப் பெற்றவர். அவர் தம் கல்வியறிவையும், சமய வுணர்வையும் மக்கட்கு எவ்வாறு பயன்படுத்தி வந்தனர்? அவருடைய குண நலங்கள் யாவை? என்பவற்றிற்கு விடையாக, யான் அறிந்தவற்றைச் சுருங்க
வுரைத்தலே இக் கட்டுரையின் நோக்கமாம். அவரது கல்வி என்னுங்கால் தமிழ்க் கல்வியே என்னாற் கருதப்படுவது. அவர் புகழ்பெற்ற நல்லாசிரியர் பால் தமிழ் பயின்றுபளார் என்ப
தும், தாமும் தமிழாசிரியாகப் பணியாற்றி யுள்ளாரென்பதும், பல சிறந்த தமிழ் நூல்கட்குக் குறிப்புடை முதலியன எழுதியுள்ளார் என்பதும் பலர் அறிந்தனவே. ஆயின், அவையெல்லாம் அவர் பெருமைக்குத் தோற்றுவாய் மாத்திரையேயாகும். அவர் வரைந்த கட்டுரைகளும், பேசிய சொற்பொழிவுகளுமே தமிழக ஆக்கந் தந்து, அவருக்குப் பெரு மதிப்பை விளைப்பனவாயின.

அவர் முதற்கண் “தேசபக்தன்" ஆசிரியரா யமர்ந்தும். பின்னர் “நவசக்தி"யைத் தோற்றுவித்து நடத்தியும் போந்தனர், அவற்றிடையே பல்வேறு பொருள் பற்றியும் அவர் வரைந்த விருப்பமுடைய கட்டுரைகள் உலப்பில்லன. "பத்திரிகைத் தமிழ்” எனக் கூறப்படுவதோர் இழுக்கு நீங்கிச் செய்தித் தாள்களும் சீரிய நடையுடன் உலா வருமாறு செய்த பெருமை முதலியாரவர்கட்கே உரியது. மற்றும், பேசுவதிலும், எழுதுவதிலும்
உரைநடை ஒத்தியங்குவது. காணப்படும் சிறப்பியல்பு. அவரது உரை நடை தடைபடர்து செல்லும் இயல்பினது! விழுமிய இலக்கியச் சொற்களை இடையிடை கொண்டு திகழ்வது; பொருளை வற்புறுக்கும் ஆற்றலமைந்த அடுக்குகள் முதலியவற்றாற் பொலிவது. இவ்வாற்றல் அவரெழுதுவது கற்போரையும், பேசுவது கேட்போரையும் பிணித்து உள்ளக் கிளர்ச்சியை விளைத்து மேலும் மேலும் முறையே அவற்றைக் கற்கவும் கேட்கவும் தூண்டா நிற்கும். தமிழ் நாட்டிலே கல்லூரிகளிற் பயில்வோரும் ஏனோருமாகிய எத்தனையோ இளைஞர்கள் நம் திரு. வி. க. அவர்களுடைய உரை நடையை விரும்பிப் பயின்று அதனானே, தமிழ் கற்பதன்கண் விஞ்சிய ஆர்வமுடையாயினர். இளைஞருலகிலே முதலியாரவர்களுடைய வின்றிப் பெருகியது. அதற்குக் காரணம் அவரது பேசுந்திறனும், எழுதுந் திறனும் மட்டுமல்ல; அவருடைய எளிமை, இன்குணம், உளத்தூய்மை முதலியனவுமாகும். அவர் ஓர் அவையின் கண் பேசத் தொடங்கும் பொழுது உள்ளக் கிளர்ச்சியுடனும், புன்முறுவலுடனும் காட்சி யளிப்பர். அவர் முகத்திலே
சோர்வோ, வருத்தமோ எப்பொழுதும் காணப்படுவதில்லை. கேட் போர் தம்மையும் பொழுதையும் மறந்து அச் சொற்களிலே ஈடுபட்டு விடுவர்.

அவரது உள்ளம் துறவியுள்ள மாகும்; அன்றிக் குழவியுள்ள மென லுமாம். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் முதலிய தீமைகள் அவருக்குப் புறம்பாவன. ஆயின், அவர் யாவர் மாட்டும் அன்புடையவர்; மகளிர்பால் மதிப்பு மிக்கவர்; இய்ற்
கையோ டியைந்த வாழ்வை எஞ்ஞான்றும் பாராட்டுபவர். இவை யெல்லாம் அவருடைய சமய வாழ்க்கையில் அவர்பால் முதன்மை யுற்றிருந்தது, எல்லாச் சமயங்களிலும்
பொதுமை காண்டல் என்பதாகும். அவரது சமயம் சைவமே யாயினும் அவருக்கு
முற்றோன் றலாகிய திரு. வி. உலகநாத முதலியா ரவர்களைப்போன்று பேசுவது எழுதுவது உள்ளிட்ட யாவற்றிலும் எட்டுணையும் விலகாது செல்லும் நீரால்லர். ஒரோவழி முன் பின் முரண்பாடு தோன்றலுங் கூடும். அவை யெல்லாம் அவர் மேற்கொண்ட
தொண்டு நெறிகள் பல வாதலானும், பல திறத்தினரோடு பயிறலானும் நிகழ்வனவே யாகலின், அவரது பெருமைக்கு அரணாகர்திருத்தலில்லை.

பற்பல ஆண்டுகளாகப் பல துறைகளிலும் பணி புரிந்து, சிறப்பாகத் தமிழ்நா டெங்கணுமுள்ள தமிழ்ச் சங்கங்களிலும் சைவ சபைகளிலும், பிற கழகங்களிலும் தலைமை தாங்கியும் சொற்பொழிவுகள் செய்தும் இடையறாது தமிழ்ப்பணி புரிந்து தமிழை வளம் படுத்திய அன்பர் திரு. வி. கலியாணசுந்தரனார் அறுபதாம் ஆட்டை நிறைவைப் பெற்று மணி விழாக் கொள்ளும் பேறு கண்டு தமிழ் மக்கள் அனைவரும் அகங் களி துளும்புவர். யானும் அங்ஙனம் களி கூர்வதுடன் அவர் மேலும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து பணி புரிய அருள் சுரக்குமாறு ‘முருகன் குமரன் முனி நம் குரு' ஆகிய வள்ளி மணாளன் மலரடி களை வணங்கி வாழ்த்து கின்றேன்.

ஆனந்த போதினி – 1942 ௵ - ஆகஸ்டு ௴

 

No comments:

Post a Comment